Thursday, August 04, 2022

ANKAHI KAHANIYA (HINDI) 2021 - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி ரொமாண்டிக் ஸ்டோரிஸ்) @ நெட் ஃபிளிக்ஸ்


விமர்சனத்துக்குள்ளே  போகும்  முன்  முக்கியமான  2  விஷயங்களை  சொல்லிடறேன். இது ஜெனரல்  ஆடியன்சுக்கான  படம்  கிடையாது . காதல்  வசப்பட்டவங்க , தனிமையில்  அதிக  நேரம்  இருப்பவர்கள்   இவங்க  மட்டுமே  ரசிக்கக்கூடிய  படமா  இருக்கும். கன்னட  எழுத்தாளர்கள்  எழுதிய  3  வேவ்வேறு  சிறுகதைகள்  ஒன்றுக்கொன்று  சம்பந்தம்  இல்லாதவை  ஆனா  எல்லாத்துலயும்  காதல்  . தனிமை  இப்டி  ஏதாவது  மனித  உணர்வுகள்  கலந்திருக்கும். அடிதடி  மசாலா, கிளப்  டான்ஸ்  வெட்டு  குத்து  பஞ்ச்  டயலாக்  படங்கள்  பார்க்கிற  ரசிகர்கள்  ஒன்  ஸ்டெப் பேக் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


1  மூன்றாவது  கதை -  நான்  சின்னப்பையனா  இருக்கும்போது  ப்ழி  வாங்கற  கதைகளில்  ஒரு  லாஜிக்  எனக்குப்புரியலை  ( அப்பவே  லாஜிக்  பார்த்திருக்கேன்  பாருங்க ) அதாவது  வில்லன்  ஹீரோவோட  அக்காவையோ  அப்பாவையோ  கொலை  பண்ணிடறான். அப்போ  தானிக்கு  தீனி ஹீரோ  வில்லனோட அக்காவையோ  அப்பாவையோ  கொலை  பண்ணாதானே  கரெக்டான  பழி  வாங்கலா  இருக்கும்? எதுக்கு  வில்லனைக்கொலை  ப்ண்ணனும் அல்லது  அடிக்கனும்னு  புரியல. . அதே  மாதிரி  வில்லன்  ஹீரோவோட  தங்கசியை  ரேப்  பண்ணுனா  ஹீரோவும்  வில்லனோட தங்கையத்தானே  ரேப்  பண்ணனும்?னு  அப்போ  தப்பா  நினைச்சேன். / இன்னைக்குதான்  அதுக்கு  விடை  கிடைச்சுது 


 ஹீரோயின்  தனு  தன்  புருசன்  அர்ஜூன்  அவர்  கூட ஒர்க்  பண்ற  நடாஷா  அப்டிங்கற  பொண்ணோட  ரிலேஷன்ஷிப்ல  இருக்காரோ?னு  சந்தேகப்படறா.புருசனோட  செல்ஃபோனை  செக்  பண்ணிப்பார்க்காத  சம்சாரம்  இந்த  உலகத்துல  எங்காவது  இருக்கா?  இங்கேயும்  அது  டிட்டோ .  ஃபோன்  சேட்டிங்  டீட்டெய்ல்ஸ்ல  அதைக்கண்டுபிடிக்கறா. கண்டு  பிடிச்சதும்  தன் புருசன்  கூட  சண்டை  போடாம  தான்  பெற்ற  துன்பம்  பெறுக  இவ்வையகம்   ஃபார்முலால  தன்  புருசனோட  லவ்வரோட  புருசனைக்காண்டாக்ட  பண்ணி  உன்  சம்சாரத்தை  என்  புருசன்  வெச்சிருக்கான் . அப்டினு  பத்த  வைக்கிறா 


  அவன்  அப்படி  எல்லாம்  இருக்காது  என்  சம்சாரம்  பத்தரை  மாற்றுத்தங்கம்னு  டயலாக்  பேசிட்டு  வீட்டுக்கு  வர்றான்  சம்சாரத்தை  நோட்டம்  விடறான் .  சில   ஆதாரங்கள்  சிக்குது


இதுக்குப்பின் தான்  கதைல  சுவராஸ்யம் . அவங்க  2  பேருக்கும்  எப்படி  முதல்  சந்திப்பு  நடந்தது ? எங்கே  எப்போ  எப்படி   இருவரும்  சந்திச்சிருப்பாங்க? என்ன  பேசி  இருப்பாங்க  எல்லாம்  டிஸ்கஸ்  ப்ண்றாங்க   அதே  ஸ்பாட்க்கு  அவங்களும்  போறாங்க 


 அவங்களும்  அவங்களை  மாதிரியே  அதே  தப்பைப்பண்ணி  அவங்களை  பழிக்கு  பழி  வாங்குனாங்களா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ்   (  இந்த  வாக்கிய  அமைப்பில்  குழப்பம்  ஏதும்  இல்லையே? ) 


திரைக்கதை  நல்லா  பண்ணி  இருந்தாங்க .  96  படத்தில்  டைரக்டர்  போட்ட  சஸ்பென்ஸ்  முடிச்சே  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  க்ளைமாக்சில்  இணைவாங்களா?  மாட்டாங்களா?  என்ற  எதிர்பார்ப்புதான் .அதே  ஃபார்முலா தான்  இதுலயும்.,  அடல்ட்  கண்ட்டெண்ட்  எதுவும்  இல்லை  நேர்த்தியான  வசனங்கள்  பிளஸ் 


சபாஷ்  டைரக்டர் 


1   இதுல  2  செட்  ஜோடில  முதல்ல  தப்பு  பண்ணும்  ஜோடி  2  பேருமே   அழகா  இருக்காங்க  நடிப்பும்  குட் .,   அவங்க  தப்பு  செஞ்சாங்களா? இல்லையா?  என  க்ண்டுபிடிக்கக்கிளம்பும்  ஜோடில  அந்த  லேடி  ஆண்ட்டி  மாதிரி  இருக்கு  அந்த  ஆள்  தாடி  வெச்சுட்டு   வில்லன்  மாதிரி  இருக்காப்டி . ஆனா  அவங்க  படம்  பூரா  பேசும்  டயலாக்ஸ்  எல்லாம்  அருமை 


2   கதை  ஆரம்பித்த  அஞ்சாவது  நிமிசத்துல  இருந்து  எதை  நோக்கிப்போகுதுனு  ரசிகனை  உணர   வெச்சு  க்ளைமாக்ஸ்ல  குடுத்த  ட்விஸ்ட்  குட் 


 ரசித்த  வசனங்கள்


1   ஒரே  ஒரு  தப்புக்காக  என்  11  வருச  கல்யாண்  வாழ்க்கையை  கலைக்க சொல்றியா? 


2   உடையற  எல்லா  ரிலேஷன்ஷிப்க்கும்   அது  உடைய  ஒரு  காரணம்  இருக்கும் 


3  ஒரு  பொண்ணுக்கு  அவ  ஃபேமிலில இருந்து  லீவ்  வேணும்னா  அவ  அம்மாவா  இருக்கக்கூடாது 


4   எல்லா  தம்பதிகளுமே  இந்த  இல்லற  வாழ்வு  நிலையானது  இல்லைனு ஒரு  கட்டத்துல  நினைப்பாங்க 


5  தோல்வி  ஒரு  நாளும்  நம்மை  கோழை  ஆக்கிடவே  கூடாது 


4   கோ  இன்சிடெண்ட்ஸ்  அடிக்கடி  நடக்காது  அப்படி  நடந்தா  அது  கோ இன்சிடெண்ட்சா  இருக்காது 


5    அவளுக்கு  வெற்றி  ரொம்ப  பிடிக்கும்  அதனால  வெற்றி  பெற்ற  ஒருவனை  செலக்ட  பண்ணுனதுல  ஆச்சரியம்  இல்லை 


6   அழகான  பொண்ணு  தர்ற  காம்ப்ளிமெண்ட்ஸ்   ஒவ்வொரு  ஆணுக்கும்  பிடிக்கும் 


7   கனவுன்னாலே  அது  கனவுதான்  அதுல  என்ன  சின்னக்கனவு ? பெரிய  கனவு ?


8   ஒவ்வொரு  கருணைக்குப்பின்னாலும் ஒரு  அழகான  கதை  இருக்கும் 


9   பிடிச்ச விஷயத்தைப்பண்ணறது  கல்யாண  வாழ்க்கைல  ஒத்து  வராது 


10  பிடிக்காத  விஷயத்தைப்பண்ண  நேரிடுவது  வாழ்வின்  சாபம் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப்ல  இருக்கற  ஜோடி  ஓப்பனாப்பேசுனா  ஒரு  கள்ளக்காதல்  ஜோடி  நைட்  டைம்ல  மெசேஜ்  அனுப்புவாங்களா? 


2  ஏகப்பட்ட  பண  வசதி  உள்ளவங்க  கள்ளக்காதலில்  இருப்பவர்கள்  ஆஃபீஸ்ல  யூஸ்  பண்ண  ஒரு  ஃபோன்  வீட்ல  யூஸ்  பண்ண  ஒரு  ஃபோன்  வெச்சுக்க  மாட்டாங்களா? இப்படி  தான்  மாட்டிக்குவாங்களா?  (  நான்  யாருக்கும்  ஐடியா  குடுக்கலை   ஒரு  டவுட்  தான் )


2  இரண்டாம்  கதை -  ஒரு  மிடில் கிளாஸ்  ஃபேமிலி  ஹீரோயின்  அடிக்கடி  பக்கத்துல  இருக்கற  சினிமா  தியேட்ட்ருக்கு  படம்  பார்க்கப்போறா  அவ  சினிமாப்பைத்தியமோனு  நினைச்சா   அங்கே  தான்  ட்விஸ்ட் , தியேட்டர்ல   ஒர்க்  பண்ற  பையன்  கூட லவ்ஸ் .  இருவரும்  வீட்டை  விட்டு  ஓடிப்போகத்தீர்மானிக்கறாங்க.  காட்சி  அமைப்புகளில்  ஹீரோ  ஹீரோயினை  அம்போனு  விட்டுட்டு  எஸ்  ஆகிடுவான்   என்ற  பதைபதைப்பை  ஆடியன்சுக்கு கடத்தி  இருக்காங்க   க்ளைமாக்ஸ் ல  அவங்க  சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதை  படம்  பார்த்து  தெர்ஞ்சுக்குங்க 


சபாஷ்  டைரக்டர் 


 1 இதுல  ஹீரோயின்  முகம்  அவ்ளோ அழகு  மிக  கண்ணியமான  குடும்பப்பாங்கான  முகம்  அவர்  கூந்தலில்  பூச்சூடும்  அழகே  அழகு 


2  ஹீரோயின்  பர்சில்  இருந்து  ஹீரோ  எதையோ  ஆட்டையப்போடுவது  போல  காட்டி  பின்  அது  ஸ்டிக்கர்  பொட்டு  என  காட்டுவது  கவிதை 


3     ஹீரோ  ஹீரோயினுக்குப்பிடிச்ச  நெய்  பிஸ்கெட்  வாங்கித்தருவது  அந்தக்காட்சியைப்படமாக்கிய  விதம்  லைட்டிங்ஸ்  பக்கா 


  ரசித்த  வசனம்


 வசனமாடா  முக்கியம்  படத்தைப்பாரு  ஹீரோயினைப்பாரு  மொமெண்ட் 


3  முதல்  கதை  - இது  கொஞ்சம்  நம்ப  முடியாத  மாதிரி  இருக்கும்  ஆனா  ரசிக்க  வைத்தது   ஹீரோ  ஒரு  ஜவுளிக்கடைல  சேல்ஸ் ,மேன்  அந்தக்கடைக்கு   ஒரு   ஷோ  கேஷ்  பொம்மை  வருது . ஆல்ரெடி  2  ஆண்  பொம்மை  இருக்க  இப்போதான்  பெண்  பொம்மை  வருது  , அந்த  பொம்மை  மீது  ஹீரோவுக்கு  ஏற்படும்  அன்பு  அல்லது  காதல் தான்  கதை 


 பொம்மையை  எடுத்துட்டு  பீச்சுக்குப்போவது  அது  கூட பேசுவது  எல்லாம்  என்ன  லூஸ்தனமா  இருக்கு  என  ஆரம்பத்தில் எண்ண  வைத்தாலும்  போகப்போக  ஹீரோ  மனநிலை  புரியுது 


ஹீரோ  சொந்த  ஊருக்குப்போவது  தான்  கட்டிக்கப்போகும்  பெண்ணைப்பார்ப்பது  போன்ற  தருணங்களில்  ஹீரோ  மீண்டும்  நகரத்துக்கு  அந்த  பொம்மையைப்பார்க்க  எப்போ  வருவார்  என  எண்ன  வைத்தது  அந்த  இயக்குநரின்  வெற்றி  


 இந்தக்கதையை  இயக்கியவர்  ஒரு  லேடி  மிக  கண்ணியமான  நெறியாள்கை 


ரசித்த  வசனம் 


 1  எந்த  உறவுகளோட  ஆரம்பமும்  ஒரு  பொய்ல  ஆரம்பிக்கக்கூடாது 


 சபாஷ் டைரக்டர் 


1  பெண்  பொம்மைக்கு  டிரஸ்  மாற்றும்  காட்சியக்கூட  நாகரீகமாகக்காட்டிய  விதம் 


2  ஹீரோவின்  கொலீக்  அந்த  பொம்மைக்கு  கவர்ச்சி  உடை  அணிவிக்கும்போது  அவன்  படும்  கோபம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  


 ஹீரோவின்  நண்பன்  டெய்லி  நைட்  ஓனர்  கிளம்பிய  பின்  கடைல  இருக்கற  புது  சர்ட்  எடுத்து  போட்டுட்டுப்போறான்  அது   சிசிடிவி கேமரால  பதிவாகாதா?  தானே  திருடன்  அப்படி  இருந்தும்  அவன்  என்ன  தைரியத்தில்  ஹீரோ  பொம்மை  சிசிடிவி  காட்சியைக்காட்டி  ஓனரிடம்  ஹீரோவை  மாட்டி  விடறான் ? 



சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட்  - குறும்படங்களின்  தொகுப்புன்னாலே  ஃபுல்  மீல்ஸ்  சாப்பிட்ட  திருப்தி  இல்லை  என  சிலர்  சொல்வதுண்டு    அவர்கள்  நீங்கலாக  மற்றவர்கள்  பார்க்கலாம்  குறிப்பா பெண்கள்  ரசிக்கும்படி  பல  காட்சிகள் இருக்கு  நெட்  ஃபிளிக்ஸில்  போன  வருசம்  ரிலீஸ்  ஆச்சு  இது  தமிழ்  டப்பிங்க்லயும்  கிடைக்குது    ரேட்டிங்  2.75 / 5   


0 comments: