Monday, April 17, 2023

கண்ணை நம்பாதே (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்) @ நெட்ஃபிளிக்ஸ்


  2018ஆம்  ஆண்டு அருள் நிதி நடிப்பில் இரவுக்கு  ஆயிரம்  கண்கள்  என்ற  படம்  மூலம்  இயக்குநராக  அறிமுகம்  ஆன  மு  மாறன்  2019ஆம்  ஆண்டு  இந்தப்படத்தை  தொடங்கினார்,கொரானா, லாக் டவுன் போன்ற  சில  காரணங்களால்  தாமதமாக  உருவான  இந்தப்படம் 17/3/2023  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகி  பாசிட்டிவ்  விமர்சனங்களையும்  கவுரமான  கலெக்சனையும்  பெற்று  இப்போது  நெட்  ஃபிளிக்ஸில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - வில்லி  சின்ன  வயசுலயே  தன்  அம்மா  தன்னை  கவனிக்காம  அவர்  நிர்வகித்த  அனாதை  இல்ல  குழந்தைகளைத்தான்  கவனிக்கறார்  என்ற கடுப்பில்  அனாதைக்குழந்தைகள்  சாப்பிடும்  உணவில்  விஷம்  கலந்து  கொடுத்து  அந்த  விஷயம்  அம்மாவுக்குத்தெரிந்து  போலீஸ்க்கு  தகவல்  கொடுக்கப்போறப்ப  வேற  வழி  இல்லாம  அம்மாவையே  போட்டுத்தள்ளியவர் . அம்மா  கவனித்த  அனாதை  இல்லத்தை  இவர்தான்  கவனிக்கிறார். 


கர்ப்பிணிப்பெண்கள்  ஆறாவது  மாதம்  அவர்கள்  உடலில்  சுரக்கும்  ஒரு  திரவத்தை  வைத்து  ஊக்க  மருந்து  தயாரிக்கும்  பணியில்  வில்லி  ஈடுபடுகிறார். இவருக்குத்துணையாக  ஒரு  மினிஸ்டர்  , ஒரு  வில்லன்  இருக்கிறார்கள் 


சம்பவம் 2 - நாயகன்  நாயகியை  ஒரு  இடத்தில்  பார்த்துப்பழக்கம்  ஆக  அவர்  வீட்டு  காம்பவுண்டிலேயே  வாடகைக்கு  வீடு  எடுத்து  தங்குகிறார். இருவரும்  காதலிக்கின்றனர் ., இந்த  விஷயம்  நாயகியின்  அப்பாவுக்குத்தெரிய  வர  கெட்  அவுட்  என்கிறார். இப்போது  நாயகன்  உடனடியாக  ஒரு  புது  வீட்டில்  குடியேற  வேண்டிய  கட்டாயம் 


சம்பவம் 3  - நாயகியின்  சித்தப்பா  ஒரு  போலீஸ்  இன்ஸ்பெக்டர் .அவருக்கு  ஒரு தறுதலை  மகன். ரெகுலரா  ஒரு  பொண்ணை  ஃபாலோ  பண்ணிட்டே  இருந்துட்டு  ஒரு தங்க  தருணத்தில்  அந்தப்பெண்ணைக்கடத்துகிறார்


சம்பவம் 4  - நாயகனின்  புதிய  ரூம்  மேட்  தன்  காதலியை  ஃபோன்  பண்ணி சல்லாபத்திற்கு அழைக்கிறார். அவர்  வரவில்லை . ஆலை  இல்லாத  ஊருக்கு  இலுப்பைப்பூ  சர்க்கரை  என்பது  போல  காதலிக்கு  ஆல்ட்டர்  நேட்டிவாக   வேறு  ஒரு  பெண்ணை  முறைகேடாக அடைய முயற்சிக்கையில்  அந்தப்பெண்  பிணம்  ஆக  பிணத்தை  நாயகன்  காரில்  ஏற்றி  அவரை  சிக்க  வைக்கிறார்


 மேலே  கூறிய  நான்கு  சம்பவஙகளுக்கும்  என்ன  தொடர்பு ? நாயகன்  தனக்கு  எதிராக  2  வில்லன்கள் , ஒரு  வில்லி , போலீஸ்  இவர்க்ளை  எல்லாம்  எப்படி  சமாளித்தார்  என்பது  மீதிக்கதை 


கதையின்  நாயகனாக  உதய  நிதி  ஸ்டாலின்  அமைதியான  ஓவர்  ஆக்டிங்  இல்லாத  இயல்பான  நடிப்பு. க்ளைமாக்ஸ்  ஃபைட்  தவிர  வேறு  சினிமாத்தனம்  எதுவும்  இல்லை 


 அவருக்கு  ஜோடியாக  ஆத்மிகா, இவருக்கு  அதிக  வேலை  , பேருக்குத்தான்  நாயகி . வந்தவரை  ஓக்கே 


 வில்லன்  நெ 1  ஆக  பிரசன்னா. கச்சிதமான  நடிப்பு , சாக்லெட்  ஹீரோவாக ஃபைவ்  ஸ்டாரில்  நடித்தவர்  இப்போதெல்லாம்  வில்லன்  ரோலில்  கலக்குகிறார்



 வில்லன்  நெ 2  ஆக ஸ்ரீ காந்த். இவருக்கு  வில்லன்  முகம்  சரியாக  பொருந்தவில்லை . அல்லது  பிரசன்னா  லெவல்  இல்லை . இருந்தாலும்  சமாளிக்கிறார்


  வில்லி  ஆக  பூமிகா ,  ரோஜாக்கூட்டம்  படத்துக்குப்பின் நீண்ட    இடைவெளிக்குப்பின்  ஸ்ரீகாந்த்க்கு  ஜோடி  ஆகிறார். இவருக்கும்  வில்லி  முகம்  செட்  ஆக  வில்லை 


காமெடிக்கு  சதீஷ் , ஆனால்  அதிக  வேலை  இல்லை , கைவசம்  புது  ஜோக்சும்  இல்லை 


ஜலந்தர்  வாசனின் ஒளிப்பதிவில்  மழைக்காட்சிகள்  குட் ., பின்  பாதிக்காட்சிகள் , க்ளைமாக்ஸ்  காட்சிகளை  இன்னும்  நன்றாகப்படம்  ஆக்கி  இருக்கலாம். இசை  சித்து  குமார் , பிஜிஎம்  ஓக்கே  ரகம் 


சபாஷ்  டைரக்டர்

1    இரண்டு  மணி  நேரப்படத்தில்  25  ட்விஸ்ட்ஸ். போதுமா  ? இன்னும்  கொஞ்சம்  வேணுமா> எனக்கேட்பது  போல  போட்டுத்தாக்கி  இருக்கிறார்


2   அனாதை  இல்லங்களில்  நடக்கு  தில்லு  முல்லுக்ளை  சொல்லும்    சமூக  சீர்கேடுகளை  தோல்  உரிக்கும்  கதையை  எடுத்ததற்கு  சபாஷ் 


3   களவாடிப்போன   என்ற  பாட்டு  அருமை . வாய்ப்பிருந்தும்  அதிக  டூயட்கள் ,  பாடல்  காட்சிகள்  வைக்காதது  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  சாப்பிடப்போலாமா?


 ம்


 சரக்கு   அடிச்ட்டு  சாப்பிடலாமா?


 எனக்குப்பழக்கம்  இல்லீங்களே?


 எது>? சாப்பாட்டுக்கு  முன்னே  சரக்கு  அடிப்பதா?  


இல்லை , சரக்கு  அடிக்கறதே  பழக்கம்  இல்லை 


2     ஒரு  கட்டத்துல  இவன்  வேலைக்குப்போறதையே  மறந்து  அவளை  பிக்கப்  பண்றதே  ஒரு  வேலையா  ஆக்கிட்டான் 


3  அருண் , உங்க்ளை  எம்  டி  கூப்பிடறாரு 


 மிஸ்  வழக்கமா  அவரு  உங்களைத்தானே  கூப்பிடுவாரு ?


4  என்னது ? நீங்க  டைரக்டரா? எப்படியும்  படத்துல  ஒரு ஐட்டம்  சாங்  வைப்பீங்க , என்  கிட்டே  ஒரு  ஐட்டம்  இருக்கு ,  வேணுமா? 


5 பணக்காரன் கிட்டே வேலை  மட்டும்  பார்த்துட்டு  இருந்தா  நாம  எப்போ  பணக்காரன்  ஆவது?




 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகன்  தன்  ரூமுக்குப்போய்  படார்னு  கதவை  அடைச்சு  தாழ்  போட்டுட்டு  படுத்து  தூங்கறார், ஆனால்  அடுத்த  ஷாட்டில்  பிரசன்னா அந்த  ரூம்  கதவை  திறந்து  நாயகன்  டேபிள்  மேல்  இருந்த  கார்  சாவியை  எடுத்துட்டுப்போறார், எப்படி ?


2   பிரசன்னா  பூமிகா  வீட்டுக்கு  கொட்டும்  மழையில்  காரில்  பொகிறார். பூமிகா  வீடு  வாசல்  கேட்  கதவை  பூட்டாமல்  அட்லீஸ்ட்  தாழ்  கூட  போடாமல்  வீட்டுக்கதவை  தாழ்  போடாமல்  ப்ட் ரூம்  கதவை  தாழ்  போடாமல்  யாரவது  வரட்டும்  என்று  பெப்பரப்பேனு  எல்லா  கதவுகளையும்  திறந்து  வெச்சுட்டு  தூங்கறாரு 


3  கொட்டும்  மழையில்  காரை  விட்டு  இறங்கிய  பிரசன்னா  சட்டை , பேண்ட்  முழுவதும்  நனைய  உள்ளே  போகிறார், அடுத்த  ஷாட்டில்  கொஞ்சம்  கூட  நனையாத  சட்டையில்  இருக்கார் , ட்ரையர்ல  காய  வெச்சிருப்பரோ? 


4  போதையில்  இருக்கும் பூமிகாவை  மயக்கடைய  வெச்சுட்டு  பிரசன்னா  தன் நோக்கத்தை  நிறைவேற்றி  இருக்கலாம், அதை விட்டுட்டு  அவரை  எழுப்பி  விட்டுட்டு  பலாத்காரம்  பண்ண  அப்போ  அவர்  அடிக்க  வரும்போது  என்னையே  அடிக்கறியா?னு  கேட்கறாரே? இவரை  அடிக்காம  ஆரத்தி   எடுப்பாங்களா? என்ன  டயலாக்  எழுதறாங்க ?? 


5  நைட்  நாயகனுக்குத்தெரியாமல்  பிரசன்னா  காரை  எடுத்து  ஓட்டி  இருக்கிறார், பழையபடி அதே  இடத்தில்  நிறுத்தினாலும்  டயர்  மார்க்கை  வைத்து  காரை  எடுத்து  இருப்பது  தெரியுமே? ஏன்  நாயகனுக்கு  டவுட் வர்லை ? 


6  நாயகனை  ஃபாலோ  பண்ணி  சில  ஃபோட்டோக்கள்  எடுக்கும்  ஒரு  அடியாள்  செல் ஃபோன்  கூட  வாங்க வசதி  இல்லாதவன்  போல பவம்,  ப்ரொஃபஷனல்  கேமரா  வெச்சு  ஃபோட்டோ  எடுக்கறான், அதெல்லாம் 2010  உடன்  வழக்கொழிஞ்சு  போச்சே? 


7  போலீஸ் விசாரணை முடிஞ்சதும்  அந்தப்பொண்ணு  டேபிள்  மேல  இருந்த  துப்பட்டாவை  எடுத்துக்கிட்டு  கிளம்புது . போலிஸ்  விசாரணை நடக்கும்போது  லேடி  துப்பட்டா   போட்டிருக்கக்கூடாதுனு  ரூல் இருக்கா??


8  நியூஸ்  பேப்பர்  எல்லாம்  நைட்  12  மணி  டூ 1  மணிக்குள்  பிரிண்ட்டிங்  ஒர்க்  முடிஞ்சிடும். விடியற்காலை 3  டூ 4  எல்லா  ஊர்  பஸ்  ஸ்டேண்டிலும்  கிடைக்கும், ஆனா  நாயகன்  நைட்  விட்டுட்டு  வந்த  டெட்  பாடி  பற்றிய  நியூஸ்  அடுத்த நாள்    காலை  நியூஸ்  பேப்பர்ல  வந்திருக்கா?னு  தேடறார்


9   ஸ்ரீகாந்த்  ஒரு  மீட்டிங்க்ல  இருக்கும்போது  அவருக்கு  நாயகனிடம்  இருந்து  கால் வருது . அப்போ மீட்டிங்ல  உட்கார்ந்திருந்த  அனைவரையும்  வெளில  போங்கனு  அனுப்பறார். அதுக்கு ஈசியா  அவர் வெளில  வந்து  ஃபோன்  பேசி  இருக்கலாமே?> 


10  கிட்டத்தட்ட  20  அடி  உயரம்  உள்ள பாலத்திலிருந்து  ஒரு  டெட்  பாடியை  கீழே  போட்டா  சிந்தாம  சிதறாம  அப்படியே  இருக்கும்னு  டைரக்டர்  நினைக்கறாரா? அட்லீஸ்ட்  ரத்தம்  கூட  தெறிக்காதா?> 


11 ஸ்ரீகாந்த்  30  லட்ச  ரூபாய்  பண்டிலை  கொண்டு  வந்து  ஒரு  இடத்துல  வைக்கிறார். 2000  ரூபா  கட்டா  இருந்தாலும்  15   கட்டு  இருக்கனும், அந்த  பண்டில்ல  10  கட்டு  கூட  இருக்காது , சின்ன  கட்டு 


12   யாராவது  தன்  காத்லிக்கு  ஃபோன்  பண்ணி  ஒரு  பெண்ணை  ரேப்  பண்ண  ட்ரை பண்ணப்போ  அவ  இறந்துட்டா,  இப்போ என்ன  பண்ண  என  ஐடியா கேட்பாங்களா? பிரசன்னா  கேட்கறார்


13  கன்  பாயிண்ட்ல  வில்லன்  ஹீரோவை  மிரட்டும்போதே போட்டிருக்கலாம், அதை  விட்டுட்டு  2ஒ  நிமிசம்  ஃபி;ளாஸ்பேக்  கதையை  வெட்டியா  சொல்லிட்டு  இப்போ  இவனை  முடிச்சுக்கட்டு  அப்டினு  ஒரு  இண்ட்ரோ  எல்லாம்  குடுக்கறாரு


14  நாயகி  தன்  சித்தப்பாவான  போலீஸ்  ஆஃபீசருக்கு பல  டைம்  கால்  பண்றா, அவர்  ஃபோனை  எடுக்கலை , விஷயத்தை  வாய்ஸ்  மெசேஜா  வாட்சப்ல  அனுப்பி  இருக்கலாமே?


15    வில்லனோட  ஆக்டிவிட்டீசை  ரக்சியமா  செல்  ஃபோன்  கேமரால  படம்  ( வீடியோ)  பிடிக்கும்  ஹீரோ  அதை  சைலண்ட்  மோடில்  வைக்க  மாஃப்ஃபாரா? கால்  வந்தால்  காட்டிக்கொடுக்கும்  என  தெரியாதா? 


14  ட்வின்ஸ்  சிஸ்டர்ஸ்ல  இருவருக்கும்  வெவ்வேறு  கை  ரேகைகள்  இருக்கும். கொலை  செஞ்சது  ஒருத்தி , குற்றத்தை  ஒத்துக்கிட்டது  வேற  ஒருத்தி . கை  ரேகை  காட்டிக்கொடுத்திருக்குமே? 


15  க்ளைமாக்சில்  பிரசன்னா  போலீஸ்  ஆஃபீசரை  சுடும்போது  தவறுதலாக  அவரது காதலி   மீது  குண்டுபடுகிறது. உடனே  அதிர்ச்சி  ஆன  பிரசன்னா  கீழே அமர்ந்து  என்ன  ஆச்சு எனபார்க்கிறார். அந்த  டைமில்  போலீஸ்  ஆஃபீசரோ, ஹீரோவோ  பிரசன்னாவை  தாக்கி இருக்கலாமே? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களுக்கு  விருந்து  தான் இந்தப்படம். பார்க்கலாம் . ரேட்டிங்  2. 5 / 5 



Kannai Nambathey
Kannai Nambathey.jpg
Poster
Directed byMu. Maran
Written byMu. Maran
Produced byV. N. Ranjith Kumar
Starring
CinematographyJalandhar Vasan
Edited bySan Lokesh
Music bySiddhu Kumar
Production
company
Lipi Cine Crafts
Distributed byRed Giant Movies
Release date
  • 17 March 2023[1]
CountryIndia
LanguageTamil

0 comments: