Wednesday, November 02, 2022

THANK YOU ( 2022) ( TELUGU) - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா) @அமேசான் பிரைம்


 நாம  எல்லாருமே  வாழ்க்கைல  முன்னுக்கு  வர  பலர்  உதவி  இருப்பாங்க , அது  நம்ம அம்மா , அப்பாவாக  இருக்கலாம், நண்பர்களாக , காதலியாக  இருக்கலாம்,  ஏன்? முன்  பின்  அறிமுகம்  இல்லாதவங்களாக்கூட  இருக்கலாம், அவங்களுக்கு  நாம  எப்பவாவது  நன்றி  சொல்லி  இருக்கோமா?  அல்லது  நன்றி  சொல்லனும்னு  நமக்கு  தோன்றி  இருக்கா?  தோன்றி இருக்கனும்,  நன்றி  சொல்லனும், இதுதான்  படத்தோட  ஒன்  லைன் 

உதயம் , இதயத்தை  திருடாதே  படங்கள்  மூலம்  நமக்கு அ றிமுகம்  ஆன  நாகார்ஜூனா  - அமலா  தம்பதியின்  வாரிசு  நாக  சைதன்யா ஹீரோவா  நடிச்ச  படம் 


2009 ல்  மாதவன்  ஹீரோவா  நடிச்ச  வித்தியாசமான  த்ரில்லர்  மூவியான  யாவரும்  நலம்  படத்தையும் 2016ல்  சூர்யா  நடித்த  24    எனும்  சயின்ஸ்  ஃபிக்சன்  மூவியை  இயக்கிய  விக்ரம்  குமார்  தான்  இந்தப்படத்தை  இயக்கி  இருக்கார்.  இவருக்கு  தமிழை  விட  தெலுங்குப்பட  உலகம்  தான்  நல்லா  செட்  ஆகி  இருக்கு போல . இதுவரை  6  தெலுங்குப்படம்   இயக்கி  இருக்கார் 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 ஹீரோ  ஒரு  பெரிய  கம்பெனியின்  இயக்குநர். ஒரு  புதுமையான  ஆப்  டெவலப்  பண்ணி  பெரிய  ஆள்  ஆனவர்  ,  அவரது  பிஸ்னெஸ்க்கு  முதலீடு  செய்தது  ஹீரோயின்.  அவ்ளோ  பெரிய  பிராஜக்ட்க்கு  பண  உத்வி  செய்ய  அவரை  நம்பி  யாரும்  தர்லை .  ஹீரோயின்  தான்  தந்தாங்க .  அவரது  பிஸ்னெஸ்   சக்சஸ்  ஆனதும்   ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தான்  வாங்குன  பணத்தை  திருப்பித்தந்தது  மட்டுமில்லாம  லவ்  பிரப்போஸ்  பண்றார்.  லிவ்விங்    டுகெதரா  இருவரும்  வாழ்றாங்க 


ஹீரோயினோட  மாமா  ஒரு  தொழில்  அதிபர் ,  ஒரு  கிரிட்டிக்கலான  சூழ்நிலைல   ஹீரோ  கிட்டே  உதவி  கேட்டு  வர்றார். ஆனா  ஹீரோ  அவரை  அவமானப்படுத்தி  அனுப்பிடறார்.  ஹீரோ  கஷ்டப்பட்ட  காலத்தில்  அவர்  உதவி  செய்யலைனு  அவருக்கு  கோபம்.  அந்த  அலட்சியத்தால்  மன  உளைச்சலுக்கு  ஆளான  ஹீரோயினின் மாமா  ஹார்ட்  அட்டாக்கில்  உயிர்  இழக்கிறார்


  இதனால  ஹீரோயினுக்கு  ஹீரோ  மேல  செம  கோபம.  பிரேக்கப்  பண்ணிக்கலாம்  அப்டிங்கறா. ஹீரோயின்  இப்போ  கர்ப்பமா  வேற  இருக்காங்க 

 ஹீரொயின்  பிரிந்து  சென்ற  பின்  ஹீரோ  பழைய  சம்பவங்களை  எல்லாம்  நினைச்சுப்பார்க்கிறார்


 ஸ்கூல்  லைஃப்ல  ஒரு  பெண்ணை  லவ்  ப்ண்றார்.  க்ளாஸ்ல  ஃபர்ஸ்ட்  ரேங்க்  வாங்குய்  அவர்   கடைசி  ரேங்க்  வாங்கும்  பெண்ணைக்காதலிக்கிறார். அந்தெப்ப்ண்ணும்  காதலிக்குது . ஒரு  சந்தர்[ப்பத்தில்  எதிர்கால  நலன்  கருதி  நம்ம  காதல்  வித்ட்ரா  பண்ணிடலாம்,  உன்  ஃபியூச்சரைப்பாருனு  அந்தப்பொண்ணு  சொல்லிடுது .அந்தப்பொண்ணு  மட்டும்  காதலை  ஏத்துக்கிட்டு  மேரேஜ்  பண்ணி  இருந்தா  ஹீரோ  இந்த  அளவு  பெரிய  ஆள்  ஆகி  இருக்க  முடியாது 


 அவரோட  காலேஜ்  லைஃப்ல  ஹீரோ  ஒரு  ஹாக்கி  பிளேயர் .,  போட்டி  டீம்ல  ஒருத்தன்  ஹீரோக்கு  வில்லனா  முளைக்கறான் ,  ரெண்டு பேரும்  எப்போப்பாரு  அடிசுக்கறாங்க , வில்லனோட  தங்கச்சி  இவங்க  ரெண்டு  பேரும்  அடிச்சுக்கக்கூடாதுனு  ஹீரோ  கைல  ராக்கி  கட்டி  விடறா இருந்தாலும்  இருவரும்  அடிதடி  சண்டைனுதான்  இருக்காங்க . ஒரு  கட்டத்தில்  ஹீரோ கையை  முறிச்சு  வில்லன்  ஏரியாவை  விட்டே  துரத்தறான்அவன்  மட்டும்  ஹீரோ  கையை  முறிக்காம  விட்டிருந்தா   ஹீரோ  ஹாக்கி  பிளேயர்  ஆகி  இருப்பார் , இவ்ளோ  பெரிய  தொழில்  அதிபர்  ஆகி  இருக்க  மாட்டார் 


 இந்த  இருவரையும்   சந்தித்து  ஹீரோ  நன்றி சொல்றார்


ஹீரோ  திருந்தியதால்  ஹீரோயின்  அவர்  கூட  சேர்ந்தாரா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ் 


    ஹீரோவா  நாக  சைதன்யா   3  விதமான  கெட்டப்களளில்  வர்றார்.  தனுஷ்  மாதிரி  மீசை  எடுத்தா  ஸ்கூல்  ஸ்டூடண்ட் ,  தாடி  வெச்சா  காலேஜ்  ஸ்டூடண்ட் , கண்ணாடி  போட்டா  தொழில்  அதிபர்  என  3  கெட்டப்களில்  கச்சிதமா  நடிச்சிருக்கார் . ஈகோ  பிடிச்ச  திமிர்  பிடித்த  கேரக்டரில்  குட்  ஆக்டிங் 


 ஹீரோயினா ராசி  கண்ணா .   கண்ணியமான  அழகு  முகம் . கச்சிதமான  உருக்கமான  நடிப்பு 

ஸ்கூல் லவ்வராக  மாளவிகா  நாயர்    அம்சமான  அழகு 

   காலேஜ்  வில்லனாக   சாய்  சுசாந்த்  ரெட்டி  கச்சிதமான  வில்லத்தனம் 

  அவரது  தங்கையாக   அவிகா கோர்  மன,ம்  ஈர்க்கும்  நடிப்பு 


பி சி  ஸ்ரீராம்  ஒளிப்பதிவில்  கண்ணுக்குக்குளுமையான  காட்சிகள்  . லொக்கேஷன்கள்  அழகு   எஸ்  தமன்  இசையில்  பாடல்கள்   பிஜிஎம்  ஓக்கே 


  பின்  பாதி  திரைக்கதையில்  சுவராஸ்யம் குறைவு   யூகிக்க  வைக்கும்  காட்சிகள்  பலவீனம் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதுவும்  இல்லமல்  எதிர்பார்த்தபடியே  தான்  முடிகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  ப்டத்துல  கதை  இருக்கோ  இல்லையோ  கண்ணுக்குக்குளிர்ச்சியான  லொக்கேஷன்ஸ் ,  ஒளிப்பதிவு  , மூன்று  அழகான  நாயகிகள்  இருக்காங்க . துக்காக  இயக்குநருக்கு  ஒரு  ஷொட்டு 


2  ஆல்ரெடி  ரிலீஸ்  ஆகி மெகா  ஹிட்  ஆன ஆட்டோ கிராஃப் , பிரேமம்  பட  சாயலில்  தான்  திரைக்கதை  அமைத்திருக்கோம்  என்பது  தெரியாமல்  பார்த்துக்கொண்ட  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  உன்னைத்தவிர  வேற  யாரும்  உனக்கு  முக்கியம்  இல்லை 


2 ஆயிரம்  நண்பர்க:ள்  கற்றுத்தராத  ஒரு  பாடத்தை  ஒரே  ஒரு  எதிரி  கற்றுத்தருவான் 


3  நாம  வாழ்க்கைல  போராட  நமக்கே  கற்றுத்தருவது  நம்  எதிரிகள்  தான் 


4 நாம  என்ன  மத்தவங்களுக்குத்தர்றமோ  அதுதான்  நமக்குத்திரும்பக்கிடைக்கும். அதுதான்  கர்மா (  கர்ம வினை) 


5  மனிதன்  சுயநலமா  இருப்பதும்  தனக்காகவே  சிந்திப்பதும்  இயல்புதான்,  இப்போ  மாறி  இருக்கான், அதுதான்  முக்கியம் 


6   வாழ்க்கைல  நாம  உயர  பலர்  காரணமா  இருந்திருக்கலாம். அவங்களை  சந்தித்து  ஒரு  நன்றி  சொல்லி  கவுரப்படுத்தினா  நம்ம  வாழ்க்கை  மேலும்  அழகாகும்  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவா  ஆண்கள்  அவங்க  வாழ்க்கைல  யாரையும்  தங்கையா  ஏத்துக்கறதில்லை.  ரத்த சம்பந்தம்  இல்லாத  ஒரு பெண்ணை  தங்கையா  ஏத்துக்கறதும்  தங்கச்சி  தங்கச்சி  நான்  உன்  கட்சி  என்பதெல்லாம்  டி  ராஜேந்தர்  காலத்தோட  முடிஞ்சிடுச்சு . அதனால  நாயகனின்  காலேஜ்  போர்சனில்  வரும்  ரெடிமேடு  உடனடி  தங்கச்சி  ஒட்டவில்லை 


2   ப்டத்தோட  முதல்  40  நிமிசம்  செம  ஸ்பீடாப்போகுது , ஃபிளாஸ்பேக்கில்  வரும்  அந்த  ஸ்கூல்  போர்சன்  15  நிமிசம்  தான் . காலேஜ்  போர்சந்தான்  இழுவையோ இழுவை . இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம் 


3  லிவ்விங்  டுகெதரா  வாழ்ந்து  கர்ப்பம்  ஆன  நாயகி  நாயகனை  சேர்வார்  என்ப்து  எல்லாருக்கும்  தெரிந்த  விஷயம்  தான் . அதை  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  காட்டி  இருப்பது  போர் 
சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  முழுப்படமும்  பார்க்க  பொறுமை  வேண்டும் . மெயின்  கதை . ஸ்கூல்  போர்சன்  மட்டும்  பார்க்கறவங்க  முதல்  ஒன்றே  கால்  மணி  நேரம்  மட்டும்  பார்க்கலாம்  ரேட்டிங் 2. 25 / 5 Thank You
Thank You (2021 film).jpg
Theatrical release poster
Directed byVikram Kumar
Screenplay byVikram Kumar
Story byB. V. S. Ravi
Dialogues by
  • Venkat D. Pati
  • Mithun Chaitanya
Produced byDil Raju
Sirish
Starring
CinematographyP. C. Sreeram
Edited byNaveen Nooli
Music byThaman S
Production
company
Release date
  • 22 July 2022
Running time
129 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Budget₹40 crore[2]
Box officeest.₹8.95 crore[3]

0 comments: