Tuesday, November 01, 2022

Indian Predator: Murder in a Courtroom(2022) (ஹிந்தி) - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் ட்ராமா- டாக்குமெண்ட்ரி) @ நெட் ஃபிளிக்ஸ்


2004ம்  வருடம்,  மத்தியப்பிரதேசம்  - நாக்பூர் கஸ்தூரிபா  நகர் -கோர்ட்  வளாகத்தில்  அக்கு  யாதவ்  என்ற  ரவுடி  பல  பாலியல்  வன்  கொடுமை  வழக்குகளில்  கைதானவர்   200 க்கும்  மேற்பட்ட  பொதுமக்களால்  கொடூரமாகத்தாக்கப்பட்டு  கொலை  செய்யப்படுகிறார் . அவரைப்பற்றிய  டாக்குமெண்ட்டரி  படம்  தான்  இது . மொத்தம்  3  எப்பிசோடுகள் . ஒவ்வொன்றும்  சராசரியாக  55  நிமிடங்கள் , ஆக  மொத்தம்     ரெண்டே  முக்கால்  மணி  நேரம்/,நம்ம  ஊரு  ஆட்டோசங்கர்  கதை  மாதிரி 

ஸ்பாய்லர்  அலெர்ட்

அக்கு  யாதவ்     எனப்படும்  பரத்  காளிச்சரண்  உயர்  ஜாதியைச்சேர்ந்தவன். கஸ்தூரிபா  நகர்  காலனியைச்சேர்ந்த  மக்கள்  ஸ்லம்  ஏரியா எனபப்டும்   பிற்படுத்தப்பட்ட  சமூகத்தை  சேர்ந்தவர்கள் .  ஆரம்பத்தில்  சின்ன  சின்ன  ரவுடித்தனம்  பண்ணிட்டு  இருந்தவன்  திடீர்னு  பெண்களை  பாலியல்  வன்கொடுமை  செய்யத்தொடங்கினான்.  பிற்படுத்தப்பட்ட  சமூகம்  என்பதால்  வெளில  சொல்லவும்  முடியாம  தவித்தார்கள் . இதை  தனக்கு  சாதகமா  பய்னபடுத்திகிட்ட  அக்கு  யாதவ்  தொடர்ந்து  பல  பெண்களை  சீரழிக்க  ஆரம்பித்தான் 


ஆஷா  யாதவ்  எனும்  பெண் தான்  முதன் முதலாக  போலீஸ்  கேஸ்  ஃபைல்  பண்ணிய  நபர். ஆனா  போலீஸ்  அந்தப்பெண்  சம்பந்தமான  தகவல்களை  அக்கு யாதவுக்கு போட்டுக்குடுத்து  விட்டது 


ஆஷா  யதவ்  வீட்டுக்குப்போன  அக்கு யாதவ்  கதவைத்தட்டி  ஆஷாவை  வெளியே  இழுத்து  வந்து  நடு  ரோட்டில்  கொலை  செய்தான். இது  போல்  செய்யக்காரணம்  அப்பதான்  மக்களுக்கு  பயம்  வரும், தன்னைப்பார்த்து  கிலி  வரும்  என  நினைத்தான் 


 பொதுவா  தன்னை  யாராவது  எதிர்த்தா  அவங்க  வீட்டு  ஆண்களைக்கொலை  செய்வான்  என்ற  பயத்தை  விட  எதிர்ப்பவர்  வீட்டுப்பெண்களை  பலாத்காரம்  செய்வான்  என்ற  பயத்தை  விதைத்தான்


எதிர்ப்பவர்களைக்கொன்றால்  போஸ்ட்மார்ட்டம்  பண்ற  டாக்டர்களுக்குப்பணம்  தரனும் , போலீஸ்க்கு  பணம்  தரனும்  அதுக்குப்பதிலா  எதிரிகளின்  மனதில்  பயத்தை  விதைத்தால்  போதும்  என  அவன்  நினைத்தான் 


அவன்  10  வயசுப்பெண்ணையும்  ( சிறுமி)  பாலியல்  வன்கொடுமை  செய்திருக்கான்.  அன்றுதான்  திருமணம்  ஆன  மணப்பெண்ணையும்  தன்  கூட்டாளிகளுடன்  சேர்ந்து  பாலியல்  வன்  கொடுமை  செய்திருக்கான் 


ஆஷா  யாதவைத்தொடர்ந்து  தைரியமாக  போலீசில்  புகார்  கொடுத்தவர்  உமா  நாராயணி  எனும்  25  வய்சுப்பெண்  கால்  செ4ண்ட்டர்ல  வேலை  பார்ப்பவர் . அவருக்குப்பக்கத்து  வீடான ரத்னா  என்ற  பெண்ணை  அக்கு  யாதவ்  பயமுறுத்தியதை  போலீசில்  புகார்  கொடுக்கிறார் 


இந்தத்தகவலை  வழக்கம்  போல  போலீஸ்  அக்கு  யாதவ்க்கு  தகவல்  சொல்ல  அவன்  தன்  அடியாட்கள்  40 பேருடன்   உமா  வீட்டுக்கு  வந்து  தகறாரு  பண்றான்.


 உ,மா  வீட்டை  விட்டு  வெளீல  வர்லை, இவன்  மிரட்றான் ,  வெளீல  வர்லைன்னா  என்னென்ன  பண்ணுவேன்னு    பட்டியல்  போட்டு  மிரட்றான். கூட்டாளிகளுடன்  சேர்ந்து  கதவை  உடைக்க  முற்பட்டபோது  உமா  வீட்டில்  உள்ள  பீரோ  உட்பட  பல  பொருட்களை  கதவுக்கு  முட்டுக்கொடுக்கிறார்


  பின்   கிச்சன்  ரூம்  போய் கேஸ்  சிலிண்டரை  ஓப்பன்  செய்து  இனி  யாராவது  உள்ளே  வர  முயற்சித்தால்  எல்லாரையும்  காலி  செஞ்சிடுவேன்  கேஸ்  சிலிண்டர்  வெடிக்கும்  என  மிரட்டுகிறார் 


இதனால்  பயந்து  போன  அக்குயாதவ்  தன்  ஆட்களுடன்  எஸ்  ஆகிறான் .  உமா   தன்  பிரதர்  இன்  லா  ஒரு  லாயர்  என்பதால்  அவர்  உதவியுடன்  டிஜிபி  இடம்  புகார்  தருகிறார்.


  வக்கீல்  விலாஸ்  மீது  அக்கு  யாதவ்க்கு  ஆல்ரெடி  ஒரு  முன்  விரோதம்  உண்டு 


கஸ்தூரிபா  நகர  மக்கள்  கூடி அக்கு  யாதவ்  வீட்டை  எரிக்கறாங்க . இத்னால்  பயந்து  போன  அக்கு  யாதவ்  கோர்ட்டில்  சரண்டர்   ஆகிறான் 


அது  கேள்விப்பட்ட  மக்கள்  கிட்டத்தட்ட  400  பேர்  கோர்ட்  வளாகத்தில்  கூடுது  . அங்கே  அக்கு யாதவ்  மக்களைப்பார்த்து  நான்  ஜாமீனில்  வந்து  கஸ்தூரிபா  நகர  பெண்கள்  அனைவரையும்  வசமா  கவனிப்பேன்  என  பகிரங்க  மிரட்டல்  விடுக்கிறான்


2004  ஆகஸ்ட்  14   கோர்ட்டில்   பெயில்  ஆர்டருக்காக  கேஸ்  ந்டக்குது  அக்கு  யாதவ்  ஆஜர்  ஆகிறான்  என்பதைக்கேள்விப்பட்ட  பெண்கள்  கிட்டத்தட்ட  200  பேர்  மிளகாய்ப்பொடி  , செருப்பு , உலக்கை  கத்தி  என  பல  ஆயுதங்களுடன்  கோர்ட்டில்  காத்திருக்காங்க 


கோர்ட்டுக்கு  வந்த  அக்குயாதவ்  அங்கே  வாசலில்  நின்ற  பெண்களில்  ஒருவரைப்பார்த்து  ஆல்ரெடி  உன்னை  ரேப்  பண்ணி  இருக்கேன் , வெளில  வந்து  மீண்டும்  உன்னை  ரேப்  பண்ணி  கொலை  செய்வேன்  என  மிரட்டுகிறான்


 உடனே  அந்தப்பெண்  உன்னை  சும்மா  விட்டா  என்னைப்போல  பல  பெண்களுக்கு  ஆபத்து  ஒண்ணு  நீ  உயிரோட  இருக்கனும்  இல்லை  நான்  உயிரோட  இருக்கனும்  என  சொல்லி  செருப்பால்  அடிக்கிறார்


கத்தியால்  குத்துகிறார் . இதைப்பார்த்து  மற்ற  பெண்களும்  ஆவேசம்  அடைந்து  அக்கு  யாதவை  தாக்க  ஆரம்பிக்கறாங்க .  அவனின்  ஆண்  உறுப்பை  கட்  பண்றாங்க  . ரத்த  வெள்ளத்தில்  மிதக்கிறான்


இதைப்பார்த்து  என்ன  பண்றதுன்னே  தெரியாம  போலீசும்  கோர்ட்  அதிகாரிகளும்  ஓடறாங்க . ஆனா  மக்களைப்பொறுத்தவரை  அசுரன்  ஒழிந்தான் என  தீபாவளி  கொண்டாடறாங்க 


  பின்  போலீஸ்  22  பெண்களை  கைது  செய்தது  .  கோர்ட்  அழைத்து  வரப்படும்போது  400  பெண்கள்  கூடி நாங்களும் தான்  கொலை  செய்தோம்  எங்களையும்  கைது  செய்ங்க  என  போராடுகிறார்கள் 


 சாட்சி  இல்லாததால்  கொலைக்கு  நிரூபணம்  இல்லை  என  அந்த  22  பெண்களையும்  விடுதலை  செய்கிறார்  ஜட்ஜ் 


இப்போ   நான்  மேலே  சொன்னவை  எல்லாம்  இந்த  வழக்கு  பற்றிய  முக்கியத்தகவல்கள் பட  விமர்சனம்  அல்ல .  கேஸ்  ஃபைலைப்படிச்சு  தெரிஞ்சுக்கிட்டது 


 இனி  படத்தைப்பற்றிப்பர்ப்போம்.  ஆட்டோ சங்கர்  மாதிரி  இந்தப்படம்    ஏன்  உருவாகலைன்னா  அதுல  ஆட்டோ  சங்கர்  சுய  சரிதை  போல்  எழுதிட்டான். பல  விபரங்க்ள்  கிடைத்தது 


 ஆனால்  இதில்  அக்குயாதவ்  தரப்பு  ஸ்டேட்மெண்ட்  கிடைக்கலை  . பாதிக்கப்பட்டவ்ர்கள்  கூறியவை  மட்டுமே  டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  பதிவு  செய்யப்பட்டிருக்கு 


 முதல்  எபிசோடு  முடிந்ததுமே  நமக்கு  போர்  அடிக்க  ஆரம்பிக்கறது .வடிவேலு  சங்கிலி  முருகன்  காமெடி  மாதிரி    திரும்ப  திரும்ப  பேசறே    நீ  என  கேட்கத்தோணுது . சொன்ன  வாக்கு  மூலங்களே  வேறு  வார்த்தைகளில்  ரிபீட்  ஆவது  பின்னடைவு 


ஏற்கனவே  நம்ம  ஆடியன்ஸ்   கவுதம்  மேனன்  வாய்ஸ்  ஓவர்ல  கதை  சொல்லும்போதே  கலாய்த்தவர்கள்  இதிலும்   அப்படிக்கலாய்க்க  வாய்ப்புண்டு


 இதை  சுவராஸ்யமான  திரைக்கதையில்  படம்  ஆக்கி  இருக்கலாம், ஏனோ  போர்  அடிக்கும்  டாக்குமெண்ட்ரி  ஆக்கி  விட்டார்கள் 


    அடிப்படையில்  இது  கொடூரமானவனின்  கதை  என்றாலும்  காட்சி  ரிதியாக  அடல்ட்  கண்ட்டெண்ட்  அலல்து  வன்முறைக்காட்சிகள்  இல்லை  , தைரியமாகப்பார்க்கலாம் 


 ரசித்த  வசனங்கள் 


1   ஜெயிலுக்குப்போனா  ஒண்ணு  திருந்துவான்  அல்லது  மேலும்  கெட்டவன்  ஆவான்

2 ஒரு  பிரச்சனையை  அணுகுனவங்களுக்கு  மட்டும்தான்  அதுல  என்ன  நடந்ததுனு  தெரியும்


3  இங்கே பெண்கள்  மட்டும்தான்  அவமானத்தை  கடைசி  வரை  சுமந்துட்டே  இருக்காங்க 


4    அவன்  கற்பைத்திருடுபவன்  என  அழைக்கப்பட்டான்


5  ரத்த  வாசனை  ஒரு  புலிக்கு  ப்ழக்கம்  ஆகிட்டா  அதுக்கு  அது  அடிக்ட்  ஆகிடும்னு  சொல்வாங்க  அது  போல  இவன்  பெண்  வாசனைக்கு  அடிமை  ஆகிட்டான் 

6  காயம்  பட்ட  இதயத்துக்குத்தான்  அதோட  வலி  தெரியும்


7  சோகம்  என்பது  ஒரு  முடிச்சு  மாதிரி  அதை  அவிழ்க்கவும்  முடியாது , சரி  செய்யவும்  முடியாது . அனுபவிச்சுதான்  ஆகனும் 


இந்தக்கேசில்  பல  மர்மங்களும்  இருக்கின்றன.  இது  இரண்டு  மாஃபியா  கேங்க்  வார்  எனவும்.  ஜாதி  ரீதியான  பழி  வாங்கல்  எனவும்  அரசியல்  ஆதாயத்துக்காக  சிலர்  தூண்டி  செய்த  கொலை  எனவும்  ஊர்  மக்கள்  பேசிக்கொள்கிறார்கள்.


லாஜிக்  மிஸ்டேக்ஸ்  , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1   அக்கு  யாதவ்   லோயர்  மிடில்  கிளாஸ்  மாதிரிதான்  தெரியறான் .   கார்  , பைக்  கூட  இல்லை  சைக்கிள்  மற்றும்  லூனா தான்  . ஆனா  200  பெண்களை  ரேப்  பண்ணி  இருக்கான்,  போலீசை  கவனிக்கிறான்  எனில்  அவனுக்கு  ஏது  அவ்ளோ  காசு ?   சரசரியா  100  கேஸ் க்கு  தலா  ஒரு  லட்சம்  லஞ்சம்னு  வெச்சுக்கிட்டாக்கூட  ஒரு  கோடி  ரூபா  தேவைப்பட்டிருக்குமே? அவன்  சிங்கிள்  டீக்கே  சிங்கி  அடிக்கிறவன்  மாதிரி  தான்  இருக்கான் 


2 அத்தனை  பெண்கள்  ரேப்  செய்யப்பட்டும்  ஒருவர்  கூடவா  மீடியா  விடம்  போகலை? போலீஸ்கிட்டே  போனாதான்  வேலைக்காகாது , மீடியாவிடம்  போய்  இருக்கலாமே? சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இந்த  டாக்குமெண்ட்ரி  ப்டம்  நீங்கள்  எதிர்பார்ப்பது  போல  சுவராஸ்யமாய்  இருக்காது . நான்  மேலே  சொன்ன  தகவல்கள்  எல்லாம்  கேஸ்  ஃபைலை  ஸ்டடி  செய்து உருவாக்கியது . திரைக்கதையில்  இதெல்லாம்  இருக்காது   ட்ரையாகத்தான்  இருக்கும் .  ரேட்டிங்  2 / 5 


டிஸ்கி -  நெட்ஃபிளிக்ஸ்  ஓனர்  புத்திசாலி  படத்தோட  டைட்டிலையே  மாத்திட்டார். அதை  இப்போதான்  கவனிச்சேன் 


ndian Predator: The Diary of a Serial Killer
GenreTrue crime docuseries
Written bySudeep Nigam
Directed byDheeraj Jindal
Creative directorMoumita Sen
Music byIshaan Chabbra
Country of originIndia
Original languageHindi
No. of seasons1
No. of episodes3
Production
Executive producerChandni Ahlawat Dabas
ProducerIndia Today
CinematographyPratham Mehta
EditorSourabh Prabhudesai
Running time37 – 44 minutes
Production companyIndia Today
DistributorNetflix
Release
Original networkNetflix
Picture formatHDTV
4K
Audio formatDolby Surround 7.1
Original releaseSeptember 7, 2022

0 comments: