Sunday, October 18, 2020

பல்லவி அனுபல்லவி (கன்னடம்) 1983 - சினிமா விமர்சனம் ( எ மணிரத்னம் ஃபிலிம்)
இயக்குநர்  மணிரத்னத்துக்கு  மற்ற  எந்த  தமிழ்  இயக்குந்ருக்கும் இல்லாத  ஒரு மரியாதை, ஸ்பெஷல்  கேரக்டர்  உண்டு. வேறு  எந்த  டைரக்டரிடமும்  அசிஸ்டெண்ட்டாக ஒர்க் பண்ணாமல் சுயம்புவாக   உருவானவர். யாரிடமும்  போய் வாய்ப்புக்கேட்காமல்  சொந்த  பெரியப்பாவையே  தயாரிப்பாளர் ஆக்கி  தன் முதல்  படத்தை  கன்னடத்தில்  கொடுத்து  1983ம் ஆண்டுக்கான  சிறந்த    திரைக்கதைக்கான  விருதைப்பெற்றார். 


இந்தப்படத்துக்கு  இசை  இளையராஜாதான்  என முடிவானபின்  அவர்   கேட்ட  சம்பளத்தைப்போல் 5 மடங்கு  குறைவாகக்கொடுத்து  சம்மதிக்க   வைத்தார். உச்சத்தில்  இருந்த  இளையராஜா  இதற்கு எப்படி  சம்மதித்தார்  என்பதே  ஆச்சரியம்.. இந்தி  ஹீரோ  அனில் கபூர்  கன்னடத்தில்  நடித்த  ஒரே  படம்  என்ற  பெருமையையும் இது பெறுகிறது. புகழ்  பெற்ற  இயக்குநராக  அப்போது  கோலோச்சிய  ஒளி  ஓவியர்  பாலுமகேந்திரா  இதில்  ஒளிப்பதிவாளராக  ஒப்பந்தம்  ஆனதும்  ஆச்சரியம் 


படத்தோட  ஓப்பனிங்  ஷாட்லயே ஒரு அதிர்ச்சியை  வைத்திருக்கிறார். திருமணம்  ஆன நாயகி  தன் கணவன்  தனக்கு  துரோகம்  இழைப்பதைக்கண் எதிரே  பார்த்து  திடுக்கிட்டு  அவரைப்பிரிந்து  விடுகிறார்.   அவருக்கு  ஒரு மகன். இங்கே  அப்டியே  கட் பண்றோம் 


  நாயகன்  ஒரு ஜாலி  பேர்வழி . நாயகியை  ஒன் சைடா  லவ்  பண்றார்  (இது  வேற  ஆள் )சில  பல  ஜிம்மிக்ஸ்  வேலைகள்  எல்லாம் பண்ணி  நாயகியைக்கவர்ந்து  காதலுக்கு சம்மதம்  வாங்கிடறார். இவங்க  கலாட்டா , ப்ரப்போஸ் ,  காதல்னு ஜாலியா  முதல்  1  மணி  நேரம் போகுது . ஹீரோவோட அப்பா   தன்   கம்பெனியைப்பார்த்துக்க   ஹீரோவை   வேற  ஊருக்கு  அனுப்பறார். நாயகன்  போக  மறுக்க  நாயகி தூரங்கள்  நம்மைஉப்பிரித்தாலும்  காதல்  நம்மை  சேர்க்கும்னு தைரியம்  சொல்லி  அனுப்பி வைக்கிறார்  வேற  இடம்  மாறிய  ஹீரோ   ஏற்கனவே  நாம   பார்த்தமே  அந்த  நாயகியை  சந்திக்கிறார். பழகறார். அவர்  பையன்  கூட  க்ளோசா  பழகறார். அவரையும்  அறியாம  தன்னை விட  வயதில் மூத்த  மற்றும் கல்யாணம்  ஆகி கணவனைப்பிரிந்த  அவரை   விரும்பறார்.  ஏற்கனவே  தான்  வேற  ஒரு பொண்ணை  லவ் பண்ணிட்டு இருக்கேன்கறதை  அந்த  பெண்ணிடமும்  சொல்லிடறார். இதுக்குப்பின் திரைக்கதை  எப்படி பயணிக்குது ?  க்ளைமாக்ஸ்  என்ன  ? என்பதை  யூ  ட்யூப் ல கண்டு மகிழவும் 


ஹீரோவா  அனில் கபூர் . இவரோட கேரக்டர்  ஸ்கெட்ச்  பின்னாளில்  வந்த  மவுனராகம்  கார்த்திக்  கின் கேரக்டர்  ஸ்கெட்ச்  அப்டியே ... பப்ளிக்  ப்ளேஸ்  ல  காதலியை  ப்ரபோஸ்  பண்ணி  அவ பிகு பண்ணதும்    அங்கே  போவோர் வருவோரை  வழி மறித்து  நியாயம்  கேட்கும்  கலாட்டாக்கள்  அருமை . பின் நாயகியை  ப்ரப்போஸ்  பண்ண  அவர்  எடுக்கும்  முயற்சிகள்   கவிதை  ரகம் . மணம்  ஆன  பெண்ணுடன் கண்ணியமான  பழக்கம்  கொள்வதும்  காதலில்  விழுவதும்  அவ்வளவு யதார்த்தம், இது  நிஜமாவே  மணிரதன்ம்  இயக்கம் தானா? மகேந்திரன்  இயக்கமா? என்ற  சந்தேகம்  நமக்கு .  ஏன்னா  இயக்குநர்  மணிரத்னம் பட  ஹீரோ  இவ்ளோ  கண்ணியமா  காட்டி  நான்  பார்க்கலை ஹீரோயினா கிரன்  வைரலி  அழ்கிய  முகம்  , அன்பான  பார்வை , நளினமான  வெட்கம்  என  கவனிக்க  வைக்கிறார். வ்ழக்கமாக ஒளிப்பதிவாளர்  பாலுமகேந்திரா  படத்தின் நாயகிக்கு  வைக்கும்  டைட்  க்ளோசப்கள்  இதிலும் உண்டு 


 இன்னொரு நாயகியா  சொல்லப்போனா மெயின்  ஹீரோயினா  நடிகை  லட்சுமி  இவரை இவ்ளோ  இளமையா  இப்போதான்  பார்க்கறேன். உதயகீதம் , சிறைல  பார்த்தப்ப எல்லாம் இவ்ளோ  ரசிக்க  வைக்கலை . கணவனின் துரோகத்தைக்கண்டு  அதிர்ச்சி  அடைவது  சிறப்பான  நடிப்பு . தன்    மகன்  புது ஆளிடம்  அட்டாச்மெண்ட்  ஆகப்பழகுவதை   பெருமையோடு பார்ப்பது  அக்மார்க் அம்மா டச்


படத்தின்  இன்னொரு  ஹீரோ  இளையாராஜா.. பிஜிஎம்மில்  கலக்கறார். 3  பாடல்கள்  செம  ஹிட்டு ., சிவாஜி அம்பிகா  ஜோடியாக  நடித்த   வாழ்க்கை  படத்துல  மெல்ல  மெல்ல  என்னைத்தோட்டு மன்மதன்  உந்தன் வேலையைக்காட்டு  ஓ  நீ காட்டு  என   சூப்பர்  ஹிட்  பாட்டு 1984ல் வந்தது . அதன்  பிஜிஎம்மை  டைட்டிலிலும் படத்தின் இடையிலும் பயன்படுத்தி இருக்கார் 


அனில்கபூர்  - லட்சுமி  ஜோடி  இணைந்தால்  தேவலை  என்று ஆடியன்ஸ்  நினைக்கும் அளவுக்கு  திரைக்கதையை  நகர்த்தி  விட்டு   இயக்குநர்  லைட்டா  பாதை  மாறியது  ஏனோ? இந்தப்படம்  கமர்ஷியலாக  வெற்றி பெறவில்லை  என்று கேள்விப்பட்டேன் சபாஷ்  டைரக்டர் 


1    பின்னாளில்  வந்த  பல லவ் சப்ஜெக்ட் படங்களுக்கு  முன்னோடியாக காதல் காட்சிகளை  மென்மையாக  கையாண்ட விதம் . நாயகனின்  குறும்புத்தனங்கள்


2    ஹீரோ  அனில் கபூர் , லட்சுமி  இருவருக்குமான  நட்பு  கண்ணியமாக  காட்டிய  பாங்கு   திரைக்கதை  வடிவமைப்பு   லாஜிக்  மிஸ்டேக்ஸ் ,  திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1    மனைவி  வீட்டில்   இருக்கும்போதே  கணவன்  வேறொரு பெண்ணிடம்  இருப்பதை  ஜீரணிக்க  முடியலை . அவ்ளோ  அல்ப சொல்பமாகவா மாட்டிக்குவாங்க . பொதுவா  இந்த  மாதிரி  தப்பு  பண்றவங்க  ரூம்  கதவை , ஜன்னலை  க்ளோஸ்  பண்ணவே  மாட்டாங்களா? 


2   பின் பாதி  திரைக்கதையை  லட்சுமியே    ஆக்ரமித்துக்கொள்வதால்  முதல்  காதலி  கிரன்    ஆடியன்ஸ்  மனசுலயே  நிக்கலை , இது  பின்னடைவு 


3  அனில்கபூர்  , லட்சுமி   இருவரும்  ஒரு சூழ்நிலையில் தப்பு  பண்ணி  விட்டு  பின் இதே மாதிரி  தான் உன் புருசனும்  தப்பு  பண்ணி  இருப்பான்  , எனவே  அவனை மன்னிச்சிடு, ஏத்துக்கோ  என்று  அவங்க  2  பேரையும்  சேர்த்து  வெச்சுட்டு ஹீரோ  தன் முதல்  காதலியுடன்  சேர்வார்  என நான்  எதிர்பார்த்தேன்.  ஆனால் இயக்குநரின் கிரைக்கதை  மிக  கண்ணியம், ஆனாலும்  கமர்ஷியலாக  இல்லை என்பது  என்  தனிப்பட்ட  கருத்து 


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -   இயக்குநர்  மணிரத்னத்தின்  வழக்கமான  டைரக்சன்  டச்  இதிலும் உண்டு , கன்னடம்  என்பதால்  புரியாதோ  என்ற தயக்கம்  வேண்டாம்,  வசனம்  மணிரத்னம்  படத்தில்  எவ்ளோ  இருக்கும்  என்பது  எல்லோருக்கும் தெரியும் . யூ  ட்யூப்ல கிடைக்குது   ரேட்டிங்  3 / 5 Jump to navigationJump to search

Pallavi Anupallavi
Pallavi Anu Pallavi.jpg
Poster
Directed byMani Ratnam
Produced byT. Govindarajan
Written byMani Ratnam
Starring
Music byIlaiyaraaja
CinematographyBalu Mahendra
Edited byB. Lenin
Production
company
Venus Pictures
Release date
1983
Running time
140 minutes[1]
CountryIndia
LanguageKannada0 comments: