Tuesday, November 08, 2022

சக்கரவர்த்தித்திருமகள் (1957) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாட்டின்  இளவரசிக்கு  சுயம்வரம். போட்டிகள்  வைப்பார்கள், அதில்  கலந்து  கொள்ளும்  பல  நாட்டு  இளவர்சர்களில்  யார்  வெற்றி  அடைகிறார்களோ  அவர்களுக்கு  திருமணம்  செய்து  வைக்கப்பட்டு  ராஜ்ஜியமும்  பரிசாக  வழங்கப்படும். இந்த  சம்பவம்  கடந்த  3  வருடங்களாக்  நடைபெறுகிறது , ஆனால்  இதுவரை  யாரும்  வெற்றி  பெறவில்லை 


 நம்ம  கதாநாயக்ன்  இந்த  வருடம்  போட்டியில்  கலந்து  கொள்கிறார். முதல்  சுற்றில்  ஒரு  பாட்டின்  வழியே  கேள்விகள்  கேட்கப்படும்  , ப்தில்  சொல்ல  வேண்டும்.  நாயகன்  போட்டுத்தாக்கிடறார்


  அடுத்த  சுற்று , நடனப்போட்டி, யாரும்  ஜெர்க்  ஆக  வேண்டாம் அதுலயும்  ஜெயிச்சுடறார்.  தளபதி தான்  வில்லன் (  பெரும்பாலான  அரச  கதைகளில்  தளபதிதான்  வில்லன், அது  ஏன்னு  தெரியல) நடனப்போட்டியில்  நாயகனைக்கவிழ்க்க  சதி  செய்தும்  நாயகன்  ஜெயிக்கிறார்


இறுதியாக  தளபதியுடன்  வாட்  போரில்  ஜெயிக்க  வேண்டும் , விஷம்  தடவிய  வாளைக்கொண்டு  நாயகனைக்கொல்ல  சதி  செய்யும்  தளபதியின்  வஞ்சகத்தை  நாயகன்  முறியடிக்கிறார்


இதற்கு  இடையே  இளவரசி  சாதா  உடையில்  நாயகனை  சந்தித்து  பழகுகிறாள். நாயகன்  மனதைப்பறி  கொடுக்கிறார். இது  நாயகனுக்கு  வைக்கப்படும்  ஆசிட்  டெஸ்ட்டா? சும்மானாச்சுக்கும்  விளையாண்டுதா? தெரியல. ஆனா  ஒரு  கட்டத்துல்  சும்மானாச்சுக்கும்  விளையாண்டேன், நாந்தான்  இளவரசினு  சஸ்பென்சை  ஓப்பன்  பண்ணிடுது


எல்லாப்போட்டிகளிலும்  நாயகன்  ஜெயிச்சடறான். இப்போ  ஒரு  ட்விஸ்ட். நாயகியின்  தோழியும்  நாயகன்  மீது  ஆசைப்படுகிறாள் . சதித்திட்டம்  போடுகிறாள் . 


 நாயகி    ஒரு  ஆளுடன்  ஓடிப்போய்  விட்டதாக  டிராமா  போடுகி றாள்  ,  இதை    எல்லாரும்  நம்பறாங்க, ஆனா  சொந்த  அப்பாவே   அதை  எப்படி  நம்பறார்?னு  தெரியல


இக்கட்டான  சூழலில் நாயகியின்  தோழியை  இளவரசியாக  நடிக்க  வைக்க  ஏற்பாடு  நடக்கிறது 


 மண  மேடையில்  ஆள்  மாறாட்டம், ஆல்ரெடி  பார்த்துப்பழகிய  நாயகனுக்கு  அருகில்  அமர்ந்திருப்பது  வேறு  ஆள்  என  தெரியல . முகத்திரை  இருக்குனு சால்ஜாப்  சொன்னாலும்   சேலை  கட்டும்  பெண்ணுக்கொரு  வாசம்  உண்டு  ஃபார்முலாப்படி நாயகனுக்கு  எப்படி  தெரியாம  போச்சுனு  தெரியல 


திருமணம்  நடந்த்டுது.  முதல்  இரவு .  ஆள்  மாறாட்டம்  என்பதை  நாயகன்  அப்போதான்  கண்டு  பிடிக்கிறார் (  நல்ல  வெளை  ஹீரோ  கமலா  இருந்தா  இருட்டுலயே  முதலிரவை  முடிச்ட்டு  விடிஞ்சுதான்  கண்டு  பிடிச்சிருப்பார்) 


இந்தக்குழப்பங்களுக்கு  எல்லாம்  தீர்வு  கதையின்  பின்  பாதியில்  இருக்கு 


 நாயகனாக  எம்  ஜி ஆர். டைட்டிலிலும்  சரி  , திரைக்கதையிலும்  சரி  நாயகனுக்கு  முக்கியத்துவம்  இல்லை ஆனாலும்  சமாளிக்கறாங்க .    எம் ஜி ஆர்  ஃபார்முலாப்படி  இதுல  அம்மா  பாசம்  காட்ட  வழி  இல்லை ,புரட்சி  வசனம்  பேசவும்  வாய்ப்பு  கம்மி . எப்படியோ  ஒப்பேத்திட்டாரு . எம்  ஜி  ஆரின்  சிரித்த  முகம்  அவருக்கு  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


இளவர்சியா, நாயகியா  அஞ்சலி  தேவி , நாயகனிடம்  விளையாடுவதும்  பின்  மதி  மயங்குவதும்  அலட்டல்  இல்லாத அனாயச  நடிப்பு .பின்  பாதி  திரைக்கதையில்  அவரை  அழ  விட்டு  விடுகிறார்கள் 


  இலவரசியின்  தோழியா   எஸ்  வரலட்சுமி  பிரமாதமான  நடிப்பு .ப்டையப்பா  படத்தில்  நீலாம்பரி கேரக்டருக்கு  இதுதான்  இம்ப்ர்சிவாக  இருந்திருக்க  வேண்டும்,  பட்டாசான  நடிப்பு .  குணா  படத்தில்  கமலுக்கு  அம்மாவாக  வருபவரா  இவர்  ? என  வியக்க  வைக்கிறார்.  நாயகனிடம்  காதல்  கொள்வது ,  இளவர்சியை  ஏமாற்றுவது ,  மன்னரை  குழப்புவது  என  இவர்  தான்  கதையின்  ஆணிவேர் , அடி பொலி  ஆக்சன் 


 எம்  ஜி  ஆர்  படத்தில்  நாயகிக்கோ  நாயகனுக்கோ  இல்லாத  முக்கியத்துவம்  வில்லிக்கு  இருப்பதை  இப்போதுதான்  முதல்  முறையாகப்பார்க்கிரேன். 


  காமெடி  டிராக்    கே  ஏ  தங்க  வேலு   , டி ஏ  மதுரம்   என் எஸ்  ,கிருஷ்ணன்.  நல்லாருக்கு 


வில்லனாக  வரும்  பி எஸ்  வீரப்பா  நல்ல  ஆகிருதியான  தோற்ற,ம்  ஜிம்  பாடி  ஜம்  சிரிப்பு ,  அவர்  முகத்தில்  வில்லன்  க்ளை  தாண்டவம்  ஆடுகிரது 


மன்னராக  வரும்  சகாதேவன்  ஓக்கே  ரகம் 


14  பாடல்கள்  மொத்தம்.  அதுல  அத்தானும் நான்  தானே   சட்டைப்பொத்தானும்    நான்  தானே? என்ற  பாடல்  ஆல்  செண்ட்டர்  ஹிட் , வரலட்சுமியே   பாடிய  ஏமாற்றம்  தானா  என்  வாழ்விலே   செம  பாட்டு சபாஷ்  டைரக்டர்


1  இந்தபடத்தில்  வரும்  போட்டிக்கேள்விகள்  பரபரப்பாகப்பேசப்பட்டன.    ரெண்டே  முக்கால்  மணி  நேரப்படத்தில்   போட்டிக்கேள்விகள்  , சுயம் வரம்  எனவே  ஒரு  மணி  நேரம்  சுவராஸ்யமாய்  நகர்த்திய  விதம் 


2  இளவரசி  நாயகனை  டெஸ்ட்  பண்ன  சாதாப்பெண்  போல  அவரிடம்  போய்  இளவரசியைப்பற்றி  ( தன்னைஒப்பற்றி  தானே)  அவதூறு  பேசுவது  பிரமாதமான  ஐடியா  (  இந்த  கான்செப்ட்டை  ஒட்டி  வாலி  படத்தில்  ஹீரோ  கற்பனையாக  தான்  காதலித்ததாய்  நம்ப  வைக்கும்  கதை  வரும் ) 


3  ஒரு  படத்தின்  பிரம்மாண்ட  வெற்றிக்கு    வில்லனை  பலம்  மிக்கவனாக  டிசைன்  செய்யனும்  அந்த  வகையில்   பிரமாதமான  வில்லன்  / வில்லி  கேரக்டர்  டிசைன்  செய்த  எல்லாப்படங்களும்  பிரம்மாண்ட  வெற்றி  (  கேப்டன்  பிரபாகரன் -  வீரபத்ரன் ,  படையப்பா -  நீலாம்பரி  ,  மன்னன் - விஜயசாந்தி )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆள்  மாறாட்டம்  நட்ந்தது  குறித்து  நாயகன்  தன்  மாமனாரிடம்  நியாயம்  கேட்கவே  போக  வில்லை  அது  ஏன் ?


2   ஊரில்  உள்ளவர்கள்  இளவரசி  பற்றிய  வதந்தியை  நம்பலாம், ஆனால்  சொந்த  அப்பா  நம்பலாமா?  தன்  மகள்  அப்படி  ஓடிப்போகிறவள்  இல்லை  , ஏதோ  சதி  என  உணர  மாட்டாரா? சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வில்லிக்கு  முக்கியத்துவம்  கொடுக்கப்பட்ட  படம்  என்பதை  மனதில்  வைத்துக்கொண்டு  எம்  ஜி ஆர்  ரசிகர்களும், மற்ற  ரசிக்ர்கள்  இதை  ஜாலியான  எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவும்  பார்க்கலாம்  ரேட்டிங்  2. 75 / 5 


சக்கரவர்த்தித் திருமகள்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புஆர். எம். ராமனாதன்
உமா பிக்சர்ஸ்
கதைபி. ஏ. குமார் இளங்கோவன் (உரையாடல்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
கே. ஏ. தங்கவேலு
பி. எஸ். வீரப்பா
ஈ. ஆர். சகாதேவன்
அஞ்சலி
எஸ். வரலட்சுமி
டி. ஏ. மதுரம்
லட்சுமி பிரபா
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசனவரி 181957
ஓட்டம்.
நீளம்17184 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்.
a


No.SongSingersLyricsLength
1"Kaadhalenum CholayileSeerkazhi GovindarajanKu. Ma. Balasubramaniam03:12
2"Aada Vaanga Annaatthe"Seerkazhi Govindarajan, Jikki & P. Leela04:24
3"Ellai Illadha Inbatthile"Seerkazhi Govindarajan & P. Leela03:26
4"Porakkum Podhu Porandha Gunam"Seerkazhi GovindarajanPattukkottai Kalyanasundaram04:40
5"Kannaalane Vaarunga"JikkiKu. Ma. Balasubramaniam03:07
6"Sollaale Vilakka Mudiyale"S. Varalakshmi & P. LeelaKu. Sa. Krishnamoorthy03:22
7"Endhan Inbam Kollai Konda"M. L. VasanthakumariKu. Ma. Balasubramaniam02:59
8"Emaatram Thaana"S. VaralakshmiK. D. Santhanam03:18
9"Aththaanum Naandhane"S. C. Krishnan & T. V. RathnamThanjai N. Ramaiah Dass02:09
10"Ennam Ellaam Inba Kadhai"P. LeelaKu. Sa. Krishnamoorthy02:58
11"Nalangittu Paarpomadi"S. Varalakshmi & A. P. KomalaK. D. Santhanam03:23
12"Seermevum Gurupaadham"Seerkazhi Govindarajan & N. S. KrishnanClown Sundaram03:23
13"Dhilli Thulukkar Seidha"Seerkazhi GovindarajanSubramania Bharati01:01

0 comments: