Saturday, September 05, 2020

V ( TELUGU) 2020 – சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர்) அமேசான் பிரைம் ரிலீஸ்

 First Look of Nani, Sudeer Babu from 'V' movie is out "Telugu Movies,  Music, Reviews and Latest News"

V ( TELUGU) – சினிமா  விமர்சனம்  ( ஆக்சன் த்ரில்லர்)

 

நான்    நானி  படங்கள்  என்றாலே  ஒரு மவுசு  உண்டு , ஃபேமிலி  ஆடியன்சைக்கவர்ற  மாதிரி  டீசண்ட்டான  படமாத்தான்  கொடுப்பாரு, இது அவரோட 25 வது  படம், அதனால  ஆக்சன்  மூவியா  பண்ணலாம்னு  நினைச்சிருப்பார் போல

 

ஹீரோ  ஒரு போலீஸ்  ஆஃபீசர் , ஏகப்பட்ட  சாக்சங்கள்  எல்லாம் பண்ணி  பல மெடல்கள்  வாங்கி  குவிட்டு வெச்சிருக்காரு , டிபார்ட்மெண்ட்லயும் சரி , மீடியாக்கள்லயும் சரி , பொது மக்கள்  கிட்டேயும் சரி  இவருக்கு  நல்ல  பேரு

 

ஹீரோயின்  ஒரு க்ரைம்  நாவல்  ஆசிரியை ( ஆகனும்னு   ட்ரை  பண்றாங்க )ஹீரோ கூட  நடந்த  சந்திப்புல  சில  ஐடியாக்கள்  கொடுத்து  அறிமுகம்  ஆகி, நட்பாகி , காதலாகி, கசிந்துருகி...

 

ஹீரோவோட நண்பன்   ஒரு மிலிட்ரி  ஆஃபீசர் , இவருக்கும்  ஒரு காதலி , மிலிட்ரில  இவருக்கு  லீவ் கிடைக்க மாட்டேங்குது. அதனால  அப்செட்டா  இருக்கார் இவரு  இங்கே , காதலி  அங்கே. ஒரு  கட்டத்துல  ஒரு  கலவரத்துல   ஹீரோவோட  நண்பரோட  காதலி  பலி ஆகறா

 

ஒரு போலீஸ்  ஆஃபீசர்  கொலை  செய்யப்படறாரு , கொலைகாரன்  ஹீரோவுக்கு  க்ளூ  எல்லாம்  கொடுத்து  சவால்  விடறான். இன்னும்  5 கொலை  பாக்கி  இருக்கு , முடிஞ்சா  கண்டு  பிடி  அப்டினு  ஓபனா  சேலஞ்ச்  பண்றான்

 

ஹீரோ , ஹீரோயின் ,  ஹீரோவோட  ஃபிரண்ட் ,  வில்லன் , சீரியல்  கொலைகள்   இவறை   எல்லாம்  இணைக்கும்  புள்ளியாய்  திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கு


ஹீரோவா, போலீஸ் ஆஃபீசரா  சுதீர் பாபு , காக்க  காக்க  சூர்யா  மாதிரி  ஆள் கெட்டப்பும்  நடிப்பும் ஆக்சனும் அருமை  பல இடங்களில்  இவர்  உடல் மொழி பக்கா 


 ஹீரோயினா  நிவேதா  தாமஸ் , சில  கோணங்களில்  சிட்டிசன்  பட வசுந்த்ரா தாஸ் மாதிரி  இருக்கிறார்.  முன்  பாதியில்   கேஸ்க்கு   பெரிய  உதவியா  இருக்கப்போற  மாதிரி  ஏகப்பட்ட  பில்டப்  எல்லாம்  கொடுத்தாங்க ...  ஹீரோவோட நண்பரா  , மிலிட்ரி  ஆஃபீசரா  நானி , தயாரிப்பாளரா  இருந்தும்  கூட இவருக்கான  காட்சிகளில்  ஓவர்  பில்டப்  எதுவும்  இல்லை . கச்சிதம் 


 இவருக்கு  ஜோடியா  வரும் அதிதி  ராவ் க்கு  அதிக  வேலை  இல்லைன்னாலும் , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்க்கு  இவர்  முக்கியமா    துருப்பு  சீட்டு 


  வில்லனைப்பற்றி  சொன்னா  சஸ்பென்ஸ்  போய்டும் 

10 Things You Didn't Know about Aditi Rao Hydari

சபாஷ்  டைரக்டர் 


1    மெயின்  கதை  ,   கிளைக்கதை  , ஃபிளாஸ்பேக் கதை  , ட்விஸ்ட்  எல்லாவற்ரையும்  குழப்பம்  இல்லாம  திரைக்கதையில் இணைத்தது  குட் 


2    ஓப்பனிங்கில்   வரும் ஹீரோ - ஹீரோயின்   ரொமான்ஸ்  காட்சிகள்  


3   காமெடி  டிராக் ,  பாடல்கள் , , டூயட்  ,  குத்து  சாங்  என  எதுவும்  இல்லாமல்  பர பர  ஆக்சன்  த்ரில்லராய்  தந்தது


 நச்   டயலாக்ஸ் 


1   முட்டாள்கள்  தான்  கண்மூடித்தனமா   ரூல்சை ஃபாலோ  பண்ணூவாங்க ,  என்னை மாதிரி  சாமான்யன்  பிரேக் த ரூல்ஸ்  ஃபார்முலாதான் 


2   மிஸ்!  என்ன   பண்றீங்க?


ம்ம்ம்,உங்க  கிட்டே  இருந்து  ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்


 வாட்? 


3   மிஸ்!  தண்ணி  அடிச்சதாலயோ  என்னவோ   நீங்க  பார்க்க  ரொம்ப அழகா  இருக்கீங்க 


  அதுக்கு  தண்ணி  காரணம்  இல்லை , எங்க  வீட்ல  கண்னாடி இருக்கு , என் அழகு பற்றி எனக்கு தெரியும் 


4   இப்பவெல்லாம்  நாம வயலன்சை  அதிக,ம்  விரும்ப  ஆரம்பிச்ட்டோம். பக்கத்து  சீட் ஆள் கிட்டே கூட வெறுப்பு 


5   உங்களைப்பார்த்தா  ஜெனரல் நாலெட்ஜ்  அதிகம் உள்ளவர்   மாதிரி  தெரியுது 


 ஜெனரலா  அப்படி இல்லை  , நீங்க  பக்கத்துல  இருக்கும்போது மட்டும் .. 


6   எங்க  தான்  தப்பு நடக்கலை ? எல்லா  சிஸ்டத்துலயும்  மிஸ்டேக்  இருக்கு  ,

Actress Nivetha Thomas Manager Contact details|Email Address|Phone Number

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில  நெருடல்கள் 


1  கேசுக்கு  முக்கிய  சாட்சியான  அந்த  விடுதி  காப்பாளரான  லேடி  மள மள  என  ஹீரோவிடம்  நடந்ததை  ஒப்பிப்பது  எப்படி?இவ்ருக்கு எதுவும் தெரியாது, எந்த  குறுக்குக்கேள்வியும் கேட்கலை , டைவர் ட்  பண்ணி  விட்டிருக்கலாம், ஆனா  கதை பூரா  சொல்லுது 


2   நானி  பஸ்சில்  தன்  பக்கத்து  சீட்  ஆளிடம்   தான்  ஒரு ப்ரொஃபஷனல்  கில்லர்  என  பயமுறுத்துவது  , பின்  சும்மா  தமாஷ்  என்பது  முதல்  சீனில் ஓக்கே ,  அதே  டைப்பில்  இன்னொரு  ஆளிடம்  இன்னொரு  சீனிலும் ரிப்பீட் ஆவது  எதுக்கு ?  கடுப்படிக்குது  அந்த  சீன்


3  வில்லன்  எதுக்காக  க்ளூ எல்லாம்  கொடுத்து  ஹீரோவுக்கு   ஹெல்ப்  பண்றான்? 


4  கொலை  செய்யப்படும்  ஒரு ஆள்   மரத்தின்  அடியில்  ஓப்பன்  பிளேசில்   பெட் எல்லாம்  டெக்ரேட்  பண்ணி  ....  என்ன  ரசனையோ அது ?


சி.பி ஃபைனல்  கமெண்ட் -    அமேசான்  பிரைமில்  ரிலீஸ்  ஆகி இருக்கும்  வி   சராசரி  ஆக்சன்    த்ரில்லர் . திரைக்கதை  அமைப்பில்   காக்க காக்க , இமைக்கா  நொடிகள்  உட்பட  பல படங்கள்  கண் முன் வந்து  போகுது , போர் அடிக்கலை , பார்க்கலாம்   ரேட்டிங்  2 .5 / 5 

0 comments: