Tuesday, October 22, 2013

புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி

1. தலை தீபாவளி கொண்டாடாத புதுமணத்தம்பதியும் இல்ல. தல படம் தீபாவளிக்கு வருவதைக்கொண்டாடாத அஜித் ரசிகரும் இல்லை



=====================


2 பில்லா ,மங்காத்தா ,பில்லா 2 அஜித் ஓப்பனிங் சீன் களை எல்லாம் ஆரம்பம் அஜித் ஓப்பனிங் சீன் தூக்கி சாப்பிட்ரும் என அவதானிக்கிறேன்


==================


3 வில்லன் - எமனையே ஏமாத்தி எஸ்கேப் ஆனவன் நான் .



அஜித் - எமன் எருமை ல வந்திருப்பான்.சேஸ் பண்ண முடிஞ்சிருக்காது.நான் ரேஸ் பைக் ல.


======================

4 வில்லன் - GUN னை உன் நெத்திப்பொட்டுல வெச்சும் உனக்கு பயம் வர்ல ? 



அஜித் - துப்பாக்கி யைப்பாத்து பயப்படும் துர்ப்பாக்கியம் எனக்கு இல்லை



=====================


5 சார்.இந்த ஆபரேஷனுக்கு அவர் தான் கரெக்ட் சாய்ஸ் னு எப்டி சொல்றீங்க ?,



போலீஸ் கமிஷனர் - அவர் 6 அடி உடம்புலயே 60 ஆபரேஷனைப்பார்த்தவர்


=======================


6 9 தாரா - என் பின்னாலயே வருவீங்க ,பாலோ பண்ணுவீங்கனு எதிர்பார்த்தேன் .



அஜித் - பர்சனாலிட்டி இல்லாதவன் தான் பொண்ணுங்க பின்னால போவான்.


====================


7 ஆரம்பம் SWORD FISH இன் தழுவல் எனவும் ,மும்பை தாஜ் ஹோட்டல் வெடிகுண்டு சம்பவ டிடெக்டிவ் ஸ்டோரி எனவும் 2 வித வதந்திகள் இணையத்தில்



==================


8 நீங்க கழுவற மீன் ல நழுவற மீனா? ஒரு சின்ன கரெக்சன்.வெறும் மீன் இல்லை. சுறா வுக்கே சுளுக்கு எடுக்கும் திமிங்கலம் # ஆரம்பம் பஞ்ச் ( கற்பனை்)



======================


9 உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே! = சவுரி வாங்கித்தரனுமே?



=================


10 கண்ணுல மை ,உதட்டுல லிப்ஸ்டிக் வச்சா அழகா இருக்கிறது ரெண்டு பேருக்கு தான் ஒன்னு ராம ராஜன் இன்னொன்னு எம் ஜி ஆர்


=================


11 இது கதிர் வேலன் காதல் ஓக்கே ஓக்கே தோசையை அப்டியே திருப்பிப்போட்டுத்தரும் படம் என அவதானிக்கிறேன்



====================


12 கார்த்தி படங்களுக்கு கொங்கு மண்டலத்தில் அமோக வரவேற்பு # சம்பந்தி ஊராச்சே


===============


13 பஸ் ல போனா ஒரு கிமீ க்கு 50 பைசா ,ரயில் ல போனா 25 பைசா ,ரிசர்வேஷன் பண்ணி ரயில் ல போனா 42 பைசா # தமிழ்நாடு


==================


14 கவிதையான என்னை காதலிக்க கவிதை எதற்கு ?..!"என்றாய்! முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி கவிதையை கவிதையால் கவரலாம் என்ற நப்பாசை தான்



==================


15 ட்விட்டரில் இருக்கும் 3 செட் தம்பதிகள் ல 3 மனைவிகளும் தான் முதல் ல என்ட்டர் ஆகறாங்க.வீட்டுவேலை எல்லாம் முடிச்ட்டுதான் கணவர் வர்றார்



=====================

16 ரோஜா, வெள்ளை ரோஜா, செவ்வந்தி ,செம்பருத்தி ,டிசம்பர் பூக்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், ஜாதிமல்லி ,பூ,வாடாமல்லி,சிவப்புமல்லி



=================


17 எல்லா ரும் அபிசியல் ட்ரெய்லர் தான் விடறாங்க .பர்சனல் ட்ரெய்லர் விட்டா தேவலை


==================


18 ஷே WALKING = ஷேவாக் நடந்துட்டு இருக்கார் # சுருக் தமிழ்



===============


19 அஜித் கவுதம்மேணன் இணையும் படத்துக்கு டைட்டில் = யோகன் ( உறுதி செய்யப்படாத தகவல் ) # ஏகன் ல பட்டதே போதும்.டைட்டிலை மாத்துங்க முதல்ல


================


20 நான் உன்னைக்காதலிக்கிறேன்.நீ என்னை காதலிக்கிறியா? = 143 , 341? # மேத்தெமேடிக்ஸ் லவ்


===================


21 ப்ரியங்கா சோப்ரா - விழா மேடைல என்னை கூப்பிடும்போது ப்ரியங்காசோ-னு ஏன் கூப்ட்டீங்க. ? 



நீங்க மறந்ததை நான் நினைவூட்டினேன்


====================


22 ஷேக்பாத்திமா னு ஒரு பேரை பார்த்ததும் எனக்கு தோணுனது.எல்லாரும் அதை பெயர்ச்சொல்லாவும் ,காதலர் மட்டும் கட்டளைச்சொல்லாவும் உபயோகிப்பாங்க


================


23 கூட்டுக்குடித்தனத்தில் வசிக்கும் புது மணப்பெண்ணுக்கு கண்ணாடி வளையல்கள் எதிரி.



================


24 புதுமணப்பெண்ணிடம் மாப்ளை கேட்கும் கண்ணியமான கில்மாக்கேள்வி - பாப்பான்னா உனக்குப்பிடிக்குமா?ரெடி பண்ணிடலாமா?


=============

25 படத்துக்கு நல்ல தியேட்டர் கிடைக்கறது முக்கியம் தான்.ஆனா அதை விட முக்கியம் நல்ல திரைக்கதை கிடைப்பது


=================





Monday, October 21, 2013

சென்னை பேங்க் மேனேஜரின் கில்மா லீலைகள் - போலீஸ் அதிர்ச்சி

நாகராஜ்
நாகராஜ்

வக்கிர வாழ்க்கையால் கொலையான வங்கி அதிகாரி - சீரழிந்து பழி தீர்த்த 7 சிறுவர்கள்

வேளச்சேரி வங்கி அதிகாரி கொலை வழக்கில் 6 சிறுவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 


சென்னை வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2 வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். பெசன்ட்நகரில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளராக இருந்தார். இவரது மகன் துபாயிலும், மகள் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர். 4 மாதத்துக்கு முன்பு நாகராஜின் மனைவி, அமெரிக்கா சென்றுவிட்டார். கடந்த 16 ம் தேதி இரவு வீட்டில் நாகராஜ் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் மற்றும் ஸ்கூட்டர் கொள்ளை போனது. பீரோவும் உடைக்கப்பட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. 



இதுகுறித்து வேளச்சேரி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, திருவான்மியூர் பகுதியில் பதுங்கி இருந்த 6 சிறுவர்களை சனிக்கிழமை இரவு சுற்றிவளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய ஒரு சிறுவனை தேடிவருகின்றனர். 


சிறுவர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்து வேளச்சேரி போலீஸார் கூறிய தாவது: 


கொலை நடந்த அன்று இரவு, நாகராஜுடன் சிலர் தங்கிருந்தது தெரிய வந்தது. அனைவரும் சேர்ந்து மது அருந்தியதற்கான அடையாளங்களும் வீட்டில் இருந்தன. அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரித் தோம். நாகராஜின் செல்போனில் இருந்த எண்களை ஆராய்ந்தபோது சில சிறுவர்கள் நாகராஜுடன் அடிக்கடி தொடர்பு கொண்டதும், அவர்கள் அனைவரும் தலைமறைவானதும் தெரிந்தது. அவர்கள்தான் கொலையாளிகள் என்பதை அப்போதே முடிவு செய்து விட்டோம். 



இரண்டு நாட்களுக்கு முன்பு பெருங்குடி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜின் ஸ்கூட்டரை கைப்பற்றினோம். நாகராஜின் செல்போனை சிறுவர்கள் வைத்தி ருந்ததால், சிக்னலை வைத்து அவர்கள் இருந்த இடத்தை கண்டுபிடித்தோம். “நாகராஜுடன் எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. கொலை நடந்த அன்று இரவும் மது அருந்திவிட்டு நெருக்கமாக இருந்தபோது மோதல் ஏற்பட்டது. ஆத்திரத்தில் நாகராஜை கழுத்தை நெரித்து கொன்றோம். போலீஸாரை திசை திருப்ப, பீரோவை உடைத்து, மிளகாய் பொடியை தூவினோம்” என்று பிடிபட்ட வர்கள் கூறியதாக போலீஸார் தெரி வித்தனர். 



உயிரை பறித்த தவறான பழக்கம் 



கொலை செய்யப்பட்ட நாகராஜ், ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அளவுக்கு மீறி தொடர்ந்த இந்த தவறான பழக்கமே அவரது உயிரை பறித்துள்ளது.



வங்கியின் ராயபுரம் கிளையில் பணியாற்றியபோது ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனை வீட்டுக்கு அழைத்து வந்து நெருக்கமாக இருந்து விட்டு ரூ.500 கொடுத்தார். பின்னர் அடிக்கடி அழைத்து பணம் கொடுத்திருக்கிறார். 


அந்த சிறுவன் மூலம் மேலும் பல சிறுவர்களும் நாகராஜுக்கு அறிமுகமாகி யுள்ளனர். அவர்களிடமும் நெருக்கமாக இருந்து பணம் கொடுத்திருக்கிறார். சிறுவர்கள் அனைவரும் கொஞ்சம் வளர்ந்த நிலையில் நாகராஜின் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களை நாகராஜ் மிரட்டியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் நாகராஜை 7 சிறுவர்களும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது. 



மனநல மருத்துவர் காந்திபாபு கூறும் போது, "அனைத்து வசதிகள் இருந்தும் இதுபோன்ற இயற்கைக்கு முரணான சிந்தனைகள் வருவதற்கு மரபணு குறைபாடே முதல் காரணம். இதை 'பீடோபைல்' என்று அழைப்பார்கள். இது ஒருவகை நோய். வயதுக்கு குறைவானவர்களுடன் நெருக்கம் காட்டுவது, அடுத்தவர் அந்தரங்கங்களை எட்டிப் பார்ப்பது போன்ற சிந்தனைகள் அதிகம் வந்தால் உடனே மனநல மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு சரியான மருத்துவ தீர்வுகளும் உள்ளன. ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுவதும் குணமாக்கி விடலாம். இல்லையென்றால் பல இழப்புகளை இவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இந்த சிந்தனை உள்ளவர்கள் மற்றவர்களை துன்புறுத்தி இன்பம் காண நினைப்பவர்கள்" என்றார். 


நாகராஜை கொலை செய்த சிறுவர்கள், அறை முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டுச் சென்றிருந்தனர். கில்லி படத்தில் விஜய் தொடங்கி வைத்த பழக்கம், வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் வரை தொடர்கின்றன. இந்த திரைப்பட காட்சிகளுக்கு பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்கள் பலர் மிளகாய் பொடி தூவி நாயின் மோப்ப சக்தியை திசை திருப்ப தொடங்கி விட்டனர்.




 மிளகாய் பொடி தூவினால் உண்மையில் நாயால் கண்டுபிடிக்க முடியாதா? என்பது குறித்து முன்னாள் தடயவியல் அறிஞரும், தற்போது துப்பறியும் நிறுவனம் நடத்தி வருபவருமான வரதராஜன் கூறும்போது, "ஒரு சம்பவம் நடக்கும்போது அந்த இடத்தில் இருந்த மனிதனின் வாடையை முகர்ந்து, அதே வாடை எங்கே இருக்கிறது என்பதை வைத்துதான் நாய் அந்த திசையை நோக்கி செல்லும். மிளகாய் பொடி தூவுவதால் நிச்சயம் மனிதனின் வாடை மறைந்து, மிளகாய் பொடியின் வாடை அதிகரித்து விடும். சில இடங்களில் மிளகாய் பொடியின் வாடையையும் மீறி மனிதனின் வாடை இருக்கும். 





அதை மோப்பநாய் எளிதில் கண்டுபிடித்து விடும். ஆனால் காவல் துறையினர் மோப்ப நாயை மட்டுமே நம்பி விசாரணை நடத்துவதில்லை. கைரேகை உட்பட கொலையாளிகளை கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளன. இதனால் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் சிக்குவார்கள். 



நன்றி - த தமிழ் ஹிந்து 

ஆர்யா பல டைம் என்னை ஏமாத்தி இருக்கார் - டாப்ஸி டமால் பேட்டி

 

 

யாரிடமும் நான் நட்புடன் இல்லை! டாப்ஸி

ஹீரோயின் பேட்டி  -2013இல் சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகை யாரென்று கேட்டால், அமலாபால், அனுஷ்கா, நயன்தாரா என்பீர்கள். அதுதான் இல்லை. அந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பவர் டாப்ஸி. "குண்டல்லோ கோதாவரி' தொடங்கி, "ஷாஸ்மி பட்டூர்", "ஷேடோ', "சகாசம்", தமிழில் "ஆரம்பம்", "முனி - 3 கங்கா" என்று படங்கள் தொடர்ச்சியாக இருக்கிறது.
 பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் வெள்ளாவி என்ன சொல்கிறார்..
.அடிக்கடி, கிசு கிசுக்களில் சிக்கி விடுகிறீர்களே?
கிசு கிசுவுக்கும் எனக்கும் அப்படி என்னதான் சம்பந்தமமோ எனக்கே தெரியவில்லை. அந்தளவிற்கு என்னைப் பற்றிய கிசு கிசுக்கள் வெளியாகி விட்டன. முதலில், இதற்காக வருத்தப்பட்டேன். இப்போது, பழகி விட்டது. என்னைப் பற்றிய கிசு கிசு செய்திகளைப் படிக்கும்போது, எனக்கே, பயங்கர காமெடியாக இருக்கும். விழுந்து விழுந்து சிரிப்பேன்.
 
எந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி உங்களைக் கவிழ்த்திருக்கிறாரா?
வேறு யார், ஆர்யாதான். படப்பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசாக கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும், அதை நம்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து, "நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய்' என்பார். இதுபோல், நிறைய முறை, ஆர்யாவிடம்  ஏமாந்திருக்கிறேன். ரொம்பவும் நாட்டிபாய். 
 
 சத்தமில்லாமல் நிறைய படங்களில் நடிக்கிறீர்கள் போல?
அப்படியெல்லாம் இல்லை. தமிழில் "ஆரம்பம்' வரப்போகிறது. 
"முனி -3 கங்கா' தமிழ் மற்றும் தெலுங்கில் வர இருக்கிறது. தெலுங்கில் "சகாசம்' என்ற படம் வெளிவர உள்ளது. செப்டம்பர் இரண்டு புது படம் தொடங்குறேன். அக்டோபரில் என் இரண்டாவது ஹிந்திப்படம் தொடங்க இருக்கிறது. நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் சரியான வாய்ப்புகள்தான் அமையமாட்டேன் என்கிறது. நீங்களாச்சும் தமிழ் டைரக்டர்கிட்ட என்ன பத்தி நல்ல விதமா சொல்லுங்களேன். 
"கங்கா' எப்படியிருக்கு?
வெரி பவர்புல் படம். பொதுவா நான் தைரியமான, போல்டான பொண்ணு ஆனால் பேய், பிசாசுன்னா கொஞ்சம் பயப்படுவேன்.  தனியாக படம் பார்க்னும்ன்னனா கூடஎனக்குப் பயம்தான். அதுவும் பேய் படம்னா கேட்கவே வேண்டாம். அடிக்கடி பக்கத்துல ஆட்கள் இருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட பொண்ணு பேய் படத்தில் நடித்தால் எப்படியிருக்கும்? நிறைய சீன்ல நிஜமாவே பயந்திட்டேன். செம திரில்லிங் பா.
தமிழ் நல்லா பேசுறீங்களே?
இது என்ன சில்லி கொஸ்டின். இவ்ளோ நாள் தமிழ் நாட்ல இருக்கேன். இதைக்கூட கத்துக்க மாட்டனா? அப்புறம் ஒன்னு சொல்லட்டா.. தமிழ்ப் பேசறது ரொம்ப ஈஸியா இருக்குப்பா. ஐ லைக் தமிழ்.
 
ஹன்சிகா உங்க இடத்தைப் பிடிச்சுட்டாங்களே கவனிச்சீங்களா?
அப்படியா...? அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே. அது குறித்து நான் கவலைப்படவும் இல்லை. ஹன்சிகா, தமிழில் மட்டும்தான், கவனம் செலுத்தி, நடிக்கிறாங்க. நான், அப்படி இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி என, மூன்று மொழிகளிலும், பிஸியாக நடிக்கிறேன். எனக்கு வர வேண்டிய படங்கள் எனக்குத் தான் கிடைக்கும். அதை யாரும், தட்டிப் பறிக்க முடியாது.
 இன்க்குளூடிங் ஹன்சிகா.தமிழ் சினிமாவில் யாரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு இருக்கீங்க?
ஒன்லி அஜித்சார். அவர் பழகும் முறை, நடந்துகொள்ளும் விதம், அவர்கூட நடிக்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சர்யமா இருந்துச்சு. ஐ லைக் ஹிம்.உங்களுக்கு ரொம்பப் பிடித்தது டான்ஸôமே? ஆமாம் எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். 8 வருஷமா கதக் கத்துட்டு இருக்கேன்.  நிறைய பயிற்சி எடுத்திருக்கேன். இப்ப என்னோட யாரும் டான்ஸýல போட்டி போடலாம். ஐ யம் ரெடி.  
 உங்களின் கனவு, ஆசை என்ன?
நான் சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள, மணிரத்னம் சார் படத்தில நடிக்காம, விடமாட்டேன். நான் இந்திய சினிமாவை விட்டுப் போறதுக்குள்ள இது நடக்கும். எந்த கேரக்டர்னாலும், எந்த மொழின்னாலும், நான் மணிரத்னம் சார் படத்தில நடிச்சே தீரணும். இதான் என் கனவு, ஆசை எல்லாம்.
  உங்க பிளஸ் என்ன, மைனஸ் என்ன?
நான் ரொம்ப தைரியமான பொண்ணு. மனசில நினைக்கிறதை அப்படியே சொல்லிடுவேன். ரொம்பப் பேசுவேன். கரெக்டா இருப்பேன். கேமராக்குப் பின்னாடி எப்பவும் நான் நடிக்க மாட்டேன். ஓப்பனா இருக்க நினைப்பேன்.மைனஸ்னா நிறைய இருக்கு. ஒன்று வேணும்னு நினைச்சா அடுத்த நிமிஷமே எனக்கு அது கிடைக்கணும். எதுக்காகவும் வெயிட் பண்ண மாட்டேன். பொறுமை கொஞ்சம் கம்மிதான். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி கோபம் அப்படி வரும். இப்போதான் கொஞ்சம் குறைச்சி இருக்கேன். அப்புறம் முக்கியமா, எல்லாரையும் ஈஸியா நம்பிடுவேன். என்னை ஈஸியா ஏமாத்திவிடலாம். யாராச்சும் என்கிட்ட வந்து என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுவேன். நான் இருக்கும் தொழிலுக்கு இது ரொம்ப டேஞ்சரான விஷயம். உடனே என்னை  இந்த விஷயத்தில் இருந்து மாத்திக்கணும் பார்க்கலாம்.  
 
மனம் திறந்து யாருடன் நட்புடன் இருக்கிறீர்கள்?
இன்டஸ்ட்ரில இப்போ நான் யார் கூடவும் அதிகமா டச் வைச்சிக்கிறதில்லை. நயன்தாரா கூட நடித்ததால் மட்டும் அவருடன் சில விஷயங்களைக் கொஞ்சம் ஷேர் பண்ணிப்பேன். அவ்ளோதான். மத்தபடி யாரிடமும் நான் நட்புடன் இல்லை! எதிர்கால திட்டம்?சரியாக 10, 12 வருஷம் நல்ல நல்ல படங்களில் நடிச்சிட்டு, வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிடுனும்னு என்பதில் ரொம்பத் தெளிவான இருக்கேன். நிறைய வருஷம் நடிக்கணும் என்ற ஆசை இல்லை.
 திருமணம்?
நான்தான் வீட்டில் பெரியவ. என் பெற்றோர் என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றாங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு ஆள் கிடைக்கணுமே. நான் விரும்புறவர், பெண்களை மதிக்கிறவராக இருக்கணும். என் அம்மா, அப்பா, என் தங்கை, என் குடும்பத்தை அவர் குடும்பமா பார்த்துக்கணும். ஹிருத்திக் ரோஷன் அளவிற்கு அழகெல்லாம் தேவை இல்லை. என் அளவுக்கு மேட்ச் ஆனா போதும். வெள்ள கலர், சிக்ஸ் பேக் இதெல்லாம் வேணாம். உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சுக்கிற, ஒரு நேர்மையான ஆண் கிடைக்கணும். அப்பதான் கல்யாணத்தைப் பற்றி யோசிப்பேன்.
thanx - dinamani 




அரேபியன் குதிரை மாதிரி இருக்கும் பிகரை லவ்வினா ..........

1 நல்ல படத்தை நாலு நாள் கழிச்சுக்கூடப்பார்த்துக்கலாம்.டப்பாப்படத்தை அன்னைக்கேப்பார்த்து ஓட்டிடனும் # விமர்சக விதி


================


2  தொட்டு விடும் தூரத்தில் தான் நீ இருக்கிறாய்! ஆனா உங்கப்பா விடும் அடி என்  மேல பட்டுவிடும் பக்கத்தில் நான் இருப்பதால் தயக்கம்



=================

சற்குணம் - சைக்கிள்லலைட் இல்லைன்னு கிண்டல் பண்றீங்க, பின்னாலஒரு ஆள் சைக்கிளே இல்லாம வர்றார் (ஆல் இன் ஆல் அழகுராஜா எம் ராஜேஷ் )# சும்மா



========================



4 சாதா சைவம் = சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர், ப்யூர் வெஜ் (சுத்த சைவம்) = குளிச்சுட்டு சாப்பிடுபவர் , உயர் தர சைவம் = மாடி வீட்டு லேடி



===========================


5 காமெடி டிரண்ட் ஓய்வெடுக்க வேண்டிய தருணம்.தீபாவளிக்கு ஆக்சன் ட்ரெண்ட் ஆரம்பம்


=======================


6 நவராத்திரிக்கு ஓ சி கிடைக்கும் ஜாக்கெட் பிட்டை அளந்து பார்த்தா 80 செமீ க்கும் கம்மியா தான் இருக்கும் # கடனுக்குகடமை



=======================


7 கவுதம் - யோவ்.சூர்யா என் கிட்டே கதை கேட்கறாரு.



ஹரி - நல்ல வேளை.5 படம் பண்ணியும் என் கிட்டே இது வரை ஒரு வரி கூட கேட்கலை #சும்மா


==========================


8 முப்பெரும் தேவியர் 1 சி ஆர் சரஸ்வதி 2 பார்வதி ஓமனக்குட்டன் 3 லட்சுமிராய் # சினிப்ரியன் VS ஆன்மீகப்ரியன்



=======================



9 PAY ஐ நம்பலாம்.பேயை நம்பக்கூடாது


========================


10 டிஎம் ல யாரும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு பொண்ணுங்க பல டெக்னிக் வெச்சிருக்காங்க 1 குழந்த டிபி ,2 சாமி டிபி 3.குழந்தையோட இருக்கும் டிபி



===========================


11 ஆயுத பூஜையை முன்னிட்டு பள்ளி , கல்லூரிகள் வரும் புதன் வரை லீவ், யாரும் பஸ் ஸ்டாப் போய் ஏமாற வேண்டாம் # பஸ் ஸ்டாப்பில் இருந்து பாஸ்கரன்



=========================


12 நய்யாண்டி டுடே AD @ பேப்பர் = தியேட்டரில் விசில் பறக்குது # கொண்டு வந்த விசிலை ரசிகர்கள் தூக்கி எறியறப்ப பார்த்திருப்பாங்களோ?



=========================


13 விக் -னேஸ்வரி = சவுரி வெச்ச கோவக்காரப்பொண்னு # அறிவோம் தினம் ஒரு புது தமிழ்ச்சொல் பை உட்டாலக் கடி யுனிவர்சிட்டி



=======================


14 ஆபீஸ் போறவங்க இன்னைக்கு ஆபீசை சுத்தம் பண்ணி நாளை வீட்டை சுத்தம் செய்யனும் # போங்கடா நீங்களும் உங்க ஆயுத பூஜையும்



===========================


15 பியூட்டி பார்லர் விளம்பர போர்டு - காக்காவும் பீக்காக் ஆகும்



=======================


16 அரேபியன் குதிரை மாதிரி இருக்கும் பிகரை லவ்வினா "பரி "பூரண சுதந்தரம் கிடைக்குமா? #டவுட் டேவிட்



====================================


17 தனுஷ் = GOD + அப்போ சிம்பு = GOD - ?


==================================================


18 சரஸ்வதி பூஜைக்கு வீட்டை எல்லாம் சுத்தம் பண்ணனுமாம்.அப்போ லட்சுமி பூஜைக்கு பேங்க்கை துடைச்சு சுத்தம் பண்ணிடலாமா? #பேங்க் கொள்ளை


======================


19 நீங்க போட்டிருக்கும் கோலம் பிரமாதம்னு ரிசப்சனிஸ்ட் கிட்டே டேமேஜர் அள்ளி விட்டுட்டு இருக்காரு # அது சாதா 12 க்கு.12 புள்ளிக் கோலம்


======================


20 பெங்களூர் ல ஐ மேக்ஸ் ல படம் பார்க்க 550 ரூபாயாமே? எங்களூர்ல 11 படம் பார்க்கலாம்


================================



Sunday, October 20, 2013

ஈரோடு தனியார் மெட்ரிக் பள்ளி,ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி நடத்திய பேரம்: சிக்கிய வீடியோ ஆதாரம்

  • ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.
  • ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.

  • a
    வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.
  • ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.
ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளி.
sree amman matriculation school

'தி இந்து' எக்ஸ்ளூசிவ்: ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி நடத்திய பேரம்: 30 நிமிடத்துக்கு மேல் ஓடும் வீடியோ ஆதாரம் சிக்கியது

வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்பது தொடர்பாக வாரியத்தின் அதிகாரியும் மற்றும் உயர் அதிகாரியின் உறவினராக அறிமுகப்படுத்திக் கொள்பவரும், பள்ளி நிர்வாகி ஒருவருடன் நடத்தும் பேரம் குறித்த வீடியோ பதிவுகள், 'தி இந்து' நாளிதழுக்கு கிடைத்துள்ளன.


வாரியத்தில் நிலம் மற்றும் கட்டிடங்களை விற்பதில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சர்வசாதாரணமாக விவாதிக்கப்படுவதும் அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளன.


வீட்டுவசதி வாரியத்தில் புதிய வீடு, ஒதுக்கீடுகள் மூலம் கல்லா கட்டிவந்தவர்களின் கவனம் தற்போது, வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விற்பதில் திரும்பியுள்ளது. இவ்வாறு விற்பனைக்காக உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, குறைந்த விலையில் பெற்றுத்தருவதாகக் கூறி, மாநிலம் முழுவதும் ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது.


அமைச்சருக்கு வேண்டியவர், வாரியத் தலைவருக்கு வேண்டியவர், உயர் அதிகாரியின் சொந்தக்காரர் என பல பெயர்களில் அவதாரம் எடுத்துள்ள இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், பல இடங்களைப் பற்றி பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.

வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.


பகிரங்கமாக நடந்த பேரம்!


ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில், வாடகைக்கு இயங்கிவரும், ஒரு தனியார் பள்ளிக்கு அந்த நிலத்தை சொந்தமாக்க பேரம் நடந்துள்ளது. ஈரோடு வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவரும், வாரியத்தின் நிர்வாக இயக்குநரின் உறவினர் என்று சொல்லப்படும் ஒருவரும், பள்ளி நிர்வாகியுடன் பேரம் நடத்தி இருக்கிறார்கள். இந்த பேரம் குறித்த முழு விவரமும் வீடியோ பதிவாக நமது கைக்கு கிடைத்திருக்கிறது.


அதிகாரி ஒருவர், தனியார் ஒருவருக்கு நிலத்தை விற்க காட்டும் அக்கறையும், நடைமுறையில் வீட்டுவசதி வாரியத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் அந்த வீடியோ காட்சிகளில் அப்பட்டமாக விவாதிக்கப்படுகிறது.



பேரம் பேசிய வாரிய அதிகாரி வீடியோ விவரங்களுக்குள் செல்வதற்கு முன்பாக ஒரு சிறு ஃபிளாஷ் பேக்.. ஈரோடு சம்பத் நகரில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில், கடந்த, 1997-ம் ஆண்டு முதல், தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலத்தை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் பள்ளி நிர்வாகத்துக்கே முன்னுரிமையும் கொடுத்தது.
இதன்படி, சுமார் 24,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த நிலத்தை, சதுர அடி 1,500 ரூபாய்க்கு பள்ளி நிர்வாகத்துக்கு விற்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே சென்னை வீட்டுவசதி வாரிய அலுவலகத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டது. இதற்கி டையே, இதே இடத்துக்கு சதுர அடி, 3000 ரூபாய் என விலை நிர்ணயித்து, மீண்டும் ஒரு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்த நிலையில்தான், அந்த இடத்தை உங்களுக்கு சாதகமாகப் பேசி முடித்துத் தருகிறேன் என்று ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பள்ளி நிர் வாகியை தன்னிச்சையாக அணுகியதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை விவரங்கள்தான் இப்போது வீடியோ ஆவணமாக சிக்கி இருக்கிறது.


வீடியோவில் என்ன?


அந்த இடத்தை பள்ளி நிர்வாகிக்கு பெற்றுத்தர ஒவ்வொரு மட்டத்திலும் செய்யவேண்டிய, 'பார்மாலிட்டீஸ்' குறித்தும், என்ன காரணத்தால் வாரியத்தால் தாமதம் ஆகிறது என்பது குறித்தும் வாரிய அதிகாரி விளக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது. அத்தோடு, 24,000 சதுர அடி கொண்ட மற்றொரு நிலத்தை வாங்குவதற்கான 'வழிமுறை'களையும் விளக்குகிறார் அந்த அதிகாரி. அந்த இடத்தை பள்ளி நிர்வாகத்துக்கு வாங்கித் தருவதாகவும், அந்த இடத்தில் பில்டர் மூலம் கட்டிடம் கட்டி மூன்று கோடி ரூபாய் அதிக விலை வைத்து விற்கலாம் என்றும், உதவி செயற் பொறியாளர் பழனிசாமி பள்ளி நிர்வாகி பாலகுமாரிடம் பேரம் பேசுகிறார்.



பேச்சுவார்த்தையின் முடிவில், வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர் செல்லமுத்துவின் மனைவி வழி உறவினர் என பழனிசாமியால் அறிமுகப்படுத்தப்படும், மற்றொரு பழனிசாமியும் பேரத்தில் பங்கேற்கிறார். ஊழல் வாக்குமூலம் 30 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில், சில உரையாடல்களை குறிப்பிட்டாலே, வாரிய நடைமுறைகள் எப்படி உள்ளன என்பது விளங்கும். வாரியம் குறிப்பிடும் தொகையை செலுத்தி, நியாயமாக ஒரு ஒதுக்கீடு பெற வேண்டுமானால்கூட, அதற்கான, 'பார்மலிட்டீஸ்' குறித்து உதவி செயற்பொறியாளர் பழனிசாமி பிட்டுப் பிட்டு வைக்கும் விஷயங்கள் பகீர் ரகம்.


அந்த உரையாடல்களின் முழு விவரமும் நாளை


thanx - the hindu
வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.

வீடியோ காட்சியில் பேரத்தின்போது, உதவி செயற்பொறியாளர், பழனிசாமி மற்றும் நிர்வாக இயக்குனரின் உறவினர் என்று சொல்லப்படும் மற்றொரு பழனிசாமி.

The Wolf of Wall Street - சர்ச்சைக்கு ஆளாகப்போகும் படமா?

ஹாலிவுட் இயக்குனர்களில் மிக முக்கியமானவரான மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வணிகரீதியான வெற்றிகள், விருதுகளுடன் பெரும் சர்ச்சைகளையும் சம்பாதித்தவை. ராபர்ட் டி நீரோவுடன் இணைந்து அவர் தந்த 'டாக்ஸி டிரைவர்', 'ரேஜிங் புல்' போன்ற படங்கள் வித்தியாசமான காட்சி உருவாக்கத்தின் மூலம் விமர்சனரீதியாகக் கொண்டாடப்பட்டதுடன் வெற்றியும் பெற்றவை.


 இயேசுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது படமான 'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிறிஸ்ட்' பெரிய சர்ச்சைகளைச் சந்தித்தது. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் முதல் குவிண்டின் டாரண்டினோ வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்துவிட்ட லியார்னாடோ டி காப்ரியோ, ஸ்கார்சஸியின் ஆஸ்தான நடிகராகிவிட்டார் என்றே சொல்லலாம். அவரது இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ் ஆப் நியூயார்க்', 'தி ஏவியேட்டர்' தொடங்கி மொத்தம் நான்கு படங்களில் நடித்துவிட்டார். தற்போது அந்த இணை 'தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.


1990-களில் பங்குச்சந்தையில் 1 பில்லியன் டாலருக்கும் மேல் முறைகேடு செய்த ஜோர்டான் பெல்போர்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மார்ட்டின் ஸ்கார்சஸி. 22 மாதங்கள் சிறையில் இருந்த ஜோர்டான் பெல்போர்ட்,தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதிப் புகழ்பெற்றதுடன், தன்னம்பிக்கையை வளர்க்கும் பேச்சாளராக தற்போது பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். இவரது பங்குச்சந்தை முறைகேடு குறித்து ஏற்கனவே 'பாய்லர் ரூம்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது.



 இந்நிலையில் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்போர்ட் பாத்திரத்தில் டி காப்ரியோ நடித்துள்ளார். கிட்டத்தட்ட இதேபோன்ற பாத்திரத்தில், ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'கேட்ச் மி இப் யூ கேன்' என்ற படத்திலும் டி காப்ரியோ நடித்திருக்கிறார். 1960-களில் வங்கிக் காசோலை மூலம் மில்லியன் கணக்கான டாலர் முறைகேடு செய்து எப்.பி.ஐ.யி டம் பிடிபட்ட பிராங்க் அபாக்நேல் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் அநாயசமாக நடித்திருப்பார் டி காப்ரியோ. தற்போது காசோலை முறைகேட்டை தடுப்பதில் எப்.பி.ஐ.க்கே உதவிகரமாக இருந்துவருகிறார் பிராங்க் அபாக்நேல்.


'ஷட்டர் ஐலாண்ட்' படத்துக்குப் பின்னர் டி காப்ரியோ மீண்டும் ஸ்கார்சஸியின் இயக்கத்தில் நடித்திருப்பதால் 'தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், வெளியீட்டுக்கான தேதி தள்ளிப்போடப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்கார்சஸி - டி காப்ரியோ படம் என்பதால் தாராளமாகக் காத்திருக்கலாம்.

நன்றி - த தமிழ் ஹிந்து