Monday, January 30, 2023

தேடி வந்த மாப்பிள்ளை (1970) தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ ராஜ் டி வி


எம்  ஜி  ஆர்  ஹாலிவுட்  படங்களைப்பார்த்து  அவருக்குப்பிடித்திருந்தால் அதை  தமிழுக்கு  ஏற்றவாறு   ரெடி  செய்வதில்  வல்லவர் . ஆல்ஃபிர்ட்  ஹிட்சாக்  இயக்கி 1959 ல்  ரிலீஸ்  ஆன நார்த்  பை  நார்த்வெஸ்ட்  எனும்   ஹாலிவுட்  படத்தை   தமிழுக்கு  ஏற்றவாறு  திரைக்கதை அமைக்கச்சொல்லி  இயக்குநர்  பி ஆர்  பந்துலு விடம் சொன்னார், அவரும்  ரெடி  செய்தார், ஆனால் அப்போது  எம் ஜி ஆரிடம்  கால்ஷீட்  இல்லை, அதனால் டைம் வேஸ்ட்  பண்ண  வேண்டாம்  என  பி ஆர்  பந்துலு   எம் ஜி ஆர்  அனுமதியுடன்  ராஜ்குமார்  நடிப்பில்  ஒரு  கன்னடப்படம்  பண்ணினார்,


 1967ல்  ரிலீஸ்  ஆன  கன்னடப்படமான  பீடி பசவண்ணா  எனும்   அந்த  கன்னடப்படத்தின்  ரீமேக்  தான்  இது . தமிழக அரசின் சிறந்த  மாநில  மொழிப்படமாக  விருது  பெற்ற  படம் 


ஒரிஜினல்  ஹாலிவுட்  படத்தின்  கதை  என்ன? ஒருவன்  ஒரு  கோடீஸ்வரனின்  சொத்துக்களை  அபகரித்து  விட்டு  அவனைக்கொலை  செய்து  விட்டு  வேறு  ஒரு  ஆளின்  பெயரில்  வேறு  ஒரு ஐ டி  யில்  வாழ்கிறான் , அவன்  எப்படி  மாட்டுகிறான்  என்பதுதான்  கதை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


தமிழ்ப்படத்தின்  கதை  என்ன?  நாயகனின்  அப்பா  கோடீஸ்வரர் , அவரை யாரோ  கொலை  செய்ய  முயற்சி  செய்கிறார்கள் . அவரது  வீட்டு  வேலைக்காரன்  தான்  சொத்துக்கு  ஆசைப்பட்டு  கொலை  முயற்சியில்  ஈடுபட்டிருப்பான்  என  தப்பாக  முதலில்  நினைக்கிறார்  அவர் . ஆனால்  உண்மையான  குற்றவாளி  கிடைத்ததும்  வேலைக்காரனிடம்  கோடீஸ்வரர்  மன்னிப்புக்கேட்கிறார்.


 கோடீஸ்வரரின்  மனைவியும்  , மகனும்  மிஸ்  ஆகி  விடுகிறார்கள் , அவர்களைக்கண்டுபிடித்து  தன்  சொத்துக்களை  எல்லாம்  அவர்களிடம்  ஒப்படைக்கும்  பணியை  கோடீஸ்வரர்  வேலைக்காரனிடம்   ஒப்படைக்கிறார். அந்த  வேலைக்காரனுக்கு  ஒரு  மகள் , அந்த  மகளை  தன்  மகனுக்கு கட்டித்தர  வேண்டும்  என  நிபந்தனையும்  விதிக்கிறார்



இந்த  விபரம்  எல்லாம்  நாயகனுக்கு  தெரிய  வந்ததும்  அம்மாவிடம்  சொல்லாமல்  கொள்ளாமல்  நாயகன்  பட்டணம்  கிளம்புகிறார். அவர்  சொத்துக்களை  எப்படி  மீட்டார்  என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகனாக  எம்  ஜி ஆர். வழக்கமான  அவர்  ஃபார்முலா  ஆன  அம்மா  பாசக்காட்சியுடன்  தான்  ஓப்பனிங்  சீனே  ஆரம்பிக்கிறது , பிறகு  அவர் யாரையோ  தேடிப்போறேன்  என்கிறார் ஆனா  பொண்ணுங்க  பின்னால  தான்  ரவுண்ட்  அடிச்சுட்டு  இருக்கார். வழக்கமாக  அவர்  வயதான  தாத்தா  மாதிரி  ஒரு  கெட்டப்  போடுவாரே  அதுவும்  இதில்  உண்டு 


அவரது  டிரஸ்சிங்  சென்ஸ்  அபாரம்,  படம்  முழுக்க  கோட்  சூட்  தான்.  குறிப்பாக  சிவப்புக்கலர்  சர்ட்  கோட்  சூட்டில்  பிரமாதமா  இருக்கார் 


 நாயகியாக  ஜெ  ஜெ . நடிக்க அதிக  வாய்ப்பில்லை ,  பாட்டு  டான்ஸ்  என  ஜாலி  ரோல்


 காமெடிக்கு  சோ  ராமசாமி .   வில்லனாக  அசோகன் , இவருக்கும்  அதிக  வாயுப்பில்லை


  ஜெ  வின்  அப்பாவாக  மேஜர்  சுந்தர்  ராஜன். இவரது  அடையாளமான  ஆங்கிலத்தில்  ஒரு  டயலாக்  தமிழில்  அதே டயலாக்   ஃபார்முலா  இதில்  மிஸ்சிங்



சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  க்ரைம்  கதையை  எப்படி  மசாலாப்படமாக  ஆக்க  முடியும்  என்பதற்கு  இதன்  திரைக்கதை  ஒரு  உதாரணம்,  பாட்டு   ஃபைட்டு  டூயட்டு  என  ஜாலியாகப்போகும்  கதை , மெயின்  கதை  சும்மா  ஓரமா  அது  பாட்டுக்கு  இருக்கும். பி  ஆர்  பந்துலுவின்  திரைக்கதை  பக்கா  கமர்ஷியல் 


2  ஃபைட்  சீன்  ஒன்று  பிரமாதமாக  இருக்கும், சாமுண்டியாக  வருபவருடன்  ஹீரோ  போடும்  ஒன்  டூ ஒன்    ஃபைட்  செமயாக  இருக்கும் 


3   சோ  காமெடியனாக  வந்தாலும்  அவரது  டிரஸ்சிங்,   பாடி  மெயிண்ட்டனன்ஸ்  எல்லாம்  பக்காவாக  இருக்கும், படத்தில்  வரும்  பெரும்பாலான  கேரக்டர்கள்  தொப்பையுடன்  இருக்கும்  போது  இவர்  மட்டும்  ஃபிட்டாகத்தெரிவார்




செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வெற்றி  மீது  வெற்றி  வந்து  என்னைச்சேரும், அதை  வாங்கித்தந்த  பெருமை  எல்லாம்  உன்னைச்சேரும் 


2  ஆடாத  உள்ளங்கள்  ஆட  ஒரு  அச்சாரம்  தந்தால்  என்ன?ஹலோ  சார்  கமான்  சார்


3  சொர்க்கத்தைத்தேடுவோம்... டபலா  மாமா  டோலக்குத்தாத்தா, டபலா  மாமி  டோலக்குப்பாட்டி


4 இந்த  இடமோ  சுகமானது  சுவையோ பதமானது   நேரமோ இதமானது


5  தொட்டுக்காட்டவா? மேலை  நாட்டு  சங்கீதத்தைத்தொட்டுக்காட்டவா? வட்டம்  போடவா? வாலிபத்தின்  வேகத்தோடு  வட்டம்  போடவா?


6  ஆறுமுகம்  , இது  யாரு  முகம் ?   தாடி  வெச்சா  வேறு  முகம் ,தாடி  எடுத்தா  தங்க  முகம் 


7  மாணிக்கத்தேரில்  மரகதக்கலசம்  மின்னுவதென்ன?  என்ன? மன்னன்  முகம்  கனவில்  வந்தது 


  ரசித்த  வசனங்கள் 


1  நாம  சாப்பிடும்போது  நம்ம  பல்லே  நம்ம  நாக்கைக்கடிச்சுடுது , அதுக்காக நாம  பல்லுக்கு  தண்டனை  தர்றமா? அது  மாதிரி தான்  நம்ம  வீட்டுக்குழந்தைகள்  குறும்பு  பண்றதும்  அதுக்கு  நாம  தண்டனை  தராம  இருப்பதும்



2  ஏய்  மிஸ்டர் , என்ன  ரயில்  டிக்கெட்டைக்கேட்டா  பிளாட்ஃபார்ம்  டிக்கெட்டைக்காட்றீங்க ?


 நான்  ஏறுவதும்  பிளாட்ஃபார்ம்ல  இறங்குவதும்  பிளாட் ஃபார்ம்ல  அதான் பிளாட்  ஃபார்ம்  டிக்கெட்  எடுத்தேன் 



3  இந்தக்காலத்துல  ஜனங்க  ரயிலில்  போவதை  ஓசி  டிராவல்னே  முடிவு  பண்ணிட்டாங்க , இவங்களை  தடுக்க  ரயிலில்  ஒரு ஜெயில்  ரெடி  பண்ணனும்



4  இந்தக்காலத்துல  மேனகையே  ஆடுனாலும்  ஓ சி  ல  ;பார்த்துட்டுப்போகத்தான்  ஆளுங்க  ரெடியா  இருக்காங்க


5  நான்  ஏழை  தான் ஆனா  கோழை  இல்லை , நீ  யாரு ?


  எமன், என்  வழில  குறுக்கிடறவங்களுக்கு  எமன்


6  பாதிக்கிணறு  தாண்டும்  பழக்கம்  எனக்கு  இல்லை 



7  இதைக்குடிங்க, குடிச்சா  நீங்க  சிரிப்பீங்க 


 இதைக்குடிச்சா?  நான்  சிரிப்பேனா? என்னைப்பார்த்து  மத்தவங்க  சிரிப்பாங்களா? 

8  உங்களுக்கு  குல்லா  போட்டு  அனுப்பறேன்


 எனக்கே  குல்லாவா? 


9  உங்க  பேர்  என்ன ?


 கவ்  காட்


 அப்டின்னா  


பசுபதி 


10  பாவத்தின்  சின்னம்  தான்  பணம், அதுதான்  உங்க  கிட்டே  நிறைய  இருக்கே? 

11   ஏம்மா  அழறே?


 அழுகை  மட்டும்தானே  ஒரு பெண்ணுக்கு  ஆறுதல் ?


12  பம்பரத்தோட  கழுத்துல  கயிற்றில்  சுற்றுவது  அதை  இறுக்க  அல்ல , அதை  சுதந்திரமா  ஆட  விட , பெண்ணுக்கு  திருமணமும்  அப்படித்தான் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  வெறும்  ஆளின்  பெயரை  மட்டும் வைத்துக்கொண்டு  நாயகன்  எப்படி  சென்னையில்  அவ்ளோ பெரிய  பரப்பளவு  உள்ள    ஊரில்  மேஜர்  சுந்தர் ராஜன்  வீட்டைக்கண்டு  பிடிக்கிறார் ?


2  பெண்ணுக்கு  பாட்டு  டீச்சர்  வேண்டும்  என்றால்  பெண்  டீச்சரைத்தானே  நியமிப்பாங்க, சினிமாக்களில்  மட்டும்  தான்  ஆண்களை  நியமிக்கறாங்க 


3   எம் ஜி ஆர்  - ஜெ  இருவரும் கணவன்  மனைவியாக  நடிக்கிறார்கள்   அதை  நம்பும்  பெண்  என்ன  கழுத்தில்  தாலி  இல்லையே? என  கேட்கவே  இல்லை  நாயகி  ஒரு  இந்து . குங்குமம்  வைத்திருக்கிறார். அப்போ  தாலி , மிஞ்சி  போன்ற  மேரேஜ்  அடையாளங்கள்  எதுவுமே  இல்லாமல்  இருக்கும்போது  அது  பற்றி  கேள்விகள்  வராதா ? 


4  தூக்க  மருந்து   வேலை  செய்ய  அட்லீஸ்ட் 1  நிமிடமாவது  ஆகும், ஆனால்  டாக்டர்  ஹீரோவுக்கு  இஞ்செக்சன்  போட்ட  அடுத்த  நொடியே  அவர்  தூங்குவது  அல்லது  மயக்கம்  போடுவது  எப்படி ?


5   மேஜர்  சுந்தர் ராஜன்  அடிபட்டு  மயங்கி  கீழே  விழுந்திருக்கிறார். ஹீரோ  வில்லன்  கூட  ஃபைட்  போட்டுக்கிட்டு  இருக்கார் , அது  முடிய  10  நிமிசம்  ஆகுது , அதுவரை  ஹீரோயின்  ஜெ  வேடிக்கை  பார்த்துட்டே  இருக்கார் , வீட்ல  ஃபோன்  இருக்கு , டாக்டருக்கு  ஃபோன்  பண்ண  மாட்டாரா?  யாராவது  அப்பா  ஆபத்தில்  இருக்கும்போது  வேடிக்கை  பார்த்துட்டு  இருப்பாங்களா?


6  க்ளைமாக்சில்  ஹீரோவோட  அம்மா  அவரோட  அம்மாதான்  என்பதற்கு  என்ன  சாட்சி  என  வக்கீல்  கேட்கும்போது  வில்லனின்  மிரட்டலால்  அம்மா  பொய்  சொல்கிறார்.  ஹீரோ  ரேஷன்  கார்டை  காட்டி  இருக்கலாமே? அல்லது  அந்தக்காலத்தில்  ரேஷன்  கார்டில்  அப்படி  குடும்ப  உறுப்பினர்  பெயர்  இருக்காது  எனில்   அக்கம்  பக்கம்  வீட்டு  ஆட்களை  சாட்சியாக  வரவைத்து  இருக்கலாமே? 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  இல்லை 


டிஸ்கி - வழக்கமாக  மாநில  அரசின்  விருது  பெறும்  படங்கள்  ஒரிஜினல்  கதையாக  இருக்க  வேண்டும், அட்லீ  டைப்  பட்டி  டிங்கரிங்க்  கதைக்கோ , ரீமேக்  கதைக்கோ  விருது  தருவதில்லை . இந்த  விதியை  மீறி  எப்படி  இந்த  படத்துக்கு  விருது  கிடைத்தது  என  தெரியவில்லை . அது  போகவே   விருது  பெறும்  அளவுக்கு  பிரமாதமான  கதையும்  இல்லை 

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  எம்  ஜி  ஆர்  ரசிகர்கள்  பார்க்கலாம், டைம்  பாஸ்  மூவி  அவ்வளவுதான் , இது  அந்தக்காலத்தில்  ஹிட்  படமாம் . ரேட்டிங்  2.25  / 5 


ActorRole
M. G. Ramachandranas Shankar, (Music professor Edward, "Thotu Katava...")
S. A. Ashokanas Suresh
Major Sundarrajanas Pasupathy Rabhagavadhor (alias Solaimalai)
Cho Ramaswamyas Karpagam
J.Jayalalithaaas Uma Mageshswari
M. V. Rajammaas Parvati Ammal, Shankar's mother
Jothilakshmias Jaya (alias Mangai Thirumangai)
Vijayasreeas seducer of the trap ("Sorgathai Theduvom...")
Gandhimadhias Chellam, Pasupathy's wife
K. K. Soundaras TTR
Rajakokilaas Radha, Uma Mageshswari 's friend
Ennatha Kannaiyaas jeweler
Justinas Samoundhi
B. R. Panthulu (Not mentioned)as Thanikachalam, Shankar's father (in photo)





Thedi Vandha Mappillai
Thedi Vantha Mappillai.jpg
Theatrical release poster
Directed byB. R. Panthulu
Screenplay byPadmini Pictures Story Department
Story byRajasri
Produced byB. R. Panthulu
Starring
CinematographyA. Shanmugam
Edited byR. Devarajan
Music byM. S. Viswanathan
Production
company
Padmini Pictures
Release date
  • 29 August 1970
Running time
151 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: