Skip to content

Sunday, December 15, 2013

வீரம் vs ஜில்லா - காமெடி கும்மி - பாகம் 2

1. நீங்க தமனா வுக்கு தாத்தாவா வர்றதா சிலர் கிண்டல் பண்றாங்களே?



நிஜமா? ச்சே !,ச்சே! தாதா வுக்கும் தாத்தாவுக்கும் வித்யாசம் தெரியாத பசங்க



=================



2  பொதுவா என் படத்துல காமெடி இருக்கும்னு யாரும் நம்பி வர்றதில்லை.நானும் காமெடியனை நம்பறதில்லை.ஊறுகா மாதிரி தான்



=================



3  உங்க FANS எதையாவது ட்ரெண்ட்ல கொண்டாந்துட்டே இருக்காங்களே ஏன்?



 படம் ட்ரெண்ட் செட்டரா ஆகும்போது அவங்க ட்ரெண்ட் சென்ட்டர் ஆனா என்ன தப்பு?



===================


4  விஜய் ரசிகை - டியர்.உங்க வீரம் என் கிட்டே "செல்லுபடி" ஆகாது.




அஜித் ரசிகன் - எப்படியும் நாம 2,பேர் சேர்ந்து தான் " செல்லும்படி" ஆகும்


==================



5  வெற்றி அடைஞ்ச பின் பழசை என்னைக்கும் மற்க்கக்கூடாது அதே மாதிரி பெற்ற வெற்றியை யாரும் மறைக்க்வும் விட்ரக்கூடாது# 150 கோடி


==================


6    ஸார்.உங்க படம் ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்துட்டு படம் படு லோக்கலா இருக்கும் போல னு பேசிக்கறாங்களே?



 ராப்பகலா உழைச்சிருக்கோம்.கலக்கலா இருக்கும்


========================


7 விஜய் - மேடம்.ஜில்லா ல எந்த கேப்சனும் போடலை.ரிலீஸ்க்கு ஓக்கே தானே?



ஜெ - அந்த சேர் தான் கண்ணை உறுத்துது.அதை மட்டும் எடுத்துடுங்க்


======================


8  ஜோசியம் = வீரம் படத்தை விட ஜில்லா பட பாட்டு தான் ஹிட் ஆகும்.ஆனா படம் எது ஹிட் ஆகும்னு ஜக்கம்மா வாக்கு சொல்லலை ;-))





==================


9  டாடி! நானும் ஏட்டிக்குப்போட்டியா மொட்டை போடவா?



 பொறுப்பா.படம் ரிலீஸ் ஆனபின் யூனிட்டோட போய் போட்டுக்கலாம்.



===================


10  கவுதம் டூ அஜித் - நம்ம படத்துல இப்டி ஒரு கெட்டப்பே கிடையாது. நீங்க உங்க பர்சனல் ரீசன் க்காக போட்ட மொட்டைக்காக ஒரு சீன் எடுன்னா எப்டி?



===================



11 விஜய் ரசிகை = நம்ம முதல் இரவு எங்க ஜில்லா வுல தான் நடக்கனும்




.அஜித் ரசிகன் = சாரி.எங்க வீட்டு மொட்டை மாடில தான்


=======================



12  அஜித் ரசிகை = அத்தான்.மொட்டை அடிச்சிடுங்க.




 விஜய் ரசிகன் = மேரேஜ் ஆகட்டும்.உங்க குடும்பத்துக்கே அடிச்சுடறென்



=====================



13 மொட்டை அடிச்சுக்கிட்டா கிடைக்கும் பயன் கள்


1 தலைக்கனம் இல்லாதவன் னு பேர் கிடைக்கும்


 2 தலைக்கு குளினு வாராவாரம் சம்சாரம் தொந்தரவு செய்யாது

3  பேன் , பொடுகு தொந்தரவு இல்லை

4  சலூன் செலவு மிச்சம்


5 ஆளவந்தான் கமல் ஸ்டைல் , வீரம் அஜித் ஸ்டைல்னு சொல்லிக்கலாம்




=====================



14 வெள்ளிக்கிழமை = மங்களகரமான நாள் ,சனிக்கிழமை = சனீஸ்வரருக்கு உகந்த நாள் # இது ஒரு ஜோசிய ட்வீட்




=======================



15 முந்தி முந்தி வி நாயகனே! #20 12 2013



=====================


16 ஜெ - என்னமோ மாசு ,தூசு ன்னு சத்தம் கேட்டுது ?



 விஜய் - அய்யோ.மேடம்.எண்ட ஏசு வே (WAY) னு ஜெ பம் பண்ணிட்டுருந்தனுங்


===================


17 ஜில்லா பாடல் வரி - சிவனும் சக்தியும் சேர்ந்த மாஸ் டா .எதிர்த்து ் நின்னவன்் தூசுடா # ஸூப்பர் தலைவா! ஸி எம் ஸீட் நமக்குத்தான்




=====================


18 சரஸ்வதி சபதம் இப்போ ரீ மேக்கினா பாட்டு - ஜில்லாவா? செல்வமா? வீரமா?




================



19  எஸ் ஏ ஸி தன் மகனை சி எம் ஆக்க நினைத்ததும் ,அதற்கான முனைப்பும் ஒரு அப்பாவாக சரியாகத்தான் செய்தார்.ஆனால் அவசரப்பட்டு முந்திக்கொண்டார்



===================



20 எஸ் ஏ சந்திரசேகர் மட்டும் சிவகுமார் போல் இருந்திருந்தால் விஜய் பல இன்னல்களை சந்தித்திருக்க மாட்டார்.இன்னும் உயரம் போய் இருப்பார்



======================


21 ஜில்லா இயக்குநர் = ஜில்லான்னா தெனாவெட்டானவன் னு அர்த்தம் # சார்! தீனா உல்ட்டானவன் னு பேசிக்கறாங்க?




================


22    அண்ணன் கேரக்டரை வளர்ப்பு அப்பா ஆக்கிட்டு சுரேஷ்கோபிக்குப்பதிலா மோகன்லாலை புக் பண்ணிட்டா ஜில்லா ரெடி ;-())




=================



23 சார்.ஜில்லா இன்னும் ரிலீசே ஆகலை.அதுக்குள்ளே எப்படி கதையை கண்டுபிடிச்சீங்க?



ஹா ஹா நாங்க தான் தீனா பார்த்தாச்சே? # அது இது எல்லாம் ஒரே இது



===================


24  தீனா வை விஜய் ரசிகர்கள் கிண்டல் செஞ்சாங்க .பொங்கல் 2014க்குப்பின் ஜில்லா வை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வாங்க # ரீமேக் ஒரு வட்டம்



===================



25  ஜில்லா தீம் இசை - தினக்குத்தான் தின் தின் தின்னா தினா தினா தீனா தீனா # கற்பனை



===================



26    ஜில்லா க்ளைமாக்சில் விஜய் - மோகன் லால் க்கு பைட் சீன் இருக்காம் # ்.அந்த பைட் ல விஜய் இங்கே ஜெயிப்பாரு.கேரளா வில் மோகன் லால் ஜெயிப்பாரு




===========================



27  அஜித் ரசிகர்களுக்கான பஞ்ச் = சனி திசை அமர்க்களமா எனக்கு முடிஞ்சிடுச்சு.இனி சுக்ர திசை ஆரம்பம்



=================


28  விஜய் ரசிகர்களுக்கான பஞ்ச் = 7 வருசத்துக்கு முன்னால ஒரு ஏழரையை சந்திச்சது நினைவிருக்கா? # போக்கிரி VS ஆழ்வார்



===================


29  டீ ஸ்ட்ராங்க் டீயா? லைட் டீயா? எப்டி இருக்கும் ?னு தெரில ;-))) # ஐ ஆம் வெயிட்டிங்



===============



30  விஜய் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா = ஜில்லா முழுக்க நம்மைப்பத்திக்கேட்டுப்பாருங்க.மாஸ்னா என்ன?னு தெரிய வரும்




===============


31  டிக்னிட் டீ ,ஒரிஜினாலிட் டீ ,ராயல் டீ #3 டி



================


32  ஹீரோ டீ குடிக்கற மாதிரி ஸ்டில் இருக்கே? இது ஏதாவது குறியீடா?



ஆமா.சூடா ,குவாலிட் டீ யா இருக்கும்





====================


33 வீரம் 2 டீஸர் பார்த்த வரை மாமூல் மசாலா.வில்லேஜ் சப்ஜெக்ட் .சி சென்ட்டர் ஹிட் அடிக்கும்னு தோணுது.ஜில்லா எப்டி னு இனி டீசர் வந்தா தான்


==================


34   விஜய் = எல்லா மெயின் தியேட்டரும் ஜில்லாவுக்கே. அஜித் = ஆல் இன் ஆல் நீங்கதான் ப்ரோ.என்ன நான் சொல்றது? ;-)




===================


35   ஈரோட்டில் மெயின் தியேட்டர்கள் ஜில்லாவுக்கே- அபிராமி ஆனூர் சன்டிகா (3) ,வீரம் = ராயல் ,சீனிவாசா ,அன்னபூரணி (3ம் ஆரம்பம் ரிலீஸ் ஆனவை)




================


36   ஹீரோயின் ,காமெடியன் முகத்தையே காட்டாம 2 டீசர் விட்டாச்சு. குட்




=================



37 ஆரம்பம் அளவுக்கு வீரம் டீஸர் இல்லை என்றாலும் கிராமிய கமர்ஷியல் சினிமாவுக்கான அயிட்டங்கள் இருக்கும்னு தோணுது



==================


38  அற்புதனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில கூட டீசர் விடலாம் # 9 30PM




================


39   புதுக்கோட்டை யில் வீரம் ,ஜில்லா 2ம்.ஒரே ரேட்க்கு புக்குடு. 30 லட்சம் ரூபாய்.வீரம் @ 1 சாந்தி 2 RKP .ஜில்லா = 1 விஜய் தியேட்டர்



===============



40   அத்தான்.முதல் இரவு 9 மணிக்கு.ஆனா இப்போ போன் பண்ணி.40 நிமிசம் லேட்டா வர்றதா சொல்றீங்ளே?



என் வீரத்தை காட்ட டைம் இருக்கு. # 9 30



===================


41  துள்றது யார்?னு நாம பார்க்கத்தேவை இல்லை.போட்டில வெல்றது யார்?னு பார்த்தா போதும் ,# என்ன நான் சொல்றது?



==================



42  பொங்கலுக்கு முந்துவதும் வீரம் தான் வெல்வதும் வீரம் தான்.என்ன நான் சொல்றது? # அஜித் ரசிகர்களுக்கு பேனர் ஐடியா



==================


43  என்ன நான் சொல்றது? # இது ஆல்ரெடி எஸ் எஸ் சந்திரன் ஒரு படத்தில் சொன்ன டயலாக்னு நினைக்கேன்



===============



44  காரியம் ஆகனும்னா காரிகை கால் பிடிச்சாலும் தப்பு இல்லை #,ஜில்LAW



==================



45  விஜய் - நான் நடிக்க ஆரம்பிச்சு 21 வருசம் ஆகுது



 .கமல் - என்ன சொன்னீங்க?



விஜய் - ஐ மீன் நான் சினி பீல்டுக்கு வந்து 21 வருசம் ஆகுது# அது



======================



46  வீரம் ஆடியோ ரிலீஸ் தேதி = 15 12 2013 = கூட்டுத்தொகை = 6 = அஜித்குமார் = சிறுத்தைசிவா =6



===============================



47   டீக்கடைக்கு போனாக்கூட விஜய் ரசிகர்கள் ஜில்லா ஒரு டீ தான் ஆர்டர் பண்ணறாங்களாம்.


==================



48  சார்.நீங்க ரொம்ப சிம்ப்பிளாமே? நிஜமா?




 ஹூம்.பில்டப் கொடுத்தப்பதான் ஒரு சாம்ப்பிள் காட்டிட்டாங்களே?வேற வழி?



===================



49  கடைசியா வரும் க்ளைமேக்ஸ் சீனை முதல்ல ஷூட் பண்ணுவதும் ,முதல்ல வர்ற இண்ட்ரோ சாங்க் கை கடைசில ஷூட் பன்றதும் சகஜம் தானே?



==================



50  தர்மம் தலை காக்கும் ,தானம் (இளைய) தளபதி காக்கும்




======================

Saturday, December 14, 2013

கூட்டணி அமைக்க டெல்லி கேப்டன் கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர தயார் என அறிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்துள்ளார். 



இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார். 


தவிர ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர தயார் எனக் கூறியுள்ள காங்கிரஸுக்கும், எதிர்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ள பாஜக-வுக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். 


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 


அந்தக் கடிதத்தில் அவர் 18 நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அவை: 

 
1.டெல்லியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்தக் கூடாது, பகட்டான பங்களாக்களிலும் வாழக் கூடாது. 


2.அண்ணா ஹசாரே வலியுறுத்துல் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். 



3.டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 



4. டெல்லியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். 



5. மின் மீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும். 



6. டெல்லியில் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 220 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அந்த தண்ணீர் எங்கே? 



7. டெல்லியில் உள்ள காலனி குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப் படுவதோடு அவை முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும். 



8. குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்



9. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு நிரந்தர வருமானம் தரும் வேலை உத்தரவாதம் அளித்திட வேண்டும். 


10. சாமான்ய வியாபாரிக்கு கூட அடிப்படை கட்டமைப்பு, சாலை, தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 


11. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது. 


12. கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளும், மான்யங்களும் தர வேண்டும். 


13. டெல்லியில் 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் கல்வி நிறுவனங்களில் நண்கொடை வசூலிப்பதை தடுப்பது. இவற்றின் மீது காங், பாஜக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். 


14. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் திறக்க வேண்டும். 


15. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும். 


16.அனைது வழக்கு விசாரணைகளும் 6 மாத காலத்துக்குள் முடித்து நீதி வழங்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும். 


17. டெல்லி முனிசிபல் அமைப்பு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரிய வேண்டும். 


18. சில பிரச்சினைகளில் பொதுமக்களே கூடி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும். 


இப்படி காங்கிரஸ், பாஜக-வுக்கு கூட்டணி அமைக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார். 


காங்கிரஸ், பாஜக கருத்து: 

 
இந்நிலையில், ஆம் ஆத்மி கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெஜ்ரிவால் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை முழுமையாக ஆராய்ந்து, இன்னும் ஓரிரு தினங்களில் பதில் கடிதம் அனுப்புவோம் என்றார். 



டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்வதை விடுத்து பிற கட்சிகளை ஆம் ஆத்மி விமர்சிப்பது உச்சபட்ச கர்வம் என பாஜக சாடியுள்ளது. 


 மக்கள் கருத்து 

  • இதே நிலைமையில் கடைசி வரை இருங்கள் நீங்கள் அடுத்த தேர்தலில் முதல் அமைச்சர் அவது உறுதி நங்கள் உங்கள் பக்கம்.
    about 19 hours ago ·   (14) ·   (2) ·  reply (0)
  • V.Shanmuganathan
    திரு.கேஜ்ரிவாளின் நிபந்தனைகள் " போகாத ஊருக்கு வழி கேட்டதுபோல" இருக்கிறது.மற்ற கட்சிகள் ஆட்சி செய்வது போல இல்லாமல் வித்யாசமாக செய்யவேண்டுமென நினைப்பது தப்பல்ல,ஆனால் எல்லாமே with in the constitution னாக இருக்கவேண்டும். திரு.கேஜ்ரிவாள் அவர்களின் நோக்கம் நான் உள்பட எல்லோராலும் பாராட்டப்படவேண்டியதே,ஆனால் மக்களுக்கு இவர் நினைத்தது போல நல்லது செய்ய முதலில் இவர் அதிகாரத்திற்கு வரவேண்டும்,அதற்க்கு இவர் டெல்லியில் ஆட்சியமைக்கவேண்டும்.அதைவிட்டுவிட்டு ஆகாயத்தில் கோட்டை கட்ட நினைத்தால் முடியுமா?
    about 18 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
  • andal
    போகாத ஊருக்கு வழி கேட்பது போல் உள்ளது ஒன்று ஆட்சி அமைக்கவேண்டும் அல்லது பா ஜ கட்சி ஆட்சி அமைய அதரவு தரவேண்டும் மீண்டும் தேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சி நிலை கேள்வி கேள்விகுரியகிவிடும்
    about 18 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
  • Kanagaraj
    ஆம் ஆத்மி கட்சியிடம் கோரிக்கைகள் இருப்பது போல், அக்கோரிக்கைகளுக்கான திட்டங்கள் எதுவும் அவர்கள் முன்வைக்கவில்லை. இக்கட்சியின் கோரிக்கைகளை ஏற்க்கனவே பிற கட்சிகளும் பின்பற்றி கொண்டுதான் இருக்கின்றன ஆனால் அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற திட்டம்தான் தேவை. அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளும்படியாக இல்லை.
    about 18 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
  • Moorthy
    காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினார். அது சரி. பிஜேபிக்கு ஏன் அனுப்பனும்?? இப்போவே எதிர் கட்சிக்காரன நீ எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கமா இருந்தா நான் ஆட்சி அமைக்கிறேன் என்று சொல்கின்ற மாதிரி இருக்குது. கொஞ்சம் வெவகாரமான ஆள் தான்.
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • shekar
    இது ரெம்ப ஓவர், இவர் கூறும் திட்டங்க���ுக்கு முறையான மதிப்பீடு Action plan, எதுவும் இவர் இதுவரை கூறவில்லை, இது செய்வேன் அது செய்வேன் என்கிறார். முடிவில் எதுவும் செய்யமுடியாமல் விழி பிதுங்கபோகிறார்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  • Devaraj
    இது போன்ற நிபந்தனைகள் தேவை அற்றது... ஒரே நாளில் மந்திரம் போட்டு நாட்டை மாற்ற முடியாது.. இவர் போக்கு சரீல்லை. பேசாமல் குடி அரசு தலைவர் ஆட்சியை அமல் செய்து. ஒரே கட்சி ஆட்சி அமைய வாழ்த்துக்கள்.
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • senguttuvan
    ஷங்கர் பட வசனம் மாதிரி இருக்கு ..... செங்குட்டுவன் பெங்களூர்
    about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • K. R.
    கேஜெரிவல் சொன்ன அனைத்துமே (18 நிபந்தனைகள் )ஒரு அரசாங்கத்தின் வேலை. இதை தைரியமிருந்தால் அவரே ஆட்சி அமைத்து செய்து காட்டட்டும் . ஆளுநருக்கு நிபந்தநியற்ற ஆதரவு ஆம் அத்மி கட்சிக்கு தருவத உறுதிபடுத்தியதன் மூலம் இந்தியாவில் தன்மானமற்ற - சுய நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி என்பதை மீண்டும் மீண்டும் காங்கிரஸ் நிருபித்துள்ளது.
    about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    Ammasi Manickam  Up Voted K. R.'s comment
  • senguttuvan
    எதோ செய்யணும்இன்னு நினைக்கிறார். அதுக்குள்ள எல்லாரும். ஆணியே புடுக வேண்டாம்னா எப்பிட்டி
    about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • jebamoni
    ஆம் ஆத்மி!!! மற்றவர்கள் மிருகங்களா?
    about 16 hours ago ·   (0) ·   (2) ·  reply (0)
  • nsathasivan
    நமது நாட்டின் எல்லா முக்கிய பிரச்சனைக்களுக்கும் மக்கள் தொகை தான் காரணம். தண்ணீர், வீடு ,பள்ளிகள் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும். கேஜ்ரிவால் நிபந்தனைகள் " uthopian thought " (unimaginable and impracticable)


Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

வில்லன் சட்டத்துறை அமைச்சர் . அவர் தம்பி ஒரு கொலைக்குற்றவாளி . அதுக்காக ஒரு கொலை தான் செஞ்சான்னு அர்த்தம் இல்லை , பல கொலை , கொள்ளை , ரேப் செஞ்சவன் தான் . காலம் பூரா தன் தம்பி ஜெயில்ல தான் களி சாப்பிடப்போறான்னு தெரிஞ்சுக்கிட்ட அமைச்சர் அட்லீஸ்ட் 15 நாளாவது ஜாலியா இருக்கட்டும்னு அவனை பரோல் ல கொண்டு வர்றாரு .

ஹீரோ  ஒரு சாதாரண ஆள் தான் . தன் கண் முன்னே நடக்கும்  சட்டக்கல்லூரியில் மாணவர்களை  ரவுடிகள் அடிப்பதைப்பார்த்து அதுக்குக்காரணமான அமைச்சரின் தம்பியை கிட்நாப் பண்ணி ஒரு  கட்டிடத்தில் அடைச்சு வெச்சுடறாரு . கெடு  முடிஞ்சதும் ஜெயில்ல அமைச்சரோட தம்பி இல்லாத மேட்டரை  ஹீரோவே ஃபோன் பண்ணி தகவல் தெரிவிக்கறார். நாடே பத்திக்குது , அமைச்சருக்கு பதவி போகுது . 


ஹீரோ வில்லனின் தம்பியை  ரிலீஸ் பண்ணிடறார். வெளில வந்த தம்பி ஹீரோயினை கடத்தி அதே போல்  ஒரு பில்டிங்க் ல வெச்சுடறார். இருவருக்கும் நடக்கும் சேசிங்க் தான் பின் பாதி பர பர திரைக்கதை . 

எங்கேயும் எப்போதும் இயக்குநரிடம் எனக்குப்பிடிச்சதே சமூக அக்கறையுடன் கூடிய ஒரு மெசேஜை  எப்படி கமர்ஷியலா சொல்லனும் என்ற வித்தை தெரிந்த ஷங்கர் தனம் தான் . அபாரமான திரைக்கதை . சீட் நுனியில் உட்கார வைக்கும் சம்பவங்கள் என கலக்குகிறார். பொதுவா முதல் படம் ஹிட் கொடுத்தவங்க 2 வது படத்தில் சறுக்கிடுவாங்க என்ற கோடம்பாக்க ஜோசியர்கள் கூற்றை சறுக்க வெச்சுட்டார். வெல்டன் சார் .




ஹீரோவா கும்கி ஹீரோ விக்ரம் பிரபு . ஆக்சன் ஹீரோவா  இவர் செஞ்ச முதல் படமே வெற்றி என்பது நல்ல விஷயம் . அதுக்காக அவர் ஓப்பனிங்க் பில்டப் , நம்ப முடியாத ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் நடிக்கலை . ஒரு இயக்குநரின் நடிகரா அளவா செஞ்சிருக்கார் 


புதுமுகம் சுரபி  முகத்தில் அமுத சுரபி . பால் மணம் மாறா பாலகி . தேகத்தில்  இளமை சுரபி . இவர் கொஞ்சல் லைலாத்தனமாய் , ஜெனீலியாத்தனமாய் லூஸாக வந்தாலும் ரசிக்க வைக்கிறார். ஏன்னா தமிழனுக்கு தன்னை எதிர்காலத்தில் லூஸ் ஆக்கப்போகும் பொண்ணை லூசாக்காட்டினா ரசிப்பான் . இவர் அணிந்து வரும்  உடைகள் கன கச்சிதம் . மிக கண்ணியமான உடைகள் . ஓப்பனிங்க் ஷாட்டில் ஸ்கிப்பிங்க் ஆடும்போது கூட கேமரா கண்ணீயம் காட்டி இருக்கிறது .  ( அந்த கண்ணியத்தில் இடி விழ )


 ஹீரோயினுக்கு தங்கையா மாளவிகா மேனன் . இவர் ஒரு அக்மார்க் ஃபிகர் . அதென்ன அக்மார்க்? மார்க் போடும் லெவலைத்தாண்டிய ஃபிகர் எல்லாம் அக்மார்க்  ஃபிகரே . இவர் செய்யும் குறும்புத்தனங்கள் , முக பாவனைகள் நிச்சயம் அடுத்த   படம் ஹீரோயினாகத்தான் செய்வார் என்பதை உறுதிப்படுத்துது . 


ஹீரோயினின் அம்மாவாக வரும் ஷர்மிளி யும்  வெரிகுட். 2 வில்லன்களும் சரி ஆக்டிங்க் . அதுவும் அமைச்சரின் தம்பியாக வருபவர்  போடும் சண்டைக்காட்சிகள் அபாரம் . ஸ்டண்ட் மாஸ்டர , ஆக்‌ஷன் சீக்வன்ஸ்  மேனேஜர் எல்லாருக்கும்  ஒரு ஷொட்டு.





 சபாஷ்  சத்யா 


1.  என்னை மறந்தேன் ,  பாடல் காட்சியில் ரசனையான  பல ஷாட்கள் . ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு . மொத்தம் மூன்றே பாடல்கள் எல்லாமே கேட்கும்படியே இருப்பது . இசை சி சத்யா. இவர் பாடலுக்கான இசையை விட பின்னணி இசையில் வல்லவராய் இருக்கிறார் . வரவேற்க வேண்டிய வரவு 


2  ஆக்‌ஷன் காட்சிகள் ராஜசேகரின் பேர் சொல்லுது . சத்யா , உதயம்  படங்களுக்குப்பின் சினிமாத்தனம் குறைந்த  புதுமையான ஸ்டண்ட் காட்சிகள் 


3   வில்லன்  ஹீரோயினை சோளக்கொல்லை பொம்மை போல் பில்டிங்கில் கட்டி வைப்பது பாரதிராஜாவின் ஒரு கைதியின் டைரி ஐடியாவின் இன்ஸ்பிரேசனாக இருந்தாலும் இது போல் ஒரு காட்சி தமிழ் சினிமாவில் வந்த மாதிரி தெரியலை .


4  முன் பாதி திரைக்கதையில் ஜாலியாக காதலைச்சொன்னது , நாட்டில் நடந்த சட்டக்கல்லூரி ரகளையை படம் ஆக்கியது , அந்த ஒன் லைனையே திரைக்கதையின் ஆதாரமாகக்கொண்டு சென்றது , பின் பாதியில்  பரபரப்பான சம்பவங்களால் படத்தை நகர்த்தியது எல்லாம் அபாரம் 

5  ஹீரோ - ஹீரோயின் ஹோட்டல் காதல் காட்சி , மாமா பொண்ணு கலாய்க்கும் காட்சி , ஹீரோயின் தங்கை ஹீரோவைக்கலாய்க்கும் காட்சி எல்லாமே ரசிக்க வைக்கும் பஞ்சாமிர்தம் 




 சொதப்பிட்டியே சொப்னா



1. கை கால்கள் கட்டப்பட்டு 2 நாளாகப்பட்டினியாக இருக்கும் ஒரு ஆள்  சும்மா கால்களாலேயே  கம்பியால் வாட்ச் மேனைக்கொல்லும் காட்சி நம்பவே முடியலை . அந்தளவு ஃபோர்ஸ் கால்கள் மூலம் எப்படி வரும் ? அதுவும் பலவீனமான உடல் நிலையில் , கால்கள் கட்டிப்போட்டிருக்கும்போது ? 


2  வில்லன் ஹாஸ்பிடலில் போய்  பேஷண்ட்டோட பழைய ரெக்கார்ட்ஸ் கேட்கும்போது ஹீரோ நைசாக அந்த லெட்ஜரை சுட்டுட்டு வந்துடறார். ஆனா ஒவ்வொரு அரசாங்க , தனியார் ஹாஸ்பிடலிலும்  அவுட் பேஷண்ட் ரிஜிஸ்டர்  சிஸ்டத்துல ஸ்டோர் பண்ணி வெச்சிருப்பாங்களே, வில்லன் ஏன் அதை கேட்கலை ? 


3 வில்லன் 5 நாட்கள் பட்டினியா இருந்து அரை குறை உயிரோட இருக்கும்போது  ஹீரோவுக்கு வரும்  ஃபோன் காலில் சொல்லப்படும் பேங்க் அக்கவுண்ட் நெம்பரை 12 டிஜிட்டை எப்படி  நினைவு வைத்து  பின் சொல்ல முடியும் ? அது 1ம் ஃபேன்சி நெம்பர் இல்லையே ,. சராசரி மனிதனால் நல்ல ஆரோக்யமான மன நிலையில் , உடல் நிலையில் 8 டிஜிட் நெம்பரை மட்டும் தான் நினைவு வைத்துக்கொள்ள முடியும் என டாக்டர் ரிப்போர்ட் சொல்லுதே ? 


4 ஹீரோ வில்லனை அடைச்சு வெச்ச பில்டிங்க் போகும்போது ஹீரோயின் ஃபோன் பண்ணி  பேங்க் அக்கவுண்ட் நெம்பர் சொல்றா. அது சரிதானா? அப்டினு செக் பண்ண ஹீரோ  ஒரு டைம் சொல்றார் . அதைத்தான் வில்லன்  நோட் பண்றார் . இது முக்கியமான காட்சி . திரைக்கதையின் முதுகெலும்பே இதுதான் . ஹீரோ எப்படி அவ்வளவு அசால்ட்டாக இருந்தார் . ஏம்மா அந்த அக்கவுண்ட் நெம்பரை எஸ் எம் எஸ் அனுப்பு அப்டின்னா வேலை  முடிஞ்சதே?


5 . பல கொலை , கொள்ளை , ரேப் செஞ்ச வில்லன் ஹீரோயினை மட்டும் அத்தனை நாள் சும்மா எப்படி வெச்சிருப்பான் ? ( ரேப்  சீன் வேணும்கறதுக்காக கேட்கலை )


6 வில்லனை அடைச்சு வைக்கும்  ஹீரோ அந்த சின்ன ரூம்ல இரும்புக்கம்பிகள் இருப்பதை அகற்றாமயா  போவார்? 


7 வில்லன் வாட்ச்மேனை கொலை பண்ணிடறார். டெட் பாடியை எடுக்க வந்த போலீஸ் அந்த பில்டிங்கை  ஏன் சுத்திப்பார்க்கலை ? சீல் வைக்கலை ?


 malavika menon

நச் டயாலாக்ஸ் 


1.  இந்தக்காலேஜ் ல உருப்படாத பசங்க 30 பேர் இருக்காங்க , எல்லாரும் மினிஸ்டர் ரெக்கமெண்டெஷன்ல வந்தவங்க தான் 


2  ஏண்டி , அவன் அதுக்காகத்தான் அங்கே வந்தானா? 

 யாருக்குத்தெரியும் ? வேற எதுக்காகவும்  வந்திருக்கலாம் 



3  உனக்கு இது முதல் விளம்பரம் , எனக்கு இது 561  வது , 22 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் 


 அப்போ  உங்களுது 22 வருச ம் பழசான  ஐடியான்னு அர்த்தம்  ( இந்த வசனம்  இயக்குநரின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவம் ) 


4 ஐ , என் சைன் அப்டியே நீ போட்டுட்டே? 

 ஏய் , லூசு , மாலினின்னு யார் எழுதுனாலும் இப்டித்தான்  இருக்கும் 



5  நல்ல பொண்ணாப்பாரு 

 இதுவே நல்ல பொண்ணுதான் 


 எப்டி சொல்றே?

 20 நிமிஷமா அவ செல்லுக்கு நோ எஸ் எம் எஸ் , நோ கால் , இதை விட என்ன வேணும் ? இந்தக்காலப்பொண்ணுங்களுக்கு 10 நிமிஷத்துக்கு ஒரு கால் வரும் 



6  அவனை ஃபாலோ பண்ணி நல்லவன்னு தெரிஞ்ச பின் ஐ லவ் யூ சொல் , அவசரப்படாதே 


 ஃபாலோ பண்ணும்போது நல்லவனா  இருந்து , காதலிச்ச பின் கெட்டவன் ஆகிட்டா ? 

 சுத்துனவரை லாபம்னு கழட்டி விட்டுடு 


7  வாசத்துல என்ன ஆண் வாசம் , பெண் வாசம்?னுட்டு , எல்லா செண்ட்டும் எல்லாரும் உபயோகிக்கலாம் தானே? 


 நோ நோ . ஆணுக்குப்பிடிச்ச வாசத்தை பொண்ணும் , பொண்ணுக்குப்பிடிச்ச வாசத்தைப்பையனும் செண்ட் அடிச்சுக்குவாங்க 


8 நம்பிக்கைத்துரோகம்கறது  வீட்ல  இருந்துதான் ஆரம்பிக்குது


9  அவனைக்கொல்லனும்,. அதுவரை என்னை மறக்கடிக்கும் எந்த சந்தோசத்தையும் நான் அனுபவிச்சுடக்கூடாது 


10  தப்பு பண்ணிட்டோ , பண்ணாமயோ ஜெயிலுக்குள்ளே வரும் எல்லாரும் அசிங்கபட்டே ஆகனும் 

 சி பி கமெண்ட் = எல்லா செண்ட்டர் ரசிகர்களுக்கும் பிடிக்கும் ., பி சி செண்ட்டர்களில்  பொங்கல் வரை, ஏ செண்ட்டர்களில் அதைத்தாண்டியும் ஓடும் 
இவன் வேற மாதிரி - கமர்ஷியல் ஆக்சன் = பின்பாதி திரைக்கதை பரபர பட்டாசு அரங்கம்அதிரும் கைதட்டலுடன் - 


ஆனந்த விகடன் மார்க் =44 ,

குமுதம் ரேங்க்கிங்க் = நன்று 


ரேட்டிங் = 3.25 / 5.



ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் .  நல்ல ஓப்பனிங்க் . பிளாக்கில் டிக்கெட் விக்கலை . கவுண்ட்டர் டிக்கெட் தான் , பால்கனி  100  ரூபா .


Thursday, December 12, 2013

ரஜினி ரகசியங்கள் 12


மார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்கு அழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கேட்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர்.


‘‘உங்கள் கதாபாத்திரத்துக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்கச் செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக் கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.


ஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்குக் கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’


ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.


எம்.ஜி.ஆர். - ரஜினி


சுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்ட மாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது, திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப் போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’ நாயகர்கள் மக்கள் தலைவர்க ளாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார்.


ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளைத் திரையில் அநாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியராக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, சொந்த விஷயத்தில் தவறுகளோடும் ஒருவன் அடுத்தவர்களுக்கு நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்ப கால, பாசாங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலுசேர்த்தன.


ரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்குப் பெண் மோகம் அதிகம் என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார். ‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்டப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’


உதை விழும்


ரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடித்தவர், காலை 10 மணிக்கு எல்லாம் படப்பிடிப்புக்குப் போய்விட்டார்.


திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கியிருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா?’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி.


அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா, பின்னால அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓப்பன் அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு. ஐ யாம் வெரி ஸாரி. ஆனா, இப்போ ஸாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’

மலராத முட்கள்


நம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில், ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது, தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்துப் போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை.


‘‘ஆயிரக் கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பிப் பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்கவைக்கிறாங்க… நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’ என்றார்.


மாபெரும் சுதந்திரம்


ஒரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா?’’


மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’


உண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம். ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும்மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தை நாம் அவரிடம் கொடுத்திருக்கிறோம்.


ஏனென்றால், ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை!





தொடர்புக்கு: [email protected]


இசை விழாக்களும் குளிரும் மார்கழிப்பூக்களும் ஆசிர்வதிக்கும் டிசம்பரில் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் மற்றொரு விஷயம் ரஜினிகாந்தின் பிறந்தநாள். டிசம்பர் 12ம் தேதி பிறந்தநாள் காணும் ரஜினி என்கிற சிவாஜிராவ் குறித்து 12 தகவல்கள்:


#ரஜினி ஒரு நிகழ்ச்சிக்கு பட்டு வேட்டி, சட்டையில் வருகிறார் என்றால் அன்று சென்டிமெண்டாக அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம். சமீபத்தில் நடந்த இசையமைப்பாளர் அனிருத் சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்கு அவர் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். வேட்டி சட்டையைப் போலவே ரஜினி விரும்பும் மற்றொரு உடை கருப்பு சட்டை, கருப்பு பேண்ட்.


#ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சென்னையிலும் அதுபோல ஒரு உண்ணாவிரதத்தை ஒருங்கிணைத்து நடத்த தீவிரமாக இருந்திருக்கிறார் ரஜினி. ஆனால் நண்பர்களின் ஆலோசனையால் அதை கைவிட்டார். இருப்பினும் அண்ணா ஹசாரேவை நேரில் சந்தித்து ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்தார். அதுபோல சென்னையில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்களது ஆதரவு வேண்டும் என்று அப்போது கேட்டு வந்திருக்கிறார்.



#‘16 வயதினிலே’ படப்பிடிப்பில் பலமுறை பாரதிராஜாவிடம் திட்டு வாங்கியிருக்கிறார் ரஜினி. அந்த நேரத்தில் அவருக்கு ஒரே ஆறுதல், ஒல்லிப் பையனாக வசனக் குறிப்பேட்டை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் பாரதிராஜாவின் உதவியாளர் பாக்யராஜ்தான். ‘எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி, அவரை உற்சாகப்படுத்துவாராம் பாக்யராஜ்.


#செல்போன் பயன்படுத்துவதில் ரஜினி ஆர்வம் செலுத்துவதில்லை. எப்போது, யார் தொடர்புகொள்ள நினைத்தாலும், அவரது உதவியாளர், ஓட்டுநர்களான ஆறுமுகம், சுப்பையா, கணபதி இந்த மூன்று நபர்களின் வழியாகத்தான் பேச முடியும். ரஜினிக்கு தகவல் போய் சேர்ந்ததும், அவர் விரும்பினால், தன்னை அழைத்த நபரிடம் ரஜினியே போனில் பேசுவார்.


#எந்த ஊருக்கு, வெளிநாட்டுக்கு சென்று திரும்பினாலும் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஒரு பரிசுப்பொருள் வாங்கி வருவதை இப்போதும் கடைபிடித்து வருகிறார்.


#இரவோ, பகலோ மனதில் பட்டால் காரை எடுத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குமுன் சென்று நின்றுவிடுகிற பழக்கம் அவருக்கு இப்போதும் உண்டு. அப்படி சந்திக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சாலைப் பயணமாக, நீண்ட தூரம் காரில் பறப்பார். அவர்களிடம் நாட்டுநடப்புகள், புதிய படங்களின் போக்குகள், இளம் நடிகர்கள், அரசியல் ஆகியவை குறித்து ஆழமாக பரிமாற்றம் செய்துகொள்கிறார்.



#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் திறப்புவிழா அன்று, 1980களில் இளையராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அன்று நடந்த அந்த நிகழ்ச்சியின் ஞாபகம் வரும்போதெல்லாம் ரஜினி, ராஜாவிடம் சொல்லி சிலிர்ப்பாராம்.


#ரஜினிக்கு கடிதம் கொடுக்க விரும்புகிறவர்கள், ராகவேந்திரா மண்படத்துக்கு வந்து கொடுத்துப்போகலாம். அப்படி வந்து குவியும் கடிதங்களை அக்கறையோடு படித்து வருகிறார் ரஜினி. உதவியாளர்கள் அதில் சிலதை தேவையில்லாதது என்று பிரித்து தனியே ஒதுக்க முயற்சித்தால், ‘அப்படிச் செய்யாதீர்கள்’ என்று அன்புடன் கண்டிக்கவும் செய்வாராம்.


#நீச்சல் என்றால் ரஜினிக்கு உயிர். சென்னை, கடற்கரைச்சாலை பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.


#சமீப நாட்களாக அவருக்கு பிடித்த விஷயம் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் பழைய தமிழ்ப்படங்களை பார்ப்பது. குறிப்பாக அவர் பரபரப்பான ஷூட்டிங்கில் இருந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்களை எல்லாம் இப்போது ரசித்து ரசித்து பார்த்து வருகிறார்.


#படப்பிடிப்பு தளத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் ஒன்று படிப்பார், இன்னொன்று தூங்குவார்.


#ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மொட்டைமாடி கீற்று கொட்டகையில் தரையில் அமர்ந்து, வாழை இலை போட்டு சாப்பிடுவதை பெரிதும் விரும்புவார்.



ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினிகாந்த், லதாவுடன் கிரேஸி மோகன்
ரஜினியின் படங்களில் அவரது ஸ்டைலுக்கு நிகராக ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம் பஞ்ச் டயலாக்குகள். அப்படி அவரது ரசிகர்களைக் கவர்ந்த பஞ்ச் டயலாக்குகளில் ‘அருணாச்சலம்’ படத்தில் வரும், “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற பஞ்ச் டயலாக்கும் ஒன்று. இந்த பஞ்ச் டயலாக் உருவான விதத்தை ரஜினியின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:



ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த வேலைப்பளுவால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத முடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். 12 வருடங்களுக்கு பிறகு குறிஞ்சி மலர் பூப்பதைப்போல அவர் நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது.



படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாராவாரம் திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு சென்று வருபவன் நான். அப்படி ஒரு வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்குப் போனபோது, ‘ராகவேந்திரா சொல்கிறார், அருணாச்சலம் முடிக்கிறார்’ என்ற வசனம் தோன்றியது. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த ராகவேந்திராவில் விட்டதை அருணாச்சலம் படத்தில் பிடித்தோம் என்ற எண்ணத்தில் உள்ளுக்குள் தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


 அதை அப்படியே ஆனாவுக்கு அனா போட்டு ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற பஞ்ச் டயலாக்கை எழுதி சூப்பர் ஸ்டாரிடம் நீட்டினேன். பார்த்துவிட்டு சந்தோஷமாகப் பாராட்டினார். அவர் மிகச்சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



thanx - the hindu

Wednesday, December 11, 2013

தேமுதிகவில் குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கமா? - பண்ருட்டி ராமச்சந்திரன் பிரத்யேகப் பேட்டி

தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் உள்ளதா என்பதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் மனம் திறந்து பதிலளித்தார். நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்தே அந்தக் கட்சியின் எதிர்காலம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


தேமுதிக அவைத் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:


தமிழக அரசியலில் முதன்முறை யாக வயதை காரணமாகக் கூறி, ஓய்வெடுப்பதாக கூறியுள்ளீர்கள். உண்மையான காரணம் என்ன?


77 வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாததால், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மரணம் அல்லது தேர்தல் தோல்விதான் ஒரு அரசியல்வாதியை ஓய்வு பெறச்செய்யும் என்பார்கள். ஆனால் இந்த இரண்டு காரணங்கள் இல்லாமல், அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியும் என்பதைக் காட்டியுள்ளேன். இது நான் சுயமாக சிந்தித்து, யாருடைய நிர்பந்தமும் இன்றி எடுத்த முடிவு. எனது முடிவுக்கு வேறு யாரும் அல்லது எந்தக் காரணமும் இல்லை.


கட்சிப் பதவி மற்றும் எம்.எல்.ஏ. என்ற சுமைகளைத் தொடர்ந்து தாங்க முடியவில்லை. தொகுதி மக்களுக்கும் சேவையாற்ற முடியவில்லை. சிந்தனைத் திறன் இருந்தாலும், வயது காரணத்தால் செயல்பட முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவு எடுத்தேன். இனி சுதந்திரமாக, ஜாலியாக இருக்கப் போகிறேன்.


வேறு கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. அதனால்தான் அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்துள்ளேன். தேவைப்படுவோருக்கு என் ஆலோசனைகளை வழங்குவேன்.


உங்கள் முடிவு குறித்து முன்கூட்டியே கட்சித் தலைவர் விஜயகாந்த் அல்லது கட்சி யினரிடம் தெரிவித்தீர்களா? ராஜி னாமாவுக்குப் பிறகு உங்களை கட்சித் தலைமை தொடர்பு கொண்டதா?


விஜயகாந்திடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை. அவரிடம் பேசினால் என்னை ஓய்வு பெற விடமாட்டார். எனது ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு இதுவரை (செவ்வாய்க்கிழமை மாலை) விஜயகாந்தோ, அவரது தரப்பிலோ யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இது அவருக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவுதான். கடைசியாக அவரை கடந்த 5-ம் தேதி மதுரையில் சந்திந்தபோது கூட இதுபற்றி நான் பேசவில்லை.


உங்களது திடீர் முடிவில் அதிமுக உள்பட வேறு எந்தக் கட்சி அல்லது நபர்களின் பின்னணி உள்ளதா?


எனது முடிவு, அதிமுகவுக்கே ‘ஷாக்’ தரும் முடிவுதான். அவர்களுக்கோ, வேறு யாருக்குமோ இதில் தொடர்பில்லை. எனது மகன் அதிமுகவில் சேரப் போகிறார் என்ற தகவலும் கற்பனை. அவர் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார்.



தேமுதிகவில் இருந்த கால கட்டத்தில் கட்சி நடவடிக்கைகள் திருப்தி அளித்ததா? தொடர்ந்து அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறக் என்ன காரணம்?



கட்சி நடவடிக்கைகளில் நான் ஈடுபடவில்லை, தலையிடுவதும் இல்லை. கருத்துகள் தான் கூறி வந்தேன். என் கருத்துகளை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் தலைமையின் விருப்பம். இறுதியில் கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் முடிவெடுப்பார்.


ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு சற்று பின்னடைவுதான். என்னால் அதை கடைசி வரை சரிசெய்ய முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவதற்கு என்னால் காரணம் சொல்ல முடியாது.


விஜயகாந்துடன் உங்களுக்கு என்ன கருத்து வேறுபாடு?


தனிப்பட்ட முறையில் ஒன்றும் இல்லை. அவருடன் நல்ல உறவு உண்டு. ஆனால், அரசியல் நிலைப்பாட்டில் அவருக்கும் எனக்கும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.


தேமுதிகவில் குடும்ப உறுப்பி னர்கள் தலையீடு, ஆதிக்கம் இருக்கிறதா?


இந்தியாவில் ஒரு சில கட்சிகளைத் தவிர எல்லாக் கட்சிகளிலும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தலையீடு இருக்கும். அப்படித்தான் இங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசுவதை நாம் எப்படி தடுக்க முடியும். அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பேசுவதை எப்படிக் குற்றம் காணமுடியும். காங்கிரசில்கூட சோனியா காந்தி குடும்பத்தினர் தலையீடு இல்லாமலா இருக்கிறது.



மூத்த அரசியல்வாதியான உங்களது வழிகாட்டுதலின்றி, எதிர்காலத்தின் கட்சியின் நடவடிக்கைகள் சட்டசபையிலும், வெளியிலும் சிறப்பாக இருக்குமா?



நல்லபடியாக நடந்து கொள் வார்கள் என்று நம்புகிறேன். கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்த பின்னர்தான் அதில் நான் சேர்ந்தேன். எனவே, விஜயகாந்தால் சுயமாக கட்சியை நடத்த முடியும் என நம்புகிறேன்.



தேமுதிக துவங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா?


திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிக துவங்கப்பட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவது தேமுதிக போன்ற அரசியல் கட்சிகளின் கடமை. அதை அவர்கள் செய்யவில்லை என்றுதான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் ஏற்படும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் தேமுதிகவின் எதிர்காலம் அமையும்.



ஏற்காடு தொகுதியில் தேமுதிக போட்டியிடாததற்கு என்ன காரணம்?


ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் போட்டி இருக்க வேண்டும். திமுக அங்கு போட்டியிட்டதால், தேமுதிக போட்டியிட வேண்டாம் என விஜயகாந்த் முடிவெடுத்தார். டெல்லியில் போட்டி வேண்டாம் என்றேன். ஆனால், அவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.


இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

thanx - the tamil hindu 


  • மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்று சொல்லுவதுபோல் செயல் பட்டுள்ளார். வாழ்த்துக்கள். ஆனால் இனி அவர் குடுக்கும் பேட்டி, அடுத்தவர்களை பற்றிய வாரல், பிற கட்சில் சேராமல் இருப்பது இது போன்றவை தான் இவரது இன்றைய முடிவுக்கு அங்கீகாரம் தரும், இல்லையேல் இவறும் பெட்டி வாங்க போட்ட நாடகம் தான்.
    about 5 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
    •  A.SESHAGIRI 
      வழக்கம் போல் ஒரு கட்சியை விட்டு விலகும் பொழுது மற்ற அரசியல்வாதிகள் போல் தரம்கெட்டு கட்சியை விமர்சிக்காமல்,நாணயத்துடன் கருத்து கூறி இருக்கிறார்.
      about 5 hours ago ·   (22) ·   (0) ·  reply (0)
      கார்த்திக்  Up Voted A.SESHAGIRI 's comment
      •  O2 
        இறுதியில் கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள்தான் முடிவெடுப்பார் என்று பேட்டி அளித்துள்ளதற்கும் தான் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் எண்ணத்துடன் இந்த ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளதில் திரு. ராமச்சந்திரன் அவர்கள் இன்னும் மனம் திறக்கவில்லை என்றே தெரிகிறது.
        about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
        •  tediyur 
          பண்ருட்டியார் கூறியது முற்றிலும் உண்மை . இந்தியாவில் கம்யூனிஸ்ட் ,அ தி மு க ,பி ஜே பி ,ஜே டி யு தவிர அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சியே . தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னேற்றத்திற்கே கட்சி நடத்துகிறார்கள் .
          about 4 hours ago ·   (1) ·   (2) ·  reply (1)
          •  Athaur 
            குடும்ப உறுப்பினர்கள் பலன் அடைவது என்று எடுத்துக்கொண்டால் மேலே சொல்லப்பட்ட கட்சிகளில் பல லிஸ்டில் வராது.
            about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
          •  Rajaram 
            திரு பண்ருட்டி அவர்களின் பேட்டி மிகவும் கண்ணியமாக உள்ளது. நன்றி.
            about 4 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)
            [email protected]  Up Voted Rajaram 's comment
            •  Devabalan 
              இது ஆச்சிரியம் தரகூடிய செய்தி அல்ல தேதிமுக ஒரு தனி நபரின் செல்வாக்கை அடிபடையாக கொண்டு செயல் பட துவங்கப்பட்ட கட்சி என்பதை நினைவில் கொண்டால்