Wednesday, October 09, 2019

பல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர் பேர்ல எழுது

 16 
அதற்காக, வரவேற்பு பேனர் வைக்க, அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.-கனிமொழி 

வானத்துல ஃபிளைட்ல போறவருக்கு தரைல பேனர் வெச்சு என்ன பிரயோஜனம்? ராட்சச பலூன் வாங்கி பறக்க விட்டாலாவது கண்ல படும்

==================
17 
 'நீட்' தேர்வை ரத்து செய்ய, இதே முனைப்போடு பாடுபட்டிருந்தால், தமிழகத்தில் இவ்வளவு குழப்பங்கள் இருந்திருக்காது.-கனிமொழி 

இது பற்றி விவாதம் நடத்துனா ஆளுங்கட்சி கம்பி “நீட்”டிடுதே?

===============
 18 : நடிகர் கமல், நாளுக்கு நாள், வெட்டி பேச்சு பேசுகிறார்.-அமைச்சர், பாஸ்கரன்

அன்பே சிவம் பார்த்திருப்பாரோ?

=============
 

19 
கமல் பெசும் வெட்டிப்பேச்சை , மக்கள் பொருட்படுத்தக்கூடாது.-அமைச்சர், பாஸ்கரன்
 

 பொருளே புரியாது , புரிஞ்சாதானே பொருட்படுத்த?

=================


,20   : காவிரி ஆற்றுக்கு மிகப் பெரிய படுகை உண்டு. வெள்ளம் ஏற்படும் போது, படுகையிலேயே நீர் தேங்கி நிற்கும். இதைப் பார்க்கும் போது, கடல் போல காட்சியளிக்கும். ஆக்கிரமிப்புகளால் படுகைகள் அழிந்தன; வெள்ள பாதிப்பும் அதிகரித்து விட்டது.-எஸ்.ரங்கநாதன்

 படுகையே மணற்கொள்ளையரின் படுக்கை

===============
 21  : தமிழகம், தகவல் தொழில்நுட்பத்தில், முன்னோடி மாநிலமாக வரும். அதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்தவர்களாக, மக்களை மாற்ற வேண்டும். அதற்கான திட்டம், திறன் ஆகியவை நம்மிடம் உள்ளது. அதேநேரம், இன்றைய காலகட்டத்தில் உள்ள சவால்களையும், நாம் எதிர்கொள்ள வேண்டும்-அமைச்சர், உதயகுமார்

 வாட்சப்ல வதந்தி பரப்பறதுதான் தகவல் தொழில் நுட்ப முன்னோடியா?

==============
 

22: 'நீட்' மருத்துவ தேர்வில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். கடந்தாண்டு, 'நீட்' தேர்வில் தவறுகள் செய்த மாணவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி\

 மழித்தலும் “நீட்”டலும் வேண்டாம் அப்டினு வள்ளுவரே சொல்லி இருக்காரே?

==============
 23 , இரண்டாவது முறையாக, பா.ஜ., ஆட்சிக்கு வந்தபின், நாட்டில் சர்வாதிகார காட்சிகள் தென்படுகின்றன. நாடு எதை நோக்கி செல்கிறது? -மணிஷ் திவாரி 

மூன்றாவது முறையும் பாஜக ஆட்சியே அமைக்கும் பாதையில் செல்கிறது

===============
 24 இது குறித்து, மக்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக, முற்போக்கான, பன்முகத்தன்மை கொண்ட, தேசியவாத அரசியல் கட்சிகள், கூட்டாக போராடவில்லை என்றால், சர்வாதிகார அடையாளங்கள், ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கப் போகின்றன-மணிஷ் திவாரி 

 மக்கள் சிந்திச்சு  ஓட்டுப்போட்டா  ஏன் இவ்ளோ பிரச்சனை வருது?

=============
 

25   வரும் இடைத்தேர்தலில் பெறும் வெற்றி மூலம், சட்டசபையில், அ.தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை, மேலும் இரண்டு உயர வேண்டும்-அமைச்சர், பாண்டியராஜன் :

இரட்டை தொகுதியும் இரட்டை இலைக்கே கிடைக்கனுமா? 


==============
 

26 
. ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் வேட்பாளர் வெற்றி பெற்றால், மக்களுக்கு அதிக பலன் உண்டு. எதிர்க்கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வெற்றி பெற்றாலும், அவர்களால் எந்த நன்மையையும், மக்களுக்கு செய்ய முடியாது-அமைச்சர், பாண்டியராஜன் :

 மிரட்ற தொனி தெரியுதே?

==================
 27 
,பேனர்கள் வைக்கக் கூடாது' என்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவை, நான் வரவேற்கிறேன். மழைக்காலம் வர உள்ளதால், பெரிய பேனர்கள் விழுந்தால், பாதிப் புகள் ஏற்படும். எனவே, புதுச்சேரியில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, 'டிஜிட்டல்' பேனர்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என, உத்தரவிட்டுள்ளேன். இரவு, பகலின்றி ரோந்து பணியில் ஈடுபட்டு, பேனர்கள் எங்கிருந்தாலும், போலீசாரால் அகற்றப்பட்டு வருகின்றன-கிரண்பேடி '
 

 பேனரை அகற்றிய கவர்னருக்கு நன்றினு எவனாவது  பேனர் வெச்சுடப்போறான்

=====================


 தாய்  லேண்ட்  ரிட்டர்ன் எப்போ? 

================


29 .டெங்கு பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் கவலைப்படாமல், கொசுவிற்கு முன், கொசுவிற்கு பின் என நகைச்சுவை பேசுகிறார்.-ஸ்டாலின்,


இடுக்கண்  வருங்கால் நகுகனு வள்ளுவரே சொல்லி இருக்காரே?

====================
 பல வருசமா பெண்டிங்கா இருக்கற எல்லாக்கேசையும் அவர்  பேர்ல எழுது ,மொமெண்ட்

===========================

0 comments: