Monday, November 14, 2022

சர்பத் ( 2021) – சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா) @ நெட்ஃபிளிக்ஸ்


தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆகாமல்  நேரடியாக   கலர்ஸ்  டி வி யில்  வெளியான  படம்  இது 

 ஸ்பாய்லர்  அலெர்ட்

 

சம்பவம் 1 – நாயகனின்  அண்ணன்  ஆஃபிஸ்ல  ஒர்க் பண்ற  சக  ஸ்டாஃபை  லவ்  பண்றார், ப்ரப்போஸ்  பண்றப்ப  என்  வீட்ல  வந்து  பேசுங்கனு  சொல்லிடுது. வீட்டுக்குப்போனா  அப்பா  வழக்கம்  போல  ஜாதி  பேதம்  காட்டி  அனுப்பிடறார். அந்தப்பொண்ணுக்கு  வேற  பக்கம்  மேரேஜ்  ஆகி  பின்  விதவை    ஆகிடுது. இன்னும்  இவரு  லவ்  மோடுல  தான் இருக்காரு , வீட்ல  பிர்ஷர்  தாங்காம  மேரேஜ்க்கு  ஓக்கே  சொன்னதால  ஒரு  பெண்ணைப்போய் பார்க்கறாரு, இரு  வீட்டு  தரப்பிலும்  சம்மத்ம்  என்ற  நிலையில்  நாயகனின்  அண்ணனுக்கு  ஒரு  ஃபோன்  கால்  வருது. நீங்க  பெண்  பார்த்தீங்களே  அந்தபொண்ணும் நானும்  லவ்வர்ஸ், வழி  விடுங்க  வழி  விடுங்கனு  சொல்றாப்டி. என்ன? ஏது?னு  பெண்  தரப்பில்  விசாரிக்கமல்  மேரேஜை  நிறுத்திடறாங்கசம்பவம்  2 - திரும்ணத்தை  நிறுத்தினதா;ல  பெண்ணோட  அண்ணன்  நாயகனின்  அண்ணனை  அடிச்சுடறான், உடனே  நாயகன்  பெண்ணோட  அண்ணனை  அடி  வெளுத்துடறார். அவன்   பழி  வாங்க  கங்கணம்  கட்டிக்கிட்டு  இருக்கான்

 

 சம்பவம் 3   நாயகன்  பஸ்  ஸ்டாப் ல  அவரு  பாட்டுக்கு  நின்னுட்டு  இருக்காரு , நாயகி  வந்து  பளார்னு  கன்னத்துல  ஒண்ணு  வைக்குது. இவரு  ஷாக்  ஆகிடறார், நாயகியின்  தோழி  குறுக்கிட்டு  நான்  சொன்ன  பார்ட்டி இவன்  இல்லை  வேறனு  சொல்லி  கூட்டிட்டுப்போய்டறா. ஏதோ  ஆள்  மாறாட்டம், ஆனா தன்னை  பளார்னு  நாலு  பேர்  முன்னால  அடிச்ச  நாயகி  மேல  கோபம்  வர்ல  காதல்  வருது . நாயகி  பின்னாலயே  சுத்தறாரு, நாயகிக்கும்  இஷ்டம்தான், ஆனா  வெளிக்காட்டிக்கலை. இப்படியே  போய்க்கிட்டு  இருக்கும்போது  நாயகி  கிட்டே  நாயகன்  ப்ரப்போஸ்  பண்றார்,  அண்ணனைப்பாருங்கனு  சொல்றா. அண்ணனை  மீட்  ப்ண்ணறப்ப  ஒரு  திருப்பம், இது  அண்ணனுக்குப்பார்த்து  கேன்சல்  ஆன  பொண்ணு .  ஆல்ரெடி  பஞ்சாயத்து  இருக்கு .  


சம்பவம் 4   நாயகியின்  அண்ணன்  வேற  ஒரு  பெண்ணை  லவ்  பண்றாரு. அதுக்கு  நாயக்ன  உதவுனா  தன்  தங்கையை  கட்டி  வைக்க  சம்மதம்க்றாரு.  வடிவேலு  காமெடி  ல   பேக்கரி  உனக்கு , உன்  அக்கா  எனக்கு  அப்டினு  சொன்னான், ஆனா  அந்த  டீலிங்  எனக்கு  பிடிச்சிருந்ததுனு  சொல்வாரே  அது  தான்  நினைவு  வருது 


மேலே  சொன்ன  4  சம்பவங்களையும்  ஒரே  நேர்  கோட்டுக்கதையா  சொல்லாம  நான்  லீனியர்  கட்ல சொல்லி  இருப்பதால்

 இதைப்படிப்பதை  விட  பார்ப்பதற்கு  படம்  சுவராஸ்யமாகவே  இருக்கு 


  நாயகனாக  கதிர் . அடக்கமான  தோற்றம், அப்பப்ப  கோபப்ப்டும் கேரக்டர். அண்ணன்  மேல் பாசம் உண்டு  ஆனா  வெளிக்காட்டிக்கிட்டதில்லை 

நயகனின் அண்ணனாக  விவேக்  பிரசன்னா  கனகச்சிதமான  நடிப்பு, ஆரம்பத்தில்  முசுடு  புடிச்ச  கேரக்டர்  போல்  காட்டும்போது  எரிச்சல்  அடைய  வைக்கிறார். போகப்போக  கேரக்டர்  டிசைன்  பிடிபட்டதும்  ரசிக்க  வைக்கிறார்


 நாயகனின்  நண்பனாக   புரோட்டா  சூரி. படம்  முழுக்க  நாயகனுடன்  வரும்  வாய்ப்பு , ஆங்காங்கே  கவுண்ட்டர்  காமெடியில்   ஜொலிக்கிறார்


நாயகியாக  ரகசியா  கோரக். பேரும்  வாயில்  நுழைய  சிரமப்படுது  , இவர்  முகமும்  மனதில்  தங்க  டைம் எடுக்குது . புன்னகைக்கும்  காட்சியில்  அழகாக  இருக்கிறார்


நாயகனின்  தந்தையாக  வரும்  ஜி  மாரிமுத்து  கவனிக்க  வைக்கும்  நடிப்பு . குணச்சித்திர  நடிப்புக்கு  அப்பா  ரோலுக்கு  பொருத்தமான  இன்னொரு  நடிகர் 


சபாஷ்  டைரக்டர்


1  திண்டுக்கல்லில்  சின்னாளப்பட்டி  என்ற  கிராமத்தில்  பெரும்பானமையான  காட்சிகளை  படமாக்கி  லோ  பட்ஜெட்டில்  படத்தை  முடித்த  விதம் குட் 


2  விசு  படம்  வி  சேகர்  படம்  பார்பப்து  போல  குடும்பப்பாங்கான  கதையில்  காதல்  கதைகள்  மூன்றை  புகுத்தி  இருப்பது  சாமார்த்தியம் 


3  ஜி கே  பிரசன்னா  வின்  எடிட்டிங்  நான்  லீனியர்  கட்டில்  சுவராஸ்யம்  சேர்க்கிறது பிரபாகரனின்  ஒளிப்பதிவு  கண்களை  உறுத்தாமல்  கிராமத்து  அழகை  பதிவு.  செய்திருக்கிறது   அஜிஸ்-ன்  இசை  பின்னணி  இசை  சராசரி  தரத்துக்கும்  மேலேயே  இருக்கிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  படம்.  யதார்த்தமான  காதல்  கதைகள்  , பார்க்கலாம்  ரேட்டிங்  2.5 / 5 சர்பத்
வகைநகைச்சுவை நாடகம்
இயக்கம்பிரபாகரன்
நடிப்புகதிர்
சூரி
ரகசியா கோரக்
அஸ்வத்
இசைஅஜீஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்இலலித் குமார்
ஒளிப்பதிவுபிரபாகரன்
தொகுப்புபிரசன்னா ஜி. கே.
தயாரிப்பு நிறுவனங்கள்7 ஸ்கிரீன் ஸ்டுடியோ
Viacom18
விநியோகம்நெற்ஃபிளிக்சு
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்

0 comments: