Friday, April 21, 2023

MAHESHUM MARUTIYUM (2023 )-மலையாளம் - சினிமா விமர்சனம்( மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்

 


1985 ல்  ராஜசேகர்  இயக்கத்தில்  ரஜினி -அம்பிகா  நடிப்பில்  வெளி  வந்த  படிக்காதவன்  படத்தில்  நாயகன்  தான்  ஓட்டும்  டாக்சியை  ஒரு  உயிருள்ள பொருளாகக்கருதி  அதனுடன்  அடிக்கடி  உரையாடுவான். கார்  மக்கர்  பண்ணும்போது  லட்சுமி , ஸ்டார்ட்  ஆகிடு  என  சொல்லும்  காட்சி  செம  ஃபேமஸ்.  1999 ல்  செல்வா  இயக்கத்தில் ஆர்  பார்த்திபன், மீனா, ரம்பா  நடிப்பில்  வெளி  வந்த  உன்னருகே  நான்  இருந்தால்  படத்தில் நாயகன்  ஒரு  காரை  தன்  சொத்தாகக்கருதி  அதை  பாதுகாப்பாக  வைத்திருப்பான். 2014 ல்  நாளைய  இயக்குநர்  புகழ்  அருண்  குமார்  இயக்கத்தில்  வெளியான  பண்ணையாரும்  , பத்மினியும்  படத்தில் கார்  ஒரு  முக்கிய கதாபாத்திரமாகவே  வந்தது . அந்தப்படம்  ரிலீஸ்  ஆகும்  முன்  டைட்டிலைப்பார்த்து  பத்மினி  என்பது  பண்ணையாரின்  ஆசை நாயகியோ  என  யூகித்தவர்  உண்டு . 


 மேலே  குறிப்பிட்ட மூன்று படங்களைப்போல  நாயகன்  ஒரு  காரை  தன்  உயிராகக்கருதும்  காட்சி அமைப்புகள்  கொண்ட  ஒரு  ஃபீல்  குட்  மெலோ  டிராமா  மூவியாக  இந்தப்படம்  அமைந்திருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1983 ஆம்  ஆண்டு  மாருதி  கம்பெனி  முதன்  முதலாக  மாருதி 800  எனும்  பிராண்டை வெளிக்கொணர்ந்தது மறைந்த  பாரதப்பிரதமர்  அமரர்  இந்திரா  காந்தி  அதை  வைத்திருந்தார்  பின்  ரூ  50,000  ரூபாய்க்கு  நாயகனின்  தந்தை  அந்தக்காரை  வாங்கினார். அந்த  ஊரில் அந்தக்கார்  மிக  பரவலாக  பேசப்பட்டது 


நாயகன்  சிறுவனாக  இருந்தபோது  நேசித்த  இரு  உயிர்கள்  1   இந்த  மாருதி 800   2  பள்ளித்தோழி  நாயகி 


பள்ளித்தோழி படிப்பைப்பாதியில்  விட்டுவிட்டு  டெல்லி  போய்  விட்டார். 


15  வ்ருடங்களுக்குப்பின்  நாயகி  தன்  சொந்த  ஊருக்குத்திரும்புகிறாள். நாயகனை  ச்ந்திக்கிறாள் . இருவருக்கும்  ஒருவர்  மீது ஒருவருக்கு  அன்பு  இருந்தும்  பரஸ்பரம்  வெளிக்காட்டிக்கொள்ளவில்லை 


 நாயகனின் நல்லது , கெட்டதுகளில்  அந்த  மாருதி  கார்  ஒரு  முக்கிய  அம்சமாக  விளங்கி  வருகிறது . ஒரு  கட்டத்தில்  மாருதி  கார்  நிறுவன்மே  நல்ல  விலை  கொடுத்து  அந்தக்காரை  வாங்க  முன்  வரும்போது   பொருளாதார நெருக்கடியில்  இருந்தும்  நாயகன் அதை  விற்க  மறுத்து  விடுகிறான் 


 இதில்  நாயகிக்கு  கோபம், பிராக்டிக்கலாக  நீ  இல்லை  உன்னுடன்  என்  எதிர்கால  வாழ்வு  எப்படி  இருக்குமோ  என  பயமாக  இருக்கிறது  என்கிறாள் 


 நாயகன்  காரை  விற்க  முடிவெடுத்தானா? நாயகியுடன்  இணைந்தானா? என்பது  க்ளைமாக்ஸ் ,  க்ளைமாக்ஸில்  இந்த  இரு  விஷயங்கள்  போக  எதிர்பாராத  ஒரு  திருப்பம்  இருக்கிறது 


மலையாளப்படங்களுக்கே  உரித்தான  ஸ்லோனெஸ்  இதிலும்  உண்டு  , 2  மணி  நேரம்  ஓடும்  படத்தில் முதல்  30  நிமிடங்கள்  ரொம்ப  ஸ்லோ. 


நாயகன்  ஆக ஆசீஃப்  அலி  கனகச்சிதமாக  நடித்திருக்கிறார். நம்ம  ஊரில்  சினேகா  போல  கேர்ளாவில்  இவரது  புன்னகைக்கு  என  ரசிகைகள்  பட்டாளம் உண்டு. அந்தக்கால  மோகன் , சுரேஷ்  போல  மென்மையான  முகச்சாயலில்  கோல்  அடிப்பவர் 


நாயகி  ஆக  மம்தா  மோகன்  தாஸ் .  இவரது  கேரக்டர்  டிசைனில்  சில  குழப்பங்கள் இருக்கின்றன . ஆனால்  இயக்குநர்  சொல்லிக்கொடுத்தபடி  கச்சிதமாகவே  நடித்திருக்கிறார்


நாயகனின்   அப்பா பாப்பேட்டன்  ஆக  மணியன்  பிள்ளை  ராஜூ  அருமையான  குணச்சித்திர  நடிப்பு .நாயகனின்  அம்மாவாக  திவ்யா  எம்  நாயர்  உருக்கமான  நடிப்பு


ஃபெய்ஸ்  சித்திக்  கின்  ஒளிப்பதிவில்  பல  காட்சிகள்  உயிரோட்டமான  கிராமத்தை  படம்  பிடித்திருக்கிறது லாங்க்  ஷாட்களில்  ஓடைகள்  , தோப்புகள்  ,   அழகு 


கேடர் பாடலுக்கான  இசை , பின்னணி  இசை  இரண்டிலும்  மெலோடியை  நம்பி  இருக்கிறார். ஜித்  ஜோசியின்  எடிட்டிங்கில்  இரண்டு  மணி  நேரத்தில்  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள் 


உண்மை சம்பவத்தை  அடிப்படையாக  வைத்து  கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சேது 


2023  மார்ச்  10  ல்   தியெட்டர்களில்  ரிலீஸ் ஆகி  பாசிட்டிவ்  விமர்சனங்களை  மீடியாக்களிலும், ரசிகர்களிடமும்  பெற்ற  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைமில்  ரிலீஸ் ஆகி உள்ளது 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்கு  பெண்  பார்க்கப்போகும்  வைபவத்துல உடன்  வரும்  நண்பர்கள்  லட்டை  சியர்ஸ்  சொல்லி  சாப்பிட  அது  உதிர்ந்து  பூந்தி  ஆகும் தருணம், இவங்க  சரக்கு  பார்ட்டிகள்  என்று  தெரிய  வரும்  தருணம் 


2 நாயகனின்  அப்பா  திருவனந்தபுரம் காரில்  போக  முடிவெடுக்கும்போது  நாயகனின்  அம்மா க்ளைமெட்  சரி  இல்லை , ரயிலில்  போங்க  என்றதும்  காரை  விட்டு  இறங்கி  ரயிலில்  போக  முடிவெடுத்து  பின்  அதே  ரயில்  விபத்தில்  மாட்டி  உயிர்  இழந்ததும்  நாயகன்  மனதில்  அந்த  கார்  ராசியான  கார் , அதை  தவிர்த்தால் , ஒதுக்கினால்நட்டம் நமக்குத்தான்  என்ற  எண்ணம்   ஆழ்  மனதில்  ஊன்ற  காரணமாகும்  சம்பவமாக  அமைந்தது  அருமை 


3   நாயகனின்  காரைத்திருடியவன்  பின்  மனம்  மாறி  காரை  விட்டு  விட்டு  செல்லும்போது  4  லிட்டர்  பெட்ரோல்  போட்டிருக்கேன்  என  குறிப்பு   எழுதி  விட்டு  சென்ற  காட்சி  காமெடி 


4   நாயகனிடம்  காரை  வாடகைக்கு  எடுத்துச்சென்ற  நபர்  போலீஸ்  கேசில்  மாட்ட  காரில்  இருந்த  ஒரு  கேஸ்  காரணம்  என்ற  சூழலும், நாயகனும்  போலீசில்  மாட்டுவது  செம  காமெடி 


5   எதிர்பாராத  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 

ரசித்த  வசனங்கள் 


1  படிக்கற பையன்  எங்கே  இருந்தாலும்  நல்லா  படிப்பான்  அது  பிரைவேட்டோ   கவர்ம்ண்ட்டோ ,,கான்வெண்ட்டோ,


2  ஒரு  நல்ல  மெக்கானிக்  வண்டியைப்பிரிச்சுப்பார்க்காம  மோட்டார்  ஓடும்  சத்தத்தை  வெச்சே  அதுல  என்ன  ஃபால்ட்னு கண்டு பிடிப்பான்


3  இவன்  டேலண்ட்க்கு  எங்கேயோ  இருக்க  வேண்டிய  ஆள் , நான்  விடுவனா? என  கிட்டே  இழுத்துக்கிட்டேன்


 முதலாளி, நம்மை  மீறி  ஒருத்தன்  மேலே  போக  நாம  விட்டுடுவோமா? 


4  நிலையான  வருமானம்    செட்  ஆனபின்  கல்யாணம்  பண்ணிக்கலாம்னு  இருக்கேன்\

\

 அப்போ  இந்த  ஜென்மத்தில்  உனக்கு  கல்யாணம்  ஆகாது  


5  நீ  வெச்சிருக்கும்  கார்  சாதாரண  கார்  இல்லை , முன்னாள்  பிரதமர்  அமரர்  இந்திராகாந்தி  வெச்சிருந்த  கார்,  அது  ஒரு  சரித்திர  சம்பவம்,  எக்காரணம்  கொண்டும்  அதை வித்துடாதே


  சரித்திரம்னா  லைப்ரரில  கொண்டு  போய்  வைக்கவா? 


6   ஒரு  பெண்ணுக்கு  ஆணிடம்  என்ன  தேவை  1  பர்சனாலிட்டி 2  ஓரளவு  நகைச்சுவை  உணர்வு   3  பாதுகாப்பு  4   காதல்  5  அக்கறை


7  உயிர்  இல்லாத  ஒரு  காரையே  இவ்வளவு  சினெகமா பாதுகாப்பா  பார்த்துக்கற  நீ  உயிர்  உள்ள  ஒரு  பெண்ணை  எப்படி பார்த்துக்குவே? 

8  உன் வாழ்க்கைல  எனக்கு  ரெண்டாவது  இடம், அது  எனக்கு  வேண்டாம்


9  பிராக்டிக்கலாக  சிந்திக்காத  உன்னை  என்  வாழ்க்கைத்துணையா  ஏத்துக்கறதை  மறுபரிசீலனை  செய்யலாம்னு  இருக்கேன் 


10  நல்லது  நடக்குது  எனில்  எந்த  விஷயத்திலும்  விட்டுக்கொடுத்துப்போவதில்  தவறில்லை . எல்லா  காம்ப்ர்மைஸ்க்கும்  ஒரு விலை  உண்டு 


11  அன்றாடத்தேவைகளுக்கே  வழி இல்லாத  ஒருவனுக்கு  சாதனை , சரித்திரம் இதெல்லாம்  ஆடம்பரம் தான் லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள்


1  கார்  மெக்கானிக்  ஆன  நாயகன்  மற்றவர்கள்  காரை  பக்காவாக  ரெடி  செய்பவன். எக்ஸ்பர்ட். ஆனால்  தான்  பெண்  பார்க்கப்போகும்  வைபவத்தில்  கார்  ரிப்பேர்  ஆகிறது . அவரோட  காரை  கண்டிஷன்ல  வெச்சுக்க  மாட்டாரா? சும்மா  காமெடி  டிராக்கிற்காக  அப்டி  ஒரு  சீன். இருந்தாலும்  நெருடுது  


2  பெண்கள்  வசதியான  நபரை  விரும்புவார்கள்  என  இயக்குநர்  சொல்ல  வந்த  கருத்து  கூட  ஓக்கே  தான், ஆனால்  நாயகன்  வைத்திருக்கும்  கார்  பிடிக்கவில்லை , நல்ல  வச்தியான  கார் இருந்தால்  ஓக்கே  என  ஒரு  பெண்  நாயகனை நிராகரிப்பது  ஓவர் 


3   மெக்கானிக்கான  நாயகனைப்பார்க்க  2  பேர்  மெக்கானிக்  ஷாப்க்கு  வர்றாங்க, அப்போ  ஒரு  ஆள்  வேலை  செய்து  கொண்டு  இருக்க “ ஓனர்  எங்கே? என  கேட்க   “ என்  தலைக்கு  மேலே  என  சொல்லும்போது  கேமரா  க்ளோசப்  ஷாட்ல  இருந்து  லாங்  ஷாட்க்கு  மாறுது     நாயகன்  மேலெ  இருக்கார், ஆனால்  உள்ளே  வரும்  நபர்கள்  கண்ணுக்கு  தெரியும்  கோணத்தில்தான்  இருக்கார்’’


4நாயகனின்  அப்பா  50,000  ரூபாய்க்கு  வாங்கிய  காருக்கான  ஃபைனான்ஸ்  லோன்  வட்டியுடன் 4  லட்சம்  ரூபாய் என  நோட்டீஸ்  வருது, நாயகன்  திகைக்கிறார் அப்போதான்  முதல்  முறை  நோட்டீஸ்  வருதா? பல  முறை  அதாவது  1  லட்சம் , 2  லட்சம்  என  தொகை  வரும்போதெல்லாம்  அனுப்பி  இருப்பார்களே? எதுக்கு  நாயகன்  ஜெர்க் ஆகறார்?


5   பள்ளித்தோழனான  நாயகனை 15  வருடங்கள்  கழித்து  கோர்ட்  வாசலில்  சந்திக்கும்நாயகி  உன்  ஃபோன்  நெம்பர்    உன்  நண்பன்  கிட்டே  இருந்து  ஆல்ரெடி  வாங்கிட்டேன், அப்புறமா  ஃபோன்  பண்றேன்  என்கிறார். யாராவது  ஃபோன்  நெம்பர்  கிடைத்ததும்  ஃபோன்  பண்ணி  நலம்  விசாரிக்காமல்  திடீர்  என  நேரில்  கேப்  விட்டு  சந்திப்பார்களா? 


6  முன்  பின்  அறிமுகம்  இல்லாத  ஆளுக்கு  நாயகன்  தன்  காரை  வாடகைக்கு  விடுவது  எப்படி ? அப்படியே  காரோடு  ஆள்  எஸ்  ஆனால்   என்ன  பண்ணுவார்? 


7  லோன்  ட்யூ  கட்டாத  வண்டியை  ஃபைனான்ஸ் பார்ட்டி  சீஷிங்  ஏஜெண்ட்டை  வைத்து  சீஸ்  பண்ணலாம், கோர்ட் ஆர்டர்  தேவை  இல்லை . ஆனால்  இதுல  கோர்ட்  ஆர்டர்  இருக்கா?னு  எதிர்த்துக்கேட்கறாங்க 


8   தொடர்ந்து  3  ட்யூ  கட்டலைன்னாலே  வண்டியை  சீஸ்  பண்ணிடுவாங்க. ஆனால்  50,000  ரூபாய் மதிப்புள்ள  கார்  லோன்  4  லட்சம்  வட்டியோடு  ஆகும்  வரை  வேடிக்கை  பார்த்துட்டு  இருக்காங்க 


9  சீசிங்  ஏஜ்ண்ட்  வண்டியை  சீஸ்  பண்ணாமல்  இருக்க  இரண்டு  நாட்கள்  டைம்  தர்றாங்க . ஆனா  நாயகன்  அடுத்த  நாள்  காலை 10 மணி  வரை  டைம்  கேட்கறார். அதாவது  அவங்க  48  மணி  நேரம்  டைம்  தர்றாங்க , இவரு   24  மணி  நேரம்  டைம்  கேட்கறாரு


10   சீசர்  ஏஜெண்ட்  காரை  சீஸ்  பண்ண  வரும்போது  பார்ட்  பார்ட்  ஆக  கழட்டி  வைக்கப்பட்ட  உதிரி  பாகங்களைக்காட்டி  ஏமாற்றும்  ஹீரோ  அடுத்த  நாளே  கார்  ஷெட்டின்  வாசலில்  தன்  காரை  நிறுத்தி  வைத்திருக்கிறார். சீசர்  எஜெண்ட்  அதை  பார்காமல்  இருப்பாரா?


11   நாயகி  நாயகனுக்கு  வ்ட்டி  இல்லாக்கடனாக  3  லட்சம்  ரூபாய்  ஆறு  மாத  கால  அவகாச  கடனாக  தருகிறார். ஆனால்  நாயகனின்  காரை  விற்க  ஒரு  பார்ட்டியை  அழைத்து  வரும்போது  நாயகன்  மறுக்க  என்  காசை  எப்படி  திருப்பித்தருவே? என  வில்லி  போல  கேட்கிறார். அதான்  ஆறு  மாசம்  டைம்  இருக்கே? 


12    ஒரு  காட்சியில் நாயகனின்  கார்  செண்ட்டிமெண்ட்டைப்புகழ்ந்து  காரையே  இப்படிப்பார்ப்பவன்  காரிகையை  எப்படிப்பார்த்துக்குவே? என  சிலாகிக்கும்  நாயகி  இன்னொரு  காட்சியில்  வாழ்க்கை  முக்கியமா?? உயிர்  இல்லாத  கார்  முக்கியமா? என  கேட்பது  நாயகியின் கேரக்டர்  டிசைனில்  ஒரு  சறுக்கல் 


13  அந்த  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  அதிர்ச்சியைத்தந்தாலும்  அந்த  எக்சிக்யூஷனில்  ஒரு  செயற்கைத்தன்மை  இழையோடுகிறது 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள்  ரெகுலராக  ரசித்துப்பார்ப்பவர்கள் , பொறுமைசாலிகள்  காண  வேண்டிய  ஃபீல்  குட்  மெலோ டிராமா . ரேட்டிங் 2. 75 / 5 
Maheshum Marutiyum
Maheshum-Marutiyum.jpg
Directed bySethu
Written bySethu
Produced byManiyanpilla Raju
Starring
CinematographyFaiz Siddik
Edited byJith Joshie
Music byKedar
Production
companies
  • Maniyan Pillai Raju Productions
  • VSL Film House
Distributed byGoodwill Entertainments
Release date
  • March 10, 2023
CountryIndia
LanguageMalayalam

0 comments: