Monday, September 14, 2020

அந்தரங்கம் (1975 )– சினிமா விமர்சனம்

 Antharangam | Full Movie | அந்தரங்கம் | Savithri | Kamal haasan - YouTube

அந்தரங்கம்   (1975 )– சினிமா  விமர்சனம்

 

 யூ  ட்யூப் ல  அதிகம்  பேர்  பார்த்த படங்கள்  வரிசைல  டாப் 10 ல இதுவும் 1,  அப்படி என்னதான்  இருக்குனு பார்க்கலாம்னு  படம் பார்த்த  பின் தான் தெரிஞ்சுது  , நம்ம  ஆளுங்க  டைட்டிலை  வெச்சு  வேற  எதையோ எதிர்பார்த்து  ஏமாந்து  போய் இருக்காங்கனு  (  நான் ஏமாறலை)

 

நாயகியோட  அம்மா , அப்பா  இருவருக்கும்  ஆகாது . கல்யாணம்  ஆன புதுசுல இருந்தே  அப்பாவுக்கு  சீட்டாட்டம்னா  உயிரு . கைல கிடைச்சதை  அடமானம்  வெச்சு   சீட்டாடுவாரு , ஒரு டைம் எசகு பிசகா  போலீஸ் கேஸ்ல மாட்டும் சூழல், அதுல இருந்து  தப்பிக்க  மனைவி  கிட்டே  அடமானம்  வைக்க  நகையைக்கேட்கறாரு , வழக்கம்  போல்  சீட்டாட்டம்  ஆடத்தானே  போறாருனு அவர்  தர்லை, போலீஸ்  கேஸ்ல  அரெஸ்ட்  ஆகி உள்ளே  போகறாரு , அதுல இருந்தே  செம  காண்டுல இருக்காரு, ரிலீஸ்  ஆகி  வெளீயே  வந்த  பின்  அவர் முதல்  டார்கெட்  மனைவியை  டைவர்ஸ்  பண்றதுதான்

 

 ஆனா  பெண் குழந்தை  இருக்கே? அதனால  அவங்களூக்குள்  ஒரு ஜெண்டில்மேன்  அக்ரிமெண்ட், குழந்தை  வளர்ந்து  பெரிய ஆள் ஆகி  அவளுக்கு ஒரு கல்யாணம்  பண்ணி  வெச்ச  அடுத்த  நாளே  மனைவி  அவரை  விட்டுப்பிரிஞ்சிடனும், ஆனா  இந்த    ரகசியம்  வேற  யாருக்கும் தெரியக்கூடாது , குறிப்பா  மகளுக்கு   சொல்லவே  கூடாது . அதுவரை  இருவரும்  ஒரே வீட்டில்  வாழ்ந்தாலும்  தனித்தனி  தான்

 

 இதுல  காமெடி  என்னன்னா  இப்போ நான் சொன்ன  இந்த  விஷயமே  படம்  போட்டு 1  மணி  நேரம்  கழிச்சுதான்  தெரிய  வருது , சஸ்பென்சாம். என்னத்தை  சஸ்பென்சோ> 1980  கள்ல  படிச்ச  ஒரு ஜோக்  தான்  நினைவு வருது , ஃபாரீன் ஜோக் தான்

 

ஜட்ஜ் =  டைவர்ஸ்  வேணும்கறீங்க, ஆனா  1 குழந்தை  இருக்கு, எப்படி  பிரிச்சுக்கப்போறீங்க?

 

தம்பதி = ஒரு வருசம்  டைம்  குடுங்க  யுவர்  ஆனர் , இன்னொரு குழந்தை  பெத்துக்கிட்டு ஆளுக்கு  சரிசமமா  1 பிரிச்சுக்கிட்டு பிரிஞ்சுடறோம்

 

ஒரு வருசம்  கழிச்சு

 

ஜட்ஜ் =  இப்போ  என்னம்மா  பிரச்சனை ?

 

 தம்பதி = யுவர்  ஆனர் , இரட்டைக்குழந்தை  பிறந்திருக்கு ம் இன்னொரு வருசம்  டைம் வேணும் 

 

சரி , கதைக்கு  வருவோம். குழந்தை  வளர்ந்து  கல்யாண  வயசு  ஆகிடுச்சு. இப்போ  அப்பாவுக்கு  ஒரு தொடுப்பு இருக்கு , அந்த  லேடி  மகளுக்கு  லவ் பண்ன  ஐடியா தருது . அந்த ஐடியாக்கள்  எல்லாம் படு கேவலமா இருக்கு, சொந்த மகளா  போச்சு? அப்டினு நினைச்சிருக்கும் போல்

 

லவ் ஒர்க் அவுட் ஆகிடுது, ஜிம்  மாஸ்டர் ஒருவரை  பொண்ணு  லவ்வுது , மேரேஜ்க்கு  ஏற்பாடு பண்ணும்போது  மகளுக்கு  இந்த  அம்மா அப்பா அந்தரங்கம்  அக்ரீமெண்ட்  மேட்டர்  தெரிய வருது , மேரேஜ் ஆனா  அம்மாவைப்பிரிய   வேண்டி இருக்கும்னு  மேரேஜ்  பண்ணிக்கலை, மாப்ளையைப்பிடிக்கலைனு   தோசையை  திருப்பிப்போடுது

 

இதுக்குப்பிறகு  நாயகியின் காதலன்  என்ன  பண்ணார்?  நாயகனும் நாயகியும் சேர்ஃந்தாங்களா?  அவங்க   ஒரு டிராமா  போட்டு  அம்மாவையும் , அப்பாவையும் சேர்த்தாங்களா? அந்த   தொடுப்பை எப்படி கட் பண்ணி விட்டாங்க  ? என்பதை    எல்லாம் யூ ட்யூபில்  காண்க

 

அப்பாவா  மேஜர்  சுந்தர் ராஜன்.   இங்க்லீஷ்ல  ஒரு வாட்டி , தமிழ்ல  ஒரு வாட்டி  டயலாக்கை  ரிப்பீட்டும்  பழக்கம்  இந்தப்படத்தில்  வர்லை  போல , ஏமாற்றம், அதை வெச்சு  அவரை  ஓட்ட்டலாம்னு  இருந்தேன்

 

 அம்மாவா  நடிகையர்  திலகம்  சாவித்திரி, குறை சொல்ல  முடியாத  நடிப்பு , கணவர்  அவரை  சுடு சொற்களால்  திட்டும்போது  அவர்  காட்டும்   முக  பாவங்கள்  கச்சித,ம், ஆனா  சவுக்கடி   விழுவது  போல் ஒரு சிம்பாலிக்  ஷாட் வெச்சிருக்காங்க  முடியலை , ஒரு டைம் 2  டைம் வந்தா  தேவலை , அடிக்கடி  வந்தா?

 

நாயகியா  வருபவர்  தீபா நடிப்பு  ஓக்கே ரகம், பெரிய அளவில்  வாய்ப்பு  இல்லை  நாயகனாக  கமல் , ஆளுக்கு ஏற்ற  வேடம், இவருக்கு  மேஜர் சுந்தர்ராஜனை விட காட்சிகள் குறைவே. வந்தவரை ஓக்கே

 

லாஜிக்  மிஸ்டேக்ஸ்

 

1        காதல்  என்பது  தானாக  இருவருக்குள்  வரனும், இப்டி நடந்துக்கோ அப்டி கிளாமர்  காட்டு , மயங்குவான்  என்பதெல்லாம்  காதல்  என்பதில்  வருமா?

2        ஹீரோ  பெண்களுக்கு  பயிற்சி கொடுக்கும் ஜிம் மாஸ்டர்., அவர்  என்னமோ பெண்களையே பார்க்காதவர்  போல  நாயகியின் கவர்ச்சியில்  மனம் மயங்கி  காதலிப்பது  நாடகத்தனம்

3  அம்மா , அப்பா வை சேர்த்து  வைக்க   கமல்  அண்ட்  கோ போடும்  நாடகம்  நிஜமாவே ஒரு நாடகம் பார்க்கும்  உண்ர்வையே  ஏற்படுத்துது. ஏதோ மனோராமா  காமெடி  கொஞ்சம்  காப்பாத்துது

 

 சி.பி ஃபைனல்  கமெண்ட் -    டைட்டிலைப்பார்த்து  யாரும் ஏமாற  வேணாம், இது  என்னை  மாதிரியே யாரும்  ஏமாந்து  பார்த்துடக்கூடாது  என்பதற்கான விழிப்புனர்வுப்பதிவு  , ரேட்டிங்  1.75  / 5

 

 அந்தரங்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், தீபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். "ஞாயிறு ஒளி மழையில்" எனும் பாடல் கமல்ஹாசன் திரைத்துறையில் பாடிய முதல் பாடலாகும். இத்திரைப்படம் தெலுங்கில் அந்தலராஜா எனும் பெயரில் வெளியிடப்பட்டது. Wikipedia

வகைகள்தமிழகத் திரைப்படத்துறை, உலக சினிமா

0 comments: