Tuesday, February 18, 2014

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு விபரம்

ராஜிவ் கொலையாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. 


இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது. 


8m
வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை அளித்த நீதிபதி சதாசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்துங்க .
Embedded image permalink
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய முவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. 


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர். 


இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி 3 பேரையும் சிறையில் இருந்து மாநில அரசு விடுவிக்கலாம் என பரிந்துரைத்தனர். 


நீதிபதிகள் கருத்து: 

 
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் சீராய்வு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. 


இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்: "தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவரும் அறிவர்" என்றனர். 


நீதிபதிகள் நம்பிக்கை:

 
இனி வருங்காலங்களில் கருணை மனுக்கள் மீதான முடிவு காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 


அது மட்டும் அல்லாது, கருணை மனுக்கள் மீதான முடிவை தேவையில்லாமல் காலம் தாழ்த்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு அவ்வப்போது மத்திய அரசும் அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


வழக்கின் பின்னணி:

 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 


இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது. 


கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். 


ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. 


இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • முருகன், பேரறிவாளன், சாந்தன்.
    முருகன், பேரறிவாளன், சாந்தன்.

thanx - the hindu 



புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள், தாமதமாக பரிசீலிக்கப்பட்டடு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். சிறையில் எங்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் தண்டனை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் எனஅறிவித்தனர்.

கொடூர குற்றவாளிகள் : இதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல. இவர்கள் சிறையில் எவ்வித கவலையும் பட்டதில்லை என்றும் மத்திய அரசில் வாதிடப்பட்டது. மேலும் ஜனாதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக இது போன்று தாமதம் ஏற்பட்டது. இதனை ஏற்று கொடூர குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணை மனு மீதான அறிவிப்பு தாமதம் ஏற்று சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. இது போன்றே ராஜிவ் குற்றவாளிகள் தண்டனையையும் குறைக்கப்படும் என்று புலி ஆதரவு அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன ? தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன்கோகை, சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது உத்தரவில்; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்க முடியாது. இவர்களின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கு தண்டனை பெற்றவர்கள் மனநிலை அனைவருக்கும் தெரியும். குற்றவாளிகள் கருணை மனு மீதான நடவடிக்கையில் காலதாமதம் ஏற்கப்படுகிறது.



 இது போன்ற காலதாமதத்தை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க போதிய சட்டநடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படாது என நம்புகிறோம். மத்திய அரசு ஜனாதிபதியிடம் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் காலக்கெடு விதிக்க வேண்டும். இந்த 3பேர்களின் தூக்கை ஆயுளாக குறைக்கின்றோம். தேவைப்பட்டால் 3 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய , மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 432 படி முடிவு எடுத்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி: இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.முக., காலத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக தியாகு, நளினி, கலியபெருமாள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த 3 பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே இந்த 3 பேரும் அநுபவித்த சிறைத்தண்டனையை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூன்று பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்,' என்றார்.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி: பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்காக நான் வீதி, வீதியாக அலைந்திருக்கிறேன். பல நாள் தீர்ப்புகளால் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.இந்த கொலைக்கும் எனது மகனுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் காலை முதல் இந்த தீர்ப்புக்காக பட, படப்புடன் காத்திருந்தேன், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் எனது மகன். இவனது தண்டனை குறைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் முதல்வர் ஜெ., அம்மா எனது மகனை விடுதலை செய்வார் என நம்புகிறேன். இவ்வாறு அற்புதம் கூறினார்.


Retweeted by
RT: இந்தப் புன்னகை சொல்லும் பெருங்கதையை..

நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள்: வைகோ : இந்த தீர்ப்பு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். எந்த குற்றமும் செய்யாத 3பேரும் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க நாள். அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வித குற்றமும் செய்யாமல் 23 ஆண்டு சிறையில் இருந்து வந்தவர். ராம்ஜெத்மலானியின் வாதம் காரணமாக இந்த வெற்றி கிட்டியுள்ளது. இவருக்கும் நன்றி . மரணத்தண்டனை சட்டம் இருக்கின்ற நாடுகளை விட மரணத்தண்டனை இல்லாத நாட்டில் உள்ள குற்றம் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

thanx - dinamalar

D-Day - சினிமா விமர்சனம் ( ஹிந்தி)

தாவுத் இப்ராஹிம் மாதிரி ஒரு டான் பாகிஸ்தான் ல இருந்துக்கிட்டு இந்தியா மேல தீவிரவாதத்தை ஏவி விடறான். அவனைப்பிடிக்க இந்தியாவின் ரா பிரிவு ஆஃபீசர்கள்  4 பேர் இந்தியாவில்  இருந்து பாகிஸ்தான் வர்றாங்க .சாதா தாதா , லோக்கல் ரவுடியை ஒரு இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் பண்ணப்போனாலே எம் எல் ஏ கிட்டே இருந்து ஃபோன் வரும் . இண்ட்டர்நேசனல் கிரிமினல் கைது செய்யப்படும் சூழல் அமைஞ்சா அவன் கிட்டே இருந்து  என்னென்ன எதிர்ப்புகள் எந்தெந்த ரூபத்தில் வரும் ? அந்த 4 பேருக்கும் எப்படி நெருக்கடி கொடுப்பான்? இதை எல்லாம் பிரமாதமா திரைக்கதை மூலம் சொல்வது தான் டி டே படத்தின்  சாராம்சம்


படத்தில்  முதல் நாயகன் திரைக்கதை ஆசிரியர் தான் . மிகப்பிரமாதமா காட்சிகளை நகர்த்திட்டுப்போறார். அடுத்து எடிட்டிங்க் . பக்கா கட்டிங்க் அண்ட்  பிரசண்ட்டேஷன் . ஒளிப்பதிவு பிரமாதம் . வசனங்கள் நறுக் சுருக் . இந்தியாவின் இணை இல்லாக்கலைஞன் கமல் ஹாசனின் குருதிப்புனல் , விஸ்வரூபம் பாணியில் அமைந்த இந்திய சினிமாவின்  முக்கியமான படம் இது . கடந்த 10 வருடங்களில்  இது போல் டெக்னிக்கலாக, பக்காவாக ஒரு படம் வரவில்லை


தீவிரவாதிகள் எப்படி உருவாக்கப்படறாங்க ? அவர்களை எப்படி மூளைச்சலவை செஞ்சு  ரெடி பண்றாங்க என்பதை விளக்கமா சொல்லி இருக்காங்க . கதைப்போக்கே  ஒரு தீவிரவாதி கதை சொல்வது போலத்தான் அமைக்கப்பட்டிருக்கு 




தில் சே ( உயிரே)  படத்தில் மனீஷா கொய்ராலா மூலம் தீவிரவாதியின் கடைசி உயிர்வாழ் நாள் மன நிலையை துல்லியமா மணிரத்னம் ஏற்கனவே சொல்லி இருந்தாலும் அதில்  காதல் கதை முன்னிலைப்படுத்தப்பட்டதால் தீவிரவாதத்தின் தீவிரம் மட்டுப்பட்டே இருந்தது . ஆனால் இந்தப்படத்தில் தீவிரவாதியின் மூலமே கதை சொல்லப்படுவதால் பார்வையாளனின் மனம் அவன் சார்பாகவே எண்ணிப்பார்க்கும் விதத்தில்  இருக்கு


படத்தின் போஸ்டர்  டிசைன்கள் , விளம்பரங்கள்  வியாபார உத்தியாக இது ஒரு மாதிரியான படம் போல் காட்சி  கொடுத்தாலும் இது ஒரு நல்ல  படம். 


ஸ்ருதி ஹாசன்   விலை மாது கேரக்டரில்  கவுரவத்தோற்றத்தில் (!!) வருகிறார்.இதில் ஒரு நகை முரண்  -யாராவது ஒரு விஐபி படத்தில் அகவுரவமான கேரக்டரில் நடித்தாலும்  சில காட்சிகள் மட்டுமே வந்து போனால் அது கவுரவத்தோற்றம் ஆகிவிடும் . 


அவரது  முக்கியமான கஸ்டமர்  உனக்கு என்ன வேண்டும் என கேட்க தன் முகத்தை சிதைத்தவனைப்பழி வாங்கனும் என்பதை தன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்  குரலில் மட்டும் வெறுப்பை நனைத்து சொல்வது  இந்திய சினிமாவுக்குப்புதுசு 




க்ளைமாக்சில்  மாட்டிக்கொண்ட தாதா கண்களில் எந்த உயிர் பயமும் இல்லாமல்  நீங்க என் மேல கை வைக்க  முடியாது என தெனாவெட்டாகப்பேசும் காட்சி கிளாசிக் 

தீவிரவாதியின்  மனைவி  போலீசால் ஏர்போர்ட்டில் வளைக்கப்படுவது , பின் விசாரணையில்  மெல்ல மெல்ல அவரை இறுக்க  அதிகாரிகள் கேள்விக்கணைகள் தொடுப்பது , தீவிரவாதியின்  குழந்தை  ஃபோனில் பேசுவது , எப்பேர்ப்பட்ட ஆளுக்கும் குழந்தைப்பாசம் இருக்கும் என்பதைகாட்சியால் விளக்கும் இடம் என பிரமாதமான காட்சிகள் படம் நெடுக . 

இந்தப்படம் பாகிஸ்தான் , இந்தியா இரு நாடுகளும் தடை செய்ய வாய்ப்பு உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பது  இயக்குநரின் துணிச்சல் . இரு அரசுகளையும் மானாவாரியா விளாசி , விமர்சித்து பூடகமான வசனங்கள் ஆங்காங்கே  இருக்கு 


 படம்  முழுக்க பாகிஸ்தான் - கராச்சியில்  படமாக்கப்பட்டிருக்கு . நாம் பார்க்காத லொக்கேஷன்கள் 


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1.  தன் கணவர்  ஒரு தீவிரவாதி என்பதை ஒரு மனைவி கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பவே  முடியலை . ஏன்னா பொண்டாட்டிக்குத்தெரியாம வெளில  ஒரு டீக்குடிச்சுட்டு வந்தாக்கூட டக்னு கண்டு பிடிச்சு கேள்வி கேட்பவங்க அவங்க. கணவர்  ஏகப்பட்ட பணம் திடீர்னு சம்பாதிக்கறார், எப்படி வந்தது ? என கேட்க மாட்டாரா? 



2  தன் மனைவி , குழந்தையை ஏர் போர்ட்டில் வழி அனுப்பி விட்டு அவர்  போன பின்பு  விமானம்  கிளம்பலை என்பதும் நம்ப முடியலை . இவ்வளவு சிக்கலான  ஒரு சூழலில்  விமானம்  கிளம்பிய பின் தானே அவர் அங்கிருந்து  கிளம்பனும் ?

3  தீவிரவாதிகள்  எப்பவும்  பரட்டைத்தலையோட , தாடியோட தான் இருக்கனும்னு ஏதாவது   ரூல்ஸ் இருக்கா? அவன் நீட்டா , டீசண்ட்டா இருக்க மாட்டானா? இப்டி இருந்தா  ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சிடலாமே? 


4 அது ஏன் எல்லா தீவிரவாதப்படங்களிலும் தீவிரவாதிகள் என்றாலே  முஸ்லீம்கள் தான் 100% என காட்சிகள் வைக்கனும் ? சர்ச்சையைத்தவிர்ப்பதற்காகவாவது   10 தீவிரவாதிகளைகாட்டும்போது அதில் 2  இந்து , 2  கிறிஸ்டியனைக்காட்டலாமே?  ஏன்னா இப்படி காட்டும்போது   குழந்தைகள் மனதில்   முஸ்லீம்கள் என்றாலே  ஒரு பயம்  படிந்து  விடும் . இது எதிர்கால சந்ததிக்கு நல்லதில்லை 




பிரமாதமான நச் வசனங்கள் ஒரு சாம்ம்பிள் 






1. இந்தியா வின் பெரிய மைனசே தப்பானவங்களுக்கு வாய்ப்புக்குடுப்பதே # டி டே

==========================


2 விசுவாசமா ,? வியாபாரமா? முடிவு உன் கைல. இனி விசுவாசத்துக்கு இடமே இல்லை #,டிடே


===========================


3   நம்ம எதிரி பாம் போடறவங்க கிடையாது.பாம் ரெடி பண்ணிக்குடுக்கறவங்க தான் #,டி டே


==================


4 நீங்க அவங்களுக்கு எதிரி மட்டும் தான்.நான் துரோகியும் கூட.என் சாவு எப்டி இருக்குமோ?#டிடே


=================


5  அழகான வைப்பாட்டி வைக்காதவன் ஆம்பளையே கிடையாது.நான் ஆம்பளை #,டி டே


========================


படத்தின்  முக்கிய கேரக்டர்களை Irrfan Khan, Rishi Kapoor, Arjun Rampal, Huma Qureshi, Shruti Haasan  பண்ணி  இருக்காங்க


சி பி கமெண்ட் - ஸ்ருதி ஹாசன் -ன் D-DAY ( HINDI) -பிரமாதமான மேக்கிங். எடிட்டிங்.ஷார்ப் வசனம்-ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கானது, ஆரண்ய காண்டம் மாதிரி  உலகப்படத்துக்கு இணையான படம் . சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்



ரேட்டிங் = 3 / 5



a








இழுக்க இழுக்க இன்பம் தருவது இதானா? ஈஸ்வரா!

1, வங்கிகள் 2 நாள் வேலை நிறுத்தம்: நாட்டுக்கு ரூ.30,000 கோடி இழப்பு # ஊழியர்கள் சம்பளத்தில் பிடிங்க



==================




2 விஜயகாந்த் 400 கோடி கேட்கிறார் வைகோ பரபரப்பு புகார்-செய்தி # கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடிவா.நமக்கு ஏன் இந்த அங்கலாய்ப்பு?





======================



3 ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ்..# ஒல்லியா இருக்கும் பொண்ணுங்களுக்கு குரல் கொடுக்க மாட்டீங்களா அய்யா?




===================




4 3-வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை: நரேந்திரமோடி பேச்சு.# காங் எதிர்ப்பு ஓட்டுக்களை காங் க்கு சாதகமாக பிரிக்கும் ராஜ தந்திரம்




==================





5 நேர்மையான அதிகாரிகளை சாதாரண தவறுகளுக்காக துன்புறுத்தக்கூடாது: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு# ஸ்பெசல் தவறு ன்னா 1 3/4 லட்சம் கோடி ஊழல்?





===================




6 ஒபாமாவுக்கும் பாப் பாடகிக்கும் தொடர்பு? # ஏ பாப் பா நீ கொஞ்சம் நில்லு .எத்தனை நாளா இந்த கனெக்சன் சொல்லு





===================




7 கருப்புபணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்படும் - மோடி # கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது.ஒளிப்பதைத்தடுக்க முடியாது




=============================



8 டாப்சிக்கு ஒ.கே சொல்லிவிட்டு கழற்றி விட்ட ஆர்யா # காதல் இளவரசன் ஆர்யா ,கரெக்ட் பண்ண பிகர்கள் எண்ணிக்கையும் ஆறுய்யா



============================



9 விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் ஜிகே வாசன்# என்னமோ ஷங்கர் + ரஜினி காம்போ ரிலீஸ் மாதிரி பில்டப் தராரே?



==============================


10 ரஜினியின் கோச்சடையானுடன் மோதும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் # ஓப்பனிங் ல ரஜினி கலக்கிடுவார்.அதுக்கு அப்புறம் விஷால் தான் வின்னர்




==========================



11 மோடியுடன் ஒரு கப் டீ... +அகமதாபாத்தில் இன்று அதிரடி தொடக்கம்.. 1000 டீக் கடைகளில் ஒளிபரப்பு # அரசியல் டீவிரதவாதி



==========================


12 நடிகை நமீதாவை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போடும் கட்சிகள் # இழுக்க இழுக்க இன்பம் தருவது இதானா? ஈஸ்வரா!




=========================



13 பாக். தியேட்டடில் குண்டுவெடிப்பு: ‘பலான’படம் பார்க்க வந்த 10 பேர்் பலி # சொர்க்கம் பாக்க வந்தவங்க சொர்க்கத்துக்கே போய்ட்டாங்க அடடே!



==========================


14 திமுக - காங் கூட்டணியை மக்கள் ஏற்பார்கள் - திருமா.# ஏகப்பட்ட.வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பார்கள்



========================



15 பாராளுமன்றத்தில் ரகளை: என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங்். # அப்போ தீவிர சிகிச்சை தேவைப்படும்.ராஜினாமா செஞ்சு ஓய்வெடுங்க




==========================


16 வடமாநில மக்களும் ஜெ பிரதமராக விரும்புகிறார்கள்: செல்லூர் ராஜூ பேச்சு.# ஜெயப்ரதாவை சொல்லி இருப்பாங்களோ?




=============================



17 ரித்திஷ் எம்பி விளக்கம்: உள்கட்சி தேர்தலை நடத்தாவிட்டால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.# நடத்துனா குடும்பத்துல குழப்பம் வரும்.




=====================================




18 காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் மனு.# ஏய்யா நீங்க கில்மா பண்ண காவல் துறை காவல்?




===================================


19 ராமாயணம் படத்தில் சீதையாக நயன் நடித்தார். காதலர் தினத்தில் காதலுக்கே கவுரம் ( கவுரவங்கள்?) சேர்த்த நயன் ன் படம் ரிலீஸ் # நகை முரண்




===========================



20 மணி ரத்னம் ,பாலா இணைகிறார்கள் - செய்தி # மணி - ஹீரோயினை அழகா காட்டனும் . பாலா - சரி உங்க விருப்பம்.ஆனா ஹீரோ வுக்கு மொட்டை அடிச்சுடனும்




===========================

Monday, February 17, 2014

அத்வானி தன் வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ் ஊழல் பட்டியல்

புதுடில்லி:கடந்த, 10 ஆண்டு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில் பகிரங்கமாக பட்டியலிட்டுள்ளார். 'சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சி இது' என்றும், கடுமையாக, அவர் விமர்சித்துள்ளார். அது போல், பெருமையாக பிரதமர் பதவியில் அமர்ந்த மன்மோகன் சிங், ஊழல்வாதி என்ற பெயருடன், வெளியேற உள்ளார் என்றும் அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தன், வலைப் பக்கத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, 10 ஆண்டு கால, ஐ.மு., கூட்டணி அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களையும், அவர், பட்டியலிட்டுள்ளார்.
'கை சுத்தமானவர்':


அவர் கூறியுள்ளதாவது:நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, நிதி அமைச்சராக பதவி வகித்தவர், மன்மோகன் சிங். அப்போது, அவருக்கு, 'கை சுத்தமானவர்' என்ற, நற்பெயர் இருந்தது. அவர், பிரதமர் பொறுப்பை ஏற்றபோது, படித்தவர்களும், பொருளாதாரவாதிகளும், பொதுமக்களும், அவரிடம் பெரும் எதிர்பார்ப்பு

வைத்திருந்தனர்.ஆனால், அவரின், 10 ஆண்டு கால ஆட்சி, சுதந்திர இந்தியாவின், மிக மோசமான ஊழல் ஆட்சியாக திகழ்ந்தது. நாட்டில், இதுவரை இருந்த அரசுகளிலேயே, மிக மோசமான அரசை நடத்தியவர் என்ற, களங்கம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.டில்லியில் நடந்த, 'காமன்வெல்த்' விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த, பிரமாண்ட ஊழல், அவரின் ஆட்சி கால ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

எம்.பி.,க்களுக்கு லஞ்சம்:


இதையடுத்து, 'ஸ்பெக்டரம் '2ஜி' ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததும், வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேடுகள் அனைத்தும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தாக்கல் செய்த அறிக்கை வாயிலாகவே, வெளி உலகிற்கு தெரிந்தன.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, மிக மோசமான முறைகேடு, பார்லிமென்ட்டில் நம்பிக்கை ஓட்டு பெறுவதற்கு, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தான்.அமெரிக்காவுடனான, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன.இதையடுத்து, அரசுக்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், நம்பிக்கை ஓட்டு பெறுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுக்க, பேரம் பேசப்பட்டது.
கட்டுக்கட்டாக:


இதுகுறித்து, மூத்த காங்., தலைவர் ஒருவர், அமெரிக்க அதிகாரி ஒருவருடன் பேசிய விஷயங்களை, 'வீக்கிலீக்' இணையதளம் அம்பலப்படுத்தியது. பத்திரிகை ஒன்றிலும், இந்த செய்தி வெளியானது.கடந்த, 2008, ஜூலை, 22ம் தேதி, பார்லிமென்ட் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக அமைந்தது. மூன்று எம்.பி.,க்கள், நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதற்க்கு, தங்களுக்கு பேரம் பேசப்பட்டதாக, கட்டுக் கட்டாக, ரூபாய் நோட்டுகளை, பார்லிமென்டில் கொண்டு வந்து கொட்டினர்.தற்போதும், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் பேர ஊழல் ஆகியவை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஊழல்கள் மட்டுமல்லாமல், காங்., கட்சியின் குழப்பமான நடவடிக்கைகளால், பார்லிமென்டும் அடிக்கடி முடங்கி விடுகிறது.தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மசோதாவை தாக்கல் செய்தபோது, பார்லிமென்ட்டில் நடந்த அமளி, பார்லிமென்ட் வரலாற்றில், இதுவரை நான் பார்த்திராத ஒன்று.இவ்வாறு, அத்வானி, அதில் எழுதியுள்ளார்.

அத்வானி வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல்

1. காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்
2. '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல்
3. நம்பிக்கை ஓட்டெடுப்பில் நடந்த முறைகேடு
4. நிலக்கரி ஊழல்
5. ஹெலிகாப்டர் ஊழல்



நன்றி - தினமலர் 


 மக்கள் கருத்து \\\\\


1 ganapati sb அத்வானி ஒரு சிறந்த தன்னலமற்ற தலைவர். நாட்டின் ஜனநாயகம் காப்பதற்காக அவர் செய்த பங்களிப்புகளை எதிர்கால வரலாறு எழுதும். emergencY ஐ எதிர்த்து சிறை சென்றார். தன்னை விட்டால் வேறு கட்சி இல்லை என்ற மமதையில் இருந்த காங்கிரசுக்கு மாற்று உண்டு என ஜனதா கட்சி உருவான போது அதில் இணைந்து தகவல் ஒலிபரப்பு துறை மந்திரியாக இருந்து தணிக்கை முறையில் வெளியான செய்திகளை நடு நிலையோடு சுதந்திரமான செய்து வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். ஜனதா கவிழ்ந்து கலைந்த போது மீண்டும் எதிர்க்கட்சி இல்லாமல் காங்கிரஸ் அராஜக ஆட்சி நடத்தியபோது BJP யை வாஜ்பாயோடு இணைந்து உருவாக்கி வெறும் 2 MP கொண்ட கட்சியை 180 MP கொண்ட கட்சியாக congressirkku maatraana aalum கட்சியாக matri makkalukku தேர்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்கி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். தானே பிரதமராகும் வாய்ப்பு இருந்தும் வாஜ்பாயை பிரதமராக்கினார். எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் இரையாகாமல் பொதுவாழ்க்கையில் தூய்மையை கடைபிடித்து வருகிறார் மோடி ஜெட்லி நாய்டு மகாஜன் சிந்திய சௌஹான் ராமன் கத்காரி ராஜ்நாத் போன்ற அடுத்தகட்ட தலைவர்களை இனம் கண்டு உருவாக்கி அவர்கள் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்கு பெற தடையாக இருக்காமல் அவர்களுக்கு பிரச்சனை வரும்போது அவர்களுக்கு துணையாக நின்று வழிகாட்டினார் கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் பயணம் செய்து அணைத்து பிரச்சனைகள் பற்றி தெளிவான அறிவும் அதற்க்கான தீர்வும் வைத்திருந்தார் சென்ற தேர்தலில் அவர் பிரதமராகி இருந்தால் கண்டிப்பாக கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்திருப்பார். அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்திருந்தால் மோடியே தலைமை ஏற்க்க வந்திருக்க மாட்டார். அவர் ஆரம்பக்கவலை மோடி பற்றி இல்லை. நிதிஷ் மம்தா நாய்டு ஜெய பட்நாயக் போன்றோரோடு உருவாக வாய்பிருக்கும் கூட்டணி மோடை பற்றிய பொய் பிரசாரங்களால் இழக்க வேண்டி இருக்குமே என்பதால்தான். ின்னர் மோடியின் வளர்ச்சி பிரசார அலையில் மற்ற கூட்டணிகள் அமையாவிட்டாலும் பரவாயில்லை என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்து மோடிக்கு ஆதராவாக உள்ளார். அத்வானி ப்ரனபிர்க்கு அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். சுயநலமுள்ள தலைவர்களை விமர்சிக்கும் பொது அத்வானி போன்ற தன்னலமற்ற தலைவர்களை நாடு போற்றினால் தான் நல்ல அரசியல் தலைவர்கள் பலர் உருவாவார்கள்.



2
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
17-பிப்-201407:03:37 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஊழலை பற்றி பாஜக பேசுவதா ??? ஊழலை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக இரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்... சவ பெட்டியிலும் ஊழல் செய்த உத்தமர்கள் தானே இந்த பாஜக அரிசியல் வியாதிகள்.. இன்று நடந்த மாபெரும் 2 g ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவரே பாசக் கட்சியை சேர்ந்த பிரமோத் மகாஜன் தானே ??? மறுக்க முடியுமா ? காங்கிரஸ் செய்த பல ஊழல்களில் பாஜகாவின் பங்கு கண்டிப்பாக உண்டு என்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிறிய உதாரணம் - இயற்கை எரிவாயு ஊழலில், நமது இந்திய மக்களை ஏமாற்றி, காங்கிரஸ் , பாஜக கட்சிகளின் துணையுடன், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கொள்ளை அடித்தது மட்டும் - 1.2 லட்சம் கோடி ரூபாய் என்று தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது. இது குறித்து அரசுக்கு 54, 500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு என்று குறிப்பிட பட்டுள்ளது. இந்த மாபெரும் பணமுதலை காங்கிரஸ் , பாஜக கட்சிக்கு தேர்தல் நிதி எவ்வளவு தரும் என்று நமக்கு தெரியாத ? காங்கிரஸ் , பாஜக கட்சிகளின் ஆதரவுடன் தானே இவ்வளவு பணத்தினை ஆட்டைய போட்டார்கள் ??? இதை தட்டி கேட்க ஆம் ஆத்மி கட்சி முன்வந்தால், ஊழல் கட்சியான பாஜகவும் , காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து தானே ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து இறக்கினர் ? அம்பானிகளின் அப்பட்டமான பினாமிகளான மோடியின் பாஜக , காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு தேர்தல் நிதி கிடைக்கும் என்று கொஞ்சம் ஊகித்து பாருங்கள்.. ?? பிறகு மற்ற தொழில் நிறுவனங்கள் எவ்வளவு கொடுக்கும் ? இதுபோன்ற பணத்திற்கு விலைபோகும் கட்சிகள் இருப்பதால் தானே இது போன்ற கார்பரேட் கம்பனிகளின் பணமுதலைகள் அரசை ஏமாற்றி , மக்களின் வரிபணதினை சுரண்டி , சாமானிய மக்களின் ரத்தத்தை குடிக்கின்றன ?? பாஜக , காங்கிரஸ் போன்ற ஊழல் கட்சிகளை ஆதரிக்காமல், ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டால் ?? இந்த கார்பரேட் கம்பனிகளின் கோட்டம் அடங்கி விடுமே ??? பொதுமக்களே சிந்தியுங்கள்.. ஊழலை பற்றி பேசும் பாஜக- எதற்காக, ஆம் ஆத்மி கொண்டு வந்த கடுமையான ஊழலுக்கு எதிரான சட்டமான ஜன் லோக்பால் சட்டத்தை எதிர்க்க வேண்டும் ? அதில் ஏதேனும் ஒரு குறையை பாஜக சுட்டி காட்டி உள்ளதா ?? காங்கிரஸ் உடன் கை கோர்ந்து கொண்டு அன்று டெல்லி சட்ட சபையில் பாஜக அந்த மசோதாவை சட்டமாக்க கூடாது என்று வாக்களித்து, அந்த மசோதாவை தோற்கடித்தது நாம் எப்போதும் மறக்கவே கூடாது. ஊழலை பொறுத்தவரை காங்கிரஸ் , பாஜக கட்சிகளிடையே வேறுபாடே கிடையாது. இரண்டு கட்சிகளும் ஒன்றே,... ஏழை , நடுத்தர மக்களின் வாழ்வு முன்னேற, எந்த கட்சி துணை நிற்கும் என்று யோசியுங்கள்.. அவர்களுக்கு வாக்களியுங்கள்.. ஊழலில் ஊறிய பாஜக , காங்கிரஸ் கட்சிகளை கட்டாயம் புறகணியுங்கள். 



3 ..சவ பெட்டி ஊழல் காங்கிரஸ் கட்சியால் கூறப்பட்ட ஊழல் புகார் ...உச்ச நீதிமன்றம் அதற்க்கு தீர்ப்பு அளித்து குற்றசாற்றை தள்ளுபடி செய்து விட்டது.....நாம தான் நக்சல் கொள்கை கொண்டவர்களாயிற்றே...... அப்பறம் எப்படி ஜனநாயக வழியில உச்ச நீதி மன்றம் சொன்ன தீர்ப்பை கேப்போம்...ஏன் இப்போ பத்து வருஷமா இவனுங்க தானே ஆட்சி செய்யாறாங்க . ..மேல் முறையீடு மறுமுறையீடு என எல்லாத்தையும் செய்ய வேண்டியது தானே ...ஏன் செய்யல???? ஏன்னா திரும்ப போனாங்கன்னா உச்சநீதி மன்றம் ஓங்கி நங்குன்னு கொட்ற கொட்டுல மண்டை முட்டை மாதிரி ஆயிடும் .....அப்பறம் காங்கிரஸ் கட்சி மேல இருக்கற புகார் எல்லாம் எதிர் கட்சி சொல்லல ..அரசின் நிர்வாக அமைப்பு தான் சொல்லிச்சு...அதில ஒன்னு தான் தணிக்கைத்துறை.......அவிங்க ஆதாரத்தோட புட்டு புட்டு வச்சிட்டாங்க....அதனால தான் ஊழலே வெளியே தெரிஞ்சது...அப்பறம் பிரமோத் ஊழலுக்கு புள்ளையாரு சுழி போட்டாருன்னு ஒரு வாதம் வேற...2 ஜியில் ராஜா பேச்சை கேட்டுகிட்டு எப்படியாவது பா.ஜ வை உள்ளுக்குள் இலுக்கலாமுன்னு என்னென்னவோ தில்லாலங்கடி எல்லாம் சொக்க தங்கம் செஞ்சி பார்த்துட்டு ஓன்னுமே வேலைக்கே ஆவாம போனது தான் மிச்சம்....காரணம் முறைகேடு நடந்து இருந்தாதானே...அப்படியே நடந்து இருந்திருந்தா இந்நேரம் காங்கிரஸ் நீங்க சொல்ற மாதிரி வெரலை சூப்பிகின்னு இருக்க மாட்டாங்க...இதிலிருந்தே தெரியலையா....இன்னொரு வாதம் என்னன்னா தெகல்க்கா பத்திரிக்கையோட விதி வலையில ஒரு அப்பாவி சிக்கினாரு...அவரு தான் ஆந்திர பா.ஜ தலைவர்... (பங்காரு லக்ஷ்மன்)....இப்போ அந்த பத்திர்க்கையோட தலையே பொம்பள கேசுல ஜாம்மீன்ல்ல வரமுடியாத அளவுக்கு ஜெயில்ல கெடக்கராறு....அப்போ அந்த செய்தி எப்படி இருந்திருக்கும் என்பது இப்போது பலர் யூகித்து விட்டனர்...காரணம் காங்கிரஸ் தான்...அவரை மாட்டி விட இவர்கள செய்தி சதி மற்றும் அந்த ரகசியம் இப்போது தெரிஞ்சிடுமோன்னு தூக்கி உள்ளே ஒக்கார வச்சிட்டாங்க...எடி மேல இருந்த வழக்க பெங்களூரு நீதிமன்றம் மற்றும் லோக் ஆயுக்தா ரத்து பண்ணிப் புடுச்சி....இப்பவும் காங்கிரஸ் கட்சி தானே ஆட்சியிலே இருக்கு...ஏன் மேல் முறையீடு செய்யல???காரணம் அங்க ஒன்னும் நடக்கலையே...போதாகுறைக்கு மோடியின் நண்பர் அமித் ஷா சம்மந்தமுடைய வழக்கில் குற்ற பத்திரிக்கையில் பேரே இல்லாம போயிடிச்சி...இது எல்லாம் பா.ஜ ஜனநாயக ரீதியாக சட்டத்தை எதிர் கொண்டு வெற்றி பெற்று உள்ளார்கள்...இத்தனைக்கும் இதில் கூறப்பட்ட பாதிக்கும் மேலான விஷயங்கள் காங்கிரெஸ் ஆட்சியில் தான் அவர்கள் நிரபராதி என்று வந்துள்ளார்கள்...ஒரு தீப்பொறியை வைத்து பெரும் தீயை உருவாக்கும் காங்கிரஸ் இதில ஒன்னும் செய்ய முடியாமல் போனதிற்கு காரணம் நேர்மை..உண்மை தான்........அப்பறம் வெளக்கமாறு பா.ஜ வை பார்த்து இப்படி ஜனநாயகமா நடந்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை படித்து அல்லது அனுபவித்து தெரிந்து கொள்ளட்டும் ...பெறவு ஆட்சி செய்யலாம்...ஒரு சட்டத்துக்கே ராஜினாமான்னுட்டு ஓடிட்டாங்க...நின்னு போராடனும்...போராடி ஜையிக்கிரதல கிடைக்கிற ஒரு ஆத்ம திருப்தி வேறெதிலும் கெடையாது....அதுக்கு மன உறுதி வேண்டும்...இப்படி போராட்ட குணம் துணிவு,நேர்மை,உண்மை,சத்தியம் அர்பணிப்பு கொண்டவர் தான் மோடி...அதனால் தான் சத்தியம் வென்று கொண்டு இருக்கிறது...அவரும் மென்மேலும் வளர்ந்து கொண்டு இருக்கிறார்...அதனால் தான் அவர் பின்னால் நாட்டை நல் வழிபடுத்த பலர் இணைந்துள்ளனர்...கட்சிகளுக்கு அப்பாற்பட்டு...சகோதரர் ராதா அவர்கள் சொன்னது போல் வெவரம் இருந்து உண்மை புரிந்திருந்தால் அதை எழுதுங்கள்..வெவரம் இல்லையெனில் மற்ற கருத்துக்களை ஆழ்ந்து படித்து விட்டு பின் நியாயத்தை எழுதுங்கள்...நாங்கள் ஜாம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் பினாமி என்று கூறுவதற்கு கூட பல காரணங்கள் மற்றும் ஒற்றுமைகள் இரு கட்சிகளுக்கு இடையில் இருப்பதை உணர்ந்தே கூறுகிறோம்...அதுவும் நாளாக நாளாக உண்மையாகி கொண்டு இருக்கிறது......

ஈரோடு மாவட்ட தெய்வீகக்காதலர்கள் சந்திக்கும் இடங்கள்???? !!!

1.கோடம்பாக்கத்தில் இது மதம் மாறும் சீசன் போல.நேத்து யுவன் .இன்று டி ஆர் ,நாளை யாரோ?




===================



2 சிலம்பரசன் இனி சிலுவை அரசன்



=================



3 சிம்பு கரெக்ட் பண்ண பிகர்கள் பேர் எல்லாம் கடைசில ஆ ல முடியுது # ஐஸ்வர்யா ,நயன் தாரா ,ஆண்ட்ரியா, hansikha ( கால வரிசைப்படி)



===================



4 ஹன் சிகா வருசம் ஒரு அநாதைக்குழந்தையை தத்து எடுக்கார்.சிம்பு வருசம் ஒரு காதலியை கெத்தா ரெடி பண்றார்



====================


5 யார் மதம் மாறுவதாக இருந்தாலும் ரூ 1 கோடி அரசுக்கு வரி செலுத்த வேண்டும் - ப சிதம்பரம் அறிவிப்பு #,சும்மா


===================



6 தமிழ்நாட்டை இரண்டாப்பிரிச்சுட்டா தமிழ் இனத்தலைவர்க்கு ரொம்ப சவுகர்யம்.2 பசங்்களுக்கும் பிரிச்சுக்குடுத்துடலாம்



===================


7 தமிழ் இனம் = ஸ்டாலின் ,அழகிரி ,கனிமொழி . தமிழ் இனம் காக்க வந்த தலைவர் = மு க



====================


8  யோவ்.அம்மா மருந்தகம்னா மெடிக்கல் ஷாப்.டாஸ்மாக் கிடையாது



===================


9 மதம் மாறுபவர்கள் நம்பகத்தன்மை உள்ளவர்களா? மதமே மாறிட்டாங்க .மனசு மாற மட்டாங்களா?



===================


10 கல்யாண முகூர்த்த பட்டு வேட்டியின் நினைவில் முதல் இரவின் மிச்சங்கள் ஒற்றிக்கொண்டிருக்கும்



==================


11 புருசனை எதிர்த்துப்பேசுனா பொண்டாட்டியோட முக அழகு ஒவ்வொரு முறையும் 1% குறைஞ்சிடும்னு வரம் கொடுத்தா ஊர்ல ஒரு பொண்டாட்டியும் எதிர்க்காது



======================


12 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த காதலர் தினத்துக்குள் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு புதுக்காதலி பரிசாக இலவசமாகக்கிடைக்க வழி செய்வோம்



======================


13 எங்க கட்சிக்கு கொள்கையே கிடையாது.யார் காசு கொடுத்தாலும் வால் ஆட்டிக்கொண்டு காலில் விழுவோம்



================


14 பாரியூர்,கொடிவேரி,கொடுமுடி,பவானிசாகர் ,திருச்செங்கோடு மலை,மேட்டூர் டேம்,# ஈரோடு மாவட்ட தெய்வீகக்காதலர்கள் சந்திக்கும் இடங்கள்



======================



15 ஈரோடு மணிக்கூண்டு அருகே ஒரு டிராபிக் எஸ் ஐ ரொம்ப ஏழை போல.பப்ளிக் கிட்டே 500,ரூபா பிச்சை எடுத்துட்டு இருக்காரு.அய்யோ பாவம்



======================= 


16  தமிழா! தமிழா! அண்ணா ,எம் ஜி ஆர் ,தமிழ் இனத்தலைவர் உரை ஆற்றிய மேடையிலே தன்னிகரற்ற தலைவி குஷ்பூ உரை ஆற்றுகிறார் # திருச்சி



=======================



17 வெற்றிலை பாக்குத்தாம்பூலம் போலே நாம் இரண்டற சங்கமித்த காலங்கள் உண்டு.விளக்கு எண்ணெயில் துளிர்த்த கண்ணீராய் பிரிந்த காலங்கள் இன்று



=========================



18 டெல்லியில் விரைவில் ஜனாதிபதி ஆட்சியாம்.என்னைக்கவிழ்த்து விட்டாலும் என் மனதை ஆள்வது மனாதிபதி உன் ஆட்சி தானே?



======================


19   தனி அறை சந்திப்பை விட வெட்ட வெளிகளில் உன்னுடன் கை கோர்த்து நடப்பதில் எனக்கு ஒரு பெருமிதம் வருகிறதே!!!



===========================



20 சனிக்கிழமை மாலைப்பொழுது காதலர்களுக்கு அடுத்த.நாள் பிரிவு திண்டாட்டம். தனிக்குடித்தனமாக இருக்கும் தம்பதிக்கு கொண்டாட்டம்



============================

‘நண்பேன்டா' - படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம் -உதயநிதி ஸ்டாலின்

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத சமத்துப் பையன் உதயநிதி ஸ்டாலின். அரசியல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்ததாலோ என்னவோ, ஒவ்வொரு வார்த்தைகளையும் அளந்து பேசுகிறார்.



 அதே நேரம் மனதில் பட்ட ஆதங்கத்தைப் பளிச்சென்று உடைக்கும் துணிவுக்கும் குறைவில்லை. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி‘ படத்தின் மூலம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகமான உதயநிதிக்கு இன்று வெளியாகியிருக்கும் 'இது கதிர்வேலன் காதல்' இரண்டாவது படம். பரிட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் +2 பையனைப் போல ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்... 



முதல் படத்தில் கிடைத்த நல்ல பெயரை இரண்டாவது படம் காப்பாற்றுமா?


 

நிச்சயமா! படத்தில் கதிர்வேலன் என்ற கேரக்டர் பண்ணியிருக்கேன். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' சரவணன் கேரக்டரருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர். அப்பாவுக்கு ரொம்ப பயந்த பையன். ஆஞ்சநேய பக்தன். பெண்ணுங்களே பிடிக்காது. இப்படியிருக்குற ஒரு பையன் கோயம்புத்தூர் போறான். அங்க பவித்ராவைப் பாத்து காதலிக்கிறான். நண்பன் உதவுகிறான். இப்படிப் போகும் கதை. 



காதலர்கள், நண்பன் என்பதைத் தவிர வேறு என்ன புதுமை?


 

‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் நான், ஹன்சிகா, சந்தானம் இப்படி எங்களுக்குள்ளதான் கதையே போகும். ஆனா, இதுல எல்லாரையும் சுற்றியும் கதை நகரும். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி', ‘சுந்தரபாண்டியன்' படத்தையும் சேர்ந்து பண்ணினா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் படம். முகம் சுளிக்க வைக்கிற எந்த ஒரு காட்சியும் இருக்காது. படம் முடிச்சு வெளியே வர்றப்போ அப்பா -
பையன் உறவுக்கான படமா பேசப்படும். முழுக்க காதல் கதைன்னு சொல்ல மாட்டேன்.
ஃபேமிலியோட பார்க்க பெஸ்ட்டான படம்.
 



நிஜத்திலும் நீங்க ஆஞ்சநேயர் பக்தனா?


 

நிஜத்துல எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. கோவிலுக்கு எல்லாம் போகவே மாட்டேன். சில விஷயங்கள் ஒத்துப் போகும். அவ்வளவுதான்.
 



படத்தில் உங்க குடும்ப விஷயங்களும் நிறைய இடம் பிடிச்சிருக்காமே ?


 

படத்தோட கதை விவாதம் நடந்தப்போ
 எங்கப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கேன். அதை பிரபாகரன் அப்படியே படத்துல வைச்சிட்டார். எனக்கு டப்பிங் பேசறப்போ
கூட இது தெரியல. ‘உங்கப்பா பத்தி சொன்னீங்களே.. அதைத்தான் காட்சியாக மாற்றிவிட்டேன்' அப்படின்னு சொன்னார். நான் தினமும் எங்கப்பாகிட்ட பேசிருவேன், இல்லன்னா நேர்ல பாத்துருவேன். பேசாம ஒரு நாள்கூட இருந்ததில்லை. அதைத்தான் அவர் காட்சியாக வைத்து விட்டார். என்னோட காதலுக்கு முதல் சப்போர்ட் எங்கப்பாதான். என்னோட ஒரிஜினல் கேரக்டரை இந்தப் படத்துல பண்ணல. இயக்குநர் பிரபாகரனுக்கும் காதல் திருமணம்தான். அவரோட கதையா இருக்கலாம்னு நினைக்கிறேன்.
 




இதுக்கு அடுத்து நடிக்கிற படத்திலும் நயன்தாராவோட கூட்டணி தொடருதே? ஏதும் கெமிஸ்ட்ரி விசேஷமா?
 


கெமிஸ்ட்ரியும் இல்ல, பிசிக்ஸும் இல்ல.
என்னோட ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல ஹாரிஸ், சந்தானம், பாலசுப்பிரமணியம் இருந்தாங்க. ‘இது கதிர்வேலன் காதல்'
படத்துலயும் இருக்காங்க. ‘நண்பேன்டா'லயும் இருக்காங்க. அதே மாதிரிதான் அடுத்த படத்துல நயன்தாரா இருக்குறதும்.
ஒரு ஹிட் காம்பினேஷன் திருப்பியும் சேருவதில் தப்பில்லையே. 



நகைச்சுவைக் கதைகளிலேயே தொடர்ந்து நடிக்கிறீங்களே?


 

எனக்கு காமெடி ஈசியா வருது, பண்றேன். அடுத்து நடிக்கப்போற ‘நண்பேன்டா' படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி' இரண்டாம்பாகம்னு சொல்லலாம். நானும் சந்தானமும் பயங்கர கலாட்டா பண்ற படமாயிருக்கும். மற்ற படங்கள் பண்ணலாம் அப்படிங்குற நம்பிக்கை வரல. நம்பிக்கை வர்றப்போ பண்ணுவேன். 



நடிப்பு, தயாரிப்பு, விநியோகம்னு கலக்குறீங்க. பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இல்லையா?


 

முதல் காரணம் நடிகர்கள் சம்பளம். பெரிய நடிகர்கள் பண்ணினா அவருக்கு ஏற்றாற்போல பெரிய இயக்குநரைத்தான் பாக்கணும். இரண்டாவது காரணம் இப்போ நானே ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இன்னோரு ஹீரோ கிட்ட போய் தேதி கேட்கிறதுக்கு நானே நடிச்சுடுவேன். பெரிய பட்ஜெட் படங்கள் இனிமேல் பண்ண மாட்
டேன்னு சொல்ல மாட்டேன். பண்ணுவேன். ஆனால் வியாபார ரீதியில் நல்லா போக
ணும். அந்த மாதிரி கரெக்ட்டான டீம் அமைஞ்
சுட்டா தயாரிக்கத் தயாரா இருக்கேன். 



வரி விலக்கு பிரச்சனையில் தொடர்ந்து போராடிகிட்டு இருக்கிங்களே?


 

இப்ப இருக்குற வரி விலக்குக் குழுவே வேண்டாம் அப்படின்னு நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கேன். படத்தைப் பார்த்து அவங்களுக்கு முடிவு எடுக்கத் தெரியல. அதனால நீதிமன்றமே ஒரு குழு அமைக்க வேண்டும் அப்படின்னு கேட்டிருக்கேன். நீதி கிடைக்கும்வரை விட மாட்டேன். தயாரிப்பாளர் சங்கத்துலயும் புகார் கொடுத்தேன். யாரும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல. இப்போ எனக்கு மட்டும் நடக்கல.
அரசாங்கத்திற்கு யாரெல்லாம் எதிரா இருக்காங்களோ எல்லாத்துக்கும் வரி
விலக்கு கொடுக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஜில்லா, வீரம் இப்படி எந்தப் படத்துக்கும் வரிவிலக்கு கொடுக்கலயே. 


THANX = THE HINDU

தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை

'தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி

தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.

250 ஏக்கரில்...:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், மாநாட்டு பணிகளை கவனிக்கும் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்காக, 1,100 அடி நீளம், 600 அடி அகலமுடைய பிரமாண்ட பந்தல், 200 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கான்கிரீட் மேடை, கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடிக்கம்பம் போன்றவை அமைக்கப்படுகின்றன. தலைவர்கள் தங்க, குடில்கள் கட்டப்படுகின்றன. தொண்டர்கள் தங்க, திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, 100 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு வாய்ப்பு:

மாநாட்டிற்கு, 10 லட்சம் பேர் வருவர். பிப்., 15ம் தேதி நிர்வாகிகளும், 16ம் தேதி கூட்டணிக் கட்சி தலைவர்களும் பேசுகின்றனர்.லோக்சபா தேர்தலில், இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், கணிசமான தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும். தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, கட்சியில் இருக்கிறாரா என்பதை, கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தேவையில்லை' என, தெரிவித்திருப்பது குறித்து கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.

மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 92வது வயதை குறிக்கும் வகையில், மாநாடு பந்தல் முகப்பில், 92 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த கொடிக்கம்பத்துக்கு, மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது. அதேபோல், திங்கள்கிழமையான நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.


THANX - DINAMALAR 

இந்தியாவை ஆள்வது முகேஷ் அம்பானி தான் - அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி உரை

நீங்கள் கைகோத்திருப்பது நாட்டுக்காகவா அம்பானிக்காகவா?- அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை

டிசம்பர் 28-ல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் முக்கியமானது. ‘சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம்’ என்று இந்த காங்கிரஸ்காரர்கள் எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால், இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரஸும் பா.ஜ.க-வும் கைகோத்துக்கொண்டன. 

 

எதற்காகக் கைகோத்திருக்கிறீர்கள்? 


இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால், இன்று அவர்கள் கைகோத்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவில் இருந்துகொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். கடந்த இரு நாட்களில் அவர்களது நிஜமுகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதா முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக் கூடாது என்பதற்காக, அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோத்துக்கொண்டார்கள். 



நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி என்பவர். காங்கிரஸ் கட்சி என்னுடைய கடை என்று முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கடையிலிருந்து அவர் வேண்டியதை வாங்கிக்கொள்வாராம். 10 ஆண்டுகளாக ஐ.மு.கூ. அரசை முகேஷ் அம்பானிதான் இயக்கிக்கொண்டிருந்தார். கடந்த ஓராண்டு காலமாக முகேஷ் அம்பானி மோடிஜியையும் ஆதரித்துவருகிறார். 


மோடிஜிக்குப் பின்னால் முகேஷ்ஜி

 
எங்கேயிருந்து மோடிஜிக்கு இவ்வளவு பணம் வருகிறது? ஹெலிகாப்டர்களில் அவர் ஊர் சுற்றுகிறார், பெரிய பெரிய பேரணிகளை நடத்துகிறார். எங்கேயிருந்து இதெற்கெல்லாம் பணம் வருகிறது? இவற்றுக்குப் பின்னால் முகேஷ் அம்பானி இருக்கிறார். 


நண்பர்களே, நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராகக் குரலை உயர்த்திய அடுத்த நொடியே காங்கிரஸும் பா.ஜ.க-வும் சேர்ந்துகொண்டன. ஜன் லோக்பால் மசோதாவை முன்வைக்க அவர்கள் விடவில்லை. 



கேஜ்ரிவால் ஏதோ ஒரு குட்டி லஞ்ச ஒழிப்பு அலுவலர்தானே என அவர்கள் நினைத்துவிட்டார்கள். இந்த அளவுக்குக் குடைச்சல் கொடுக்கிறானே என்று எரிச்சலடைந்துவிட்டார்கள். ஜன் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால், இந்த ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதனால்தான் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை நிறைவேற விடாமல் ஒழித்தன. 


இப்போது நாங்கள் முகேஷ் அம்பானியையும் வீரப்ப மொய்லியையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். 


அநேகமாக நாளை ஷரத் பவாரை அம்பலமேற்றியிருப்போம். அடுத்து, அநேகமாக கமல்நாத் முறையாக இருந்திருக்கும். எப்படியோ, அவர்கள் ஒவ்வொருவராக மாட்டியிருப்பார்கள். 


நான் சாதாரண மனிதன்

 
நான் ஒரு சாதாரண மனிதன். நான் ஒன்றும் அவதார புருஷன் இல்லை. நான் உங்களில் ஒருவன். அதிகாரத்துக்காகவோ இந்த நாற்காலிக்காகவோ இங்கே வரவில்லை. அதனால்தான் எங்கள் அரசாங்கம் இப்போது பதவி விலகுகிறது.
ஜன் லோக்பால் மசோதாவுக்காக நூறு முதல்வர் பதவிகள்கூடப் பறிபோகலாம். தவறில்லை. நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த நாட்டுக்காக நாங்கள் உயிர்கொடுக்க வேண்டும் என்றால், நான் அதிர்ஷ்டக்காரன் என்றே கருதிக்கொள்வேன். 


இப்போதுதான் எங்கள் அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது. எங்கள் அரசாங்கம் பதவி விலகுவது என முடிவுசெய்யப்பட்டது. இதோ என் பதவி விலகல் கடிதம். நான் இப்போது துணைநிலை ஆளுநரை பார்க்கப்போகிறேன். சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, மறுதேர்தல் நடத்த வேண்டும் என எங்கள் அமைச்சரவை பரிந்துரைத்திருக்கிறது. 


எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம். 


டிசம்பர் 28-ல் நாங்கள் அரசு அமைத்தது முதல் இன்றுவரை, எங்கள் அமைச்சர்கள் ஒரு இரவுகூட சரியாகத் தூங்கியதில்லை. இரவு பகலாக அவர்கள் வேலைபார்த்தார்கள். எங்கள் முயற்சியைத் தொடர நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. மின் கட்டணம், நீர்க் கட்டணம் குறைத்தோம். மின் நிறுவனங்களைத் தணிக்கை செய்ய உத்தரவிட்டோம். ஊழலைக் குறைத்திருக்கிறோம். 


முழு நேர்மையுடனும் நல்ல நோக்கங்களுடனும் நாங்கள் வேலைசெய்தோம். நாங்கள் தவறுகளைச் செய்திருக்கலாம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களால் முடிந்ததைச் செய்தோம். உங்களால் ஆட்சிசெய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக மின் நிறுவனங்களை அவர்களால் தணிக்கை செய்ய முடியவில்லை. நாங்கள் ஐந்தே நாட்களில் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்களால் ஊழலைக் குறைக்க முடியவில்லை. நாங்கள் 49 நாட்களில் செய்தோம். ஷீலா தீட்சித்தும் முகேஷ் அம்பானியும் செய்த ஊழலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு 


செய்தோம். உடனே அவர்கள் சொல்கிறார்கள்: ஆட்சி செய்யுங்கள், இதையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள் என்று! 


ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுதானய்யா உண்மையில் ஆட்சிசெய்வதென்பது. 


எனக்குச் சிலசமயம் என்ன தோன்றுகிறதென்றால், இந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பா.ஜ.க-காரர்களுக்கும் ஒரு சில கோடிகளை விட்டெறிந்துவிட்டிருந்தோம் என்றால், இது நல்ல காரியம் என்று அவர்கள் சொல்வார்கள். 


மிளகுத் தூள் ஜனநாயகம்

 
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நடந்ததைப் பார்க்கும்போது, என் மனம் வருத்தமடைகிறது. நாடாளு 


மன்றத்தில் அவர்கள் மிளகுத் தூள் தூவியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் என் மைக்கை உடைத்திருக்கிறார்கள். என் ஆவணங்களைக் கிழித்துப்போட்டிருக்கிறார்கள். ஓர் அமைச்சரிடம் வளையல்களைக் கொடுத்திருக்கிறார்கள். வளையல் கொடுப்பதென்றால் என்ன அர்த்தம்? பா.ஜ.க. பெண்களை மதிக்கிறதா இல்லையா? 


நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்கிறார்கள். சட்டமன்றமும் கோயில்தானாம், மசூதிதானாம். நான்கேட்கிறேன்: கோயில்களில் விக்கிரகங்களை உடைத்தெறிவீர்களா? மசூதியில் குரானைக் கிழித்தெறிவீர்களா? தேவாலயத்தில் விவிலியத்தைக் கிழித்தெறிவீர்களா? இயேசுபிரானின் சிலைகளை உடைப்பீர்களா? 


வெட்கப்படுகிறேன். இந்த ஆட்கள் சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்திவிட்டார்கள். 


அரசியல் சாசனத்துக்கு விரோதம் எது?

 
நாங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாகச் செய்துவிட்டோமாம். எஃப்.ஐ.ஆர். போட்டது அரசியல் சாசன விரோதமாம். ஊழலுக்கு முடிவுகட்டுவதற்காக எஃப்.ஐ.ஆர். போட்டால் அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள், ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழிய வேண்டும் என்றால், அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டங்களை முன்மொழிவதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும் என்கிறார்கள். அவர்கள் புளுகுகிறார்கள் நண்பர்களே, நான் அரசியல் சாசனத்தைப் படித்திருக்கிறேன். மத்திய அரசின் அனுமதி வேண்டும் என அது எந்த இடத்திலும் சொல்லவில்லை. 


தங்களை காலனிய ஆட்சியாளர்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. தன்னை வைஸ்ராய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் துணைநிலை ஆளுநர். இந்தச் சட்டமன்றமே ஒன்றுமில்லை என நினைக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைக் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டுமாம், அப்படிக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். 


நான் அரசியல் சாசனத்தைத்தான் பின்பற்றுவேன். அரசியல் சாசனத்துக்காக நான் என் உயிரையே கொடுப்பேன். ஜன் லோக்பால் மசோதா முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால், ஊழலைத் தொடர்ந்து நடத்திட அவர்கள் விரும்புகிறார்கள். 


நண்பர்களே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள்; பறித்துக்கொண்டார்கள். இதையெல்லாம் அரசியல் சாசனரீதியிலானது என அவர்கள் நினைக்கிறார்கள். நாம் நாட்டுக்காகப் போராடுகிறோம். இதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்கிறார்கள்.
இந்த நாட்டின் மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த நாட்டின் மக்கள் எப்போதுமே அமைதி காக்க மாட்டார்கள். 


நான் நேரே இப்போது துணைநிலை ஆளுநரிடம் செல்கிறேன். 


கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்குக் கருணைகாட்டுங்கள், வழிநடத்துங்கள் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களைத் தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக்கொள்கிறேன். 


thanx - the hindu