Wednesday, January 18, 2023

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்-MUKUNDAN UNNI ASSOCIATES- (2022) ( மலையாளம்) -சினிமா விமர்சனம் ( க்ரைம் டிராமா) @டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ டி டி


சதுரங்க வேட்டை , மங்காத்தா , கண்ணும்  கண்ணும்  கொள்ளையடித்தால், அமைதிப்படை   போன்ற  படங்கள்  எல்லாம்  ஹீரோ மற்றவர்களை  ஏமாற்றி  சம்பாதிக்கும்  மனப்பான்மை  உள்ளவராக  வருவார். வழக்கமாக  நீதி , நேர்மை  என  டயலாக்  பேசும் ஹீரோக்களையே  பார்த்து  சலித்த  ரசிகர்களுக்கு  இந்த  நெகடிவ்  ஷேடு  திரைக்கதை  நாயகன்  மிகப்புதிதாகத்தெரிந்ததால்  அவைகள்  மாபெரும்  வெற்றிப்படங்கள்  ஆகின. அந்த  வழியில்  சீட்டிங்  ஃபெலோவாக  ஹீரோ  நடிக்கும்  இன்னொரு  நெகடிவ்  ஷேடு  படம் தான் இது 


Spoiler  alert

நாயகன்  சட்ட,ம்  படித்த  வக்கீல், ஆனால்  பெரிய  கேஸ்  எதுவும்  கிடைக்காமல்  டம்மியாக  இருக்கிறார். ஒரு நாள் அவரது  அம்மாவுக்கு வீட்டில்  ஒரு சின்ன  விபத்து  ஏற்பட்டு  கால்  முறிவு  ஏற்படுகிறது. ஹாஸ்பிடலில்  சேர்த்து  விட்டார், ஆனால்  ஃபீஸ்  கட்ட  கைவசம்  பணம்  இல்லை . அப்போது  ஒரு  வக்கீல்  உதவுகிறார். இது  சாலை  விபத்து  போல்  ஜோடித்து  அதன்  மூலம்  ஹீரோவுக்கு  பணம்  கிடைக்க  வழி  செய்கிறார். அந்த  டெக்னிக் நல்லா  இருக்கே? நாமும்  முயற்சிப்போம்  என  ஹீரோ  அதே  வழியில்  போக  முடிவெடுக்கிறார்


ஹாஸ்பிடல்  நிர்வாகத்தை  கையில்  போட்டுக்கொண்டு  யாருக்கு  எங்கே  என்ன  விபத்து  நடந்தாலும் அதில் ஹீரோ  ஆஜர்  ஆகி  அந்த  கேசை  நடத்தி அதில்  வெற்றி  பெற்று  அதில்  கிடைக்கும்  இன்சூரன்ஸ்  தொகையை  பாதிக்கப்பட்டவருக்கும்  தந்து  தானும்  கமிஷன்  எடுத்துக்கொள்கிறார்.

 நாளடைவில்  இதில்  மிகப்பெரிய  வெற்றி பெற்று  தனக்கு  ஆரம்பத்தில்  உதவிய  அந்த  வக்கீலுக்கே  தொழில்  முறை  போட்டியாளராக  மாறி  விடுகிறார்.தொழில்  போட்டி  காரணமாக  அந்த  வக்கீலை  திட்டமிட்டு  கொலையும்  செய்து  அதை  சாலை  விபத்து  போல  செட்டப்  பண்ணி  விடுகிறார்நாயகன்  கூடவே  இருந்த  நண்பன்  நாயகனைப்போலவே  தொழில்  கற்றுக்கொண்டு  விடுகிறார். அவருக்குப்போட்டியாக  உருவெடுக்கிறார். 

 ஒரு  கட்டத்தில்  நாயகன்  ஒரு  சிக்கலில்  மாட்டிக்கொள்கிறார். அவருக்கு  ஒரு  ஜட்ஜே  எதிராகத்திரும்புகிறார். நாயகன்  செய்த  தவறுக்கு  அந்த  ஜட்ஜ்  தான்  சாட்சி . இதிலிருந்து  நாயகன்  எப்படித்தப்பிக்கிறார்? என்பதை  நகைச்சுவையாக  , விறு விறுப்பாக  தந்திருக்கின்றனர் 

நாயகனாக  வினீத்  சீனிவாசன் . இவர்  ஒரு  இயக்குநரும்  கூட  ஹிருதயம்  என்ற  லவ்  ஸ்டோரியை   சமீபத்தில்  இயக்கி  ஹிட்  ஆக்கியவர் . இதில்  பக்கத்து  வீட்டு  ஆள்  போன்ற  சாதாரணமான  உருவத்தில்  வந்து  காட்சிக்கு  காட்சி  கைதட்டலை  அள்ளிக்கொள்ளும்  நாயகனாக  கலக்கி  விட்டார் . படம்  முழுக்க  இவர்  தன்  மனசாட்சியோடு  பேசிக்கொள்ளும்  கவுண்ட்டர்  டயலாக்ஸ்  சீன்ஸ்  அட்டகாசம் 


போட்டி  வக்கீலாக  சுராஜ்  வெஞ்சார மூடு  கச்சிதமான  நடிப்பு . தனக்குப்போட்டியாக  உருவாகியவர்  ஒரு  வக்கீல்  என்பதை  உனர்ந்து   அவர் முகத்தில்  காட்டும்  அதிர்ச்சி  அருமை 

நாயகியாக அர்ஷா  அதகளம்.  ஹாஸ்பிடல்  ஓனரையே  ஒதுக்கி  விட்டு  ஒரு  வக்கீலைக்காதலித்து  மணக்க  அவர்  சொல்லும்  காரணம்  அருமை . நாயகனுக்கே  கிரிமினலாக  ஐடியா  கொடுப்பதும்  , பல  பிரச்சனைகளை  அசால்ட்டாக  தீர்ப்பதும்  சபாஷ்  நடிப்பு 


விஸ்வாஜித்தின்  ஒளிப்பதிவு  கனக்கச்சிதம், சிபி மேத்யூவின்  பின்னணி  இசை  படத்தின்  பெரிய  பலம். 

வாகன  விபத்து  சட்டம்  பற்றியும்,  விபத்தில்  சிக்கி  மருத்துவமனை  வந்து  காப்பீடு  பெறுவது  பெற்றியும்  மிகப்பெரிய  ஆர்ஃபாய்ச்சியே  செய்து  பிரமாதமாக  திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்  அபினவ்  சுந்தர்  நாயக்

இரண்டு  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடும்   இந்தப்படத்தை  கச்சித மாக  ட்ரிம் பண்ணி  இருக்கிறார்கள்  நிதின் ராஜ் மற்றும்  அபினவ் சுந்தர்

 கேரளாவில்  வெளியாகி  மிகப்பெரும்  வெற்றி  பெற்ற  இந்தப்படம்  இப்போது  டிஸ்னி  பிளஸ்  ஹாட்  ஸ்டார்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது   

ரசித்த   வசனங்கள் 

1   வெற்றிக்குத்தேவையான  நான்கு  விஷயங்கள் 1  கடின  உழைப்பு ( ஹார்டு  ஒர்க்)2  அர்ப்பணிப்பு  ( டெடிகேஷன் ) 3  perseverance  விடா முயற்சி 4   ஒழுக்கம்  (டிசிப்ளின் )

2   இந்த  உலகத்துல  ரெண்டு  விதமான  நபர்கள்  தான்  இருக்காங்க  
1  ஏமாற்றுபவர்கள்  2  ஏமாற்றப்படுபவர்கள் 

3   சுயநினைவு  இல்லாதவங்க  கிட்டே  கையெழுத்து  வாங்குவது  மிக  சுலபம்

4   தேவை  இல்லாததை  உடனே  அழிச்சுடனும், அதுதான்  நமக்கு  மரியாதை 

5   நாம  செய்யற  வேலை  நமக்கு  சலிப்பைக்குடுக்கக்கூடாது 

6  தோற்பதை  விட  நல்லது  செத்துப்போவது 

7  ஏழு  நாய்கள்  அங்கே  இருக்கும்  ஐ  மீன்   7  ஏஜெண்ட்ஸ்

8   வேறுபட்ட  , மாறுபட்ட  மார்க்கெட்ல  இன்வெஸ்ட்  பண்ணுவதை  விட  மோனோபாலி  ல  இன்வெஸ்ட்  பண்ணுவது  அதிக  பாதுகாப்பு 


9   இறந்தவங்க  வீட்டில்  ஆதாயம்  பார்க்கலாமா?  

 ஏன்  கூடாது ?   எரியற  வீட்ல  பிடுங்கறவரை  லாபம் 


10  ஒருத்தன்  தன்  வாழ்க்கைல  மோசமான  நிலைல  இருக்கும்போது  அவனை  ஏமாற்ற  நினைக்கற  உன்னை  மாதிரி   ஒருவனை   காமன்சென்ஸ்  உள்ள  எந்தப்பெண்ணும்  விரும்ப  மாட்டா 

11  எல்லாரும்  என்னை  விட  முன்னேறிப்போய்ட்டே  இருக்காங்க 

12  உனக்கு  மரியாதை  தேவை  எனில்  நீ  முதலில்  மரியாதைக்கு  உரியவனாக  நடந்து  கொளளனும், குறிப்பா  நீ  உடுத்தும்  உடைகள் 


13   கஷ்டப்பட்டு  உழைப்பவனை  இவங்க  முன்னேற  விட  மாட்டாங்க 


14   மேரேஜ்  என்பது  எப்போதும்  ஒரு  இன்வெஸ்ட்மெண்ட் தான்


15 என்னோட  பேச்சைக்கேட்டுட்டு  இருந்தவன்  இப்போ  சொந்தமா  சிந்திக்க  ஆரம்பிச்சுட்டான். இது அபாயம், ஏத்துக்கவே  முடியாது , 

16   ஆக்சிடெண்ட்  கேஸ்ல  கிடைக்கற  பணம்  தான்  பிளட்  மணி 

17 தப்பு  யார்  செஞ்சாலும்  தண்டனை  கண்டிப்பா  அவனுக்கு  கிடைக்கும், இதுதான்  கர்மா 

18  எல்லா  பெரிய  தலைவர்கள் ,   புகழ்  பெற்ற  தொழில்  அதிபர்கள் , பெரிய  மனிதர்கள்  எல்லாரும்  வாழ்க்கைல  பலரை  ஏமாற்றி  இருப்பாங்க  சபாஷ்  டைரக்டர்

1   சுராஜ்    வெஞ்சார  மூட்  ஆக்டிவிட்டி  பார்த்து  தொழிலைக்கற்றுக்கொள்ளும்  ஹீரோ  தன்னைப்பார்த்துத்தொழில் கற்றுக்கொள்ளும்  நண்பனை  பொறாமையாகப்பார்ப்பது  வாழ்க்கை  ஒரு  வட்டம்  என  காட்டுது 

2   ஹாஸ்பிடல்  ஓனரையே  மேரேஜ்  பண்ணாம  ஒதுக்கும்  நாயகி  நாயகனை  மேரேஜ்  பண்ண  ஏன்  செலக்ட்  பண்றா  என  தோழியிடம்  சொல்லும்  காட்சி  பெண்ணின்  தொலை  நோக்கு  சிந்தனையைக்காட்டுகிறது 


3  கொலை  செய்யப்பட்ட  சுராஜ்  பின்  ஹீரோவின் கண்  முன்  ஹாலுசினேசனாக  அவ்வப்போது  தோன்றி   எச்சரிப்பது  மிரட்டுவது  கே  பாலச்சந்தர்  டச்


4   சுராஜைக்கொலை  செய்ய  ஹீரோ  பயன்படுத்தும்  கொலைக்கான  டெக்னிக்  பயங்கரம் 


5 தன்னிடம்  இருக்கும்  அசிஸ்டெண்ட் டை  மாதம்  ரூ 30,000  சம்பளம்  தர்றேன்  என  இழுக்க  முயற்சிக்கும் ஆள்  வெளியே  சென்றதும் அடுத்த  மாதம்  முதல்  உனக்கு  சம்பளம்  இவ்வளவு  என  பேரம்  பேசும்  இடம்  வாவ்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 

1   ஹாஸ்பிடல்  ஓனர்  வைத்திருக்கும்  சொத்து  சட்டப்பூர்வமானது, பாதுகாப்பானது , ஆனால்  அவரை  மேரேஜ்  பண்ணாமல்  மொள்ள  மாரியும், கேப்பமாரியும்  ஆன  ஹீரோ வை  மேரேஜ்  பண்ண  ஹீரோயின்  சொல்லும்  காரணம்.... அய்யய்யோ


2   திருமணம்  முடிந்து  அன்று  இரவே  முதல்  இரவு . அப்போது  மனைவியைத்தொடாமல்  நான்  இப்போ  பிஸ்னெஸ்  மூடில்  இருக்கேன்  என    ஹீரோ  கிளம்பி  வெளியே  செல்வது  செயற்கை 


3    ஹீரோ  பாம்பு  வளர்ப்பவர்  என  பலருக்குஜ்த்தெரியும், அப்படி  இருக்க  தொழில்  போட்டியாளரை  பாம்பு  கடிக்க  விட்டு  கொலை  செய்வது  ஆபத்தாச்சே?


4    மெடிக்கல்  ஷாப் ல  தூக்க  மாத்திரை  10  கேட்கும்  ஹீரோ  2 மட்டும் தான்  கிடைக்கும்  என்றவுடனே  தற்கொலை  திட்டத்தை  மாற்றுகிறார். டாக்டர்  பிரிஸ்கி9ரிப்சன்  சீட்  இல்லாமல்  ஒரு  கடையில் 2  மாத்திரைதான்  கிடைக்கும்  என்றால்  ஐந்து  வெவ்வேறு  கடைகளில்  2  வாங்கிக்கலாமே?


5   டொரீனோ  2  லிட்டர்  பாட்டிலில்  10  தூக்க  மாத்திரை  போட்டு  டிரைவர்  சீட்டில்  ஹீரோ  வைக்கிறார். அது  அரை  குறையாகக்கரைந்த  நிலையில்  சும்மா  100  மிலி  குடித்தால்  அவ்ளோ   தூக்கம்  வந்து  டிரைவர்  விபத்தை  ஏற்படுத்தும்  அளவு  போவாரா? 


6   தற்செயலாக  ஒரு  தப்பு  செய்து  அதில்  இருந்து  தப்பிக்க  ஒரு  ஹீரோ திட்டம்  போட்டால்  ஓக்கே , ஆனா  பர்பசாகவே  ஹீரோ  பலரை  பலவிதமாக  ஏமாற்றுவதும்  எல்லாவற்றிலும்  அவர்  வெற்றி  அடைவது  போலக்காட்டுவதும்  ஏன் ?  


 சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் - படம்  ஸ்லோவாகப்போகும்  மெலோ டிராமாதான் , க்ரைம்  ட்ராமா, பொறுமை  வேண்டும்,  திரைக்கதை  வசனம்  ரசிக்க  வைக்கிறது  ரேட்டிங்  3 / 5 


டிஸ்கி - இந்த  மாதிரி  கதை  அமைப்புள்ள  பட்ங்களை  பார்க்கும்போது  எப்படி  எல்லாம்  நாம்  ஏமாற்றப்படலாம்  என  உணர்ந்து  நாம்  ஜாக்கிரதையாக  இருக்கவேண்டும், மாறாக  இப்படி  எல்லாம்  ஏமாற்றலாமா? என  தவறான  பாதையை  தேர்வு செய்யக்கூடாது


 
Mukundan Unni Associates
Mukundan Unni Associates.jpg
Theatrical release poster
Directed byAbhinav Sunder Nayak
Written byVimal Gopalakrishnan
Abhinav Sunder Nayak
Produced byDr. Ajith Joy
StarringVineeth Sreenivasan
Suraj Venjaramoodu
Sudhi Koppa
Tanvi Ram
Jagadeesh
Edited byNidhin Raj Arol
Abhinav Sunder Nayak
Music bySibi Mathew Alex
Production
company
Joy Movie Productions
Distributed byJoy Movie Productions
CountryIndia
LanguageMalayalam

0 comments: