Wednesday, October 14, 2020

என் உயிர்த்தோழன் - (1990)- சினிமா விமர்சனம் ( பொலிட்டிக்கல் மெலோ டிராமா)


முதல்  மரியாதை ( 1985) மெகாஹிட்டுக்குப்பின்  கடலோரக்கவிதைகள்(1986)  ஹிட் தந்த இயக்குநர்  பாரதிராஜா   கலைப்பூர்வமான  படைப்பாக  வேதம் புதிது (1987)  , ஆராதனா ( 1987)  என  இரு  படங்கள்  தந்தது  விமர்சன  ரீதியாக  நல்ல வரவேற்பு பெற்றாலும்  கமர்ஷியல்  வெற்றி    பெரிய  அளவில்  கிட்டாததால் ரஜினியுடன்  இணைந்து  கொடி பறக்குது ( 1989) என்று  கமர்ஷியல்  மாமூல்  மசாலாவில்  இறங்கினார், வழக்கமான  பாரதிராஜா டச்  இல்லாத  படத்தை  எதிர்பார்க்காத  ரசிகர்கள்  அதை  அட்டர்  ஃபிளாப்  ஆக்கினார்கள்.  அதற்கு அடுத்து  அரசியல்  பின்னணியில் யதார்த்தமான ஒரு குப்பத்து  இளைஞனின்  கதையை  எடுத்தார். 


நிறம் மாறாத  பூக்கள்   திரைக்கதை  பாணியில்  இரு வேறு  காதல்  கதை  டிராக்குகள்  இனைக்கும்  உத்தியைக்கையாண்டார் 


நாயகி  அமைதிப்படை  அமாவாசை  மாதிரி  ஒரு டகால்ட்டிப்பார்ட்டியை  நம்பி காதலிக்குது. ஊரை  விட்டு ஓடிப்போகலாம்  என  அவன்  கொடுத்த  ஐடியாவில்  நகைகளுடன்  நாயகி  கிளம்ப  ரயிலில்  அவளை  அம்போனு விட்டுட்டு  நகைகளுடன்  எஸ் ஆகிறான்


இதை  அப்டியே கட்  பண்றோம்.


 நாயகன்  ஒரு  சேரி வாழ்  இளைஞன்.   அரசியல்வாதிகள்  எல்லாருமே  அயோக்கியர்கள்  தான்  என்ற  சூட்சுமம் தெரியாத  அப்பாவி. தன்  தலைவன்  மேல்  அளவுக்கதிகமான  பற்று  , பக்தி  வைத்திருப்பவன். குயில்  குப்பம்  என்னும் ஏரியாவில்  இவனுக்கு  மக்கள்  செல்வாக்கு   உண்டு. சுருக்கமா  சொல்லனும்னா  இவன் கை காட்றவங்க  தான்  அந்த  தொகுதி  எம் எல் ஏ . ..நாயகி  எப்படியோ  சுத்தியடிச்சு  நாயகன்  ஏரியாவுக்கு  வந்துடுது


காதலனால்  ஏமாற்றப்பட்ட  நாயகி  நாயகனின்  நல்ல  குணத்தை   உணர்ந்து  அவனை  விரும்பி  கல்யாணம்  பண்ணிக்கறா. இப்போ  நாயகன்  இருக்கும் தொகுதிக்கு  நாயகனின்  அபிமான  தலைவன்   கட்சி  சார்பா முன்னிறுத்தப்படும்  எம் எல்  ஏ  கேண்டிடேட்  தான்   நாயகியின்  முன்னாள்  சீட்டிங்  காதலன்


இதுக்குப்பின் நடக்கும்  பரப்ரப்பான சம்பவங்கள்  தான்  திரைக்கதையின் பின் பாதி   அம்சங்கள்


நாயகனாக    பிரமாதமான , யதார்த்தமான  வசன  உச்சரிப்புடன்  பாபு , பின் இவர்  நிழல்கள்  ரவி போல  என்  உயிர்த்தோழன்  பாபுவாகவே  ஆகிவிட்டார். வடிவுக்கரசியுடனான  உருக்கமான  காட்சியில்  செம  நடிப்பு 


நாயகியாக  ரமா. வழக்கமான  பாரதிராஜா நாயகிகளுக்கே உரிய  முக  லட்சணம்  இதில்  கம்மி  என்றாலும் நடிப்பில் குறை  வைக்க வில்லை இவரது  சீட்டிங்  காதலனாக  வருபவருக்கு  பாரதிராஜா  டப்பிங்  வாய்ஸ்  மாதிரி  தெரியுது 


வடிவுக்கரசியின்  நடிப்பு  பாராட்டும்  விதத்தில்  இருந்தது.


 சார்லியின்  குற்ற  உணர்ச்சியுட்ன  கூடிய  பேராசை  நடிப்பு  கனகச்சிதம், என்ன ஒரு அருமையான  குணச்சித்திர  நடிகர்  இவர்.


 தலைவனாக  வரும் வில்லன்  நடிப்பு ஓக்கே 


 லிவிங்க்ஸ்டன்  இதில்  கலக்கலான  காமெடி  வில்லன்  கேரக்டர். நல்லா பண்ணி இருந்தார் சபாஷ்  டைரக்டர்
 1  எடுத்துக்கொண்ட  மெயின் கதைக்கு  சம்பந்தம் இல்லாத கிளைக்கதை என்றாலும் அந்த  ரயிலில்  பெண்ணை  ஏமாற்றும் கதை  பெண்களுக்கான விழிப்புணர்வு சம்பவம்.


2  லூஸ்  மோகனுக்குப்பின் மெட்ராஸ்  பாஷையைப்பிரமாதமாகப்பேசும்  ஒரு நடிகரை  பாபுவை  உருவாக்கிய  பாங்கு . அவரது  வசன  உச்சரிப்பு  மிக லாவகம்


நச்  வசனங்கள்


1  சிட்டிசன்னா யார்  தெரியுமா? அவனுக்கு பட்டினி கிடக்க உரிமை இருக்கு, ஓட்டுப்போட உரிமை இருக்கு , ஃபிளாட்பாரத்துல படுத்துக்கிடக்க உரிமை இருக்கு 


2   பட்டணத்துல  திண்ணைல  ஒதுங்கக்கூட காசு கேட்பாங்க 


3  அவரு  சர்ச்  ஃபாதர் , நான் உனக்கு காட் ஃபாதர் 


4   பத்துப்பைசா  செலவில்லாம 15  வயசுப்பொண்ணு  கூடதான்  படுப்பேன்னு சொன்னியே தலைவா  அது தப்புன்னு தோணலையா? 


5   நான்  குடிக்கலைன்னா செத்துப்பூடுவேன் நைனா


 யக்கா,  நீ  குடிச்சு  செத்துப்போறதை  விட  குடிக்காம  செத்துப்போறதே  மேல் 


6  போபால்  எங்கேப்பா இருக்கு ?


 நம்ம நாயர் கடை  பால் ல 


7   வாய்ல வார்த்தையை வெத்தலை  மாதிரி  போட்டு கலக்கறியே?


8  இந்த  செண்ட்டிமெண்ட்ஸ் , சம்பிரதாயம்,  எல்லாம்  மக்களுக்குத்தான், அரசியல்வாதிகளான  நமக்கு  இல்லை


9  ஆட்சியில் இருக்கும்போதே சாகனும், அல்லது  சாகும்போது  ஆட்சியில் இருக்கனும், அதுக்கு  தனி  மரியாதை  தான்


 10 அனுதாப  ஓட்டுக்காக  நம்ம  கட்சித்தொண்டனை  நாமே  போட்டுத்தள்ளறோம், பழியை  எதிர்க்கட்சி மேல  போடறோம், இன்னா  சொல்றீங்க  தலைவரே?


 கொன்றால் பாவம்  வென்றால்  தீரும்

பாடல்கள்

இளையராஜாவின்  இசையில்  2  சூப்பர் ஹிட் பாடல்கள்

1  ஏய் ராசாத்தி  ரோசாப்பூ வா வா அடி ஏ  சீமாட்டி பூச்சூட்டி வாவா


2   குயிலுக்குப்பம்  குயிலுக்குப்பம்  கோபுரம்  ஆனதென்னா? இந்த 

வெயிலுப்பட்டு மண் குடிசை  மாளிகை ஆனதென்ன?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நிரடல்கள்


1   குப்பத்தில்  15,000  ஓட்டுக்கள்   நாயகன்  வசம்  என்ற  டயலாக்  அடிக்கடி வருது . ஒரு தொகுதியில் எம் எல் ஏ  ஆக அந்த 15,000  ஓட்டு எப்படி  தீர்மானிக்கும்  சக்தியா  விளங்க  முடியும் ?


2   ஒரு தொகுதியில்  ஒரு சாதா  தொண்டனின்  மரணத்தை  வைத்து  அரசியல்  ஆக்கி அந்த  தொகுதியில்  ஜெயிப்பது  என்பதைக்கூட நம்பிடலாம்.ஆனா  234  தொகுதிகளிலும்  அந்த  அனுதாப  ஓட்டு பிரதிபலிக்கும் என்பது  நம்பகத்தன்மை இல்லை 


3  நாயகியை  ஏமாற்றிய  காதலன்  பின் நாயகியை  டீல்  பண்ண  அவரது  குடிசைக்கு    வந்து  அவமானப்படுவது  லாஜிக்கே இல்லை , குறிப்பா  நான் மந்திரி  ஆன  பின் உன்னை  வெச்சுக்கறேன்  என  நாயகியிடம்  பேசுவது மடத்தனமான  மூவ் .  ஆக்சுவலா  அவன்  நாயகியை  விட்டுச்சென்றது  ஏன்? என்பதற்கு ஏதாவது  சாக்குபோக்கு சொல்லி இருக்கனுமே? 


சி.பி ஃபைனல்  கமெண்ட் -  கமர்ஷியலாக இது  வெற்றி பெறாத  படம் தான் என்றாலும்   பாரதிராஜா ரசிகர்கள்  பார்க்கலாம். பல  சுவராஸ்யங்கள்  உண்டு . ரேட்டிங்  2.5  / 5 

0 comments: