Wednesday, November 20, 2013

பேயிடம் சில கேள்விகள்

1. பல வெற்றிகளைக்கொடுத்திருந்தாலும் ஒரே ஒரு தோல்வி நம்மை பெரிதும் பாதிக்கும் என்பதற்கு சந்தானம் ஒரு உதாரணம்



=================


2 அனுஷ்கா குரல் சரி இல்லைனு சொல்றவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்கன்னு நினைக்கறேன் # நாமெல்லாம் எப்போ குரலைப்பார்த்தோம்?


===================


3 பேய் இருக்கா? இல்லையா? சரியாத்தெரில.என் பக்கத்துல ( என் சொந்த ),சம்சாரம் இருக்கு



===================


4 பொண்ணு பார்க்க போகும்போது தேவதை மாதிரி நம்ம கண்ணுக்குத்தெரியும் பிகர் கல்யாணத்துக்குப்பின் பேய் மாதிரி தெரியும் # காட்சிப்பிழை



=================


5 ஆப்பிள் பெண்ணே நாயகி ஐஸ்வர்யா மேனன் ஈரோடாம்.அம்மா பியூட்டி பார்லர் வெச்சிருக்காம்.இப்போ தான் எனக்குத்தெரியும்.நான் எவ்ளவ் நல்லவன் பாருங்க



==================


6 பேய்க்கு இருட்டுதான் பிடிக்கும்னா கருப்புக்கலர் சேலை கட்ட வேண்டியது தானே? ஒய் ஒயிட் ? # பேயிடம் சில கேள்விகள்



=====================



7 பேய்க்கு காலே இல்லை.ஆனா கொலுசு மட்டும் போட்டிருக்கும்.அது எப்படி ? #2




======================


8 சினிமாவில் தன்னை ரேப் செஞ்ச வில்லனை பேயா வந்து கொலை செய்யும் பேய் பதிலுக்கு அவனை ஏன் ரேப் பண்றதில்லை ? #3



====================


9 சினிமா ல ஆம்பளைப்பேயே கிடையாது.எல்லாம் பொம்பளைப்பேய்ங்க தான் .அப்போ பேய்ங்க கில்மாக்கு என்ன பண்ணும் ? #4



======================


10 எல்லாப்பேயும் சாமி ரூம்,கோயில் ,சர்ச் க்குள்ளே வரமுடியாதுன்னா சாமி அங்கெ மட்டும் தான் இருக்கா? நீக்கமற இறைவன் எங்கும் இருப்பான் ?பொய்யா?



===================


11 கதவைத்திறந்து வை.மோகினிப்பேய் வரட்டும் ;-))


===================


12 டாக்டர் ஷாலினி கிட்டேயே எனி ஹெல்ப் ஷாலினின்னு கேட்கறவன் பூரா நம்ம பயலுகதான் ;-))




==================


13 நாம எந்த ஜில்லா வா இருந்தாலும் பேய் ,பிசாசுங்க,பொண்டாட்டிங்க கிட்டே நம்ம வீரம் செல்லாது



====================



14 வெள்ளைப்புடவை,வெ ஜாக்கெட் ,மல்லிகைப்பூ னு எல்லாமே மேட்ச்க்கு மேட்சா வெள்ளையா வரும் பேய் தலை ( கூந்தல்) க்கு ஏன் சுண்ணாம்பு அடிச்சுக்கலை?


===================



15 9 தாரா வுக்கு இன்று பிறந்த நாள்.சிம்பு DMல வாழ்த்துனா ஹன்சிகா லவ் லைவ் னும் ,TL் லில் வாழ்த்துனா புட்டுக்கிச்சுன்னும் எடுத்துக்கலாம்




===================



16 மேரேஜ் ஆன லேடியும் ,மேரேஜ் ஆகாத மோடியும் 1,தனக்கு வேண்டியவங்களை ஆள் விட்டு கண்காணிப்பாங்க.ஆனா அதை ஒத்துக்க மாட்டாங்க



===================



17 தமிழ் சினிமா வில் SCREEN PRESENCE ல்.என்னைக்கவர்ந்தவர்கள் ரஜினி ,அஜித் .SCENE PRESENT ல் அனுஷ்கா
நயன் தாரா



=====================



18 கமல் ,பிரபுதேவா இருவரும் நடனத்தில் விற்பன்னர்கள் என்றாலும் கமர்ஷியல் டான்ஸ் கலக்கல் விஜய் தான்




=================


19 டியர்.உனக்காக எதையும் இழக்கத்தயாரா இருக்கேன்.கற்பைக்கூட



=================



20 மார்க்கெட் ரேட்டை உயர்த்தியதில் விஜய்க்கு பேரரசும் ( சிவகாசி ,திருப்பாச்சி) ,அஜித் துக்கு விஷ்ணுவர்தனும் பேருதவி செய்தார்கள்



====================


21 பாலிவுட் ,டோலிவிட் முன்னணி ஹீரோக்கள் டான்ஸ் மூவ்மெண்ட்களில்் விஜய் யை ஒத்தி எடுக்கிறார்கள்



=================


22 பெரும்பாலான அஜித் ரசிகர்கள் வீட்டில் 2 விஜய் ரசிகர்களாவது இருக்கிறார்கள் # மனைவி ,மகள்



==================


23 பஸ் ல ஒரு பிகரு ( மே பி நர்ஸ் ) கொண்டைக்கு வலை போட்டு வந்திருக்கு # அவுட்டர்நெட் அழகி


==================


24 ஆபீஸ் ல ஒரு லேடி 9 வது மாசம் னு லீவ் போட்டுச்சு.டெலிவரி முடிஞ்சு 2 மாசம் கழிச்சு இப்போ ஆபீஸ் வந்திருக்கு.இப்பவும் மாசமா இருக்கு


==============


25 ராம் லீலா வில் முத்தக்காட்சிகள் குறைக்கப்பட்டன - செய்தி # 18 சீன் இருந்துச்சு.இப்போ 8 தானாம்.


================


Tuesday, November 19, 2013

காரைக்குடி-பட்டமங்கலம் - வசந்தம் ஓட்டல். (புரோட்டா கடை)

செந்தூர்வள்ளி
செந்தூர்வள்ளி-

பள்ளியில் டீச்சர்..கடையில் புரோட்டா மாஸ்டர்!

புயலடிக்கும் பொழுதோடு புலர்கிறது விடியல். அலையடிக்கும் மனதோடு தொடர்கிறது அன்றாட வாழ்க்கை. நம்மில் அநேகம் பேரின் யதார்த்தம் இப்படித்தான் நகர்கிறது. செந்தூர் வள்ளியின் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. காரைக்குடிக்கு அருகே உள்ள பட்டமங்கலம், பிரபலமான குரு ஸ்தலம் உள்ள ஊர். இங்குள்ள வசந்தம் ஓட்டலுக்கு நாற்பது வருட பாரம்பரியம் உண்டு. பாரம்பரியத்தோடு ஏராளமான வாடிக்கையாளர்களையும் வளைத்துப் போட்டிருக்கிறது இந்த ஓட்டல். 



அப்படியென்ன இங்கு என்ன விசேஷம் என்கிறீர்களா.. புரோட்டா அறிமுகமான நாளில் இருந்தே இங்கு பெண்கள்தான் புரோட்டா மாஸ்டர்கள். பெண்களுக்கே உரிய கைபக்குவத்தில் புரோட்டா வீசுவதால், அதை சாப்பிடுவதற்கென்றெ பக்கத்து கிராமங்களில் இருந்து தினமும் பஸ் ஏறி வந்துவிட்டு போகிறார்கள் பலர். 



இந்த ஓட்டலில் இரண்டாம் தலைமுறை புரோட்டா மாஸ்டராக இருப்பவர் செந்தூர்வள்ளி டீச்சர். மாஸ்டர் சரி, அதென்ன டீச்சர்? படித்து வாங்கிய பட்டம்தான். ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தற்போது உள்ளூர் பள்ளியிலேயே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் செந்தூர்வள்ளி, வெட்கப்படாமல் தனது பாரம்பரியத் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார். 



‘‘சின்ன வயசுல, அம்மா புரோட்டா வீசுறத பாத்துருக்கோம். நாங்க யாரும் கையில மாவை எடுத்துடக் கூடாதுங்கறது அம்மாவோட பயம். ஆனா, குடும்பச் சூழல் எங்களையும் புரோட்டா வீச வைச்சிருச்சு. இன்னைக்கி நாங்க தலை நிமிர்ந்து நிக்கிறோம்னா அதுக்குக் காரணம் நாங்க பழகி வைச்சிருக்கிற இந்த புரோட்டா மாஸ்டர் தொழில்தான்’’ என்கிறார் 13 வயதில் இருந்து புரோட்டா வீசிக்கொண்டிருக்கும் செந்தூர்வள்ளி டீச்சர். அவரே தொடர்கிறார்..



பொம்பளப் புள்ளைங்க இந்த வேலையச் செய்யக் கூடாதுங்கறது அப்பா, அம்மாவோட எண்ணம். ஆனா, முடியாத வயசுல அம்மா பட்ட கஷ்டத்தைப் பார்த்துட்டு நாங்களே களத்துல இறங்கிட்டோம். கடைக்கு வெளியில புரோட்டா வீசுனாத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க. அதனால கடைக்குள்ளேயே புரோட்டா வீசுனோம். கல்யாணம் ஆன பின்னாடித்தான் கடை முகப்புலேயே புரோட்டா வீச ஆரம்பிச்சோம். 



நாங்க அக்கா தங்கச்சிக நாலு பேரு. எங்களுக்கு கல்யாணம் முடிச்சது, எங்க அத்தை பிள்ளைங்களுக்கு கல்யாணம் முடிச்சது, தம்பியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புனது எல்லாமே நாங்க புரோட்டா வீசி சம்பாதிச்ச பணத்தாலதான் சாதிக்க முடிஞ்சுது. 



இப்போ தற்காலிகமா உள்ளூர் ஸ்கூல்ல வேலை குடுத்துருக்காங்க. காலையில புரோட்டோ வீசிக் குடுத்துட்டு ஸ்கூலுக்குப் போயிருவேன். அதை எல்லாம் கல்லுல போட்டு எடுத்து வியாபாரம் பாத்துருவாங்க அக்கா. சாயந்தரம் ஸ்கூல் விட்டு வந்ததும் மறுபடியும் கையில மாவை எடுத்துருவேன். எனக்கு ஏதாச்சும் வேலை இருந்தா அக்காவும் புரோட்டா வீசுவாங்க. 



எங்களால முடிஞ்ச வரைக்கும் நாங்க இந்த வேலையை செஞ்சுட்டே இருப்போம்.. உறுதியாய் சொன்ன செந்தூர்வள்ளியிடம், ‘‘டீச்சருக்கு படிச்சுட்டு ஓட்டல்ல புரோட்டா வீசுறது கஷ்டமா தெரியலையா?’’ என்று கேட்டால் சிரிக்கிறார். 



‘‘இதுல கஷ்டப்பட என்ன இருக்கு? பொய் சொல்லக் கூடாது, களவாடக் கூடாது. நேர்மையா எந்தத் தொழிலைச் செய்தாலும் அது தெய்வத்துக்கு சமம். படிச்சுட்டு புரோட்டா சுத்தலாமான்னு அன்னைக்கி நான் யோசிச்சிருந்தா, இன்னைக்கி எங்க குடும்பம் கஷ்டப்படாம கஞ்சி குடிச்சிருக்க முடியாதே’’.. செந்தூர்வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மைதாவை எடுத்து சின்னதாய் ஒரு புரோட்டா வீசிக் கொண்டிருந்தாள் அவரது ஏழு வயது மகள் தர்ஷினி ! 


thanx - the tamil hindu

Insidious 2 -சினிமா விமர்சனம் 18 +

இந்த வாரம்... திகில் வாரம் என்று கூறும் அளவுக்கு ஹாரர், த்ரில்லர் ஜானரில் மூன்று படங்கள் 'கீதாஞ்சலி (மலையாளம்), பீட்சா 2 'தி வில்லா' (தமிழ்), இன்சீடியஸ் 2 (Insidious 2 - ஆங்கிலம்) மூன்றுமே வெற்றி பெற்ற முந்தைய படங்களின் இரண்டாம் பாகம். 

 

கன்னடத்தில் ஆப்தமித்ராவாக, ஹிந்தியில் Bhool Bhulayya ஆக, தமிழில் 'சந்திரமுகி'யாக ரீ- மேக் செய்யப்பட்டது மலையாளத்தில் ஷோபனா, மோகன்லால் நடித்த 'மணிசித்திரதாழ்'. என்றும் மலையாள சினிமாக்களின் பாதை மாற்றிய படங்களில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் படம் இது. இருபது வருடங்கள் கழித்து மோகன்லாலை அதே மனோதத்துவ நிபுணர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து 'ப்ரியதர்ஷன்' இயக்கத்தில் 'கீதாஞ்சலி' வெளிவந்துள்ளது. பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வில்லா, இதை பற்றிய கதை உங்களுக்கு தெரிந்ததே! 



இவ்விரண்டு படங்களும் பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்டு, தொடர்ச்சி எனும் பொருளுக்கான அர்த்தத்தை பொய்ப்பித்து, எதிர்ப்பார்ப்பை டமால் டமால் என வெடிக்கச் செய்தது. தனிப்பட்ட கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படங்கள் முந்தைய பாகம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை நீக்கியது. 


இவ்வாரம் வெளிவந்துள்ள வரிசைப் படங்களில் உருப்படியாக அமைந்துள்ள ஒரே படம் இன்சீடியஸ் 2. 

 

தமிழ்நாட்டில் கூட கஞ்சூரிங் (Conjuring) பட இயக்குனர் என்று கூறினால் பலரால் ஜேம்ஸ் வான் (James Wan)-ஐ அறிந்துகொள்ள முடியும். தொடர்ச்சி எனக் கூறிவிட்டு 'முதற் பாகத்தில் நாயகனின் மனைவியான நாயகி திடீரென இரண்டாம் பாகத்தில் காணாமல் போய்விட, இரண்டாம் பாகத்தில் திடீர் என அண்ணி, அண்ணன் கதாப்பாத்திரம் புகுத்தப்படுவதும், நாயகன் பிரமச்சாரியாக மாறி புது நாயகியை காதலிப்பதும்' இதைப் போன்ற கப்சாக்கள் எல்லாம் இப்படத்தில் அமையப்படவில்லை. 



ஜேம்ஸ் வான் தன் படம் பார்க்க வருவோர் முந்தைய பாகத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திலே திரைக்கதையை அமைத்துள்ளார். 



முதல் பாகத்தில் நடந்தவை பற்றிய ஓர் கதைச் சுருக்கம்... ஒரு குடும்பம் புதிதாக ஒரு வீட்டிற்குள் குடியேறுகிறது. வீட்டிலுள்ள ஏழு வயது சிறுவன் அடிபட்டுக் கொண்டு கோமாவில் விழுகிறான். சாதாரணமாக அடிபட்டுக்கொள்ளும் சிறுவன் எப்படி கோமாவில் விழுந்தான் என்று அனைவருக்கும் அதிர்ச்சி. டாக்டர்களும் காரணம் அறியாமல் விழிக்கின்றனர். இதன்பின் வீட்டில் பல மர்மங்கள் நடக்கின்றன. 




வீட்டில் அமானுஷ்யம் அமைந்துள்ளதை குடும்பத்தார் உணர, கதாநாயகனின் அம்மா ஒரு எக்ஸார்சிஸ்ட்டை (பேய் ஓட்டுபவர்) கூப்பிடுகிறார். வந்தவள் குழந்தை கோமாவில் அல்ல அவனை பேய் ஆட்கொண்டுள்ளது, ஒரு வைரஸ் பிற கருவியில் புகுந்து ஆட்கொள்வது போல் இவன் உடம்பு பல பேய்களால் ஆட் கொள்ளப்படுகிறது என்பதை கண்டறிகிறாள்.


 இது மட்டுமன்றி குழந்தையின் அப்பா, அதாவது ஹீரோ சிறுவயதிலே பேயால் ஆட்கொள்ளப்பட்ட கதையையும், அதிலிருந்து தான் அவனை மீட்ட கதையையும் கூறுகிறாள். பயந்த மனிதர்களை மட்டுமே பேய் தனது கருவியாக எடுக்க முடியும், கதாநாயகன் தன் சிறுவயதில் பயந்தது பேய்க்கு சாதகமாக அமைகிறது. 



ஒரு முறை ஆட்கொண்ட பேய் ஒரு மனிதனை விட்டு விலகாது, ஆனால் மனிதன் பேய் இருப்பதை உணராமல், அதை ஓர் பொருளாக கருதாமல் வாழ்ந்தால் பேயினால் ஆட்கொள்ள முடியாது எனக் கூறி ஹீரோவின் சிறுவயது நினைவுகளை அழிக்கிறாள் எக்ஸார்சிஸ்ட். ஹீரோவின் வாழ்நாள் முழுதும் பேய் துரத்துகிறது ஆனால் அவன் அதை உணரவில்லை. ஹீரோவை தொடர்ந்து வரும் பேய் அவன் பையன் இருட்டு அறைக்குள் பயந்து விழும் சமயத்தில் அச்சிறுவனை ஆட்கொள்கிறது. 


இக்கதையினையும் நாயகன், நாயகிக்கு எக்ஸார்சிஸ்ட் கூற, குழந்தை கோமாவில் இல்லை பேய்களால் சிறை செய்யப்பட்டுள்ளது எனும் உண்மையை கூறுகிறாள். குழந்தையுடன் பேச வைத்து அவன் ஒலி வரும் திசையில் நாயகனின் ஆன்மாவை பிரயாணிக்கச் செய்கிறாள். கடைசியில் குழந்தையை பேய்களிடமிருந்து மீட்டு வரும் நாயகன் ஒரு நொடி பேயை கண்டு அச்சப்படுகிறான் அவ்வளவு தான் வேதாளம் இவன் மீது தொற்றிக் கொள்கிறது. நாயகன் மீது பேய் புகுந்ததை எக்ஸார்சிஸ்ட் உணர அவள் நாயகனால் கொள்ளப்படுகிறாள். இது தான் முதல் பாகத்தின் கதை. 



கதை விரிவாக கூறப்பட்ட நோக்கம், முதற் பாதியில் வந்த பல காட்சிகளோடு இரண்டாம் பாதிக்கு தொடர்பு உள்ளது என்பதே. ஏன் கதாநாயகன் வித்தியாசமாக நடந்து கொள்கிறான், எப்படி அவனுக்கு பேய் பிடித்தது, யார் இந்த எக்ஸார்சிஸ்ட் இப்படி பல கேள்விகள் எழுந்தால்? அத்தனை கேள்விகளுக்கான விடை முதற் பாதியில் அமைந்துள்ளது. 


பேயால் ஆட்கொள்ளப்பட்ட நாயகனிடமிருந்து அவன் குடும்பம் காப்பாற்றப்படுகிறதா? இல்லையா? என்பதே இரண்டாம் பாகத்தின் கதை. 


வேகமாக முன்னோக்கிச் செல்லும் ரோலர் கோஸ்டரில் பயணிப்பவர்களுக்கு ரோலர் கோஸ்டருடன் அப்படியே தான் விழுவது போன்ற திகில் பிறக்கும். இன்சீடியஸ் 2 படத்தில் அமைந்த ஒளிப்பதிவும் அப்படித் தான். ஏதோ உருவம் தெரிகிறதே என்று கண்கள் தூரம் தேடிப் போவது போல் கேமராவும் நகர்கிறது. த்ரில்லர் படங்களின் ஆசான் ஆல்பிரட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock) படத்தில் பிரசித்தி பெற்ற பேனிங் ஷாட் (Panning shot) பல இடங்களில் இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. 


'பட படவென அடித்துக் கொள்ளும் கதவுகள், அர்த்த ஜாமத்தில் கேட்கின்ற நாய்களின் குறைச்சல், உறக்கத்தில் விழித்துக் கொள்ளும் மனிதர்கள் அந்தரத்தில் தொங்கி தன்னைத் தானே அடித்துக் கொள்வது' இதை போன்ற புளித்துப் போன காட்சிகள் ரிப்பீட் செய்யப்படாமல் இருந்தது ஆறுதல். ஒளிப்பதிவும், லைட்டிங்கும் இப்படத்தின் ஆணிவேர். திரைக்கதை விதிகளை பின்பற்றாத லெயிக் வானல் (Leigh Whannel) திரைக்கதை, சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் செல்கிறது. 


ஜேம்ஸ் வான் முன்பு இயக்கிய டெட் சைலன்ஸ் (Dead Silence) படத்தில் அமைந்திருந்த பின்னணி, நாடி நரம்புகளை மிரளச் செய்யும். இவர் இயக்கிய கஞ்சூரிங், சா (Saw) படங்களில் கூட பின்னணி அதிர வைக்கும். இன்சீடியஸ் 2 பொறுத்த வரை ஒலி அமைப்பும், பின்னணியும் கொஞ்சம் சுமார் ரகம்தான். 



பேய் பயம் கொண்டவர்கள் கண்டிப்பாக ஒரு மூன்று நான்கு இடங்களில் அச்சப்படுவார்கள், பேய்ப் பட தாசர்களை இன்சீடியஸ் 2 கண்டிப்பாக ஈர்க்கும்.
அய்யய்யோ! யாராவது பத்திரமா வீட்டுக்கு கொண்டு சேர்த்துடுங்க! எனக் கூறும் அளவுக்கு பயம் கிடையாது, ஆனால் கண்டிப்பாக சுவாரசியமான அனுபவம். 
 thanx = the hindu


சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

லீலாவும் ,ராமும் பின்னே ஷகீலாவும்

1, ராம் லீலா ஹிந்திப்பட டைட்டிலை மாற்றனும் - கோர்ட்டில் கேஸ் # லீலாவும் ,ராமும் பின்னே ஷகீலாவும்னு மாத்திடலாமா?


===================


2. தமிழகத்தை நெருங்குகிறது இன்னொரு புயல் ?  # இப்போத்தான்யா தீபாவளிக்கு ஒரு புயல் வந்துச்சு , அதுக்குள்ளேயா?


===================


3 எப்.ஐ.ஆர்., போட மறுக்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். - டெல்லி கோர்ட் # அதுக்கும் எஃப் ஐ ஆர் போட மறுப்பாங்களே?


===================

4   விசாரிக்காமல் கைது செய்யக் கூடாது: அனைத்து குற்றங்களுக்கும் எப்.ஐ.ஆர். அவசியம்- சுப்ரீம் கோர்ட் # சபாஷ்! இது தாண்டா கோர்ட்



=======================


5 சி.பி.ஐ. கூண்டுகிளி அல்ல: மத்திய மந்திரி ப.சிதம்பரம்.. # ஆளுங்கட்சியின் உத்தரவுக்குக்காத்திருக்கும் இலவு காத்த கிளியோ?



=======================


6 இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் DMKமனு # மீண்டும் சேவல் சின்னத்தில் ஜெ போட்டி இடட்டும் என்பது திமுக வின் ஆவல்



======================


7 நிர்ப்பந்தக்கூட்டணி அரசியலில் மட்டும் இல்லை சினிமாவிலும் உண்டு # கமல் ,எம் ராஜேஷ் ,சந்தானம் உத்தம வில்லன்


====================


8 பாலியல் விழிப்புணர்வு குறும்படத்தில் சானியா மிர்ஸா! - செய்தி # நம்மாளுங்க ஜல்சா படத்தில் மிர்சா அப்டினு அடிச்சு விடுவாங்களே?


====================


9 சுப்ரீம் கோர்ட் X் நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள்குழு. # சுத்தம்.ஜட்ஜ் கூட லாட்ஜ் மேட்டர் ல மெர்ஜ் ஆகிட்டாரா?"


=====================



10 உடல் உறுப்பு தானத்தில்
நாட்டிலேயே முதலிடத்தில் தமிழகம் # இங்கேதான்யா நம்மாளு நிக்கறான்.ஹாட்ஸ் ஆப் தமிழா!


=================================================



11 சிம்புவும் ஆண்ட்ரியாவும் நடிகர்கள் - நெருக்கம் தவறில்லை: ஹன்சிகா விளக்கம் # அட அப்பாவிக்கா ! அப்பாலிக்கா FEEL பண்ணுவீங்கக்கா!


===================


12

Monday, November 18, 2013

ராவண தேசம் - சினிமா விமர்சனம் (தினமலர் விமர்சனம் )

தினமலர் விமர்சனம்

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என அகதிகளாக பல நாடுகளுக்கும், கள்ளத்தோணி ஏறிய தமிழர்களின் கண்ணீர் கதையை, ஒரு வழித்தவறிய அகதி படகின் வாயிலாக தத்ரூபமாக சொல்லியிருக்கும் திரைப்படம் தான் 'ராவண தேசம்'. இதுவரை தமிழ், தமிழ் என பேசி வரும் தமிழ் சினிமா இயக்குநர்களே கையாளாத கதை, ஒரு தெலுங்கு சினிமாவாக வெளிவந்து ராவண தேசமாக தமிழ்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது!

ராணுவத்துக்கும், போராளிகளுக்குமான சண்டையில் இருந்து விலகி, இலங்கை தமிழர் பகுதியில் வசிக்கும் தமிழ் இளைஞன் அஜெய், அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு படகு உதவி செய்யும் அஜெய்யே, தன் காதலி ஜெனிபருடன் ஒருநாள் அகதியாக இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய சூழல்! மேலும் சிலருடன் ஒரு படகில் ராமேஸ்வரம் கிளம்பும் அவர்களது படகு எதிர்பாராத விதமாக திசைமாறி செல்கிறது. ஒருசில நாட்களில் முடிய வேண்டிய படகுபயணம் பத்து, பதினைந்து நாட்களுக்கு மேலாக., அந்தபடகில் உயிருக்கு போராடும் அகதிகளின் கதைதான் 'ராவண தேசம்' மொத்த படமும்!
 
 


முரட்டு முகமும் தாடியுமாக இலங்கை தமிழராக அஜெய், பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி கண்ணீர் தமிழர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறார். அஜெயின் காதலியாக நந்திதா அலைஸ் ஜெனீபர் படகில் கருகலையும் காட்சிகளில் சத்தம் இல்லாமல் கதறும் இடங்களில் நம்மையும் கண்ணீர் விட வைக்கிறார்.

ஆர்.சிவனின் இசை, வி.கே.ராம்ராஜின் ஒளிப்பதிவு, அஜெய்யின் இயக்கம், நடிப்பு உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் ராவண தேசத்தின் பலம்! ஆரம்பகாட்சிகளில் வரும் இலங்கை நிலவரம் நாடகத்தன்மையாக படமாக்கப்பட்டிருக்கும் விதம், நாயகர் அஜெய்யின் கனவில் வரும் போராளி தலைவன் பற்றிய கருத்து தேவை இல்லாத திணிப்பு உள்ளிட்ட ஒரு சில மைனஸ் பாயிண்ட்டுகள் இருந்தாலும் 'ராவண தேசம்' - நிச்சயம் 'நம் தேசத்தை உலுக்கும்!!'
 
 
a
 
 
 
 
 
 
 
a
 
 
  • நடிகர் : அஜய்
  • நடிகை : ஜெனிபர்
  • இயக்குனர் :அஜெய்
 
 
 
a
 
 
 
 
 

ஆன்லைன் பிஸினஸுக்கு விளம்பரம் -அருண் அத்தியப்பன் சிறப்புப் பேட்டி (டிக்கெட்கூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.)

அருண் அத்தியப்பன், நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ticketgoose.com. (படம்: ஸ்ரீபரத்)

வேலையை விட்டுவிட்டு பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும். அப்படி ஆரம்பித்த பிஸினஸ் ஒரு கட்டத்தில் தோற்றுப்போய் மீண்டும் வேலைக்குப் போகும் சூழல் வந்த பிறகு திரும்பவும் பிஸினஸ் ஆரம்பிப்பதற்கு, பல மடங்கு துணிச்சல் இருந்தால்தான் அது சாத்தியம். அப்படிப்பட்டவர்தான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அருண். சமீபத்தில் டை(tie- the indus entrepreneurs) விருது வாங்க வந்திருந்த அவரிடம் ஒரு நீண்ட பேட்டி.



முதல் பிஸினஸ் எப்படி தோற்றது என்று கேட்பதற்கு முன்பு, அவருடைய ஆரம்பகாலம் எப்படி இருந்தது என்பதை அவரிடமே கேட்டோம்?



நாமக்கலில் பிறந்தவன் நான். பிறகு கோவையில் இருக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். படித்தது மெக்கானிக்கலாக இருந்தாலும் சாப்ட்வேர் துறையில் ஆர்வம் இருந்தது. இருந்தாலும் கேம்பஸில் பாஷ் (Bosch) நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு சில காலம்தான் இருந்தேன். அதன்பிறகு நாமக்கல் வந்து சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தேன்.



சாப்ட்வேர் நிறுவனம் ஆரம்பிக்க முடிவு செய்தபிறகு ஏன் நாமக்கலில் உங்களது நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்?



நாமக்கலில் ஆரம்பிப்பதற்கு எந்த பெரிய காரணமும் இல்லை. இப்போது இருக்கும் தெளிவு அப்போது இல்லை. மேலும், என்னை நம்பியவர்கள் எல்லாம் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்ததால் அங்கு ஆரம்பித்தேன். ஒரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, அங்கிருக்கும் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், லாரி நிறுவனங்கள் உள்ளிட்டவர்களிடம் காலையில் பேசுவேன். மேலும் அவர்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரியாததால் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காண்பித்து, இவ்வாறு உங்களுக்கு பயன்படும் என்பதை சொல்லி.பிறகு சாயங்காலம் வந்து அவர்களுக்கான மென்பொருளை எழுதுவேன். இது கூடவே கார்மென்ட் பிஸினஸும் செய்துவந்தேன். இதில்தான் பிரச்னை, கார்மென்ட் பிஸினஸ் சரியாக போகவில்லை.இதனால் பத்துலட்ச ரூபாய் அளவுக்கு கடன் ஆகிவிட்டது.



உங்களுடைய சாப்ட்வேர் பிஸினஸை ‘ஸ்கேல் அப்' செய்ய முடியவில்லையா?



சாப்ட்வேர் பிஸினஸ் நன்றாக இருந்தாலும், அதில் ஒரு தவறு செய்துவிட்டேன். டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கு ஒரு சாப்ட்வேரை தயாரித்து கொடுத்தபிறகு, வேறு துறை நிறுவனங்களுக்கு சாப்ட்வேர் தயாரிக்க ஆரம்பித்தேன். இதை செய்யாமல் ஒரு துறைக்கு எழுதி, அதிலிருக்கும் பிரச்னைகளை களைந்து, அடுத்தடுத்த நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் அப்போது சிறிய வயது என்பதால், ஒரு வேலையைச் செய்யாமல் வேறு வேறு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டேன்.



அதன் பிறகு என்ன செய்தீர்கள்?



10 லட்ச ரூபாய் கடனாகிவிட்டது. இப்போதே பத்து லட்ச ரூபாய் பெரிய தொகை, இந்த தொகையை 1997-ம் ஆண்டே இழந்திருந்தேன். மேலும் அந்த சமயத்தில் எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்ததால் மேற்கொண்டு எதுவும் செய்யாமல், சென்னைக்கு வந்துவிட்டேன். என்னுடைய நெருங்கிய உறவினர்கள்தான் அந்த தொகையை எனக்கு கொடுத்து உதவி செய்தார்கள்.



வேலை எளிதாக கிடைத்ததா?



ஒரு வேலை கிடைத்தது, அதாவது ஒரு டெக்னாலஜி நிறுவனம் எனக்கு பயிற்சி கொடுக்கும். அந்தப் பயிற்சியை நான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த நிறுவனத்தில் சுமார் 7 மாதங்கள் வரை வேலை செய்தேன். ஆனாலும் சம்பளம் சரியாக கிடைக்கவில்லை. இந்த சமயங்களில் என் மனைவி ஊரிலே இருப்பார்கள். சென்னையில் வைத்து சமாளிக்கக் கூட முடியாது. மாலை நேரங்களில் என்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டே இருந்தேன். இப்போது முன்னணியில் இருக்கும் ஒரு டெக்னாலஜி நிறுவனத்தில் இன்டர்வியூ வரைக்கும் முடித்து ஹெச்.ஆரில் உங்களுக்கு வயதாகி விட்டது. உங்களை விட சிறியவர்கள் இருக்கும் டீமில் உங்களைச் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் இதே பிரச்னை இருந்தது. ஆனால் அப்போதைக்கு அங்கு டெக்னாலாஜி நபர்கள் குறைவாக இருந்ததால் என்னை எடுத்துக்கொண்டார்கள்.



அப்போது எந்த மனநிலையில் இருந்தீர்கள்?


வேலை இல்லை, 10 லட்சம் கடன் என்ற நிலைமையில் ஒரு வேலை கிடைத்தது கொஞ்சம் ரிலாக்ஸாக இருந்தது. ஹெச்.சி.எல்லில் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டதற்கு இப்போது ரூ.10,000 வாங்குகிறேன், ரூ.12,000 போதும் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு ரூ.15,000 சம்பளமாக கொடுத்தார்கள். ஆனால் உள்ளே போனபிறகுதான் தெரிந்தது, மற்றவர்களின் சம்பள விவரம். இருந்தாலும் என்னுடைய வேலையை பார்த்த பிறகு அடுத்த ஆறு மாதங்களில் ஓரளவு நல்ல சம்பள உயர்வு இருந்தது!



2007-ம் ஆண்டுதான் டிக்கெட்கூஸ் நிறுவனத்தை ஆரம்பித்தீர்கள்! இடையில் என்ன செய்தீர்கள்?



இடையில் நிறுவனம் மாறினேன். அமெரிக்காவில் மூன்று வருடம் வேலை பார்த்தேன். முக்கியமாக கடனை அடைத்தேன். அங்குதான் என்னுடைய நண்பன் கார்த்திகேயனை சந்தித்தேன். பிறகு இந்தியா வந்து நான், கார்த்தி, இன்னொரு நண்பருடன் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்தோம். ஆனால், எங்கள் இருவராலும் குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த நிறுவனத்தில் தொடர முடியவில்லை. வெளியே வந்துவிட்டோம்.


இந்த நிறுவனத்துக்கான ஐடியா எப்படி கிடைத்தது?


ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அந்த எண்ணத்தை ஏன் விட வேண்டும் என்று பலவிதமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தோம். ஒரு முக்கியமான பண்டிகை நாளில் கார்த்தி ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்கு பஸ் கிடைக்கவில்லை என்றும் கஷ்டப்பட்டு ஒரு பஸ்ஸைப் பிடித்தேன் என்றும் சொல்லிவிட்டார். ஆனால் என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை.


டிக்கெட்டில் ஏதோ பிஸினஸ் வாய்ப்பு இருப்பதாகவே எனக்குப்பட்டது. கார்த்தி காலையில் என்னை வந்து பார்ப்பதற்குள் ஊரில் இருக்கும் சில பஸ் ஆப்பரேட்டர்களிடம் பேசி அந்த பிஸினஸ் மாடலை ஓரளவுக்கு உருவாக்கி வைத்திருந்தேன். காலையில் வந்ததும், இன்னும் சில டெக்னிக்கல் நண்பர்களுடன் பேசி இந்த ஐடியாவை ஓ.கே செய்தோம்.



அதெப்படி அனைத்து ஆன்லைன் பஸ்டிக்கெடிங் நிறுவனங்களுக்கும் ஒரே கதை?



ரெட்பஸ் நிறுவனம் எங்களுக்கு ஒரு வருடம் முன்பு ஆரம்பித்தார்கள். ஆனால் நாங்கள் இதை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு அப்படி ஒரு நிறுவனம் இருப்பதே தெரியாது. நாங்கள்தான் முதல் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இந்த ஐடியாவை ஓ.கே செய்துவிட்டு கார்த்தி ஊருக்கு போவதற்காக கோயம்பேடு செல்லும் போதுதான் இந்தியாபஸ்டிக்கெட்.காம் என்ற ஒரு நிறுவனத்தை கார்த்தி பார்த்திருக்கிறார். இருந்தாலும் இந்த பிஸினஸுக்கு வாய்ப்பு இருப்பதாகவேத் தெரிந்தது. அதனால் தைரியமாக ஆரம்பித்தோம். கார்த்தியின் நண்பர் வாசுவையும் உடனடியாக இங்கு வரவழைத்து எங்களுடன் சேர்த்துக்கொண்டோம்.



அதென்ன டிக்கெட் கூஸ்? கூஸ் என்றால் வாத்து இனம்தானே? நம்மவர்கள் வாத்துக்கு கொடுக்கும் மரியாதை வேறுதானே?



கூஸ் இது வேறு இனம். இந்த பறவை அதிக தூரம் பறக்க கூடியது. டிக்கெட் புக் செய்கிறவர்களும் அதிக தூரம் பயணம் செய்பவர்கள் என்பதால் இந்தப் பெயரை வைத்தோம். இன்னும் சில பெயர்கள் இருந்தது. ஒரு மீன் வகை அதிக தூரம் பயணம் செய்யும். அதை வைக்கலாமா என்றும் கூட யோசித்தோம். அனைத்து பெயர்களையும் எழுதி குலுக்கி என் பெண்ணை எடுக்கச் சொன்னேன். அவள் எடுத்தது கூஸ். ஆனால் நீண்ட நாளைக்கு பிறகுதான் மக்கள் எங்களை இப்படிதான் நினைக்கிறார்கள் என்று புரிந்தது?



முதல் டிக்கெட் விற்பனை செய்ய உங்களுக்கு எவ்வளவு காலம் ஆகியது?



நிறுவனத்தை ஆரம்பித்தவுடன் கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்களை கொடுத்தோம். 10 நாட்களில் முதல் டிக்கெட் விற்பனை செய்தோம். ஆனால் அடுத்த டிக்கெட் விற்பதற்கும் 10 நாட்கள் ஆகியது. நாங்கள் ஒவ்வொரு பஸ்ஸிலும் ஒரு கோட்டாவை வாங்கி வைத்திருந்தோம். அது வேலைக்கு ஆகவில்லை. சமயங்களில் அது கடைசி சீட்டாக இருந்தது, நாங்கள் வாங்கி வைத்திருக்கும் கோட்டாவை விட வாடிக்கையாளர்களுக்கு அதிக டிக்கெட் தேவைப்பட்டது, உள்ளிட்ட சில பிரச்னைகள் ஏற்பட்டது.



இந்த பிரச்னைகளைக் களைய பஸ் ஆப்பரேட்டர்களுக்கு இலவச சாப்ட்வேர் வழங்குவதன் மூலம், அனைத்து டிக்கெட்களையும் ஆன்லைன் செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அதிலும் சிக்கல். இலவசமாக கொடுத்ததும் 4 ஆப்பரேட்டர்களை மட்டும் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது.



அவர்களின் பயம், இலவசமாக கொடுக்கும் போது எங்களிடம் எதுவும் கேட்க முடியாது. சாப்ட்வேர் வைத்து பிஸினஸ் செய்து, பிறகு எதாவது பிரச்னை வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டும் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அந்த சாப்ட்வேருக்கு விலை வைத்தோம். 40 ஆப்பரேட்டர்களை எங்களுடன் இணைத்தோம்.


ஆன்லைன் பிஸினஸுக்கு விளம்பரம் முக்கியமே?



ஆமாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான், எங்களுடைய யுக்தியை மாற்றினோம். அதுவரைக்கும் வாடிக்கையாளர்கள் மூலமாகதான் பிஸினஸ் நடந்து வந்தது. இன்னும் சில மாதங்களில் மார்க்கெட்டிங்குக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம்.



உங்களுடைய நிறுவனத்துக்கு ஏன் வெளிநாட்டில் பணம் திரட்டினீர்கள்?


இந்தியாவில் திரட்டக் கூடாது என்பது அல்ல. நான் அமெரிக்காவில் சில ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறேன். கார்த்தி 10 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார். அதனால் அங்கிருக்கும் தொடர்புகளை வைத்து வெளி நாட்டில் முதலீட்டை திரட்டினோம்.


வென்ச்சர் கேப்பி ட்டல் முதலீட்டை திரட்டும் போது அவர்கள் வெளியேற ஐ.பி.ஓ. வந்தாக வேண்டுமே?



ஆமாம். அவர்கள் வெளியேற வாய்ப்பு கொடுத்துதானே ஆகவேண்டும். மேலும், ஐ.பி.ஓ. வரும் போது கம்பெனியின் நிதி நிலைமையும் பலமாகும். இன்னும் சில நிறுவனங்களை இணைக்கலாம். மேலும் வளரும் நாடுகளில் இதற்கான மார்க்கெட் இப்போது அதிகரித்து வருகிறது,



break even ஆகிவிட்டீர்களா?


இன்னும் ஆகவில்லை.இன்னும் இரண்டு வருடத்துக்கு break even செய்யும் எண்ணம் இல்லை. ஆனால் அது பிரச்னையே இல்லை. வளர்ச்சியைக் குறைத்தால் break even ஆகலாம். ஆனால் இப்போது வளரும் பாதையில் இருக்கிறோம்.


ஆன்லைன் பிஸினஸ் என்பது கடல், எதாவது diversification செய்யும் எண்ணம் இருக்கிறதா?


diversification நல்லதுதான். ஆனால் பிஸினஸில் வளர்ச்சி முடிந்துவிட்ட போது அதை செய்வதுதான் நல்லது. இப்போதைக்கு இந்தியாவின் சொகுசு பேருந்தின் சந்தை மதிப்பு 20,000 கோடி ரூபாய். இதில் ஆன்லைன் மார்கெட் ரூ. 2,000 கோடிதான், இதில் எங்களின் பங்கு ரூ. 52 கோடி(கடந்த நிதி ஆண்டு) மட்டுமே. இதிலேயே வளர்வதற்கு வாய்ப்பு இருக்கும் போது இப்போதை diversification திட்டம் ஏதும் இல்லை.


மீண்டும் பிஸினஸ் செய்வதற்கான மன உறுதி எங்கிருந்து வந்தது?



பிஸினஸ் செய்ய வேண்டும் என்பதுதான் எப்போதுமே மனதில் இருந்தது. இடையில் கடனை அடைக்கத்தான் வேலைக்கு போனேனே தவிர, நிரந்தரமாக இருக்க அல்ல. மேலும் நிம்மதியான சூழ்நிலையை விட, சவாலான சூழ்நிலையில்தான் என்னுடைய முழுதிறமையும் என்னால் வெளி ப்படுத்த முடியும். அதற்கு பிஸினஸ்தான் ஒரே வழி.


thanx - the hindu