Thursday, August 18, 2022

திருச்சிற்றம்பலம் ( 2022) - சினிமா விமர்சனம் ( ட்ரிபிள் ஷாட் லவ் ஸ்டோரி)


குற்றாலம்  அருவில  குளிக்க  தமிழ்  நாட்டின்  மூலை  முடுக்குல  இருந்தெல்லாம்  ஆட்கள்  வருவாங்க  , அவங்க  எல்லாருமே  முதல்ல  தென்காசி  வந்துதான்  குற்றாலம்  வரனும். ஆனா  தென்காசில  இருக்கற  ஜனங்க  குற்றாலம்  வர மாட்டாங்க , தெய்வீக  மூலிகை  குளியல்னு  5  கிமீ  தானே  போவோம்னு  அவங்க  நினைக்கறது இல்லை , அட  பக்கத்துல தானே  இருக்கு, பார்த்துக்கலாம்னு  அலட்சியம். எப்பவும் நம்ம  பக்கத்துல  இருக்கற  அபூர்வங்கள்  அதிசயங்கள்  நம்ம  கண்ணுக்குத்தெரியாது, தோட்டத்துல இருக்கற  கிலாக்காய்  கண்ணுக்குத்தெரியாது  பண்ருட்டில  விளையற  பலாக்காய்மேல  தான்  மனசு  போகும்,. அதுதான்  இந்தப்படத்தோட  ஒன்  லைன் 

 தனுஷ்  நடிச்சு ஒரு  படம்  தியேட்ட்ருக்கு  வந்து ஒன்றரை  வருசம்  ஆகுது .  என்ன  ராசினு  தெரில  எல்லாமே  ஓ டி டி  ரிலிஸ்  ஆகத்தான்  இருக்கு . அது  போக  அனீரூத் காம்போல  அவரு  படம்  பண்ணி  ஏழு  வருசம்  ஆகுது . விஐபி  பாகம் 1  2  சாயலில்  கொஞ்சம்  யாரடி  நீ  மோகினி  சாயலில்  கொஞ்சம்  என  கலந்து  கட்டி  ஒரு  கம்ர்ஷியல்  ஹிட்  அடிச்சதுக்குப்பாராட்டுக்கள் . ஒரு  கூடுதல்  தகவல் . படத்தின்  கதை  தனுஷ். அதனால  அவரோட  பர்சனல்  லைஃப்  அங்கங்கே  டச்  பண்ணி  இருப்பாரு 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ , அவரோட  அப்பா , தாத்தா  கூட  ஒரே  வீட்டில்  தனிக்குடித்தனம்  இருக்கார். ஹீரோக்கு  அம்மா  இல்லை .  ஹீரோ  அப்பா  கூட  சரியாப்பேசிக்கறதில்லை ஆனா  தாத்தா  கூட  நல்ல  அட்டாச்மெண்ட் 


 ஹீரோ  வீட்டுக்குப்பக்கத்துல  தான்  ஹீரோயின்  இருக்காங்க, சின்ன  வயசுல  இருந்தே  க்ளாஸ்மேட்.


ஹீரோ  ஒரு டெலிவரி  பாயா  ஸ்விக்கி  மாதிரி  கம்பெனில  வேலை  செய்யறார் . அவரு  ஆறாம்  கிளாஸ்  படிச்சப்ப பார்த்த  பழகின  ஒரு  பொண்ணை  இப்போ  பல  வருசம்  கழிச்சுப்பார்க்கிறார்.  உடனே  அவருக்கு  லவ்  வந்துடுது  அதை  அவ  கிட்டே  ப்ரப்போஸ்  பண்றார். ஆனா  அது  என்னடான்னா  தம்பி நாம  2  பேரும்  ஜாலியா  பழகலாம்  சிரிக்கலாம்  நீ  என்  பாய்  பெஸ்டியா  எல்லா  எடுபுடி  வேலையும்  செய்யலாம்  ஆனா  மேரேஜ்  பண்ணிட்டு புருசனா எனக்கு  எடுபுடி  வேலை  செய்யற  அளவுக்கு  உனக்கு  தகுதி  இல்லைனு  சொல்லிடுது  


 ஹீரோ  வெக்ஸ்  ஆகிடறாரு. அதை  ஹீரோயின்  கிட்டேயு,ம்  சொல்றாரு  அது  நக்கல்  பண்ணுது . 


கொஞ்ச்  நாட்கள்  கழிச்சு   ஹீரோ  தாத்தா  பாட்டி  வீட்டுக்குப்போறாரு  கூடவே  ஹீரோயினும்  போகுது . அங்கே  ஒரு  முறைப்பொண்ணு  இருக்கு  அது  கிட்டே  பிரப்போஸ்  பண்ண  ஐடியா  ப்ண்றாரு   ஃபோன்  நெம்பர்  கேட்கறாரு

. அது  என்னடான்னா  என்னமோ  சொத்தையே   கேட்ட  மாதிரி  பம்முது 


 அப்போதான்  தாத்தா  ஒரு  ஐடியா  சொல்றாரு  அவரு  தாத்தாவா  ? இல்லை  மாமாவா?  தெர்ல்  அதாவது  பக்கத்து  வீட்டுலயே   ஹீரோயின்  இருக்கே? அதை  லவ்  பண்ணிப்பாரேன்கறாரு  அவரு  சொல்றதைப்பார்த்தா  ஏம்ப்பா   இந்த  ராட்டந்தூரி  பிடிக்கலைன்னா  அதோ  அந்த  ராட்டந்தூரில  ஆடிப்பாருனு  சொல்ற  மாதிரி  இருக்கு 


 அதுக்குப்பின்  ஹீரோ  விடலையே   ஹீரோயின்  கிட்டேயும்  ப்ரப்போஸ்  பண்றாரு . ஹிரோயின்  ஆளை  விடுடா  சாமி   அப்டினு  சொல்லிட்டு    ஃபாரின்  போய்டுது 


 இதுக்குப்பின்  ஹீரோ  என்ன  செஞ்சார்  என்பதுதான்  கதை 


 ஹீரோவா   தனுஷ் . கலக்கலான  நடிப்பு   3  ஹீரோயின்களிடம்  ப்ரப்போஸ்  பண்ணும்போது  3  விதமான  மாறுபட்ட  நடிப்பு  அருமையான  முக  பாவனைகள் . ஒரு  பாட்டு  சீனில்  அட்டகாசமான  டான்ஸ்  ஸ்டெப்ஸ்  என  அசத்தறார். அப்பா  தாத்தாவுடனான  செண்ட்டிமெண்ட்  காட்சிகளிலும்  உருக்கமான  நடிப்பு  வெல்டன் 


ஹீரோயினா  நித்யா மேனன். தமிழர்களூக்கு  கொஞ்சம்  பூசுன  மாதிரி  உடம்புன்னாதான்  பிடிக்கும்  இதனால தான்  குஷ்பூ    பானுப்ரியா  எல்லாம்  செம  ஹிட்  ஆனாங்க   இவரு  கேரளத்துக்கிளியா  இருந்தாலும்  தமிழர்களைக்கவர்ந்த  கிளி . கண்களே  பாதி  நடிப்பு  முடிச்சிடுது . செமயான  ஆக்டிங் மற்ற  இரு  ஹீரோயின்கள்  பற்றி  ஹீரோ  பேசும்போது  மேலோட்டமாக  கலாய்த்தாலும்  அடி  மனசில்  தன்  லவ்வைப்புரிஞ்சிக்கலையே  என்ற  ஏக்கத்தைக்காட்டும்  அண்டர்  ப்ளே  ஆக்டிங்  அம்சம் 

மாடர்ன்  மாடப்புறாவாக  ராஷி  கண்ணா அழகிய  மெழுகு  பொம்மை  அவரது  சிரிப்பும்  உதடும் கலக்கல் .  நடிப்பும்  ஓக்கே  ரகம்


3வது  ஹிரோயினா  முறைப்பெண்ணா  மஞ்சள்  கிழங்கு  ப்ரியா  பவானி சங்கர் . கச்சிதமான  உடை  அடக்கமான  நடை  எளிமையான  உடல்  மொழி . கொஞ்ச  நேரமே  வந்தாலும்  நிறைவான  நடிப்பு 


  தாத்தாவாக  பாரதிராஜா  பிரமாதப்படுத்தி  இருக்கார் . இவருக்கு  ஹீரோவுக்குமான  பாண்டிங்  செமயா  ஒர்க்  அவுட்  ஆகி  இருக்கு 


 அப்பாவா  பிரகாஷ்  ராஜ்   இதில்  அடக்கி  வாசிச்சு  இருக்கார் . பேரலைஸ்  அட்டாக்  வந்த  போது  உருக்கமான நடிப்பு  

‘  மாமாவாக  முனிஷ்காந்த்  கலகலப்பான  நடிப்பு  

இசை  அனிரூத்  செம  ஹிட்  பாட்டுக்கள்  3  அதுக்கான  ஒளிப்பதிவும்  கொரியோகிராஃபும்  கலக்கல் 


  ரசித்த  வசனங்கள் 


1   பொண்ணுங்க  காலைல  இவ்ளோ  லேட்டா  எழுந்தா  மகாலட்சுமி  எப்படி  வீட்டுக்கு  வருவா? 


 ஏம்மா, நீ  டெய்லி  நேரத்துலயே  எந்திரிக்கறியே?  மகாலட்சுமி  வந்தாளா? 


2  ஒரு  சிலர்  நம்ம  வாழ்க்கைல  திடீர்னு  வருவாங்க  , ஆனா  அவங்க  நம்ம  வாழ்க்கைல  எவ்ளோ  பெரிய  மாற்றங்கள்  உருவாக்குவாங்கனு  அப்போத்தெரியாது  நமக்கு 


3   வயசுக்கும்  வாழ்க்கைக்கும்  சம்பந்தம்  இல்லை   என்  உலகம்  வேற  உன்  உலகம்  வேற 


4   அப்டி  என்னடா  கவிதை  எழுதி  அவ  கிட்டே   சொன்னே?


 பெண்ணே  உன்  மேல  எனக்கு  ஆச

உன்னைப்பார்க்கறப்போ  எக்ஸ்ட்ராவா  முளைக்குது  மீசை

 நம்ம  கல்யாணத்தன்னைக்குதான்  நமக்கு  பூசை 


  கேவலமா  இருக்கு 


5   எப்பவும்  பொண்ணுங்க  விஷயத்தில்  நாமா  போய்  மேல  விழக்கூடாது  . அது  பட்டாம்பூச்சியைக்கசக்கற  மாதிரி   . அது  தானா  நம்ம  கிட்டே  வ்ர்னும் 


6   பிரச்சனைன்னா  விலகிப்போறது  நல்லது  . இது  பயம்  இல்லை  ஒரு  பாதுகாப்புதான் 


7   என்னைப்புரிஞ்சுக்காத  யாரும்  என்  கூட  இருக்க  வேணாம் 


8  ஒரு  குறிப்பிட்ட  வயசுக்குப்பின்  மத்தவங்களுக்குப்பாரமா  இருப்பதும்  ஒரு  சுகம் தான் 


9  ஆண்ட்டி  டோண்ட்  ஒர்ரி  உங்க  பொண்ணை  நான்  பத்திரமா  பார்த்துக்கறேன்


கிழிச்சே   உன்னையே  அவதான்   பார்த்துக்கனும்


10 என்னடா  சொல்றே?    பாய்ஸ்  ஒரு  பெண்ணைக்கரெக்ட்  பண்ண  இவ்ளோ  வேலைகள்  பண்ணனுமா? நாங்க  சும்மா  ஆளை  செலக்ட்  பண்ணா  போதும்  மிச்சத்தை  அவனே  பார்த்துக்குவான் 


11   அடப்பாவி  கோயிலுக்கு  வந்து  பொண்ணுங்களை  சைட்  அடிக்காத  சாமி  கண்ணைக்குத்திடும் 

 அடப்போம்மா  நான்  90s கிட்ஸ். நாங்க  கோயிலுக்குப்போறதே  சைட்  அடிக்கத்தான் 


12   எவ்ளோ  டைம்  குடுத்தா  அவளை  நீ  கரெக்ட்  பண்ணுவே?


 ஒரு  வருசம்  டைம்  குடுத்தாலும்  ஒண்ணும்  பண்ணி  இருக்கப்போறதில்லை 


 சபாஷ்  டைரக்டர்


1  தனுஷ், பார்திராஜா  ,பிரகாஷ் ராஜ்   ,நித்யா  மேனன் , ராஷி  கண்னா  ,ப்ர்யா பவானி சங்கர்   இந்த  ஆறு  பேரோட  கேரக்டர்  டிசைன்  பண்ணிய  விதமும்  அவங்க  கேரக்டரை  உள்  வாங்கி  நடிச்ச  விதமும்  அருமை  எந்த  இடத்திலும்  அவங்க  நடிக்கறாங்கன்னே  தெரில


2    ராஷி  கண்னா  தனுஷ்  கிட்டே  ஒரு  ஃபுட்  அயிட்டம்  ஆரட்ர்  பண்ணினதும்  தனுஷ்  ஆர்வமா  அதை  டெலிவரி  பண்ண  வரும்போது  டிப்ஸ்  கொடுப்பதும்  தனுஷ்  உடைந்து  போவதும்  அதை  நினைத்து ராஷி  வருத்தப்படுவதும்  டச்சிங்கான  சீன் 


3   ப்ர்யா  பவானி சங்கரிடம்  ஃபோன்  நெம்பர்  கேட்கும்போது  நாம  எதுக்காக  ட்ச்ல  இருக்கனும் என  அவர்  திருப்பிக்கேட்கும்போது  தனுஷ்  ரீ  ஆக்சன் எக்சலெண்ட்

4  க்ளைமாக்சில்  தனுஷ்  நித்யா  நடிப்பு  டாப்  ரகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  ஆலோசனைகள் 


1    போலீஸ்  ஸ்டேசனில்  பிரகாஷ் ராஜ்  தனுசை  அடிச்ச  விஷயம்  பாரதிராஜாவுக்கு  எப்படித்தெரியும் ? அது  பற்றிப்பேச்சு  வரும்போது  கரெக்டா  சொல்றாரே?


2   போலீஸ்  ஆஃபீசரான  பிரகாஷ்  ராஜ்  ஹெல்மெட்  போடாம  பைக்ல போறார்


3  போலீஸ்  ஆஃபீசரான  பிரகாஷ்  ராஜ்   ஒரு  அரசு  ஊழியர்  அவருக்கு  உடம்பு  சரி  இல்லைன்னா  மெடிக்கல்  லீவ்  போடலாம்  அப்போ  சம்பளமும்  உண்டுங்கற   விஷயம்  இயக்குநருக்குத்தெரியாதா?  பென்சன்  வேற  வருமே?  குடியே  முழுகிப்போன  மாதிரி  ஃபீல்  பண்ணுவது  ஓவர் 


4   ஹீரோ  10  வருசமா  தான்  பாட்டி  வீட்டுக்குப்போகாம  இருக்கார்  அதுக்கும்  முன்   19  வருசமா  அடிக்கடி  அங்கே  போனவர்தான்  ஆனா  என்ன்மோ  முதல்  டைம்  போன  மாதிரி  அம்மா  ஃபோட்டோவை  காட்டுவது  சிலாகிப்பது  ஏன் ?சின்ன  வயசுல  இருந்து  19  வயசு  ஆகும்  வரை  அங்கே  போனப்ப  அதெல்லாம்   பார்க்கவே  இல்லையா? 


5    ப்ரியா  பவானி  சங்கர்  தனுஷ்க்கு  கதைப்படி  முறைப்பொண்ணுதான்  ஆனா  அவர்  காட்டும்  கண்டிஷன்  எல்லாம் ரொம்ப  ஓவரா  இருக்கு 


6   ஹீரோவுக்கு  ஒரு  ஃபைட்  சீன்  இருக்கு  ஆனா  யதார்த்தமா  வைக்கனும்னு  அதை  சொதப்பிட்டாங்க  ஒரு  மாஸ்  சீனா  அமைச்சிருக்கலாம்  விசில்  பறந்திருக்கும்

7    க்ளைமாக்ஸ்  சீன்  அந்த  ஏர்போர்ட்டிலேயே  முடிச்சிருக்கலாம்  ஒரு  மாசம்  கழிச்சு  கனடாவில்  என  காட்டுவது  பெரிய  இம்ப்பேக்ட்டை  குடுக்கலை 

8  ஒரு  போலீஸ்  ஆஃபீசருக்கு  மினிமம்  6  செட்  யூனிஃபார்மாவது  இருக்கும் . ஆனா  ஒரு  சட்டையை  அயர்ன்  பண்ணும்போது  ஓட்டை  ஆகிடுச்சு  இனி  எப்படி  ஆஃபீஸ்  போவேன்  என  அப்பா  குதிப்பது  ஓவ்ர். ஒரே  நாடு  ஒரே  ரேஷன்  திட்டம்  மாதிரி  ஒரே  யூனிஃபார்ம்னு  புது  சட்டம்  வந்திருக்கா? 

9  ஹீரோ  தன்  அப்பாவை  தாத்தாவை  என  எல்லாரையுமம்  அவன்  இவன்  என  மரியாதை  இல்லாமல்  பேசுவது  என்னமோ  மாதிரி  இருக்கு 

10   இடைவேளைக்குப்பின்  வரும்  சில  காட்சிகள்  யாரடி  நீ  மோகினி  பாதிப்பில்  எடுத்திருக்காங்க   அதை  கொஞ்சம்  கவனிச்சு  இருக்கலாம் 


11  ஹீரோ  வில்லன்    நடு  நெஞ்சுல  7  கிலோ  பாறாங்கல்  ஒண்ணை நச்சுனு  தாக்கறார்  போலீஸ்  ஆம்புலன்ஸ்  வருது  அது  என்ன  கொலைக்கேசா?  என்ன  ஆச்சு?னு  தெரில 


12   ஹீரோவுக்கு  பாஸ்போர்ட்  விசா  எல்லாம்  28  நாட்களில்  கனடா  போகக்கிடைத்தது  எப்படி ? 


சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  திருச்சிற்றம்பலம் - கலகலப்பான , ஜாலியான முதல் பாதி , செண்ட்டிமெண்ட் காட்சிகளுடனான ஸ்லோவான பின் பாதி தனுஷ்க்கு ஷ்யூர் ஷாட் வின் ஃபிலிம், அனிரூத், 3 நாயகிகள் , தனுஷ், பாரதிராஜா பிரகாஷ்ராஜ் நடிப்பு + விகடன் மார்க் 43 ரேட்டிங் 2.75 / 5 #ThiruchitrambalamReview

0 comments: