Monday, January 02, 2023

கட்டா குஸ்தி (2022) தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


தனக்கு  வரப்போற  மணப்பெண்  எப்படி  இருக்கனும்? என  எட்டு  கண்டிஷன்கள்   போட்ட 1982ல் ரிலீஸ்  ஆன  எஸ்  வி  சேகரின்  மணல்  கயிறு   படத்தையும் , அடங்காப்பிடாரி  மணைவியை  அடக்கும்  கணவனின்  கதையாக  வந்த  1997 ல்  ரிலீஸ்  ஆன  கார்த்திக்- நக்மா  நடித்த  பிஸ்தா  படத்தையும்  இணைத்து  1995ல்   ரிலீஸ்  ஆன  பாட்ஷா  படத்தின்  இடைவேளை  ட்விஸ்ட்டையும் பட்டி  டிங்கரிங்  பண்ணி  எடுக்கப்பட்ட  பிரமாதமான  காமெடி  மெலோ  டிராமா  தான்  இந்த  கட்டா  குஸ்தி 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  சின்ன  வயசுல  இருந்தே  குஸ்தியில்  ஆர்வம்  உள்ளவர் , அதனால்  அதில்  பயிற்சி எடுத்து  அதில்  வீராங்கனை  ஆகிறார். இதனால்  அவருக்குப்பேரும்  புகழும்  கிடைத்தாலும்  மாப்பிள்ளை  கிடைக்கவில்லை . எல்லாரும்  பயந்து  ஓடறாங்க 


நாயகன் ஊரில் வெட்டாஃபீஸ். சர்க்கு  அடிச்சுட்டு  வெட்டியா  ஊர்  சுற்றுபவர். அவர்  ஆணாதிக்க  சிந்தனை  மிகுந்தவர் , தனக்கு  வரப்போகும்  பெண்  நீண்ட  கூந்தலை  உடையவ்ராகவும்,  தன்னை  விட  குறைவான  படிப்பை  மட்டும் படித்திருக்கும்  அடக்க  ஒடுக்கமான  பெண்  வேண்டும்  என  தேடுபவர்


நாயகனின்  கண்டிஷன்களை  உணர்ந்து  நாயகியின்  சித்தப்பா   ஒரு  டிராமா  செட்டப்  செய்து  திருமணம்  நடத்தி  விடுகிறார்


கொஞ்ச  நாட்கள்  குடும்ப  வாழ்க்கை  நல்லாதான்  போய்க்கிட்டு  இருக்கு . ஆனா  அந்த  ஊர்ல  ஒரு   ஃபேக்டரி   ஓனருக்கும்  , நாயகனுக்கும்  ஒரு  தகறாரு  இருக்கு. நாயகனை  மிரட்ட  அடியாட்களோடு  வில்லன்  வர  நாயகி  பாட்ஷா  இடைவேளை  ட்ரான்ஸ்ஃபர்மேசன்  மாதிரி  ஆக்சன்  அவதாரம்  எடுத்து  அனைவரையும்  பிளந்து  கட்டுகிறாள் . நாயகியின்  சுயரூபம் தெரிந்த  பின்  ந்டக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  திரைக்கதை


நாயகனாக  விஷ்ணு  விஷால்   அடக்கி  வாசித்து  இருக்கிறார். இது போன்ற  ரோலில்  ந்டிக்க  துணிச்சல்  வேண்டும் இப்படத்தின்  தயாரிப்பாளர் இவர்தான். இருந்தும்  நாயகிக்கு  முக்கியத்துவம்  தந்தது  சிறப்பு 


ஐஸ்வர்யா  லட்சுமிக்கு  இது  ஏறுமுகம் . பொன்னியின்  செல்வன்  பூங்குழலி ,அம்மு    தெலுங்கு ,   குமாரி  மலையாளம் என  அடுத்தடுத்து  சிக்சர்களாக  விளாசித்தள்ளியவர்  இதிலும்  கலக்கி  இருக்கிறார்


 சவுரி  அணிந்து  கணவனை  ஏமாற்றும் காமெடி  காட்சிகளில்  சிரிக்க  வைப்பவர்   இடைவேளை  ஃபைட்  காட்சியில்  அதகளம்  பண்ணி  இருக்கிறார் 


தமிழ்  சினிமா  வில்  நாயகிக்கான  மாஸ்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  வைத்த  முதல்  படம்  என  இதை  பதிவு  செய்யலாம் 


கருணாஸ்  காமெடியிலும்  குணச்சித்திரத்திலும்  முத்திரை  பதிக்கிறார்


நண்பனாக  காளி  வெங்கட், சித்தப்பாவாக முனீஷ்  காந்த்  தங்கள்  பங்களிப்பை  கச்சிதமாக  வழங்கி  உள்ளனர் .


ரெடின்  கிங்க்ஸ்லீயின்  ஒன்  லைன்  காமெடிகள்  கலக்கல்  ரகம் 


ரிச்சர்ட்   எம் நாதனின்  ஒளிப்பதிவு  திரைக்கதைக்கு என்ன  தேவையோ  அதை  செய்துள்ளது , ஜஸ்டின்  பிரபாகரன்  இசையில்  2  பாடல்கள்  நன்கு  ஹிட்  ஆகி  உள்ளது ., பிஜிஎம்  கச்சிதம் 

ஜி  கே  பிரசன்னா  வின் எடிட்டிங்கில்  ரெண்டரை மணி  நேரத்துக்கு  படத்தை  கச்சிதமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர்  செல்லா  அய்யாவு . கலகலப்பான  பெண்கள்  ரசிக்கும்  விதத்தில்  குடும்பப்பாங்கான  படம் தருவதில்  வெற்றி  பெற்றிருக்கிறார் 


ரசித்த  வசனங்கள்


1   குஸ்தி  கட்ற பொண்ணு  குடும்பத்துக்கு  ஆகாது , அவ  உன்னைத்தூக்கிப்போட்டு  மிதிச்சா  உன்  உயிரே போய்டும்,  உன்னை  அடிக்கறது  ;போக  என்  மேலயும்  கை  வைப்பா 


2   உலகமே  உன்னை  தோத்துட்டே தோத்துட்டே   அப்டினு  சொன்னாலும் நீயா  ஒத்துக்கற  வரை  நீ  தோற்க  மாட்டேனு  சொல்வாங்க,  ஆனா நான்  கடைசி  வரை  தோத்துட்டுதான்  இருந்தேன்


3   தன்னை  விட  பொண்ணு  கம்மியா  படிச்சிருக்கனும்னு  மாப்ளை  ஆசைப்படறாரு, அதுல  என்ன  தப்பு ?

 இவனே  எட்டாவது  ஃபெயில், இதுல இவனை  விடக்கம்மியான்னா  எப்படி ?இது  போக  கொரானா  டைம்ல +2  வரை ஆல்  பாஸ்  போட்டுட்டாங்களே?

4  படிச்சவ  நம்மை  1008  கேள்வி  கேட்பா , படிக்காதவ  நாம  கேட்கும்  கேள்விக்கு  மட்டும்  பதில்  சொல்வா, நம்மைக்கேள்வி கேட்க  மாட்டா


5  பொண்ணுக்கு  முடிதான்  முக்கிய,ம், கூந்தலே  இல்லைன்னா  அவ  பையன் 


6    டூ  கே  கிட்ஸ்  பொண்ணு  கிடைச்சாப்போதும்  கட்டிக்கறாங்க, ஆனா நைண்ட்டீஸ்  கிட்ஸ்  1008 கண்டிஷன்  போட்டு  பொண்ணே  கிடைக்காம  சுத்திட்டு  இருக்காங்க 


7   ஏழாம்  கிளாஸ்  வரை  இவன்  என்  கூட  ஒண்னா  படிச்சான் 


  நீ  படிச்சதே  ஏழாம்  கிளாஸ்  வரை  தானே?


8  இந்தியாவிலேயே  கேரளப்பெண்களுக்குதான்  கூந்தல்  நீளம்  அதிகம். அடிக்கடி  முடி  வெட்டனும், இல்லைன்னா  கூந்தல் காலை  தடுக்கி  விடும்  அளவுக்கு  வளர்ந்துடும்


9 தமிழ்நாட்டுப்பசங்க  மாதிரி  அப்பாவிப்பசங்க  எங்கேயும்  கிடைக்க  மாட்டாங்க 


10  புருசன்  சாப்ட்ட  பின் தான்  பொண்டாட்டி  சாப்பிடனும்னா காலம் பூரா  நாம  பட்டினியா  இருக்கனும். அவனுங்க  எங்காவது  மேய்ஞ்சுட்டு  வருவானுங்க 


11  உங்களுக்கு  ஏண்ணே  பொண்டாட்டின்னா  பிடிக்க  மாட்டேங்குது ?


 யார்டா  சொன்னது? பிடிக்காதுன்னு? எல்லா  ஆம்பளைங்களுக்கும் பொண்டாட்டின்னா  பிடிக்கும், ஆனா  அது  அடுத்தவன்  பொண்டாட்டியா  இருக்கனும் 


12  நிறையப்பேரு  காரணமே  இல்லாம  பொண்டாட்டியை  அடிப்பாங்க,   ஆனா  நான்  அப்படி  இல்லை .  தகுந்த  காரணம்  இருந்தாதான்  அடிப்பேன்  


13  என்னய்யா  ;பொண்டாட்டியை  விட்டு  அடிக்க  வைக்கறே?


 நான்  எங்கேய்யா  அடிக்க  வைக்கறேன், அவளாத்தான்  அடிக்கறா


14  ஊருக்குள்ளே  பல  பேரு  அவங்க  அடியாளுங்க்ளோட  பொண்டாட்டியைத்தான்  வெச்சிருப்பாங்க, நீ பொண்டாட்டியையே  அடியாளா  வெச்சிருக்கே?


15  டேய்  அன்னைக்கு என்னைப்பார்த்து  என்னடா  கமெண்ட்  அடிச்சே?


 நாட்டுக்கட்டையாட்டம்  இருக்கேன்னேன்


 இப்போ  இந்த அடி  எப்படி  இருக்கு ?


 உருட்டுக்கட்டையாட்டம்  இருக்கு 


16  எல்லாபொண்டாட்டிகளும்  அடிக்கத்தான்  செய்வாங்க ,அது  வீட்டு  அடி  ஆனா  உன்  பொண்டாட்டி யோட அடி  காட்டு அடி


17  மாஸ்டர், எப்படியாவது  நான்  15  நாட்களில்  குஸ்தி  கத்துக்கனும்


 பதினைஞ்சு  நாட்களில்  கத்துக்க  கட்டா  குஸ்தி  என்ன  பருப்பு  சாம்பாரா? 


18  ஆனா  ஒண்ணுடா , பொண்டாட்டியை  அடிக்க  இவ்வளவு  வெறித்தனமா  பிராக்டீஸ்  பண்றது  உலகத்துலயே நீ  ஒருத்தன்  தான்


17  மாப்ளை  போட்டில  நீதான்  ஜெயிப்பே


 எப்படி சொல்றே?  


 சார்பேட்டா  பரம்பரை ,பார்த்தியா? அதுல  ரங்கன்  வாத்தியார்ட்ட  ட்ரெய்னிங்  எடுத்த  எவனும்  ஜெயிக்கலை, கடைசில  வேடிக்கை  பார்த்த  கபிலன்  தான்  ஜெயிச்சான் , இறுதிச்சுற்று  படத்துல  சின்ன  வயசுல  இருந்தே  ட்ரெய்னிங்  எடுத்த  அக்காவை  விட  டி வி  ல  மேட்சை  வேடிக்கை  பார்த்த  தங்கச்சிதான்  மேட்சை  ஜெயிச்சா  அவ்வளவு ஏன்? பத்ரி  படத்துல   பாக்சிங்  கத்துக்கிட்ட  அண்ணனை  விட   வேடிக்கை  பார்த்துட்டு  இருந்த  விஜய் தான்  கப்  அடிச்சாரு 


அதுக்கு ?


 இதுல  இருந்து  என்ன  தெரியுது ? மேட்ச்  ல  ஜெயிக்க  நல்லா  வேடிக்கை  பார்த்தா  போதும், நீதான்  நல்லா  வேடிக்கை  பார்க்கறியே?


18   நீ  மேட்ச்  ல  ஜெயிச்சா  அந்த   வெற்றியை  யாருக்கு  டெடிகேட்  பண்ணுவே?


 உங்களுக்குத்தான்  மாஸ்டர்


 நோ நோ  உன்  ஒயிஃப்க்குதான்  டெடிகேட்  பண்ணனும்ஏண்டா , ஜெயிக்கறவங்க  தானே  டெடிகேட்  பண்ணனும் ? நீ  எதுக்கு ? 


19   மாஸ்டர், உங்களுக்கும்  உங்க  மனைவிக்கும்  சண்டையே  வந்ததில்லையா?


 நீ  எனக்குத்தேவை  இல்லை, நான்  உனக்குத்தேவையில்லை   அப்டினு  இருக்கும்போது  சண்டையே  வராது  நான்  உனக்கு  எவ்ளோ  முக்கியம்? நீ  எனக்கு  எவ்ளோ  முக்கியம்? கற  உறவுல மட்டும்தான்  சண்டையே  வரும் 


20  எப்போ  நீ  பொண்டாட்டி கழுத்துல  தாலி  கட்டிட்டியோ அப்பவே  அவ  குடும்பம்கற  சமஸ்தானத்துக்கு  முடி  சூட்டப்பட்ட  ராணி ,  அவ  எடுக்கறதுதான்  முடிவு, அதை  செயல்படுத்துவது  மட்டும்தான்  புருசனோட  வேலை 


21   எப்போ  நீ  உன்  பொண்டாட்டியோட மோதனும்னு  முடிவு  பண்ணுனியோ அப்பவே  தோத்துட்டே


22  வாழ்க்கை  முழுவதும்  ஒரு  ஆணுக்கு  பெண்ணின்  தேவை  இருக்கு , மேரேஜ்  ஆகும்  வரை  அம்மா , ஆன  பின் மனைவி


23  எத்தனையோ  பொண்ணுங்க  தனியா  இருந்து  குழந்தைகளை  வளர்த்து ஆளாக்கி  இருக்காங்க, ஆனால்  ஆணால்  அது  முடியாது 


24  எந்த  ஒரு செயலையும்  48  நாட்கள்  தொடர்ந்து  செய்தா  அது  நமக்கு  பழகிப்போய்டும்னு  சொல்வாங்க ,15  வருசமா  நான்  குஸ்தியைப்பத்தியே  நினைச்சுட்டு  இருக்கேன், எப்படி  மறக்க  முடியும் ?  


25  வாழ்க்கைல  சாதிக்கனும்னு  நினைக்கறவங்க  குடும்பத்தைப்பத்தி  யோசிக்கக்கூடாது 


26  மற்ற  நாடுகளில் எல்லாம்  எதிராளி  கூட  மோதி  ஜெயிக்கனும், ஆனா  இந்தியாவில்  மட்டும்  பெண்கள்  தங்கள்  குடும்பத்தோட  மோதி  முதல்ல  ஜெயிக்கனும்


27  "சித்தப்பா, நான் டிகிரி, ஏழாவது படிச்சிருக்கேன்னு சொல்றீங்களே?"

"நான் பொய் சொல்லல்ல, நீ ஏழாவதும் படிச்சிருக்கே"


சபாஷ்  டைரக்டர்


1   சாம்பிராணி  காட்டலைன்னா  கூந்தல்  முடி  உதிரும்னு  நாயகன்  நாயகியின்  சவுரி  முடிக்கு  புகை  போடும்  காட்சி  செம  காமெடி 


2  தலைக்குக்குளிக்கலையா? என கணவன்  கேட்க  நாயகி  பாத்ரூம்  போய்  சவுரியை  அடிச்சுத்துவைசு  அலசி  எடுத்து  பின்  தன்  சவுரியை  மாட்டிக்கொள்வது  வெடிச்சிரிப்பு 


3  இடைவேளை  டைமில்  வரும்  மாஸ்  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  நாயகி  ஈவ்  டிசிங்  ஆட்களை  அடித்து  நொறுக்கும்  வீடியோ  கேரளா  முழுவதும்  வைரல்  ஆனதால்  இனி  இந்த  ஸ்டேட்ல  மாப்ளை  கிடைக்காது , தமிழகத்தில்தான்  கிடைக்கும்னு  ஒரு  டயலாக்  வருது /. வாட்சப் ல  வைரல்  ஆவது  என்பது  கேரளாவுக்கு  தனி  தமிழக்த்துக்கு  தனியா? உலகம்  பூரா  பரவுதே? பல கேரள  வீடியோக்கள்  தமிழகத்தில்  பரவவில்லையா?


2   நாயகி  ஒரு  குஸ்தி  வீராங்கனை  என்பதை  மறைத்து  திருமணம்  செய்பவர்  புகுந்த  வீட்டுக்கு  குஸ்தியில்  ஜெயித்த  கப் , மெடல்கள்  எல்லாம்  எதற்கு  கொண்டு  போகிறார்? பார்த்தா  கேட்க  மாட்டாங்களா?


3  தான்  கர்ப்பமாக  இருப்பது  நாயகிக்கே  தெரியாது  என்பது  எப்படி ?  எந்த  டாக்டருக்கும்  தெரியாத  உடல்  ரகசியம்  அந்த  உடல்  ஓனருக்குத்தான்  முதலில்  தெரியும்


4   க்ளைமாக்ஸ்  ல  நாயகன்  குழந்தை  மேல  சத்தியம்  என  இடது  கைல சத்தியம்  பண்றாரு. வலது  கைல  தானே  பண்ணனும்?


5  வெறும்  15  நாட்கள் பயிற்சி  பெற்ற  நாயகன்  15  வருடங்கள்  பயிற்சி  பெற்று  ஃபார்மில்  இருக்கும்  நாயகியுடன்  மோதத்துணிவதும்  , 20  வருட்ங்கள்  கோச்  ஆக  இருக்கும்  வில்லனுடன்  மோதுவ்தும்  சினிமாத்தனம் சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கலகலப்பான  குடும்பப்பாங்கான  பொழுதுப்போக்குச்சித்திரம். நீண்ட  இடைவெளிக்குப்பின்.. 2022ம்  ஆண்டின் மாபெரும்  கமெர்ஷியல் சக்சஸ்  ஃபிலிம் . ரேட்டிங்  3.25 / 5 

Gatta Kusthi
Gatta Kusthi poster.jpg
Theatrical release poster
Directed byChella Ayyavu
Written byChella Ayyavu
Produced byRavi Teja
Vishnu Vishal
Shubhra
Aryan Ramesh
StarringVishnu Vishal
Aishwarya Lekshmi
CinematographyRichard M. Nathan
Edited byPrasanna GK
Music byJustin Prabhakaran
Production
companies
Distributed byRed Giant Movies
Release date
2 December 2022
CountryIndia
LanguageTamil
Box office30 crore[1][2]

0 comments: