Friday, November 01, 2013

KRISH 3 -சினிமா விமர்சனம்

 

ஹீரோ  ஒரு சூப்பர்  மேன்.அநியாயம் எங்கே நடந்தாலும் பறந்து போய் அதைதட்டிக்கேட்பவர் .ஹீரோவோட அப்பா  ஒரு சயிண்டிஸ்ட். சூரிய ஒளிக்கதிர்களை வெச்சு ஆராய்ச்சி பண்ணி புதுசா  1 கண்டு பிடிக்கறாரு. இறந்து போன  மனித உடல் ல அல்லது தாவர, விலங்கு உடல் ல  சூரிய ஒளியை  குறிப்பிட்ட விகிதத்துல  செலுத்தினா  இறந்த உடல் உயிர் பெறும் .இந்த அபாரமான கண்டு பிடிப்பை அவர் உலகத்துக்கு டெமோ பண்ணி காட்டி  நிரூபிக்கிறார்.

வில்லன் கழுத்துக்கு கீழே மன்மோகன் சிங்க் ,அதாவது செயல்படாதவர் .ஆனா கழுத்துக்கு மேல ஜெ மாதிரி, அபாரமான  அறிவு.ஆளுமைத்திறன்.அவர் லட்சியமே தன் செயல் இழந்த உடல் உறுப்புகளை எப்படி  இயங்க வைப்பது ?என்பது பற்றித்தான். 

 அது போக அவர் உலகம் பூரா மனித உடல் ல வைரஸ் மூலமா நோயைப்பரப்பி  மனித இனத்தைஅழிக்கனும் , புதிய உயிர் இனங்களை உருவாக்கனும்னு நினைக்கறார். வைரஸ் நோயை மனிதனிடம் பரப்பனும் , பின் அந்த  நோயை குணம் ஆக்க ஆண்ட்டி பயோடிக் மருந்தை விற்பனை செய்யனும் . இந்த உயர்ந்த லட்சியத்தோட  வில்லன் ஆராய்ச்சியளர்களை வெச்சு  வேலை வாங்கிட்டு இருக்கார் 


தன் திட்டப்படிஉலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள சீனாவை விட்டுட்டு இந்தியாவில்  மும்பையில்  வைரஸ் பரப்பறார். .மும்பை மக்கள் எல்லாருக்கும்  நோய் பரவுது . ஆனா  ஹீரோ , அவங்கப்பா வுக்கு மட்டும் பரவலை 





 உடனே ஹீரோவோட  அப்பா  தன் ரத்தத்துல  ஏதோ சக்தி இருக்கு, அந்த ரத்தம் மூலமா மருந்து கண்டு பிடிக்கனும்னு  ஆராய்ச்சி பண்ணி மருந்து கண்டு பிடிச்சு  எல்லாரையும் குணம் ஆக்கிடறார். 


 வில்லன் செம காண்ட் ஆகிடறான். இது எப்படி நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க தன் கிட்டே இருக்கும் ஒரு லேடியை  அனுப்பறான் 


புராண கதைல  சூர்ப்பனகை கேள்விப்பட்டிருப்பீங்க. தன் விருப்பப்படி தோற்றம் எடுக்கும் சக்தி உள்ள பெண் . அந்த மாதிரி சக்தி உள்ள  பெண் ஹீரோ இடத்துக்குப்போய்   அங்கே   மாசமா  இருக்கும் ஹீரோவோட மனைவியை வில்லன் ப்ளேஸ்க்கு அனுப்பி ஹீரோ மனைவி மாதிரி ஆள் மாறாட்டம்  பண்ணி அங்கே  இருக்கறா.


ராவணன்  ராமர் உருவம் எடுத்து சீதையைஅடைய நினைக்கும்போது  ராமன் குணம் ராவணனுக்கும் வந்த மாதிரி வில்லிக்கு ஹீரோ மேல ஏற்பட்ட காதலாலோ அல்லது  ஈர்ப்பினாலோ  வில்லனுக்கு சாதகமா எதுவும்  செய்யலை 


ஹீரோ  தன் மனைவி  மாறிடுச்சுன்னு கண்டு பிடிச்சாரா? ஹீரோவும் , வில்லனும் அண்ணன்  தம்பி தான் என்ற சஸ்பென்ஸை தெரிஞ்சு  ஹீரோ என்ன செஞ்சார் ? வில்லன்  தன்  தன் தம்பி சம்சாரத்தை  தன் இடத்தில் வெச்சிருந்தும் எதுவும் செய்யாம  ஏன் சும்மா இருந்தார் ? என்பதை எல்லாம் வெண் திரையில் காண்க.. 


ஹிருத்திக் ரோஷன் தான்  ஹீரோ . டபுள் ஆக்டிங்க் . கமல் தான் இவருக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கனும் . பாடி லேங்குவேஜ் , குரல் எல்லாத்துலயும் நல்ல வித்தியாசம் காட்டி நடிச்சிருக்கார் . ஹிந்திப்படம் அதிகம் பார்க்காதவர் படம் பார்த்தால்   அப்பா, மகன் இருவரும் வேறு  வேறு ஆள் என்று நினைப்பாங்க . வெரிகுட் நடிப்பு .ஆனா  அவர்  ஒரு பாடல் காட்சியில்  குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு லோ லோ ஹிப் ஜீன்சில் டாப்லெஸ்சாக வருவதெல்லாம்  ஓவரோ ஓவர் . அதுக்கு டீன் ஏஜ் பொண்ணுங்க  விசில் வேற 


ப்ரியங்கா சோப்ரா தான் நாயகி . நாயகனுக்கு மனைவியா வர்றார். பிரமாதமான நடிப்பு என அள்ளிக்கவும்  முடியாது, மோசமான நடிப்பு என தள்ளிவிடவும்  முடியாது . வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் இவர் பெரிதாக கிளாமர் காட்டாமலேயே  கண்ணியம் காட்டியது ஆச்சரியம் . 


ஒல்லி நல்ல வில்லியாக  கங்கனாரண்வத். இவர் படம்  முழுக்க புறமுதுகு முழுவதும் காட்டிய இளவரசியாக வலம் வருகிறார். செம கிளாமர் நடிப்பு . இவருக்கு மேலாடை வடிவமைத்தவர் கஞ்ச மகாப்ரபுவாக இருந்தது ரசிக மகா கார்த்திகளுக்கு அதிர்ஷ்டம் . ப்ளச்  ப்ளச்





வில்லனாக  விவேக்  ஓபராய். எக்ஸ் மேன் படங்களில் வருவது போல் இவர் படம் முழுக்க வீல் சேரிலேயே வந்தாலும்  கடைசி அரை மணி நேரம் பட்டாசு கிளப்பி விடுகிறார்.


பாடல் காட்சிகள் பிரமாதம் என்று சொல்லும் அளவு இல்லை . கிராஃபிக் காட்சிகள் கன கச்சிதம் . ட்ரெய்லரில் மிரட்டிய அளவு   படத்தில் மிரட்டவில்லை . 



பின்னணி இசையில் பாலிவுட்காரர்கள் தமிழர்களிடம் கத்துக்க நிறைய இருக்கு .ஹீரோ எண்ட்ரி , பில்டப் காட்சிகளுக்கு பிஜிஎம் எப்படி இருக்கனும் என்பதற்கு இலக்கணம் வகுக்கும் யுவன் சங்கர் ராஜாவின்  பில்லா ,மங்காத்தா ,பிஜிஎம் எல்லாம் கேட்கனும் .அதே போல் பின்னணி இசையிலும் இளையராஜாவின்  100 வது நாள் , ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களை எல்லாம் பார்க்கனும் 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.   ஹாலிவுட்டின்  சூப்பர் ஹிட் படங்களான  டெர்மினேட்டர் 1, 2 , ஸ்பீசஸ் ,1,2,3 , எம் ஐ 2 , , I AM LEGEND, RESIDENT EVIL, THE TUXEDO, WORLD WAR Z, Contagion  என மானாவாரியாக படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு நேர்த்தியாக அட்டாச் செய்தது


2 . வில்லன் கேரக்டரை ஏழாம் அறிவு  வில்லன் போல் வடிவமைத்தது 



3. கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ  கங்கனாரனவத்க்கு வலியனாஒரு பாடல் காட்சி புகுத்தியது. கிளாமர் காட்ட வைத்தது 


4 ஓப்பனிங்க் சீனில் ஃபிளைட்டில் பயணிக்கும் அனைவர்  உயிரையும் காப்பாற்ரும் ஹீரோ பில்டப் சீன் 


5. அட்டகாசமான ட்ரெய்லர்  ரெடி செய்தது . அந்த ட்ரெய்லர் பார்த்தால் கதையை யூகிக்க முடியாத படியும் , பார்க்கத்தூண்டும் விதத்திலும்   இருக்கும் 


6 ஹீரோ - வில்லனின் அடியாள் முதல் ஃபைட் , வில்லன் - ஹீரோ க்லைமாக்ஸ் ஃபைட் சீன் ஸ்டண்ட் ,மாஸ்டர் உழைப்பு அருமை 




த டாம்ப் ரைடர் ஏஞ்சலீனா ஜூலிதான் கங்கணாரனவத் கேரடக்ருக்கு இன்ஸ்பிரேசன் போல 


இயக்குநரிடம்  சில  கேள்விகள் 





1. ஐஸ்க்ரீம் கடையில்  ஒவ்வொரு கப்பாக , கோன் ஐஸாக வில்லனனின் விநோத ஜந்து லபக்கும் காட்சி படு அபத்தம் . அத்தனை சக்தி உள்ள விநோத ஜந்து ஏன் பிச்சைக்காரத்தனமாய் கோன் ஐசை பிடுங்கி சாப்பிடனும் . ஐஸ்க்ரீம் கடையில் புகுந்து பல்க்கா அடிச்சு சாப்பிடலாமே? 


2 ஹீரோ , ஹீரோயின் 2 பேரும் புருஷன் , பொண்டாட்டி . சந்தோஷமா  தனிக்குடித்தனம்  நடத்திட்டு இருக்காங்க   . ஏன் தனித்தனி   ரூம் ல இருக்காங்க . ஒரு சீன் ல  மனைவி  ஒரு ரூம் ல இருந்து வருது . இவர் ஒரு ரூம் ல இருந்து வர்றாரு . 2 பேரும்  குட்மார்னிங்க் சொல்லிக்கறாங்க .. மும்பைல எல்லாம்  தம்பதிகள் தனித்தனி  ரூம் ல தான் இருப்பாங்களோ ( அவங்களுக்கு குழந்தையும் இல்லை ) 


3 மனைவி ஆள் மாறாட்டம் ஆகிடுது. ஹீரோவுக்கு டவுட் .அதை ஈசியா க்ளியர் பண்ணி இருக்கலாமே?  ஆள் மாறாட்டம் செஞ்ச லேடி  மனிதப்பிறவி அல்ல . கில்மாவுக்கு  கூப்பிட்டா மேட்டர்தெரிஞ்சுடும் . இதுல 2 பிளஸ் இருக்கு . மனைவியா ? இல்லையா? அப்டிங்கற மேட்டரும்  தெரிஞ்சுடும் ,



4  ஹீரோவின் அப்பா எதுக்கு ஒரு லாங்க் லெக்சர் அடிச்சுட்டு அவரா வான் உலகம் கிளம்பறார்?





5  பட விளம்பரங்கள் ல  ஹிருத்திக் 3 வேடங்களில் நடிக்கும் படம்னு பில்டப் குடுத்து ஏன் ரசிகர்களை ஏமாற்றனும் ?  2 வேடம்  தான் . க்ளைமாக்சில் ஒரேஒரு சீனில்  4 செகண்ட் 3 வது ஆள் காட்டறாங்க  


6  வில்லன்  ஹீரோ வீட்டுக்கு வில்லியைஅனுப்பி அப்டியே அவ்ளை அம்போன்னு விட்டுடறானே? அவ என்ன பண்றா? என்பதை அப்டேட்டா தெரிஞ்சுக்க ,மாட்டானா? அவ்ளவ் தத்தியா? 



7  வில்லன்  அவ்ளவ் சக்தி உள்ளவன் . எதுக்கு வைரஸ் மூலம்  நோய் பரப்பி  மருந்து வித்து சம்பாதிச்சு  இப்டி  சுத்தி வளைக்கனும்?  நேரடியா தன் சக்தியை பயன் படுத்தி  ஒரு பேங்க்கை கொள்ளை அடிச்சா போதுமே? 


8 . வில்லன்  தன் அப்பா கிட்டே பேசிட்டு  இருக்கும்போது  “ சபாஷ் பாஸ் “ அப்டினு பாராடும் சயிண்டிஸ்ட் 2 பேரை எதுக்கு சம்பந்தம் இல்லாம  ஷீட் பண்ணி கொலை பண்றான் ? அவன் லூசா? இல்லை எதுக்கு சம்பளம் எல்லாம் கொடுக்கனும்னு முடிச்சுட்டீங்களா?

 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. இயற்கை ல ஏகப்பட்ட மேஜிக்கல் காம்பினேசன்ஸ் இருக்கு.அது நமக்குத்தெரியறதில்லை



2. கண்ணீர் இருக்கும் இடத்தில் யார் புன்னகையை வர வைக்கறாங்களோ அவன் தான் கடவுள்


3 இந்த உலகத்துல கெட்டவங்களை விட நல்லவங்க தான் அதிகம் . நிஜமா ? அப்டி இருக்க பிரார்த்திக்கிறேன் 


4 நீ என்னை ராங்கா  புரிஞ்சிட்டு இருக்கே? ரைட்? 

 ஹைட் . அவன் ஹைட் என்ன?  உன் ஹைட் என்ன? அதை வெச்சுதான் கண்டு பிடிச்சேன் 



5 வில்லன் - மனுஷங்களோட தைரியம்  குறையக்குறைய நம்ம பிராஃபிட் ஏறிக்கிட்டே இருக்கு 



6. நான்  உன் கிட்டே இருந்து தான் கத்துக்கிட்டேன் , கைகள் சின்னதா  இருந்தாலும் தைரியம் பெருசா இருக்கும் 


7 தன்  கிட்டே உள்ள பலத்தை வெச்சு அடுத்தவங்களுக்கு உதவி பண்றவன் தான் க்ருஷ் 


8 டியர் , நீ என் பக்கத்துல தான்  இருக்கே, ஆனா என் கூட இ;ல்லை 


9  வில்லன் -பிறந்தவன்  தான் இறப்பான் , ஆனா  நான்  தான் பிறக்கவே  இல்லையே?


10 தீய சக்தி  வலிமையானதுதான் , ஆனா அதுக்கு அழிவு காலம் நல்ல சக்தியாலதான் வரும்


 




சி பி கமெண்ட்-முன் பாதி சுமார் ,பின் பாதி வேகம் .பல ஹாலிவுட்டின் காக்டெய்ல் - பாலிவுட்டில் செம ஹிட் ஆகிடும் . பெண்கள் , குழந்தைகள் பார்க்கும் விதமாத்தான் இருக்கு . ஃபேண்ட்டசி , மேஜிக் ரியலிசம் வகையறாப்படங்கள் ரசிப்பவர்கள் பார்க்கலாம் . சரியா 2 1/2 மணி நேரம் ஓடுது. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா வில் படம் பார்த்தேன்



ரேட்டிங் -  2.75 / 5

Thursday, October 31, 2013

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அஜித் ஒரு போலீஸ் ஆஃபீசர் கம் பாம் ஸ்க்வாடு ஆஃபீசர். அவரோட நண்பர் ராணாவும் . அவரும்  தீவிரவாதிகளைத்தாக்கும்  ஒரு ஆபரேஷன்ல துப்பாக்கிக்குண்டு பட்டு ராணா செத்துடறாரு . புல்லட் ப்ரூஃப்  ஜாக்கெட் போட்டும் எப்படி குண்டு பாய்ஞ்சுது ?அப்டினு அஜித் மேலிடத்துல கேள்வி கேட்கறாரு .

 பொதுவா மேலிடம் , மேடம் இவங்களுக்கெல்லாம் கேள்வி மேல  கேள்வி கேட்டாலே பிடிக்காதே .அதனால அஜித் ஃபேமிலியை கார்னர் பண்றாங்க . புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தயாரிப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கு . அதில் கமிஷனர் , மினிஸ்டர் எல்லாருக்கும் தொடர்பு இருக்கு . 

தன் நண்பனின் சாவுக்குக்காரணமானவங்களை அஜித் எப்படி பழி வாங்கறார்? அந்த  ஊழல் பணத்தை எல்லாம் இந்தியன் தாத்தா , சிவாஜி மாதிரி எப்படி ரிட்டர்ன் எடுக்கறார் என்பதே திரைக்கதை . 


ஸ்வார்டு ஃபிஷ் என்ற ஆங்கிலப்படத்தின் தாக்கம் ஆங்காங்கே  தெரியுது . அது சாதா ரசிகனுக்குத்தெரியாம இருக்க ரொம்பவே மெனக்கெட்டு சுத்தி வளைச்சு கதை சொல்லி இருக்காங்க . 

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் கலக்கல் . அவர் படத்தில் பேசும் காட்சிகள் குறைவு , ஆனால் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் . மேக் இட் சிம்ப்பிள் என்பது இந்தப்படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனம் . கோட் சூட் கூலிங்க் கிளாஸ் போட்டு படம் பூரா நடக்கிறார் என்ற புகார்கள் தலை தூக்காமல் இருக்க இந்தப்படத்தில் அவர் ஜீன்ஸ் பேண்ட் - டி சர்ட்டில் தான் படம் முழுக்க வர்றார் . ஃபைட்  சீனில் ஒரு ரிஸ்க் ஜம்ப் , காரில் தொங்கி சண்டை இடும் காட்சி என 2 இடங்களில்  ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சக நடிகர்களுக்கு சமமாக சான்ஸ் கொடுக்கும் பண்பு அஜித்திடம் இய்லபாகவே உண்டு.


ஆர்யா , படத்தின் முன் பாதிக்கு இவர் தான் ஹீரோவா என கேட்கும் அள்வு  படம் முழுக்க வியாபிக்கிறார். டாப்ஸியிடம் லவ்வுவது , லவ் பிரபோசிங்க்  சீன் எல்லாம் இளமை ஏரியா . அவர் பாய்ஸ்  குண்டுப்பையன் மாதிரி கெட்டப் சேஞ்ச் செய்தது எல்லாம்  பெரிதாக எடுபடவில்லை .முன் பாதியில் அவர் அஜித்தை வில்லன் ஆக நினைத்து நீ வா போ என ஒருமையில் பேசியவர்  பின் பாதியில்  ஜீ  என அழைப்பது அக்மார்க் ரஜினி ஃபார்முலா .


நயன் தாரா அஜித்துக்கு ஜோடி இல்லை , ஆனால் தோழி மாதிரி . டூயட் வாய்ப்பு இல்லை . நயன் தாரா ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக வலியனா திணிக்கப்பட்ட  ஒரு கவர்ச்சிக்காட்சி உண்டு . அது இல்லாமலேயே நயன் கிக்காகத்தான் இருக்கிறார் .


டாப்சி  இளமைத்துள்ளல் . ஆர்யா காதலை வெளிப்படுத்தும்போது யோசிப்பவர்  பின் இயல்பாய் மனதில் காதல் மலரும்போது ஆஹா போட வைக்கிறார் .


போலீஸ் ஆஃபீசர்களாக  கிஷோர் , அதுல் குல்கர்னி  என திறமைசாலிகள் ஆங்காங்கே அட்டெண்டென்ஸ் போடுகிறார்கள்



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் ஜீவநாடிக்காட்சியே அந்த  ஊழல் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் பேங்க் சீன் தான் கலக்கலான ஐடியா . படமாக்கம் , எடிட்டிங்க் , நடிப்பு , இயக்கம் , பி ஜி எம் எல்லாம் கன கச்சிதம் ,. நீண்ட நாட்களுக்கு டாப் சீன்களில் இடம் பிடிக்கும்



2. அஜித்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஆரம்பத்தில் அதாவது படத்தின் ஆரம்பத்தில் ஆர்யாவை முன்னிறுத்தி காட்சிகளை அமைத்தது 


3. படம்  முழுக்கவே ஸ்டைலிஷான அஜித் , மேக்கிங்க் எல்லாம் பக்கா . ஒளிப்பதிவு , லொக்கேஷன்  செலக்சன் எல்லாம் பக்கா 

4 ஃபோனில் டாப்சி ஐ லவ் யூ என வெவேறு மாடுலேஷனில் சொலவ்து அபாரம் 






இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  இந்த மாதிரி ஆக்சன் படத்துக்கு ஹீரோ அறிமுகக்காட்சி ஹீரோ ஓடி வருவது மாதிரி இருக்கனும் , பாட்டு சீனாக இருக்கக்கூடாது . வெற்றி விழா கமல் ஓப்பனிங்க் சீன் நல்ல உதாரணம் அதே போல் ஓப்பனிங்க் சாங்க்  பெரிதாக எடுபடவில்லை .


2. ஹீரோ அஜித் ஒரு பேரத்துக்காக ஆள் மாறாட்டம் செய்கிறார். அந்த ஆளை வில்லன் ஆள்  ஃபோட்டோவில் கூட பார்த்திருக்க மாட்டாரா? இப்பவெல்லாம் நவீன யுகம் , எம் எம் எஸ் ஸில் செல் மூலம் ஃபோட்டோவை அனுப்பிக்கலாமே? 


3. நயன் தாரா  ஒருவனை துப்பாக்கி முனையில் மிரட்டி படுக்கையில் அவன் மீது உட்கார்ந்து இருக்கும்போது அஜித் அவன் ரூமில் ஆள் மாறாட்டம் செய்யும் காட்சியில் எதுக்கு அவ்வளவு ரிஸ்க்? அவன் தலையில் ஒண்ணு போட்டு மயக்கம் அடையச்செய்து இருக்கலாமே? ஒரு ஆக்சன் ஹீரோ இருக்கும்போது நாயகியின் கிளாமரைகாட்டித்தான் ஆளை மயக்கி ஏமாற்றனும் என்பது ஹீரோவுக்கும் பங்கம் தானே? 


4. டி வி  ரிமோட் எல்லாரும்  யூஸ் பண்ணுவொம் . ஒரு மினிஸ்டருக்கு ரிமோட்டை எப்படிப் பிடிப்பது என்று கூடவா  தெரியாது ? சிவப்பு பட்டன் இருப்பது  டி வி திரையை நோக்கி இருக்கனும் என்பது சின்னக்குழந்தைக்குக்கூடத்தெரியுமே?  


5 அஜித்தின் ஃபிளாஸ்பேக் காட்சியில் ஆல்ரெடி பார்த்துப்பழ்கிப்போன கேப்டன் , சர்த்குமார் படங்களின் வாசனை .அதையும் , ஆர்யா டாப்ஸி  காட்சிகளையும் கொஞ்சம் ட்ரிம் பண்ணி இருக்கலாம் 




மனம் கவர்ந்த வசனங்கள்


1. இடைவேளை பஞ்ச் = ஆர்யா - உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இது தான் முடிவு. 


அஜித் - ஹா ஹா .இனி தான் ஆட்டம் ஆரம்பம்


2 இது யாரு ? இன்னொரு ஹேக்கரா?


உனக்கு போர் அடிக்குமேன்னு துணைக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வந்திருக்கேன்



3 மேலே இடித்த நயன் - ஸாரி


இடி பட்ட ஆள் - ப்ளஷர் ஈஸ் மைன்


4 ஆ-ன்னா ஊ-ன்னா கன்னைத்தூக்கிடற்யே

இது மூளை சம்பந்தப்பட்ட விஷயம்


5 உனக்கும் அந்த தீவிரவாதிக்கும் என்ன வித்தியாசம் ?

அப்போ ப்ளூ சர்ட் , இப்போ பிரவுன்


6 நான் எதுக்கு பயப்படனும் ? என்னை விட என் உயிரைப்பத்தி கவலைப்பட நீ இருக்கும்போது

7 டைவர்ஸ் கேட்குறாடா


சூப்பர் ஆஃபர் , மிஸ் பண்ணிடாதே


8 நம்ம கல்யாண நாள் எப்போ? என் மேல அன்பு இருந்தா நினைவு இருக்கும்


இப்போதானே முடிஞ்சது ?

அதான் எப்போ? டேட் ?


9 சாவைப்பார்த்து நான் என்னைக்குமே பயந்ததில்லை , ஆனா அது எப்போ எப்படி வருதுங்கறதுதான் முக்கியம்


10 எதிரிங்க எத்தனை பேர் இருந்தாலும் சமாளிச்சடலாம், ஆனா துரோகி ஒருத்தன் இருந்தாலும் என்னால சகிச்சுக்க முடியாது


11 ஃபிங்கர் பிரிண்ட் ரொம்ப முக்கியம்


என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசில நாம கைநாட்டு தான்


12 நீ இங்கே என்ன பண்றே?

நிச்சயம் உனக்கு நல்லது பண்ண வர்லை





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 


1.டாப்சிக்கு ஆர்யா மேல் காதல் வந்ததும் முதுகில் தேவதைக்கான சிறகு முளைக்கும் காட்சி கவிதை


2. அஜித் ன் பாடிலேங்குவேஜில் தேர்ந்த வில்லனுக்கான எகத்தாளம்


3 SWORD FISH ன் உல்டா சீன் என சொல்லப்படும் டிக் டாக் டிக் டாக் மேனரிசம் ஆல்ரெடி வாலி யில் அஜித்தே செய்ததே


4 ஆர்யா டூ நயன் - இப்டி நம்ப வெச்சு ஏமாத்திட்டியே # சிம்பு இதைப்பாத்தா ;-))


5 வசனமே பேசாமல் ஒரு ஹீரோவை அப்ளாஷ் வாங்க வைப்பது எப்படி என்ற கலையில் விஷ்ணுவர்தன் பிஹெச்டி


6 ஆரம்பம் @ இடைவேளை. பார்த்த வரை படம் ok அஜித் ன் பஞ்ச் மேக் இட் சிம்ப்பிள் குட் டயலாக் டெலிவரி.ஆர்யாவுக்கு அஜித்தை விட காட்சிகள் அதிகம்




7 அஜித் க்கு காட்சிகள் கம்மி என்றாலும் வரும் காட்சிகள் எல்லாம் ஸ்டைலிஷ் தான்.


8 பில்லா ,மங்காத்தா வை விட BGM கலக்கல் இதில் குறைவு என்றாலும் குறை சொல்லும்படி மோசம் இல்லை


9 ஹீரோவை விட உயரமான ஆட்கள் காட்சியில் வரும்போது கேமரா கோணம் எப்படி வைக்கவேண்டும் என்பதை ஒளிப்பதிவாளர் கற்க வேண்டும்


10 நாயகன் கமல் கெட்டப்பில் அஜித் ஆடும் பாட்டுக்கு அப்ளாஸ் அள்ளுது.கலர்புல் கலக்கல்


11 த்ரிஷா ராணா விடம் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை. ஆகிருதியான ஆள்


12 விஷ்னுவர்தன் நம்ம கேப்டன் ரசிகர் போல.அஜித் ன் பிளாஸ்பேக்கில் பல கேப்டன் பட வாசனை


13 ரைட்டர் சுபா சார்.ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் நடிச்ச ஏய் பட கதையை அப்டியே பட்டி டிங்கரிங் பண்ணிட்டீங்க போல :-(((




சி பி கமெண்ட் - ஆரம்பம் - முன் பாதி வேகம், பின்பாதி ஸ்லோ- பில்லா,மங்காத்தாவுக்கு ஒரு மாற்று கம்மி - விகடன் மார்க் - 42 , ரேட்டிங்க் -3 / 5 பெரம்பலூர் ராம் ல் படம் பார்த்தேன்



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-42


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3  / 5



ஆரம்பம் VS SWORDFISH - 50%


Kunaratnam Jegarupan SWORDFISH படத்துக்கும் இந்தப்படத்திற்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பல காட்சிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டுள்ளது. அதில் வந்த நிறைய கேரக்டர்கள் இதிலும் வருகிறது. அஜித் (John Travolta), ஆர்யா (Hugh Jackman) நயன்தாரா (Halle Berry) என்று நீள்கிறது. அதில் FBI வங்கியில் வைத்துள்ள SLUSH FUND என்றால், இந்தப்படத்தில் சுவிஸ் பேங்க் பணம். அந்தப்படத்தில் ஹேக்கரின் மகளை வைத்து பிளாக்மெயில் நடக்கும். இதில் காதலி. 

ஆனால் ஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். SWORDFISH படத்தை அணுவணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து.




சுவிஸ் பேங்க் அக்கவுண்ட்லிருந்து துபாயிலுள்ள அமைச்சர் மகளின் அக்கவுண்டுக்கு பணம் மாறிவிட,அதை ஆர்யாவும், அஜித்தும் ஹேக் செய்து தன் அக்கவுண்டுக்கு மாற்றும் அந்த பரபர பத்து நிமிடங்கள் அட்டகாசம்.



அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர் அச்சு அசல் எஸ்.எம். கிருஸ்ணா போலவே இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் இருந்த வேறொரு நாட்டின் அறிக்கையை தப்பாகப் படித்தும், தேசியக் கொடியை தலைகீழாக வைத்தும் பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.எம். கிருஸ்ணாவின் அதே சம்பவங்களை இதில் வேறு மாதிரி கலாய்த்திருக்கிறார்கள். பெங்களூரு மக்களுக்கு புரியாமல் இருந்தால் சரி..





மாநகரக் காவல் படத்தில் 'வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை' என்று கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட சுமா ரகுநாத், இதில் டிவி ஆங்கராகவும் பின்பு அமைச்சரின் வில்லன் குரூப்பிலும் வந்து செத்துப் போகிறார்.




a


thanx - fb




அடேய்.......... ;)))))))))))

ரசிகர்களின் விமர்சனம் அவ்வ்வ்வ்வ்வ்வ் வட போச்சே ...

Wednesday, October 30, 2013

ஆரம்பம் - திரைக்கதை - இலங்கை ரசிகர்கள் அப்டேட்படி -படம் பார்த்த ட்வீட்டர்களின் அப்டேட்

ஹீரோ அஜித்  ஒரு சி பி ஐ ஆஃபீசர் . அவர் நண்பர்  ராணா ( த்ரிஷாவின் உண்மைக்காதலர் ) வும் ஆஃபீசர் . ஒரு வெடிகுண்டு விபத்தில் ராணா இறந்துடறார். ராணாவின் சகோதரி தான் நயன் தாரா . ராணாவைக்கொலை செஞ்சது ஒரு மினிஸ்டர்.  அவர் தான் வில்லன் .  

ஆர்யா கம்யூட்டர் கில்லாடி .  ஹேக்கர். ஏ டி எம் பாஸ்வோர்டை திருடி பணம் லபக்கும் ஆள் . அவரோட லவ்வர் தான் டாப்ஸி . 

 வெடிகுண்டு விபத்தைப்பத்தி இன்வெஸ்டிகேட் பண்ண அஜித் ஆர்யா உதவியை நாடறாரு 

மினிஸ்டர்க்கு தீவிரவாதிகளோட கனெக்‌ஷன் இருக்கு . வில்லன் ஒரு டி வி சேனல் நடத்திட்டு இருக்கார் . அதுல அவருக்கு  செம லாஸ் . அவரால தீவிரவாதிங்க கேட்டதைத்தர முடியலை . ( வெப்பன் சப்ளை ) 

 அதனால  தீவிரவாதிங்க மினிஸ்டர் மகளைக்கடத்திடறாங்க .மினிஸ்டரை மிரட்டறாங்க  மினிஸ்டர் ஆர்யாவோட லவ்வர் டாப்சியை  கடத்தி்டறாரு . தன் மகளை  மீட்டுக்கொடுத்தா   டாப்சி உனக்கு கிடைப்பா அப்டினு கண்டிஷன் போடறாரு ,

 அஜித்  மினிஸ்டர் மகளை  காப்பாத்தறார் . ஆர்யா   தன் காதலி டாப்சியை மீட்டுடறாரு .

 மினிஸ்டர் தன் கிட்டே இருந்த கறுப்புப்பணத்தை எல்லாம் கவர்மெண்ட் கிட்டே ஒப்படைக்கறாரு 


இடைவேளை பஞ்ச் = ஆர்யா - உன்னை மாதிரி ஆளுங்களுக்கு இது தான் முடிவு. அஜித் - ஹா ஹா .இனி தான் ஆட்டம் ஆரம்பம்



கலவரம் வரலாம் என கர்நாடக அரசு ஆரம்பம் படத்தை தடை செய்தது - மாலை மலர்


படம் பார்த்த ட்விட்டர்களின் அப்டேட்


first half mangatha mathiriye sema mass second half useal indian thatha story but not bad at all




ippo varaikkum padam tappu pannala sema stylish thala


Now stylish thamilachi playing I'm crazy ya! Ennaa visuals



Super visuals in melale vedikudu song love it


There is Twist scene n beginning Excellent screenplay so far ...



Movie over First half Racy n Outstanding 2nd Half Full f Commercial Elements Good Social Message at d End overall Paisa vasool ...


ஆரம்பம் படம் 100% பக்கா என்டர்டெயின்மென்ட் ,,, செம ரகளை ,, படம் முழுக்க ஆர்ப்பாட்டம் ,, அஜீத் , ஆர்யா வின் அராஜகம் , அமரக்களம்