Showing posts with label அரவிந்த் கேஜ்ரிவால். Show all posts
Showing posts with label அரவிந்த் கேஜ்ரிவால். Show all posts

Tuesday, May 06, 2014

நான் பிடிவாதக்காரனா? - கேஜ்ரிவால் பேட்டி @ த ஹிந்து

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் 
 
 
தேர்தல் சூட்டின் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்கிறது வாரணாசி. பா.ஜ.க-வின் கோட்டைபோலக் காட்சி அளிக்கும் வாரணாசியில், சிங்கத்தின் குகைக்கு முன் நின்று சவால் விடுவதுபோல மோடியை எதிர்த்து நிற்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். மோடி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டுப் பிற மாநிலங்களில் கூட்டணிக்கு ஆதரவு திரட்டச் சென்றுவிட்டார். கேஜ்ரிவால் தொகுதியைச் சுற்றிச்சுற்றி வருகிறார். 


அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. தேர்தல் செலவுக்கு மக்கள் பணம் தருகிறார்கள். ஒவ்வொருவரும் நூறு வாக்குகளைத் திரட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கும் என்னை ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு உதவியாக மனைவி சுனிதா வருகிறார். 



கடந்த சில நாள்களாக உங்களுடைய கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கக் காரணம் என்ன? 


 
பா.ஜ.க-வின் உத்தி இரண்டு கட்டங்களாலானது. முதல் கட்டத்தில், என்னை மிரட்டி அச்சுறுத்தி விரட்டப் பார்த்தார்கள். நான் விலகவில்லை என்றதால், அடுத்த கட்டமாக என்னுடைய கட்சித் தொண்டர்களை அடித்து மிரட்டுகிறார்கள். என்னுடைய கட்சித் தொண்டர்கள் வித்தியாசமானவர்கள். என்னை விட்டுப் போக மறுக்கிறார்கள். இப்போது நிலைமை முற்றிவிட்டது, வாரணாசி மக்களையே பா.ஜ.க. குண்டர்கள் தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கல்லூரிக்கு வெளியே சிலர் எங்கள் தொப்பிகளை அணிந்துள்ளனர். அதைப் பார்த்ததும் கோபப்பட்டு அவர்களைத் தொப்பியைக் களையும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மோடிக்கு இருந்தால் அவருடைய ஆதரவாளர்கள் எஙகளைத் தாக்குவானேன்? 


வாரணாசி மக்கள் உங்களை ஆதரிக்கும்படி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? காங்கிரஸ், பா.ஜ.க. என்ன செய்யவில்லை? 

 
உண்மையின் ஆற்றல்தான் அது. எங்களிடம் வேறெதுவும் இல்லை. எந்த மதம், சாதியாக இருந்தாலும் மனிதனின் அடிப்படைப் பண்பு உண்மைதான். நாங்கள் உண்மையைச் சொல்லும்போது மக்களை ஈர்க்கிறோம். டெல்லியில் எப்படி நாங்கள் வெற்றிபெற்றோம்? உண்மையையே பேசினோம், மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் அக்கறையுள்ளவர்கள் என்பதால், மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். என்னுடைய கூட்டத்துக்கு வரும் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், 'இவர் உண்மையைப் பேசுகிறார், இவர் நேர்மையாளர் என்பதால் வருகிறோம்' என்று பதிலளிப்பார்கள். 


நீங்கள் வெறும் பிடிவாதக்காரர் என்றே பலர் நினைக்கின்றனர்? 

 
நான் பிடிவாதக்காரன்தான். இந்த நாட்டிலிருந்தே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவன். 



தேர்தல் பிரச்சாரம் திடீரென்று ராபர்ட் வதேரா, அதானியை மையம் கொண்டுவிட்டது; மக்களுடைய பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன என்று நீங்கள் நினைக்கவில்லையா? 


 
அதற்குத்தான் இவர்கள் முயற்சிக்கிறார்கள். தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்னால்தான் பா.ஜ.க-வுக்கு ராபர்ட் வதேரா நினைவுக்கு வருகிறார். வதேராவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்றால், ராஜஸ்தானில் நடந்த நில பேரங்களுக்காக அவரை ஏன் கைது செய்திருக்கக் கூடாது? ராஜஸ்தான் அரசால் நாளையே அவரைக் கைது செய்ய முடியும். அவருக்கு எதிராக ஏன் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவுசெய்யப்படவில்லை?


 காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான அக்கறை இருந்தால், இளம்பெண்ணைச் சட்டவிரோதமாக வேவு பார்த்த விவகாரத்தில் நரேந்திர மோடியை ஏன் கைதுசெய்யவில்லை? வாரணாசியில் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்றே பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய மூன்று கட்சிகளுமே திட்டமிட்டு வேலை செய்கின்றன. மோடி வெறும் பா.ஜ.க. வேட்பாளர் மட்டுமல்ல, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் பொது வேட்பாளரும் அவர்தான்! 



வாரணாசி, அமேதி போன்ற சில தொகுதிகளில் மட்டும் நீங்கள் பிரச்சாரம் செய்வது ஏன்? உங்கள் கட்சியைச் சேர்ந்த சோனி சோரி போட்டியிடும் பஸ்தாருக்கு ஏன் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருக்கிறீர்கள்? 


 
எங்களுக்கு நேரமே போதவில்லை. சோனி சோரி மட்டுமல்ல, ஜாவித் ஜாஃப்ரி, முசாஃபர் பட் போன்றோரும் போட்டியிடுகின்றனர். எல்லா இடங்களுக்கும் நான் போயிருக்க வேண்டும், நேரமில்லை. 



டெல்லி அனுபவத்திலிருந்து ஏதாவது பாடம் கற்றீர்களா? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது தவறு என்று சொன்னீர்களே? 


 
நான் பேசியது தவறாக வெளியாகிவிட்டது. நான் எடுத்த முடிவு சரியானதுதான். அதை நான் மக்களுக்குத் தெரிவித்த விதம்தான் தவறானது. சட்டப்பேரவைக் கூட்டம் காலையில் நடந்தது. மாலையில் நான் பதவி விலகினேன். எனவே, மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அது ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. 



என்ன நடந்தது என்பதை ஜீரணிக்கவே அவர்களால் முடியவில்லை. அரசை அமைப்பதற்கு முன்னால் பல நாள்கள் கூட்டம் நடத்தி மக்களிடம் பேசி அவர்களுடைய கருத்தைத் தெரிந்துகொண்டு பிறகு ஆட்சியமைத்தோம். அதேபோல விலகுவதற்கு முன்னாலும் மக்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஒப்புதலைக் கேட்டிருக்க வேண்டும். அவர்களும் நிச்சயம் ஒப்புதல் தந்திருப்பார்கள். மக்கள் தொடர்பில் நாங்கள் தோற்றுவிட்டோம். 



ஆம் ஆத்மி கட்சி புதிய இடதுசாரிக் கட்சி என்கிறார்கள், இதை ஏற்கிறீர்களா? 


 
நாங்கள் இடதுசாரியும் அல்ல; வலதுசாரியும் அல்ல. நாங்கள் காரிய சாத்தியமான முடிவுகளை எடுப்பவர்கள். ஒரு பிரச்சினைக்கு இடதுசாரி வழிமுறைகள்தான் சரியென்றால் அந்த முடிவை எடுப்போம். வலதுசாரி வழிமுறைதான் சரியென்றால் அதற்கேற்ற முடிவை எடுப்போம். 



மத்தியில் புதிய அரசு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன, நீங்கள் யாருடன் இருப்பீர்கள்? 


 
தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று ஊகிப்பது கடினம். நாட்டின் எதிர்காலத்தை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. மக்களுக்கு எங்களால் சொல்ல முடிந்ததெல்லாம் ஒன்றுதான் - நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்போம். 


thanx- 
‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி


  • செட்டி.ஜெ.ராஜன் Setty  from Chennai
    ஒன்றும் சொல்ல விருப்பம் இல்லை. எதுவும் தோணவில்லை. ஏன் என்றும் புரியவில்லை.... ---செட்டி.ஜெ.ராஜன்,மதுரை
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Vasudevan Venugopal  
    நீங்கள் உண்மையாகவே ஊழலை ஒழிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் எப்போது இல்லாதவைகளைத் தொடர்ந்து மானிய விலையில் கொடுப்பேன் என்று சத்தியம் செய்வீர்கள், எப்போது திடீரென்று நடு ரோட்டில் போய் உட்கார்ந்துகொள்வீர்கள், எப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள் என்பது தெரியவில்லையே?!! நீங்கள் இதுவரை செய்துகொண்டு வந்ததை எல்லாம் பார்த்தால் உங்களுக்குத் துன்பம் மற்றவர்களால் வரவேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது!!
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • VC. SAROAVANAN  from Chennai
    இப்போது நாட்டில் ஒரு விழயம் நல்லது போன்று தோன்றுகின்றது ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் கடந்த ஒரு வருடத்திற்கு மும்பு ஆரம்பித்த கட்சியின் தலைவர் உண்மைமட்டும் பேசுகின்றார் தன் மீது பெரிதாக எந்த உழல் புகாரும் இல்லை என்பதை மட்டுமே வைத்திக்கொண்டு இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் குட்டையை குழப்பி வெலாங்கு மீன் கிடைக்குமா என்று காத்திருகின்றார். உண்மை, நேர்மை என்று கூறி மக்களை பெரிய முட்டாலாகுன்றார் இந்த அரவிந்த் கேஜ்ரிவால். சரி அவர் சொல்ல்வதே உண்மையெனில் எதற்கு கிடைத்த டெல்லி முதல்வர் பதவியை நிர்வாக திறமை இன்றி ஓடிவந்தார் என்பதை முதலில் கூறட்டும். அரவிந்த் கேஜிரிவாளுக்கு போடும் ஒட்டு யானை தன் தலையில் மண் அள்ளி போட்டதற்கு சமம் என்பதை இந்த பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தெரியவரும். இன்று இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்தயாவில் இருக்கும் பல போலி என் ஜி ஒ களே காரணம். திருவாளர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் பின்னால் பல என் ஜி ஒ க்கள் மறைந்துள்ளன என்பதை இதுவரை கேஜெரிவால் மறுக்கவில்லை. அனால் உண்மை நேர்மை பற்றி பேசுகின்றார். ஒரு வேலை சாத்தான் வேதம் ஒதுகின்றதோ.
    about 18 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)
  • vimalavidya  from Salem
    இவர் இன்னும் பொருளாதார கொள்கை விசயங்களில் தெளிவு பெற வேண்டும் -தெளிவு படுத்த வேண்டும் -இரண்டு குதிரைகளில் -பொருளாதார குதிரைகளில் -சவாரி செய்ய முடியாது--கூடாது -ஊழல் எதிர்ப்பு விசயத்தில் சரி ---விமலா வித்யா
    about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • தீர்ப்பு  from Dubai
    மோடியும் கேஜிரிவாலையும் தொலைவில் இருந்து பார்த்தால் இரு சிங்கங்களாக தான் தெரிவார்கள். ஆனால் மோடி என்ற சிங்கத்தை தோலுரித்து பார்த்தால் தான் மக்களுக்கு தெரியும் அது சிங்க தோலை போதிய கருப்பு ஆடு என்கிற உண்மை. ஏன் என்றால் அந்த கருப்பு ஆடுக்கு சொந்தம் தான் அவரின் மோசமான குஜராதின் ஆட்சி வறுமையின் எண்ணிக்கையை கைதூக்கி விட்டவர் என்ற பெருமை,ஊழலை எதிர்க்கும் லோகயுக்தாவை காலால் எட்டி உதித்தவர், எதை எடுத்தாலும் நான் நான் என்கின்ற ஆணவம் ஆனால் முக்கிய பொறுப்புகளில் இருந்து துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுகிறவர். பதவி வெறியில் சட்டத்தை மதிக்காத மாண்புமிகு முதல்வர் இப்படியெல்லாம் சேர்ந்த ஆடுதான் அந்த கருப்பு ஆடு. கேஜ்ரிவால் ஒரு மெய்யான சிங்கம் மக்களோடு மக்களாக ஏன் இன்னும் சொல்ல போனால் சளைக்காமல் அடியும் வாங்கி மக்களை நேருக்கு நேர் சந்திக்க கூடிய நல்ல இளம் அரசியல்வாதி. மோடியை போல அஞ்சி நடுங்கி மக்களின் வரிப்பணத்தில் கோடி கணக்கில் பாதுகாப்புக்காக விரயம் செய்து கொண்டு தன்னை ஒரு கோழையாக ஒரு போதும் அனுமதித்தது இல்லை.
    about 21 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Mohan Ramachandran at I am doing my own business from Chennai
    இவர் நவீன ஜெயச்சந்திரரன் ,எட்டப்பன் .மீர் ஜப்பார் கலந்த கலவை .காங்கிரெசின் கை கூலி .எப்பொழுது காங்கிரஸ் ஆதரவை பெற்றாரோ அப்போதிளுருந்து இவரின் அரசியல் செயல்பாடு கேள்விக்குறியாகி விட்டது
    about 22 hours ago ·   (5) ·   (22) ·  reply (2)
    Mohamed Jahir · rafi   Down Voted
    • mani Ramanathan  from Taipei
      இவருக்கு வேகம் இருக்கும் அளவுக்கு வேக்காடு இல்ல நண்பரே, இருந்திருந்தால் மக்கள் மதித்து கொடுத்த பதவியை உதறி இருபாரா? மோடி 20 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு உலகிலேயே சிறந்த நாடு என்ற பெயரை பெற்றபின் இவருக்கு வேண்டுமானால் ஒரு வாய்ப்பு தரலாம், அதற்குள் இவரும் காங்கிரஸ் ஆட்கள் போல் மாறிவிடாமல் இருந்தால்?
      about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)
      • தீர்ப்பு  
        13 வருஷமா குஜராத்தை ஆண்ட மோடியின் கையாலாகாத அரசினால் வறுமை கொடுக்கு கீழ் வாடும் மக்களின் எண்ணிக்கையை அமோகமாக உயர்த்தி இருக்கிறார். இந்த லட்சணத்தில் இவரை 20 வருடங்களுக்கு இந்தியாவை அடகு வைக்க வேண்டுமா ?? என்ன கொடுமை.
        about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    • Veenaiponavan Nallavan  from Hyderabad
      உங்களின் கருத்துசுதந்திரமும் எங்களின் டோவ்ன்வோட்டும் சமர்ப்பணம்; சங்கமம்.
      about 21 hours ago ·   (2) ·   (1) ·  reply (0)
  • VC. SAROAVANAN  from Chennai
    இப்போது நாட்டில் ஒரு விழயம் நல்லது போன்று தோன்றுகின்றது ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் கடந்த ஒரு வருடத்திற்கு மும்பு ஆரம்பித்த கட்சியின் தலைவர் உண்மைமட்டும் பேசுகின்றார் தன் மீது பெரிதாக எந்த உழல் புகாரும் இல்லை என்பதை மட்டுமே வைத்திக்கொண்டு இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் குட்டையை குழப்பி வெலாங்கு மீன் கிடைக்குமா என்று காத்திருகின்றார். உண்மை, நேர்மை என்று கூறி மக்களை பெரிய முட்டாலாகுன்றார் இந்த அரவிந்த் கேஜ்ரிவால். சரி அவர் சொல்ல்வதே உண்மையெனில் எதற்கு கிடைத்த டெல்லி முதல்வர் பதவியை நிர்வாக திறமை இன்றி ஓடிவந்தார் என்பதை முதலில் கூறட்டும். அரவிந்த் கேஜிரிவாளுக்கு போடும் ஒட்டு யானை தன் தலையில் மண் அள்ளி போட்டதற்கு சமம் என்பதை இந்த பொதுத்தேர்தல் முடிந்தவுடன் தெரியவரும். இன்று இந்தியாவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்தயாவில் இருக்கும் பல போலி என் ஜி ஒ களே காரணம். திருவாளர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் பின்னால் பல என் ஜி ஒ க்கள் மறைந்துள்ளன என்பதை இதுவரை கேஜெரிவால் மறுக்கவில்லை. அனால் உண்மை நேர்மை பற்றி பேசுகின்றார்.
 

Monday, February 17, 2014

இந்தியாவை ஆள்வது முகேஷ் அம்பானி தான் - அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி உரை

நீங்கள் கைகோத்திருப்பது நாட்டுக்காகவா அம்பானிக்காகவா?- அரவிந்த் கேஜ்ரிவாலின் பதவி விலகல் உரை

டிசம்பர் 28-ல் நாங்கள் பதவிப் பிரமாணம் ஏற்றோம். ஊழலுக்கு எதிரான மிக வலுவான சட்டமாக ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது என்பதே எங்களுடைய வாக்குறுதிகளிலேயே மிகவும் முக்கியமானது. ‘சட்டமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிப்போம்’ என்று இந்த காங்கிரஸ்காரர்கள் எழுத்துபூர்வமாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால், இன்று சட்டமன்றத்தில், நாங்கள் ஜன் லோக்பால் மசோதாவை முன்வைத்தபோது, காங்கிரஸும் பா.ஜ.க-வும் கைகோத்துக்கொண்டன. 

 

எதற்காகக் கைகோத்திருக்கிறீர்கள்? 


இந்திய வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை. ஆனால், இன்று அவர்கள் கைகோத்துக்கொண்டனர். நமக்குப் பின்னால், திரைமறைவில் இருந்துகொண்டு அவர்கள் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருந்தார்கள். கடந்த இரு நாட்களில் அவர்களது நிஜமுகம் வெளியே தெரிந்துவிட்டது. ஜன் லோக்பால் மசோதா முன்மொழியப்படுவதைக்கூட அனுமதித்துவிடக் கூடாது என்பதற்காக, அதை உத்தரவாதப்படுத்துவதற்காக அவர்கள் கைகோத்துக்கொண்டார்கள். 



நண்பர்களே, மூன்று நாட்களுக்கு முன், நாங்கள் முகேஷ் அம்பானி மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தோம். இந்த நாட்டின் அரசாங்கத்தை நடத்தும் நபர்தான் முகேஷ் அம்பானி என்பவர். காங்கிரஸ் கட்சி என்னுடைய கடை என்று முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கடையிலிருந்து அவர் வேண்டியதை வாங்கிக்கொள்வாராம். 10 ஆண்டுகளாக ஐ.மு.கூ. அரசை முகேஷ் அம்பானிதான் இயக்கிக்கொண்டிருந்தார். கடந்த ஓராண்டு காலமாக முகேஷ் அம்பானி மோடிஜியையும் ஆதரித்துவருகிறார். 


மோடிஜிக்குப் பின்னால் முகேஷ்ஜி

 
எங்கேயிருந்து மோடிஜிக்கு இவ்வளவு பணம் வருகிறது? ஹெலிகாப்டர்களில் அவர் ஊர் சுற்றுகிறார், பெரிய பெரிய பேரணிகளை நடத்துகிறார். எங்கேயிருந்து இதெற்கெல்லாம் பணம் வருகிறது? இவற்றுக்குப் பின்னால் முகேஷ் அம்பானி இருக்கிறார். 


நண்பர்களே, நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராகக் குரலை உயர்த்திய அடுத்த நொடியே காங்கிரஸும் பா.ஜ.க-வும் சேர்ந்துகொண்டன. ஜன் லோக்பால் மசோதாவை முன்வைக்க அவர்கள் விடவில்லை. 



கேஜ்ரிவால் ஏதோ ஒரு குட்டி லஞ்ச ஒழிப்பு அலுவலர்தானே என அவர்கள் நினைத்துவிட்டார்கள். இந்த அளவுக்குக் குடைச்சல் கொடுக்கிறானே என்று எரிச்சலடைந்துவிட்டார்கள். ஜன் லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால், இந்த ஆட்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். அதனால்தான் இந்த இரு கட்சிகளும் சேர்ந்து இந்த மசோதாவை நிறைவேற விடாமல் ஒழித்தன. 


இப்போது நாங்கள் முகேஷ் அம்பானியையும் வீரப்ப மொய்லியையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். 


அநேகமாக நாளை ஷரத் பவாரை அம்பலமேற்றியிருப்போம். அடுத்து, அநேகமாக கமல்நாத் முறையாக இருந்திருக்கும். எப்படியோ, அவர்கள் ஒவ்வொருவராக மாட்டியிருப்பார்கள். 


நான் சாதாரண மனிதன்

 
நான் ஒரு சாதாரண மனிதன். நான் ஒன்றும் அவதார புருஷன் இல்லை. நான் உங்களில் ஒருவன். அதிகாரத்துக்காகவோ இந்த நாற்காலிக்காகவோ இங்கே வரவில்லை. அதனால்தான் எங்கள் அரசாங்கம் இப்போது பதவி விலகுகிறது.
ஜன் லோக்பால் மசோதாவுக்காக நூறு முதல்வர் பதவிகள்கூடப் பறிபோகலாம். தவறில்லை. நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்த நாட்டுக்காக நாங்கள் உயிர்கொடுக்க வேண்டும் என்றால், நான் அதிர்ஷ்டக்காரன் என்றே கருதிக்கொள்வேன். 


இப்போதுதான் எங்கள் அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது. எங்கள் அரசாங்கம் பதவி விலகுவது என முடிவுசெய்யப்பட்டது. இதோ என் பதவி விலகல் கடிதம். நான் இப்போது துணைநிலை ஆளுநரை பார்க்கப்போகிறேன். சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, மறுதேர்தல் நடத்த வேண்டும் என எங்கள் அமைச்சரவை பரிந்துரைத்திருக்கிறது. 


எங்களால் முடிந்ததைச் செய்திருக்கிறோம். 


டிசம்பர் 28-ல் நாங்கள் அரசு அமைத்தது முதல் இன்றுவரை, எங்கள் அமைச்சர்கள் ஒரு இரவுகூட சரியாகத் தூங்கியதில்லை. இரவு பகலாக அவர்கள் வேலைபார்த்தார்கள். எங்கள் முயற்சியைத் தொடர நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. மின் கட்டணம், நீர்க் கட்டணம் குறைத்தோம். மின் நிறுவனங்களைத் தணிக்கை செய்ய உத்தரவிட்டோம். ஊழலைக் குறைத்திருக்கிறோம். 


முழு நேர்மையுடனும் நல்ல நோக்கங்களுடனும் நாங்கள் வேலைசெய்தோம். நாங்கள் தவறுகளைச் செய்திருக்கலாம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களால் முடிந்ததைச் செய்தோம். உங்களால் ஆட்சிசெய்ய முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக மின் நிறுவனங்களை அவர்களால் தணிக்கை செய்ய முடியவில்லை. நாங்கள் ஐந்தே நாட்களில் செய்தோம். 65 ஆண்டுகளாக அவர்களால் ஊழலைக் குறைக்க முடியவில்லை. நாங்கள் 49 நாட்களில் செய்தோம். ஷீலா தீட்சித்தும் முகேஷ் அம்பானியும் செய்த ஊழலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு 


செய்தோம். உடனே அவர்கள் சொல்கிறார்கள்: ஆட்சி செய்யுங்கள், இதையெல்லாம் செய்துகொண்டிருக்காதீர்கள் என்று! 


ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுதானய்யா உண்மையில் ஆட்சிசெய்வதென்பது. 


எனக்குச் சிலசமயம் என்ன தோன்றுகிறதென்றால், இந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பா.ஜ.க-காரர்களுக்கும் ஒரு சில கோடிகளை விட்டெறிந்துவிட்டிருந்தோம் என்றால், இது நல்ல காரியம் என்று அவர்கள் சொல்வார்கள். 


மிளகுத் தூள் ஜனநாயகம்

 
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் நடந்ததைப் பார்க்கும்போது, என் மனம் வருத்தமடைகிறது. நாடாளு 


மன்றத்தில் அவர்கள் மிளகுத் தூள் தூவியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் என் மைக்கை உடைத்திருக்கிறார்கள். என் ஆவணங்களைக் கிழித்துப்போட்டிருக்கிறார்கள். ஓர் அமைச்சரிடம் வளையல்களைக் கொடுத்திருக்கிறார்கள். வளையல் கொடுப்பதென்றால் என்ன அர்த்தம்? பா.ஜ.க. பெண்களை மதிக்கிறதா இல்லையா? 


நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் என்கிறார்கள். சட்டமன்றமும் கோயில்தானாம், மசூதிதானாம். நான்கேட்கிறேன்: கோயில்களில் விக்கிரகங்களை உடைத்தெறிவீர்களா? மசூதியில் குரானைக் கிழித்தெறிவீர்களா? தேவாலயத்தில் விவிலியத்தைக் கிழித்தெறிவீர்களா? இயேசுபிரானின் சிலைகளை உடைப்பீர்களா? 


வெட்கப்படுகிறேன். இந்த ஆட்கள் சட்டமன்றத்தையும் நாடாளுமன்றத்தையும் கேவலப்படுத்திவிட்டார்கள். 


அரசியல் சாசனத்துக்கு விரோதம் எது?

 
நாங்கள் அரசியல் சாசனத்துக்கு விரோதமாகச் செய்துவிட்டோமாம். எஃப்.ஐ.ஆர். போட்டது அரசியல் சாசன விரோதமாம். ஊழலுக்கு முடிவுகட்டுவதற்காக எஃப்.ஐ.ஆர். போட்டால் அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள், ஜன் லோக்பால் மசோதாவை முன்மொழிய வேண்டும் என்றால், அது அரசியல் சாசன விரோதம் என்கிறார்கள். சட்டமன்றத்தில் சட்டங்களை முன்மொழிவதற்கு மத்திய அரசு அனுமதி வேண்டும் என்கிறார்கள். அவர்கள் புளுகுகிறார்கள் நண்பர்களே, நான் அரசியல் சாசனத்தைப் படித்திருக்கிறேன். மத்திய அரசின் அனுமதி வேண்டும் என அது எந்த இடத்திலும் சொல்லவில்லை. 


தங்களை காலனிய ஆட்சியாளர்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. தன்னை வைஸ்ராய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் துணைநிலை ஆளுநர். இந்தச் சட்டமன்றமே ஒன்றுமில்லை என நினைக்கிறார்கள். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து நாம் இன்னும் சுதந்திரம் வாங்கவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்களைக் கேட்டுத்தான் எதையும் செய்ய வேண்டுமாம், அப்படிக் கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். 


நான் அரசியல் சாசனத்தைத்தான் பின்பற்றுவேன். அரசியல் சாசனத்துக்காக நான் என் உயிரையே கொடுப்பேன். ஜன் லோக்பால் மசோதா முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதே. அவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால், ஊழலைத் தொடர்ந்து நடத்திட அவர்கள் விரும்புகிறார்கள். 


நண்பர்களே, நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆவணங்களைக் கிழித்தெறிந்தார்கள்; பறித்துக்கொண்டார்கள். இதையெல்லாம் அரசியல் சாசனரீதியிலானது என அவர்கள் நினைக்கிறார்கள். நாம் நாட்டுக்காகப் போராடுகிறோம். இதை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்கிறார்கள்.
இந்த நாட்டின் மக்கள் உங்களுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த நாட்டின் மக்கள் எப்போதுமே அமைதி காக்க மாட்டார்கள். 


நான் நேரே இப்போது துணைநிலை ஆளுநரிடம் செல்கிறேன். 


கடவுளே, நாங்கள் சாதாரணமானவர்கள், எங்களுக்குக் கருணைகாட்டுங்கள், வழிநடத்துங்கள் என வேண்டிக்கொள்கிறேன். இந்த நாட்டுக்காக எங்கள் உயிர்களைத் தியாகம் செய்வதற்கான வலிமையை எங்களுக்கு அருளுங்கள் என வேண்டிக்கொள்கிறேன். 


thanx - the hindu