Tuesday, October 06, 2020

மாயவன் (2017)– சினிமா விமர்சனம் ( சயிண்ட்டிஃபிக் க்ரைம் த்ரில்லர்)




ஹீரோ  ஒரு போலீஸ்  ஆஃபீசர் . இவர்  ஒரு விசித்திரமான  சீரியல்  கில்லிங்  நிகழ்வை சந்திக்கறார். ஒரே  பேட்டர்ன்ல சில  கொலைகள்  நடக்குது. ஆனா  ஒரு கொலையை செஞ்சவனை  ட்ரேஸ்  அவுட்  பண்ணி  பிடிக்கப்போகும்போது  அவன் தற்கொலை பண்ணிக்குவான். அதுக்குப்பின்  அடுத்த  கொலை  அதே பேட்டர்ன்ல  நடக்கும், அதை செஞ்சவன் வேற ஒருத்தன்., அவனைப்பிடிக்க ட்ரை பண்ணும்போது  அவனும் தற்கொலை  பண்ணிக்குவான். இது  தொடருது

 

வில்லன்  ஒரு   விஞ்ஞானி, இவரோட  ஆராய்ச்சி  அபாயகரமானது. ம்னிதனோட மூளையில்  இருக்கும்  நினைவுகளை  ஹார்டு டிஸ்க்ல  காப்பி  பண்ணிக்கறது. அதை  வேற  ஒரு ஆளின்  மூளைக்கு  மாத்தறது/.இன்னும்  தெளிவா சொல்லனும்னா கூடு விட்டு கூடு பாயும் கலையின் நவீன வடிவம் . இந்த  அபாயகரமான  ஆராய்ச்சிக்கு  மேலிடம்  ஒத்துக்கலை. அதனால  இவரு  வெளில  வந்துடறாரு

 

 ஹீரோயின் ஒரு மனநல  மருத்துவர் . இந்த  கேஸ்ல  ஈடுபடும் ஹீரோ மனோரீதியா  பாதிக்கப்படும்போது  அவருக்கு உதவி பண்றார்

 

மோட்டிவேசனல்  ஸ்பீக்கரா  வ்ரும்  ஒரு வில்லனா  வேட்டையாடு விளையாடு  புகழ்  டேனியல். பாலாஜி   பிரமாதமா  பண்ணி இருக்கார் ட்ரான்ஸ்  மலையாளப்படத்தில்  ஃபகத்  ஃபாசில்  பண்ணிய  ரோல். உண்மை  கண்டறியும்  சோதனை  நடக்கும்போது  மருந்துக்கு எதிராப்போராடும்  இடத்தில்  சபாஷ்  நடிப்பு, ஆனா  இவருக்கான  காட்சிகள்  இன்னும் அதிகம் நீட்டித்து இருக்கலாம், வெயிட்  கூட்டி இருக்கலாம்

 

ஹீரோ போலீஸ்  ஆஃபீசரா  சந்தீப்  கிஷன்   மிடுக்கா  நடிச்சிருந்தாலும்  கதைக்கு  தேவை இல்லாத  மனோரீதியான  பாதிப்பு , ஃபிட்னஸ்  நிரூபிக்க  தேவை  இருப்பது  இதெல்லாம்  ஹீரோயின்  உள்ளே  வருவதற்காக  செயற்கையாக  அமைக்கப்பட்டவை . முதல்  20 நிமிடங்கள்  கட் பண்ணாலும் படத்தின்   போக்கு  பாதிப்படையாது, இவருக்கு  ஒட்டு மீசை  வைத்தது  ஒரு மைனஸ். சீரியசான  சில காட்சிகளில் இவருக்கு முக பாவனை சரியா சிங்க் ஆகலை 

 

 வைஜெயந்தி  ஐ பிஎஸ் , சத்ரியன்  உட்பட  பல  போலீஸ்  சப்ஜெக்ட்  படங்களில்   ஹீரோ  ஃபிட்னசை  இழப்பது ,  பின் நிரூபிப்பது  என  வந்து விட்டது. அவை எல்லாம் போலீஸ்  சப்ஜெக்ட்  படங்கள்  என்பதால்  ஓக்கே , ஆனா இது  இன்வெஸ்டிகேஷன்  க்ரைம் த்ரில்லர். இந்தக்கதைக்குஅந்த  ஃபிட்னஸ்  போர்சன்   தேவையே இல்லை

 

சயிண்ட்டிஸ்ட்டாக  வரும் வில்லன்  கேரக்டர் புது ஆள்  போல . இன்னும் கொடூரமான  தோற்றத்துடன்  இருக்கும்  பிரபலமான  ஒருவரை  புக்  பண்ணி இருக்கலாம். அவரே  பாவமாக  , பரிதாபமாக  இருக்கார்

 

ஹிந்தி    ஜீரோ ஜாக்கி ஷெராஃப்  மிலிட்ரி ஆஃபீசராக  இன்னொரு வில்லனாக   வருகிறார். அருமையான  நடிப்பு, ஆனா கெஸ்ட்  ரோல்  லெவல்லதான்  அவரை ட்ரீட் பண்றாங்க 



 சபாஷ்  டைரக்டர் ( சி.வி குமார்)


1   நலன்  குமாரசாமியின் திரைக்கதை  படத்துக்கு  பெரிய பலம், நியூரோ சயின்ஸ்,  பிரெயின்  நியூரோ இஞ்செக்சன்  என  காட்சிகளில்  மிரட்டியது அருமை  அந்த  லேப் சம்பந்தப்பட்ட காட்சிகள், டீட்டெய்லிங் எல்லாம் அபாரம்


2  நினைவுகளின் தொகுப்புதான் மனிதன், அதை மொத்தமாக சேகரித்து   வேறொரு  மூளைக்கு  ட்ரான்ஸ்ஃபர் பண்ண  முடியும்  என்பதை  நம்பும்படி சொன்ன விதம், க்ளைமாக்சில்  நிஜ  வாழ்வில் அதற்கான  முயற்சிகள்  நடந்து கொண்டிருப்பதாகவும் 2035 ல் அதை சாத்தியப்படும் என்பதை  தரவுகள்  மூலம் விளக்கிய  விதம் பிரமாதம் 


3   ஜிப்ரானின்  இசை  தேவையான  பரபரப்பை வழங்கத்தவறவிலை , மெல்ல மெல்ல  மெலோடி செம ஹிட் சாங் .  பிஜிஎம்மில் அதிரடி


4   கொலை  செய்ய  பயன்படுத்தும்  ஆட்கள் எல்லாம் மிரட்டல் ரகம்.  பாக்சர்  தீனா, மைம்  கோபி ,  ஜெயப்பிரகாஷ்  என   ஆர்ட்டிஸ்ட்  செலக்சன்  பக்கா 

 

நச்  வசனங்கள்

 

1        புரிதல்  வேற  , உணர்தல்  வேற

2        தண்ணீரை  எல்லாருமே  அண்ணாந்து  தொண்டைக்குழில  நேரடியா  தண்ணி  படற  மாதிரி தான்  குடிக்கறாங்க . அது  தப்பு  உமிழ் நீரோடு  உறவாடி  பின்  தண்ணீர் உள்ளே போகனும்., கவ்விக்குடிக்கனும், மெதுவா குடிக்கனும்

3        அடேங்கப்பா , மிஸ், உங்களுக்குத்தெரியாத  மேட்டர்  ஏதாவது இருக்கா?  எல்லாமே  தெரிஞ்சு  வெச்சிருக்கீங்க?

 சமையல்  தெரியாது

 

4        எல்லாருக்கும் உயிர்  ஒண்ணுதான், ஒரே மாதிரிதான் , ஆனா  நினைவுகள்  வேற  வேற

5        அறிவியல்  என்பது  மனிதனின் அன்பை  வளர்க்கனும், அழிக்கக்கூடாது

6        இன்னொருத்தன்  அடையாளத்தை  அழிச்சு  நீங்க  1000  வருசம்  உயிர்  வாழ  நினைக்கறது  தப்பு

7        சயிண்ட்டிஸ்ட்னா யார்  தெரியுமா? சயின்சை  மிஸ்யூஸ்  பண்ணாதவன்

 

8        இறப்பு உட்பட  எல்லாத்தையும் தெய்வம்தான் முடிவு பண்ணும், ஆனா அந்த  தெய்வமாவே ஆகனும்னு நீ நினைச்சா எப்படி?

 

9   இந்த  மனித  குலம் ஆரம்பிச்ச  நாள்ல  இருந்து  அவனது நிறைவேறாத  ஆசை  என்ன  தெரியுமா?   சாகாவரம். அதை  நோக்கிதான்  நான் முன்னேறிட்டு இருக்கேன்

 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்

 

1  வில்லனோட   மனைவி  கோமால  இருக்காங்க . அவரைப்பார்க்க  வரும் ஹீரோ  டாக்டர்ட்ட  அவங்க  கண்  விழிச்சா இந்த  நெம்பர்க்கு  கால் பண்ணுங்க  என  சொல்லிட்டுக்கிளம்பறார். அதுவரை  கண்  மூடிட்டு இருந்த  லேடி  டக்னு கண்ணை  மூடின வாக்குலயே ஹீரோ கையைப்பிடிச்சு  தடுத்து  நிறுத்தறார்.. இது எப்படி ?

 

2  வில்லனோட ரகசிய  ஆய்வுக்கூடம்   எங்கே  இருக்கு?னு கண்டுபிடிக்கனும். அதை  மனைவி கிட்டே  இருந்து  தகவல்  தெரிஞ்சுக்கலாம்னா  அவங்க  கோமால இருக்காங்க .  ஹீரோ  வில்லனோட  வீடு, அவர்  இருக்கும்  ஏரியாவுல  செக் பண்ணவே  இல்லையே?  பண்ணி  இருந்தா  ஈசியா  கண்டுபிடிச்சிருக்கலாமே?

 

3  வில்லனோட  ரகசியங்கள்  எல்லாத்தையும் அறிந்தவர்  அவர்  கொலீக்கும்  நண்பருமான   ஜெயப்பிரகாஷ் , போலீஸ்  அவரை விசாரிக்கும்  என  வில்லனுக்குத்தெரியாதா>  அவரை  உயிரோட  விட்டு  வெச்சது  எப்படி?

 

4  வில்லன்  கூடு விட்டு  கூடு  பாயாம  தடுக்க  ஈசியான   வழி  அவனை  தூக்கத்துலயே வெச்சிருப்பது  அல்லது  மயக்க  நிலையில்  வெச்சிருப்பது  , அதை  ட்ரை  பண்ணவே  இல்லையே?

 

5   வில்லனோட  ஆராய்ச்சிக்கூடத்தை  பாம் வெச்சு  அழிச்சுட்டா   மேட்டர்  முடிஞ்சுது. அதை  செய்யாம   தலையைச்சுத்தி  காதைத்தொட்டுட்டு இருக்காங்க

 

சி.பி ஃபைனல் கமெண்ட்  -  ஏழாம்  அறிவு  படத்தில்  வில்லனின் நோக்கு வர்மம்  மாதிரி  இதுவும் ஒரு  நம்ப  முடியாத   கான்செப்ட்  தான், ஆனாலும் சுவராஸ்யமாக  திரைக்கதை  இருக்கு  , பார்க்கலாம்  ரேட்டிங்  2.75 / 5. அமேசான்  பிரைம்ல கிடைக்குது 

0 comments: