Saturday, April 22, 2023

கல்யாண சமையல் சாதம் (2013) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ் , யூ ட்யூப் , ஜியோ சினிமாஸ்


  குறும்படங்கள்  பல  எடுத்து  ஃபிலிம்  இன்ஸ்ட்டிடியூட்டில்  பல  விருதுகள்  பெற்ற  இயக்குநர்  ஆர் எஸ்  பிரசன்னா இயக்கிய  முதல்  படம்  இது . ரிலீஸ்  ஆன  போது  மீடியாக்களின்  பாராட்டைப்பெற்ற  இப்படம்  ஹிந்தியில் ரீமேக்  செய்யப்பட்டு தமிழை  விட  அதிக  வெற்றி  பெற்றது . ஆயுஷ்மான்  குரானா - பூமி பட்னாகர்  நடிப்பில் 2017 ஆம்  ஆண்டு சுப் மங்கள்  சாவ்தான்  என்ற  பெயரில்  ரிலீஸ்  ஆன  இந்தப்படத்தையும்  இதே  பிரசன்னா தான் இயக்கினார் . அச்சமுண்டு  அச்சமுண்டு  படத்தை  இயக்கிய  அருண்  குமார்தான்  இந்தப்படத்தின்  தயாரிப்பு . 2018 ஆம்  ஆண்டில்  இண்ட்டர்நேஷனல்  ஃபிலிம்  ஃபெஸ்டிவலில்  இந்த  இந்திப்படம்  சிறந்த  வசனத்துக்கான விருதைப்பெற்றது   நடிகர்  பிரசன்னா  சினேகா  உடனான  திருமணத்துக்குப்பின்  வெளியான  முதல்  படம்  இது . இசை  அமைப்பாளர்  அரோரா  இதில் அறிமுகம்,  இயக்குநர்  பிரசன்னா , நடிகர்  பிரசன்னா  இருவரும்  வேறு  வேறு 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  வீட்ல  பொண்ணு  பார்க்கறாங்க , பெண்  பார்க்கும்  வைபவத்தில்  வீட்டுக்குப்போய்  லெட்டர்  போடறோம் என  மாப்பிள்ளை  முறுக்கை, ஜிலேபியை  மாப்ளையோட  பெற்றோர்  காட்ட  மாப்ளையான  நாயகன்  அங்கேயே  தேங்காயைப்போட்டு  உடைச்சுடறார். பொண்ணை  எனக்கு  ரொம்பப்பிடிச்சிருக்கு  என்கிறார்


அப்புறம்  என்ன? மேரேஜ் ஃபிக்ஸ்  ஆகுது . மேரேஜ்ஜூக்கு இன்னும்  ஆறு  மாசம்  தான் இருக்கு 


பொண்ணு  வீட்ல  பெற்றோர்  இல்லாத  தருணம்  நாயகன்  நாயகி  வீட்டுக்கு  வந்து அவரிடம்  அத்து  மீற  முயற்சிக்கிறார், ஆனா  முடியல.


 தனக்கு  உடல்  ரீதியா  ஏதோ  பிரச்சனை  இருக்குனு  நாயகன்  பயந்துக்கறார். சேலம்  சித்த  வைத்தியர் ,  டாக்டர் , பூஜை  புனஸ்காரம்  என  பிறகு  நடக்கும்  காமெடி கலாட்டாக்கள்  தான்  கதை 


ரொம்ப  சாதாரணமான  ஒரு ஒன் லைன், ஆனால்  தமிழ்  சினிமாவில்  இதற்கு  முன்  யாரும்  சொல்லத்தயங்கிய  பல  விஷயங்களை  காமெடியாக  சொல்லி  இருக்கிறார்  இயக்குநர் 

கன்னட  இயக்குனர்  ஆன  காசிநாத்  இதற்கு  முன் இயக்கிய  முதல்  இரவே  வா  வா  என்ற  அடல்ட்  காமெடி  மூவியில்  இந்த  கதைக்கரு  அப்பட்டமாக  சொல்லப்பட்டிருக்கும், இந்தப்படத்தில்  பூடகமாக  , ஜனரஞ்சகமாக , நாசூக்காக  சொல்லப்பட்டிருக்கிறது 


நாயகனாக  பிரசன்ன   சார்மிங்  ரோல். அலட்டலே  இல்லாத  புன்னகை  முகம்.  ஃபைவ்  ஸ்டார்  மாதிரி  ரொமாண்டிக்  ஹீரோ  கதாபாத்திரத்திலும்  ஜொலிப்பவர் . வில்லன்  ரோலிலும்  அசால்ட்டாக  கை  தட்டல்  பெறுபவர் . இது  போன்ற  காமெடி  ரோலிலும்  பொருந்துவது  அபூர்வம்


 நாயகியாக  லேகா  வாஷிங்டன். வித  வித மான  காஸ்ட்யூம்ஸில்  இவர்  அழகு . அழும்  காட்சியில்  மட்டும்  எம் ஜி ஆர்  மாதிரி  முகத்தை  மூடிக்கொள்கிறார், மற்றபடி  குட் 


நாயகனின்  மாமனார்  ஆக  டெல்லி  கணேஷ்  கச்சிதம் , கிரெசி  மோகன்  கெஸ்ட்  ரோல் 


2  மணி  நேரத்தில்  கச்சிதமாக  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


 6  பாடல்கள் . அறிமுக  இசை  அமைப்பாளர்  போலவே  தெரியவில்லை . பிஜிஎம்  மிலும்  முத்திரை  பதித்து  இருக்கிறார்


 ஒளிப்பதிவு  கண்ணுக்கு  இதம் . நாயகியை  விட  நாயகனுக்குத்தான்  அதிக  க்ளோசப்  ஷாட்கள்  , அது  ஏனோ ?



சபாஷ்  டைரக்டர்


1  செக்  பவுன்ஸ்  ஆனதால்  கல்யாண  மண்டபம்  கேன்சல்  ஆன  விசயத்தை  நாயகனிடம்  சொல்லி   குல தெய்வ  கோயிலில்  கல்யாணத்தை  வைத்துக்கொள்ளலாம்  என  நாயகி  சொல்ல  அதற்கு  எதுவுமே  பேசாமல்  காரை  எடுக்கும்  நாயகன்  தன்  பெற்றொருடன்   நாயகி  வீட்டுக்கு  வந்து  நடத்தும்  டிராமா  அழகான  ட்விஸ்ட் 

2   மாமனார் -  மாப்பிள்ளை  இருவரும்  ஹோட்டலில்  ச்ந்திக்கும்  இண்டர்வல்  பிளாக்  காட்சி  காமெடி  கலக்கல்  


3 ஓப்பனிங்  சீன்ல  இருந்து  முதல்  30  நிமிடங்கள்  ஒளிப்பதிவாள்ர்  , எடிட்டர்  துணையுடன் இயக்குநர்  கையாண்ட  புதிய  யுக்தி  படமாக்கம் 


4   சின்ன  சின்ன  வார்த்தை  ஜாலங்கள்  கிரேசி  மோகன்  பாணி  வசனங்கள்  அருமை 


5  முழுப்படமும்  ஹம்  ஆப் கே  ஹேங்  கோன்  ஹிந்திப்படம்  போல  கல்யாண  கலாட்டக்களை  உள்ளடக்கியது  அருமை 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பல்லுப்போன  ராஜாவுக்கு  கரும்பு  தின்ன  ஆசை

2 காதல்  மறந்தாயடா

3 நவீன  கல்யாணம் 

4 மெல்லச்சிரித்த 

5  கல்யாணம்  2 . ஓ



  ரசித்த  வசனங்கள் 


1தமிழ்  நாட்டில்  பொட்டிக்கடைக்கு  அடுத்ததா  ,மூலைக்கு  மூலை நகைக்கடைகள் , ஜூவெல்லரிஸ்  வந்ததுக்குக்காரணம்  தாய்க்குலங்கள் தான் 

2   டேய் ,  கையை   வெச்சுட்டு  சும்மா  இருடா ,  அம்மா , அப்பா  இல்லைன்னா  எதை  வேணும்னா  தொடலாம்னு  நினைப்பா?


 மிஸ், ஆக்சுவலி  இதை  அவனுங்களுக்காகத்தானே  சோன்னீங்க? வாலு  பசங்க 


 ஏன்? உங்களை  சொல்லிக்காட்றதா  தோணுதோ ? 


3  உங்க்ளுக்கு  நல்ல  சென்ஸ்  ஆஃப்  ஹ்யூமர் , கிரேசி  மோகினினு  சொல்லலாம் 


4  திடீர்னு  ஓப்பனா  பொண்ணு  பிடிச்சிருக்குனு  சொல்றியே நம்ம  கிட்டே  இப்போ நெகோஷியேஷன்  பவரே  போச்சு 


 நாம  என்ன  பிஸ்னெஸ்  டீலா  பண்றோம்?


5 இந்தக்காலத்துல  மாப்பிள்ளை  பார்க்கறதுக்கு  முன்னேயே  மண்டபம்  புக்  பண்ணனும்


6 சமையல்காரரை  புக்  பண்ணலாம்னு  வந்தா  அவர்  தந்த  காஃபில  ஈ


சார், ஃபிக்ஸ்  பண்ணிடலாமா??


  நான்  வீட்டுக்குப்போய்  ஈ மெயில்  பண்றேன்


7   வீட்ல  யாரும்  இல்லை ,மெதுவாப்பேசு


  யாருமே  இல்லாத  வீட்ல  எதுக்கு  ரகசியமாப்பேசனும் ?


8  தப்பு  பண்ணினா  சாமி  கண்ணைக்குத்தும்கறது  நிஜம் தான்

‘ \

 சரி  கண்ணை  மட்டும்  குத்த  வேண்டியதுதானே? எதுக்கு .... ? 


9  பிரச்சனையை  தைரியமா  ஒத்துக்கறதுதான்  முதல்  மருந்து 


10   சின்ன  விஷயத்தை  நீ  பெருசு  பண்றே


 அப்படி  பண்ண  முடியல, அதான்  பிரச்சனை  டாக்டர்


11    உங்களுக்கு  வந்திருக்கற  பிரச்சனை பெருசா  ஒண்ணும் இல்லை , ஸ்ட்ரெஸ்  இண்ட்யூஸ்டு  எரக்டைல் டிஸ் ஃபங்க்‌ஷன்


 தமிழில்?


 வேணாம், இப்டியே  இருந்துட்டுப்போகட்டும் 


12  பைக் ஸ்டார்ட்  ஆகறதுல  பிராப்ளம்னா  சோக்  போடனும், லைஃப்ல  பிராப்ளம்னா  ஜோக்  போடனும், அதாவது  மனம்  விட்டு  சிரிக்கனும்


13   மாப்பிள்ளை  ஆகிட்டா  எல்லார்  கூடவும்  பேசலாம்  யார்   பக்கத்துல  வேணா  உக்காரலாம், ஆனா  கட்டிக்கப்போற  பொண்ணை  மட்டும்  கண்ல  காட்ட  மாட்டாங்க 


14 ஆசைப்பட்டது  ஃபாரீன்  மாப்ளை , ஆனா  கிடைச்சது  லோக்கல்  மாப்ளை , பாவம் பொண்ணு  என்ன செய்வா?


 சிம்பிள் , வெக்கெஷனுக்கு  வருசம்  ஒரு  தடவை  ஃபாரீன்  போவா


15 ஐ  லாஸ்ட்  மை  பால்ஸ் , ஐ  மீன்  , பீரோல வெச்சிருந்த  ஸ்ட்ரெஸ் ரிலீஃப்  பால்ஸ்  ஒண்ணையும்  காணோம் 


16  மாப்ளை , இப்போ  த  பால்  ஈஸ்  இன்  யுவர்  கோர்ட்


17  அரண்டவன்  கண்ணுக்கு  இருண்டதெல்லாம்  பேய்  என்பது  போல   என்னை  சுத்தி  ஒரே  டாபிக்  தான்  கன்  முன்னாடி  ஓடிக்கிட்டு  இருக்கு 


18  ஏண்டி  அழறே?


 எனக்கு  அழறதுக்குக்கூட  ஃப்ரீடம்  இல்லையா? 


19  நீ  தான்  என்னை  அவன்  கிட்டே  இருந்து  காப்பாத்தனும்


 என்ன  செஞ்சான்  அந்த  மடையன்?

 எதுவுமே  செய்யல, அதான்  பிரச்சனை 


20  ஒரு  பொண்ணோட புருசனா  ஆவது  ரொம்ப  சுலபம் , ஆனா  ஒரு  பொண்ணுக்கு  ஃபிரண்டா  ஆகறதுதான்  ரொம்ப  கஷ்டம்   


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நிச்சயிக்கப்பட்ட  மணப்பெண்ணை  வீட்டில்  தனியாக  விட்டு  விட்டு  2  நாட்கள்  பெற்றோர்  செல்வதெல்லாம்  ஓவர் . அட்லீஸ்ட்  துணைக்கு  உறவுக்காரப்பெண்ணை  விட்டு  விட்டுக்கூடவா  செல்ல  மாட்டார்கள் ?


2   இந்த  இண்ட்டர் நெட்  யுகத்தில்  நாயகன்  தன்  பிரச்சனைக்கான  தீர்வு  உளவியல்  சார்ந்ததே  என்பதை  உணராமல்  இருப்பது 


3  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வேண்டுமே  என்பதற்காக  வலிய திணிக்கப்பட்ட  அந்த  காட்சி  காமெடிக்குதான்  என்றாலும்  ஒட்டவில்லை   


4  படம்  போட்ட  முதல்  30  நிமிடங்களில்  கதை  என்ன?  இனி  என்ன  ஆகும்,? க்ளைமாக்ஸ்  என்னவாக  இருக்கும்  என்பது  கம்ப்ளீட்டாக  தெரிந்து  விடுகிறது . வில்லன்  இல்லை , ட்விஸ்ட்  இல்லை , எனவே  மீதி  ஒன்றரை  மணி  நேரம்  ஆடியன்சை  ஹோல்டு  பண்ண வைப்பது  மிக  சிரமம்



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இது  யூ / ஏ  படம். காட்சி  ரீதியாக  கண்ணியமாகவும், வசன  ரீதியாக  பூடகமான  டபுள்  மீனிங்குகளும் உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட  கலகலப்பான  படம் , ஏ  செண்ட்டர்  ஆடியன்ஸ்  ரசிப்பார்கள் . இது  ஆண்களை  மட்டம்  தட்டும்  படம்  என்பதால் பெண்கள்  விரும்பிப்பார்க்கக்கூடும்   ரேட்டிங்  2. 5 / 5 



கல்யாண சமையல் சாதம்.jpg
சுவரொட்டி
இயக்கம்ஆர்.எஸ்.பிரசன்னா
எழுதியவர்ஆர்.எஸ்.பிரசன்னா
உற்பத்திஅருண் வைத்தியநாதன்
ஆனந்த் கோவிந்தன்
நடித்துள்ளார்பிரசன்னா
லேகா வாஷிங்டன்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
திருத்தியவர்சத்யராஜ் நடராஜன்
இசைஅரோரா
தயாரிப்பு
நிறுவனம்
எவரெஸ்ட் பொழுதுபோக்கு
மூலம் விநியோகிக்கப்பட்டதுஅபி டிசிஎஸ் ஸ்டுடியோஸ்
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்
ஆர்பிபி பிலிம் பேக்டரி
வெளிவரும் தேதி
7 டிசம்பர் 2013
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: