Monday, December 23, 2013

பெண்களும் தாவர வகை தான்

1. பிகருங்க கழுத்தில் இருக்கும் ID கார்டால என்ன USE?நம்ம பார்வை தப்பான கோணத்தில் இருந்தாலும் ID கார்டைத்தான் பார்க்கறோம்னு நம்பவைக்கலாம்


===================



2  மெதுவடை 8 ரூபா ,சாம்பார்வடை 16 ரூபானாா வடை யை மட்டும் தனியா ஆர்டர் பண்ணி தனியா சாம்பார் வரவெச்சு ஊற வெச்சு அடிப்பவன் தான் தமிழன்



=================



3  ஹோட்டல் ல லஞ்ச் சாப்பிட பேமிலி ரூம் ல இருக்கறவங்க ஒரே பேமிலிதானா? னு ரேசன் கார்டு ப்ரூf கேட்டா 75% ஜோடிங்க தலை தெறிக்க ஓடிடுவாங்க போல



=====================



4  தாலி கட்ன சொந்தப்பொண்டாட்டி கிட்டேயும் ,டேமேஜர்ட்டயும் நம்ம ஒப்பீனியனை மட்டும் சொல்லவே கூடாது.ஒபீடியன்ஸ் மட்டும் போதும்


==================



5  பேண்ட் அணியும்போது பாதம் வரை மூடி கண்ணியமா் இருந்தால் மிடில் கிளாஸ் .அதே பேன்ட்டை முழங்கால் வரை சுருட்டிவிட்டுக்கிட்டா ஹை கிளாஸ் பிகர்



=================


6  நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறது தப்பில்லை.ஆனா பொண்ணுங்க கிட்டே மட்டும் நல்ல பேர் எடுக்கனும்னு நினைக்கறதுதான் தப்பு #,நாட்ல 90% பேர்


===================


7 நம் பக்கம் நியாயம் இருந்தாலும் ,நம் கூற்று சரியாக இருந்தாலும் உயர் அதிகாரியிடம் வாதிடுவதைத்தவிர்த்தல் நல்லது



=================


8 ஆபீஸ் வேலையை திறம்பட முடிப்பவன் திறமைசாலி.கூடவே தன் சொந்த வேலையையும் முடிப்பவன் சாமார்த்தியசாலி.அத போல் பணி கிடைத்தவன் அதிர்ஷ்டசாலி



====================


9 வாழை இலை ல மிச்சம் வெச்சுட்டுப்போறவன் தமிழன் இல்லடா.வாழை இலையைத்தவிர எதையும் மிச்சம் வைக்காம சாப்டறவன் தாண்டா தமிழன்



===================



10 சாப்பாடு 75 ரூபான்னா தமிழன் 30 ரூபாய்க்கு ஆகற பொரியலே சாப்ட்டு சரி பண்ணிடுவான்



====================



11  பலரின் பாராட்டைப்பெற்ற மூடர் கூடம் ,விடியும் முன் 2 ம் ஹாலிவுட் உல்டா ரீமேக் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது ! # சொல்லிட்டு செய்ங்கய்யா




=================


12 வாணலியில் ( கடாய் ,வடச்சட்டி ) சுடு மணலில் நிலக்கடலை வறுக்கும் வாசம் நுகர்வது அதை சாப்பிடுவதை விட அதிக புலன் இன்பம் தர வல்லது #மஹ்ம்ம்ம்



=====================



13 ஹோட்டல் ல 4 டைம் பொரியல் கேட்டு வாங்கி சாப்ட்டேன்.அரண்டுட்டாங்க.மிச்சம் வெச்சுட்டுப்போறதுதான் வழக்கமாம் # யாரு கிட்டே;-)



==================



14 கேரளாப்பொண்ணுங்க கிட்டே மட்டும் " உங்க பல் அரிசி மாதிரி இருக்கு" னு அளந்து விடக்கூடாது.எவ்ளோ பெரிய அரிசி



==================



15 பெண்களும் தாவர வகை தான் 1 தொட்டா சிணுங்கி தாவர வகை 2 பண பலம் உள்ள இடமாப்பார்த்து தாவர வகை



================



16 எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் =,எல்லா பொண்ணுங்களும் மேரேஜ் ஆன பின் ஒரு பையன் , ஒரு பொண்ணு னு இரு தரப்பிலும் குழந்தை பெத்துக்கனும்


===================



17 ஜவுளிக்கடைல 1008 டிசைன்ல புடவை இருந்தாலும் வாசல்ல நிக்கும் பொம்மை கட்டி இருக்கும் அதே சேலை தான் வேணும் என அடம் பிடிப்பவளே பெண்


===================



18 ஒரு சினிமா ரசிகன் தப்பு ன்னு சொல்றதைக்கூட தபு னு தான் சொல்வான் # இது ரொம்பத்தபு




====================



19 அரசியல் ரீதியா நான் காங்கிரஸ்க்கு எதிர்ப்பு.அதனால மோடிக்கு ஆதரவு.அவரைப்பற்றி நெகடிவ் நியூஸ் வந்தா அதை மக்களிடம் பரப்புவேன்.அது என் உரிமை


================



20 ஒரு படைப்பாளிக்குக்கிடைக்கும் வணிக ரீதியான தோல்வி அவன் பாதையை ,படைப்பாளுமையை மாற்றி விடும் என்பதால் இழப்பு ரசிகனுக்கும்



=========================

Sunday, December 22, 2013

தலைமுறைகள் - சினிமா விமர்சனம்


பெரும் ஒளிப்பதிவாளர், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் இயக்குநர்... என பண்முகங்கொண்ட பாலுமகேந்திரா, முதன்முதலாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் "தலைமுறைகள்! அவரே, இயக்குநர் எம்.சசிகுமாருடன் இணைந்து தயாரித்திருப்பதுடன் வழக்கம்போல ஒளிப்பதிவும் செய்து இயக்கியும் இருக்கும் இப்படத்தில் விசேஷம்... விழா வேத்திகளில் மட்டுமின்றி வீட்டிற்குள்ளேயும் கூட இதுநாள் வரை தொப்பியுடன் வாழ்ந்து, திரிந்த பாலுமகேந்திரா, தன் தொப்பியை தரமான தமிழ் சினிமாக்களின் தலைக்கு மணிமகுடமாக சூடிவிடும் முகமாக வெறும் தலையுடன் நடித்து "தலைமுறைகள் படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு ராஜமரியாதை சேர்த்திருக்கிறார் என்றால் மிகையல்ல!

கதைப்படி காவேரிக்கரை கிராமத்தை சேர்ந்த வயதான ஓய்வுபெற்ற தமிழ் வாத்தியர் பாலுமகேந்திராவின், வாரிசு எஸ்.சஷிக்குமார், சென்னையில் பெரிய டாக்டர். அப்பாவின் பேச்சை மீறி உடன் பணி செய்யும் பெண் டாக்டர் ரம்யா சேகரை மணம் முடித்து ஊருக்கு வருகிறார். கோவாவை சேர்ந்த கிறிஸ்துவ பெண்ணான ரம்யாவுக்கு தமிழும் தெரியாது, தன் ஜாதி பாரம்பரியமும் புரியாது... எனும் காரணத்தால் மகனையும், மருமகளையும், தான் செத்தாலும் வரக்கூடாது என அடிக்காத குறையாக விரட்டுகிறார் பாலுமகேந்திரா. மகள், அதேஊரில் வசிக்கும் பாலுவின் இன்னொரு தாரம், அவரது மகள்... எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத குறையுடன் வாழ்கிறார்.

ஒருகட்டத்தில் பக்கவாதம் வந்து இரண்டு மாதகாலம் கஷ்டப்பட்டு மீளும் பாலுமகேந்திராவை பார்க்க, விஷயம் கேள்விப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வருகிறார் மகன் எஸ்.சஷிக்குமார். இரண்டு நாட்களில் மருமகளும், தமிழே தெரியாத பேரனும் வந்து சேர, தன் வயோதிகத்தாலும், வாழ்க்கை தந்த பாடத்தாலும், பேரன் மீதான பாசத்தாலும் பாலுமகேந்திராவின் கோபம் படிப்படியாக குறைகிறது. அதன்பின் சென்னைக்கு மகன் திரும்ப, மருமகளும், பேரனும் அந்தஊர் மருத்துவ தேவையை மனதில் கொண்டு



பாலுமகேந்திராவுடன் தங்கி விட, பிரசவத்திற்கு வந்திருக்கும் மூத்ததாரத்து மகள், இரண்டாம் தாரத்து மகளின் அன்பு, மருமகளின் நன்னடத்தை, பேரனுக்கு இவர் கற்றுத்தந்த தமிழ், பேரனிடம் இவர் கற்கும் ஆங்கிலம் என கூட்டுக் குடும்பத்தின் அத்தியாவசத்தையும் அழகாக உணர்த்தி மன நிறைவுடன் மரணத்தை தழுவுகிறார் பாலுமகேந்திரா! பேரனும் தாத்தா கற்றுத்தந்த தமிழுடன் தாத்தாவையும் மறக்காமல், தமிழையும் மறக்காமல் பெரும் எழுத்தாளனாக எம்.சசிக்குமாராக உருமாறி "தாத்தாவும் நானும் எனும் நாவல் எழுதி பெரும் விருது பெற இனிதே நிறைவடைகிறது தலைமுறைகள்!

பாலுமகேந்திரா, தாத்தா பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். யதார்த்தத்தை மீறாமல் அந்த தாத்தாவாகவே அவர் வாழும் வாழ்க்கை... ஆஹா, நமக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என எல்லாதரப்பு ரசிகர்களையும் ஏங்க வைக்கும்! அதுவும் பேரனுக்கு விஜயதசமி நாளில், நெல்லில் கோயிலில் வைத்து, "அ எழுத கற்றுக் கொடுத்துவிட்டு அவர் படும் ஆனந்தமாகட்டும், தமிழ்வாத்தியார் பேரனுக்கு தமிழ் தெரியவில்லை என அவர் தலையில் அடித்து கொள்ளும் இடமாகட்டும், ஆரம்பகாட்சிகளில் ஜாதிபிரியத்துடன் அவர் நடந்து கொள்ளும் முறையாகட்டும், மகன் மீது காட்டும் கோபத்தில் ஆகட்டும், மகள்கள், மருமகள் மீது காட்டும் அன்பிலாகட்டும், பேரம் மீது காட்டும் பாசத்திலாகட்டும், அனைத்திலும் ரசிகனை சீட்டோடு சேர்த்து கட்டி போடும் வகையில் ஜமாய்த்திருக்கிறார் சபாஷ்!

மகன், எஸ்.சஷிக்குமார், பேரன், மாஸ்டர் கார்த்திக், ரம்யா சங்கர், "எங்கேயும் எப்போதும் வினோதினி, சக்தி, நண்பர் ரயில் ரவி, தில்லை பெருமாள், ஆர்யான், கெஸ்ட்ரோலில் வரும் இயக்குநர் எம்.சசிக்குமார் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அந்த பேரன் ஆதியாக வரும் கார்த்தி சூப்பர்ப்!

தாத்தாவிடம் "அ எழுத கற்றதும் தனது சிறுநீரை பீய்ச்சி அடித்து "அ போடும் அவரது குறும்பை பார்த்து பாலுமகேந்திரா முயற்சிப்பதும், அதைப்பார்த்துவிட்டு சிறுவன் "ஷேக்கிங் "அ என கிண்டல் அடிப்பது எல்லாம் பாலுமகேந்திரா டச்! அந்த காட்சியில் இன்னும் கொஞ்சம் புதுமை புகுத்த பாலுமகேந்திரா முயன்றிருந்தார் என்றால், பேரனிடம் ஆங்கிலம் கற்கும் அவர் பேரனுக்கு போட்டியாக "ஏ வை சிறுநீரில் முயற்சித்து தமிழை காப்பாற்றி இருக்கலாம்! மற்றபடி இசைஞானி இளையராஜாவின் இசையும், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவும், இயக்கமும் பின்னிப் பிணைந்து உலகப்படங்களுக்கு நிகரான ஒரு படத்தை "தலைமுறைகளாக தந்துள்ளது என்றால் மிகையல்ல!



பாலுமகேந்திராவின், "தலைமுறைகள் - ஏழேழு தலைமுறைகள் தாண்டியும் பேசப்படும்!

  • நடிகர் : பாலுமகேந்திரா, சசிகுமார்
  • நடிகை : ரம்யா, வினோதினி
  • இயக்குனர் :பாலுமகேந்திரா
thanks to தினமலர்  

என்றென்றும் புன்னகை' - விமர்சனம்


ஜிவா, த்ரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம், வினய், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்ய, அஹ்மத் இயக்கியிருக்கிறார். வி.ராமதாஸ், தமிழ் குமரன் தயாரிக்க, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.


சிறுவயதில் இருந்தே ஒன்றாகவே இருக்கிறார்கள் ஜிவா, வினய், சந்தானம். விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார்கள். திருமணமே செய்துக் கொள்ள மாட்டோம் என்ற முடிவில் இருக்கும் இவர்களது வாழ்க்கையில், விளம்பர பட சம்பந்தமாக த்ரிஷா நுழைய, சபதம் என்னவாகிறது என்பதே கதை.


படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் மிகவும் கலர் ஃபுல்லாக இருக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவு செய்திருக்கும் மதி. குறிப்பாக, மாடியின் விளிம்பில் ஜிவா அமர்ந்திருக்கும் போது த்ரிஷா பேசும் காட்சி. மதிக்கு ஒரு ஸ்பெஷல் அப்ளாஸ்.
ஜிவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆண்ட்ரியா அனைவருமே தங்களது பணியை அருமையாக செய்திருக்கிறார்கள். ஜிவா - த்ரிஷா இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளை இயக்குநர் அஹ்மத் கையாண்டு இருக்கும் விதம் அழகு.
நீண்ட நாட்கள் கழித்து சந்தானத்தின் காமெடிக்கு சிரிக்க முடிகிறது. இடைவேளைக்கு முன் நண்பர்களோடு சேர்ந்து கலாய்ப்பதும், இடைவேளைக்குப் பின் மனைவியிடம் இவர் மாட்டிக் கொள்வதும் என சந்தானம் இஸ் பேக்.


ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. ஓஹோ ப்ரியா.. ப்ரியா பாடலும், அதனை காட்சிப்படுத்திருப்பதும் அழகு.



படத்தின் பலவீனம் என்றால், அம்மா இன்னொருவருடன் ஓடிவிட்டதால் ஜிவா பெண்கள் என்றாலே அலர்ஜி என்பதும், ஜிவா - நாசர் இருவரும் ஏன் பேசாமல் இருக்கிறார்கள் என்பதற்கான காரணமும் சரியாக கையாளப்படவில்லை. 2:31 மணி நேரம் படம் என்பதால் இடைவேளைக்குப் பின் படம் எப்போது முடியும் என்று நினைக்க வைக்கிறது.


மொத்தத்தில், படம் முடிவடையும் போது சிறு புன்னகையோடு கடந்து போக வைக்கிறது இந்த ’என்றென்றும் புன்னகை'




நன்றி - த  தமிழ் ஹிந்து

Friday, December 20, 2013

பிரியாணி - சினிமா விமர்சனம்

 
 
ஹீரோவும் , அவரோட ஃபிரண்டும்  சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட்.அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன்.மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும் . நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு.

வில்லன் ஒரு   கோடீஸ்வரர். நெம்பர்  டூ இல்லீகல் பிஸ்னெஸ் ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி வாலண்ட்ரியா ஹீரோவை  ஹோட்டல்  ரூமுக்கு கூப்பிடுது . ஹீரோவும்  நண்பரும்  போறாங்க . ஏதோ மாத்திரையைக்கலந்து  கொடுத்துடுது . மப்பும் , மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.

கோடீஸ்வரர் வில்லன்  கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது.

யார்  கொலையாளி ?

1.  ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும்  கூட இருக்கும் நண்பனா?


2 வில்லனோட சொத்துக்கும் , நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு  அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா?

3   போலீஸ் சதியா ?

 இந்த   3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய  திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை  கொடுஹ்ட்திருக்காங்க .


படத்தின்  ஹீரோ இயக்குநர் வெங்கட்  பிரபுதான் . அவருக்குனு  என்ன எதிர்பார்ப்பு  இருக்கோ அதை கச்சிதமா  நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை  கிளாமர் , காமெடி , பின் பாதியில் சஸ்பென்ஸ் , சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா . நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு



கார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின்  கிடைத்த ஹிட் படம் . நல்ல வேளை. இந்தப்படம்  ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க . பல பெண்கள்  தானாக வந்து வலிய லவ்வும் ப்ளே பாய் கேரக்டர் , கமல் , சிம்பு  மாதிரி ஆட்கள்  செய்ய வேண்டிய  கேரக்டர் . ஜாலியா  செஞ்சு  இருக்கார் .பெரும்பாலும்   திரைக்கதையும் , இயக்கமும் தான் இந்தப்படத்தில்  முன்னிலை   என்பதால்  பல குறைகள்  தெரியல . வெல்டன் கார்த்தி


பிரேம்ஜி க்கு உண்மையில் லக் தான் . தம்பிக்கு  முக்கியத்துவம்  வரும் மாதிரி  கேரக்டரை   ரெடி பண்ணி   படம்  பூரா  ஹீரோவுக்கு இணையா   வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை  வரை பொண்ணுங்களைப்பார்த்து   2 பேரும்  ஜொள்  விடுவதே  கல கலப்பு


ராம்கி  முக்கிய  ரோல் . நல்ல வில்லத்தனம் . நாசர்  தான் அந்த  கோடீஸ்வரர் . அதிக வாய்ப்பில்லை .ஆனா  மகளிர் மட்டும் ல நாகேஷ் பிணமா நடிச்சது  போல்  இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள்  எல்லாம்  குட் .

ஹன்சிகா தான் நாயகி . ஒப்புக்குச்சப்பானி மாதிரி , படத்துல  இவருக்கு வேலை அதிகம்  இல்லை .


மாயா கேரட்கரில்  கில்மா லேடியாக  வரும்  மாண்டி  தாக்கர்  தான்  மெயின்  கேரக்டர் , செம  கிளாமர் . அந்தக்கால  சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.


உமா ரியாஸ்கான்க்கு  செம கேரகட்ர் . விஜய் சாந்தி  போல் அவர் போடும்  ஃபைட்டுக்கு  தியேட்டரில்  விசில் சத்தம் பறக்குது . அவரது   முக பாவனைகள் , நடிப்பு , பாடி லேங்குவேஜ் பிரமாதம்

கலக்கல்  காம்னா


1. ஹீரோ ஹீரோயினிடம்  நடந்த கதையை  சொல்லும் போது புத்திசாலித்தனமாக  தனக்குசாதகமாக கதையை மாற்றிச்சொல்வது நல்ல யுக்தி . விருமாண்டியை  நினைவு படுத்தினாலும்   குட்

2  கெஸ்ட் ரோலில் வரும்   ஜெய் யை இவர் ஃப்ரீயா  இருந்ததால  இதுல கெஸ்ட் ரோல் பண்றார்  என அறிமுகப்படுத்திய  விதம்


3  அஜித்  கெஸ்ட் ரோலில் வர்றார் என்ற  புரளியைக்கிளப்பி பொன் வைக்கும் இடத்தில்  பூ வைப்பது  போல் மங்காத்தா  செலிபிரேஷன் டான்ஸ் இணைத்த விதம்

4 . ராம்கி , உமா ,மாண்டி  தாக்கர்   மூவரின்  நடிப்பும் , ஒளிப்பதிவு , எடிட்டிங்க் போன்ற  தொழில்  நுட்பங்களும்  சபாஷ்

சொதப்பல்  சொப்னா

1. ஹீரோவோட அக்கா கிட்டே   போலீஸ் ஃபோன் நெம்பர் வாங்குது . உங்க  நெம்பரை  கண்காணிக்கனும்னு சொல்லிட்டேதான் வாங்கறாங்க . போலீஸ் அந்தப்பக்கம் போனதும் அக்கா தலைமறைவா இருக்கும்  தம்பி ஹீரோவுக்கு அதே நெம்பர் ல இருந்து  ஏன் பண்ணுது ? பப்ளிக்  பூத் ல இருந்து  பண்ணி  இருக்கலாமே?


2  முக்கியமான  வீடியோ ஆதாரத்தை  சேனல் அதிபருக்கோ , நிர்வாகத்துக்கோ காட்டாம , பர்மிஷன் வாங்காம மீடியாவில் அதை ஹன்சிகா  டெலிகேஸ்ட் பண்ணுவதும் , அதை சமாளிப்பதும்  , அதுக்கு மேலிடம் எந்த ஒழுங்கு நடவடிக்கையும்  எடுக்காமல்  இருப்பதும்  எப்படி ?


3  போலீஸ்  யூனிஃபார்மில்   வரும் அந்த கூலிப்படை ஆள் முக்கிய சாட்சி  யை பொது மக்கள்  முன்னிலையில்  ரயிலில் தள்ளி  விடும் அவசியம் என்ன? சாவதானமாகக்கூட்டிப்போய்  தனி  இடத்தில்  கொலை செஞ்சிருக்கலாமே? கேமரா வில் பதிவாகும்  பயமே  இல்லையா?


4  நாசரை  கொலையாளி  2 டைம்  சுட்டவர் நாடித்துடிப்பு அடங்கியாச்சா? என பார்க்காமலா போவார் ? நாசர்  உயிரோட இருக்கார் என்ற ஹீரோவின்   டிராமாவை எப்படி  நம்பறார் ?


5 பின் பாதியில்  பல  திருப்பங்கள் கடைசி  15  நிமிடத்தில்  சொல்வது   சி செண்ட்டர்  ரசிகர்களுக்குப்புரியாமல் போக வாய்ப்பு  இருக்கே ?


நச்  வசனங்கள்


1.  க்ளாஸ் ல பாடம் சொல்லித்தரும் டீச்சருக்கே லவ் லெட்டர் தந்த பரம்பரைடா நாம ;-)



2  நான் எந்தப்பொண்ணை லவ் பண்ணாலும் அதை நீ உஷார் பண்ணிட்டுப்போய்டிறியேடா



3  என்னைப்பார்த்துக்காப்பி அடிச்சு பரீட்சை எழுதுன அவன் முதல் மார்க் .நான் 2 வது.எப்டி?



4  நான் பாத்ரூமை பாத்ரூம் போக மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்.நீ எப்டி னு எனக்குத்தெரியாது



5  என் லவ்க்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்.


சரி. அந்த 3 பேர் ல யாரை லவ்வறே?

3 பேரையும்.ஹி ஹி

6  சார்.தண்ணி அடிச்சா இவன் உங்களைக்கொன்றுவான்.


வாட்?



 மப்புல பேசியே உங்களைக்கொன்றுவான்


7  கில்மா லேடி- வெளிநாட்டுக்காரை ஓட்டி இருக்கீங்களா?


ஜொள்மா கார்த்தி = சான்ஸ் கிடைச்சா ஓட்டுவேன்


8  இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்டித்தான் ஒரே பாட்ல ஹீரோயின்சை கரெக்ட் பண்றாங்க்ளோ?- பிரேம்ஜி


9  என்னைப்பத்தி  எதுவும்  சொல்லாதே , நம்ப மாட்டா.

நல்லதா சொல்ல என்ன இருக்கு ? அதனாலதான் சொல்லவேணாம்னேன்

10  ஏய் , செம வண்டி  இல்லை ?

 வண்டி மட்டுமா?

11 பெரிய இடத்து லேடின்னா படியாதுன்னு  யார்  சொன்னது ?


12   நீ  ஆசைப்படறது எல்லாம் உனக்கு கிடைக்குது  ஓக்கே , நான் ஆசைப்படுவதும்  உனக்குக்கிடைச்சுடுதே அது எப்படி ?

13  உன் கைல  திடீர்னு ஒரு பாடி  கிடைச்சா என்ன செய்வே?


 லேடீஸ் அயிட்டம் எனக்கு எதுக்கு ?

 டேய் , டெட் பாடி  கிடைச்சா

14  அங்கே தானே பார்த்துட்டு  இருந்தே ,  எதுக்கு இங்கே திரும்புனே ?
 அந்தப்படத்தை விட இந்தபப்டம்  நல்லா  இருக்கு. டேய் டேய் கிஸ் குடுடா அவளுக்கு , பார்த்துட்டுப்போய்டறென்

15  ஹூம் , எவ்வளவோ  போச்சு , இதுவும்  போனா என்ன?


16  அழகான  பொண்ணுங்கன்னா  பெங்களூர் தான் . உதா - ஐஸ்வர்யா , அனுஷ்கா


17.உனக்கொரு ப்ரச்சனைன்னா விட்டுபோரதுக்கு நானொன்னும் உன் கேர்ள் ப்ரெண்ட் இல்ல மச்சி , உன் ப்ரெண்ட் "


18. கட்டம் என்ன சொல்லுதுன்னா , அவனவன் பிரியாணி பீசுல அவனவன் பேரு எழுதியிருக்கும்ங்குது "


சி  பி கமெண்ட் - பிரியாணி - ஹேங்க் ஓவர் 1 ,2 ஹாலிவுட் படம் ,பஞ்ச தந்திரம் பாதிப்பு இருந்தாலும் குட் க்ரைம் திரில்லர்.ஹிட் ஆகிடும்


பிரியாணி = முன் பாதி கில்மா காமெடி .பின் பாதி க்ரைம் த்ரில்லர்.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் -



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் -43,
 குமுதம் ரேங்க் - நன்று


ரேட்டிங் = 3.25 / 5

எல்லா செண்ட்டரிலும்  ஹிட் ஆகிடும்

Thursday, December 19, 2013

SHERLOCK HOLMES - ஹாலிவுட் சினிமா விமர்சனம்



 ஆங்கிலப் படங்கள்ல நாவல் அல்லது காமிக்ஸ் புத்தகத்தை மையமா வச்சு வெளி வந்து கலக்கு கலக்கின படங்கள் நிறைய (NARNIA, TINTIN, SPIDERMAN, THE DAVINCI CODE இன்னும்...). அந்த வரிசைல ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வந்து கலக்கிய படம் தான் ஷெர்லக் ஹோல்ம்ஸ். இது ஒரு டிடெக்டிவ் டைப் கதை.

சரி அறிமுகம் போதும்... கதைக்கு வருவோம். ஒரு அபார திறமை கொண்ட தனியார் துப்பறியும் ஆய்வாளர். ஓர் அரசு மருத்துவர் இவர்கள் சேர்ந்து செய்யும் சாகசங்களே படத்தின் கதைக்கரு.ஓப்பனிங் ல ஒரு கிறுக்கன் மந்திரம் தந்திரம்னு ஒரு பொண்ண பலி கொடுக்க முயற்சி பண்றான். அத நம்ம ஹீரோக்கள் காப்பாத்தி அந்த கிறுக்கன ஜெயில்ல தள்ளிடறாங்க. அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுது.

அதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சா...? அப்டீன்னு பார்த்தா.. ஒரு டிவிஸ்ட்.. மரண தண்டணைய நிறைவேத்தறாங்க . அரசு மருத்துவர் கன்ஃபார்ம் பண்ணி ஆல் அவுட்டு சொல்றார்.அவனை புதைச்சிடறாங்க. ஆனா அடுத்த நாள் அவ்ன் கல்லறை உடைஞ்சு இருக்குது. அதுக்கப்புறம் அந்த ஊரு பெரிய பதவில இருக்கற ஆளுங்க எல்லாம் ஒவ்வொருத்தறா கொல்லப்படுறாங்க. இதை BLACK MAGIC னு நம்பறாங்க. ஆனா ஹீரோவும் டாக்டரும் ஒத்துக்கல. வில்லன் எப்பிடி தப்பிச்சான், உண்மையில் இது மந்திர தந்திரமா? இல்ல மனித சக்தியா? ஏன் பெரிய தலைவர்கள் கொல்லப்படறாங்க என்பதை சஸ்பன்ஸ் த்ரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

படத்தின் முதல் ஹீரோ ஷெர்லக் ஹோல்ம்ஸ் கேரக்டரை உருவாக்கிய Arthur Conan Doyle அவர்களையே சாரும். இதுவரை யாரும் பார்க்காத அருமையான படைப்பு.அடுத்து திரைக்கதை வடிவம். ஆங்கிலத்துல பாத்தாலும் அனைத்து காட்சிகளும் குழப்பமில்லாமல் படமாக்கியது.சில சமயங்களில் அவர்கள் பேசும் வசனங்களும் தெளிவாகப் புரிந்தன.

அடுத்து மிக முக்கியமான ப்ள்ஸ் பாயிண்ட் 
ஐயரன் மேனில் கலக்கியவர் இதில்  ஷெர்லக் ஹோல்ம்ஸாகவே வாழ்ந்து இருக்கிறார். இவரைத் தவிற வேறு யாரை புக் செய்து இருந்தாலும் சொதப்பி இருக்கும். மருத்துவர், ஹீரோயின் , வில்லன் என பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான கேரக்டர். இயக்குநருக்கு ஒரு சபாஷ் .....




டாப் டக்கரு...:

1. படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்னை காப்பாற்றும் காட்சி. ஸ்டண்ட் அமைப்பு பக்கா.

2. ஏதோ ஒரு ஃபேண்டசி படம் போல ஆரம்பித்து பின்னர் த்ரில்லராக மாறி சூடு பிடிக்கும் திரைக்கதை.

3. ஒரு குத்துச்சண்டை காட்சியில் ஹீரோ சில விநாடிகளில் திட்டமிடுவதை விஸுவலாக காட்டி அடுத்த விநாடி ப்ளான் பண்ணியதை அப்பளை செய்யும் காட்சி. இது வரை திரையில் பயன்படுத்தப்படாத புதுமை .

4. இத தமிழ்ல எடுத்திருந்தா பில்டப்,பஞ்ச் டயலாக் என நாஸ்தி பண்ணியிருப்பார்கள். ஆனால் ஹாலிவுட்டில் அப்படி இல்லை. எல்லம் எயதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்கள்.

5.பெரிய ஹீரோ என்ற பில்ட் அப் இல்லாமல் ஆர்ப்பாட்டமில்லாத ஹீரோவின் நடிப்பு.

6. ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் ஃப்ரேமில் ஒரு காகத்தை காட்டி ப்ளாக் மேஜிக் என ஆடியன்ஸ்க்கு குறிப்பால் உணர்த்தியது.

7. படத்திற்கு தேவையான பின்னனி இசை. ஹாலிவுட்ட அடிச்சுக்க முடியாது.

8. படத்தின் கலரிங் சூப்பர். ஒரு வித டார்க் கலந்த பச்சை நிறம். கதை நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப  ஃபர்பெக்ட்டாக பொருந்துகிறது.

9. பக்கா காஸ்ட்யூம் வடிவமைப்பு.

10. இறுதிக்காட்சி பெரிய பலம்.க்ளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ பேசும் வசனங்கள் பொறி பறக்கிறது (தீப்பொறி தான்...). ஆடியன்ஸ்க்கு புரிய வைக்கறதுக்காக இது எல்லாம் ப்ளாக் மேஜிக் இல்ல-னு க்ளைமேக்ஸ்ல ஹீரோ கொடுக்கும் விரிவுரை அறிவியலில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதானு வியக்க வைக்கிறது. ( இத நம்மாளுங்க எல்லாம் அந்த காலத்துலயே கண்டுபிடிச்சுட்டாங்க)


டண்டானா டர்ணா.....

1. லம்ப்பா பெரிய குறைகள் என் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தாலும் தொழில் தர்மம்னு இருக்கில... ஹீரோயின் ஏன் திடீர்னு நல்ல பிள்ளையா மாறிடறாங்க? எத்தனை தமிழ் படத்துல பார்த்திருப்போம்.

2. சீன் வைக்க சான்ஸ் இருந்தும் ஏன் வைக்கல? இதனை சி.பி. அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார். ( நான் கண்டிக்கவில்லை)

3. பேசாம் வில்லன எரிச்சிருக்கலாமே...? ( கிறிஸ்டியன்னு லாஜிக் எஸ்கேப்)


IMDB Rating 7.5/10

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். மருந்துக்கு கூட வன்முறை காட்சிகளோ பிட்டு சீனோ இல்லை. பக்கா குடும்ப படம். 

இந்த விமர்சனத்தை வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக். மேற்பார்வை சி.பி.


SILENCE - சினிமா விமர்சனம்

 
 
ஹீரோ ஒரு புகழ் பெற்ற வக்கீல் . இந்தியாவிலேயே மிக இளவயதில் ஜட்ஜ் ஆகப்பணி புரிய பிரமோஷன் கிடைச்சவர் . அவருக்கு  ஒரே ஒரு மனைவி , ஒரு மகன், மகள்  , குடும்பத்தோட சந்தோஷமா  இருக்கும்போது அவருக்கு  ஒரு அநாமத்து ஃபோன் கால் வருது . மிரட்டல் தான் . என்ன ஏதுன்னு தகவல் சொல்லாம அவன் பாட்டுக்கு  மிரட்டிட்டு இருக்கான்
போலீஸ் ஆஃபீசர் கம் நண்பர் உதவியோட அந்த ஃபோன் காலை ட்ரேஸ் அவுட் பண்ண பிரம்மப்பிரயத்தனம் பண்ணி  ஆளை நெருங்கும்போது  விபத்துல அந்த ஆள் இறந்துடறான் .  இடைவேளை
 இப்போ எப்படி கேஸ்  மூவ் பண்ண ?


அந்த ஆளைப்பத்தி விசாரிச்சா  ஆல்ரெடி வக்கீலா இருந்தப்ப நடந்த ஒரு கொலை  கம் ரேப் அட்டெம்ப்ட் கேஸ் கேஸ் ல சம்பந்தப்பட்ட 8 பேர் ல அந்த ஆள்  ஒருத்தன் .

கொலை செய்யப்பட்ட பொண்ணோட டெட் பாடி கிடைக்கல. ஆனா அந்த  கேஸ் ல சம்பந்தப்பட்ட ஏதோ  ஒரு மேட்டர்  தான் மிரட்டலுக்குக்காரணம் .

கேஸ்  சூடு பிடிக்குது , ஜட்ஜ் ஆக வேண்டியவர்  டிடெக்டிவ் ஆகி அந்த கேசை  விசாரிக்கறார் .

அந்த பொண்ணைக்கொலை செஞ்சது  யார் ? டெட் பாடி என் ந ஆச்சு ? என்பதெல்லாம் சஸ்பென்ஸ்


மம்முட்டி  அருமையான டிரஸ் கோடு , அடக்கி வாசிக்கும் அண்டர்ப்ளே ஆக்டிங்க் , நோ பஞ்ச்  டயலாக்ஸ்  , வயதில் முதிர்ச்சி தோற்றத்தில்  தெரியாத அழகிய  ஒப்பனை , டூயட் எல்லாம் பாடி கஷ்டப்படுத்தாத  திரைக்கதையை விட்டு விலகாத  நடிப்பு என பிரமாதப்படுத்துகிறார் .

போலீஸ் ஆஃபீசராக வருபவர் , கொலை செய்யப்பட்ட பெண்ணாக வருபவர் , அவர் கணவர்  மூவரும் கச்சிதமான நடிப்பு .

படத்தின்  முதல் பாதி பர பர என 60  நிமிடங்கள் பறந்தாலும் பொசுக் என இருக்கு . ஒண்ணுமே இல்லாம ஒப்பேத்திட்ட மாதிரி  இருக்கு

 பின் பாதி திரைக்கதையில்   ரொம்பவே தடுமாறி  இருக்கிறார் இயக்குநர் . பி சி செண்ட்டர் ரசிகர்களூக்குப்புரிவது  சிரமமே .


மயக்கம் என்ன படத்தில் செலவ்ராகவன் எடுத்துக்கொடுத்த  பை போலார் டிஸ் ஆர்டர்  வியாதி  படத்துக்கு   ரொம்பவே உதவி  இருக்கிறது



ஒளீப்பதிவு , எடிட்டிங்க் , வசனம் எல்லாம் கனகச்சிதம்  , பின்னணி இசை இன்னும்  பிரமாதப்படுத்தி  இருக்கலாம்



சைலன்ஸ் - மமுட்டியின் கம்பீர நடிப்பு + , பின் பாதி திரைக்கதை தெளிவு இல்லை -சுமாரான க்ரைம் த்ரில்லர் - ரேட்டிங்க் = 2.75 / 5
 
 



நச்  வசனங்கள்


1.   நீ  உன் வேலையை சரியாச்செஞ்சா  உனக்கு வேலை சரியா ஒத்துழைக்கும்

 2  டாக்டர் , இத்தனை  ரிப்போர்ட்ஸ் எடுத்தும் , ஸ்கேனிங்க் எல்லாம் பார்ஹ்த்டும் என் உடம்புக்கு எதுவும் இல்லைன்னு கேட்கும்போது ரொம்ப ஏமாற்றமா  இருக்கு

3 ஹைடு & சீக்  அதாவது கண்ணாமூச்சி சேசிங்க் கேம் இப்போ ஆடப்போறேன் , கொலையாளி  தானா வந்து மாட்டுவான் பாருங்க



சொப்னாவின் சொதப்பல்ஸ்




1.  கொலை செய்யப்பட்ட பெண்ணின்  டெட் பாடி கிடைக்கலை . கோர்ட்ல ஹீரோ அதைக்கண்டு பிடிக்க  ஒரு டெக்னிக் சொல்றார். இப்போ அந்தப்பொண்ணு உயிரோட வரும் பாருங்க என்கிறார் . உடனே கோர்ட்டில் உள்ள அனைவரும்  வாச்லைப்பார்க்கறாங்க , கொலையாளி மட்டும் வாசலைப்பார்க்கலை . இதை வெச்சு அவன் தான் கொலையாளி என கண்டு பிடிக்கறாங்க  எவ்வளவு  குழந்தைத்தனமான காட்சி  இது ? ஊரோடு ஒத்து வாழ் என்ற பழமொழி கொலையாளிக்குத்தெரியாதா?  எல்லாரும் வாசலைப்பார்க்கும்போது அவனும் பார்க்க மாட்ட்டானா? அல்லது  தான் கொன்ற லேடி எப்படி இப்போ வர முடியும் என்ற ஆர்வத்திலாவது  வாசலைப்பார்க்க மாட்டானா?



2   முதன் முதல்ல ஹீரோவுக்கு  ஒரு ஆள் ஃபோன் பண்ணும்போது அந்த ஃபோன் நெம்பரை  ஹீரோ குறிச்சு வெச்சு அந்த  நெம்பரை ட்ரேஸ் அவுட் பண்ண  முயற்சியே எடுக்கலை .அதுக்குப்பின் வரும் காலில் போலீஸ் தான்  ட்ரேஸ் அவுட் பண்ணுது . ஒரு கிரிமினல் லாயர்க்கு அது கூடத்தெரியாதா?


3  ஹீரோவோட  பையன் ஸ்கூல் வேன்ல போறான் , ஆனா அன்னைக்கு ஸ்கூல் லீவ் . வில்லன் பஸ்ல அவனை அடைச்சு வைக்கறான்.  ஹீரோ போய் காப்பாத்தும்போது  பையனை மட்டும் கூட்டிட்டு வர்றார் . ஸ்கூல் பேக் எங்கே? கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க்


4  ஹீரோவின் மனைவி செல்லும் கார் ரிப்பேர் .  ஹீரோவுக்கு ஃபோன் செஞ்சதும் அவர் அங்கே வர்றார் . சரி மெக்கேனிக் வந்து எடுத்துட்டுப்போகட்டும்னு 2 பேரும் அம்போன்னு  காரை அப்டியே  விட்டுட்டு போயிடறாங்க  கலைஞர் காங்கிரஸை கை விட்ட மாதிரி , அட்லீஸ்ட் மெக்கானிக் வர்ற வரை வெயிட் பண்ண மாட்டாங்களா?


5  முக்கியக்குற்றவாளி சிக்கிட்டான் , அவனை ஒரு போலீஸ் படையே  துரத்துது . 20 நிமிஷம் நடக்கும் இந்த சேசிங்க் சீனில்  மருந்துக்குக்கூட அவனை யாரும் சுடவோ தாக்கவோ முயற்சிக்கலை , முழங்காலுக்குக்கீழே சுடலாமே ?

6  வில்லன் அந்த லேடியைக்கொலை செய்வதை காட்டினாலும் அதுக்கான காரண காரியங்களை , சந்தர்ப்பத்தை விஷுவலா காட்டி இருக்கனும் அது ரொம்ப முக்கியம்


7  பை போலார்  டிஸ்  ஆர்டர்   நோய் இந்தக்கதைக்குத்தேவையே இல்லை . அது இல்லாமயே சஸ் பென்ஸா கொண்டு போய் இருக்கலாம் 
 



தியேட்டர்  மேட்டர் -  திருவனந்த புரத்தின் நெம்பர் ஒன் தியேட்டரான ஸ்ரீ பத்மாலயாவில் படம் பார்த்தேன் . சூப்பர் தியேட்டர் . ஏசி டிடிஎஸ் , டிக்கெட் 80  ரூபா . ஆல் ஃபேமிலி ஆடியன்ஸ் , ஹவு்ஸ்ஃபுல் . ஆனா படம்  மீடியமா தான் ஓடும்

Tuesday, December 17, 2013

R Rajkumar - சினிமா விமர்சனம்



கோடம்பாக்கம் ஆகட்டும்  பாலிவுட் , கோலிவுட் ஆகட்டும் கவர்மெண்ட் ஜாப்பை
விட ஹீரோக்களுக்கு கவுரமான உத்தியோகம் தாதா கிட்டே அடியாளா வேலை
கிடைப்பது . மணிரத்னம் இயக்கிய தளபதி , நாயகன் படங்கள் எத்தனை
படங்களுக்கு முன்னோடின்னு கணக்கு எடுத்தா ஏகப்பட்ட படங்கள் வரும் ,
பத்தோட 11 அத்தோட இதுவும் ஒண்ணு தான் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த
கமர்ஷியல் ஹிட் ஆகி விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்த
ஆர் ராஜ் குமார் . அப்டின்னா ரோமியோ ராஜ்குமார். ஆல்ரெடி பிரபுதேவா
மிஸ்டர்  ரோமியோ எனும் படத்தில் நடிச்சிருக்கார் வேற .


ஹீரோ ஒரு தாதா கிட்டே அடியாளா வேலை செய்யறார் . அவருக்கு எதிரி தாதாவோட
தங்கை பொண்ணுதான் ஹீரோயின்  அதுல வளர்ப்பு மகள்னு ஒரு  சால்ஜாப் வேற .

 ஹீரோவுக்கு ஹீரோயினை கண்டதும் காதல் . பின்னாலயே சுத்தறார். ஆனா
ஹீரோயின் கண்டுக்கலை . எறும்பு  ஊற கல்லும் தேயும்  என்ற பழமொழிப்படி
ஹீரோயின் ஹீரோ லவ்வுக்கு ஓக்கே சொல்றார் ( ஏன்னா ஹீரோயின் சம்பளம் 40
லட்சம் ஆச்சே. )2 பேரும் லவ்வறாங்க .


இப்போதான் பெரிய ட்விஸ்ட் . ஆத்துல ஸ்னானம் செய்யும்போது  இன்னொரு தாதா
ஹீரோயின் ஸ்னானம் பண்றதை பாத்துடறார். பயப்படாதீங்க , டிரஸ் முழுசா
போட்டுட்டே குளிக்கும்போதுதான் .

யார்னு விசாரிச்சா எதிரி தாதா தான் ஹீரோயினோட மாமா, . உடனே
சமாதானத்துக்கு ஆள் அனுப்பி  சம்பந்தம் பேசிடறார்.


இப்போ தான் தெரியுது   தன் கிட்டே வேலை செய்யும் ஹீரோ தான் தான் ஆசை
வெச்ச பச்சைக்கிளிக்கு முத்துச்சரம்னு . 2 பேருக்கும் கடுமையான போட்டி .


 யார் ஜெயிச்சாங்க என்பது  ஊருக்கே தெரியும், இருந்தாலும்  தியேட்டர்ல
போய் பார்த்துகுங்க


ஹீரோவா சாகித் கபூர் , அசால்ட்டா செஞ்சிருக்கார் . இவர் அங்க சேஷ்டைகள் ,
முக சுளிப்புகள் எல்லாமே பிரபுதேவா செய்வது போலவே இருக்கு. டான்ஸ்
காட்சிகளில் கலக்கிடறார். ஃபைட் காட்சிகளீலும் பின்னிபெடல் எடுக்கறார்
.கமர்ஷியல் சினிமாவுக்கான எல்லா ஐட்டங்களும் படத்துல  இருந்தாலும்
கொஞ்சமாவது  நவீனமா  சிந்திச்சு திரைக்கதைல மெருகு ஏத்தி இருக்கலாம்


ஹீரோயின் சோனாக்‌ஷி சின்னா .கொழுக் மொழுக் கன்ன அழகி .இவர் ஹீரோவுக்கு
முத்தம் கொடுக்கும்போது அவர் உதடுகள் அழுத்தத்தை அளவெடுத்தா  பூகம்பம்
ஏற்படும்போது பூமிக்கு ஏற்பட்ட  அழுத்தம் தோத்துடும் அம்பூட்டு அழுத்தம்
. 2 பேருக்கும்  சம்பளம் வாங்கிட்டே ரொமான்ஸ் பண்ற வேலை தான் . ஆஹா!
அருமை .



Sonu Sood  தான் மெயின் வில்லன் . பிரகாஷ் ராஜ் கில்லி ல என்ன என்ன
செஞ்சாரோ அதை எல்லாம் இவரும் செய்யறாரு . ஹீரோயினைக்கவர இவர் டான்ஸ்
பிராக்டீசில் ஈடுபடுவது காமெடி .ஆனால் இவ்வளவு மந்தியாக ஒரு வில்லன்
இருப்பது கமர்சியல்  சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்


ஆஷிஸ் வித்யார்த்தி தான் ஹீரோயினுக்கு மாமா . படம் பூரா இவர் மாமா வேலையை
நல்ல பார்க்கறார். பல தமிழ்ப்படங்களில் பிரமாதமான நடிப்பை வழங்கிய
இவருக்கு இது ஒரு சறுக்கல் படம்


இசை சொல்லிக்கொள்ளும்படி இருக்கு . ஹீரோ ஹீரோயின் சந்திக்கும்
காட்சிகளீல்  எல்லாம் வரும் தீம் மியூசிக் கலக்கல்


வசனங்களில் டபுள்  மீனிங்க், ஆபாசம் அதிகம் . போக்கிரி மாதிரி படங்களை
இயக்கிய் , ஃபேமிலி ஆடியஸ் உள்ள பிரபுதேவா கொஞ்சம்  டீசண்ட்டாக காட்சிகள்
அமைப்பது நல்லது

தென் காசிப்பட்டணம் ல் மாட்டின் தோலைப்போர்த்தி செய்யும் விவேக் காமெடி
சீனை பிஜிஎம் முடன் சுட்டுட்டார்  பிரபுதேவா.அண்ணாமலை கடவுளே கடவுளே
ஸீனையும் சுட்டாச் . ஹீரோ - ஹீரோயின் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம்
ஹீரோ உதட்டைக்குவித்துக்கொண்டு முத்தத்துக்கு ஏங்குவது செம காமெடி .


ஸ்டண்ட் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது . ஆனால் க்ளைமாக்ஸ்
காட்சியில்  நெஞ்சில் , வயிற்றில் , முதுகில் என 3 இடங்களீல் ஆழமாக
கத்திக்குஹ்ட்து பட்ட ஹீரொ  ஃபைட் போட்டு ஜெயிப்பது எல்லாம் அதை எல்லாம்
தூக்கி சாப்பிட்ட காமெடி

அடிக்கடி ஹீரோ பேசும் “சைலண்ட் ஹோ ஜா.நஹி தோ வயலன்ட் ஹோ ஜாவூங்கா -ஆர்
ராஜ்குமார் பஞ்ச் அரதப்பழசு , ஆல்ரெடி விஜய் பேசுனதுதான் தமிழில் நீ
சைலண்ட்டா இரு , இல்லை நான் வயலண்ட் ஆகிடுவேன்


நச்  டயலாக்ஸ்


1. நான்  சாக  முடியாது , சாகவும் கூடாது


2.  ஹீரோ - சின்னதா  இருக்கறது கூட பெரிய பெரிய  வேலைகளைச்செய்யும்

 வாட் யூ மீன்

 நான் இந்தக்கொசுவை ச்சொன்னேங்க



3  நான் மட்டும் அவனை கரெக்ட்  டைம்க்கு கொல்லாம இருந்திருந்தா அவன்
உன்னைக்கொன்னிருப்பான்

நான் தான் ஆல்ரெடி செத்துட்டனே , என்னைக்கொலையா கொன்னுட்டா அவ


4  சார், நீங்களும் பணம்  கொடுஹ்ட்திருக்கீங்க, அவரும் பணம்
கொடுத்திருக்கீங்க. நான் நாய் மாதிரி 2 சைடும் வாலை ஆட்ட வேண்டிய சூழல்


5  ஹலோ, சார் நான் முன்னாவைப்பார்க்கனும்.


இப்போதான் அவனை அடிச்சுட்டு இருக்கேன், அரை மணிநேரம் கழிச்சு வந்தா
ஹாஸ்பிடல்ல பார்க்கலாம்


6 ஹீரோயின் - நான் யார்னு உனக்குத்தெரியுமா?

 ஹீரோ - நான் ஆம்பளை , நீ பொம்பளை ( ஆஹா! என்ன ஒரு அபாரமான கண்டு பிடிப்பு ? )


7  காசுகாக எது வேணாலும் செய்யறவன் தான் , ஆனா காசு கொடுத்து என் காதலை
விலைக்கு வாங்க நினைச்சா அது  முடியாது


8  ப்யார் , மார்  இந்த 2க்கும்  இடைல ஓடுது என் வாழ்க்கை ( ப்யார் =
காதல் , மார்  = அடி , வெட்டு , கொலை )




சி பி கமெண்ட் - பிரபு தேவா வின் R RAJKUMAR = ஹீரோ ,வில்லன் இருவரும்
ஹீரோயினைக்காதலிக்கும் முக் கேன க்காதல் கதை. சுமாரா இருக்கு , ரொம்ப
மோசம் இல்லை



ரேட்டிங் = 2 / 5

டைம் பாஸ் படம்


 தியேட்டர் மேட்டர் = திருவனந்தபுரம்  அஸ்வதி ல படம் பார்த்தேன் . 4 வது
மாடி . நோ லிஃப்ட் . தியேட்டர் பொட்டிக்கடை மாதிரி  ரொம்பச்சின்னது .
பால்கனில 100  சீட் , கீழே 150 சீட் தான் . பாதி தியேட்டர் நிரம்பி
இருந்தது. கேண்ட்டீன்  குட் .சீப்பா தான் இருக்கு செண்ட்ரல் ரயில்
நிலையம் அருகே இருக்கு . இந்த ஊரில் உள்ள ஒரே 4 தியேட்டர் காம்ப்ளெக்ஸ்
இதுதான்

Monday, December 16, 2013

அச்சம் தவிர் - சினிமா விமர்சனம்

 
 
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டு பணத்துக்காக  இந்திய நாட்டுக்குத்தீராத அவமானத்தோல்வியைப்பெற்றுத்தரும் பிரபல கிரிக்கெட் வீரரை அவரோட  கிளாஸ் மேட் கம் இன்னொரு கிரிக்கெட்  வீரர்  திட்டம் போட்டு  ரொம்ப ஹைட்டான சிக்சர் அடிச்சு மேல் லோகம் அனுப்பறார்.

டெய்லி வறக்காப்பி ( பால் இல்லா வெறும் டிகாக்‌ஷன் ) குடிச்சாலும் தன் அபிமான ஹீரோ கட் அவுட்டுக்கு  கடன் வாங்கியாவது பால் அபிஷேகம் செய்யும் சினிமா ஹீரோவின் வெறித்தனமான ரசிகன் தியேட்டர்ல  ரொம்ப உயரமான இடத்துல  இருந்து  கட் அவுட்டுக்கு  பால் அபிஷேகம் செய்யும் போது  தவறி விழுந்து ஒரு காலை இழக்கிறார். வெளில  ரசிகர்கள் தான் தன் தெய்வம் , அவங்களூக்காக உயிரைகுடுப்பேன் , தயிரைக்குடுப்பேன்னு பஞ்ச் டயலாக் பேசும்  சூப்பர் ஹீரோ ரசிகனுக்கு ஒரு ஆபத்துன்னுதம் கண்டுக்காம மருத்துவசெலவுக்குக்கூட பண உதவி செய்யாம அவமானப்படுத்தி அனுப்பறார். அந்த கோபத்துல அந்த ஹீரோவை சொர்க்கத்துல போய் டூயட் பாடிக்கோன்னு அனுப்பிடறார் அந்த  ரசிகர் .

அமைதிப்படை அமாவாசை மாதிரி செல்வாக்கில்லாம  இருந்த ஒரு அரசியல் தலைவர் காலேஜ் பாணவர்கள் தலைவன் ஆதரவால் தொகுதி ல ஜெயிச்சு காரியம் ஆகும் வரை காலைப்பிடி , காரியம் ஆனபின் கழுத்தைப்பிடிச்சு வெளியே தள் என்னும் பழமொழிக்கேற்[ப  மாணவர்தலைவனை அவமானப்படுத்தறார்.அவரைப்போட்டுத்தள்ளும் முயற்சியில்  மாணவர் தலைவன் தோற்றுவிடுகிறார்.

 மேலே சொன்ன  3 தனித்தனிக்கதைல  3 பேரும் நண்பர்கள் . 4 வதா ஒரு நண்பர் . அவர்  தான்  ஹீரோ.அவங்க 4 பேருக்குள்ளே என்ன ஒப்பந்தம்னா அவங்கவங்க வேலை முடிஞ்சது,ம்  தற்கொலை செஞ்சுக்கனும் .

அவங்க திட்டம்  நிறைவேறுச்சா ? அவங்களைப்பிடிக்க நியமிக்கப்பட்ட  போலீஸ் ஆஃபீசர்  என்ன செஞ்சார் ? என்பதே மிச்சம் மீதித்திரைக்கதை .

இது ஒரு  தெலுங்கு டப்பிங்க்  படம் . நல்ல மெசேஜ் உள்ள படம் . ஆனா அதை திரைக்கதை ஆக்கும் விதத்தில் தான் தடுமாறி  இருக்காங்க .

லட்சிய இளைஞர்கள் 4 பேரும்   நல்ல நடிப்பு தான் . ஆனால் லட்சியம் வெச்சிருக்கும் இளைஞர்கள்  தாடியும் வெச்சிருக்கனும் , ஹேர் கட்டே பண்ணக்கூடாதுன்னு யார் சொன்னாங்கன்னு தெரியலை

 
 
இவங்களைப்பிடிக்கும் முயற்சியில்  போலீஸ் கமிஷனரா வரும் சரத்குமார் அருமையான பாடி லேங்குவேஜ் , டிரஸ்சிங்க் சென்ஸில் கலக்குகிறார். ஆனா அவர் வரும் காட்சிகள் ஜஸ்ட் 15  நிமிஷம் தான் . ஆனா போஸ்டர் பார்த்தா அவரே மெயின்  ஹீரோ மாதிரி  ஒரு பில்டப் .

ஹீரோயின்  வேணுமே என்பதற்காக  2 பேரு . சுமார் நடிப்பு . ஹீரோ ஹீரோயின் பேச்சைக்கேட்காம வில்லனைப்பார்க்க ப்போய்ட்டார் என்பதற்காக ஹீரோயின் தற்கொலை செய்வது எல்லாம்  ஓவர்.

டிப்பு டிப்பு அப்டின்னு ஒரு செம குத்தாட்டப்பாட்டு இருக்கு . டி வி ல போடும்போது மிஸ் பண்ணாம  பாருங்க . பாட்டு க்கான டான்ஸ் ஸ்டெப் கலக்கல் . 3  புதுப்பொண்ணுங்க ஆடி இருக்காங்க

சஸ்பென்சாக படத்தைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதர்காக முதல் பாதியில் பிட்டு பிட்டாக காட்சிகள் வருவதைத்தவிர்த்திருக்கலாம் .


சொதப்பல்ஸ்

1.  மேட்ச் ஃபிக்சிங்கில்  ஈடுபடும் வீரரை ஆதாரத்துடன் போலீஸ் கைது செய்வது  ஓக்கே , ஆனால் மேட்ச் ஆடும்போதே கிரவுண்டுக்கே வந்து கைது செய்வது எல்லாம் ஓவர் . அதுவும் அப்போ நடக்கும் மேட்சில் அப்போ செஞ்ச தப்ப்பை அப்பவே 5 வது  நிமிசமே போலீஸ் வருவது காதில்   பூக்கூடை

2.  ஹீரோவை  வில்லன் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் , அதை  ஹீரோ செய்த பின்னும்  விடாமல் உன் தலை தானே தப்பு ப்ண்ணுச்சு . தலையால என் காலைத்தொடு என்பதெல்லாம் ரொம்பவே  ஓவர் . தேவை இல்லாமல் வைனவர்களை அந்தக்காட்சியில் வம்புக்கு இழுத்திருக்காங்க .  வசனம்  மூலம்


3.  சூப்பர்  ஹீரோவாக வருபவ்ர் அட்லீஸ்ட் 30 வயசு ஆனவராக காடி இருக்கலாம் . 19 வய்சு கூட ஆகாதவரை 25 படம் ஹிட் கொடுத்தவராக காட்டி இருப்பது கேலிக்கூத்து


4 எந்த செல்வாக்கும் இல்லாத  அரசியல் தலைவரை மாணவர் சக்தி ஆதரித்ததும் மேலிடம் சீட் கொடுப்பதும் , இருவர் , நாயகன் ,  தளபதி படத்தில் வருவது போல் பால்கனியில்  நின்றபடி ஜனக்கூட்டத்தைப்பார்த்து  பிரமிப்பதும், செம காமெடி ,. சீரியஸ்னெஸ் இல்லை

5  போலீஸ் ஆஃபீசராக  வரும் சரத்குமார் எதுவுமே சாதிக்கவில்லை . ஹீரோவின் ஃபிளாஸ் பேக்கை கேட்கிறார் அவ்வளவு தான் . அவருக்கு ஏதாவது முக்கியக்காட்சிகள் வெச்சிருக்கலாம்



நச் டயலாக்ஸ் 


1. சோறு போட்டவனைக்கூட சினிமாக்காரங்க மறக்கலாம், ஆனா  சினிமா  டிக்கெட் எடுத்தவனை மறக்கவே  கூடாது


2 ஆர்ப்பாட்டம் பண்றவங்க எல்லாம் அரசியல்வாதிங்க  கிடையாது , உண்ணாவிரதம்   இருக்கறவங்க எல்லாம்  மகாத்மாவும் கிடையாது

3  உன்  கிட்டே மட்டும் நான்  பொய்  பேச மாட்டேன் , ஏன்னா நான்  பொய் சொன்னா  நீ கண்டு பிடிச்சுடறே


4 பஞ்ச் டயலாக் பேசத்தகுதியான  ஒரே ஆள்  நீதான் யா ( இந்த சீனில் சரத்குமாரின் ரசிகர்கள் 3 பேர்  கைதட்டினாங்க , டோட்டல் ஆடியன்ச் 80 பேர் )


5  நீ இல்லாம லஞ்ச்சே சாப்பிட மாட்டேன்., எப்படி லாஞ்ச் பண்ணு வேன் ? எல்லாம்  நீ வந்த பின் தான்


6  நீ  குடுக்கும் செக்   துடைச்சுப்போடக்கூட  யூஸ் ஆகாது

7  என்ன சார்? கதை என்ன?ன்னு கேட்டா கத்தியை எடுத்துக்காட்டறேள் ?

 கத்தியைச்சுத்திதாங்க கதையே


8 படத்தோட  டைட்டில்  என்ன ?
 இம்சை

 அது ஆல்ரெடி நாங்க வெச்ச பேரு

 அது  பெரிய இம்,சை . இது சின்ன இம்சை


9 ரசிகர்னா அபிமானம் வைங்க , பிச்சை எடுகாதீங்க

10  நம்ம பதவியைக்காப்பாத்த னும் ன்னா அடுத்தவன்  தலையை  வெட்டவும்  தயங்கக்கூடாது , அதுதான் அரசியல்

11  உங்க வேலை  முடிஞ்சதும் கழ்ட்டிப்போடும் காண்டம் மாதிரி இல்லை மாணவர் சக்தி

12  ஒருத்தன்னுக்காக  நீ கை கை  தட்டக்கூடாது   நீ செஞ்சதைப்பார்த்து  மத்தவங்க  கை தட்டனும்


13 தண்டிக்கிறவனுக்கு தண்டனையை ஏத்துக்கும்  துணிவும்  வேண்டும் .



சி பி கமெண்ட் - படம் தியேட்டர்ல  போய்ப்பார்க்கும் அளவு  ஒர்த் இல்லை , ஆனா  டி வி ல போட்டா பார்க்கும் அளவு  இருக்கு .

அச்சம் தவிர் = தெலுங்கு டப்பிங் படம் = தியேட்டரில் போய் படம் பார்ப்பதைத்தவிர் - மாமூல் மசாலா - ரேட்டிங் = 2 / 5 .சரத்குமார்் 15 நிமிடமே

தியேட்டர்  மேட்டர் = கோவை குமரன் தியேட்டர்ல படம் பார்த்தேன். ஏ சி டி டி எஸ் தியேட்டர் . நல்லா மெயிண்ட்டென்ஸ் பண்ணி  இருக்காங்க . டிக்கெட் ரேட்டும் கம்மிதான் . 15  , 35 , 30 , 80 , 85
 ஆன் லைன் புக்கிங்கும் இருக்கு . கேண்ட்டீன் ல எதை எடுத்தாலும் 15  ரூபா மாதிரி போர்டு நம்ம ஊர்த்தேர்க்கடையை நினைவு படுத்துது . பொதுவா தியேட்டர்களில்  வாட்டர்கேன் விற்பனை  பாதிக்கக்கூடாதுன்னு  சுமாரான தண்ணீரை வெச்சிருப்பாங்க , ஆனா இங்கே சிறுவாணித்தண்ணீர் .
 கோவை பஸ் ஸ்டேண்ட் , காந்திபுரம் , ஈரோடு , சேலம் ப்ஸ்  எல்லாம் கிள்மபும் ப்ஸ் ஸ்டாப்க்கு பின் புறம் தியேட்டர்  இருக்கு .
 இது ப்ழைய அம்பாள் , அம்பாளிகா தான்
 பொங்கலுக்கு  செந்தில் ல  ஜில்லா , குமரன் ல வீரம் . இங்கே எப்பவும்  பிளாக்  டிக்கெட்சே கிடையாது ., ஒன்லி கவுண்ட்டர்டிக்கெட்தானாம்