Monday, January 23, 2023

MUMBAI MAFIA -POLICE VS UNDER WORLD (2022) ஹிந்தி - திரை விமர்சனம் ( க்ரைம் டாக்குமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


1990 களில்  மும்பை  நகரமே  கேங்க்ஸ்ட்ர்  பிடியில்  சிக்கித்தவித்த்து. என்கவுண்ட்டர்கள்  நடந்தது . தாவூத்  இப்ராஹிம்  உட்பட  பல  கேங்க்ஸ்டர்கள்  பற்றியும், அவர்களை  அடக்கிய  போலீஸ்  ஆஃபீசர்கள்  பற்றியும், அவர்கள்  மீது  தொடுக்கப்பட்ட  போலி  என்கவுண்ட்டர்  கேஸ்  பற்றியும்  அலசி  ஆராயும்  ஒரு  க்ரைம்  ட்ராமா  இது . டாக்குமெண்ட்ரி  ஃபிலிம் இது  பெரும்பாலும்  ரிட்டையர்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்களின்  பேட்டிகளின்  தொகுப்பாகவே  இருக்கிறது. மேலும்  சில  மீடியா  ரிப்போர்ட்டர்களின்  பேட்டியும்  உள்ளடக்கம் 

1974ல்  தன்  முதல்  கொள்ளையை  ஆரம்பித்தான்  தாவுத் இப்ராஹிம். திலீப்  புவா  என்பவன்  தான்  தாவூத்  கேங்க்ல  அபாயகரமான  ஆள் மயா  தோழாஸ்  என்பவன்  அவனோட  கூட்டாளி 

1993  ல  நடந்த  வெடிகுண்டு சம்பவம்  இந்தியாவை அதிர  வைத்தது, அபுசலீம்  க்கு  மரண  தண்டனை  தர  மாட்டொம்  என  உறுதி  அளித்த  பின்  தான்  இந்தியா  அழைத்து  வர  முடிந்தது 


அபுசலீம்  வெடிகுண்டு  சம்பவத்தில்  மட்டுமல்ல இசை  அமைப்பாளர்  குல்சன்  குமார் கொலை  வழக்கும்  அவன்  மீது  உண்டு 


பிரதீப்  சர்மா  என்ற  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்  மேல  போலி  என்கவுண்டர்  பண்ணதா  ஒரு  வழக்குஅதில் அவருக்கு  ஜெயில்  தண்டனை  கிடைத்தது . லகன்  பையா  என்பவரை  கொன்றார்  என  குற்றம்  சாட்டப்பட்டு  மூன்றரை  வருடங்கள்  ஜெயிலில்  இருந்து  பின்  குற்றச்சாட்டு  நிரூபிக்கப்படாததால்  ரிலீஸ்  ஆனார் 

தாவூத் தின்  தம்பி இக்பால்  காஸ்கர்  என்பவனை  கைது  செய்தது  பர பரப்பாக  பேசப்பட்டது 

ரசித்த  வசனங்கள்


 1  ஒரு  வெளியூர்க்காரனுக்கு  மும்பைல  என்ன  பெரிய  கஷ்டம்னா  இங்கே  பயங்கரமா  வேர்த்துக்கொட்டும் 


2   ஒரு  போலீஸ்  ஆஃபீசரின்  வாழ்வில்  வன்முறைகள்  அதிகமா  இருக்கும், இது வலிகள்  நிறைந்த  வாழ்க்கை, ஆனா  நாம  இதை  ஏத்துக்கொண்ட  பின்  அதை செஞ்சுதான்  ஆகனும் 


3 இந்தியாவோட  க்ரைம்  கேப்பிடல்  மும்பைதான் 


4  யாரையாவது  கொல்றதா  இருந்தா 10  அல்லது 20  புல்லட்களை  யூஸ்  பண்ணுங்கனு  அடியாட்களிடம்  சொல்வான், அப்போதான்  மக்கள் மனதில்  பயத்தை  உருவாக்க  முடியும் 


5  power flows from the nazzle of the gun


6   தாவுத் க்கு  அவன்  ஏரியாவில்  இன்னொரு  பேரு  டெரர்


7  எந்த  ஒரு  மனிதனுக்கும்  இன்னொரு  மனிதனின்  உயிரைக்கொல்வது  பிடிக்காது , ஏன் எனில்   மனித  நேயம்  மதிக்கப்பட  வேண்டும் என  சின்ன  வயதில்  இருந்தே  ந,மக்கு  போதிக்கப்பட்டு  வருகிறது 


8   கேங்ஸ்டர்  செத்துப்போவதைப்பார்க்க  எல்லோருக்கும்  ஆசை 


9  இந்த  மாதிரி  சாவுகளை  என்கவுண்ட்டர்னு  இந்த  சம்பவங்களுக்குப்பின் தான்  சொல்ல  ஆரம்பிச்சாங்க 


10  யாராவது  உங்களைக்கொல்ல  முயற்சி  செஞ்சா  அவங்க  கைல  நீங்க  ஃபிளவர்  பொக்கேவா  தர  முடியும் ? 


11  தாவூத்  பல  தலை  கொண்ட  ஹைட்ரா  மாதிரி ,  ஒரு  தலையை  வெட்டுனா  பல  தலைகள்  உயிர்த்தெழுவது  போல  அவன்  மேலே  வந்தான்  


12  யாருமே  பிறக்கும்போதே  தலை  எழுத்தோட  பிறப்பதில்லை.


13  1993ல்  இவ்வளவு  பெரிய  வெடிகுண்டு  சம்பவம்   பண்ணப்போறோம்னு  தாவூத்  பிளான்  பண்ணியா  செஞ்சிருப்பான்? திடீர்னு எடுத்த  முடிவுதான்  அது 


14   ஒரு போலீஸ்  ஆஃபீசரா  என்ன  பண்ணனும்னு  எனக்குத்தெரியும். என்கவுண்ட்டர்  பற்றி  எனக்குப்பாடம்  நடத்த  வேண்டாம்,  ஒரு  அப்பா  கிட்டே  பிள்ளை  எப்படி  பெற்றுக்கொள்வதுனு  யாராவது  பாடம்  நடத்துவாங்களா?


15  தீவிரவாதிகள் , கேங்க்ஸ்டர்ஸ்  எல்லாரும்  கைல  ஏ கே 47  கன்  வெச்சிருப்பாங்க, ஆனா  போலீஸ்  கைல  ஒரு  ரிவால்வர் தான்  இருக்கும், அப்போ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  எப்படி  தனக்குக்காயமே  இல்லாம  86  என்கவுண்ட்ட்ர்  பண்ணி  இருக்க  முடியும் ?


16  மோசமான  சூழ்நிலைகளில்  மோசமான  முடிவுகளை  எடுத்துத்தான்  ஆகனும் 


17   போலீஸ்  ஆஃபீச்ர்களில்  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்களில்  ஒரு  போட்டி உருவாச்சு  சச்சின் - ஷேவாக்  சாதனை  போல  நீ  இத்தனை  பேரை  போட்டுத்தள்ளுனே, நான்  இத்தனை  பேரை  என்கவுண்ட்டர்  பண்ணினேன்  அப்படினு  பெருமை  பேச  ஆரம்பிச்சாங்க 


18   பதவியிலிருந்து   விரட்டப்பட்ட  முதல்  என்கவுண்ட்டர்  ஸ்பெஷலிஸ்ட்  பிரதீப்  குமார், அவர்  செஞ்ச  தப்பு  ஓப்பனா  மீடியாக்களுக்கு  பேட்டி  கொடுத்தது 


19  ஒரு  ஜூனியர்  அதிகாரிக்கு  பாராட்டும் , புகழும்  கிடைப்பதை  அவரது  சுப்பீரியர்  ஆஃபீசர்சே  விரும்ப  மாட்டாங்க 


20  போலீஸ்  ஆஃபீசர்ட்ட  ஒரு  குணம்  இருக்கு, எந்த்  நிலையிலும்  தோல்வியை  ஏத்துக்க  மாட்டோம், நீங்க  எவ்ளோ  கீழே  தள்ளினாலும்  பவுன்ஸ்  பேக்  ஆகிடுவோம் 


சி பி எஸ் ஃபைனல்  கமெண்ட் -  டாக்குமெண்ட்ரி  படம்  பார்த்துப்பழகப்பட்டவ்ர்களுக்குத்தான்  பிடிக்கும்,  ட்விஸ்ட்  எதுவும்  இல்லாமல்  ஒரே  நேர்கோட்டில்  செல்லும்   படம்  ரேட்டிங் 2 / 5 

0 comments: