Monday, January 30, 2023

ஜாதி மல்லி (1993)தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா ) @ராஜ் டி வி

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி புகழ்  பெற்ற  கஜல்  இசைப்பாடகி , ஹைதராபாத்தில்  வசித்து  வருகிறார். ஒரு  இசை  நிகழ்ச்சியின்போது  தீவிரவாதிகளின் தாக்குதலில் நாயகியின் அம்மா  இறந்து  போனதால்  மிகுந்த  மன  வேதனை  அடைந்த  நாயகி  பாடுவதை , கச்சேரிக்கு  புக்  ஆவதை  தவிர்க்கிறார்.சோகத்தை  மறக்க , மனமாறுதலுக்காக  தமிழ்  நாட்டில்  ஊட்டிக்கு  வருகிறார். அங்கே  நாயகனை  சந்திக்கிறார். நாயகன்  ஒரு  டாக்சி  டிரைவர் கம்  ஓனர். அவர்  வண்டியில்  பயணிக்கிறார்  அவர்  கூட  பழக்கம்  ஏற்படுகிறது . அவர்  வீட்டில்  பேயிங்க்  கெஸ்ட்டாக  தங்குகிறார். 


நாயகன்  முன்னாள்  கர்நாடக  இசைப்பாடகர், குடும்பத்தில்  சொத்து  தகறாரு  ஏற்பட்டு  சொந்த  பந்தங்கள்  அடித்துக்கொண்டபோது  தனக்கு  எந்த  சொத்தும்  வேண்டாம்  என  எழுதிக்கொடுத்து  விட்டு  தனியாக  வந்து  விட்டவர் 


வீட்டை  விட்டு  ஓடி  வந்த  ஒரு  காதல்  ஜோடி  அவர்கள்  வீட்டில்  தஞ்சம்  அடைகிறது


குன்னூரில்  ஒரு  கோடீஸ்வரர்  நாயகியின்  தீவிர  ரசிகர் , அவர்  நாயகி  வீட்டுக்கு  வந்து   தன்னுடன்  வருமாறு  கெஞ்சிக்கேட்கிறார். ஆரம்பத்தில்  மறுத்த  நாயகி  நாயகனுடனான  ஒரு  ஊடல்  சம்பவத்தால் ஒரு  வீராப்புக்காக  அவனுடன்  அவன்  வீட்டில்  தங்க  சம்மதிக்கிறார்


ஆனால்  அந்த  ரசிகன்  வீட்டில்  நாயகியால்  சுதந்திரமாக  இருக்க  முடியவில்லை , கூண்டுக்கிளியாக  இருப்பதாகவே  உணர்கிறாள்

இந்த  இரண்டு  காதல்  ஜோடிகளும்  வாழ்க்கையில்  இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான்  மீதி  திரைக்கதை


 நாயகனாக  மலையாள  நடிகர்  முகேஷ் .  உற்சாகம்  இல்லாத  முகம், ஆனால் கச்சிதமான  நடிப்பு 


 நாயகியாக  குஷ்பூ .  புகழின்  உச்சியில்  குஷ்பூ  இருந்தபோது  ரிலீஸ் ஆன  படம்  இது. இவர்  அடிக்கடி  ம்ச்ச்  ம்ச்ச்  என  உதட்டில்  சுளிப்பது  அந்தக்காலத்தில்  ஹிட்  ஆன  மேனரிசம்


காதல்  ஜோடிகளாக  வினித் , யுவராணி   கச்சிதம் 


 ரஜினி  ரசிகர்களை  தாமுவின்  மிமிக்ரி  குரலை  வைத்து  ஏமாற்றி  பணம்  சம்பாதிக்கும்  மதன்  பாப்  காமெடி  டிராக் , விசித்ராவின்  ஃபோர்  ட்வெண்ட்டி  விஷயங்கள் எல்லாம்  சுமார் தான் . டைரக்டர்  நாசர்  ஷூட்டிங்  ஸ்பாட்டில்  அடிக்கடி  கோபம்  கொள்வது , அனைவரையும்  திட்டுவது  இவை  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை செம  ஹிட்  சாங்க்ஸ்


1  மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை


2  கம்பன்  எங்கு  போனான் ? ஷெல்லி என்ன  ஆனான் ? நம்மைப்பாடாமல்


3  மன்மத  லீலையை  வென்றார்  உண்டோ  சொல்  ( ரீமிக்ஸ்)


4  அழைத்தால்  வருவாளே  ஸ்ரீ  ரஞ்சனி ( எனக்கா  தெரியாது?)


5 சொல்லடி  பாரத  மாதா 

சபாஷ்  டைரக்டர்


1  நாயகன்  , நாயகி  இருவரும்  மனதால் நெருங்கி  வருவதை  கொடிகளில்  எதிர்  எதிரே  காய  வைத்திருக்கும்  வேட்டி , சேலை  இரண்டும்  காற்றில்  பறந்து  தொட்டுக்கொள்ளும்  காட்சி 


2   வினீத் , யுவராணி  இருவருக்கும்  ஃபாரீன்   நகரத்துப்பெயர்களான  மாஸ்கோ , பெர்லின்  என  வைத்து மனி ஹெயிஸ்ட்  கேரக்டர்களுக்கு  முன்னோடியாக  இருந்தது .  அவர்கள்  மத  அடையாளங்களை  மறைக்க  அந்த  டெக்னிக்  என  இயக்குநர்  ஒரு  பேட்டியில்  சொல்லி  இருந்தார்


  ரசித்த  வசனங்கள்


1   உங்க  சோகங்களை  என்  கிட்டே  சொன்னா  அதை  நான்  பகிர்ந்துக்க  முடியாது , ஆனா  உங்க  மன  பாரங்கள்  என்  கிட்டே  சொல்வதால்  பாதியாகக்குறையும் 


2  உங்க சோகங்கள்  உங்களுக்கு    பெருசாத்தெரியக்கூடாதுனு  என்  சோகங்களை  மிகைப்படுத்தி  சொன்னேன் 


3  ஆத்மா வுக்கு  நடுவே  ஒரு  எஸ்  சேர்த்தா  ஆஸ்த்மா 


4  எங்க  கிராமத்தில்  பாம்பாட்டிக்குக்கூட  வைப்பாட்டி இருக்கு  சின்ன வீடு  இல்லைன்னா  மனுசனாவே  மதிக்க  மாட்டாங்க 


5  இதுதான்  என்  வாழ்க்கைல  சொல்ற  கடைசி  சாரி  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை பாடல்  வரிகளில்  சரணத்தில் அம்மா  தந்த  பட்டுச்சேலை   மறக்க  முடியவில்லை  , அந்த  சேலையில்  ரத்தம்  தோய்ந்த  நாள்   மறக்க  முடியவில்லை    என்ற  வரி  வருது , அப்போ  ஃபிளாஸ்பேக்  சீன்ல  தீவிரவாதிகள்  அம்மா  வை  சுட  உடையில்   ரத்தம்  படுவதைக்காட்டுகிறார்கள் , ஆனால் இருவர்  சேலையும்  பட்டுச்சேலை  கிடையாது., இன்னொரு   விஷயம்  நாயகியின்  சேலையில் கூட  ரத்தமே  படலை , அம்மா  வின்  முதுகில்   குண்டு  பட்டு  ஜாக்கெட்  தான்  ரத்தச்சிவப்பு  ஆகுது , சேலைக்கு  ஏதும்  ஆகல


2  தீவிரவாதிகள்  அந்த  மண்டபத்துக்கு  வந்து  நாயகியை , அம்மாவை  சுடனும்னா  ஈசியா  வந்ததும்  சுட்டிருக்கலாம், அதை  விட்டுட்டு  லூசுங்க  மாதிரி  ஆடியன்சை  சுட்டு  டைம்  வேஸ்ட்  பண்ணி  10  நிமிசம்,    கழிச்சு  அம்மாவை  சுடறாங்க 


3  கம்பன்  எங்கு  போனான் ? ஷெல்லி என்ன  ஆனான் ? நம்மைப்பாடாமல்  பாடல்  காட்சியில்  வினீத் ,யுவராணி  இருவரும்  அவரவர்  லக்கேஜ்  பேக்கை  கைல  வெச்சுக்கிட்டே  சிரமப்பட்டு ஏன்  டான்ஸ்  ஆடறாங்க ?  ஓரமா  வெச்சு  டான்ஸ்  முடிஞ்சதும்  அதை  எடுத்துக்கக்கூடாதா?


4  வினித் , யுவராணி  இருவரும்  வீட்டை  விட்டு  வெளியேறும்போது  ஆளாளுக்கு  ஒரு  பேக்  எடுத்துட்டு  வர்றாங்க, அதில்  அதிக  பட்சம் ஒரு  செட்  டிரஸ்  தான்  வைக்க  முடியும். டவல் ,  லுங்கி  நைட்டி  கூட  எக்ஸ்ட்ரா  வைக்க  இடம்  இல்லை , ஆனா  பல நாட்கள்  பல  வித   டிரஸ்  போட்டுட்டு  இருக்காங்க


5  ஃபிராடு  ஆளாக  வரும்  விசித்ரா  ஆளும்  கட்சி  எம் எல் ஏ  என  ஒரு  ஆளை  ஏமாத்துது . ஏம்மா  மின்னல், ஐ டி  கார்டு  காட்டு   அப்டினு  அந்த  ஆள்  கேட்க  மாட்டானா?  லூஸ்  மாதிரி  உங்களை  எப்;படி  எம் எல் ஏ   என  நம்புவது ?னு  பம்மறான்


6 வில்லன்  நாயகியை  ஏமாற்ற  முடிவெடுத்தவன்  நாயகியை  உடல் ரீதியாக  அடையும்  முன்பே  எப்படி  தன்  சுயரூபத்தைக்காட்டுகிறான்? பொதுவாக  ஆண்கள்  தங்கள்  காரியம்  ஆகும்  வரை  நல்லவன்  முகமூடி  போடுவதுதானே  வழக்கம் ?


7  நாயகி  வில்லனின்   பங்களாவில்  அவள்  விருப்பத்துக்கு  மாறாக  அடைக்கப்படிருக்கிறாள்  என்று  போலீசில்  புகார்  கொடுக்கலாமே? நாயகன்  ஏன்  அதை  செய்யவில்லை ?


8  வில்லனின்  வீட்டு  லேண்ட்  லைன்  ஃபோன்  நெம்பர்  நாயகன் , வினித்  என  எல்லோருக்கும்  எப்படித்தெரிகிறது ?


9  வில்லனின்  வீட்டில்  நாயகி  பல  நாட்களாக  அடைபட்டு  இருக்கிறார். வில்லன்  ஒரு  மாங்கா  மடையனாக  இருந்தால்  கூட  நாயகியை அடைய  நினைப்பவன்  உணவில்  மயக்க  மருந்து  கொடுத்து  ஏதாவது  செய்திருக்கலாம், ஆனா  அந்த  ம ஞ்ச  மாக்கான்  அதை  எல்லாம்  செய்யாமல்  நாயகன்  நாயகியைக்காப்பாற்ற  அவன்  வீட்டுக்கு  வந்த போது  அவன்  எதிரே  இப்போ  இவளை   பலாத்காரம்  பண்றேன் , முடிஞ்சா  தடு  என   அநியாயமா  அடி  வாங்கறான் 


10  கலவரம்  நடக்கும்  இடத்தில்  போலீஸ்  வினித் - யுவராணி  ஜோடியை  சுட்டுக்கொல்வது  மடத்தனமான  க்ளைமாக்ஸ்


11  படம்  முடிஞ்சு  க்ளைமாக்ஸ்  பார்த்துட்டு  ஆடியன்ஸ்  எல்லாரும்,  எஸ்கேப்  ஆனபிறகு நாயகி  குஷ்பூ  காந்தி  சிலையைப்பார்த்து  பத்து நிமிஷம்  இங்க்லீஷ்ல  ஏதோ  டயலாக்  பேசுது , அது  போதாதுனு   ஒரு  சோகப்பாட்டு  வேற , எதுக்கு  அது ?படம்  ரிலீஸ்  ஆனபோது  இது  பத்திரிக்கைகள்  விமர்சன  ரீதியாக  பாராட்டித்தள்ளினாலும்  கமர்ஷியலாக  இது  வெற்றி  பெற்ற  படம்  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - மறக்க  முடியவில்லை  மறக்க  முடியவில்லை  பாடல்  ஓப்பன்  ஆகும்  முன்  அதற்கான  லீடிங்  சீனாக  ஒரு  பெண்  தன்  குழந்தைக்கு  தாய்ப்பால்  கொடுப்பதை க்ளோசப்  ஷாட்டில்  காட்டுவார்கள்சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - குஷ்பூ, யுவராணி  ரசிகர்கள்  அவர்கள்  அழகுக்காக  பார்க்கலாம், கே  பாலச்சந்தர்  ரசிகர்கள்  ரசிக்கும்  அளவு  பெரிய  டைரக்சன்  டச்  சீன்கள்  எதுவும்  இல்லை , சுமார்  ரகம்  தான் . ரேட்டிங்  2 . 5 ஜாதி மல்லி (திரைப்படம்)
கதைகே.பாலச்சந்தர்
அனந்து
இசைமரகத மணி
நடிப்புமுகேஷ்
குஷ்பூ
நாசர்
வினீத்
யுவராணி
ஒளிப்பதிவுஆர். ரகுநாதரெட்டி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: