Tuesday, April 18, 2023

OBSESSION ( 2023) -- வெப் சீரிஸ் விமர்சனம் (எரோட்டிக் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+


OBSESSION
( 2023) -- வெப் சீரிஸ் விமர்சனம் (எரோட்டிக் த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ் 18+

தன் கணவனின் தம்பி மீது மோகம் கொள்ளும் நாயகியின் கதையைச்சொன்ன உயிர் பட புகழ் சாமி இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் 2010ல் ரிலீஸ் ஆன சிந்து சமவெளி படத்தின் கதை போலவே இந்த வெப்சீரிசும் இருக்கிறது என பலரும் கருத்து சொன்னார்கள் . அட, ஹாலிவுட்டிலும் அட்லீக்கள் பெருகி விட்டார்களா? என நினைத்தபோதுதான் ஒரு தகவல் கிடைத்தது 1991ல் ஜோசஃபின் ஹார்ட் எழுதிய நாவல் ஆன டேமேஜ் தான் இந்த படத்தின் ஒரிஜினல் மூலம்., அந்த நாவலைத்தழுவி தான் இந்த வெப் சீரிசும் எடுக்கப்பட்டிருக்கிறது தமிழுக்கு ஏற்றபடி சாமி பட்டி டிங்கரிங் பண்ணி இருக்கலாம்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் புகழ் பெற்ற டாக்டர் . இவருக்கு மனைவி , திருமண வயதில் ஒரு மகன் , மகள் உண்டு மகனுக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் உண்டு . அவளை தன் குடும்பத்துக்கு அறிமுகப்படுத்த முன் வருகிறான் நாயகனின் மகன்


அப்போதுதான் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்கிறது . இந்த மாதிரி படங்களை பல முறை பல மொழிகளில் கண்ட ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த திருப்பம் என்ன? நாயகன் தன் மகனுக்கு மனைவியாகப்போகும் பெண்ணுடன் நெருக்கம் கொள்வதுதான் அந்த திருப்பம்

மாமனார் - மருமகள் கள்ள உறவு ஒரு நாள் நாயகனின் மனைவிக்கும் , மகனுக்கும் தெரிய வருகிறது. அதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் திரைக்கதை

மொத்தம் 4 எபிசோடுகள் . சராசரியாக 40 நிமிடங்கள் . ரெண்டே முக்கால் மணி நேரம் - 3 மணி நேரத்தில் ஒரு பெரிய படம் பார்க்கும் நேரத்தில் இதைப்பார்த்து விடலாம்

நாயகன் வில்லியம் ஆக ரிச்சர்டு ஆர்மிட்டேஜ் கவனிக்க வைக்கும் நடிப்பு .ஓப்பனிங் சீனில் மட்டும் தான் டாக்டராக வருகிறார். மீதி எல்லாக்காட்சிகளிலு,ம் நாயகியான மருமகளை ஃபாலோ பண்ணும் வேலை தான், டாக்டர் வேலையை ரிசைன் பண்ணிட்டாரோ என சந்தேகம் எழுப்பும் திரைக்கதை

நாயகி அன்னா பார்ட்டன் ஆக சார்லி மர்ஃபி . பிர்மாதமான முக அழகு , வித்தியாசமான ஹேர்ஸ்டைல் . ஸ்ரீதேவியிடம் ஸ்பெஷல் ஆக அமைந்த குழந்தைத்தன பார்வை இவரது பிளஸ் . இவரது காஸ்ட்யூம் டிசைன்ஸ் எல்லாம் அருமை . ஆனால் காஸ்ட்யூம்ஸ்க்கான தேவை பல காட்சிகளில் இவருக்குத்தேவைப்படவே இல்லை

நாயகனின் மனைவி இன்க்ரிட் ஆக இந்திரா வர்மா , இவருக்கு இந்திய வம்சாவளி முகம், நல்ல நடிப்பு , ஆனால் அதிக வாய்ப்பில்லை ஒரு சோகமான கட்டத்தில் தன் தலையை மடேர் மடெர் என மோதிக்கொள்ளும் காட்சியில் பதற வைக்கிறார். உயிரோட்டமான நடிப்பு (மீரா நாயர் இயக்கிய காமசூத்ரா படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தவர்)


நாயகனின் மகனாக ரிஷ் ஷா. கண்ணியமான முகம், பரிதாபகரமான கேரக்டர் டிசைன். வந்தவரை மனதில் நிற்கிறார்


நாயகியின் தோழி யாக சொனேரா ஏஞ்சல் அப்பப்ப நாயகிக்கு ஆறுதல் சொல்லும் கேரக்டர்

பின்னணி இசை , ஒளிப்பதிவு , ஆர்ட் டைரகச்ன் மூன்றும் இந்த வெப் சீரிசின் பலம். பல இடங்களில் கவனிக்க வைக்கின்றன

க்ளென் லேபர்ன் ,லிஸா பரோஸ் டிசா இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள் , ஒரு முறை தவறிய காதல் உறவை நியாயப்படுத்துவது போல காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள்

சபாஷ் டைரக்டர்


1நாயகி தன் காதலன் செல் ஃபோனில் டாட் என பதிவு செய்த ஃபோன் நெம்பரை சேவ் செய்யும் காட்சியும், மருமகளிடமிருந்து ஃபோன் வந்ததும் உடனே அந்த நெம்பரை ஏ என நாயகன் பதிவு செய்யும் காட்சியும்

2 நாயகன் - நாயகி இருவரும் தனிமையில் முதன் முதலாக அபார்ட்மெண்ட்டில் சந்தித்துக்கொள்ளும் காட்சி

3 தன் காதலியின் ஃபேவரைட் டயலாக்கை தன் அப்பா சொல்வதைக்க்ண்டு அதிர்ந்து போகும் மகனின் ரீ ஆக்சன்

4 நாயகி தன் ஃபிளாஸ்பேக் கதையை சொல்லும்போது தரும் அதிர்ச்சி தகவல் 5 மூன்றாவது எபிசோடில் நிகழும் எதிர்பாராத மரணம் கதையின் போக்கையே மாற்றும் தருணம்


ரசித்த வசனங்கள்

1 பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள் தான்

2 என் கிட்டே உங்களுக்கு என்ன விஷயம் எல்லாம் தெரிஞ்சுக்கனும்?

என் மகனுக்குத்தெரியாத உன்னைப்பற்றிய ரகசியங்கள் எனக்குத்தெரியனும்

3 கேள்விகளை நேசிக்கக்கத்துக்கனும்

4 அவரு ஹெட்டிங்ல பேச மாட்டாரு , ஆனா ஹெட் லைன்ஸ்ல வருவாரு


5 கணவ்னோட ஆஃபிஸ்ல தனியா இருக்கும் மனைவி என்ன செய்வா? உளவாளி ஆகிடுவா

6 உன் காதலியோட சந்தோஷமா இருக்க விரும்பினா , அவளைக்கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்துட்டா அவ மறைக்கும் விஷயங்களை தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டக்கூடாது

7 அவன் அவனோட அப்பாவை எல்லா விஷயங்களிலும் ஃபாலோ பண்ண நினைச்சான், ஆனா அவனோட நல்ல குணம் என்ன தெரியுமா? அவனோட அப்பாவின் எந்த ஒரு கெட்ட குணமும் அவன் கிட்டே இல்லாம போனதுதான்

8 நீ இன்னும் கொஞச்ம் டைம் கேளேன்

நேரம் எதையும் மாத்தாது

9 நாம் ஒரு விஷயம் பண்ணனும்னா முதல்ல நம்ம மனசை உறுதி ஆக்கிக்கனும்

10 சில விஷயங்களை நம்மால மாத்தவே முடியாது

11 நேரம் / காலம் எல்லாத்தையுமே மாற்றும், அல்லது அப்படி மாறும் வரை நாம் காத்திருக்கனும்


12 என் வாழ்க்கையை அழகாக்க முயற்சி பண்றவங்களுக்கு நான் எப்பவுமே இடம் கொடுப்பேன்


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்


1 நாயகி மூச்சுக்கு முன்னூறு தடவை என் கண்ட்ரோலில் தான் எல்லாம் இருக்கனும் என பஞ்ச் டயலாக் பேசுவதும், நாயகியின் அம்மா நிச்சயதார்த்தத்தின்போது எல்லாம் உன் கண்ட்ரோலில் தானே இருக்கு ? எனக்கேட்பதும் செம காமெடி ., ஏம்மா நீங்க என்ன கம்பெனி நடத்தறீங்களா? குடும்பம் நடத்தறீங்களா?


2 நாயகன் வீடு ஒரு ஏரியா , நாயகி வீடு 50 கிமீ தள்ளி வேறு ஒரு ஏரியா நாயகன் பணி புரியும் இடம் 75 கிமீ தள்ளி ஒரு ஏரியா . ரயிலில் பயணம் செய்து நாயகன் போய் வரவே அப் அண்ட் டவுன் டெய்லி 3 மணி நேரத்துக்கும் மேல் ஆகுமே? எப்படி பேலன்ஸ் பண்ணுவார் ? டைம் மேனேஜ்மெண்ட் கஷ்டமாச்சே?


3 நாயகி இருக்கும் அப்பார்ட்மெண்ட் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஏகப்பட்ட சோபாக்கள் ,மெத்தைகள் உள்ள பெட்ரூமும் இருக்கிறது , ஆனால் வெறும் தரையில் நாயகி படுத்துக்கொண்டு நாயகனை உறவுக்குஅழைப்பது ஏன்? என்ன அவசரம் ? ரிலாக்ஸாக இருக்கலாமே?


4 நாயகன் . நாயகி இருவரும் ஈடுபடுவதே கள்ள உறவு. வாசல் கதவு , பெட்ரூம் கதவு எதையும் தாழ் போடாமலா அப்படி மாட்டிக்கொள்வார்கள் ?


5 மூன்றாவது எபிசோடில் ஒரு ஆக்சிடெண்ட்டல் டெத் நடக்கிறது. அந்த சம்பவத்தைக்கண்ணால் கண்டவர்கள் நாயகன் , நாயகி இருவர் மட்டுமே. நாயகி பயந்து அந்த எரியாவை விட்டே எஸ் ஆகி விட்டார் . போலீஸ் நாயகனை சந்தேகப்படாதது ஏன் ? விசாரிக்கவே இல்லையே? நாயகன் சொல்லும் வாக்குமூலத்தை அப்படியே நம்புவது எப்படி ? இதை ஒரு க்ரைம் த்ரில்லர் கதையாகக்கொண்டு போக எல்லா வாய்ப்பும் இருந்தும் கில்மா த்ரில்லராக மாற்றியது ஏன் ?


6 நாயகி சொல்லும் அதிர்ச்சிகரமான ஃபிளாஸ்பேக் கதையில் நாயகியின் அம்மா சொல்வது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது , எந்த அம்மாவாவது அப்படி சொல்வாரா?

7 நாயகியின் உடன்பிறந்த சகோதரன் சாயலில் இருக்கும் ஆள் மீது நாயகி காதல் கொள்வதும் திருமணம் வரை போவதும் நம்பும்படி இல்லை . யாராவது தன் சொந்தத்தம்பியின் முகச்சாயலில் உள்ளவரை திருமணம் செய்வாரா?

8 நாயகியின் அம்மா வாக வருபவர் நாயகியின் பாட்டிக்கு அக்கா மாதிரி இருக்கிறார். ரொம்ப ரொம்ப ஓவர் . ஆனால் நாயகியின் மாமியார் நாயகிக்கு தங்கை மாதிரி இருக்கிறார். என்ன ஒரு செலக்சன் ?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- நாலு எபிசோடுமே நாலுபேர் நாலு விதமாக பேசும் விதமாகத்தான் இருக்கிறது 18+

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கதையை எல்லாம் எதிர்பார்க்காமல் அந்தக்கால காலைக்காட்சி மலையாளப்படங்கள் பார்க்கும் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட “ ஏ “ க்ளாஸ் படம் சி செண்ட்டர் ரசிகர்களுக்காக // ரேட்டிங் 2 / 5 --

சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

0 comments: