Saturday, September 05, 2020

புதிய பறவை (1964)– சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 Puthiya Paravai - Wikipedia

புதிய  பறவை – சினிமா விமர்சனம்  ( க்ரைம் த்ரில்லர் )

 

ஹீரோ பெரிய  பணக்காரர் . எஸ்டேட்  ஓனர் , பங்களா எல்லாம் வெச்சிருக்கார் . பயணத்தில்  நாயகியை  சந்திக்கிறார், கூட அவரோட  அப்பா . ப்ழக்கம்  ஆனதும்  தன்  வீட்டுக்கு  , சாரி  பங்களாவுக்கு   தங்கிச்செல்ல  இருவரையும்  அழைக்கிறார். போறாங்க

 

 எஸ்டேட்டை  சுத்திப்பார்க்க  2 பேரையும்  கூட்டிட்டுப்போறார். இருவருக்கும் காதல்  அரும்புது. காதல்  வானில் இருவரும் சிறகடித்துப்பறக்கும்போது  ஒரு திருப்பம். . மயிலைக்கண்டதும்  பாம்பு  பம்முவதைப்போல  ஓடும் ரயிலைக்கண்டா  ஹீரோ  பம்மறார். பி பி  அதிகம்  ஆகி முகம்  எல்லாம்  சிவந்துடுது  ( பிபி  அதிகம்  ஆனா  தலைதான்  சுத்தும், முகம் சிவக்குமா? )

 

நாயகி  இதை  ரெண்டு  வெவ்வேற  சூழல்ல  கவனிச்சு  காரணம்    கேட்கறார். நாயகன்” ஆமா, எனக்கும்  ரயிலுக்கும்  சம்பந்தம்  இருக்கு  அப்டினு தன்  ஃபிளாஸ் பேக்கை  சொல்றார்

 

நாயகன்  ஏற்கனவே திருமணம்  ஆனவர் . கிளப்[ல  பாடும்  பாடகியை லவ் மேரேஜ்  பண்ணிக்கிட்டார் ., மேரேஜ்  ஆன  பின் தான்  தெரியுது  மனைவி  ஒரு   குடிகாரி  என்று. 2  பேருக்கும் சரிப்பட்டு  வர்லை . ஒரு வாக்குவாதம்  நடந்தப்போ   மனைவி  கோவிச்ட்டு  ரயிலில்  விழுந்து  தஎகொலை  பண்ணிக்கறா

 

 இந்த  ஃபிளாஸ்பேக்கைக்கேட்ட பின் நாயகிக்கு  நாயகன்  மேல்  காதல்  குறையலை ,மாறலை. இருவருக்கும் திருமண  ஏற்பாடுகள்  நடக்குது

 

 அப்போதான்  ஒரு திருப்பம். இறந்ததாக  கருதப்பட்ட  மனைவியின் முகச்சாயல்  கொண்ட  வேறொ ரு  பெண்  தன்  உறவினருடன்  அங்கே  எண்ட்ரி  கொடுத்து  மேரேஜை  நிறுத்தறா

 

 அந்தப்பொண்ணு  யாரு? எதுக்காக  இப்படி  பண்றா? க்ளைமாக்ஸ்ல   ஒரு ட்விஸ்ட்டோட  திரைக்கதை  சொல்லப்படுது

 

ஹீரோவா  நடிகர் திலகம்  சிவாஜி கணேசன். முதல்  பாதியில்  ரொமாண்டிக்  ஹீரோவாக அசால்ட்டாக   நடிப்பவர் , பின் பாதியில்  க்ரைம்  த்ரில்லராக   படம்   உருமாறும்போது  நடிப்பின்  பரிமாணத்தில்  கலக்கறார். எங்கே  நிம்மதி  பாடல் காட்சி  அபராம், 1990  களில்  ஆர்க்கெஸ்ட்ராக்களில்  இந்தப்பாட்டு தவறாமல் இடம் பெறும், அதே  போல் மதுரை  அபிநயா  நடன  நாட்டிய  நிகழ்ச்சிகளில்  இந்தப்பாட்டுக்கு   டான்ஸ்  நிச்சயம்  உண்டு , அழியாப்புகழ்  பெற்ற  பாடல்

 

ஹீரோயினாக  கன்னடத்துப்பைங்கிளி  சரோஜா  தேவி . அந்தக்காலத்து நாயகிகளுக்கு  கண்  மேக்கப்  மீன்  மாதிரி  ஷேப்ல  மைல வரைஞ்சு  விடுவாங்க .  செம  மேக்கப்.. ரொமான்ஸ்  காட்சியில்  கலக்கறார். அந்தக்காலத்துல  சரோஜாதேவி  நடை  என  ஒரு நடை  ஃபேமஸ் , இந்தபப்டத்திலும் அந்த  ஸ்பெஷல்  நடை  உண்டு

 

 வில்லனாக  எம்  ஆர் ராதா . அனாயசமாக  ஊதித்தள்ளிட்டார்

 

 காமெடிக்கு  நாகேஷ் , மனோரமா.,  காம்போ  காட்சிகள்  அருமை

 

 பாடல்கள்  பெரிய  பிளஸ். படத்தின்  பிரம்மாண்டமான வெற்றிக்கு  பாடல்கள் , இசை  செம ஹிட்  அடிச்சது  முக்கியக்கார்ணம். 


1  உன்னை ஒன்று  கேட்பேன்  உண்மை  சொல்ல வேண்டும், என்னைப்பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும்?


2   பார்த்த  ஞாபகம்  இல்லையோ? 


3   சிட்டுக்குருவி  முத்தம்  கொடுக்க 

‘4   எங்கே  நிம்மதி?


5  அஹா , மெல்ல நட மெல்ல நட  மேனி என்னாகும்>?

 

சபாஷ்  டைரக்டர்

 

1        பட  போஸ்டர்களில் , விளம்பரங்களில்  , பாடல்  கேசட்  ஹிட் ஆகும்போது  என எந்த  ஒரு தருணத்திலும் இது ஒரு க்ரை,ம் த்ரில்லர்  என  ப்ரமோ  தரப்படவே இல்லை என நினைக்கிறேன்,  ரொமாண்டிக் டிராமா  மாதிரி  தான்  ப்ரமோ  பண்ணி  இருக்காங்க , அது  பெரிய பிளஸ்

2        கதையில்  எதிர்பாராத விதமாக  ஒரு கொலை  நடப்பது   அந்தக்கொலையாளி யார் என்ற  சஸ்பென்ஸ்  க்ளைமாக்ஸில் உடைபடுவது  கனகச்சிதம்

3        ஹீரோவின்  முதல்  மனைவியின்  சாயலில்  வரும்  சவுகார்  ஜானகி , கார்டியனாக வரும்  எம் ஆர்  ராதா ,  2வது  மனைவியாக  வரும்  சரோஜாதேவி , அவர்  அப்பாவாக வரும் விகே ராமசாமி  அனைவருக்கும்  ஒரு சஸ்பென்ஸ் லிங்க்  இருக்கு

  லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1        எந்நேரமும்  பாட்டிலும் கையுமாக  இருக்கும் முதல்  மனைவியை  வெறுக்கும் நாயகன் எந்நேரமும்  சிகரெட்டும் கையுமாக இருப்பது நகை முரண்

2        ஹீரோ  பாடகியை  முதலில்  சந்திக்கும்போதும் , காதல்  வசப்படும்போதும் , ஒன்றாக  சுற்றும்போதும்  அவர்  குடிகாரி  என்பது  எப்படி  தெரியாமல்  இருக்கும் ? அவர்  எதையும் மறைக்காத கேர்கடர்  ஆச்சே?

3    புதிதாக  வந்த  மனைவியின் சாயல்  பெண்ணின் கைரேகை  எடுக்க  ஹீரோ அவ்ளோ  சிரமப்படுவது   நகைக்க  வைக்கிறது , வேலைக்காரி  மனோரமா  கிட்டே சொன்னா தூங்கும்போது  ஈசியா  அதை  எடுத்துக்கலாமே?எதுக்கு  பாட்டிலை எல்லாம் உடைச்ட்டு , எம் ஆர்  ராதா    அந்த  சீனில்  எண்ட்ரி கொடுப்பது   எல்லாம் வீண்

 

சி.பி  ஃபைனல்  கமெண்ட் -  கோப்பால்  லத்தா  என  ஃபேமசான  டயலாக்  உள்ள  இந்தப்படத்தைப்பார்க்கத்தவறியவர்கள் யாரா இருந்தாலும்  மிஸ் பண்ணாம  பார்த்திடுங்க , இந்தக்காலத்துக்கும் போர் அடிக்காத  திரைக்கதை . ரேட்டிங்  3 / 5

0 comments: