Friday, September 18, 2020

ஓமை கடவுளே –OH, MY GOD  (2020)=சினிமா விமர்சனம் (எ  ஃபீல்  குட் மூவி )

 ஓ மை கடவுளே –OH, MY GOD  (2020)=சினிமா விமர்சனம் ( எ  ஃபீல்  குட் மூவி )
கேரளா- கோட்டயம் – சங்கணாச்சேரி தன்யா வில் இந்தப்படம்  ரிலீஸ்  ஆனப்போ  படம்  நல்லாருக்குனு ஆல்ரெடி  பாசிட்டிவ் ரிவ்யூஸ்  வர ஆரம்பிச்சதால   ஆர்வமா  காலைலயே தியேட்டர்  போனா  அங்கே ஆடியன்ஸ் 12 பேர் தான் இருக்காங்க, மினிமம் 15  பேர் வந்தாதான்  படம்  போடுவாங்க ன்ட்டாங்க, தமிழகம்  போல் கேரளாவில் சினிமா  பார்க்கும்  ஆர்வம்  உள்ள  ஆடியன்ஸ்  அதிகம் கிடையாது. இங்கே  எல்லாம் பிளாக்  ல டிக்கெட்  விற்கறது  செல்லாது.  பைக்  , பாஸ்  கார் பாஸ்  எல்லாம் ஃப்ரீதான், இவ்ளோ  இருந்தும்  தியேட்டருக்கு   ஆடியன்சை  வரவ்ழைக்க  சிரமப்படுவாங்க , , அன்னைக்கு  மேட்னி ஷோ, ஃபர்ஸ்ட் ஷோ ஓடுச்சு, ஆனா பணி காரணமா  போக முடியல அடுத்த நாள்  படத்தையே தூக்கிட்டாங்க    இப்பதான்  ஓ டி டி ல  பார்க்க  வாய்ப்பு ந்கிடைச்சுது ஜீ 5 ல யும் , ஹாட் ஸ்டார்ல யும் கிடைக்குது

 

ஹீரோவும், ஹீரோயினும்  க்ளாஸ்  மேட்ஸ். ம் சின்ன வயசுல இருந்தே  நல்ல  நட்பு இருவருக்குள்ளும் .  ஒரு கட்டத்துல  நாயகி தடாலடியா  நாயகன் கிட்டே  எனக்கு வீட்ல மாப்ளை  பார்த்துட்டு  இருக்காங்க, எனக்கென்னவோ பழகுன  ஃபிரண்ட்  உன்னை  கல்யாணம்  பண்ணிக்கிட்டா  நல்லதுனு  தோணுது, நீ என்ன சொல்ஏ?னு கேட்க  ஹீரோவும்  ஓக்கே  சொல்லிடறான்.,  இருவருக்கும்  மேரேஜ் நடக்குது

 

 ஹீரோ காலேஜ்   படிக்கும்போது  சீனியர்  லேடி  ஒருத்தி  இருந்தா. அவளை  இப்போ மீட் பண்றார்  ஹீரோ , அவ ஒரு சினிமா  டைரக்டர். படத்துல  நடிக்க  ஆர்வமா?னு கேட்கறா. ஹீரோவுக்கு  இஷ்டம் , இவங்க 2 பேரும்   தொழில்  நிமித்தம்  அடிக்கடி  சந்திப்பதால்  பிரச்சனை  வருது . தப்பு  எதுவும்  நடக்கலை, ஆனா  நாயகிக்கு இவங்க  நட்பு பிடிக்கலை.  பிரச்சனை  பெருசாகி  டைவர்ஸ்  வரை  போகுது

 

 அப்போதான்  ஒரு ட்விஸ்ட் , கடவுள்  ஹீரோக்கு ஒரு வரம்  தர்றார்.  உனக்கு  இன்னொரு வாய்ப்பு தர்றேன், நீ இவளை  கல்யாணம்  பண்ணிக்க றதை  தவிர்த்துட்டு வேற  வாழ்க்கை  அமைச்சுக்கோ

 

இடைவேளை. இதுக்குப்பின்  நாயகன்  நாயகி , சீனியர்  லேடி  ஸ்டூடண்ட்  இவங்களை  சுத்தியே  திரைக்கதை  பின்னப்படுது. ஹீரோ  ஹீரோயினை  தவிர்த்தாரா? சீனியர்  ஸ்டூடண்ட்டை  மேரேஜ்  பண்ணாரா?  என்பது     பின் பாதி  திரைக்கதை  மற்றும் க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்

 

ஹீரோவா அசோக்  செல்வன், இளமை  கொப்புளிக்கும்  கேரக்டர், அநாயசமா  நடிச்சிருக்கார் , கிட்டத்தட்ட  வீட்டோட மாப்ளையா  அவருக்குப்பிடிக்காத  வேலை பார்க்க வேண்டி வரும்போதும் ,  தனக்குப்பிடிசச  சினிமா  நடிப்புத்துறை  வேலை கிடைக்கும்போது   அவர்  காட்டும்  ஆர்வமும்  அட்டகாசம்

 

ஹீரோயினா  ரித்திகா   சிங்.  முகம்  முழுக்க  குறும்பு , கண்களில்  காதல் , ஆடியன்சின்  மனதில்  இறுதிச்சுற்று வரை  சிம்மாசன்ம்  இட்டு அமர்கிறார். முன் பாதியில்  மனைவியாக  அதிகாரம் செய்வது , பிணங்குவது  என கலக்கறார்  என்றால்  பின் பாதியில்  ஹீரோவின்  காதலுக்கு  உதவுவது , ஐடியா கொடுப்பது  என  மாறுபட்டு  நடிப்பதில்  கூட ஸ்கோர்  பண்றார்

 

இன்னொரு ஹீரோயினாக  ஹீரோவுக்கு  சீனியர் ஸ்டூடண்ட்டாக  மீரா  கேரக்டரில்   வாணி  போஜன். திருவையாறு   அசோக் அல்வா  மாதிரி  அழகிய  முகம் , சினிமா  டைரக்டராக  ஆடிசன்  நடக்கும்  இடத்தில்  நாயகனிடம்  கெத்து காட்டுவது , தன்  பிறந்த  நாளுக்கு  நாயகன் அளிக்கும்  மாறுபட்ட  பரிசை  ரசிப்பது  என  முக  எக்ஸ்பிர்சன்களை  அள்ளிக்கொட்டுகிறார். இந்தக்கால  நடிகைகள்  முகத்தில்  திறமையைக்காட்டுவதே  அபூர்வம்தான், ஆளாளுக்கு  கிளாமர்  காட்டுவதில்  தான்  போட்டி

 

 கெஸ்ட்  ரோலில்  விஜய  சேதுபதி. மாடர்ன்  கடவுளாக   அட்டகாசம்  பண்ணி  இருக்கார் . கதையின்  ஒன் லைனை  பட ரிலீஸுக்கு  முன்  நான்  கேட்டபோது  ஏற்கனவே   அறை  என்  305 ல்  கடவுள்  நம்ம  ஊர்ல எடுபடலை , இது  என்ன ஆகப்போகுதோ என எதிர்  மறையாகத்தான்  நினைத்தேன். மேலும்  12 பி , ரன் லோலா  ரன்  டைப்  படம்  இது  என்பதால் ஏ செண்ட்டர்  ஆடியன்சை  மட்டும் தான்  கவரும் என  நினைசேன், ஆனா  என் எதிர்பார்ப்பு  பொய்க்கும் வகையில்  அனைத்து  தரப்பினருமே  ரசிக்கும்பாடியான்  படம்  தான்  இது

 

திரைக்கதை   பிரமாதம் ,   பின் பாதியில்  கதை  இன்ன திசையில் தான்  பயணிக்கும்  என்பதை  ஓரளவு  யூகிக்க  முடிந்தாலும்  அடுத்த  ச்சீன் நென்னவாக இருக்கும், க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  எதுவாக  இருக்கும்  என்பதை  யூகிக்க  முடியாத  அளவு இருந்தது

 

ஒளிப்பதிவு, இசை ,  எடிட்டிங்  எல்லாம்  கன கச்சிதம்

 

சபாஷ்  டைரக்டர்

 

1        முதல்  பாதியில்  ஹீரோவின்  கண்களுக்கு வில்லனாக  தெரிந்த  மாமனார்  பின் பாதியில்  அவருக்கு  ஆத்மார்த்த  ந்ண்பர்  ஆகும் டச்சிங்  சீன்

 

2        மீராவின்  பர்த் டே ஸ்பெஷல்  வீடியோ  கலெக்சனுக்காக  ஹீரோ , ஹீரோயின் பயணிக்கும் 2 நாட்கள்  கேரளா  டூர்  இன்னொரு ஹைக்கூ

3        ஐ லவ் யூ  மீரா  சொல்லச்சொல்லும்போது  ஹீரோ  ஐ லவ் யூ அனு என  சொல்வது , வழக்கமாக  நூடுல்ஸ்  மண்டைனு  கிண்டல்  செய்யும்  ஹீரோ  புதுசா கர்லிங்  ஹேர்  அழகு  என  வர்ணிக்கும்போது  முகம் மாறுவது

4        ஹீரோவின் நண்பனாக  வருபவர்  அது எப்படி உனக்குத்தெரியும்? என ஆடிக்கடி  கேட்பதும்  அதை  உனக்கு  சொன்னா  புரியாது  என  ஹீரோ சமாளிப்பதும் காமெடி சர வெடி

5  சீனியர்  ஸ்டூடண்ட்    லேடி டைரக்டராக  ஒர்க் பண்ணும்போது  ஏற்படப்போகும்  பிரச்சனையை  பின் பாதி  கதையில்  ஹீரோ  மாற்றூவது , அதற்கு மீரா நன்றி சொல்வது  இருவருக்குமான புரிதல்கள் கவிதை

 

5        ஹீரோவின் நண்பனுக்கும்,  நண்பனின்  மனைவிக்கும் இடையில்  சண்டை  வருவதும்  அப்போ ஹீரோ ஹீரோயின் எண்ட்ரிக்குப்பின்  இருவரும் சமாளிப்பதும் அழகியல்  காட்சி

நச்  டயலாக்ஸ்

 

1 கல்யாணம்  ஆன பின்  பழைய  ஃபிரண்ட்சை   மீட்  பண்றது    எவ்ளோ  கஷ்டம்னு  மேரேஜ்  ஆனவங்களுக்குதான் தெரியும் 

 

2   நான்  அம்மா ஆகப்போறேன்

 

 என்னடா  உளர்றே?

 

 சாரி,ம் இவளை  அப்பா ஆக்கப்போறேன்

 

3   தப்பான  டைம்ல அவ கிட்டே இருந்து  கால்  வந்தது 

 

 அப்போ  மனைவி இல்லாதப்ப    கால் வந்தா  ஓக்கேவா? 

 

 

4   நாம  பண்ற வேலையை  லவ் பண்ணிப்பண்னனும்

 

பாக்கற வேலை  பிடிக்கலைன்னா பிடிக்கற  வேலையைப்பார்க்க  வேண்டியதுதான்

 

5   பிடிச்சதை  ட்ரை பண்றோம்க்ற சந்தோசமாவது  கிடைக்கட்டுமே?

 

6   லைஃப்ல   வேணா  செகண்ட்  சான்ஸ்  கிடைக்கும், ஆனா சினிமால...?

 

7  ஒரு பெண்ணை நமக்குப்பிடிச்சிருக்கா? பிடிக்கலையா?னு தெரிஞ்சுக்காமயே கல்யாணம் பண்ணிக்கறது  தப்பு 

 

8  ஏன்  அவாய்ட்  பண்றே?

 

  நீ என்னை  அவாய்ட்  பண்னே இல்ல? இப்போ அவ  டர்ன்

 

9   மத்தவங்களுக்கு  எதிரா நாம  தனினு ப்ரூஃப் பண்ண  ஹார்டு ஒர்க் பண்ணனும் 

 

10  ஒரு லைஃப்  தானே? அவனுக்குப்பிடிச்சபடி வாழ்ந்துட்டுப்போறான்

 

11   நீ  அவளுக்குக்குடுக்கற  கிஃப்டை விட அதுக்கு நீ  போடற  எஃபார்ட் தான் அவளை இம்ப்ரெச் பண்ணும் 

 

 அது எப்படி  உனக்குத்தெரியும்?

 

 நான் பொண்ணுடா 

 

12  இந்த  கர்லிங் ஹேர் உனக்கு   அழகா  இருக்கு 

 நூடுல்ஸ்  மண்டைனு  தானே  வழக்கமா  கலாய்ப்பே?

 

 லைஃப்ல எல்லாமே  லேட்டாதான்  புரியுது

 

13    ஒரு பொருள் / உயிர் நம் பக்கத்துல இருக்கும்போது அதன் அருமை தெரியாது 

 

14   நீ  பண்றது  சுத்த  பைத்தியக்காரத்தனம்

 

 லவ் ஒரு மேஜிக், அதுல லாஜிக் பார்க்கக்கூடாது னு நீ தானே  சொன்னே?

 

15 ப்ளீஸ்  , கிவ் மீ எ  சான்ஸ் 

‘ தன்னோட  பிரச்சனைகளை  தானே ஃபேஸ்  பண்றவன் தான் ஹீரோ 

 

 

16  இந்த  மாதிரி  பொண்ணு  கிடைப்பது  வரம்

 

 

சி.பி  ஃபைனல் கமெண்ட் - லவ்  பண்ணவங்க , லவ் ஃபெய்லியர்ல  ஃபீல் பண்ரவங்க  என எல்லா தரப்புக்கும் மனதை வருடுவது மாதிரி ஒரு படம், மிஸ் பண்ணிடாதீங்க , ரேட்டிங் 3 / 5  

 

0 comments: