Tuesday, September 29, 2020

விசாரணை(2016)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )


 


ஆனந்த  விகடன்  விமர்சனக்குழுவால்  61 மார்க்  வழங்கப்பட்ட  வெகு சில  படங்களில்  இதுவும்  ஒன்று  என்ற  பெருமை , ஏகப்பட்ட  விருதுகளைக்குவித்த  படம்  என்ற  பெருமை , சிறுகதை அல்லது  நாவலை  படமாக்கும் இலக்கிய ஆர்வலர்  இயக்குநர் வெற்றி மாறன் படம்   என்ற  லேபிள்  என  இத்தனை  அம்சங்கள்  பாசிட்டிவாக இருந்தும்  இத்தனை  நாட்களாக  நான் பார்க்காமல்  தவிர்க்க  மிக முக்கியக்காரணம்  இந்தப்படத்தில்  வரும்  போலீஸ்  சித்திரவதைக்காட்சிகள்  மனதளவில்  நம்மை  பாதிக்கும்  என்பதால்  மட்டுமே.

 

ஆனா  முதல்  20 நிமிடங்கள்  தான்  அப்படி . அதுக்குப்பின் கதைக்களம்  க்ரைம்  த்ரில்லராக , பொலிட்டிகல்  த்ரில்லராக   உரு மாற்றம் பெற்று  விறுவிறுப்பாக  செல்கிறது

 

ஒரு  விஐபியின் வீட்டில் ஒரு திருட்டு  நடக்குது. திருடுன  கும்பல்ல  ஒரு ஆள்  தமிழ்  பேசுனான்  என்ற  ஒரு சாட்சியின்  தகவலை  வைத்து  போலீஸ்  காய் நகர்த்தறாங்க . உண்மையான  குற்றவாளீயைக்கண்டு பிடிக்க  முடியல , ஆனா ,மேலிட  பிரஷர் . யாரையாவது   பிடிச்சு   ஃப்ரேம்  பண்ணிடலாம்னு  திட்டம்  போடறாங்க

 

ஹீரோவும், அவர்  நண்பர்கள்  3  பேரும்   தங்க  இடம் இல்லாமல்  ஒரு பார்க்கில்  தங்கி  இருக்காங்க . பகலில்  வேலை , இரவில்  பார்க்கில்  தங்கல்.  ஒரு பெரிய  பங்கலாவில்  வேலை  பார்க்கும் ஒரு பொண்ணுக்கும்  ஹீரோவுக்கும்  பழக்கம்  ஆகுது . எங்க  வழக்கமான  லவ் ஸ்டோரியா கொண்டு போவாங்களோ?னு பயந்திருந்தப்ப  டக்னு  கதை  டிராக்  மாறுது

 

 போலீஸ்   அவங்க  4 பேரையும்  கொத்தா  அள்ளிக்கிட்டுப்போய் ஸ்டேஷன்ல   வெச்சு  விசாரிக்கறாங்க . இவங்க எதும்  தெரியாதுங்கறாங்க .

 

பிரபலமான  அரசியல்  புள்ளியோட  ஆடிட்டர்  ஒரு கேஸ்ல  சரண்டர்  ஆகறார். கதை  வேற  கோணத்தில்  பயணிக்குது. போலீஸ்க்கு  2  டாஸ்க் , ஆளுங்கட்சி  தரப்பில்  இருந்து  இப்படி  செய்ங்க   என  ஒரு அறிவிப்பு , அடுத்த  தேர்தலில்  ஆளுங்கப்சியா  வர  வாய்ப்புள்ள  எதிர்க்கட்சி ஒரு பல்க்  அமவுண்ட்  தள்ளி  இப்படி பண்ணுங்கனு  சொல்ல  போலீஸ்  எப்படி  டபுள்  கேம்  ஆடுச்சு? அந்த  அப்பாவி இளைஞர்கள்  கதி  என்ன? என்பதை  எல்லாம்  திரையில் காண்க

 

சமுத்திரக்கனியை தான் முதல்ல  குறிப்பிடனும். பிரமாதமான  ஆக்டிங். அந்நியன்  படத்தில்  விக்ரம்  3 விதமான  உணர்ச்சிகளை   மாறி  மாறிக்காட்டுவாரே   அதை  விட டஃப் ஆன  நடிப்பு . சராசரி    போலீசாக  நடப்பது .நம்பிக்கை  துரோகம்  பண்ணும்  குற்ற  உணர்வு, உய்ற்  அதிகாரிகள்  மீது  கோபம்   என  கலவையான  உணர்ச்சிகளை  பிரமாதமாக  காட்டி இருக்கிறார் , ரகுவரன் , பிரகாஷ்  ராஜ் வரிசையில்  துல்லியமான  நடிப்பில்  இவர் கொடி  கட்டிப்பறக்கிறார்

 

அடுத்த  நடிப்பு  ஆடிட்டராக  வரும்   கிஷோர் . கெத்தாக  வரும்  அவரின் மிடுக்கு , பின்  போலீஸ்  விசாரணையில்  ஆட்டம்  காண்பது.  தர்ட்  டிகிரியில்  விசாரிக்கப்படும்போது  அதிர்ச்சி  காட்டுவது  எல்லாமே  கலக்கல்  நடிப்பு

 

அடுத்ததாக  நாயகன்  அட்டக்கத்தி  தினேஷ். பார்ப்பவர்கள்  மனதில்  பரிதாபம்  ஏற்படுத்தும்  கேரக்டர் .  நண்பர்கள்  அடி வாங்கக்கூடாது  என இவர்  காட்டும்  முனைப்பு அருமை , பின் பாதியில்   மாறுபட்ட  நடிப்பு

 

பல்  உடைந்தவராக   வரும் நன்பரின்  நடிப்பு  நெகிழ  வைக்கிறது, ரொம்ப  அப்பாவியாக  அவர் பேசுவது  உச் கொட்ட வைக்கிறது

 

 தான் சுடப்பட்டு  உயிருக்கு ஆபத்தாக  இருந்த  போதிலும்  கூட   டேய் ஓடிடுங்கடா, தப்பிச்சுடுங்க , என நண்பர்களை  எச்சரிக்கும் நப்ர்  சபாஷ்  பெறுகிறார்

 

 ஆந்திரா  போலீஸ்  ஆஃபீசரகா  மொட்டை  தலை  ஆள்  கொடூரமான  நடிப்பு

 

சபாஷ்  டைரக்டர்

 

1    லாக்கப்  என்ற நாவலின்  தழுவல் தான்  இந்த  படம்  நடந்த  உண்மை  சம்பவங்களின் தொகுப்பு . க்ளைமாக்சில்   நிஜ சம்பவ  ஆட்களை  காட்டும்போது  தியேட்டரில்  பலத்த  கை தட்டலாம்.  சந்திர குமார்  என்ர  ஆட்டோ டிரைவரின்  சுயசரிதை தான்  முதல் பாதி  கதை , பின் பாதி கதை  வேற  பக்கம்  நடந்த  உண்மை சம்பவங்களாம் 

2    போலீஸ்  ஸ்டேஷனில்  பெரும்பாலான  சம்பவங்கள்  நடப்பதால்  அங்கே  ரெகுலராக  வரும்  ஒயர்லஸ்  தகவல்  முதற்கொண்டு  துல்லியமாக  ஒலிப்பதிவு

 

3   கடமை  கண்ணியம்  கட்டுப்பாடு  படத்துக்குப்பின்  தமிழ்  சினிமாவில்  அதிகம் கெட்ட வார்த்தைகள்  இதில்  தான். தியேட்டரில்  ம்யூட்  செய்யப்பட்டாலும் நெட்  ஃபிலிக்சில்  அப்படியே  இருக்கு . அவை   காவல் துறையின்  கொடூரத்தை  பட்டவர்த்தனம் ஆக்கி இருக்கு

 

4 சமுத்திரக்கனி , கிஷோர் காம்போ காட்சிகள் , கன்வோ காட்சிகள் எல்லாமே  அருமை . என் ஸ்டேஷன்ல  இப்[படி  பண்ணச்சொல்ல  அந்த    சி யாரு? என  ஏ சி  லைனில் இருக்கும்போதே  கேட்பது  செம

 

5   அவ்ளவ்  அடி வாங்கியும்   ஹீரோ  உண்ணாவிரதம்  இருப்பதும்   கோர்ட்டில் ஜட்ஜிடம் அவர்கள்  உண்மையை  சொல்வதும்  அதுக்கு ஜக்ஜின் ரீ ஆக்சனும்

 

6  பின்னணி  இசை , எடிட்டிங்  இரண்டும்  போட்டி போட்டுக்கொண்டு   தன்  இருப்பை  வெளிப்படுத்தும்  விதம்

 

7   லாக்கப்பில்  அடிக்க  பனை  விளார்களை  போலீஸ்  கொண்டு வருவதும்  அவற்றை  ரெடி  பண்ணும்  காட்சியும்


8   ஜி வி  பிரகாஷின்  இசை  அருமை , பல  இடங்களில்  நிசப்தமாக  மவுனத்தை  கடத்திய  உத்தி  அழகு
நச் டயலாக்ஸ்


1  ஒவ்வொரு உயிரும் இந்தப் பூமிக்கு வர்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. அது போறதுக்கும் ஒரு காரணம் இருக்கணும்'


2  எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!’’


3   அய்யா , ஒத்துக்கோ ஒத்துக்கோ அப்டிங்கறீங்க? எதை ஒத்துக்கனும்?


4  பேர் என்ன?''


``அப்சல்.''

``ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸா... அல்கொய்தாவா?''

``இல்ல சார்... தமிழ்நாட்ல இருந்து வந்து வேலைபார்க்கிறேன்.''

``அப்போ எல்.டி.டி.ஈ-யா?’’ -


5   ``அட சும்மா இருங்க சார்... கோட்டால உள்ளே வந்துட்டு, சிஸ்டம் புரியாமப் பேசிக்கிட்டு!’’6  `உன்னை, குற்றவாளியைக் கண்டுபிடிக்கவா சொன்னேன்... கேஸை முடிக்கத்தானே சொன்னேன்!’’


7  நீ  என்னதான்  சொல்லு , நம்ம  ஊர் போலீஸ்  ஸ்டேஷன்ல  இருப்பதும்  சுகம்தான்

8   பணம்  வெச்சிருக்கறவன்  பயப்படுவான்

9  காசை  மிச்சம்  பண்றதுக்காக   யாரும்  பார்க்ல  தங்காதீங்க , போலீஸ்ல  மாட்டிகிட்டா...


10  போலீஸ்ல  நல்ல போலீஸ்  கெட்ட  போலீஸ்  எதுவும் இல்லை, தமிழ் நாடு போலீசோ , ஆந்திரா  போலீசோ  கேசை முடிச்சா போதும்னுதான் நினைப்பாங்க 

லாஜிக் மிஸ்டேக்ஸ்

 

1        அவ்ளோ  போலீஸ்  ஆஃபீசர்ஸ்முக்கியமான  இல்லீகல்  விஷயம்  பேசும்போது  பாத்ரூமில்  வெளியாள்  இருப்பதை  கவனிக்காமல்  விடுவது  எப்படி ? 

2        பிளாட்ஃபார்ம் வாசியான  ஹீரோ  கையில்  ரிவால்வர்  கிடைத்ததும்  அதன் சேஃப்டி கேட்சை  விடுவிப்பது  எப்படி? பயப்படாமல்  குறி  வைப்பது  எப்படி?

3  போலீஸ்  ஸ்டேஷனை  க்ளீன்  பண்ணசொல்லும்போது  அடி வாங்கி  டயர்டா  இருக்கு  என  எஸ்  ஆகி இருக்கலாமே?  செய்ய  முடியாதுனு  சொன்னாத்தானே  கோபம் வரும்,  செய்யும் உடல்   தகுதி  இல்லைனு  சொல்லி இருக்கலாம்


4  பொதுவா  போலீஸ்  ஸ்டேஷன்ல  சில  குற்றங்களை ஒத்துக்கிட்டு  சரண்டர்  ஆகவே ரெடிமேடா சில  ரவுடிகள்  இருப்பாங்க , அவங்க என்ன ஆனாங்க. அவங்களை  ஃபிரேம் பண்ணிட்டா இவ்ளோ ரிஸ்க் போலீஸ்க்கு இல்லையே?

 

சி.பி   ஃபைனல் கமெண்ட் -   நெட்  ஃபிளிக்சில்  படம்  கிடைக்குது. தியேட்டரில்  பார்க்காதவர்கள்  நிச்சயம்  பார்க்கலாம்,   ரேட்டிங் 3. 5 / 5

 

 

 

 

0 comments: