Sunday, August 28, 2022

DELHI CRIME -2 (ஹிந்தி) -( 2022 ) - வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ) @ நெட்ஃபிளிக்ஸ்

 


இந்த வெப் சீரிஸின் முதல்  பாகம்  யாராவது  பார்க்காம  இருந்தா முதல்ல  பார்த்துடுங்க  ஏன்னா எல்லாருக்கும்  தெரிஞ்ச  டெல்லி  நிர்பயா  கேஸ் தானே? அதுல  புதுசா  சுவராஸ்யமா  என்ன  இருக்கு?னு ஒரு  வருசம்  அதை  பார்க்காம  விட்டுட்டேன். ஆனா  இந்தியாவின்  சிறந்த  வெப்  சீரிஸ்  விருது  வாங்கிய  பின் தான்  பார்த்தேன். பிரமாதமான  நுணுக்கமான  வழக்கு  விபரங்கள் ஆளுங்களைப்பிடிக்க  போலீஸ்  எவ்ளோ  கஷ்டப்பட்டாங்க? என்ன  உத்தியைக்கடைப்பிடிச்சாங்க? பொதுமக்கள்  எதிர்ப்பு   மீடியாக்கள் அத்து  மீறல்னு  டீட்டெய்லிங்க் அருமையா  இருந்தது


இதுல  லீடு ரோல் பண்ணிய  நாயகியின்  மாறுபட்ட  காமெடி  நடிப்பைக்காண  இதே  நெட் ஃபிளிக்சில்  ரிலீஸ்  ஆன டார்லிங்க்ஸ்  பாருங்க . அதுல  சீன்  பை  சீன்  சிரிச்சுட்டே  இருப்பாங்க . இதுல  ஒரு  சீன்  கூட  சிரிக்க  மாட்டாங்க / இதே  போல  தமிழில்  சத்யராஜ் கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு , ரஜினி  தளபதி ( ராக்கம்மா  கையைத்தட்டு . காட்டுக்குயிலு பாடல்கள்  விதி விலக்கு ) விஜயகாந்த்  சத்ரியன் , சிவகார்த்திகேயன் டாக்டர்  படங்களில்  பண்ணி  இருக்காங்க . இதுல  அபூர்வமான  ஒற்றுமை  என்னான்னா எல்லாப்படங்களூம்  ஹிட் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


டெல்லில ஒரு  குறிப்பிட்ட  ஏரியாக்களில்  வயசான  தம்பதிகள்  கொடூரமா  கொலை  செய்யப்படறாங்க . கொள்ளை  திருட்டு  நடக்குது .  போலீஸ்க்கு  அதிரிச்சி . ஏன்னா  1990களில்  இது  மாதிரி  கச்சா  பனியன்  கேங் உருவாகி  இருந்தது . அவங்க  குறிப்பிட்ட  பழங்குடி  இனத்தைச்சேர்ந்தவங்க 2002  வரை  அப்படி  சம்பவங்கள்  நடந்தது , ஆட்களைப்பிடிச்சாச்சு. இப்போ  அவங்க  மறுபடி  வந்துட்டாங்களா? இல்லை  அவங்க  வாரிசுகள்  களம்  இறங்கி  இருக்காங்களா?னு  தெரில 


 அதனால  1990 ல்  இந்த  கேசை  டீல்  பண்ணுன  போலீஸ்  ஆஃபீசர்  உதவி  தேவைனு  ஹீரோயின்  நினைக்கறாங்க .   ஹீரோயின்  ஒரு  பொலீஸ்  டிஐஜி  என்பதால்  அவங்க  ஆணைக்கு  கட்டுப்பட்டு  உதவி  செய்ய  அவர்  சம்மதிக்கிறார்


 அவரது  வழிகாட்டுதல்படி  அந்த  குறிப்பிட்ட பழங்குடி  மக்கள்  வசிக்கும்  பகுதி  ரவுண்ட்  அப்  செய்யப்பட்டு  சந்தேகத்துக்கு  இடமான  ஆட்கள்  அவங்க  குடும்பம்  எல்லாத்தையும்  போலீஸ்   வேன்ல  ஏத்திட்டு  வந்துடறாங்க அவங்களில் ரெண்டு  பேரு  மெயின்  சஸ்பெக்ட்டா இருக்காங்க . சம்பவம்  நடந்த  அன்னைக்கு  அவங்க   வேற  ஒரு  வீட்ல ஒரு  பணக்காரர்  வெச்சிருந்த  30  லட்சம்  ரூபா  பிளாக்  மணியைக்கொள்ளை  அடிச்சிருக்காங்க . ஆனா  இந்த  வயதான  தம்பதிகளைக்கொலை  செஞ்சது  இவங்களா?  என்பது  சரியா  தெரில . ஆதாரம்  சிக்கலை 


 அதுக்குள்ள  மீடியாக்கள்  தூண்டுதலால்  மக்களிடையே குறிப்பிட்ட  இன  மக்களை  போலீஸ்   அடக்கப்பாக்குது அப்டினு  ஜாதி  ரீதியா  பிரச்சனையைக்கிளப்பறாங்க . மக்கள்  கவனம்  கவர்ந்த  கேஸ்  என்பதால்  அதை  சீக்கிரம்  க்ளோஸ்  பண்ண  ஹீரோயினுக்கு  மேலிட  பிரஷர்  வருது 


முதல்  3  எபிசோடு  முடியறப்ப  ஒரு  ட்விஸ்ட்  வழக்கில்  உருவாகுது 


இங்கே  அப்டியே  கட்  பண்றோம். கதைப்போக்கை  குற்ரவாளிகள்  பக்கம்    திருப்பறோம் \


  வில்லி  ஒரு  பியூட்டி  பார்ல  ஒர்க்ல்  பண்றா. அங்கே  வர்ற  கஸ்டமர்ஸ்  கிட்டே  நல்லா  பழகறா. இவளுக்கு  ஆல்ரெடி  மேரேஜ்  ஆகி  ஒரு  குழந்தையும் இருக்கு , ஆனா  வசதியான  வாழ்க்கை வாழ  ஆசைப்பட்டு  அவங்களை  விட்டுட்டு தனியா  வந்துடறா


 வில்லிக்கு  ஒரு கள்ளக்காதலன்  , அவனுக்கு  ஒரு  நண்பன், நண்பனின்  நண்பன்  என  மொத்தம்  இப்போ 4 பேரு . இவங்க தான் கொலை  கொள்ளை  செய்யும்  டீம், இவங்க  திட்டப்படி  கொள்ளை  கொலை  சம்பவம்  பண்ணப்போறப்போ  உடம்பு  பூரா  ஆயில்  தடவிக்குவாங்க . இது 1990 களில்  அந்த  கச்சா பனியன்  கேங்  கடைப்பிடிச்ச  ஒரு  உத்தி . யாராவது  அவங்களைப்பிடிக்க  வந்தா ஆயில்  நழுவி  வழுக்கி  விட்டு  எஸ்  ஆகிடலாம்கறது  பிளான் 


இந்த  டீம்ல  இருக்கற  ஆட்கள்  புது  ஆட்களா? ஆல்ரெடி  கைது  செய்யப்ப்ட்ட  இரு  நபர்களா? என்பது  சஸ்பென்ஸ்.  


 இவங்களை  ஹீரோயின்  எப்படிப்பிடிச்சாங்க  என்பது  தான்  திரைக்கதை 


 ஹீரோயின்  நடிப்பு  பிரமாதம் . போலீஸ்  மிடுக்கு  கூடவே  அப்பப்ப  தன்  மகள்  உடன்  ஃபோனில்  உரையாடல்  என  நடிப்பில்  சிக்சர் தான் 


 வில்லியாக  வருபவர்  நடிப்பு  ஓக்கே    ஆனா  அவர்  சராசரி  பெண்  மாதிரி  காட்டி  இருக்காங்க  படையப்ப்பா  நீலாம்பரி  ரம்யா  கிருஷ்ணன்  மாதிரி  மன்னன்  விஜயசாந்தி  மாதிரி  சந்திரமுகி  ஜோதிகா  மாதிரி  டெரரா  காட்டி  இருந்தா  இன்னும்  கலக்கலா   இருந்திருக்கும்   அட்லீஸ்ட்  பச்சைக்கிளி  முத்துச்சரம்  ஜோதிகா  வில்லியா  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  சீன்ல  கலக்குன  மாதிரி  பவர்  ஃபுல்லா  காட்டி  இருக்கலாம்


மற்ற  நடிகர்கள்  அனைவர்  நடிப்பும்  குட் . ஒளிப்பதிவு  எடிட்டிங்  இசை  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  குட் 


 மொத்தம் 5  எபிசோடுதான் அஞ்சும்  தலா 40  நிமிடங்கள்  டோட்டலா  200  நிமிடங்கள் 


ரசித்த  வசனங்கள் 


1  மிலிட்ரிக்காரன்  என்னைக்காவது  யாராவது  எங்காவது  குண்டா  இருந்து  பார்த்திருக்கியா?  (  அதே  மாதிரி  பனை மரம்  ஏறுபவர்  விறகுவெட்டி , கூலி  வேலை  செய்யும்  போர்ட்டர்கள்  ஃபிட்  பாடியா  இருப்பாங்க ) 


2   பசி  எடுக்கும்போது  நீ  கோபப்படறே , கோபப்படும்போது  நீ  ரொம்ப  அழகா  இருக்கே ? 


3   டெட் பாடி  போற ஸ்ட்ரெச்சர்ல  நீங்களும்  ட்ராவல்  பண்ணலாம்  ஆனா  போர்வையை  நீக்கி  அவங்க  முகத்தை  மட்டும்  பார்த்துடாதீங்க  , என்னா  பிற்காலத்துல  உங்க  மனசு பூரா  கடைசியா  பார்த்த  அந்த  கோரமான  முகமே  நினைவில்  இருக்கும் . நல்ல  விஷயங்கள்  தான்  நினைவில்  இருக்கனும் 


4    மேடம், இந்த   உதவியை  நான்  செஞ்சா  எனக்கு  மெடல்  கிடைக்குமா? 

 ட்யூட்டியை  சரியா  செஞ்சாலே  அது  மெடல்  வாங்குனதுக்கு  சமம் தானே? 


5   என்  வாழ்க்கை  பூரா  போலீஸ்  ஸ்டேஷன்லயே  முடிஞ்சிடுச்சு . பெருசா  நான்  எதும்  எதிர்பார்க்கல. எனக்கு  உண்டான  மரியாதை  மட்டும்  கிடைச்சாப்போதும் 


6   நல்லதா  நினைக்கறதால  மட்டுமே  நமக்கு  நல்லது  நடந்துடும்னு  சொல்லிட  முடியாது


7  குற்றவாளிகளின்  வாழ்க்கைல  சில  சமயங்களில்  ஓடுவதை  விட  ஒளிஞ்சுக்கறதுதான்  சேஃப்டி 


சபாஷ்  டைரக்டர் 

1    டெல்லியில்  நடந்த  இன்னொரு  உண்மை  சம்பவம்  உண்மையான  வழக்கை   கம்ர்ஷியலாக  தந்த  விதம் . போன  எபிசோடு  7  எபிசோடு  அது  ஹிட்டு  இந்த  எபிசோடும்  அதே  மாதிரி  இழுத்துடுவோம்னு  பண்ணாம  கச்சிதமா  கதைக்குத்தேவைப்பட்ட  நீளத்தை  கச்சிதமா  தந்த  விதம்


2  இந்த  வழக்கில்  இருந்து  உங்களை  விடுவிக்க  எல்லாரும்  தலா ரூ 15000  தரனும்  என ஒரு  புல்லுருவி  போலீஸ்  லஞ்சம்  கேட்பதை  வெளிக்கொணரும் விதமும்  அந்த  இடத்தில்  கேஸ்  ஒரு  டர்னிங்  பாயிண்ட்  எடுக்கும் விதமும் 


3   ஒரு  ஐபிஎஸ்  ஆஃபீசரே  குற்றவாளியைப்பாதுகாக்கும்  பணீயில்  இருக்கும்போது  செல் ஃபோனில்  மெசேஜ்  பார்ப்பதும்  அப்போ  அவர்கள்  தப்பிப்பதும்  அதைத்தொடர்ந்து  வரும்  நெருக்கடிகளும் 


4  போலீஸ்  ஆஃபிசிஅரைக்காதலிக்கும்போது  ஒரு  முகம்  கல்யாணம்  ஆனபின்  ஒரு  முகம்  என  காட்டும்  மிலிடிரிகாரரின்  குணத்தை  வெளிப்படுத்திய  காட்சி    மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்க  வைத்தது 


5  போலீஸ்  டிபார்ட்மெண்ட்லயே  ஒரு  புல்லிருவி  மீடியாக்களுக்கு  நியூஸ்  சப்ளை  செய்வதை  ஹீரோயின்  கண்டுபிடிப்பதும்  அதை  டீல்  செய்யும்  விதமும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , இயக்குநருக்கு  சில  ஆலோசனைகள் 


1  போலீஸ்  டவுன்  டவுன்  ஒழிக  கோஷங்கள்  ,  மீடியாக்களை  இங்கே  அனுமதிக்காதீங்க  போன்ற  க்ளிஷே  காட்சிகள்  முதல்  செசன்ல  வந்த  மாதிரியே  இப்பவும்  வருவது  கொஞ்சம்  சலிப்பு . தவிர்த்திருக்கலாம் 


2   ஹீரோயினின்  மகள் ஃபோன்  உரையாடல் ,  ஹீரோயின்  கணவர்  உடனான  ஃபோன்  உரையாடல்    இதெல்லாம்  ஸ்பீடு  பிரேக்கர்கள் \\


3  ஒரு  ஐபிஎஸ் ஆஃபீசர்  ஒரு  லேடி  கான்ஸ்டபிள்  போல  டம்மியாக  ஒரு  பேஷண்டுக்கு  பாதுகாப்பாக  இருப்பது  ஏன்?


4  போலீஸ்  ஐபிஎஸ்  ஆஃபீசர்  அவரது  காதல்  கணவர் , மாமியார்  , டூர்  , லீவ் , காரசார  விவாதம்  இவை  எல்லாம்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதவை 


5  கோடிக்கணக்கில்  கொள்ளை  அடிக்கும்  சாமார்த்தியம்  உள்ள  வில்லி  பியூட்டி  பார்லர்  நடத்த  பீளான்  போடுவது  எதுக்கு ? பெங்க்ல  போட்டு  வெச்சா  வட்டியே  அள்ளுமே? 


6  வில்லி  இன்னொருவர்  ஐடெண்ட்டிட்டில  வாழ்வது  புதுமையான  காட்சிதான்  ஆனா  சாத்தியம்  கம்மி 


7  பெரிய  தொகை  கொடுத்து  ஒரு  இடத்தை  விலைக்கு  வாங்கும் வில்லி  பின்னாளில்  அதை  வெச்சே  போலீஸ்  டிராக்  பண்ணுவாங்க  பிடிப்பாங்க  என்பதை  ஏன்  உணரவில்லை |?


8   வில்லி , காதலன்  இருவருக்குமிடையே  கருத்து  மோதல்  வருவது  ஒருவரை ஒருவர்   தாக்குவது  போன்ற  காட்சிகளில்  இன்னும்  நம்பகத்தன்மை  தேவை 


  சி பிஎ ஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  என்றாலே  ஸ்லோவாகத்தான்  போகும் . முதல்  3  எபிசோடு  ஸ்லோ  லாஸ்ட் 2   செம  ஸ்பீடு . பார்க்க  நினைக்கும்  ஆட்கள்  பார்க்கலாம்.  ரேட்டிங் 3 / 5 


டிஸ்கி 1 -  பொதுவாக  நான்  வெப்  சீரிஸ்  அதிகம்  பார்ப்பதில்லை . காரணம்  டைம் ஃபுல்லா  வேஸ்ட்  ஆகும். ஒரு  சினிமான்னா   ரெண்டு  மணி  நேரத்தில்  முடிச்சிடலாம் . வெப்  சீரிஸ்னா 5  மணி  நேரம் . 7  மணி  நேரம்  ஆகுது . அந்த  டைம்க்கு  3  சினிமா  பார்த்துடலாம். வெப் சைட்டில்  அதிக  ஹிட்ஸ்  கிடைப்பதும்  அதுக்குத்தான். நாட்டுத்தக்காளி  வாங்குனா  கிலோ  50  ரூபா  செலவாகுது  பெங்களூர்த்தக்காளின்னா  கிலோ 10  ரூபாய்க்குக்கிடைக்குதுனு  எல்லாரும்  இப்படிக்கணக்குப்பார்த்து  நாட்டுத்தக்காளி  வரத்தே  இல்லாமப்போன  மாதிரி  ஆகிடுச்சு 


டிஸ்கி 2  =  பதிவில்  வரும்  கமெண்ட்ஸ்க்கு  பதில்  போட  சோம்பேறித்தனப்பட்டு   என்  மகளிடம் பொறுப்பை  ஒப்படைத்ததில்  ஒரு  சிக்கல் . ஆண்கள்  பதிலுக்கு  எல்லாம்  ப்ளூ  லைக்கும்  பொண்ணுங்க  பதிலுக்கு  ஹார்ட்  சிம்பலும்  போட்டுடுச்சு . அதுல  என்ன  சிக்கல்? அது  தனிப்பதிவாப்போடறேன்

0 comments: