Thursday, January 09, 2020

தர்பார் - சினிமா விமர்சனம்

tharbar movie के लिए इमेज परिणामரஜினி ஹேட்டர்ஸ்க்கு எல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 70 வயசுல ஒருத்தர் ஹீரோவா நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி அந்தப்படத்தை தன் ஒத்தை ஆள் பர்ஃபார்மெனஸ்ல தூக்கி நிறுத்தறார்னா அது சாதா விஷயம் இல்ல . 70 வயசுல நம்மால சாதாரணமா  நடக்கவே முடியாது , மூன்று முகம் ல அலெகஸ் பாண்டியன்ல காட்டின சுறு சுறுப்பை வேகத்தை  இத்தனை வருசம் கழிச்சும் காட்டி கை தட்டல் வாங்கறார்னா அது தான் ரஜினி மேஜிக்.

சரி, படத்தோட கதை என்ன? வழக்கமான தமிழ் சினிமா டெம்ப்ளேட் கதை தான், ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் , என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், மும்பை நகர் ல போதைப்பொருள்  புழக்காட்டம் , பெண்கள் கடத்தல் அதிகமா இருக்கு , அதுக்குக்காரனமான ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளறார். வில்லனோட மகனை  பிடிச்சு தந்திரமா தப்பின அவனை  தனது சமயோசிதத்தால் போட்டுத்தள்ளறார்

வில்லன் ஹீரோவை எப்படி ஃபேஸ் பண்றான்? ஹீரோ எப்படி வில்லனை வெல்றார் என்பதே கதை

 ஒரு இயக்குநரா   ஏ ஆர் முருகதாஸ் தனது முந்தைய படங்களான ரமணா , கஜினி, துப்பாக்கியில் காட்டிய திரைக்கதை மேஜிக்கை இதில் காட்ட தவறிட்டார். உதவி இயக்குநர்கள் உஷார் ஆக இருக்காங்க போல , ஆனா ரஜினி மேஜிக்கில் படம் தப்பிக்குது


 ஹீரோவா த ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்  ரஜினி.அவரு ஸ்டைலா கண்ணாடியை திருப்பிப்போடுவது இன்னும் சலிக்கவே இல்லை , தியேட்டரில்  விசில் பறக்குது. நயனுடனான  லவ்வில் பம்மும் காட்சிகளில் ரஜினியின் அக்மார்க் காமெடி நடிப்பு பளிச். ரயில்வே ஸ்டேஷன் ல போடும் அந்த ஃபைட் சீன் கிட்டத்தட்ட பருத்தி  வீரன் “ ஊரோரம் புளியமரம்’ பாட்டு டைப் ஃபைட்டு . ஆனா அது பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகல . ஹையர் ஆஃபீசரிடம் நக்கல் பண்ணுவது , மனித உரிமை கமிஷன் ஆஃபீசரை மிரட்டுவது எல்லாம் தூள் , ஆனா நடைமுறைல  சாத்தியமே  இல்லை ஹீரோயினா  போஸ்டர்ல நயன் தாரா , ஆனா நிஜமா கதைல மகளா வரும் நிவேதா தான். நல்லா  நடிச்சிருக்கு பாப்பா  . அந்த ஹாஸ்பிடல் சீன் ஆக்டிங் எல்லாம் பெண்களைக்கவரும்


  நயன் இதுல கிட்டத்தட்ட தண்டம் தான், கஜினி ல யும் இதே போல், ஏ ஆர் எம் க்கு இவர் மேல் என்ன கோபமோ? ஓப்பனிங் சீனில் புறமுதுகு காட்டும் சீனில் அப்ளாஸ்


யோகி பாபு இன்னொரு தண்டம். ஆனா காமெடியன் இருக்காப்டினு டிஸ்ட்ரிபியூட்டர்ட்ட காட்டிக்க யூஸ் ஆகறாரு

வில்லன்கள் எல்லாம் பெருசா எடுபடலை . எப்பவுமே வில்லனை பவர் ஃபுல்லா காட்டனும். இதுல மெயின் வில்லன் ஒருத்தனைக்கத்தில குத்தும் முன் 50,000 ரூபா ஒர்த் உள்ள சோஃபா செட்டை குத்தி  கூர்மையை டெஸ்ட் பண்றான் , முடில , சுனில் ஷெட்டி நடிப்பு தமிழுக்கு சூட் ஆகலை  வில்லன்கள் எல்லாம் ஆளுங்களும் அவனுங்களும் சகிக்கலை , தலைல கொண்டை போட்டிருக்கானுங்க , குதிரைவால் கொண்ட  வேற

இசை அனிரூத் , இவரோட வைகாசி பொறந்தாச்சு - தண்ணிக்குடம் எடுத்து பாட்டை அட்லீ வேலை பண்ணுனது ஊரே சிரிப்பா சிரிச்சுது, மற்ற பாட்டுகளும் எடுபடலை , அனேகமா ரஜினி படங்கள்ள பாட்டுகள் மொக்கையா ஆனது இதுலதான். பிஜிஎம்ல விட்டதைப்பிடிச்சாலும் பாடல்களை சொதப்பினது  ஓவர்

 ஒளிப்பதிவு  அருமை , ரஜினியை யூத்தா காட்டி இருக்கு கேமரா , எடிட்டிங்  இன்னும் ஷார்ப்பா இருந்திருக்கலாம். ரெண்டே முக்கால் மணி நேரம் ல அரை மணி நேரம் ட்ரிம் பண்ணலாம்

 ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து , பொது ரசிகர்களுக்கு ஒரு சராசரி மசாலா படம் , நெட்டிசன்கள் வறுப்பது போல் மொக்கைப்படம் எல்லாம் இல்லை
tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
நச் வசனங்கள்

1  ஹீரோ வுக்கானஓப்பனிங் பில்டப் பஞ்ச் பைவில்லன்
கேட்டை மூடுடா,எவன் வர்றான்னு பார்ப்போம் #dharbar


மிஸ்டர் ஆதித்யா! அடிக்கறது ரொம்ப தப்பு
அடிக்கறது தப்பா?ஆளுங்களையே தூக்கி இருக்கோம் #dharbar


3 என்ன இவரு கால் இப்படி தந்தி அடிக்குது அவளைப்பார்த்து இதுதான் கால் வைப்ரேஷனா>?


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

தர்பார் @ ஈரோடு சங்கீதா 11 am show
.. 7 லட்சத்துக்கு எடுத்திருக்காங்க,முதலீடை எடுக்க 10 நாட்கள் ஆகுமாம்.அதுக்குப்பின் வர்றது ல 3 லட்சம் மெயின்ட்டனென்ஸ் செலவு,எப்படியும் 3 லட்சம் லாபம் பார்த்துடலாம்கறார் ஓனர்" த நேம் ஈஸ் ரஜினி !#dharbar

ரஜினியின் ஹையஸ்ட் சம்பளம் தர்பார்லதானாம்,ஒயிட்லயே 100+ கோடியாம் #dharbar


பேட்ட பட ரஜினி ஏஆர் முருகதாஸ்க்கு பிடிச்சிடுச்சு போல,அதே ஸ்டைல்ல ரஜினியை டான்ஸ் ஆட வெச்சிருக்கார்,சும்மா கிழி #dharbar

இந்த டைம் ஏமாளி அசிஸ்டெண்ட் டைரக்டர் யாரும் சிக்கல போல,டைரக்டர் தடுமாறுகிறார்,கமலின் சூரசம்ஹாரம் மாதிரி முதல் பாதி #dharbar

2 கோடி சம்பளம் வாங்கற நயன் வர்றப்ப சீட்ல இருந்து எழுந்து மரியாத தர்றாரு 100+ கோடி சம்பளம் வாங்கற ரஜினி,வாட்டெ..... #dharbar

திடீர் னு கொடி பறக்குது சீன்ஸ் எல்லாம் வருது #dharbar

1992 ல பாக்யா வார இதழில் வந்த ஜோக்கைக்கூட ஞாபகம் வெச்சிருந்து யோகிபாபு சொல்றாரு,அடடே! அபாரம் பரிமளா!மொமெண்ட்
இன்னைக்கு அஷ்டமி,நாளை நவமி நாளான்னைக்கு (நாளை மறுநாள்) கவுதமியா? #dharbar

தங்கப்பதக்கம்ல சிவாஜி தடுமாறி பின் சமாளிக்கும் சீனை எல்லாம் அட்லீ ஒர்க் பண்ற லெவலுக்கு முருகதாஸ் இறங்கீட்டாரு",அடப்பாவமே! #dharbar

9  தியேட்டரில் விசில் பறந்த ஒரு சீன்
சார் புரோட்டாகால் படி நீங்க இப்ப யூனிபார்ம் போடக்கூடாது அது தெரிஞ்சுதான் போட்டுட்டு வந்திருக்கேன் ,போடா... #dharbar


ImageImage


சபாஷ் டைரக்டர்

1  எந்த உதவி இயக்குநர் குடியையும் கெடுக்காம   சொந்தமா யோசிச்சிருப்பார் போல , அதுக்கு ஒரு ஷொட்டு

2   பட ரிலீசை பிளான் பண்ணி பொங்கலுக்கு முன்பே விட்டது. 10 நாட்கள் ல அசலை அள்ளிடலாம்

3  ஹாஸ்பிடலில்   ஐசியூ வில் இருக்கும் பேஷண்ட் தப்பிப்பதும்  வாசலில் சும்மா லேசா காயத்துடன் இருப்பவர் மரணிப்பதும்,  புதுமையான நாட்சி அமைப்பு 

tharbar movie nayanthara के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − என்கவுன்ட்ர்ல
போட்டுத்தள்றப்ப ஆட்களோட பின்மண்டை ,முதுகு இப்டிதான் சுடனும்,ஆனா நம்ம ஆளு நேருக்கு நேர் நின்னு சுடறாரு,ஓட விட்டு சுடலை #dharbar


இன்னும் 2 மணி நேரத்துல நீங்க சாகப்போறீங்க னு பேஷண்ட் கிட்ட ஒரு டாக்டர் சொல்வது தார்மீக முறைப்படி தவறாச்சே? !#dharbar

என்னதான் ஹீரோ ஒரு சூப்பர் ஸ்டாரா இருக்கட்டுமே? அவரோட ஹையர் ஆபீசர் முதல்ல சல்யூட் அடிப்பதும் அதுக்குப்பிறகு ரஜினி சல்யூட் அடிப்பதும் ஓவர் #dharbar

4  வசனங்கள் இன்னும் பல நச் சேர்த்திருக்கலாம், 


 விகடன் மார்க் ( யூகம்)   41

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3/5 


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்    2.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-தர்பார்−முதல் பாதி தனுஷ் பட டைட்டில் போலவே பட்டாஸ்,பின் பாதி தடுமாற்றம்,ஓவர்ஆல் படம் ஓகே தான்,ஆனா பாட்ஷா ,படையப்பா லெவல் இல்ல,பேட்டக்கு ஒரு படி கீழே,காலா,கபாலிக்கு ஒரு படி மேலே,ரஜினி கண்களில் ஒரு வெறி புதுசு,ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ,விகடன் 41 ரேட்டிங் 2.5 / 5 #dharbar

0 comments: