Saturday, August 06, 2022

SITA RAMAM ( 2022) ( TELUGU) - சீதா ராமம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் த்ரில்லர் )


 ஒரு  அழகான காதல்  கதையை பிரமாதமான  செய் நேர்த்தியோடு அழகியல் ரசனையோடு  தந்திருக்கும் இயக்குநரின்  கடின  உழைப்பைப்பார்க்கும்போது  இது  ஜனரஞ்சகமாகவும்  மக்களிடம்  போய்ச்சேர  வேண்டுமே  என்ற  கவலையும்  கூடவே  எழுகிறது .  சும்மா  டப்பாப்படங்களுக்கெல்லாம்  ஓவர்  ஹைப்  ஏற்றும்  ஆட்கள் மத்தியில்  நல்ல  தரமான    படங்களுக்கு  மார்க்கெட்டிங் இன்னும்  நல்லா  பண்ணி  இருக்கலாமோ  என்ற  ஆதங்கமும்  எழுகிறது 


காதல் கோட்டை , காலமெல்லாம்  காதல்  வாழ்க , ஜே ஜே , 

 மதராசப்பட்டினம் ,  நாடோடித்தென்றல் , ஒரு  ஊர்ல ஒரு ராஜகுமாரி 

  போன்ற  படங்களெல்லாம்  எந்த  அளவு  உங்களிடம் ஒரு  தாக்கத்தை  ஏற்படுத்தியதோ  அதே  அளவு  அல்லது  அதற்கும்  மேலான  ஒரு  வாழ்வியல்  அனுபவத்தை உங்களுக்குத்தரும்  என்பதில் ஐயம் இல்லை 


ஸ்பாய்லர் அலெர்ட்


ஹீரோ  இந்திய  ராணுவ  வீரர் . அவர் ஒரு  புரோகிராமில்   நான்  நாட்டுக்காக  உழைக்கிறேன்  எனக்குன்னு  யாரும்  இல்லை  என  சொல்றார். உடனே  அந்த  மீடியா  லேடி  இவருக்குக்குரல்  கொடுக்க  யாராவது  இருக்கீங்களா? என  பிட்டைப்போட்டு  விடறார். அது  முதல்  ஹீரோவுக்கு  டெய்லி  ஏராளமான  கடிதங்கள்  வந்து  குவியுது 


 கதை  நடக்கும்  கால  கட்டம் 1965. அதனால  செல் ஃபோன்   டெலிஃபோன்  வசதி  எல்லாம்  இல்லை  கடிதம்  மட்டுமே  தகவல்  பரிமாற்ரத்துக்கு . தினமும்  வரும்  ஏராளமான   கடிதங்களில்   ஒரு  பெண்ணின்  கடிதம் மட்டும் வித்தியாசமா  இருக்கு 


  மற்றவங்க  கிட்டே  இருந்து  வர்ற  கடிதங்கள்  நின்னு  போனாலும்  அந்தப்பொண்ணு  கிட்டே  இருந்து  வர்ற  கடிதங்கள்  நிற்கவே  இல்லை .. இருவருக்கும்  கடிதம்  மூலம்  காதல்  வளருது .ஹீரோ  ஹீரோயினை  நேரில்  சந்திச்சுடறார்


 இடைவேளை  அப்போ   ஒரு  ட்விஸ்ட்  இருக்கு . ஹீரோயின்  யார்  என்ற  உண்மை  வெளிவருவது  ஒரு  ட்விஸ்ட் .  ஹீரோயின்  ஹீரோவை  ஆல்ரெடி  பார்த்திருக்கார்  என்பது  இன்னொரு  ட்விஸ்ட் 


 இதுக்குப்பின்  இவங்க  காதல்  என்ன  ஆச்சு ?  சேர்ந்தாங்களா?   இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ் ல ஒரு  ட்விஸ்ட்டோட  சொல்லப்பட்டிருக்கு 


 ஹீரோவா  துல்கர்  சல்மான் ,  இது  ஒரு  பீரியட்  ஃபிலிம்  என்பதால்  ஆர்ட்  டைரக்சன்  அபார  உழைப்பு  இருக்கு . ஹீரோவின்  நடை  உடை  பாவனைகள்  எல்லாம்  அந்தக்கால  ஆட்கள்  போல  கச்சிதமா  வடிவமைக்கப்பட்டிருக்கு  . சாக்லெட்  பாய்  மாதவன்  போல  காதல்  மன்னன்  ஜெமினி  கணேசன்  போல  நடிப்பில்  கலக்கி  இருக்கார் 


ஹீரோயினாக  மிருணாள்  தாக்கூர்  நம  மனதில்  ஏற்படுத்தும்  தாக்கம்  அருமை . . இவரது  ஆடை  அணிகலன்கள்  அபாரம் , இவரது  உடைகளில்  கண்ணீ யம்  கொடி கட்டிப்பறக்குது . புருவங்கள்  மட்டும்  கொஞ்சம்  ஓவர்  அடர்த்தியோ என  யோசித்துக்கொண்டிருந்தபோது  அந்த  இடைவேளை  ட்விஸ்ட்டில்  அந்த  டவுட்டும்  க்ளியர்  ஆகிடுச்சு .


பாகிஸ்தான்  பெண்ணாக  ராஷ்மிகா  தெனாவெட்டான  நடிப்பு .  இந்தியர்கள்  மீது  வெறுப்பு  உமிழும்  கதாபாத்திரமாக  அறிமுகம்  ஆகி  போகப்போக  அவரது  பாடி  லேங்க்வேஜில்  முகத்தில் மாற்றம்  கொண்டுவருவது  அபாரம் 


 மிலிட்ரி  ஆஃபீசர்களாக  கவுதம்  வாசுதேவ்  மேனன்  , பிரகாஷ் ராஜ்   இருவர்  நடிப்பும்  கச்சிதம் 


  பாடல்கள்  படமாக்கப்பட்ட  விதம்  மணிரத்னம்  பாணி  தெரியுது /. பிரமாதமான  லொக்கேஷன்ஸ்  பிரம்மாண்டமான  காட்சி  அமைப்புகள் .  ஆர்ட்   டைரக்சன்  அருமை  பாடலகள்  வசனம்  மதன் கார்க்கி 


 தெலுங்கு  டப்பிங்  போலவே  தெரியலை  நேரடித்தமிழ்  படம்  போல   அனுபவத்தைத்தருது சபாஷ்  டைரக்டர் ( ஹனுராகபுடி) 


1   முதல்  30  நிமிடங்கள்  படம்  ரொம்ப  ஸ்லோ  அதுக்குப்பின்  ஹீரோ  ஹீரோயின்  காதல்  ஆரம்பமாகும்போது  ஆரம்பிக்கும்  ஆர்வம்  படம்  முடியும்  வரை  ஒரு  சீன்  கூட  போர்  அடிக்கலை 


2   காட்சிகளிஞ்  நம்பகத்தன்மைக்கு  அந்த்ந்த  லைவ்  லொகேஷன்களில்  ஷூட்டிங்  நடத்தியது. பாகிஸ்தான்  ஜெய்ப்பூர்  போன்ற  அவுட்டோர்  லொக்கேஷன்கள்  அள்ளுது 


3   ஹீரோ  பாகிஸ்தான்  மிலிட்ரியிடம்  மாட்ட  அவரது  மனித  நேயம்தான்  காரணம்  ஆகுது . ஒரு  பாகிஸ்தான்  சிறுமியைக்காப்பாற்றுகிறார். சாதாரணமான  அந்த  சீன்   எப்படி  திரைக்கதையில் கனெக்ட்  ஆகுது  என்பதை  அருமையாக  யோசிச்சு  இருக்காங்க 


4  ஹீரோ  ஒரு  தேச  துரோகி  என்ற  தவ்றான  கருத்து  ஆல்ரெடி  ராக்கெட்ரி  ப்டத்தில்  நாம  பார்த்துட்டோம்  என்றாலும்  இதில்  அவர்   மீண்டும்  நல்ல  பேர்  எடுப்பது  கச்சிதமான  ஸ்கிரிப்ட்  ரைட்டிங் 


5  ஹீரோ  ஹீரோயின்  முத்தக்காட்சியோ    தழுவல்  காட்சியோ  இல்லாமலேயே  காதல்  உணர்வை  பிரமாதமா  காட்ட  முடிஞ்சிருக்கு 


ரசித்த  வசனங்கள்  (மதன்  கார்க்கி )

\

1   உனக்கு  பலன்  இல்லைன்னா  நீ  எதுவுமே  செய்ய  மாட்டியே ? 


2   நீ  கோபத்துல  இருந்தாலும்  பொய்  சொல்ல  மாட்டே-னு  தெரியும் 


3    இப்போப்பாரு    மழை  கூட  உன்னைப்போக  வேணாம்னு  சொல்லுது  பாரு 


ஆனா  குடை  போலாம்னு  சொல்லுதே?


4   எங்கிருந்தோ  அவ  வெள்ளம்  மாதிரி  வந்தா  சந்தோசத்துல  என்னை  திக்கு முக்காடச்செய்தா 


5   இந்த   அழகி  பொய்யே  பேசுனாலும்  அது  நிஜம்  ஆகிடும் 


6  ராசா  ஆசைப்பட்டா  ரோசாப்பூவை  வெச்சே  தோசை  சுடுவாங்களாம் 


7  யாராவது  நம்மைப்பார்த்தா  ஆபத்து \ 


ஆபத்தில்  இன்பம்  இருப்பதே   இப்போதான்  தெரியும் \\


8   பொண்ணுங்க  எப்பவும்  நம்மை  நல்லவன்  நல்லவன்னுதான்  சொல்வாங்க  ஆனா  கடைசில ஒரு  முட்டாளைப்போய்   கல்யாணம் கட்டிக்குவாங்க   ( தியேட்டரில்  அப்ளாஸ்  மழை ) 


9   அடடா!  இந்தப்பொண்ணு  இன்னா  கலரு  தெரியுமா? 


  யோவ்  அது  பிளாக்  அண்ட்  ஒயிட்  ஃபோட்டோ 


10    ராம்  கிட்டே  உண்மையைச்சொல்லி தான்  தூரமா  விலகிடலாம்னு  அவ  நினைச்சா  ஆனா    எதையும்  சொல்ல  முடியாம  மனசுக்கு  நெருக்கம்  ஆகிட்டா 


11  நான்  யார்?னு  ராம்க்கு  தெரியப்படுத்தனும்கறதை  விட   உண்மையை  சொல்லிடனும்கற  எண்ணம்  எனக்கு 

\

12   பாகிஸ்தான்  பாசறைல  சிக்கிட்டா  வாழ்றது  சிரமம்  சாகறதுதான்  ஈசி 


13  ராம்  தப்பு  செஞ்சானா? இல்லையா?னு  தெரில  ஆனா  சீதா  தண்டனை அனுபவிச்ட்ட்டு  இருக்கா 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் \\ 


  நம்ம  மனசுக்குப்பிடிச்சவங்க  , நெருக்கமானவங்க  ஏதாவது  தப்பு  பண்ணுனா  நமக்கு  அது  பெருசாத்தோணாது  அது  மாதிரி தான் இது  என்  மனசை  மிகவும் கவர்ந்ததால  சின்னச்சின்ன  மிஸ்டேக்சை  பெருசுபடுத்தலை


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரெண்டே  முக்கால்  மணி  நேரம்  ஓடும் படத்துல  முதல்  30  நிமிடங்கள்  ஸ்லோ  அதுக்குப்பின்  விறு விறுப்பு  . இடைவேளை  ட்விஸ்ட்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட் . பாடல்கள்  படமாக்கப்பட்ட  விதம்  ஆர்ட்  டைரக்சன்  நடிப்பு  என  பல  அம்சங்கள் பிர்மாதம். தியேட்டரில்  பார்க்கலாம்,. ஒர்த் .   டப்பிங்  படங்களுக்கு  ஆனந்த  விகடன்  விமர்சனம்  போடாது மீறி  போட்டா  மார்க்  50   ரேட்டிங்  3.25 / 5 

0 comments: