Thursday, February 27, 2014

சமையல் ராணி சண்டி ராணி ஆனதன் பின்னணி என்ன? பறவை உத்தம வில்லன் ஆனது ஏன்?

இன்றைய விவாதத்தில் என்ன நடந்தது என்று ட்விட்லாங்கர் போடலாமென இந்த ட்விட்லாங்கர்.

என் டைம்லைனில் ஒரு ஆர்டி கண்ணில் பட்டது...அதன் லிங்க்.


RT ராஜா இசை அம்மா சமையல் மாதிரி..மனசார பாராட்டுவோம்.. ரஹ்மான் இசை மனைவி சமையல் மாதிரி...கட்டாயத்துக்கு பாராட்டுவோம்... #அஷ்டே

https://twitter.com/thirumarant/status/438738244763525120


அதற்கு நான் ஒரு பதில் ட்விட் போட்டேன்..

மனைவி சமையல் உங்கள் பிள்ளைக்கு அம்மா சமையல் தானே..#அஷ்டே






https://twitter.com/nilavinmagal/status/438738535634325504

இந்த ஒரு பதில் தான் சுமார் நாலு மணி நேர விவாதத்திற்கும் காரணம்.

  1. ஆஹா!!!! இந்த தலைமுறை Gap -ப சூப்பரா சொன்னீங்க
  2. பிள்ளைக்கு மனைவி வந்ததும் இந்த டிவிட்ட திரும்ப படிக்கணும் :)))
  3. :-) So, Your son would appreciate his mom ! So ARR is a hit with coming generation ! #அஷ
  4. அப்போ மனைவியாக அனிருத் தாயாக அரர...#அவ்ளோதான்...
  5. ஹா..ஹா.. இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. விஸ்வநாதன் - ராஜா, ராஜா-ரஹ்மான், ரஹ்மான் - அனிரூத்..
  6. உங்க அம்மா உங்க பொண்ணுக்கு அம்மா ஆக முடியாது பறவை... :))
  7. why are you retweeting only now ! Unconditional love - Raja and Conditional support - ARR !
  8. ஓக்கே நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்
  9. அதே...முடிவிலியாக போய்க்கொண்டே இருக்குமே ஒழிய ஒரே இடத்தில் நிற்காது..:)
  10. உதாரணத்தை எவ்ளோ தூரம்தான் இழுப்பீங்க? காரமா பேசறீங்கன்னு சொன்னா சாம்பார்ல குதிச்சுடுவீங்களா?
  11. உங்கள் அம்மாவை உங்கள் மகளும் அம்மான்னா கூப்பிடுவாங்க...1/2.
  12. உங்கள் அம்மா உங்களுக்கு மட்டுமே அம்மாவேயன்றி எல்லாருக்கும் இல்ல...அவரவர்க்கு ஒரு அம்மா இருப்பாங்க...2/2
  13. தட் செண்ட்றாயன் மூகமூடி வாங்கியாறசொன்னா மங்கி கேப் வாங்கீட்டு வந்துருக்கீங்க மொமண்ட்
  14. நீங்க கொடுக்கற ஐடியா தான் ஃபாலோ பண்ணனுமா..
  15. உண்மை வேறு. இருந்தாலும் நான் இத்தோட நிறுத்திக்கறேன். உங்களை டென்ஷனாக்க விரும்பவில்லை :))
  16. சப்பைக்கட்டு நானா... தலைமுறை க்கு இசை மாறும்..
  17. விடுங்க பறவை. இசை குறித்து எதிரெதிர் அணியில் இருந்தாலும் நட்பைத் தொடர்வோம். போய்த் தூங்குங்க :))
  18. அப்படியில்லை...இப்போதுள்ள தலைமுறை அரரவை விரும்பி கேக்குதுன்னுதான் உங்கள் பொருமல்..
  19. We have discussed this in lengths and breadths, haven't we? I see promise and hope in this move. I don't mind waiting.
  20. இந்த ரிப்ளை கொடுத்ததுக்கு தாங்க நாலு மணிநேர விவாதம்....
  21. வெறும் நாலுக்கே சலிச்சுக்கிட்டா எப்டி.இங்க தனிநபர் ரெக்கார்டு இதவிட ரெண்டுமடங்கு :)))))
  22. ஹி ஹி விதாதத்துக்கும் எனக்கும் காத தூரம்:)) இந்த ரிப்ளை சுருக்குனும் நியாயமாவும் இருக்கு செம்ம:-)
  23. :) இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தேன்...இந்த ட்வீட் போட்டு விவாதத்தில் சிக்கிட்டேன் ..:(
  24. அப்படிதான் நானும் இருந்தேன்...ஒரு பதில் ட்வீட் போட்டது குத்தமாய்யா மொமெண்ட்



ராஜா தாயாக இருக்கும்போது அரர மனைவின்னு சொன்னா, அடுத்த தலைமுறைல அந்த மனைவியாக கருதப்படும் அரர தாயாக தானே மாறுவார்.

இதை தான் சொன்னேன்..ஆனால் தாயுணர்வும்,தாய்மையும் ராஜாவுக்கே சொந்தம் என்ற பொருளில் விவாதம் தொடங்கியது...

அப்போதும் சொன்னேன் அரர க்கு அடுத்த தலைமுறைக்கு வேறு இசை அமைப்பாளர் தாயாக தெரிவார் என்று..


இதற்கு விவாதம் செய்யணும் என்றால் என்ன சொல்லணும் அரர இசை பற்றி சொல்லணும்..இசையின் குறைகளைப் பற்றி சொல்லலாம்..அதை விடுத்து,

1.அரர பிசினஸ் செய்கிறார்
2. அரர விளம்பரம் செய்கிறார்.
3. புதுமுகம்களுக்கு இசை அமைக்கலை
4. காசு வாங்கி படத்தை ப்ரொமோட் பண்றார்
5. சோனி கம்பெனிக்காக முடி வளர்த்தார்
6. எந்த படத்துக்காவது காசு வாங்காமல் இசையமைச்சாரா
7. நல்லது செய்யவில்லை
8. இசையை காசாக்குகிறார்
9. இசையை கலையாக பார்க்கவில்லை..
10. பாட்டுகளில் தோன்றி கூத்தாடித்தனம் செய்கிறார்...
11. உப்புமா கம்பெனிக்கு இசையமைக்கலை


இப்படியான கேள்விகள்....

ஒன்றே ஒன்று மட்டும் புரியவில்லை.. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொருவர் தாயாக(இசையில்) தெரிவார் என்பதே எனது ட்வீட்...அப்படியானால் இசை நல்லாருக்கா இல்லியான்னு பேசலாம்..

அதைவிடுத்து, பிசினஸ் செய்வதும்,காசு சம்பாதிப்பதும்,முடி வளர்ப்பதும் கேள்வியாக கேட்டால் என்ன செய்வது...அதோடில்லாமல் நல்லது செய்தாரா என்று வேறு..ஆக இசை நல்லா இருக்குன்னு சொல்லனும்ன்னா அவர் ஊருக்கு நல்லது செய்யனுமா..இல்ல ப்ரோமோ மூலம் காசு வாங்காமல் இருக்கனுமா..இல்ல காசே வேணாம் கலையை வளர்க்கிறேன்னு இசையமைக்கனுமா...

தாய்/மனைவி ஒப்புமை வந்ததால் நானும் அதை வைத்து சொன்னேன்..

கண்டசாலா-எம்எஸ்வி -ராஜா தாயாக இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்பவர் ராஜாவுக்கு பின் அரர,அரர க்கு பின் வேறோர் இசையமைப்பாளர் என்பதை மட்டும் மறுக்கிறார்..அதாவது ராஜாவோடு இசையானது முடிந்ததுன்னு சொல்றாரான்னு புரியலை...இல்லை 80களுக்கு பின் 90s,2000s ன்னு மாறினது தெரியலையா...

மீண்டும் மீண்டும் ஒரு புள்ளியில், அரர நல்லவரா,ஏன் ப்ரோமொக்கு வரார்,காசு வாங்காமல் இசையமைச்சாரா என்று இருந்ததே ஒழிய தலைமுறை மாறியதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லை..


இதில் பதில் என்ன சொல்வதற்கு...முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொன்னால், இல்லை நான்கு கால்கள் இருக்கு என்பதை புரியவைக்க முயல்வது முட்டாள்தனம். அது போன்று புரியவைக்கத்தான் முயன்றேன்..

கடைசியில் விவாதம் முடிந்த விதமும் எனக்கு வருத்தம்... நான்கு மணிநேர உரையாடலில் எங்கும் நான் மரியாதை குறைவாக பேசவில்லை...(அவரும் கூட)

ஆனால் அவர் முடித்த விதம்,

"ஒரு பெண் என மரியாதையாக பேசியது என் தவறுதான்.. அதற்காக நான் வார்த்தை இழக்க மாட்டேன். நான் அன்ஃபாலோ செய்துகொள்கிறேன்"


அன்ஃபலோ செய்வதனால் எனக்கு வருத்தமோ, ஃபாலோ செய்வதனால் மகிழ்ச்சியோ அல்ல.. (ட்விட்டரில் யாரோ வருவர்,யாரோ போவர் வருவதும் போவதும் தெரியாது)

ஆனால் ஒரு பெண் என மரியாதையாக பேசினேன் என சொன்னார்..அப்படியானால் நாள் ஆணாக இருந்திருந்தால் பேச்சின் தரம் தாழ்ந்திருக்குமா..

இரண்டாவதாக இன்னொரு ட்விட்டில்,

"ரகுமான் ஃபேன்சிடம் நாகரிகம் எதிர்பார்த்தது தவறுதான்"

என்று போட்டிருக்கார்..ஆக நான் என்ன நாகரிகம் இல்லாமல் பேசினேன்?...அரரக்கு ஆதரவா பேசினால் நாகரிக குறைவா?.. நான்கு மணிநேர உரையாடலில் ஒரு ட்விட்டையும் அழிக்கவில்லை..யாரேனும் நான் என்ன நாகரிக குறைவாக பேசினேன் என்று சொன்னால் தெளிவாகும்.


ஆக, கண்டசாலா-எம்எஸ்வி-ராஜா-அரர-(அனிருத்,இமான்,etc)

இப்படி சங்கிலியாக வராதாம்..ராஜா வரை மட்டுமே சரியாம்..இது தான் உங்கள் நியாயம் இல்லியா?


டிஸ்கி---- நான் ராஜா வெறுப்பாளர் இல்லை..ராஜா இசையும் பிடிக்கும்..அதையும் சிறுபிராயம் முதல் கேட்டு வளர்ந்தவள்...எத்தனையோ நேரங்களில் ராஜா இசையை புகழ்ந்தவள்....


thanx =

TwitLonger

nilavinmagal

நிலாபெண் @nilavinmagal

a



தமிழ்ப்பறவை

@Tparavai

follows you

கலிபோர்னியா தம்பதிக்கு 60 கோடி தங்கப் புதையல்

மரத்தடியில் ரூ.60 கோடி தங்கப் புதையல்: அமெரிக்க தம்பதிக்கு அதிர்ஷ்டம்

அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்தன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.62 கோடி) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 



வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்கள் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். 


அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 


இது தொடர்பாக நாணயவியல் வல்லுநர் டான் காகின் கூறியதாவது: அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப் பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மையான முக மதிப்பு 28 ஆயிரம் அமெரிக்க டாலர்களாகும் (சுமார் ரூ.17 லட்சம்). ஆனால், அந்த தங்கக் காசுகளில் சில அரிதான காசுகளும் உள்ளன. அவை ஒவ்வொன்று சுமார் ரூ.6.2 லட்சம் மதிப்புள்ளவை. 


அவற்றை நாணய சேகரிப்பாளர்கள் விலைக்கு வாங்கத் தயராகவுள்ளனர். கிடைத்துள்ள நாணயங்களில் பெரும்பாலானவை, தற்போது அருங்காட்சியகத்திலும், பெரும் நாணய சேகரிப்பாளர்களிடமும் உள்ளனவற்றை விட மிக நல்ல வடிவமைப்புடன் கூடியவை. தங்கப் புதையல் கிடைத்த அத்தம்பதி தங்களின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை. பெரும்பாலான தங்கக்காசுகளை அவர்கள் விற்க முடிவு செய்துள்ளனர்” என்றார். 




a




19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தங்கக் காசுகளில் ஒரு பகுதி a



thanx - the hindu

கிலோ ரூ.200 ரூபாய்க்கு முருங்கைக்காய் விற்பனை:ஏன்?

1கணவனின் சம்பளம் மனைவிக்கு கொடுக்கும் சட்டம் இயற்றப்படும் நீதிமன்றம்# தமிழ் இனத்தலைவர் மாதிரி 2 , 3 சம்சாரம் இருந்தா?


==================


2ஆண்ட்ரியாவை காதலித்த பாசில் மகன் பஹத்தை மணக்கிறார் நஸ்ரியா! # ஒரு ரோசக்காரியின் பிரேம கதா?




================


3சுனந்தா உடலில் காயங்கள்... மர்ம நோய் ‘லுபுஸ்’ காராணமா?: பரபரப்பு தகவல் # எப்டியோ கேஸ் இனி புஸ்



===================



4குஜராத் கலவரத்திற்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை:-் சல்மான் கான் #,அதை நீங்க சொல்லத்தேவை இல்லை்



==================



5டெல்லி போலீஸ் மீது கெஜ்ரிவால் புகார்.. விபச்சாரத்தை ஆதரிப்பதாக குற்றச்சாட்டு # அப்போ இதுக்கு முன்னால இருந்த சி எம் இதுக்கு உடந்தையா?



===================



6நஸ்ரியா பாசில் மகனை திருமணம் செய்யப்போகிறார் - செய்தி # அரங்கேற்ற வேளை எடுத்தாரே அந்த பாசிலா? ரைட்டு;-))



===================


7அரசியல் லாபத்துக்காக மத்திய அரசு செயல்படாது! - நாராயணசாமி # எல்லாம் சொந்த லாபத்துக்குதான்னு ஒத்துக்கறார் போல



=================


8பாமகவும் தேமுதிகவும் கூட்டணிக்குள் வரும் அறிகுறிகள் தென்படுது- இல.கணேசன் # அழகிரியும் ஸ்டாலினும் சேர்ந்தாலும் கேப்டனும் ,அய்யாவும் ம்ஹூம்



=================


9கடவுள் நேரில் வந்தால் காங்கிரஸின் சாதனைகளை அவரே சொல்லுவார்! - ப.சிதம்பரம் # இது கடவுளுக்கே அடுக்காதுங்க்ணா



================


10உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருக! - கருணாநிதி # ஏன்னா இது தலைவரின் குடும்பமே ஒத்துமையா கூடி வராத விழா


==================



11நான் விசுவாசமான போர்வீரன்! - ராகுல் # ஆனா தோக்கற பக்கம் இருக்கீங்க்ளே?




==================



12தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்போட்டி பிரசாந்த் பூஷன் அறிவிப்பு# தனி மரம் தோப்பாகாதுனு யாரும் கிளம்பலையா?



==================



13உடலை மறைத்து ஆடை அணிவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னை நகரில் குறைவு.- ஆய்வில் தகவல் # தமிழன் என்னைக்கும் தரம் தாழ மாட்டான்




================


14கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்! # கிழிஞ்சுது லம்பாடி லுங்கி .எல்லா காசையும் புடுங்கிக்குவாளே ராங்கி



===================



15,,,7 -UP வாங்கினா சிம்பு வீட்டுக்கே வர்றாராம்#செவன் அப் என்ன நயன் தாராவா?



=====================



16கிலோ ரூ.200 ரூபாய்க்கு முருங்கைக்காய் விற்பனை: # பனி காலத்துல அது தேவைப்படாதே ?



===================


17விரைவில் கூட்டணியை இறுதி செய்வோம்-கார்த்திக் # மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மான் கூட வெச்ச கடல் கூட்டணியே மண்ணைக்கவ்விடுச்சேண்ணே?


==================



18திமுகவில் சேர பலர் வரிசையில் நிற்கின்றனர்: - மு.க.ஸ்டாலின்.# நல்லாப்பாருங்க.எல்லாரும் வெளிநடப்பு செஞ்ச அழகிரி ஆதரவுக்கூட்டமா இருக்கும்


===================



19மோடியை எதிர்க்க பயந்து ராகுலை PM வேட்பாளராக நிறுத்தவில்லை: சுஷ்மா சுவராஜ்ு # பயம் எல்லாம் இல்லை.தோத்தா பழியை பலி ஆடு மேல போடலாம்னு ஐடியா




==================



20பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த்துடன் பேசி இருக்கிறோம்: திருமாவளவன் # நீங்க பேசுனீங்க சரி.அவர் பேசுனாரா? யோசிச்சு சொல்லுங்க



=======================



Wednesday, February 26, 2014

கூகுளில் வேலை வேண்டுமா?மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி பேட்டி

போன ஆண்டு ஜூன் மாதம் லாஸ்லோ பாக், டைம்ஸ் இதழுக்காக ஒரு பேட்டியை அளித்திருந்தார். பாக் சாதாரண ஆளில்லை. உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் மனிதவளத் துறையில் மூத்த அதிகாரி. அந்தப் பேட்டியில் அவர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறினார், “வேலைக்கு ஆள் எடுக்கும்போது ஜி.பி.ஏ-வும் (தரத்தின் அடிப்படையிலான மதிப்பெண் சராசரி) தேர்வு மதிப்பெண்களும் எந்த விதத்திலும் பயனளிப்பதில்லை. அவை நமக்கு எதையும் சொல்வதில்லை” என்கிறார் அவர். மேலும், “கல்லூரிப் படிப்பு பெற்றிராதவர்களின் எண்ணிக்கை கூகுளில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது” என்கிறார். இந்த எண்ணிக்கை சில குழுக்களில் 14% வரை இருக்கிறது.



வழி என்ன?



சமீப காலமாகப் பெரும்பாலானவர்களின் கேள்வி இதுதான்: “என் பிள்ளைக்கு வேலை கிடைப்பதற்கு வழி என்ன?” பாக் என்ன சொல்கிறார் என்பதை இவர்கள் எல்லா ரும் கேட்பது மிகவும் பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.



பாக் மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். “நல்ல மதிப்பெண்களால் நிச்சயம் பிரச்சினை இல்லைதான்” என்கிறார் பாக். கூகுளில் நிறைய வேலைகளுக்குக் கணிதம், கணக்குப் போடுதல், கணினி மொழியை எழுதுதல் ஆகிய திறன்கள் அடிப்படை. எனவே, மேற்கண்ட துறைகளில் நீங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அந்தத் திறனையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், கூகுள் தேடுவது இதற்கெல்லாம் மேலே. “வேலைக்கு ஆள் எடுப்பதில் நாங்கள் ஐந்து விஷயங்களைப் பின்பற்றுகிறோம். தொழில்நுட்பம் சார்ந்த வேலை என்றால், கட்டளை நிரல்களை எழுதும் திறனை மதிப்பிடுவோம். நாங்கள் எதிர்பார்க்கும் முதல் விஷயம் பொதுவான புரிந்துகொள்ளும் திறன்தான். தவிர, அறிவுத் திறன் (ஐ.க்யூ.) அல்ல. ஒரு விஷயத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போதும் செயல்படக்கூடிய திறன்தான் முக்கியம். சிதறிக்கிடக்கும் தகவல்களையெல்லாம் ஒன்றுதிரட்டும் திறன்தான் முக்கியம். ஒருவருடைய இயல்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான முறையான தேர்வுகளைக்கொண்டு மேற்கண்ட குணங்களையெல்லாம் நாங்கள் கண்டறிகிறோம்” என்கிறார் பாக்.



தலைமைப் பண்பு



அடுத்த விஷயம், தலைமைப் பண்புதான் என்கிறார் அவர். “வழக்கமான தலைமைப் பண்பைவிட, வளர்ந்து வரும் தலைமைப் பண்புக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நீங்கள் செஸ் சங்கத்துக்குத் தலைவராக இருந்திருக்கிறீர்களா? விற்பனைப் பிரிவின் துணை அதிகாரியாக இருந்திருக்கிறீர்களா? எப்படி அவ்வளவு சீக்கிரம் அந்தப் பதவியை அடைந்தீர்கள்? இதெல்லாம் வழக்கமான தலைமைப் பண்பைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகள். நாங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு பிரச்சினை என்றால், ஒரு குழுவின் அங்கமாக இருக்கும் நீங்கள், சரியான தருணத்தில் நீங்களாகவே முன்வந்து வழிநடத்தத் தயாராக இருக்கிறீர்களா? அதே போல், சரியான தருணத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி, மற்றவர் அந்தப் பொறுப்பை ஏற்க அனுமதிக்கிறீர்களா? இதெல்லாம்தான் முக்கியம். இந்தப் பணிச்சூழலில் திறன்வாய்ந்த தலைவராக இருப்பதற்கு அதிகாரத்தைத் துறக்கத் துணியக் கூடிய குணம் மிக முக்கியம்” என்கிறார் பாக்.



அப்புறம் என்னென்ன? தன்னடக்கமும் தன்னுடைய தாகக் கருதும் இயல்பும். “ஒரு விஷயத்தில் தனக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நினைத்து முன்வரும் குணம், அது மிகவும் முக்கியம்” என்கிறார் பாக். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முயலும் பண்பும் அப்படித் தீர்வுகாண முடியாத பட்சத்தில், தனது நிலையிலிருந்து இறங்கிவந்து பிறருடைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் அது. “தீர்வை எட்டுவதற்கு நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து என்ன செய்ய முடியும் என்பதுதான் உங்களுடைய இறுதி இலக்கு. என்னால் முடிந்ததை நான் செய்துவிட்டேன், பிறர் பங்களிப்பு செய்வதற்காக நான் இப்போது ஒதுங்கிக்கொள்கிறேன் என்னும் இயல்பு” என்று விளக்குகிறார் பாக்.



சின்ன ஈகோவும் பெரிய ஈகோவும்



மிகவும் வெற்றிகரமாக இருப்பவர்கள், அதாவது நாங்கள் வேலைக்கு எடுக்க விரும்புபவர்கள், தங்கள் நிலைப்பாடுகளில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அனல்பறக்க விவாதிப்பார்கள். ஆனால், மறுக்க முடியாத ஒரு புதிய கோணத்தை நாங்கள் அவர்களுக்குக் காட்டும்போது, “ஆமாம், நீங்கள் சொல்வதுதான் சரி” என்று ஒப்புக்கொள்வார்கள். ஒரே சமயத்தில் ஒரே நபருக்குள் பெரிய ஈகோவும் சின்ன ஈகோவும் இருக்க வேண்டும்” என்கிறார் பாக்.

“நிபுணத்துவம் என்ற விஷயத்தை நாங்கள் பெரிதும் எதிர்பார்ப்பதில்லை” என்கிறார் பாக். “நல்ல சிந்தனைத் திறன் கொண்டவர் இயல்பாகவே ஆர்வம் கொண்டவராகவும் கற்றுக்கொள்ள விரும்புபவராகவும் தலைமைத் திறனின் அறிகுறிகளைக் கொண்டவராகவும் இருப்பார். அவரை நிபுணருடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ‘நான் இதை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருக்கிறேன்’ என்று அந்த நிபுணர் சொல்வார். நிபுணர் அல்லாதவரும் பலமுறை இதுபோல்தான் சொல்வார் என்றாலும், அவ்வப்போது மிகமிகப் புதியதும் பிரமாதமானதுமான ஒரு விஷயத்தை அவர்கள் முன்வைப்பார்கள். அதன் மதிப்பு மிகவும் உயர்ந்தது” என்கிறார் பாக்.

வேலைக்கு ஆள் எடுப்பதற்கு பாக் பின்பற்றும் அணுகுமுறையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்: திறமைகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம், வழக்கத்துக்கு மாறான வகைகளிலும் அவை காணக் கிடைக் கலாம். எனவே, ஆள் எடுக்கும் அதிகாரிகள் பிரபலமான கல்லூரிகளின் பெயர்களைப் பார்த்து அசந்துவிடாமல், ஒவ்வொருவரையும் விழிப்புடனே அணுக வேண்டும். ஏனென்றால், “முறையான கல்வியை அதிகம் பெறாமல், தாங்களாகவே தடுக்கி விழுந்து கற்றுக்கொண்டவர்கள் பிரமாதமானவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை எப்பாடுபட்டாவது நாம் கண்டுபிடித்தாக வேண்டும். புற்றீசல்போல் பெருகியிருக்கும் கல்லூரிகள் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. மலைமலையாகக் கடன்தான் அதிகரிக்கிறது. உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான, உருப்படியான விஷயங்கள் எதையும் நீங்கள் கற்றுக்கொள்வதில்லை.”



கூகுளுக்குப் பெருமளவில் திறமைசாலிகள் தேவைப்படுகிறார்கள் என்பதால், அவர்களால் மரபான தர அளவீட்டு முறைகளைத் தாண்டி, அந்தத் திறமைகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்குப் போய் நன்றாகப் படிப்பதுதான் தங்கள் வருங்காலத்துக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளச் சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு பாக் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்கிறார். “எச்சரிக்கை. உங்கள் படிப்பு என்பது எந்த வேலையையும் நீங்கள் செய்யக்கூடியவர் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள் என்பதுதான் இந்த உலகத்துக்கு முக்கியம். அதற்குத்தான் உங்களுக்குச் சம்பளமும் கொடுக்கப்போகிறார்கள். புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தல் என்பது ஒரு குழு முயற்சியாக ஆகிவரும் இந்தக் காலத்தில், வேறு விதமான சில திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது: தலைமைப் பண்பு, தன்னடக்கம், ஒத்துழைப்பு, தகவமைத்துக்கொள்ளும் திறன், கற்றல், மறுபடியும் கற்றல் ஆகிய திறன்கள்தான் அவை. நீங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் இவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

thanx - the hindu 


நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை



ஒன்டர்புல் vs ஒன்றரை புல்

1. யாரோ யாருக்கோ போட்ட போட்டோ ஷேர் மென்சன் ல ஊடால புகுந்து சூப்பர்ங்க என்று ஆஜர் ஆகி அட்டென்டென்ஸ் போடுபவன் தமிழன்


=======================



2 ஆண்களின் ஆகச்சிறந்த பிரச்சனை மனம் விட்டு பேச ,அல்லது தொட்டுப்பேச ஒரு பிகர் கூட கிடைப்பதில்லை என்பதில் தொடங்குகிறது



====================



3  கோவை அருகே 10 கிமீ தொலைவில் ஓணாப்பாளையம் ல் திராட்சைத்தோட்டங்கள் இருப்பதால் பன்னீர் திராட்சை கிலோ 20 ரூபாதான் # மற்ற இடத்தில் 50 ரூ


======================


4 அன்பே மஞ்சுளா! அரைக்கிலோ மஞ்சள் பூசியும் இல்லையே உன் முகம் மஞ்சளா!



========================



5  ரமணிசந்திரன் எழுதுன 155 நாவலையும் நான் படிச்சிருக்கேன்.




அடடா டைம் வேஸ்ட் பண்ணீட்டீங்களே.5 படிச்சா போதும்.எல்லாம் ஒரே கதைதா


===============================


6   நான் டெய்லி காலைல நயாகரா அருவில தான் குளிப்பேன் # சும்மா அடிச்சு விட்றா.யாருக்குத்தெரியப்போகுது



?


==============================
7
மார்கழி மாசம் டைம் டேபிள் போட்டு கோயில்களுக்குப்போய் பிரசாதம் சாப்பிடும் மாசம்.மாதாந்திர பட்ஜெட்டில் மிச்சம் விழும் மாசம்



=========================


8  வருங்காலத்தில் பெண் ட்வீட்டர்கள் தினமும் உடுத்தும் உடையில் போட்டோ எடுத்து அப்பப்ப டி பி மாத்துவாங்க #,அவதானிப்பு



======================



9   ஒல்லியான இரு சாரைப்பாம்புகள் பவுர்ணமி இரவில் மரக்கிளையில் பின்னிப்பிணைந்திருப்பது போலே கொசுவர்த்திகள் இரண்டும்!



====================



10  புத்தகப்ரியர்கள் CHAT கூட FACEBOOK போய் தான் செய்வாங்களாம் ;-)



=====================


11 குளிர் காலத்தை சமாளிக்க புத்திசாலி வெய்யில் காலத்துலயே கம்பளி வாங்கி ஸ்டாக் வெச்சுக்குவான்.சாமார்த்தியசாலி கல்யாணம் பண்ணிக்குவான்


===================



12  சூர்யா ரசிகர்கள் பிரெஞ்ச் தாடி வைப்பாங்க.சூர்யா ரசிகைகள் என்ன செய்வாங்களோ? காதலனை அந்த கெட்டப்க்கு மாறச்சொல்வாங்க்ளோ?



====================


13 சூர்யா லேட்டஸ்ட் படத்துல பிரெஞ்ச் தாடியோட வர்றாராம். அப்போ பிரெஞ்ச் கிஸ் இருக்குமா?



====================



14 யார் படத்தில் தமிழனின் அடையாளங்கள் இருக்கோ ,யார் படத்தில் கிராமிய மணம் கமழுதோ அவர் படம் தான் பொங்கல் வின்னர்



===================


15 தீபாவளிப்பண்டிகை என்பது அத்தை பொண்ணு மாதிரி .பொங்கல் பண்டிகை மச்சினி மாதிரி # கொண்டாட்டம்



======================



16   லட்சுமிகரமான பொண்ணு கிடைச்சாலும் மேரேஜ்க்குப்பின் வாய் ஜாஸ்தியா இருந்தா கஜ லட்சுமிகரமான பொண்ணுனு சொல்லலாமா?



===================



17 மாப்ளையை பிடிக்கலைன்னு பொண்ணு சொன்னதும் மாப்ளைக்கு ஹேர் கட் பண்ணி வெயிட் குறைச்சுட்டா பிடிச்சுடுமா? #,டாடி ஒரு டவுட்டு


===================


18 மச்சினி புத்திசாலியா இருந்தா அறிவுக்கொழுந்தே! னு சொல்லாம அறிவுக்கொழுந்தியா ! என்று சிலாகிக்கவும் # எதிர் காலத்தில் பல நன்மைகள் விளையும்



=====================



19 வாசல் கூட்டும் பெண்கள் நீங்க கடக்கும்போது பணியை நிறுத்தி நீங்கள் கடக்கும் வரை காத்திருந்தால் அது மரியாதை நிமித்தமான காத்திருப்பு இல்லை



==========================



20   டெய்லி 1 1/2 புல் சரக்கு அடிக்கறவங்க லைப் ஒன்டர்புல் னு சொல்ல முடியாது.ஒன்றரை புல் னு வேணா சொல்லலாம்



==========================

சிம்பு - ஹன்சிகா லவ் பிரேக் அப் - காமெடி கும்மி

a









1.நான் இப்போ சிங்கிளாக இருக்கிறேன் - சிம்பு #,நீங்களாவது தேவலை.நாங்க சிங்கிள் டீக்கே வழி இல்லாம இருக்கோம்




=================


2  நேற்று நயன் தாரா ,இன்று ஹன்சிகா ,நாளை யாரோ? # சிம்பு வின் கழட்டிவிடப்பட்ட காதலிகள் பட்டியல்


=================


3 யோக்கியனுக்கு லவ் ஒரு தடவைதான் பிரேக்கப் ஆகும்.ஒவ்வொரு தடவையுமா?



==================


4 காலம் பூரா ஒருத்தியையே நினைச்ட்டு இருக்கும் நேர்மையான காதலனை இந்த பொண்ணுங்க நம்ப மாட்டாங்க.



======================


5 சிம்புவை ஹன்சிகா கழட்டி விட்டாரா? வழக்கம்போல் சிம்பு ஹன்சிகாவை கழட்டி விட்டாரா? பட்டி மன்றம் .நடுவர் நயன் தாரா



===================



6 லவ் பிரேக்கப் பற்றி பிரஸ் மீட்டில் அறிவித்த சிம்பு அங்கே வந்த லேடி ரிப்போர்ட்டரை பார்த்ததுமே காதல் கொண்டார் #,சும்மா



================


 7 சிம்பு வின் காதல் தோல்விக்கு 3 வது முறையாக பொறுப்பேற்று டி ஆர் தாடி வளர்த்தார்




===================



8 கேயாஸ் தியரிப்படி நயன் தாரா இப்போ சந்தோஷமா இருப்பாங்க.பிரபுதேவா ஹன்சிகா வுக்கு ஆறுதல் சொல்ல போவாரு பாருங்க



===================



9 ஹன் சிகா - சிம்பு லவ் பிரேக்கப்பால் சென்செக்ஸ் 143 புள்ளிகள் சரிந்தது.ஒபாமா அதிர்ச்சி



====================

10 உயிரினும் மேலான உடன் பிறப்பே! அம்மையாரின் ஆட்சியில் தான் இந்த லவ் பிரேக்கப்பே!



====================


11 இனி 26 2 2014 தான் காதலர் பிரேக்கப் தினமாக அறிவிக்கப்படும்.நிஜ மன் மதன் ரதி அறிவிப்பு .தேவர்கள் மகிழ்ச்சி



====================


12 தனுஷ் ன் அடுத்த படத்துக்கு ஹன்சிகா ஜோடி.சிம்பு ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி # ஜோடி ஜோசியர் ஜலபுலஜங்க்சிங் பேட்டி




======================



13 ஹன்சிகாவுக்கு ஆறுதல் சொல்ல 24500 பேர் பங்களா முன் கூடினர்.போலீஸ் தடியடி # சும்மா



====================


14  சிம்பு - தமிழ் ல் எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை கல்யாணம் # சும்மா



====================


15 பாண்டிராஜ் இயக்கத்தில் ஹன்சிகா கேரக்டரிலும் இனி நயன் தாராவே நடிப்பார்.அவருக்கு பேமண்ட்டும் டபுள்



=================


16   சிம்பு என் நண்பர் ,பிரபு தேவா என் தோழர் - ஹன்சிகா அறிவிப்பு.தமிழர்கள் மயக்கம் # சும்மா



===================


17 மோடிக்கும் அத்வானிக்கும் ஆகாது.சிம்பு வுக்கும் ஹன்சிகா மோத்வானிக்கும் ஆகாது.இதான் சார் இந்தியா


=================


18  இன்று இரவு சிம்பு ஹன்சிகா முத்தக்காட்சி இன்ட்டர்நெட்டில் வெளியிடப்படும்.10 மணிக்கு சிஸ்டம் முன் ஆஜர் ஆகவும்



======================



19  இன்னைக்கு சிவராத்திரி.நல்ல நாள்லயே தமிழன் தூங்க மாட்டான்.ஹன்சிகா லவ் பிரேக்கப் ஆகிடுச்சு.கொட்ட கொட்ட முழிச்ட்டு இருப்பான்



=================


20  ஹன்சிகா சிம்பு லவ் பிரேக்கப் டே = 26 2 2014 = கூட்டுத்தொகை =8,அஷ்டமத்துல சனி

நடிகை ஹன்சிகா, நடிகர் சிம்பு

=====================
நடிகர் சிம்பு - நடிகை ஹன்சிகா இடையிலான காதல் முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக நடிகர் சிம்பு இன்று வெளியிட்ட செய்தியில், நடிகை ஹன்சிகா உடனான உறவு முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.


தாம் இப்போது தனித்து இருப்பதாக கூறியுள்ள அவர், ஹன்சிகா உடனான காதல் என்பது கடந்த காலமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.


இந்தக் காதல் விவகாரத்தில் தாம் வருத்தம் கொள்வதில் எவ்வித விஷயமும் இல்லை என்ற சிம்பு, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தனது ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார்.


மேலும், தற்போது சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துவதாகவும், தற்போது மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் நடிகர் சிம்பு தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 thanx - the hindu

வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா

மேடம் .ஒல்லியா இருக்கறவன் தான் கில்லி யா இருப்பான்

1. தம்பதியை வாழ்த்தும்போது முருகர் வள்ளி போல் வாழ்கனு வாழ்த்தினா அவருக்கு தெய்வானை மேட்டர் தெரிஞ்சிடுச்சுனு அர்த்தமோ?# பறவை கள் பல விதம்



===================


2 ரேடியோ ஜாக்கி னு தெளிவா புரொபைல் ல போட்டிருந்தாக்கூட " மிஸ்! நீங்க எங்கே ஒர்க் பன்றீங்க ?" னு அப்பாவியா கேட்பவன் தான் தமிழன்


==================


3 போகிப்பண்டிகையை முன்னிட்டு பழைய காதலுக்கு குட்பை சொல்லி புதுக்காதலுக்கு பொங்கல் வைக்க இருப்பவர்களுக்கு வாழ்த்து



==================



4 கிளியை வளர்த்து பூனை கையில் குடுத்த மாதிரியாம்.ஏம்மா கருப்பு சுடிதார் .கிளியை முன்னே பின்னே பாத்திருக்கீங்களா? இதுல ட்ரான்ஸ்பேரன்ட் ஷால்



====================



5 ஓப்பனா பேசறேன்னு கண்டபடி பேசும் பெண்களே! நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் ஆயுள் உள்ளவரை உங்க புருசன் மறக்க மாட்டார் என்பதை தெளிக



=====================




6  பார்த்ததும் ஒல்லியா இருந்தாரு.எனக்குப்பிடிக்கல. மேடம் .ஒல்லியா இருக்கறவன் தான் கில்லி யா இருப்பான் # மியாவ்


===================


7  புருசன் எதிர் ல இருக்காரு.பொண்டாட்டி " எனக்கு சூர்யான்னா உயிரு.அய்யோ.எவ்ளோவ் ஹேண்ட்ஸம்" ங்குது. நல்ல குடும்பத்து குத்து விளக்கு



=====================


8  சூர்யா மாதிரி மாப்ளை கேக்கும் புளூ சேலை.நீங்க ஜோதிகா மாதிரியா இருக்கீங்க?



====================



9   ஏம்மா மஞ்ச சேலை.புருசன் தலை வழுக்கைங்கறதை இப்டி மேடை ல மைக் போட்டு சொல்றீங்களே, கண்ணாடி எதிர் ல போய்ப்பாரம்மா # நீயா?நானா?



===========================



10 விஜய் - என்னை எதிர்த்தா ஜில்லாவுலேயே யாரும் இருக்க முடியாது . 




அஜித் - யோசிச்சு சொல்லுங்க.ஜில்லாவிலா? ஜில்லா ஓடும் தியேட்டரிலா? 



=====================



11  விஜய் - சூரி மூலமா நைசா நக்கல் அடிச்சேன் பாத்தீங்களா?



 அஜித் - நான் யாரையும் படத்துல தாக்கல.ஆனா படம் தாக்கு தாக்குனு தாக்கிட்டு இருக்கு 



=======================



12  தமிழ் நாட்டின் சாம்பியன் கள் விஜய் யும் ,அஜித்தும் தான்.அதில் "நடப்பு"ச்சாம்பியன் அஜித் தான்



===================


13   விஜய் - ஹையா,ஜெயிச்சுட்டேன்.



 அஜித் - என்னைத்தாண்டி ,வீரத்தைத்தாஆஆஆண்டி ஜெயிக்கனும் ;-) 



======================



14 நேத்து நைட் மோகன் லால் எனக்கு போன் பண்ணி ஜில்லா ஹிட் .ஐ ஆம் ஹேப்பி ன்னாரு # சும்மா அடிச்சு விடுவோம் ;-))



====================



15 fஆரீனர்கள் அடிக்கடி நான் இந்தியா வரப்போறென் ,பிளைட் ஏறிட்டேன் னு ஸ்டேட்டஸ் போடறாங்க.நாமும் பதிலுக்கு அமெரிக்கா போறேனு அடிச்சுவிட்ருவோமா?



======================



16   புதுசா மேரேஜ் ஆன லேடி ஸ்டாf புருசர் ரிசப்ஷன் ல பேப்பர் படிச்சிட்டு இருக்கார்.டீ டைம் ல பேசிக்கவாம் #,ஷப்பா ;-))



=================



17  ஹேர்பின் பெயர்க்காரணம் என்ன? கூந்தல் பின் அல்லது சவுரி பின் தானே சரி?


=================



18   பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருந்தா 1 கழுத்துல சுளுக்கு 2 செல்லில் sms 3 ஏதோ லவ் லெட்டர் எழுதுது4 நெத்திச்சுட்டி புதுசு போட்டிருக்கு


==================


19   லேடி ஸ்டாfங்களோட புருசன் காரங்க ( தலா 1) டிராப் பண்ணிட்டு அப்டியே போறதில்லை.நம்மை எல்லாம் ஒரு பார்வை பாத்திட்டுப்போறாங்க # டவுட்டோ?



================


20   சன்டே ஒர்க்கிங் டே ன்னா டி சர்ட் ஜீன்ஸ் ஆபீஸ்க்கு போட்டுட்டு போலாமாம்.ஆனா பொண்ணுங்க என்ன டிரஸ் ல வருவாங்க னு தெரியல ஐ ஆம் வெய்ட்டிங்



==========================

Tuesday, February 25, 2014

காதலியோட உள்ளங்கை சூடா இருந்தா..............

1.  பொண்ணுங்கன்னா அவங்க முகத்துல மஞ்சள் பூசிக்குவாங்க.ஆம்பளைங்க முகத்துல கரியைப்பூசுவாங்க # தைப்பூசம் ட்வீட்



=================



2 பொண்ணுங்களை டி டி னு கூப்பிடறவங்களுக்கு ஒண்ணே 1,சொல்லிக்கறேன்.தீதின்னா ஹிந்தி ல அக்கா னு அர்த்தம் # இனி DD கூப்டுவீங்க?



==================



3  அடிக்கடி பொண்ணுங்க OMG ,omg னு சொல்றாங்களே! என்ன அர்த்தம் னு ஆக்ஸ்போர்டு டிக்சனரி ல தேடுனேன்.அது ஓ மை காடு -ன் சுருக் காம் # OMG



==================



4  நல்லா இருக்கும் தலையை கசக்முசக்னு கலைச்சுவிட்டா அது ஜில்லா ஸ்டைல் ,தலைல சுண்ணாம்பை தெளிச்சு தேய்ச்சுக்கிட்டா அது வீரம் ஸ்டைல்



======================



5  காதலியோட உள்ளங்கை சூடா இருந்தாக்கூட அவ விஜய் ரசிகையா இருந்தா "ஜில்" லா இருக்குனு தான் அடிச்சு விடனும் # லவ்வாலஜி




=======================



6   எப்போ மாமா ட்ரீட்டு ?



 அடியே உன் ஏ டி எம் பாஸ்வோர்டைக்காட்டு



==================



7 அம்ப்பயரா இருந்தா ஆட்டத்தை கவனிக்கனும்.ஆடியன்சா இருந்தா ஆடறவங்களை கவனிக்கலாம் # லேடி வாலி பால் மேட்ச்



=====================



8 விஜய் = சிவனும் ,சக்தி யும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்



.அஜித் = லாஜிக் இடிக்குதே? விநாயகரோ .முருகரோ தானே வரும்? # வி நாயகம்




=====================


 9  மிஸ் ! நான் ரெண்டையுமே முதல் நாளே பாத்துட்டேன்.




 வாட்?!!!



ஜில்லா ,வீரம் இரண்டையும் மிஸ்



====================



10 பொங்கலுக்கு 3 நாள் லீவ் என்பதால் நாளை சன்டே ஒர்க்கிங் டே வாம் #,உங்க பேலன்சிங் புத்தில தீயை வைக்க



==================


11   விஜய்க்குள் ஒரு கே பாக்யராஜ் ஒளிந்திருப்பதை ஜில்லா வில் பார்த்தேன் # காஜல் பரோட்டோ




=====================



12  திருப்பதி போய் மொட்டை போட்டப்ப கிண்டல் பண்ண அதி மேதாவிங்க வரிசைல வாங்க.# லட்டு விநாயகம் சாரி விநியோகம்



====================



13 ஜில்லா வும் வீரமும் ஹிட்டு .இதை ஒத்துக்காதவங்க தலையில கொட்டு



==================


14  முதல் இரவில்விஜய் ரசிகை = எப்போ மாமா ட்ரீட்டு .




அஜித் ரசிகன் = என்னைத்தாஆஆஆஆண்டி தொட்றி பாக்கலாம்


=================



15  விருதுப்படம் ,கலைப்படம் பார்க்கும் அறிவிஜீவிங்க எல்லாம் தயவு செஞ்சு வீரம் ,ஜில்லா மாதிரி மசாலாப்படம் பார்த்து உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க



==================



16 வேட்டி வெற்றி யின் அடையாளம் ஆகிவிட்ட படியால் மோடி ,ராகுல் ,அர்விந்த் கேஜ்ரிவால் எல்லோரும் 10 செட்.வேட்டி பர்ச்சேஸ்டு # சும்மா




====================



17  ஆபீஸ்ல லஞ்ச் சாப்டும்போது கூட 20,000 ரூ சம்பள கேங்க்,25,000 ரூ சம்பள கேங்க்னு பிரிஞ்சு தான் சாப்டறாங்க # தமிழேண்டா



=====================



18 ஆபீஸ் ல இருக்கும் விஜய் ரசிகைகள் 3,பேர்ட்ட ஜில்லா ஹீரோ டச் பிரமாதம்னேன். குமுதா ஹேப்பி குமாரு ஹேப்பி # அர்த்தம் புரிஞ்சிருக்காது



==================



19   வீரம் விமர்சகர்கள் பலர் 2/ 5 தான் குடுத்திருக்காங்களாம்.மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் க்கே 2 / 5 கொடுத்த கோஷ்டிடா அது ;-)))




=====================



20   விஜய் காஜலை என்னென்னவோ செஞ்சாரு.ஆனா அஜித் தமனாவை எதுவுமே செய்யலை.அப்போ அஜித் தானே நல்லவரு ? அப்டினு யாரும் இன்னும் கிளம்பல ?;-)



=========================