Wednesday, April 12, 2023

KILL BOKSOON (2023 ) - (சவுத் கொரியன் மூவி ) சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


73 வது  பெர்லின் இண்ட்டர்நேஷனல் ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  திரையிடப்பட்டு  பலரது  பாராட்டுதல்களைப்பெற்ற  படம்,  ஜான் விக்  போல்  இதுவும்  ஆக்சன்  காட்சிகள்  நிறைந்த  ஒரு மசாலாப்படம் தான். 2022  ஜனவரியில்  ஷூட்டிங்  தொடங்கிய இந்தப்படம்  நாயகி  உடல்  நிலை  சரி  இல்லாமல்  போனதால்  நான்கு  மாதங்கள்  ஷூட்டிங்  நிறுத்தி  வைத்து  பின்  அவர்  உடல்  நலம்  தேறியதும்  எடுக்கப்பட்டது 2023  ஃபிப்ரவரி  மாதம்  ரிலீஸ்  ஆன  இந்தப்படம்  மார்ச் 31  2023  முதல்  நெட்  ஃபிளிக்சில்  காணக்கிடைக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு  வாடகைக்கொலையாளி. அதாவது  அவர்  பணி  புரியும்  ஒரு நிறுவனத்தில்  இந்த  ஆளைப்போட்டுத்தள்ளிட்டு  வா  என  ஆணை  கிடைத்தால்  நடந்தது  ஒரு  விபத்து  என்பது  போல  மிகப்பிரமாதமாக  திட்டமிட்டு  அந்தக்கொலையை  நிகழ்த்தி விடுவார் . அவர்  பணி புரியும்    நிறுவனத்தின்  முதலாளி தான்  நாயகிக்கு  பயிற்சி  அளித்தவர்.  நாயகிக்கும்  ஓனருக்கும்  பரஸ்பர  புரிதலும்  மரியாதையும்  உண்டு.


 தனக்கு  வித்தை  கற்றுக்கொடுத்த  குரு  என  நாயகி  ஓனரையும்,  வித்தை  தெரிஞ்ச  வேலைக்காரர்ப்பா  என  குருவுக்கு   நாயகி  மீது  தனிப்பிரியமும்  உண்டு 


நாயகி  அந்த  நிறுவனத்தில்  பணியாற்றி  முடிவதற்கான  ஒப்பந்தம்  காலாவதி  ஆகப்போகிறது , அவர்  ரிட்டையர்  ஆகப்போகிறார் என்னும்  நிலை  வரும்போது  ஓனர்  ஒரு  கடைசி அசைன்மெண்ட்  தருகிறார். நாயகியால்  அதை  ஏற்று  நிறைவேற்ற  முடியாத  இக்கட்டான  சூழல். குருவை  எதிர்த்து  அவர்  சர்வைவல்  செய்ய  முடிந்ததா? குரு  வில்லனாக  மாறியதும்  நாயகிக்கு  நிகழ்ந்த  தரமான  சம்பவங்கள்  என்னென்ன  ? என்பது  மீதி  திரைக்கதை 


 இப்போது  மேலே  சொன்னது  படத்தின்  மெயின்  கதை , இது  போக  இரு  கிளைக்கதைகளும்  உண்டு , 


 நாயகிக்கு  டீன்  ஏஜ்  வயதில்  ஸ்கூலில்  படிக்கும்  மகள் உண்டு .அவள்  நடவடிக்கை  சரி  இல்லை ,  தம்  அடிக்கிறாள் ,  சேர்க்கை  சரி  இல்லை . மகளுக்கு  தன்  தாய்  ஒரு  வாடகைக்கொலையாளி  என்ற  விஷயம்  தெரியாது , அம்மா  ஏதோ மர்மமான  பணியில்  ஈடுபடுகிறார்  என்பது  மட்டும் தெரியும் . நாயகி  ஒரு  சிங்கிள்  மதர் . அதனால்  தன்  பணிகளுக்கு  இடையே  மகளையும்  கண்காணிக்க  வேண்டிய  இக்கட்டான  சூழல் 


 நாயகியின்  மகள்  படிக்கும்  பள்ளியில்  சக  மாணவன்  ஒருவன்  ஒரு  அந்தரங்கமான  புகைப்படத்தை  தான் ரிலீஸ்  செய்யாமல்  இருக்க  தன்னுடன்  உல்லாசமாக  இருக்கவேண்டும்  என  கண்டிஷன்  போடுகிறான் . இதனால்  கோபம்  கொண்ட  மகள்  அவனை கொலை  செய்து  விடுவதாக  மிரட்டுகிறாள் , இந்த  பஞ்சாயத்து  ஸ்கூல்  நிர்வாகம்  மூலம்  நாயகியிடம்  வருகிறது 


நாயகியின்  குருவான  வில்லனுக்கு  ஒரு  தங்கை  உண்டு , அவளும்  இதே  வாடகைக்கொலையாளி தான் , அவளுக்குஜ்  நாயகியைப்பிடிக்காது 


இந்தப்பிரச்சனைகளை  எல்லாம்  நாயகி  எப்படி  சமாளிக்கிறார்  என்பதே  மீதி  கதை 


நாயகியாக ஜியோன் டோ இயோன்  கலக்கலான  ஆக்சன்  ஹீரோயின். இவர்  ஓப்பனிங்  சீனில்  போடும்  சண்டைக்காட்சி  தியேட்டரில்  விசில்  பறந்திருக்கும் . தமிழ்  சினிமா  போல  அப்பப்ப  செண்ட்டிமெண்ட்  காட்சிகளும்  உண்டு, ஆக்சன், செண்ட்டிமெண்ட்  இரண்டிலும்  அதகளம்  செய்திருக்கிறார்  நாயகி 


நாயகியின்  மகளாக  பாப்  கட்டிங்  உடன்  அப்பாவியாக  வரும்  டீன்  ஏஜ்  மாணவி கவனம்  ஈர்க்கிறார். தாயைப்போல  பிள்ளை  நூலைப்போல  சேலை  என்பது  போல  பள்ளியில்  படிக்கும்  சக  மாணவனையே  அவர்  கொலை  மிரட்டல்  விடுக்கும்  காட்சி  எல்லாம்  மாஸ்  சீன் , கூஸ்பம்ப்  காட்சி 


நாயகியின்  குருவாக  பிறகு  வில்லனாக  வருபவர்  தன்  கேரக்டர்  உணர்ந்து  நடித்திருக்கிறார். 


படத்தின்  இசை  ஜீவனுடன்  கதையை  நம்முள்  கடத்துகிறது . பின்னணி  இசை  ஒரு  ஆக்சன்  மசாலாப்படத்துக்கு  எவ்வளவு  முக்கியம்  என்பதை  உணர்த்துகிறது 


பளிங்குக்கண்ணாடி  வழியாக  காட்சிகளை  பார்ப்பது  போல  தெளிவான  ஒளிப்பதிவு  படத்துக்கு  கூடுதல்  பலம் 


தமிழ்ப்படங்கள்  போல  ரெண்டேகால்  மணி  நேரம்  ஓடும்  அளவுக்கு  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர். ஆனாலும்  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கவில்லை 


சபாஷ்  டைரக்டர்


1  நடுரோட்டில்  ஓப்பனிங்  சீனில்  படுத்திருக்கும்  ஆளை  நாயகி  ஃபைட்  போட்டு  ஜெயிக்கும்  ஓப்பனிங்  சீன்  கலக்கல்  ரகம் 


2  நாயகி  எதிரியுடன்  ஃபைட்  போடும்  முன்  எந்த  மாதிரி  தாக்கினால்  என்ன  நிகழும்  என  கற்பனை  செய்து  பார்ப்பதும்  அதை  விஷூவலாக  நமக்குக்காட்டுவதும்  அருமையான  ஐடியா.  சிலருக்கு  இந்த  சீன் குழப்பத்தைக்கூட  ஏற்படுத்தலாம் 


3  வில்லனான  குரு  நாயகியை  யாரிடமும்  விட்டுக்கொடுக்காமல்  இருப்பது  நாயகி , குரு  இருவர்  மீதும்  ஒரு  மரியாதையை ஏற்படுத்துகிறது 


4  நாயகி  , மகள்  இருவருக்கும்  இடையேயான  பாண்டிங் செம  டச்சிங் 


5   கம்பெனி  மீட்டிங்கில்  கத்தியுடன்  வந்து  மிரட்டும்  ஆளை  வில்லன்  போட்டுத்தள்ளும்  கொடூரமான  ஆனால்  மெய்  சிலிர்க்க  வைக்கும்  காட்சியும்  உண்டு


  ரசித்த  வசனங்கள் 


1  வெற்றில  பல  வகை  இருக்கலாம், ஆனா  தற்செயலான  வெற்றினு  ஒண்ணு  கிடையவே  கிடையாது 


2  ஒரு  ஆளை போட்டுத்தள்ளுவதால்  உங்களுக்கு   சகிப்புத்தன்மையும்  , அமைதியும்  கிடைக்கிறது 


3  கொலை  பண்றது  இப்போ  உலகளாவிய  வியாபாரம்  ஆகிடுச்சு , நமக்கு  ஒரு  மரியாதையும்  கிடைக்குது 


4 கொலை  செய்வதில்  பெண்கள்  பேர்  போனவங்க  இல்லை , அதனால தான்  அப்படிப்பட்ட  பெண்களை  எனக்குப்பிடிக்குது 


5   எதிரியை  வீழ்த்தனும்னா  முதல்ல  அவன்  பலவீனத்தை  தெரிஞ்சுக்கனும்


6  பணம்  சம்பாதிப்பதும்  ஒரு  கலைதான்  அது  எல்லாருக்கும்  கை  கூடி  வராது


7  என்  பையன்  தப்பு  பண்ணிட்டான்னு  நான்  அவனை  தண்டிப்பதற்கும்  வெளி ஆள்  அவனை  தண்டிப்பதற்கும்  வித்தியாசம்  இருக்கு 


8  பொதுவாகவே  பெண்களுக்கு  குழந்தை  பிறந்துட்டா  அவங்க  வேலைக்குப்போறதை  நிறுத்திடுவாங்க 


9   பிரச்சனைக்குத்தீர்வு  காண  எளிய  வழி பிரச்சனையை  விட்டு  வெளில  வர்றதுதான்


10  விதிகளை  மீறுபவனாக  நான்  இருக்க  வாய்ப்பே  இல்லை , ஏன்னா  நான்  தான்  அந்த  விதியே!


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சக  மாணவனை  கொலை  மிரட்டல்  விடுத்தாள்  என  புகார்  வரும்போது  முழு  உண்மையையும்  சொன்னால்தான்  பிரச்சனை , மேலோட்டமாக  அவன்  மேல்  என்ன  தவறு  என  நாயகியின்  மகள்  ஸ்கூல்  ஹெச்  எம்  இடம்  சொல்லி  இருக்கலாமே?


2  ஒரு  குடும்பத்தில்  அம்மா, அப்பா, மகள்  என  இருந்தால்  மகளுக்கு  தனி  அறை  ஓக்கே  , ஆனால்  அம்மா, மகள்  மட்டும்  வசிக்கும்  பங்களாவில்  எதுக்கு  அம்மா, மகள்  இருவருக்கும்  தனித்தனி  பெட்ரூம் ? என்னதான்  பிரைவசிக்காக  என  சால்ஜாப்  சொல்லிக்கொண்டாலும்   டீன்  ஏஜ்  பெண்ணை  தனி  அறையில்  விடுவது  சரியா?


3   நாயகி 24  மணி  நேரத்தில்  முக்கால்வாசி  நேரம்  வெளியே  ரவுண்ட்சில்  தான்  இருக்கிறாள் , பணிப்பெண், சமையல்  உதவி  என  யாரும்  இல்லை , ஆனால்  மகளுக்கு  வேளா  வேளைக்கு  வித விதமான  உணவு  ரெடி   பண்ணி  விடுகிறார்  எப்படி ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்=   ஒரே  ஒரு  காட்சியில்  10  நொடிகளுக்கு  ஒரு  அடல்ட்  கண்ட்டெட்ண்ட்  இருக்கிறது ,அதை  ஸ்கிப்  பண்ணி  விட்டால்  எல்லோரும்  பார்க்கும்  தரத்தில் தான்  உள்ளது சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஆக்சன்  த்ரில்லர் படங்கள்  , க்ரைம்  ஆக்சன்  படங்கள்  விரும்பிப்பார்ப்பவர்களுக்கு  உகந்த  படம், ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  அருமை , ரேட்டிங்  2.75 / 5 Kill Boksoon
Kill Boksoon.jpg
Promotional poster
Hangul
길복순
Revised RomanizationGilbogsun
McCune–ReischauerKilboksun
Directed byByun Sung-hyun
Screenplay byByun Sung-hyun
Produced byYi Jin-hee
Starring
CinematographyCho Hyung-rae
Edited byKim Sang-bum
Music by
  • Lee Jin-hee
  • Kim Hong-jip
Production
company
See At Film[1]
Distributed byNetflix
Release dates
  • February 18, 2023 (Berlinale)
  • March 31, 2023 (South Korea)
Running time
137 minutes[2]
CountrySouth Korea
LanguageKorean

0 comments: