Thursday, October 24, 2013

PRASTHANAM (2010) - சினிமா விமர்சனம் ( தெலுங்கு)

 

 

இந்தக்கதைக்கும் தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞர் , மு க ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை , நீங்களா ஒரு கற்பனையை பண்ணிக்கிட்டா அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல

 ஒரு ஊர்ல  ஒரு எம் எல் ஏ. அவருக்கு 2 பசங்க .மூத்தவன்  நல்லவன் , அப்பாவுக்கு உதவியா அப்பா சொல் பேச்சு கேட்டு  அப்பா கிட்டே நல்ல பேர் எடுத்து அடக்கமான பையனா இருக்கான், ஆனா இளையவன் ஒரு டிரக் அடிக்ட் , உருப்படாதவன் , ரவுடி , அடிக்கடி கோபப்படுபவன். தன் மேல  அப்பாவோ , அக்காவோ பாசம் காட்டாம  தன்னை ஓரம் கட்டறாங்கன்னு இவனா மனசுக்குள்ள நினைச்சுக்கறான் . 

தன்னோட அரசியல் வாரிசா அப்பா மூத்த பையனை அறிவிச்சதும் இளைய பையன் கிட்டத்தட்ட சைக்கோ ஆகிடறான். தன் காதலியையே ரேப் பண்ணி மர்டர் பண்ணிடறான். போலீஸ் தேடுது .தனக்கு அடைக்கலம் கொடுக்கத்தயங்கும் சொந்த அக்கா , மாமா 2 பேரையும்  கொலை பண்ணிடறான்.

 

 

இந்த இக்கட்டான சூழல்ல எலக்‌ஷன் வருது . எம் எல் ஏவுக்கு கெட்ட பேரு . சொந்தப்பையனே ஒரு கிரிமினல் . அதுக்கப்புறம் என்ன ஆச்சு?ன்னு வெண் திரையில் காண்க . இந்தத்திரைக்கதைல 2 சஸ் பென்ஸ் ட்விஸ்ட்டும் இருக்கு 

எம் எல் ஏ வா சாய் குமார். ஓல்டு கெட்டப்பா இருந்தாலும் கோல்டு ஆக்டிங்க் . ஆந்திரா  தியெட்டர்களில் விசில் பறந்திருக்கும் .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் நடிப்பில் ஆஹா! 


முதல் பையனா எங்கேயும் எப்போதும் ஹீரோ சர்வானந்த். அசால்ட்டான நடிப்பு , எதுக்கும் அலட்டிக்கவே இல்லை, ஓவர் ஆக்ட்டிங்கும் இல்லை. வெரிகுட் . இந்த மாதிரி ஹீரோக்கள் தெலுங்கில் குறைவு.ரொமான்ஸ் காட்சிகளில் நல்லா சைன் பண்ணுபவர் இயக்குநர் விடாததால் தவிக்கிறார். 

2 வது பையனா யாருடா மகேஷ் ஹீரோ சந்தீப் , கிட்டத்தட்ட இவர் தான் ஹீரோ மாதிரி , அதாவது ஆண்ட்டி ஹீரோ . ஹீரோவை விட இவருக்கே காட்சிகள்  அதிகம் . இவர் முகம் பால்  மணம் மாறா பாலகன் மாதிரி இருப்பதால் தாடி எல்லாம் வெச்சு வில்லத்தனம் ட்ரை பண்ணி இருக்காரு , ஆனா எதிர்பார்த்த ரிசல்ட் வர்லை , ஆனாலும்  மோசம் இல்லை 

 ஹீரோயின்  ரூபி பரிகார். எந்தக்கோயில் ல போய்  பரிகாரம் பண்ணாலும் லட்டு ஃபிகர் ஆக வாய்ப்பே இல்லை . இவருக்கு ப்டத்தில் பெரிதா சீன்களும் இல்லை . 2 டூயட் தான் மிச்சம்.

இன்னொரு  ஹீரோயின் ரேஷ்மி  அவருக்கு இவர் எவ்வளவோ தேவலை . இவர் டிரக்ட் அடிக்ட்டை ஏன் லவ் பண்றார் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை 

 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 

 

1  ஆந்திராவில் தானே இருக்கோம், தமிழ் நாட்டு அரசியல் வாதிங்க வந்து கேட்கவா போறாங்க என்ற தைரியம் பாராட்டலாம்

 

2. மூன்று ஹீரோக்கள் படத்தில்  இருந்தாலும் காட்சிகளை சரி சமமாக பகிர்ந்தளிக்க முயன்றது 

 

3 படத்தில் திரைக்கதைப்படி ஒரு ரேப் சீன், பல காபரே டான்ஸ் சீன்கள் வருவதாக ஸ்க்ரிப்ட்டில் இருந்தாலும் காட்சி அமைப்பில் அப்படி வராமல் நாசூக்காக தவிர்த்தது , கண்ணியமான படமாக்கம் 

 

இயக்குநரிடம்  சில  கேள்விகள் 

 

1. போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு ரவுடி , அவன் கூட ஆரம்பத்துல  இருந்தே தகராறு பண்ற முஸ்லீம் பொண்ணு 2 பேருக்கும் எப்போ லவ் உண்டாச்சு , எப்படி அந்த சம்பவம் நடந்ததுன்னு காட்டவே இல்லையே? 

 

2 ஆண்ட்டி ஹீரோ வசதியான ஆளு , ஹீரோயின் அவங்க ஹோட்டல் ல மேனேஜரா இருக்கும் ஏழைப்பொண்ணு தான் . 2 பேரும் லவ்விங்க் . எதுக்காக காதலியை ரேப் பண்ணனும்? கொலை பண்ணனும் ? இதுக்கும் விள்க்கமே வைக்கலை .  


3  ஆண்ட்டி ஹீரோ தன் காதலியை ரேப் பண்ண தூக்க மாத்திரை  அல்லது வயாக்ரா மாதிரி மாத்திரை கொடுத்து கரெக்ட் பண்ணாம எதுக்காக ஆபத்துன்னு தெரிஞ்சும் ஓவர் டோஸ் டிரக் கொடுக்கறாரு ? 


4  கணவனா வரப்போகும் காதலன் தானே? அவன் கில்மாவுக்குக்கூப்பிடும்போது நாசூக்கா மறுக்கறது ஓக்கே , என்னமோ வில்லன் ரேஞ்ச்க்கு ஏன் போராடனும் ? மேட்டர் நடந்தாலும் பாதிப்பு இல்லையே? ஜீன் ஆதாரம் இருக்கு , பார்ட்டி பெரிய பார்ட்டி , லைஃப் ல செட்டில் ஆக சேஃப் தானே > ஏன் பார்ட்டி பம்முது ? 


5 ஹீரோ தன் அப்பா கூட காரில் போய்ட்டு இருக்கும்போது  கொலை மிரட்டல் கால் வருது . அப்போக்கூட கார் ஜன்னல் டோரை கூட க்ளோஸ் பண்ணாம அஜாக்கரதையாவா இருப்பாங்க ? ஒரு எம் எல் ஏ கார் அப்படித்தான் இருக்குமா? 


6  ஆல்ரெடி உயிருக்குப்போராடிட்டு இருக்கும் ஆளை சாய் குமார் கார்ல கூட்டிட்டு ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கார் . அவரை ஏன் கழுத்தை நெறிச்சு கொலை செய்யனும் , கார்ல ஸ்லோவா போனா போதும் , அல்லது ஹாஸ்பிடல்க்கு சுத்து வழில போனா போதும், ஆட்டோமேடிக்கா அவர் இறந்துடுவாரே? க்ளவுஸ் கூட போடாம எதுக்கு ரிஸ்க் எடுக்கறார்? 


7 அரசியல்னாலே ரவுடியிசம் தான் , அயோக்கியத்தனம் தான் . வில்லனா இருக்கும் சாய் குமார் ஏன்  தன் இளைய பையனை அப்படி வெறுக்கனும் ? வில்லனுக்கு வில்லன் தானிக்கு தீனி சரியாத்தானே இருக்கு ?



 மனம் கவர்ந்த வசனங்கள் 



1.  சிகரெட் பிடிக்கறதுக்கும் , மரியாதைக்கும் சயிண்ட்டிஃபிக்கா எந்த சம்பந்தமும் இல்லை. அதனால என்னைப்பார்த்ததும் சிகரெட்டை கீழே போடனும்னு அவசியம் இல்லை 

 

 

2  யோவ் கிழவன் மாதிரி ஓட்டாதே , யூத் மாதிரி ஓட்டு , காரை 

 

3  அவன் ஆலோசிச்சு எதையும் செய்வான் , நீ ஆவேசத்தோட செய்வே 

 

4 நான் பலர் வாழ்க்கையை கெடுத்தவன் , நீ என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே ? 

 

5  பசியோட பாலிடிக்ஸ் பண்ண முடியாது , முதல்ல சாப்பிடுவோம்

 

6 இந்த உலகத்துல ஜெயிக்கிறது யாரு? தோக்கறது யாரு? னு முடிவு பண்றது ஒரே விஷயம் தான். அது உன் கேரக்டர் தான்

 

7 பொண்ணுங்களை மடக்க கண்ண தாசன் ல இருந்து கசாப்புக்கடைக்காரன் வரை  ஒரே மாதிரி தான் பேசறாங்க 

 

8 அரசியல் ல  விசுவாசமா இருக்கறவனை விட வில்லங்கமா இருக்கறவன் தான் ஜெயிப்பான் 

 

9 ஜெயிக்கறவனுக்கும் , தோக்கறவனுக்கும்  இடைல  இருக்கும் வித்தியாசம் நம்பிக்கை தான் 

 

10  எதிரிங்க எப்பவும் ஆப்போடதான் அலைவாங்கனு தெரியாதா? 

 

 

11  தலைவன் ஆகனும்னா வாரிசா இருந்தா போதாது ரத்தத்துலயே ஊறி இருக்கனும்

 

12   பெரிய கேடியா  இருந்தாலும் நியாய தர்மத்துக்குப்பிறந்தவன் மாதிருயே பேசறாரே? 

 

 சரக்கும் , சைடு டிஷ்சும் கம்மியா சாப்பிடறவர் போல 

 

13  சரிக்கட்ட முடியலைன்னா சமாதி கட்டு - இதுதான் என் பாலிசி 

 

14 சிம்ப்பதிலயே சீட்டிங்க் எம் எல் ஏ சீட்டைப்பிடிக்கலாம்னு நினைக்கறாரு 

 

15  பவர் வேணும்னா சாகறதுக்கும் , சாகடிக்கறதுக்கும் தயாரா இருக்கனும்    

 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 40 ( டப்பிங்க் படத்துக்கு விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே

ரேட்டிங் = 3  / 5


சி பி கமெண்ட்  - ஜீ டி வி ல போடும்போது பார்த்துக்கலாம்   தியேட்டர்ல போய்ப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . விருத்தாசலம்  ல படம் பார்த்தேன்






 

 

 

Director:

Writer:

(dialogue and story)

Stars:


Jeeva ...
Machi reddy
Sundeep Kishan ...
Chinna
Vennela Kishore ...
Goli
Sai Kumar ...
Loki
Pavithra Lokesh ...
Mother
Ruby Parihar ...
Heroine
Jaya Prakash Reddy ...
Bangaru Naidu
Reshmi ...
Nadia
Parihar Ruby ...
Heroine
Sharvanand ...
Hero
Surekha Vani ...
Sister

ஜிமிக்கி பாருங்க என அப்டேட்டும் பெண்கள் ஒட்டியாண அப்டேட்க்கு டிமிக்கி குடுப்பது ஏன்?

1. அன்பே! தினமும் காலை, மாலை, இரவில் சோம்பல் முறிப்பதைத்தவிர வேறு என்ன வெட்டி முறித்தாய்?



=====================


2 தியேட்டரில் கைதட்டாமல்,விசிலடிக்காமல் படம் பார்க்கும் நபர் அநேகமாக தன் (கள்ளக்)காதலியுடன் வந்திருப்பார்


======================

3 அயோக்கியர்கள் எல்லாம் தங்கள் பிறந்த நாளில் மட்டும் யோக்கியரா நடந்துக்குவாங்களாம்.அப்போ யோக்கியன் என்ன செய்யனும் ?



=====================


4  ஆரம்பம் ,ஆஇஆஅராஜா 2 ம் சென்சார்ல U . பாண்டிய நாடு U /A # படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க யூ வாங்குன படத்துல தான் ஏ சீன் இருக்கும்



=====================


5 ஆரம்பம் - டாப்சி ஆர்யா லிப் டூ லிப் கிஸ் சீன் இருக்கு. ஆஇஆஅராஜா - சந்தானம் பெண் வேடத்தில் டபுள் மீனிங் இருக்கு


=======================


6 என் படம் தான் அதிக நேரம் ஓடுது.அப்போ என் படம் தானே பெருசு?



கண்ணா! அதிக நேரம் ஓடறது எது?ங்கறது முக்கியம் இல்லை.அதிக நாள் எது ஓடுது? அதான்



=======================


7 U / A = பால்கனில இருந்து பார்த்தா சரியா தெரியாது. கீழே வந்து பெஞ்ச் டிக்கெட் ல பார்த்தா தெரியும்



======================


8 நய்யாண்டி - சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது .ஆஇஆஅராஜா - சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது # நீதி - நய்யாண்டி = ஆஇஆஅரா


===============


9 ஸ்லோ அன்ட் ஸ்டெடி வின் த ரேஸ் @ ரன்னிங் ரேஸ் ,ஷார்ட் &,ஸ்வீட் வின் த பர்ஸ்ட் ப்ளேஸ் @ தீபாவளி சினிமா ரேஸ்


====================

10 தீபாவளி ரிலீஸ் என் கணிப்பு தர வரிசை 1 ஆரம்பம் 2 பாண்டிய நாடு 3 ஆல் இன் ஆல் அழகுராஜா # மார்க் மை வோர்ட்ஸ்



=======================


11தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனா என்ன?னு மிசஸ் ஜான் சொல்லிட முடியாது



=====================


12 பெண்களுக்கு ஆண்களை பிடிக்கிறது ஆனால் ரோஷம் உள்ள ஆண்களைப்் பிடிப்பதில்லை!"



======================


13 காலைல குளிச்சுட்டு சுத்தபத்தமாத்தான் ட்விட்டருக்குள்ளே வரனும்னா ஒரு பய 8 மணிக்கு முன் வர மாட்டாக



-============================


14 பெண்ணியம் பேசும் பெண்கள் பெரும்பாலும் 35+ ஆகவே இருக்கிறார்கள் # இனி பேசுவீங்க?



======================


15 கற்றது ஆங்கில அளவு ,கல்லாதது தமிழ் அளவு



======================


16 வை கோ ,அஜித் மட்டுமல்ல யாராக இருந்தாலும் நடப்பதெல்லாம் நன்மைக்கே



======================


17 பிந்து மாதவி யின் கவனத்திற்கு.சிவகார்த்திகேயன் மனைவிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.6 மாசம் அம்மா வீட்ல



=====================


18  தீபாவளிக்கு நாம நடிச்ச படம் தான் ரிலீஸ் பண்ணனும்னு இல்ல - சிவகார்த்திகேயன் மைன்ட் வாய்ஸ்



========================


19 படிக்கும் காலத்தில் உரு போடாதவன் ( மனப்பாடம் செய்யாதவன் ) இப்போ உருப்படாதவன் # நெட் டுரு போட்டவன் ன் டைரியிலிருந்து



======================



20 கொலுசைப்பாருங்க ,வளையலைப்பாருங்க ,மருதாணி பாருங்க ,ஜிமிக்கி பாருங்க என அப்டேட்டும் பெண்கள் ஒட்டியாண அப்டேட்க்கு டிமிக்கி குடுப்பது ஏன்?



===============================

Wednesday, October 23, 2013

ரகளபுரம் -சினிமா விமர்சனம்



நான் சின்னப்பையனா இருக்கும்போது துப்பறியும் சாம்பு அப்டினு படக்கதை படிச்ச நினைவு இருக்கு. அதுல ஹீரோ எது செஞ்சாலும் அவரையும் அறியாம அது மக்களுக்கு நல்லதாவோ , கெட்டவங்களுக்கு எதிராவோ அமைஞ்சு அவரை உலகமே கொண்டாடும் . அந்த மாதிரி ஏ கிளாஸ் கதையை , சம்பவங்களை  முடிஞ்சவரை  லோ கிளாஸா எடுத்து சி செண்ட்ட்ர் ஆடியன்சை கவர முயன்ற படம்  தான்  கருணாசின் சொந்தப்படமான ரகளை புரம்

ஹீரோ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் , பயந்த சுபாவம் .அப்பா அவருக்குன்னு விட்டுட்டுப்போனது கடன்  தான். ( எல்லா அப்பாக்களும் கலைஞர் மாதிரியே சொத்து சேர்த்து வெச்சுட்டு இருக்க முடியுமா? ) தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுவது மாதிரி , நயன் தாரா ஏதாவது விழாவுக்கு வரும்போது எதேச்சையாவோ , ஏதாவது ஒரு இச்சையாவோ சிம்புவும் அங்கே ஆஜர் ஆவது போல் மத்த போலீஸ் செய்யும் சாகசங்களால் ஹீரோவுக்கு நல்ல பேரு கிடைக்குது . 


சக போலீஸ் ஒருவரின் சதியால் ஹீரோவுக்கு பிளட் கேன்சர் இருப்பதா தவறான தகவல் ஹீரோவுக்கு தெரிய வருது . இதனால வாழ்க்கைல விரக்தி அடைஞ்ச அவரு தன் காதலி தன்னை வெறுக்கட்டும்னு வேணும்னே மத்த பொண்ணோட  சுத்துவது மாதிரி  டிராமா பண்றார் , போலீஸ் டியூட்டி ல வீரசாகசம் செய்யும்போது செத்தா ஏராளமான பணம் வரும் , அது தன் குடும்பத்துக்கு உபயோகமா  இருக்கும்னு  அவர் பண்ணும்  கோமாளிக்கூத்துக்கள் தான் மிச்ச மீதி திரைக்கதை .


தயாரிப்பாளர் கம் ஹீரோ கருணாஸ் .  எடுத்துக்கொண்ட  கதை அவருக்கு கனகச்சிதம் , ஆனா  திரைக்கதை  அமைக்கும்போது போதுமான சிரத்தை  இல்லை . இப்பவெல்லாம்   காமெடி டிராக் எழுதறவங்க  சிரிப்பு வர்ற மாதிரி எழுதறதே இல்லை , காமெடி நடிகர்கள் ஏதாவது  மொக்கை போட்டா மக்கள் சிரிச்சுடுவாங்கன்னு தப்பா கணக்கு போட்டுடறாங்க .


கருணாஸ் டூயட் எல்லாம் ஆடறார் ., முன்னணி  ஹீரோக்கள் மாதிரி போஸ்  கொடுக்கறார் , ஒரு லிப் கிஸ் வேற ( சென்சார் கட் )  ஒரு  நல்ல குத்தாட்டப்பாட்டுக்கு கேவலமான  டான்ஸ் மூவ்மெண்ட் தர்றார்  . ஹூம். லோ கிளாஸ் ஆடியன்ஸ் கிட்டே கிளாப்ஸ் வாங்கனும்னா லோ லெவல் ல இறங்கனும்னு இவங்களா நினைச்சுடறாங்க . 


ஹீரோயின்  புதுமுகம் அங்கனாராய் , நேட்டிவ் பெங்களூராம் , இனி அங்கனவே இருக்கவேண்டியதுதான் . சுமார் மூஞ்சி குமாரி .  மேக்கப் மட்டும் சுமாரைத்தாண்டி.. இப்பவெல்லாம் லட்டு ஃபிகருங்க போடற மேக்கப்பை விட அட்டு ஃபிகருங்க போடும் மேக்கப் தான்  தூக்கலா இருக்கு , அதுவே அவங்களைக்காட்டிக்கொடுத்துடுது. இந்த  35 மார்க்  ஃபிகருக்கு  இதெல்லாம்  ஓவர்.




கிளாமருக்காக  சஞ்சனாசிங்க் . இதுவும் தேறாத ஃபிகர் தான் . பொதுவா  தமிழனுக்கு  குதிரை மாதிரி வாட்டசாட்டமா  இருக்கும்  ஃபிகரை பிடிக்கும், ஆனா குதிரை மாதிரி நீள் வட்ட முகம்  பிடிக்காது . ( டேய் , ராஸ்கல் நீ பொண்ணா கட்டற?” ) 


 கோவை சரளா , சிங்கம் புலி காமெடி ஆங்காங்கே கலகலப்பூட்டுது . சிங்கம்புலியின்  டைமிங்க் சென்ஸ் , வாய்ஸ் மாடுலேஷன் அருமை . 

 மனோபாலா  தோற்றத்திலேயே சிரிப்பை வரவழைக்கும் நல்ல ஒரு காமெடி நடிகர்  அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் சைக்காலஜிக்கலாகப்பார்க்கும்போது  ஒரு காமெடி  ஹீரோ , ஹீரோவாக நடிக்கும்போது அதுவும் அவர் சொந்தப்படமாக  இருக்கும் பட்சத்தில்  தன்னைத்தவிர வேறு யாரும் காமெடி செஞ்சு பேர் வாங்கிடக்கூடாது  என  நினைப்பது இயல்பு , கருணாசும் அதற்கு விதி விலக்கல்ல 

  டெல்லி கணேஷ் , உமா பத்மனாபன்  எம் எஸ் பாஸ்கர்  உட்பட ஏராளமான நட்சத்திரப்பட்டாளங்கள் .


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுடுகாட்டு கானா செம கலக்கு கலக்குது . அதே போல் அடி தேவலோக ரதியே , சூடாமணி , ரகள புரம் என எல்லாப்பாட்டுக்களுமே  சராசரிக்கும் மேலே . 



2. படம் மொக்கைக்காமெடியாக  இருந்தாலும்  ரொம்ப  பொறுமையை சோதிக்காம  உட்கார்ந்து பார்க்கும் விதத்தில் திரைக்கதை அமைச்சது 


3 போஸ்டர்  டிசைனில் சிங்கம் 3 வருது  என பில்டப் கொடுத்தது . பாவம்  சூர்யா . 


4.  ஜெயிலில் இருந்து வெளியே வரும் லாரியில்  கைதிகள் இருப்பதாக  ஹீரோ அள்ளி விட  நிஜமாகவே அங்கே கைதிகள்  இருப்பதும்  அதைத்தொடர்ந்து  வரும் சேசிங்க் காட்சியும் . ஹீரோ எதேச்சையாக செய்யும் விஷயங்கள் எல்லாம் சாதனை ஆகும்  4 வெவ்வேறு சம்பவங்களின் நம்பகத்தன்மை 


5 லோ  கிளாஸ் ஆடியன்சின் கவனம் கவரும் ஷகீலா டான்ஸ்





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. ஒரு கான்ஸ்டபிள் ஏதோ ஒரு ரவுடியை பிடிச்சுக்கொடுத்தார் என உடனே அவருக்கு இன்ஸ்பெக்டராக பிரமோஷன்  கிடைப்பது எப்படி?  சட்டப்படி சப் இன்ஸ்பெக்டர் ஆன ;பின்  தானே  இன்ஸ்பெக்டர் ஆக முடியும் ? 


2. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக  இருப்பவருக்கு (ஒரு பேச்சுக்கு) இன்ஸ்பெக்டர் பதவி கிடைத்தால் அவர் அதுவரை பார்த்த ஸ்டேஷனில் வேலை பார்க்க முடியாது . வேறு ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்ஃபரோடுதான் பிரமோஷன் கிடைக்கும் 


3 ஹீரோ தன்  முத மாச  சம்பளம்னு அம்மா கிட்டே பணம் கொண்டு வந்து தரும்போது  ஹால் ல மாட்டி இருக்கும் டெய்லி ஷீட்  காலண்டர்ல 16ந்தேதி காட்டுதெ? மாசா மாசம் 28ந்தேதியே அரசு சம்பளம் பட்டுவாடா பண்ணிடுவாங்களே, இது தமிழக் அரசை அவமானப்படுத்துவது ஆகாதா? 

4  சப் இன்ஸ்பெக்டர் ஒரு கமிஷனர் முன் அடக்கமாக இருக்கனும்னா  அட்டென்ஷன் பொசிசனில் தான் நிற்பார் , இப்படி கை கட்டி நிக்க மாட்டார் . அவர் என்ன அரசியல்வாதியிடம் வேலை  பார்க்கும் அல்லக்கையா? 


5 இன்ஸ்பெக்டரின் சம்பளம் 30,000  என  ஒரு இடத்தில் வசனம் வருது . கைல வாங்குவதே அவ்வளவு என்பது மாதிரி , ஒரு இன்ஸ்பெக்டரின் டேக் ஹோம் சேலரி ரூ 24,500  தான் 


6  பிளட் கேன்சர் ஒரு தீராத வியாதி  என நம்பிக்கை வருவது போல் காட்சி அமைப்புகளும் , வசனங்களும் வருது  இது கண்டிக்கத்தக்க ஒன்று , படம் பார்க்கும் ஆடியன்சிடம் இது தவறான பயத்தைக்கொடுக்கக்கூடும் 





7 சாதாரணமா ஒரு வைரஸ் காய்ச்சல் வந்தாலே ரெண்டு , மூணு ஹாஸ்பிடல் ல செக் பண்ணி கன்ஃபர்ம்  பண்ணுபவன்  தமிழன் . பிளட் கேன்சர் என தெரிஞ்சா  ரீ செக்கப் ஏன் செய்யல ? 


8  போலீஸ் ஸ்டேஷன் ல சம்பந்தமே இல்லாம எம்   ஜி ஆர் படம் மாட்டப்பட்டு இருக்கே, எதுக்கு ? ஆட்சியாளர்களை குஷிப்படுத்தவா?  முன்னாள் முதல்வர்கள் என சால்ஜாப்பு சொன்னா அங்கே கலைஞர் ஃபோட்டோவும்  இருக்கனுமே? 


9 பணயக்கைதியா பப்ளிக் 15 பேரைப்பிடிச்சு மிரட்டும் ஒரு தீவிரவாதி  ஒரே ஒரு போலீஸ் ஆல்ட்டர்நேட்டிவ் பணயக்கைதியா வந்ததும் 15 பேரை எப்படி  விடுவிப்பான்? 


10 போலீஸ்  கான்ஸ்டபிளா வர்ற எல்லோரும் காக்கி பெல்ட் போட்டிருக்கும்போது  சிங்கம் புலி , கோவை சரளா மட்டும் ஏன் ப்ளூ பெல்ட் போட்டிருக்காங்க ? 


11  காமெடி என்ற பெயரில் பயந்தாங்கொள்ளி பயத்தில் பேண்ட்டோடு நெம்பர் ஒன் போவதை ஒரு டைம் காட்டலாம். 2 டைம் காட்டலாம் . 10 நிமிஷத்துக்கு ஒரு டைம் காட்டிட்டே இருக்க அது என்ன நமீதா  முதுகா? 


12 படம்  முழுக்க ஏகப்பட்ட டபுள் மினிங்க் டயலாக்குகள் , கேவலமான கேமரா கோணங்கள் இந்த லட்சணத்துல  இதுக்கு யூ சர்ட்டிஃபிகேட் வேற ,. நிஜமாவே சென்சார் ஆஃபீசர்ஸ்க்கு டபுள் மீனிங்க் டயலாக்ஸ்  புரியலையா? கை நீட்டிட்டாங்களா?  


13  குறிப்பிட்ட தீவிரவாதியைப்பிடிச்சா ரூ 10 லட்சம் பரிசுனு சொல்லப்படுது , ஆனா  ஹீரோ 20 லட்சம் கிடைச்சிடுச்சுன்னு டயலாக் ல சொல்றார் , பணத்தோட மதிப்பு  அவ்ளவ்  குறைஞ்சிடுச்சா? 


 

மனம் கவர்ந்த வசனங்கள் 


1.  செய் அல்லது செத்து மடி   சார் 


 என்னது மடிசாரா? 


2  அக்யூஸ்ட்டைப்பார்த்தாத்தான் லத்தியைத்தூக்கனும் , சும்மா சும்மா தூக்கிட்டே  இருந்தா நஞ்சுடும் ( நைந்து போய்டும் )


3 டியுட்டிக்குப்போன உன் புருஷன் வர்லை , ஊட்டிக்குப்போன என் பொண்டாட்டி வர்வே போறதில்லை , கடவுள் ஏதோ கால்குலேட் பண்ணித்தான் நம்மளை சேர்த்திருப்பாரோ ? 



4 சரியான வயசுல மேரேஜ் பண்ணலைன்னா பொண்ணுப்பார்க்க முடியாது , பொம்பளை தான் பார்க்கனும் 


5  பேர் என்ன ? 

 கல்யாணி ?

 உங்கப்பா  டாஸ்மாக்ல இருக்காரா? பீர் பேர் வெச்சிருக்காரு? 



6 பெரிய விஷயத்துக்கு ஆசைப்பட்டா  புதுசா பிளான் பண்ணி ஹார்டு ஒர்க் பண்ணனும் ]


7 நம்ம குத்து விளக்கை வெச்சு இவன்  குத்துவிளக்கை ஏத்திடுவான் போல இருக்கே? 


8  சாரி மேடம், என் கிட்டே சில்லறை இல்லை 


 இருந்தா மட்டும் தந்துடப்போறியா? 


9 நாம பண்ணப்போற இந்த ஆபரேஷனுக்கு நான்  கொ ஆபரேட் பண்றேன் , யூ டோண்ட் ஒர்ர்ரி 


10  நீங்க பைக்  சூப்பரா  ஓட்டறீங்க 


 நான் பழைய லாரியே நல்லா ஓட்டுவேன் 


வ்


11  காதலனா இருந்தா  அவ தொடவே விடமாட்டா, கணவனா  இருந்தா அவன் தொடவே மாட்டான், அநெகமா  இது கள்ளக்காதலாத்தான் இருக்கனும் 


12 . சாரி எனக்கு  ஹிந்தி தெரியாது 

 பாடி லேங்குவேஜ்க்கு எதுக்கு அந்த லேங்குவேஜ்? 


13  ஹூம் , நான் போகாத பொண்ணில்லை , வாங்காத புண்ணில்லை 


14 வாழப்போறவன் தான் பயப்படனும், சாகப்போறவன் சந்தோஷமா  இருக்கனும் 



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-37


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.25   / 5


சி பி கமெண்ட்  - டி வி ல போட்டா பார்க்கலாம் , தியேட்டர்ல போய்ப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . 10  ரூபா கொடுத்து பெஞ்ச் டிக்கெட் ல பார்க்கும் அளவு இருக்கு 
 


இந்தப்படத்தை விருதாச்சலம் அருகே உளுந்தூர்ப்பேட்டை ஸ்ரீ நாராயணா தியேட்டர் ல பார்த்தேன் . 40  ரூபா தான் பால்கனி டிக்கெட்டே . படத்துக்கு ஏகப்பட்ட கள்ளக்காதல்  ஜோடிங்க வந்திருந்தாங்க . அதுல  ஒரு ஜோடி தியேட்டர்லயே டான்ஸ் வேற ஆடுனாங்க, இது தியேட்டரா? விழா மேடையா?>னு டவுட்டே வந்துடுச்சு , இது பற்றித்தனி பதிவு விரைவில் 



ஆல் இன் ஆல் அழகுராஜா vs சென்சார் நிர்ப்பந்தம்

ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். 


கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் காமெடி கலாட்டா ’ஆல் இன் ஆல் அழகுராஜா’. 


இப்படத்தின் டீஸர் வெளியானது. அதில் சந்தானம் ஒரு காட்சியில், அரசின் புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி அமைந்திருந்தது. 


இக்காட்சி குறித்து, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. மேலும் குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இவ்விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது. 


புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் தான் என்று அக்காட்சிக்கு விளக்கமளித்திருந்தார் இயக்குனர் ராஜேஷ். எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அக்காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அக்காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக ராஜேஷ் அறிவித்துள்ளார். அப்படத்தினைப் பார்த்த சென்சார் அதிகாரிகளும் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். 

நன்றி - த தமிழ் ஹிந்து 


1. தமிழர்கள் ஏன் சிதம்பரத்தை டெல்லி அனுப்பினார்கள? ்-மோடி#"இங்கே இருந்தா தங்கம் வாங்காதே,வெண்கலம் வாங்காதேனு இம்சிப்பார்னு தான்.


===================


2 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # சாருக்குத்தமிழே தெரியாது.தமிழர்களோட கனவும் ,உணர்வு மட்டும் எப்டி புரியும்?


====================


3 கேரளா வில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்த விஜய்! # அரசியல்ல குதிக்கட்டுமா ? குதிக்காதப்பவே அம்புட்டு அடி தலைவா!


===================


4 கௌதம் மேனனிடம் ஒரு கதை கேட்டுள்ளேன். இன்னும் உறுதி செய்யப்படவில்லை . விஜய் சேதுதபதி!"# சைன் பண்ணுனீங்கன்னா (ஏ சென்ட்டர்ல) சைன் பண்ணலாம்


======================


5 கூட்டணி பற்றி கவலைப்படாதீர்கள்: தமிழக பா.ஜனதாவுக்கு நரேந்திரமோடி..அறிவுரை # மக்களைப்பத்தி ,அவங்க பிரச்சனைகளைப்பத்தி கவலைப்பட்டாத்தேவல


====================


6 போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது"- கமல் # நெட் டின் விஸ்வரூபம் பிட் டில் ?



===================


7 ஆஅராஜா புகையிலை தடுப்பு விழிப்புணர்விற்கு எதிரான படம் என்பதால் தடை செய்ய வேண்டும் -தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மக்கள் மன்றத்தினர் கேஸ் #



====================


8 தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல் # பார்த்தா பெரிய மனுசரா இருக்கீங்க.என் அறிக்கையை பிட் அடிக்கறீங்க? - தமிழ் இனத்தலைவர்



=====================


9 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக பொதுக்கூட்டத்தில் ராமராஜன் கேப்டனை விளாசிட்டு இருக்கார்.ஆக்ரோசமான பேச்சு ( 18 10 2013 )



===================


10 மன்மோகன்சிங், ரஷியா-சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: # இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு.ஆண்டு அனுபவிச்சுக்குங்க



====================


11 வேலூரில் மதுக்கடை சுவரில் துளைபோட்டு திருடிய கணவன்-மனைவி..# திருட்டுக்குடிகாரக்குடும்பம் போல.


=================


12 கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் அமைக்க ஒப்பந்தம்: மன்மோகன்.# கட்டுன பொண்டாட்டியையே கவனிக்காதவன் அடுத்த மேரேஜ்க்கு பரிசம் போட்டானாம்



=====================


13 சிறுமிகளுடன் செக்ஸ் ஆயுளை கூட்டும்-அசாராம் பாபு் # தூக்கு தண்டனை கொடுத்துட்டா உள்ளதும் போயிடுமே கில்மாக்கண்ணா


==================


14 உன் கேர்ள் பிரண்ட் உனக்கு தன் மேரேஜ் இன்விடேசன் அனுப்பலைன்னா கவலைப்படேல்.புருசன் தகர டப்பாத்தலையனா அமைஞ்சிருப்பான்


==================


15 உண்மையை அப்பட்டமாச்சொன்னா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.அதனால தான் கவிதைகளை அவங்க ரசிக்கறாங்க.பசங்க அள்ளி விடறாங்க



==================


16 பாஜக ஆட்சியமைந்தால் தமிழர்களின் கனவு நனவாகும்-மோடி # தமிழனோட கனவே வேலைக்கே போகாம சம்பளம் வாங்கனும்னுதான்.தரமுடியுமா?


==================


17 சென்னை: தீபாவளி திருடர்களைப் பிடிக்க தி.நகரில் நவீன கண்காணிப்பு கேமரா
# கேமரா சூப்பரா இருக்குனு அதை முதல்ல ஆட்டையைப்போட்ரப்போறாங்க


===================


18 மதவாத சக்திகளை வீழ்த்த காங்குடன் கூட்டணி-திருமா# குருமா ல உப்பே சேர்ப்பதில்லையா மிஸ்டர் திருமா?


====================


19 உலகின் டாப் 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் # ஆண் தொழில் அதிபர்கள்னா நடிகைகள் லவ் பண்ண யூஸ் ஆகும்



==================


20 ஆல் இன் ஆல் அழகுராஜா வில் அரசு விளம்பரத்தை கிண்டலடிக்கும் காட்சியை நீக்கிவிட்டேன் - எம் ராஜேஷ் # சென்சார் நிர்ப்பந்தத்தால்னு சொல்லுங்க


=========================



=========================

Tuesday, October 22, 2013

ஜெ. VS உதயநிதி - புகார் - வரி விலக்கில் முறைகேடுகள் :

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்தொடர்ச்சியாக தான் தயாரிக்கும் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைக் கண்டித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார் 'ரெட் ஜெயன்ட்' நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.


'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு வழங்காததால், நீதிமன்றத்திற்கு சென்று, பிறகு வரிவிலக்கு வாங்கினார்கள். அதைப் போலவே தற்போது 'வணக்கம் சென்னை' படத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.


வழக்குத் தொடர்ந்தது மட்டுமன்றி, தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்திருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பது :


“'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நீர்ப்பறவை' போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் படங்களுக்கு வரிவிலக்கை நிராகரித்த இந்தக் குழுவினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் 'வணக்கம் சென்னை' திரைப்படத்துக்கும் வரிவிலக்கு நிராகரிப்புச் செய்து பரிந்துரை செய்துள்ளனர்.
குறிப்பாக திரைப்படப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி இம்மூன்று படங்களையுமே பார்வையிட்ட குழுக்களில் இடம் பெற்றுள்ளார்.


 எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகை ராஜஸ்ரீ, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மக்கள் குரல் பத்திரிகை நிருபர் திரு.ராம்ஜி போன்றோர் வரிவிலக்கு நிராகரிப்படும் படங்களைப் பார்க்கும் குழுக்களில் தவறாமல் இடம் பெறுகின்றனர். இவர்கள் சுயேட்சையாக தங்கள் முடிவுகளை அறிவிக்காமல், அரசு அதிகாரிகளால் இடப்படும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்தே தங்கள் முடிவுகளை எழுதி வருகின்றனர்.



திரைப்படத்தை பார்வையிட வரும் குழு உறுப்பினர்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலரைத் தங்களுடன் திரையரங்குகள் அழைத்துச்சென்று திரைப்படத்தைப் பார்வையிடுவது வாடிக்கையாக உள்ளது. இவர்கள் முன் கூட்டியே திட்டமிட்டபடி பரிந்துரைக் கடிதங்களை குழு உறுப்பினர்களிடமிருந்து எழுதி வாங்குவதற்கும், வணிக வரி இணை ஆணையருக்கு உதவுவதற்குமே வருவதாக தெரிகிறது.



'வணக்கம் சென்னை' வரி விலக்குக் குழுவிற்காகத் திரையிடப்பட்டபோது பழனி என்ற வணிக வரித்துறை இணை ஆணையாளர் அலுவல் சார்ந்த உறுப்பினராகக் குழுவில் இடம் பிடித்திருந்தார். குழுவின் இன்னொரு உறுப்பினரான பின்னணிப் பாடகர் டி.எல்.மகாராஜன் சந்தேகத்துக்குரிய ஒரு நபரை உடன் அழைத்து வந்த போது பழனி மறுப்பேதும் கூறாமல் அந்த நபரை தங்களுடன் திரைப்படத்தைப் பார்வையிட அனுமதித்தார்.



அதேபோல மற்றொரு உறுப்பினரான எம்.என் ராஜம் தனது கணவர் ஏ.எல்.ராகவனை உடன் அழைத்து வந்தபோதும் பழனி அவர்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நீதிபதியாக படம் பார்க்க வருபவர் தன்னுடன் உறவினர்களை அழைத்து வருவது சட்ட விரோதமான செயல். இதை பொறுப்பு அதிகாரியான வணிக வரித்துறை இணை ஆணையாளர் கண்டும் காணாமல் இருந்தது பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது.



படம் பார்த்த ஆறு பேரில், ஐந்து பேர் நிராகரித்து எழுதிவிட்ட நிலையில், வரிவிலக்கு இந்தப் படத்துக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையிலும், பிடிவாதமாக படம் பார்த்த அனைவருமே நிராகரிக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசு அதிகாரிகள் பிடிவாதமாக இருப்பது, எந்த அளவிற்கு அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் உள்ளவர்கள் என்பதையே காட்டுகிறது.



இவ்வாறு தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுவதால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்


. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ள இந்த அரசாணையை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுத்து அனைத்து தயாரிப்பாளர்களின் நலனையும் காத்திட வேண்டும் எனவும் வேண்டிக்கொள்கிறோம்” என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுமட்டுமல்லாமல், அப்புகாரில் என்னென்ன முறைகெடுகள் வரிவிலக்கில் நடைபெற்றன என்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

thanx - the hindu

நுகம் - சினிமா விமர்சனம் (தினமலர் விமர்சனம்)

தினமலர் விமர்சனம்

சில வருடங்களுக்கு முன் சினிமாவிலும், சின்னத்திரையிலும் இங்கொன்றும், அங்கொன்றுமாக முகம் காட்டிய ஜெபி எனும் ஜெய்பாலா நடித்து இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘நுகம்’. இப்பட நாயகியரில் ஒருவரான இனியாவும், சுருதி எனும் பெயரில் சுற்றி வந்த ஆரம்ப நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம், கஞ்சா கருப்பு காமெடி மார்க்கெட்டில் இருந்தபோது உருவான திரைப்படம்... என இன்னும் பல சிறப்பு‌களை(?) கொண்ட திரைப்படம் தான் ‘நுகம்’!

கதைப்படி ஜெய்பாலாவும், இன்னொரு நாயகர் விஜயகுமாருக்கும் இந்தியா வல்லரசு ஆவது பிடிக்காத அயல்நாட்டு சதிகாரர்களின் கையாட்கள்! காசுக்கு ஆசைப்பட்டு மத்திய அமைச்சர் ஒருவரை கொல்ல குறிவைக்கும் இருவருக்கும், இந்தியா வந்ததும் மத்திய அமைச்சரை கொல்ல வேண்டாம், ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல ‌வேண்டும் என்று ‘அசைமென்ட்’ மாற்றி தரப்படுகிறது. ஜெய்பாலா அதற்கு உடனடியாக ஓ.கே. சொல்கிறார். இனியாவை காதலிக்கும் விஜயகுமார், அவர் மீதான காதலால் இதற்கு நோ ‌சொல்கிறார். இதனால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு எழுகிறது. 
 
 
 
அதனால் ஒருவரை ஒருவர் தீர்த்து கட்ட துணிகின்றனர். ஜெய், கதிர் எனும் விஜயகுமாரை கொன்றாரா? விஜய், ஜெய்யை கொன்றாரா? என்னும் கதையுடன், சுரேஷ் எனும் இளைஞரின் யாழினி - பீரித்தி மீதான காதலையும் அவர்கள் மீதான ஜெய்யின் காமத்தையும், குரோதத்தையும் கலந்து கட்டி இந்திய நகரங்களையும் படம்பிடித்து காட்டி, வெடிகுண்டு சம்பவங்களுக்கு வெடிகுண்டு வைக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஜெபி. ஆனால் அந்த குண்டு நமத்து போனதது தான் நகைச்சுவை!

ஜெய்யாக ஜெய்பாலா, கதிராக விஜயகுமார், சுரேஷாக சுரேஷ், பாண்டியனாக கார்த்தி, மக்கள் நல விரும்பியாக கஞ்சா கருப்பு, யாழினியாக ப்ரீத்தி இவர்களுடன் இனியாவும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட முயன்று அதில் பாதி வெற்றி அடைந்திருக்கின்றனர். இனியா, இப்படத்தின் விளம்பரங்களில் இடம் பிடித்த அளவிற்கு கூட இப்படத்தின் பாத்திரத்தில் இல்லாதது ஏமாற்றம்!
 
 


டி.ஜே.கோபிநாத்தின் பின்னணி இசை ஓ.கே. ஈ.கே.ரமேஷின் ஒளிப்பதிவு டபுள் ஓ.கே. ஜெபியின் எழுத்து-இயக்கத்தில் ஆயிரம்பேரை கொல்லத்திட்டமிடும் ஜெய், உடன் இருக்கும் கதிரை தீர்த்துகட்ட ஆள் தேடுவது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நுகத்தை ரசிகர்கள் நுகரலாம்!

ஆகமொத்தத்தில் ‘நுகம்’ தங்களை கேவலப்படுத்தியதாக தீவிரவாதிகளை கேஸ் போட வைக்கும் ‘ரகம்!’ ஹீ... ஹீ...!!
 
thanx - dinamalar 



  • நடிகர் : ரிஷ்கதிர்
  • நடிகை : இனியா
  • இயக்குனர் :ஜெபி