Friday, November 04, 2022

DIORAMA (2022) - சினிமா விமர்சனம் (மெலோடிராமா) @ நெட் ஃபிளிக்ஸ் 18+


டியோ ராமா  என்றால்  தொடர்ச்சியான  காட்சிகளின்  தொகுப்பு  என்று  அர்த்தம்  சொல்லுது  கூகுள்.  ஒரு  மினியேச்சர்  மாடலின்  முப்பாரிமாணப்பார்வை  எனவும்  அர்த்தமாம், திரைக்கதையும்   மூன்று  விதமான  பரிமாணங்களில் , மூன்று கண்ணோட்டங்களில்  சொல்லப்படுது 

 கமல்  படங்கள்  எல்லாம்  10  வருடங்கள்  கழித்துக்கொண்டாடப்படும், சிலாகிக்கப்படும் , அன்பே  சிவம்,  குணா  அதற்கு  சிறந்த  உதாரணங்கள் .  அவை  ரிலிஸ்  ஆன  போது  பெரிய  வரவேற்பு  இல்லாமல்  போனாலும்  நமக்குப்பின்னால  வரும்  சந்ததிகள்  அதைக்கொண்டாடித்தீர்ப்பாங்க .  உத்தம  வில்லன்  அப்படி  ஒரு  படம் . அந்தப்படத்தின்  திரைக்கதையில்   நேர்டியான  கதை  ஒரு  பக்கம்  போகும்,  இன்னொரு  பக்கம்   வில்லுப்பாட்டு  வடிவில்  ஒரு  கதை  சொல்லப்படும். அந்த  திரைக்கதை  உத்தி  பிடித்திருந்தால்  இந்தபடத்தின்  திரைக்கதை  உங்களை  கவரக்கூடும்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், நாயகி   இருவருமே  பணிக்குச்செல்லும்  தம்பதியர். அவர்களுக்கு  3  குழந்தைகள் 12  வயது , 8  வ்யது , 6  வயது   என  ஐந்து  பேரும்  ஒற்றுமையாக  ஒரே  வீட்டில்  வசிக்கிறார்கள் .


 இதில்  நாயகியின்  மனதில்  மட்டும்  ஒரு உறுத்தல் . நம்ம  வாழ்க்கை  இயந்திர கதியா  போய்க்கொண்டு  இருக்கிறதோ? தினமும்  எழுகிறோம்,  குழந்தைகளை  ரெடி  பண்றோம், ஸ்கூலுக்கு  அனுப்பறோம், ஆஃபீஸ்  போறோம், வர்றோம், இது  போர்  அடிக்குது. ஒரு  கவுன்சிலிங்  போலாமா? மனோதத்துவ  மருத்துவரை  சந்திக்கலாமா? என  நினைக்கிறார். இதை  தன்  க்ணவனிடம்  சொல்கிறார். ஆனால்  கணவன்  அதைபொருட்படுத்தவில்லை . எல்லார்  வாழ்க்கையும்  இப்படித்தானே  இருக்கிறது ? என  கேட்கிறார்


இப்படி  இருக்கும்போது  நாயகன்  ஒரு  பார்ட்டிக்குப்போகிறான், நாயகி  வேறு  பார்ட்டிக்குப்போகிறாள் இருவருக்கும்  தனித்தனியே  ஒரு  உறவு  மலருது .இந்த  விஷயம்  பரஸ்பரம்  ஒருவருக்கொருவர்  தெரிய  வர  ஒரு பிரிவு  வருது .  குழந்தைகளை  யார்  கவனிப்பது  என்ற  கேள்வி  வரும்போது  மூன்று  நாட்கள்  அப்பா  ,  நான்கு  நாட்கள்  அம்மா  இப்படி  ஷிஃப்ட்  வெச்சு  பார்த்துக்கறாங்க. 


நம்  இருவர்  பிரிவால் குழந்தைகள்  மனம்  , எதிர்காலம்  பாதிக்கப்படக்கூடாது  என  நாயகி  நினைக்கிறார். ஆனால்  நாயகன்  நாயகி  மீது  மட்டுமே  குற்றம்  சாட்டுகிறார். தன்  தவறை  ஒத்துக்கொள்ளவே  இல்லை 


இவர்கள்  வாழ்க்கை  என்ன  ஆனது  என்பதே  திரைக்கதை 



இந்தக்கதை  ஒரு  பரிமாணம். இன்னொரு  பரிமாணத்தில்  உலகம்  முழுக்க  தம்பதிக்ள்  பிரிவது  65%  நடந்து  கொண்டு  தான்  இருக்கிறது  அதற்கு  என்ன  காரணங்கள்?  என  தர்க்க  ரீதியாக  அலசப்படுகிறது . இது  டாக்குமெண்ட்ரி  ஸ்டைலில்  கொடுக்கப்பட்டிருக்கிற்து 


 இன்னொரு  பரிமாணம்  வில்லுப்பாட்டு  போல  பொம்மலாட்டம்  போல  நடன  நாட்டிய  நாடக  வடிவில்  காட்டப்படுது 


 மூன்று  பரிமாணங்களும்  சொல்ல  வரும்  விஷயம்  ஒன்று  தான்   எல்லா  தம்பதிகளுக்கும்  ஒரு  கட்டத்தில்  தன்  இணை  போர்  அடிக்க  ஆரம்பித்து  விடும், அதை  சாமார்த்தியமாக  சரி  செய்ய   வேண்டும் ., இல்லை  எனில்  ஜோடி  மாறும்  குழப்பம்  வரும் 


நாயகி  ஃப்ரிடாவாக   பியா  ஜெல்டா  அழகான  முகம்  கச்சிதமான  நடிப்பு .  கண்ணீர்  விடும்  காட்சியில்  கச்சிதம் . எந்த  நடிகை  அழும்  காட்சியில்  கூட  அழகாக  இருக்கிறாரோ  அவர் தான்  சிறந்த  நடிகை என  ஒரு  மேடைப்பேச்சில்  ஒரு  அறிஞர்  சொன்னாராம் . இவர்  அதற்கு  சிறந்த  உதாரணம் 


 நாயகனாக  டேவிட்  டென்சிக்.  இவர்  மனைவியிடம்  சிடு  சிடு  என  விழுவதும்  புதுத்தோழியிடம்  சிரித்த  முகமாக  இருப்பதும்  அக்மார்க்  ஆண்  வர்க்கத்தின்  பிரதிபலிப்பு 


‘  குழந்தைகள்  மூவரும்  கொள்ளை  அழகு . அப்பாவிடம்  இருக்கும்போது    எங்களுக்கு  அம்மா  வேண்டும்  என  அழுவதும்  , அம்மாவிடம்  இருக்கும்போது  அப்பா  எப்போ  வருவார்? என  கேட்பதும்  உருக்கம் 


பெரும்பாலான  தம்பதிகள்  பல  கருத்து  வேற்றுமைகளையும்  தாண்டி  ஒற்றுமையாக  இருக்கக்கார்ணம்  குழ்ந்தைக்ள்தான், அதனால்தான்  அந்தக்காலத்தில்  பெரியோர்கள்  திருமணம்  ஆனதும்  குழந்தைப்பிறப்பைத்தள்ளிப்போடக்கூடாது  என்பார்கள் .  அட்லீஸ்ட்  குழந்தைக்காகவாவது  தம்பதிகள்  ஒற்றுமை  காக்கட்டும்  என்பதால்


இது  ஜனரஞ்சகமான  படம்  அல்ல . பிரிந்து  வாழும்  தம்பதிகள்  , பிரிய  நினைக்கும்  தம்பதிகள்  மட்டும்  பார்க்க  வேண்டிய  படம் 


படத்தின்  இயக்குநர்  செய்த  புத்திசாலித்தனமான  ஒரு  விஷயம்   நாயகன்  , நாயகி  இருவரும்  பாதை  மாறிப்போவதை ,  வேறு  துணையுடன்  இருப்பதை  நேரடியான  காட்சியாகக்காட்டாமல் , வசனமாக  சொல்லாமல்  சூசகமாக  உண்ர்த்தியது 


ரசித்த  வசனங்கள்


1  ஆதாமும்  ஏவாளும்னு  படிக்கச்சொன்னா  இவன்  அலெக்சும்    ஏவாளும்னு  ப்டிக்கிறான்

\

  அடடே, இது  கூட  நல்லாருக்கே?  அலெக்ஸ்  ஏவாள்  , மேட்சுக்கு  மேட்ச் 


2  அப்பா  நீங்க  படிக்கும்போது  நான்  எப்பவாவது  தொந்தரவு  பண்ணி  இருக்கேனா? ஆனா  நான்  படிக்கும்போது  மட்டும்  சாப்பிட  வா  அப்டினு  கூப்பிட்டு  தொந்த்ரவு  பண்றீங்களே? இது  ஏன் ? 


3  நாம  வாழ்றதுக்கு  குறுகிய  காலம்  தான்  இருக்கு , ஆனா  அதுக்குள்ள  நம்ம  குறுகிய  எண்ணங்களை   வெளிக்காட்டிடறோம் 


சபாஷ்  டைரக்டர் 


1  ஒரு  மணி  நேரத்தில்  முடிக்க   வேண்டிய  கதையை  முப்பரிமாணம்கற  பேர்ல  ரெண்டு  மணி  நேரம்  இழுத்தது 

2  நாயகி  , நாயகியின்  தோழர் , தோழி , , நாயகனின்  தோழி  நால்வர்  தவிர  அனைத்து  முகங்களும்  அன்  சகிக்கபிளாக  இருந்தாலும்  படத்தைப்பார்க்க  வைத்தது 


3  மழலைகளின்  கொஞ்சல்  நடிப்பு 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 தன்  கணவனின்  தோழி  பக்கத்து  வீட்டு  ஆண்ட்டிதான்  என்பதை  அறிந்து  நாயகி  அடையும் வியப்பைப்பார்த்து  நமக்குதான்  வியப்பு  ஏற்படுகிறது .  வேற  யாரை  கரெக்ட்  பண்ணிடப்போறானுங்க ?   அதுக்கு  ஏன்  அவ்ளோ  ஜெர்க்  கொடுக்கனும் ?


2  பக்கத்து  வீட்டு  ஆண்ட்டி  நாயகனின்  மனைவியை  அதுவரை  பார்த்ததே  இல்லை . அப்போதான்  பார்க்கிறார்  என்பதும்   நம்பும்படி  இல்லை 

Diorama
GenreDramaKomedi
RegissörTuva Novotny
ProducentRené Ezra
Eva Åkergren
ManusTuva Novotny
SkådespelarePia Tjelta
David Dencik
Sverrir Gudnason
Claes Bang
Gustav Lindh
FotografSophie Winqvist
KlippningCarla Luffe
ProduktionsbolagNordisk Film
SVT
Film i Skåne
DistributionNordisk Film
Premiär
Speltid98 minuter
LandSverige Sverige
SpråkSvenska
Norska
Danska
IMDb SFDb

0 comments: