Friday, October 02, 2020

Holly Slept over -( 2020 )-சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி) 18+ ( அமேசான் ப்ரைம்)


 ஹீரோ வும் ஹீரோயினும்  கணவன், மனைவி . இவங்க தங்கி  இருக்கற  வீட்டுக்குப்பக்கத்துல  இன்னொரு தம்பதி. அவங்களுக்குக்குழந்தைகள் உண்டு , இவங்க புதுமணத்தம்பதி, இன்னும்  குழந்தை  இல்லை.


ஹீரோ  பக்  வீட்டு  ஆளோட  ஜாகிங்  போறப்ப  அவங்க  2  பேர்  வீட்டில் நடக்கும் அந்தரங்க  விஷயங்களைப்பகிர்ந்துக்கறாங்க . குழந்தைகள்  பிறந்த  பின் மனைவி  கூட முன்னே  மாதிரி  நெருக்கமா  அதிகம்  இருக்க  முடியலைனு நண்பர்  குறைப்பட்டுக்கறாரு. ஹீரோவும்  அதே  மாதிரி  தன் மனைவி  கூட  வெரைட்டியான பல விஷயங்கள்  பண்ண  நினைப்பதாவும், ஆனா  ஒரே மாதிரி  வாழ்க்கை  போர் அடிக்குது,  இதை  அவ கிட்டே  ஒரு நாள்  சொல்லனும்னும் பேசிக்கறாங்க


 இவங்க  2 பேரும்  பேசிக்கிட்ட  மாதிரி  அவங்க  2  பேரும்  நெருக்கமா  பேசிக்கறாங்க . அவரவர்  கணவன் பற்றிய  பிளஸ் , மைனஸ்  பற்றி  ஓப்பனா  பேசிக்கறாங்க


 இந்தக்கதைல  ஒரு எக்சேஞ்ச்  மேளா  வரப்போகுதுனு  நாம  நினைக்கறப்ப  ஒரு எதிர்பாராத  திருப்பம் 


ஹீரோவோட  மனைவி   ஒரு ஃபிளாஸ்பேக்  சொல்றாங்க., காலேஜ்  படிக்கும்போது  க்ளாஸ்  மேட்டா  ஒரு பொண்ணு  இருந்தா  , அவ கூட  ஃபயர்  ஆகிடுச்சு  அப்டிங்கறா. சில  காரணங்களால  அவங்க  சண்டை  போட்டு  பிரிஞ்சுட்டதாவும் , இப்போ  திடீர்னு  அவ  காண்டாக்ட்  பண்ணி  வீட்டுக்கு ஒரு விசிட்  அடிக்க  விரும்புவதாகவும்  சொன்னதா  ஹீரோயின்  சொல்றாப்டி.


 உடனே  ஹீரோ  வழக்கம்  போல  பக் வீட்டு ஆள்  கிட்டே  இந்த  விஷயத்தை  ஷேர்  பண்றாப்டி. அந்தாள்  இதுதான் உனக்கு  நல்ல  சான்ஸ் , நீ  உன் மனைவியோட  முன்னாள்  ஃபயர்  சர்வீஸ்  பார்ட்டியை  கரெக்ட்  பண்ணிடுனு கேவலமா  ஒரு ஐடியா  தர்றாப்டி


குறிப்பிட்ட  அந்த  காலேஜ்  தோழியும் வர்றா, அதுக்குப்பின்  இவங்க  வீட்டில்  என்ன நடந்தது? என்பதை  அமேசான்  பிரைமில்  தமிழ்  டப்பிங்கில்  காண்க . ஒன்றரை  மணி  நேரப்படம்  தான் . படத்துல  நீங்க  எதிர்பார்க்கும்  காட்சிகள்  எல்லாம் எதுவும்  பெருசா  இல்லை ,  ஆனா  தமிழ்  டப்பிங்  வசனங்கள்   கிளு  கிளு  ரகம் 


ஹீரோவா  நடிச்சவர்  முக  பாவனைகள்  அருமை . அவ்ளோ தான், ஆண்கள்  நடிப்பை  அவ்வளவு  அதிகமா  கூர்ந்து  பார்க்கும் பழக்கம்  இல்லாததால்  நாம  அடுத்த  ஆட்கள்  பற்றி பார்ப்போம்

 ஹீரோயின்   நல்ல  முக  வெட்டு . கிளாமர்  குயின் . நடிப்பும்  நல்லா  வருது. பக்  வீட்டு  தோழி யும்  ஓக்கே  ரகம்  தான்., ( நாம  யாரைத்தான்  நாட்  ஓக்கே அப்டினு  தள்ளி  இருக்கோம்?)  ஹீரோயினின்   காலேஜ் தோழியாக  வருபவர்  தான்  இந்தப்படத்தில்  மெயின்.


 அவரோட  ஹேர்  ஸ்டைலைப்ப்பார்த்தா  கவுண்டமணி  என்ன  பஞ்ச்  டயலாக் அல்லது  கப்வுண்ட்டர்  கொடுப்பார்னு  யோசிச்சுப்பார்த்தா  சிரிப்புதான் வரும் 


 ஹீரோவின்  நண்பராக  வருபவர்   முகமும்  சுமார், நடிப்பும்  சராசரி  ரகம், ஆனா அவர்  பண்ணும்  காரியங்கள்..... 


சபாஷ்  டைரக்டர்


1   அஞ்சே  கேரக்டர்கள்:, 2  வீடு  அவ்ளோ தான், ஒரு படமே  முடிச்சாச்சு , இயக்குநர்  விசு  கூட இவ்ளோ  சிக்கனமா  படம்  பண்ணலை 


2   ஓப்பனிங்க்  சீன்லயே நேரடியா  கதைக்கு  வந்துடறாரு 


3  காமெடி  டிராக்னு  தனியா  எதுவும் இல்லை ., படமே  ஒரு கில்மாக்காமெடி  தான் என்பதால்  இவங்க  5  பேர்  பண்ற  அலப்பறைகளே  போது,ம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1  ஹீரோவின் நண்பர்  தன்  மனைவி  தூங்குன  பின்  தான் செய்யும்  சேஷ்டைகள்  பற்றி  சொல்வதில் நம்பகத்தன்மை  இல்லை . ஒரு டைம்னா  பரவால்லை, பல டைம்  அப்படி  செஞ்சும்  மனைவி  விழிக்கவே  இல்லை  என்பது  நம்ப  முடியலை 


2   தன்  மனைவியைப்பற்றிய  ஒரு ரகசியத்தை  ஹீரோ  பக்  வீட்  ஆளிட,ம்  பகிர்கிறார். இது  இடிக்குதே . யாராவது  அருகில்  இருக்கும்  வீட்டுக்காரர்களிடம்  இந்த  மைனசை  சொல்வார்களா? அபாயம் இல்லையா?? அது போக  அவர்  நண்பர்  அவர்  முன்னாடியே  இன்னொரு  ஆளிடம்  அவர்  மனைவி  பற்றிய   ரகசியத்தை  ஓப்பனாக  சொல்வது  எப்படி ?  அட்லீஸ்ட்  ஹீரோ இல்லாதப்பா  சொன்னாலாவது   ஓக்கே  


 சி.பி  ஃபைனல்  கமெண்ட்  -   ஜாலியா  ஒன்றரை  மணி  நேரம்  டைம் பாஸ்   பண்ண  நினைக்கறவங்க  அமேசான்  பிரைம்ல  இந்தப்படத்தைப்பார்க்கலாம்,  தமிழ்  டப்பிங்க்லயும் கிடைக்குது . ரேட்டிங் 2 / 5 

0 comments: