Tuesday, April 25, 2023

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ( 1978) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா)

 


எம் ஜி ஆர்  நடித்த  கடைசிப்படம், எம் ஜி ஆர்  ஆட்சிக்கு  வந்த   பின்  பெண்டிங்  இருந்த  காட்சிகளை  நீதிமன்றத்தின்  சிறப்பு  அனுமதி  பெற்று நடித்து  முடித்துக்கொடுத்த  படம்,.என்று  சிலர்  சொல்கிறார்கள் . சட்டசபை  தேர்தலில்  வெற்றி  பெற்று  ஆட்சிப்பொறுப்பை  ஏற்கும்  முன்  பதவி   ஏற்பை 10  நாட்கள்  தள்ளி  வைத்து  அவசர அவசரமாக  இரவு பகலாக  ஷூட்டிங்  நடத்தி  படத்தை  முடித்தார்கள்  எனவும்  சொல்கிறார்கள் இந்தப்படத்துக்காக  நடிகை  லதாவுக்கு  சிறந்த நடிகைக்கான  தமிழக  அரசு  விருது  கிடைத்தது ( இவரே  முதல்வர் , இவர் கை காட்டியவருக்கு  விருது  என்ற  சர்ச்சை  எழுந்தது .) முதல்வர் ஆக  இருப்பவர்  சினிமாவில்  நடிக்கலாமா? என்ற எதிர்க்கட்சிகள்  வினா  எழுப்ப சட்டப்படி  அதை  அணுகி  ஏற்கனவே  பாதி  முடிந்த  படம்  என  விளக்கம் கொடுத்து  முடித்த  படம் 

எழுத்தாளர்  அகிலன்  எழுதிய  தொடர்கதையான  கயல்விழி  என்னும்  படைப்பைத்தழுவி  திரைக்கதை  எழுதப்பட்டது . பி ஆர்  பந்துலு  இயக்கிய  இந்தப்படம்  பாதியில்  இருக்கும்போது  இயக்குநர்  இறக்க  மீதியை  எம் ஜி ஆரே  இயக்கினார், ஆனால்  டைட்டிலில்  டைரக்சன்  எம் ஜி ஆர்  என  போட்டுக்கொண்டார் . முறைப்படி  பி ஆர்  பந்துலு  பெயரும்  இடம்  பெற்றிருக்க  வேண்டும். ஆனால்  நன்றி - பி ஆர்  பந்துலு  என  சுருக்கமாக  முடித்துக்கொண்டார்கள் 


இதே  ஆண்டு  வெளியான  16  வயதினிலெ  படத்துக்காக  நடிகை ஸ்ரீ  தேவிக்கோ ,  சில  நேரங்களில்  சில  மனிதர்கள்படத்தில்  நாயகியாக  கலக்கி  இருந்த  நடிகை  லட்சுமிக்கோ  விருது  கிடைக்கும்  என  எல்லோரும்  எதிர்பார்த்திருக்க  சம்பந்தமே  இல்லாமல் லதாவுக்கு  விருது  கிடைத்தது  பலருக்கு  அதிர்ச்சி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


பாண்டிய நாடு  சோழப்பேரரசின்  அடிமை  நாடாக  விளங்கி வந்த  காலம். சோழப்பேரரசுக்கு  கப்பம்  கட்டி  வந்தது . அதாவது  பேருக்கு   பாண்டிய  நாட்டில்  மன்னர்  இருந்தார் . ஆனால்  சோழப்பேரரசின்  கட்டுப்பாட்டில்  அவர்கள்  சொன்னபடி  ஆட்சி  செய்து  வந்தார் 


 பாண்டிய  நாட்டின்  இளவரசன்  தான்  நாயகன் . சோழ  நாட்டின்  இளவரசன்  தான்  வில்லன்  சோழ  நாட்டில்  இளவரசனான  வில்லன்  பாண்டிய  நாட்டுக்கு  வரும்போது  அங்கே  இருக்கும்  கயல்  விழி  என்னும் அழகியின்  நாட்டியத்தைக்கண்டு  அவள்  மேல்  மையல்  கொள்கிறான்  வில்லன் 


அவளை  அடைய  பலவந்தமாக  முயற்சிக்கும்போது பாண்டிய  நாட்டின்  இளவரசனான  நாயகன்  அதை  எதிர்க்கிறார். எங்கள்  ராஜ்ஜியத்தின்  அடிமை  நாடு  எங்களை  எதிர்ப்பதா? என  வெகுண்டு  எழுந்து  சோழ  நாடு  பாண்டிய  நாட்டின்  மீது  போர்  தொடுக்கிறது 


பாண்டிய  இளவரசன்  போர்க்களத்தில்  இருந்து  தப்பி  புரட்சிப்புலவராக  நாட்டில்  மாறு  வேடத்தில்  உலா  வருகிறார். நாட்டு  மக்களிடையே  சுதந்திர  வேட்கையைத்தூண்டி  படைகளை  திரட்டுகிறார். கோசலை  நாட்டு  இளவரசிக்கு  நாயகன்  மீது  காதல் 


நாயகனை  நாயகி  காதலித்தாலும்  கோசலை  நாடும், பாண்டிய  நாடும்  சம்பந்தம்  வைத்துகொண்டால்  சோழப்பேரரசை  வீழ்த்தி  விடலாம்  என  கயல்  விழி  தன்  காதலை  தியாகம்  செய்கிறாள் 


 இதற்குப்பின்  நாயகன்  பாண்டிய  நாட்டை  சோழ  நாட்டிடம் இருந்து  எப்படி  மீட்கிறார்  என்பதே  மீதிக்கதை 


நாயகனாக  எம் ஜி ஆர்.. ஒரு  படத்துக்கு  நாயகனின்  கேரக்டர்  டிசைன்  எப்படி  இருக்க  வேண்டும்  என்று  எம் ஜி ஆர்  போல்  தொலை  நோக்கு  சிந்தனையில்  சிந்தித்தவர்  இதற்கு  முன்  எவரும்  இல்லை . வசனம் , பாடல்  வரிகள் , செல்ஃப்  பிரமோஷன்  எல்லாவற்றிலும்  தனக்கு  என  ஒரு  தனி  பாணியை  ஏற்படுத்தி வந்தவர்


இதில்  ஏனோ  விக்  சரியாக  அமையவில்லை . அவருக்கு  மட்டுமல்ல , படத்தில்  பலருக்கும்  பெரிய  தலை போல்  விக்  ஏன்  என  தெரியவில்லை 

எம் ஜி ஆர்  வாள்  சண்டையில்  ஒரு  சீனில்  கலக்கி  இருப்பார் வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களில்  ஹை  லைட்டாக  இருக்கும்  தத்துவப்பாடல் இதில்  மிஸ்சிங் , அதற்குப்பதிலாக  புரட்சிப்பாடல்கள்  இருந்தன 


 நாயகியாக  கயல்  விழியாக  லதா .. சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங் /.. கோபமாக  இருக்கும்போதும்  கிளாமர்  காட்டக்கூடிய  நடிகை  என  பெயர்  எடுத்தவர் 


இன்னொரு  நாயகியாக  , இளவரசியாக  பத்மப்பிரியா . அர்ண்மனை  தர்பாரிலேயே  லோ  ஹிப்  சேலையில்  உலா  வரும்  காட்சிகள்  இருக்கும்


 வில்லனாக  நம்பியார் , பி எஸ்  வீரப்பா  இருவரும்  கலக்கலான  நடிப்பு , ஆனால்  அட்டகாசமான  வாள்  ஃபைட்  வீரப்பாவுக்குத்தான் 


காமெடிக்கு  தேங்காய் சீனிவாசன் , ஆனால்  அவர்  காமெடி செய்வதை  விட  எம் ஜி ஆர்  புகழ் தான்  அதிகம்  பாடுகிறார் 


 பாடல்கள்   3  முத்துலிங்கம்  எழுத  2  புலவர்  புலமைப்பித்தன்  எழுதுனார் , இசை எம் எஸ்  விஸ்வநாதன் .  அருமையான  இசை . ஆனால்  பாடல்கள்  ஐந்தில்  இரண்டு  மட்டுமே  சூப்பர்  ஹிட் . வழக்கமாக  எம் ஜி ஆர்  படங்களில் 90%  செம  ஹிட்  ஆகும்சபாஷ்  டைரக்டர்  ( பி ஆர்  பந்துலு  + எம் ஜி ஆர்) 


1   ஒரு  படத்துக்கு    ஃபைட்  சீன்  வருவதற்கான லீடு  எப்படி  இருக்க  வேண்டும் என  உதாரணம்  சொன்ன  படம்,   எம் ஜி ஆர்   , பிஎஸ்  வீரப்பா  இருவருக்குமான  வாக்குவாதம்  சபையில்  நடக்க  வாட் சண்டையாக  அது  மாறுவதும் . அரண்மனை  முழுக்க  இருவரும்  போடும்  ஃபைட்டும்  கலக்கல்  ரகம், தியேட்டரில்  விசில்  சத்தம்  பிளந்தது 


2  எம் ஜி ஆர் - லதா  இருவரும்  காதலர்கள் . டூயட்  பாட்டு  இருக்கு . ஆனால்  இன்னொரு  நாயகியுடன்  டூயட்  பாடும்போது  எம் ஜி ஆர்  ஃபார்முலா  படி  நாயகியின்  கனவில்  அந்த  டூயட்  வருவதாக  அமைத்தது 


3   படத்தில்  வரும்  பெரும்பாலான  கேரக்டர்கள்  நாயகி நெ 1 , நாயகி நெ 1  ,  வில்லன்   நெம்பர் 1  ,வில்லன்   நெம்பர் 2  , காமெடியன்கள்  இருவர், இரு  தேச  மன்னர்கள் , உட்பட  படத்தில்  மொத்தம்  34  பேர்  ஹீரோ  புகழ்  பாடும்  வசனம்  பேசுகிறார்கள் , இது  ஒரு  ரெக்கார்டு . எந்தப்படத்திலும்  இப்படி  அமையவில்லை 

4  படத்தில்  வரும்  வசனங்கள்   அரசியல்  ரீதியாக  எம்  ஜி ஆர்  முதல்வர்  ஆக  பேசுவது  போலவே  உள்  குத்து  வசனமாக  அமைத்தது   அருமை 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வீரமகன்  போராட  வெற்றி  மகள்  பூச்சூட 


2 தாயகத்தின்  சுதந்திரமே  எங்கள்  கொள்கை 


3  அமுதத்தமிழில் எழுதும்  கவிதை  புதுமைப்புலவன்  நீ 


4 தென்றலில்  ஆடும்  கூந்தலில்  கண்டேன்  மழை  கொண்ட  மேகம்


5  மாங்கல்யம் 


  ரசித்த  வசனங்கள் 


1   இதைக்கொள்ளை  என்று  கூறுவார்கள்  கோழைகள் , இல்லை , இது  வெற்றி  அடைந்தவரின்  உரிமை 


2  போராடி  வாழ்வதுதான்  வீரம் 


3  நீ  தலைமை  ஏற்பது  தர்மமே  தலைமை  தாங்குவது  போல  இருக்கிறது 


4  ஆயிரக்கணக்கான  ரத்தத்தின்  ரத்தமான  உடன்  பிறப்புகளைக்கொன்றவனை  பழி  வாங்காமல்  விட  மாட்டேன் 


5  பொண்ணோடப்பேரைக்கேட்டா  பெரியவங்க  என்ற  மரியாதை  இல்லாமல்  போங்கடி  என்கிறாளே?

 அய்யோ, அவ  பேரே  பூங்கொடி.. 


6 போருக்கு  முதல்  தேவை  ஆயுதம்  அல்ல. முயற்சி , எழுச்சி , பயிர்சி 


7 இந்தநாட்டிற்காகவும், நாட்டின்  மக்களுக்காகவும்  என்னையே  அர்ப்பணித்துக்கொண்டவன்  நான்  ( செல்ஃப்  பிரமோஷன்  செண்பகராஜன்  ராக்ஸ் )


8  செல்வத்தை  தானமாக  ஏற்றுக்கொள்வது  இயல்பு, ஆனால்  சிம்மாசனத்தை தானமாக  ஏற்றுக்கொள்வது  இழிவு


9  சோழ  மன்னனின்  அழைப்பில்  ஏதோ சூழ்ச்சி  இருக்கிறது 


அரசியலில்  நான்  சந்திக்காத  சூழ்ச்சியா?


10  இளவரசி , அரச  குடும்பத்தினர்  உற்சவ  மூர்த்தி  போல ,எப்போதாவது  ஒரு  முறைதான்  உலா  வர  வேண்டும் 


11   வாழ்க்கையில்  பெருமை  வந்து  விட்டால்  பின்னாலேயே  சிறுமையும்  வரக்காத்திருக்கும்  என்பது  எனக்கு  நன்றாகத்தெரியும் 

12  அரசியல்;  ஆபத்துக்க்ளைப்பற்றி  நான்  என்றும்  கவலைப்பட்டதே  இல்லை 

13  எல்லையைத்தாண்டப்போகிறீர்களா?

 இதுவரை  நான்  எந்த  எல்லையையும்  தாண்டியது  கிடையாது 


15 இவர்  முகத்தைப்பார்த்தாலே  இவரால  யாருக்கும், நாட்டுக்கும்  எந்த  வித  ஆபத்தும்   ஏற்படாது  என்பது  தெரியாதா? 


16  குடிசையில் கிடைக்கும்  கூழும், மாட  மாளிகையில்  கிடைக்கும்  விருந்தும்  எனக்கு  ஒன்றுதான், பசி  அடங்கினால்  எல்லாமே  ஒன்றுதான்


17  ஒருவருக்கு  ஒரு  தாய்தான்  இருக்க  முடியும், ஆனால்  உங்களுக்கு  நாடு  முழுவதும்  கோடிக்கணக்கான  தாய்மார்கள்  இருக்கிறார்களே? 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகனுக்கும், வில்லனுக்கும்  இடையே  நிகழும்  வாட்போரில்  வில்லன்  நாயகன்  கையில்  காயத்தை  ஏற்படுத்துகிறான், பின்  போய்  விடுகிறான், அப்போது  நாயகன்  இடுப்பில் ஒரு  துண்டு  மாதிரி  ஒரு  துணியை  ஸ்டைலாக  கட்டி  இருக்கிறார். நாயகி  தன்  சேலையைக்கிழித்து நாயகன்  காயத்துக்குகட்டுப்போடும்போது  தன்  இடுப்பில்  உள்ள  துண்டைக்காட்டி  இதே போதும்மா,  உன்  மானம்  தான்  முக்கியம்னு  நாயகன்  ஏன்  சொல்லலை ? 

2   நாயகன்  போர்க்களத்தில்  இருந்து  தப்பி  மாறு வேடத்தில்  கிளம்புகிறார். நாயகி  ஊருக்குள்  வில்லன்  ஆட்களிடம்  மாட்டிக்கொள்கிறார். நாட்டின்  எல்லையில்  போர்க்களத்தில்  இருக்கும்  நாயக்ன்  எப்படி  அங்கே  வந்தார் ? 


3  இங்கே  ஏன்  வந்தீர்கள்? என  நாயகன்  நாயகியிடம்  கேட்கும்போது  வில்லன்  துரத்துகிறான், தற்கொலை  செய்து  கொள்ளலாம்  என  இங்கே  வந்தேன்  என்கிறார். நாய்கியின்  அப்பாவைக்கொலை  செய்யும்போது  வீட்டில்  தான்  நாயகி  இருக்கிறார். வீட்டின்  பின்  ஒரு  கிணறு  இருக்கிறது ., அங்கேயே  விழுந்து  அப்போதே  தற்கொலை  செய்து இருக்கலாமே?


4  ஓப்பனிங்  சீனில்  நாயகன்  என்ன  கெட்டப்பில்  நாயகியைக்காப்பாற்றினாரோ அதே  கெட்டப்பில்  தான்  இரண்டாம்  முறையும்  நாயகியைக்காப்பாற்றுகிறார், ஆனால்  நாயகிக்கு  அடையாளம்  தெரியவில்லை . நீங்கள்  யார்? எனக்கேட்கிறார்.  குரல்  கூடவா  தெரியவில்லை 


5  நாயகன்  துக்ளியூண்டு  தாடி  வைத்ததும்  நாயகனை ( இளவரசை)  மன்னனுக்கு (அண்ணனுக்கு) அடையாளம்  தெரியாதா? பேசும்போது  குரல்  காட்டிக்கொடுக்காதா?   (  தம்பி   தாடி  வெச்சிருந்தா  அண்ணனுக்கு  அடையாளம்  தெரியாதா?) 


6  நாயகனைக்கொல்பவர்களுக்கு  பரிசு  என  அறிவித்த  வில்லன்  நாயகன்  ஆள்  மாறாட்டம்  செய்ததை  அறியவில்லை. நாயகனைக்கொன்று  விட்டதாக வீரர்கள்  பொய்யாக  நம்பி   வில்லனிடம்  பரிசுப்பணம்  வாங்கிக்கொள்கின்றனர் , அடுத்த  ஷாட்டில்  வில்லன்  நாயகனை  சந்திக்கிறார். அப்போது  அவர்  ஜெர்க்  ஆகி  நீ இன்னுமா  உயிரோடு  இருக்கிறாய்? என  கேட்கவே  இல்லையே? 


7  வில்லன்  ஓப்பனிங்  சீன்லயே  நாயகனை  எதிர்த்து  வாட்  சண்டை  புரிந்திருக்கிறான், ஆனால்  ஒரே  ஒரு  கட்டை  மீசை  கெட்ட்ப்ல  நாயகன்  வில்லன்  எதிரேநின்று  வசனம்  பேசும்போது  கூட  வில்லனுக்கு  அடையாளம்  தெரியல, இதுல  நாட்டின்  இளவரச்ர்  வேற 


8  இளவரசி  யானை மேல் பவனி  வரும்போது  யானைக்கு மதம்  பிடித்து  விடுகிறது, அனைவரும்  ஓடுகிறார்கள் , வில்லன்  நம்பியார்  வீரர்களே, யானையை  அடக்குங்கள்  என்கிறார். யானைப்பாகன்  எங்கே? யானை  கூட  எப்போதும்  யானைப்பாகன்  இருப்பானே? அவனை  யாரும்  தேடலை ? அவனால்  மட்டும்  தானே  அடக்க  முடியும் ?


9   ஆண்  வேடம்  போட்டு  நாயகி  லதா  நாயகனுடன்  ஊரெல்லாம்  சுற்றுகிறார், சுற்றட்டும், ஆனால்  அவர்  முந்தானை போல  ஒரு  துண்டை  மாராப்பாக  போட்டு  வருகிறார். டவுட்  வராதா? அதே  போல  பலர்  முன்  பேசும்போது  பெண்  குரலில்  தான்  பேசுகிறார். உதட்டின்  மேல்  லேசாக  மீசை  இருந்தால் ஆண்  என  நம்பி  விடுவார்களா? 

10  வெறும்  கையை  வீசிக்கொண்டு  தான்  நாயகனும், ஆண்  வேடம்  இட்ட  நாயகியும் அரண்மனைக்கு  வருகிறார்கள் , எதிர்பாராத  விதமாக  அரண்மனை  விருந்தினராக  அங்கேயே  தங்க  நேர்கிறது . ஆனால்  நாயகி  கலர்  கலர்  தாவணி , சேலை , ஜாக்கெட்  எல்லாம்  அணிந்து  உலா  வருகிறாரே?அவர் சைஸ்  ஜாக்கெட்  அவருக்கு  எப்படி  அரண்மனையில்  கிடைத்தது ? 


11   நாயகனிடம்  இளவரசி  உங்களை  சிறை  வைத்து  விட்டார்கள் , நான்  உங்களைக்காப்பாற்றவா?  எனக்கேட்டபோதே  நாயகன்  ஓக்கே  சொல்லி  ஈசியாக  தப்பி  இருக்கலாம், அப்போது கெத்தாக  வேண்டாம்  நான்  பார்த்துகொள்கிறேன்  என  டயலாக்  பேசி  விட்டு  அன்று  இரவே  தப்ப  ரொம்ப  சிரமப்படுகிறார்


12  நாயகன்  கைதியாக  அரண்மனையில்  அடைக்கப்பட  அன்று  இரவுதான்  தப்பி  நாயகன்  வெளியே  போகிறார், அப்போது  பொதுஜனம் “ நீங்கள்  பாதுகாப்புக்கைதியாக  வைக்கப்பட்டீர்களாமே?  என்ன  அநியாயம் ? இளவரசியைக்காப்பாற்றியதற்கு  இதுதான்  பரிசா? என  கேட்கிறார்கள் . அது  எப்படி  அவர்களுக்குத்தெரிந்தது ? அப்போதான்  தப்பி  வருகிறார்


13   நாயகி  லதா  கோசலை  நாட்டு  மன்னனிடம் போர்க்களத்தில்  விவாதம்  செய்யும்போது  ரொம்ப  உணர்ச்சி  வசப்பட்டு  டயலாக்  எல்லாம்  பேசி  சேலை  முந்தானை எல்லம்  கீழே  விழும் அளவுக்கு  ஓவர்  ஆக்சன்  பண்ணி  இருக்கிறார்


14  இளவரசி  இருக்கும்  அந்தப்புரத்தில்  அந்நிய  ஆண்களுக்கு  அனுமதி இல்லை , ஆனால்  ஆண்  வேட  தரித்த  நாயகி  லதா  எப்படி  சந்திக்கிறார்? அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - இல்லை , யூ  படம் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம்  ஜி ஆர்  ரசிகர்கள்  மட்டும்  பார்க்கலாம்,  பொது  ரசிகர்கள்  ரசிக்கும்  அளவு  படம்  சூப்பர்  எல்லாம்  இல்லை , அதெ  சமயம்  மோசமும்  இல்லை , சராசரி  மசாலா  படம் . ரேட்டிங்  2. 5 / 5 சிறப்புத்தகவல் - 1  தாயகத்தின்  சுதந்திரமே  எங்கள்  கொள்கை   என்ற  பாடல்  இலங்கையில்  தடை  செய்யப்பட்டது. மக்களை  புரட்சி  செய்யத்தூண்டுவதாக  தடை  செய்யப்பட்டது . இலங்கை  வானொலியிலும்  தடை  செய்யப்பட்டது  (  நன்றி - தகவல் சங்கர்) 


2  பிரம்மாண்டமான  போர்க்காட்சிகள் , க்ளைமாக்ஸ்  காட்சிகள்  ஜெய்ப்பூரில்  பட,ம்  ஆக்கப்பட்டது அந்தக்காலத்திலேயே  9  காமராக்கள் கொண்டு  படமாக்கப்பட்டது    


3  எம்ஜி ஆர்  ஆட்சிப்பொறுப்புக்கு  வந்து  ஆறு  மாதங்கள்  கழித்து  1978  பொங்கல்  ரிலீஸ்  ஆக  வந்த  படம்  100  நாட்கள்  ஓடிய  வெற்றிப்படம்  என்றாலும்  வழக்கமான  எம் ஜி ஆர்  படங்களுக்கு  உண்டான  பிரம்மாண்ட  வெற்றி இல்லை . எம் ஜி ஆர்  டைரக்சனில்  ரிலீஸ்  ஆன  நாடோடி   மன்னன்,  உலகம்  சுற்றும்  வாலிபன்  எல்லாம்  அதிரி  புதிரி  வெற்றி 


4  இந்தப்படம்  ஆரம்பிக்கப்பட்டது  1974ல் . இயக்குநரும் , தயாரிப்பாளருமான  பி ஆர்  பந்துலு  மரணம்  அடைய   டிலே  ஆனது   1978ல் தான்  ரிலீஸ்  ஆனது 


5  தென்னகத்து  ஹேமமாலினி  என  அழைக்கப்பட்ட  பத்மபிரியா  கன்னட  ந்டிகையாக  இருந்தாலும்  தமிழில்  பல  வெற்றிப்படங்களில்  நடித்தவர் , சிவாஜியுடன்  இரு  ஹிட்  படங்களில்  நடித்தவர் , 80  படங்களில் நடித்த  இவர்  1997ல்  கிட்னி  ஃபெய்லியர்  ஆகி  மரணம்  அடைந்தார் 


6  ஆனந்த  விகடன்  மார்க்  50. எம் ஜி யார்  படங்களில்  அதிக  மார்க் வாங்கிய  படம்  இதுதான், மீனவ நண்பன் 47   (  தகவல் - திருமாளம்  பழனிவேல்)
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்எம்.ஜி.ராமச்சந்திரன்
மூலம் திரைக்கதைபி.நீலகண்டன்
அடிப்படையில்
அகிலனின் கயல்விழி _
உற்பத்திசொக்கையா
சுப்ரமணி ஐயர்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவு
திருத்தியவர்சுந்தரம்
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
தயாரிப்பு
நிறுவனம்
சோலஸ்வர் கம்பைன்ஸ்
வெளிவரும் தேதி
  • 14 ஜனவரி 1978
நாடுஇந்தியா
மொழிதமிழ்


0 comments: