Thursday, October 01, 2020

கிளிஞ்சல்கள் (1981) - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி )
டி ராஜேந்தர்  தன்னோட  படங்கள்  மட்டுமல்லாமல்  வெளியார் படங்களுக்கும் பாடல்கள் ,  இசை  அமைச்சுத்தந்தார் . எனக்கு நினைவு    தெரிஞ்சு  சுரேஷ்- நதியா  நடிச்ச  பூக்களை  பறிக்காதீர்கள்  பாடல்கள்  செம  ஹிட். அப்போவே அதை  பார்த்தாச்சு , மிஸ்  ஆன  படங்களில்  இதுவும் ஒன்று


பசி  புகழ்  துரை  இயக்கிய கமர்ஷியல்  சக்சஸ்   படங்களில்  இதுவும் ஒன்று . இந்தப்படம் மாங்கு மாங்கு என்று ஓடியது வரலாறு .மோகனின்  முதல்  படம்  கன்னட  கோகிலா. தமிழில்  முதல்  படம்  மூடுபனி  கெஸ்ட்  ரோல்,  நெஞ்சத்தைக்கிள்ளாதே  அடுத்த  படம். முழு முதல்  தமிழ்ப்பட  ஹீரோ  இதில் தான் 

 

ஹீரோ  ஒரு ஜவுளிக்கடைல  துணி  எடுக்கும்போது  அதே  உடையை  எடுக்க  வரும் நாயகி முதல் முதலா  சந்திக்கறாங்க . மோதலில்  ஆரம்பிக்கிறது  இந்த சந்திப்பு , பிறகு நாயகியின் தோழிகள்  நாயகனை  அப்பப்ப   டீஸ்  பண்ண  ஹீரோ  பொறுமையா  அசடு  வழிஞ்சு  பம்மறார். ஹீரோயினுக்கு  அது பிடிச்சிடுது

 

நாயகியின்  தோழியோட அண்ணன்  ஒருத்தன்  ஒரு தலைக்காதலா  நாயகியை  விரும்பறார். தன் தங்கை  மூலமா  நாயகியிடம்  தன் காதலை  வெளிப்படுத்த  முயற்சிக்கறார், ஆனா  நாயகி கண்டுக்கலை

 

ஒரு கட்டத்தில்;  நாயகி , நாயகன்  இருவரும்  பரஸ்பரம்  தங்கள்  காதலை  வெளிப்படுத்திக்கறாங்க. நாயகன் இந்து , நாயகி  கிறிஸ்டியன்.

 

 இரு தரப்பு  வீட்டிலும்  விஷயம்  தெரிய  வருது . வழக்கம்  போல இரு தரப்பும் எதிர்ப்பு .  செல்  ஃபோனோ  நவீன  சாதங்களோ  இல்லாத  கால  கட்டத்துல  இவங்க  காதல்  என்ன  ஆச்சு? இணைந்தார்களா? பிரிந்தார்களா?  என்பதை  திரையில்  அல்லது  யூ  ட்யூபில்  காண்க

 

ஹீரோவா  மோகன் . பாடகரா  இல்லாம  நார்மல்  ஆளா   வர்றார். அவருக்கு  ஏற்ற  வேடம்,  வெட்டியா  ஊர் சுத்திட்டு  ஒரு பொண்ணை  லவ் பண்ற  ரோல் தானே? செம ஈசி . நல்லா  பண்ணி  இருக்கார் . இவரோட  கேரக்டர்  ஸ்கெட்சில்  ஒரு குழப்பம். ஓப்பனிங்  சீனில்  நாயகியிடம்  சண்டை  போடுபவர்  முகம்  பார்த்து  சரியான  முசுடு  புடிச்ச  கேரக்டர்  என  நாம் நினைத்தால்  அடுத்தடுத்த  காட்சிகளில்  தோழிகளிடம், நாயகியிடம் அசடு வழிகிறார்

 

நாயகியாக பூர்ணிமா , கச்சிதமான  நடிப்பு . இவரது  முகம்  மிக   சாந்தமானது . நடிப்பு அலாதியானது . குழந்தை  மூலமாக  காதலை  பகிர்வது  , முத்தங்களை  அனுப்புவது  ரசனையான  காட்சிகள்

 

ஒரு தலைக்காதலராக  திலீப். திடீர்னு  இவரை  வில்லனாக ஆக்கிடுவாங்களோ?னு பயந்தா   அவர்  காதலுக்கு  துணை  போகும்  பாசிட்டிவ் கேரக்டர்

 

நாயகன் , நாயகி  இருவரின்  பெற்றோர்  நடிப்பும்  கன கச்சிதம்., சொல்லி வெச்சது  மாதிரி  இருவருடைய  அப்பாக்களும்  காதலை தீவிரமாக எதிர்ப்பவர்களாகவும் , அம்மாக்கள்   பாசமாக   இருப்பதாகவும் அமைத்தது  யதார்த்தம்

 

நச்  வசனங்கள்

 

1          இல்லாதவங்க  விஷயத்தில்  நான்  கணக்கு  பார்ப்பதில்லை

2          அப்பா , நீங்க  7 வது  வரை  படிச்சிருக்கீங்க, அம்மா  4 வது  வரை , நான் 11  வது  வரை  , என்ன  பொருத்தம்  பார்த்தீங்களா?  இதுக்கு மேல  படி படின்னா  எப்படி  முடியும்? 7 +  4 = 11  தானே?

3          பச்சைக்கொடி  ரயிலுக்கு வேணா  காட்டலாம், ஆனா காதலுக்குக்காட்ட முடியாது என்னால

4          நேர்ல  பார்க்கறப்ப  பேச முடியாத  பல விஷயங்கள்  ஃபோன்ல பேசிக்கலாம், ஏன்னா  முகம் தெரியாது  இல்லையா? தயக்கம் இருக்காது

5          ஒருத்தரை  மனப்பூர்வமா  ஏத்துக்கிட்ட  ஒருத்தி  அவர்  இறக்கும்போது  கணவனுக்கு  முன்னேயே  போய்டனும், அல்லது அவர்  போறப்பப்போய்டனும்

சபாஷ்  டைரக்டர்

 

1        இது கண்ணியமான காதல்  கதை . சில்மிஷங்களோ  , கிளாமர்  காட்சிகளோ  இல்லாத  டீசண்ட்  லவ் ஸ்டோரியாக  கொண்டு போனதுக்கு ஒரு ஷொட்டு

2  கிட்டத்தட்ட  காதலுக்கு  மரியாதை  படத்தின்    ஓல்டு வெர்சனாக  என் கண்ணுக்கு  தெரிஞ்சுது

 


பாடல்கள்

1  விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம்,பார்வை நாடகம்   அரங்கில் ஏறுமாம்  ஓஹோ ஒஹ்ஹோ  ஜூலி ஐ லவ் யூ


2   சின்ன சின்னக்கண்ணா, சேதி சொல்லும் மன்னா


3  கிளை இல்லா மரங்களில்

4   அழகினி  விளைந்தது  மழையினில்  நனைந்தது அம்மம்மா ஆஹ்ஹூ அம்மம்மா 

3        ஓப்பனிங்  சீன்களில்  நாயகன் , நாயகி  சந்திப்புகள்  யதார்த்தம்

4          காதலைப்பற்றி  என்ன  நினைக்கறீங்க?  என்ற  கேள்விக்கு  நாயகன், நாயகி  இருவரும்  அளிக்கும் பதிலில் இருந்தே  க்ளைமாக்ஸ்  காட்சியை  யூகித்து  விட  முடிகிறது

சி.பி ஃபைனல்   கமெண்ட்  -  அந்தக்கால  காதல்  கதை. கொஞ்சம்  ஸ்லோ  மூவிதான். டி ஆரின் இசை  ரசிகர்கள்  பார்க்கலாம்,  ரேட்டிங் 2. 75 / 5 


0 comments: