Friday, August 05, 2022

குருதி ஆட்டம் (2022) - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்)


 உலக ஆணழகன், கமாண்டோ  பட  ஹீரோ அர்னால்டு ஸ்வார்செனேகர்  இந்தப்படத்தைப்பார்த்தா  ஹார்ட்  அட்டாக்  வந்த  மாதிரி  ஃபீல்  பண்ணுவார்.ஒரு  பானை  கள்ளச்சாராயத்துக்கு  ஒரு  ஆஃப்  குவாட்டர்  பதம்னு  சொல்வாங்க , ஒரே ஒரு  சீன்  சொல்றேன். ராதிகா  வில்லன்களால்  அடிபட்டு  வீல்  சேர்ல  எதுவும்  முடியாம  உக்காந்திருக்கார். அவரை  தாக்க  காட்டெருமை  மாதிரி  ஒருத்தன்  வர்றான். அனேகமா 160  கிலோ  எடை  இருப்பான், ஆனானப்பட்ட  சித்தப்பா  சரத்குமார்  வந்தாலே  அரை  மணி  நேரம்  ஃபைட்  போட்டாதான்  அவரு  உயிரு  அவரே  ல்காப்பாத்திக்க  முடியும் ,. ஆனா  சித்தி  ராதிகா  அசால்ட்டா  ஒரு  வெட்டரிவாளால  உக்காந்த  வாக்கு  ல  ஒரே போடு. அவன்  ஒரு  பர்லாங்  தூரம்  தள்ளி  விழறான்


நான்  சின்னப்பையனா  இருந்தப்போ  என்  மாமா  பொண்ணு  கூட  தாயக்கரம்  விளையாடி 3  ஆட்டத்துல  2  ஆட்டம் ஜெயிச்சேன். அப்றம்  எட்டாவது  படிக்கும்போது  பரமபதம்  ஆடி 2  ஆட்டம்  ஜெயிச்சேன். அதை  தாங்க மாட்டாம  அந்தப்பொண்ணு  என்னை  கட்டிக்க  மாட்டேன் , பழிக்குப்ப்ழினு  சொல்லிடுச்சு . தக்காளி  கட்டி  இருந்தாலும்  ஒரு  வகை  பழி  வாங்கல்தான்னு அதுக்கு  தெரியலை 

அப்படி  நான்  ஜெயிச்சப்போ என்  மாமாவும்  அத்தையும்  எனக்கு  சப்போர்ட்  பண்ணாங்க. அதுக்காக  அந்தப்பொண்ணு  சொந்த  அம்மா  அப்பாவையே  சதித்திட்டம்  தீட்டி  கொலை  பண்ற  லெவலுக்குப்போய்டுச்சுனு  சொன்னா  நீங்க  நம்புவீங்களா?  இந்தப்படத்தோட  கதையே  அதான் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஒரு  ஊர்ல  2  கபடி  டீம் இருக்கு . ஹீரோ  இருக்கற  டீமை  வில்லன்  டீமால்    ஜெயிக்கவே  முடியலை . தோல்வி  அவமானம்  தாங்காம  வில்லன்  ஹீரோ  டீம்ல  இருக்கற   ஒருத்தனை  மேட்ச்  முடிஞ்சு  கப்  எல்லாம்  வாங்குன  பிறகு  ஒரு  அப்பு  அப்பறான்.  அந்தக்கப்போட  விலை  அனேகமா 25  ரூபாதான்  இருக்கும். அதுக்காக  வில்லன்  என்னென்னமோ பிளான்  போட்டு   ஹீரோ சைடு  65  பேரை  வெட்டி  சாய்க்க  ஹீரோ  வில்லன்  ஆட்கள்  ஒரு  86  பேரை  துவைச்சு  எடுக்க  அடடா ஒரே ரணகளம்


இன்னொரு  காமெடி  இருக்கு . இதுல  ஹீரோ  ஹீரோயின்  வில்லன்  யாருக்குமே  சம்பந்தம்  இல்லாத  ஒரு  குழந்தை  கேரக்டர்  வரும் . அதுக்காக  ஆளாளூக்கு  உயிரைக்கொடுக்கறேன்  ரேஞ்சுக்கு  உருகறது  செண்ட்டிமெண்ட்  வசனம்  பேசறது  எல்லாம்  பார்த்தா  ... அட  இருங்க  பக்கத்து  சீட்ல  ஒரு  தாய்க்குலம்  கண்ணீர்  விட்டுட்டு  இருக்கு . லேடீசைக்கவரனும்னா    கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  செண்ட்டிமெண்ட்  சீன்ஸ்  வைக்கனும்  போல 


ஹீரோவா  அதர்வா . அசால்ட்டா  நடிச்சிருக்கார் .  முதுகுல  குழந்தையைக்கட்டி  ஒரு  ஃபைட்  போடறது  எல்லாம்  ஓக்கே  ஆனா  அது  ஆல்ரெடி  1995ல  ரிலீஸ்  ஆன  திருமூர்த்தி  படத்துல  கேப்டன்  விஜயகாந்த்  பண்ணீட்டாரே?   காதல்  காட்சிகளில்  நல்லா  பண்ணி  இருக்கார்னாலும்  ஆக்சன்  சீக்வன்சில்  அட்டகாசம்  பண்ணி  இருக்கார். அப்பா  முரளி  கூட  இவ்ளோ பிரமாதமா  ஃபைட்  பண்ணதில்லை  ஜிம்  பாடி  ஒரு  பிளஸ்  பாயிண்ட் . ஒரு  கம்  பேக்  படமா  அமைய  வாழ்த்துகள் 


ஹீரோயினா  ப்ரியா பவானி சங்கர் . ஈர்ர்டு  மாவட்டத்துலதான்  பவானி  இருப்பதால் ப்ரியா பவானி சங்கர் .  நமக்கு  ரொம்ப  செல்லம்.நதியா  ரேவதி  சுஹாசினி  மாதிரி  கண்ணியமான  உடை  அணிவதில் இவருக்கு ஒரு  ஷொட்டு சேலை  அணிந்த  சோலையாய்  படம்  நெடுக  வந்தாலும்  ஒரு  சீன்னா  ஒரு  சீன்  கூட  முந்தானை  விலகலை   . குடும்பப்பாங்கான  நடிப்பு   அவரது  ஹேர் ஸ்டைலும்  சூப்பர் . அவரது  ஜாக்கெட்  ஃபிட்டிங்கும்  சூப்பர் . ஒரு  பெண்  சேலைல  அழகா  தெரியனும்னா  அவருக்கு  அமையும்  பிளவுஸ்  டெய்லர்  கரெக்டா அமையனுமாம் 


சித்தி  ராதிகாவைப்பாத்தி  ஆல்ரெடி  பார்த்தாச்சு , ஆனாலும் அவரது  கம்பீர  நடிப்பு  குட். ஆனானப்பட்ட  ரஜினிக்கே  படையப்பால  ஃபிஎரண்ட்ஸ்  6  பேர்தான்  இதுல  ஹீரோவுக்கு  8  ஃபிரண்ட்ஸ் .


ராதிகாவின்  மகனாக  வருபவர்  நல்ல  நடிப்பு  அவருக்கும்  ஹீரோக்கும்  உருவாகும்  நட்பு  செயற்கையா  இருக்கு 


 ராதாரவி  இறுக்கமாகச்செல்லும் திரைக்கதையில்  பிரமாதமாக  ஒரு  அடல்ட்  காமெடி பண்ணி  இருக்கார் . புரிஞ்சவங்க  கை தட்டுனாங்க . படத்தில்  வித்தியாசமாக  கேரக்டர்  ஸ்கெட்ச்  எழுதப்பட்டது  ராதா  ரவிக்குதான்


 அந்த  சிறுமி  அழகு  நடிப்பும்  குட்  ஆனா  மெயின்  கதைக்கும்  அவருக்கும்  சம்பந்தமே  இல்லை  எதுக்காக  அந்த  கேரக்டருக்கு  அவ்ளோ  முக்கியத்துவம்? எல்லாரும்  அவரைக்காப்பாற்ர  தங்கள்  உயிரையே  பணயம்  வைப்பது  எதுக்கு?னு  தெரில  அனேகமா  புரொடியூசர்  குழந்தையா  இருக்கும் 


எ3ட்டு  தோட்டக்கள்  என்ற  பிரமாதமான  படத்தை  இயக்கிய  டைரக்டர்  தான்  இதுக்கும்  திரைக்கதை  என்ப்தை  நம்ப  முடியலை  . ஹீரோயிசத்தை  எப்போ  ஒரு  டைரக்டர்  நம்ப  ஆரம்பிக்கறாரோ அவர்  அடி  வாங்குவார் 


ரசித்த  வசனங்கள்


1   நிலை  இல்லாத  இந்த  வாழ்க்கைல  கிடைக்கற  எல்லா  மனுசங்களும்  நமக்கு  சொந்தம் தான் 

\

2    பிடிச்சவங்க  ஒரு  தப்பு  பண்ணினா  பிடிச்சவங்க  முக்கியமா? தப்பு  முக்கியமா?னு  முடிவு  எடு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  அந்த  சின்னப்பொண்ணு  குணம்  ஆகனும்னு  எந்த வித  ரத்த  சம்பந்தமும்  இல்லாத  லேடி  தாதா  ராதிகா  எதுக்காக   தீக்குண்டம்  மிதிக்கறாங்க ? 


2  அந்த  தீ  மிதி  தகவல்  கேட்ட  சிறுமியின்  அப்பா  ராதிகாவைக்கொலை  செய்வதை  கேன்சல்  பண்றார் , ஆனா  அடுத்த  ஷாட்;ல  மறுபடி  பட்டாக்கத்தியோட  பாய்வது  ஏன் ? 


3   கொலைகாரன்  முகத்தை  ராதிகா  பார்த்துடறார்  ஆனா  அது  பற்றி  கவலை  இல்லாம  அவன்  ஓடறான்

4 விஜய்  ரசிகர்களைக்கவர  கில்லி  கபடி  சீன்  , அஜித்  ரசிகர்களைக்கவர  விஸ்வாசம்  தியேட்டர்  சீன்  என்றெல்லாம்  பார்த்து  பார்த்து  வைத்த  டைரக்டர்  ஜெனரல்  ஆடியன்சைக்கவர  திரைக்கதைல  எதுனா  எழுதி  இருக்க;லாம்


5  பின்னணி  இசை  யுவன்  ஷங்கர்  ராஜா  பிஜிஎம்  போட்டு  கொளுத்தி  இருக்கார்  காது  வலிக்குது. படம்  பூரா  ஒரே வெட்டு  குத்து  கொலைகள்  தான்

போலீஸ்னு  யாரும்  இல்லை 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விஷால்  ரசிகர்கள்  சிரஞ்சீவி  ரசிகர்கள்  சித்தி  ரசிகைகள்  பார்க்கலாம்.  செயற்கையா  இருந்தாலும்  பரவால்ல  செண்ட்டிமெண்ட் காட்சிகள்   எனக்கு  உயிர்  என  சொல்லும்  டி வி  சீரியல்  பெண்கள்  பார்க்கலாம். தரமான  திரைக்கதை  ரசிகர்கள்  ஓடிடுங்க  ஆனந்த  விகடன்  யூக  மார்க்  39   ரேட்டிங்  2 / 5   ஈரோடு  அன்னபூரணி  ல  படம் பார்த்தேன்  

0 comments: