Friday, October 18, 2019

கதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இதுல யாரு தமிழ் நாட்ல நெ 1?

1  சார்,கைவசம் ஒரு பாரீன் லவ் ஸ்டாரி இருக்கு ,சொல்லவா?
சொல்லித்தொலைங்க மவுண்ட் பேட்டன் பிரபுவோட சம்சாரத்தை நம்ம இந்தியநாட்டுக்காரரு கரெக்ட் பண்ணிடறாரு அடப்பாவமே,என்ன டைட்டில்? நேரு கொண்ட பார்வை 32+


===============


2 மவுண்ட் பேட்டன் பிரபு கேரக்டர் டம்மி புருஷனா நடிச்ச ஒரு கில்மா க்ரைம் த்ரில்லர் எடுக்கப்போறேன் என்ன டைட்டில்? நேரு கண்ட பாவை


================


3 தலைவரே!ஆட்சியைக்கலைக்கறதா சொன்னீங்களே? என்னாச்சு? பொறுய்யா.இப்போதைக்கு எதையாவது கலைக்கறோம்,பிற்பாடு ஆட்சியைக்கலைக்கறோம்


==============


4 டியர்,நான் உங்க"குழந்தையை என் வயித்துல சுமக்கிறேன் I Know I Know இந்தக்குழந்தையை பெத்துக்கலாமில்ல? no ஏன்? நோ மீன்ஸ் நோ தான் ,நோ மோர் ஆர்க்யூமெண்டஸ்.இரண்டாம தலைவர் ,மூன்றாம் தலைவருக்கே வேலை இல்லையாம் ,இதுல நான்காவது தலைவர் வேறயா?


==================


5 அத்தி வரதர் தரிசனத்தை இன்னும் ஒரு நாள் கூட எக்ஸ்டெண்ட் பண்ண முடியாது ஏன்? சிம்பு குணத்துக்கேற்ற பெண்ணைத் தேர்ந்தெடுக்க அத்திவரதரால்தான் முடியும்: டி.ராஜேந்தர் சொல்லி இருக்காரு,இதெல்லாம் ஆவறதில்லை


===============


6 தலைவரே!நீங்க"ஒரு"420,ங்கறது,கோடம்பாக்கம்"பூரா பரவிடுச்சு எப்டி?அது ராணுவ ரகசியமா வெச்சிருந்தமே? எந்த நடிகையைப்பாத்தாலும் 143 சொல்லிடறீங்களாம் ,அப்றம் 356 ங்கறீங்களாம்.


===============


7 ஒரு சின்ன பாலம் அதுல பைக் இல்லனா சைக்கிள் போற அளவுக்கு தான் இடம் இருக்கு.. அதுல ஒரு லாரி டிரைவர் போறாரு??? எப்புடி??
🙄
லாரிக்காரர் நடந்துதானே போறாரு?லாரில போகலையேனு மொக்கை போடப்போறீங்க,அதானே?


==============\\8

8 சார்,உங்க கடை போர்டுல மணி ட்ரான்ஸ்பர் னு எழுதி வெச்சிருக்கீங்க ஆமா மொட்டையா ட்ரான்ஸ்பர்னு மட்டும் எழுதுனா எப்படி?எந்த ஊருக்கு?ட்ரான்ஸ்பர்னு சொல்லவே இல்லை.மணி என் நெருங்கிய சினேகிதன்,இப்ப எங்கே இருக்கானோ?எப்டி இருக்கானோ?


=================

9 பிங்க் ரீமேக்கை வினோத் +அஜித் க்குப்பதிலா அட்லீ +விஜய் பண்ணி இருந்தா அதிக பணம் மிச்சம் ஆகி இருக்கும் எப்டீ? இவங்க முறைப்படி ரீ மேக் பண்ண அனுமதி வாங்கி அதுக்கு பணம் தந்திருக்காங்க,நம்மாளு ரிலீஸ் ஆனபிறகும் கூட எப்படியும் ரீமேக்ங்கறதை ஒத்துக்கவே மாட்டாரு,அந்தக்காசு மிச்சம்தானே?


=================


10
15 குருவே!ஆண்கள் அனைவரும் ராஜ்கிரண் ஆகி வருகின்றனர் ,அண்டர்டிராயர் தெரியற மாதிரி டிரஸ் பண்றாங்க என்பது உண்மையா? தொடை தெரியற மாதிரி டிரஸ் பண்றதுல பெண்கள் எல்லாம் "தை(thigh)" ஸ்பெஷலிஸ்ட் ரம்பா ஆகறப்ப ஆண்கள் ராஜ்கிரண் ஆனா என்ன தப்பு?

==========


16 பொண்ணுங்க தாய் வீட்ல சாப்பிறதை விட புகுந்த"வீட்டில் அதிகமா சாப்பிடுவாங்க
இது என்ன புது உருட்டா இருக்கு?ஆதாரம்? கல்யாணம் ஆகற பொண்ணுங்களைப்பாருங்க,ஒல்லியா இருப்பாங்க.மேரேஜ்"ஆனபிறகு அதே பொண்ணுங்களைப் பாருங்க ,குண்டா இருப்பாங்க.புருசன் காசைக்கரைக்கறதுனா அவ்ளோ குஷி


===============


17 சந்தேகப்பிராணியான சம்சாரம் புருசனை கண்காணிக்கறதுதான் படத்தோட ஒன் லைன்
ஓஹோ,என்ன டைட்டில்? SPY DEAR

===============


18 Horror Story எழுதப்போறேன்.இருங்க ,முதல்ல மேக்கப் போட்டுக்கறேன்
மேடம்,மேக்கப் போடாம எழுதுனாலே மேட்சிங்கா இருக்குமே?


===============


19 கொள்ளைக்காரி பூலான்தேவிக்கு பாரதரத்னா விருது கொடுக்க முடியுமா?
மடத்தனமா உளறாதீங்க பேங்க் லோன் மோசடி பார்ட்டி விஜய் மல்லய்யாக்கு ? லூசாய்யா நீ? அப்போ உழைக்காம மக்கள் வரிப்பணத்தை திருடியே 25 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வெச்சிருக்கற ஒரு திருடருக்கு மட்டும் விருது கேட்டா எப்டி?


===============\

20 டைரக்டர் சார்,நம்ம புதுப்படத்துல அவரை மாதிரியே துப்பாக்கி சுடும் போட்டி ல கலந்துக்கற மாதிரி"சீன் வைங்க ,தெறி க்க விடுவோம்,ரசிகர்கள் தியேட்டர்ல பிகில் கிளப்பனும்
கதை சுடறது சீன் சுடறது வடை சுடறது இது"வேணா"நமக்கு"வரும் துப்பாக்கி சுடறது ரிஸ்க் சார்


=============

1 comments:

Vivek said...

எங்கய்யா பிகில் கைதி விமர்சனம்?