Friday, August 12, 2022

விலாங்கு மீன் (1985) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


ஸ்பாய்லர்  ;அலெர்ட்


ஹீரோ ஒரு  கிரிமினல்  லாயர் . எந்த  வழக்குல  ஆஜர்  ஆகி  வாதாடினாலும்  ஜெய்ச்சிடுவாரு . பணம்  தான்  அவருக்கு  முக்கியம் . அவரு  காலேஜ்  படிச்சப்போ  அவர்  கூட படிச்ச  ஒரு  ஃபிரண்ட்  இப்போ  இன்ஸ்பெக்டர் . இப்பவும்  இருவரும்  நண்பர்கள்  தான்


 காலேஜ்   படிக்கும்போது  ஒரே  பெண்ணை  இவங்க  ரெண்டு  பேரும்  ப்ரப்போஸ்  பண்றாங்க . நீங்க  நல்லா  கவனிங்க  பொண்ணுங்க  வாழ்க்கைத்துணையைத்தேடும்போது   நல்லவனை  விட்டுட்டு  கரெக்டா  கெட்டவன் கிட்டே  தெரியாம  மாட்டிக்குவாங்க . அதன்  படி  அந்தப்பொண்ணு  ஹீரோவை  மேரேஜ்  பண்ணிக்கறா.


 ஹீரோவுக்கு  நிஜமா  அந்தப்பொண்ணு  மேல  லவ்  எல்லாம்  இல்லை  ப்ணக்காரி  என்பதால்  சொத்துக்கு  ஆசைப்பட்டுதான்  மேரேஜ்  பண்றான். சொத்தெல்லாம்  ஹீரோ    பேருக்கு  மாத்துது  அந்தப்பொண்ணு .


 அப்போ  போலீஸ்  ஆஃபீசர்  அந்தப்பொண்ணை  எச்சரிக்கறார். உன்  புருசன்  நல்லவன்  இல்லை  உன்னையே  போட்டுத்தள்ளுனாலும்  ஆச்சரியப்படுவதற்கு  இல்லைங்கறார்


ஹீரோ  ஒரு  கிரிமினல்  லாயர்ங்கறதால  மனைவியைக்க்கொலை  பண்ணாம  அவ  தற்கொலை  செஞ்ச மாதிரி  டிராமா  செட்  பண்றார்


 மனைவியை  ஒரு  இடத்தில்  மறைச்சு  வைக்கிறார்.  இந்த  கேஸ்  தற்கொலைனு  க்ளோஸ்  ஆகிட்டா  மனைவியை  க்ளோஸ்    பண்ணிக்கலாம்னு  ஐடியா


 இன்னொரு  பெண்  நாட்டியம்  ஆடும்  பெண்  அந்தப்பெண்ணை  லவ்  பண்றாரு. இவ்ருக்கு  மேரேஜ்  ஆகிடுச்சுனு  அவருக்கு  தெரியாது 


இப்போ  ஹீரோ  ஜெயிச்சரா?  போலீஸ்  ஆஃபீசர்  அவரை  பிடிச்சாரா?  மனைவி  கதி  என்ன?  காதலியா  இருந்தவ கதி  என்ன ? இவற்றை  வெண்  திரையில்  அல்லது  யூ  ட்யூப்ல  காண்க 


ஹீரோவா  ஹரி பிரசாத். ஆள்  ஹீரோ  மாதிரி  இருக்கீங்க பந்தாவா  கூலிங்  கிளாஸ்  போட்டுக்குங்க  செமயா  இருக்கும்னு  யாரோ  உசுப்பேத்தி  விட்டிருக்கனும்  கோர்ட்ல  வாதாடும்போது  நைட்  டைம்ல  யாருமே  இல்லாத  காட்டுல  இப்படி  எப்போப்பாரு  கூலிங்க்  கிளாஸ்  போட்டுட்டே  வர்றாரு. இவரு  இதுக்குப்பின்  என்ன  ஆனாருனு  தெரில  நடிப்பு  ஓக்க்கே  ரகம் 


போலீஸ்  ஆஃபீசரா  நிழல்கள்  ரவி  கச்சிதமான  நடிப்பு  அதிக  வேலை  இல்லை 


 மனைவியா  சுலக்சனா . அப்பாவித்தனாம  நடிப்பு ஓவர்  அப்பாவித்தனமா  கேரக்டர்  ஸ்கெட்ச்  அமைச்சுட்டாங்களோனு  சில  சமயம்  தோணுது  ஜூலி  க்ணபதி  சரிதா  கேரக்டர்  இதைப்பார்த்துதான்  உருவாக்கி  இருக்கனும் 


காதலியா பூர்ணிமா  ( பூர்ணிமா  ஜெயராம்  அல்ல).  காதல்  வ்சப்படும்  காட்சிகளில்  நடிப்பு  குட்.


 இசை  ஒளிப்பதிவு  எல்லாம்  சுமார்  ரகம் தான் .அன்பே  மழை  வந்து  தீயை  மூட்டுதே  என்ற  ஒரு  ஹிட்  பாட்டு  இருக்கு 

 இயக்கம்  பி  ஜெயதேவி  இதுவரை  கேள்விப்படாத  பேரு . பெண்  இயக்குநர்  ஆச்சரியம்தான் .  எந்த  ஃபாரீன்  படத்துல  இருந்து  உருவுனாங்களொ  தெரியல . ம்னைவியைக்கொலை  செய்யாம  மறைச்சு  வெச்சு  தற்கொலை  கேஸ்  நடத்தற  ஐடியா  புதுசா  இருக்கு 


விறுவிறுப்பான  திரைக்கதை  தான் 


ரசித்த  வசனங்கள்


1    எந்தத்தொழில்  செஞ்சாலும்  அதுல  இருகக்ற  நெளிவு  சுளிவு  தெரிஞ்சுக்கனும், அப்போதான்  பணம்  பண்ண  முடியும் 


2   பணம்  பண்றதுக்கு  மனசாட்சி  தேவை  இல்லை 


3  என்ன  குளுருதா?


ஆமா, உங்களுக்கு?


 எனக்கு  குளிர்  விட்டுப்போய்  ரொ,ம்ப நாள்  ஆச்சு 


 லாஜிக் ,மிஸ்டேக்ஸ் 


1  மனைவியைக்காணோம்னு  ஹீரோ  போலீஸ்க்கு  ஃபோன்  போட்டு  சொல்றார். போலீஸ்  விசாரணைக்காக  ஹீரோ  வீட்டுக்கு  வருது . ஏதாவது  தடயம்  கிடைச்சுதா?னு  ஹீரோ  கால்  மேல  கால்  போட்டுட்டு  தம்  அடிச்ட்டே  கேட்கறாரு. போலீஸ்  அவர்  வீட்டு  வேலைக்காரனா?  இல்லை  ஹீரோதான்  ப்டத்தோட  புரொடியூசரா? 


2   ஹீரோ ஒரு  கிரிமினல்  லாயர் . புகழ்  பெற்ற  ஆள்  மீடியாவில்  அவர்  பேரு  அடிக்கடி  வருது  ஆனா  அவர்  ஆல்ரெடி  மேரேஜ்  ஆனவர்னு  ஹீரோயினுக்கு  தெரியாம  போறது  எப்படி ? 


3   தற்கொலைக்கடிதம்  கைப்படதான்  எழுதுவாங்க . டைப்  பண்ணி  வைப்பதை  இப்போதான்  கேள்விப்படறேன்


4   தற்கொலை  லெட்டரை  போலியா  ரெடி  பண்ற  ஹீரோ  சாவகாசமா  வீட்டில்  இருக்கும்  டைப்  மிஷினிலேயே  அடிக்கலாமே? ஏன்  ஆஃபீஸ்  டைப்  மிஷின்ல  அடிச்சு  மாட்றார் ? (  மிஷின்  ரிப்பேர்னு  ஒரு  சமாளிஃபிகேஷன்  வேற )


5  ஹீரோவோட முதல்  மனைவி  முழு  உடல்  ஆரோக்யத்தோட இருக்கார்  எதுக்காக  அவர்  சொத்துக்களை  கணவர்  பேருக்கு  எழுதி  வைக்க  வக்கீலை வரச்சொல்றார்? பொதுவாவே  பெண்கள்  பேருல  சொத்து  இருப்பதுதான்  பாதுகாப்புனு பொண்ணுங்க  நினைப்பாஙக்ளே? ஒரு  வீடு  வாங்கறதா  இருந்தாலும்ம் மனைவி  பேருலதான்  வாங்குவாங்க . அப்படி  இருக்கும்போது மனைவி  பேருல  இருக்கும்  சொத்துக்க்ளை  கணவன்  பேருக்கு  மாற்ற  வேண்டிய  தேவை  என்ன? 


6  கணவன்  தன்னைக்கொல்லப்போறான்னு  மனைவிக்கு  தெரிஞ்சதும்  மனைவி  தன்  காலேஜ்  மேட்டும்  இன்ஸ்பெக்டருமான  நிழல்கள்  ரவிக்கு  ஃபோன்ல  சொல்லி   இருக்கலாமே?


7  ஹீரோவை  காரில்  பின்  தொடரும்   ஹீரோயின்  தன்  கார்லயே  ஃபாலோ  பண்றாரே? ரிவர்யூ  மிரர்ல  ஹீரோ  பார்த்துட  மாட்டாரா? பொதுவா  பொண்ணுங்க புத்திசாலிங்க,    வேற  ஒருவரோட கார்லதானே  ஃபாலோ  பண்ணனும்? 


6  கிரிமினல்  லாயரான  ஹீரோ  தன்  திட்டத்தை கொலை  செய்யப்போகும்மனைவியிடம்  லூஸ்  மாதிரி  எதுக்கு  ஒப்பிக்கறார்? சப்போஸ்  மனைவி  தப்பிச்சா  அவரோட ஒப்புதல்  வாக்குமூலம் போலீஸ்க்கு  தெரிஞ்சிடும்னு  அவருக்கு  தெரியாதா?


7  கொடைக்கானல்  சூசைடு  பாயிண்ட்க்கு  வீல்சேரோட  ஒரு  பெண்  எப்படி  வர முடியும்?இந்த  பாயிண்ட்டை  டேலி  பண்ணாம  எப்படி  அந்த கேஸ்  சூசைடுனு  முடிவு  பண்றாங்க ?

8  பணக்காரப்பொண்ணுங்களை  எப்படி  வலைல  வீழ்த்துவது  என்பது  எனக்குதான்  தெரியும்னு  ஹீரோ  ஃபிரண்ட்  கிட்டே  ஓட்டை  வாயை  வெச்சு  உளர்றார். இதை  அப்படியே  அந்த  பணக்காரப்பெண்ணிடம்  அவர்  சொல்லிட்டா  என்ன  ப்ண்ண?னு  யோசிக்கலையா? 


9  ஹீரோ  தன்  சொந்த வீட்டில்  நைட்  டைம்ல  கூலிங்க்  கிளாஸ்  போட்டுட்டு  சுத்தறார்  சரி   நைட்  க்ளப்ல  கேப்ரே  டான்ஸர்  கூட  ஆடும்போதும்  எதுக்கு  கூலிங்  கிளாஸ்? வெயீலுக்கு  பைக்ல  போகும்போது  போடத்தானே  கூலர்ஸ்?

10   ஓப்பனிங்  சீன்ல  தன்  மகனைக்கொன்னவனை  அடையாளம்  காட்டும்  அப்பாவிடம் குறுக்கு  விசாறணை  செய்யும்  வக்கீல்  அன்னைக்கு  அமாவாச  கர்ண்ட்டும்  இல்லை  நிலா  வெளிச்சமும்  இல்லைனு  வாதாடி  ஜெயிக்கிறார்., புது  ஆளை  அடயாளம்  காட்டுவதுதான்  சிரமம்  ஆல்ரெடி  பழகிய  ஆள்  குரல்  உருவ  அவுட்  லைனை  வெச்சு  இன்னார்தான்  என  சொல்லலா,ம்னு  ஜட்ஜூக்கு  தெரியாதா?


11   ஹீரோ  தன்  மனைவியை  அடைச்சு  வெச்சிருக்கற  வீட்ல  கரண்ட்  லைன்  எடுக்க  வரும்  ஆள்  வீட்ல  மெயின்   ஸ்விட்ச்  எங்கே  இருக்குனு  தேடறார்  அவருக்கு  தெரியாது ஓக்கே  ஹவுஸ்  ஓனர் ஆன  ஹீரோவுக்குமா? தெரியாது ?

12    ஹீரோ  தன்  மனைவிக்கு  தர  இருக்கும்  ஸ்லோ  பாய்சனை  ஒரு  பாட்டில்ல  வெச்சு  பக்கத்துல  இங்க்  ஃபில்லரும்  வெச்சுட்டுப்போவாராம்  மனைவி  அதை  கீழே  ஊத்திட்டு  தண்ணி  பிடிச்சு  வைக்குமாம். அது  ஹீரோவுக்கு  தெரியாதாம் . எந்த  ஊர்ல  விஷம்  தண்ணி  மாதிரி  இருக்கு >


13  டெட்பாடியை  கார்  டிக்கில  வெச்சுட்டுபொபோனாலே  ஆபத்து  அந்த கேனம்   கார்  பேக்  சீட்ல  வெச்ட்டுப்போகுது 


14   டெட் பாடியை  மெத்தைக்குள்ளே  கவர்  பண்ணி  கொண்டு  போகும்  ஹீரோ  ஆத்துத்தண்ணில  அதை  விடும்போது  அந்த  டெட்  பாடி  முகத்தை  செக்  பண்ண  மாட்டாரா?


15  எந்த  தப்புமே  செய்யாத  பூர்ணிமாவை  சுலக்சனா  எதுக்காக  கொலை  பண்றாங்க? ( தனக்கு சக்களத்தியா  வர  இருப்பவ  என  காரணம்  இருந்தாலும்    ஹீரோவுக்கு  மேரேஜ்  ஆகிடுச்சுனு  பூர்ணிமாவுக்கு  தெரியாதே?


16  க்ளைமாக்ஸ்ல  சுலக்சனா  நிழல்கள்  ரவி  கிட்டே  இருந்து  துப்பாக்கியை  பிடுங்கி  ஹீரோவை  5  தடவை  சுடறாரு. போலீஸ் ஆ-னு  வேடிக்கை  பார்க்குது , முதல்  குண்டு  வெடிச்சதும்  டக்னு  அதை  பிடுங்க  முயற்சி  பண்ணலாமே?


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  ரிலீஸ்  ஆன  டைமில்  பரபரப்பா  பேசப்பட்டது . இப்போ  பார்த்தாலும்  இண்ட்ரஸ்ட்டாதான்  இருக்கும்  யூ  ட்யூப்ல  கிடைக்குது   ரேட்டிங் 2.25 /5 

0 comments: