Monday, July 15, 2013

இயக்குனர் ஹரி தமிழ்நாட்டுக்கே மச்சான் ஆனது எப்படி?

1. தமன்னாவுக்கு ரூ.1 கோடி ரொம்ப ஓவர்: தயாரிப்பாளர் ் # மாநிற நயன்தாராவுக்கு 1 1/2 கோடி தரும்போது லெமனா வந்திருக்கும் தமனாவுக்கு தரக்கூடாதா?



-----------------------


2  காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டுமாம் – திலகவதி பரபரப்பு தகவல்! # FEMALE அதிகாரின்னா?



----------------------------


3. ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு ஊழல். உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து திட்டத்தை நிறுத்தியது. # ஸ்மார்ட் ஜாப் பை கோர்ட்



--------------------------


4,  சேது திட்டத்தை என் நலனுக்காகவா கேட்கிறேன் - மு.க #,ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டாரே தலைவா?


-------------------------


5. அனுஷ்கா எனக்கு சகோதரி: இயக்குனர் ஹரி # தமிழ்நாட்டுக்கே மச்சான் ஆகிட்டாரே



---------------------------


6. மெகா பட்ஜெட்படத்துக்காக‌ மீண்டும் இணையும் விஜய் - ஷங்கர் கூட்டணி. |# மீண்டும் ஒரு ரீமேக்கா?



------------------------

7. அன்பே! நீ அடிக்கடி நாக்கைத்துருத்தி கேப்டன் போல் பழிப்புக்காட்டும் அழகு பலுப்பு தெலுங்குப்பட சீனை விட செம கிளுகிளுப்பு



------------------------


8. இந்திய அரசியல்வாதிகளின் கொள்கை.DONT BE INDIAN. BUY INDIAN



------------------------


9. 2 ஹீரோயின் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா #மேடம்.2,ஹீரோ படம்னா ஓக்கேவா?




-------------------------


10. நாட்டில் மதத்தை விட சாதியே பலம் வாய்ந்தது.வீட்டில் பொஞ்சாதியே புருசனை விட பலம் வாய்ந்தது


--------------------------


11. பணக்காரனின் பசி மேன்மேலும் ஏழையை சுரண்டும் கோரப்பசி.எத்த்னை சம்பாதித்தாலும் வயிற்றை நிரப்ப முடியாதது ஏழையின் அகோரப்பசி


-------------------------------------------


12. எதிர்காலத்தில் நான் ஒரு தமிழரை திருமணம் செய்வேன் - நடிகை நஸ்ரியா # அப்போ நிகழ்காலத்துல யாரை மேரேஜ் பன்னிக்குவீங்க?



-------------------------


13. விஸ்வரூபம்-2 சர்ச்சை குறைவு., ரொமான்ஸ் அதிகம் - கமல்ஹாசன் # ஓஹோ.விஸ்வரூபம் இந்த ரூட்டுல?



--------------------------


14. இன்றைய இளம் கதாநாயகர்களுக்கு இணையாக என்னால் ஆட முடியும் - டி.ராஜேந்தர் # ஏன் அவங்களுக்கு "இணை"யா ஆடனும்? ஹீரோயின் க்கு இணையா ஆடுங்க



----------------------


15. தமிழ் இனத்தலைவர் டாக்டர் மு க வுக்குப்பிடிச்ச 2 தமிழ் சினிமாக்கள் 1 தில்லுமுல்லு 2 கை கொடுக்கும் கை


-------------------------


16. வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது - பிரதமர்! # வேற எங்கே தாக்குதல் நடத்தினா ஏத்துக்குவீங்க?"



----------------------------


17. MGRவரவேற்ற சேது சமுத்திர திட்டத்தை ஜெ எதிர்ப்பதா: கருணாநிதி # தலைவரே.காங்கிரசை படுகேவலமாத்திட்டின நீங்களே மகளுக்காக பம்மலையா?



--------------------------


18. திமுகவில் இருப்பது கும்பல் அதிமுகவில் இருப்பது கூட்டம் -பரிதி # இவரு பெரிய அஜித்.எனக்குப்பின்னால ஒரு கூட்டமே இருக்கு.அது னு பஞ்ச் டயலாக்



---------------------------

19. பிரதமர் பதவிப் போட்டியில் நானும் இருக்கிறேன் -மாயாவதி# ஏம்மா மாயா வதை.தள்ளி நில்லம்மா - மோடி



-----------------------


20. தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா # உலகத்துலயே இளிச்சவாயன் தமிழன்தான் என்பதாலா?


--------------------------------------

Saturday, July 13, 2013

காதலே என்னை காதலி -சினிமாவிமர்சனம்

 

பஞ்சத்துக்குப் பிறந்த  பஞ்சப் பரதேசிங்க  2 பேரு  ஒரு 65 மார்க்ஃபிகரை யாருமே இல்லாத ஒரு அத்துவானக்காட்டில் துரத்தறாங்க. ( டேய், அதான் 3 பேரு இருக்காங்களே, அப்புறம் எப்படி யாருமே இல்லாத காடு ? ) . அட, ஓப்பனிங்க்லயே செம கிளுகிளுப்பா இருக்கேன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா அவனுங்க 2 பேரும் அந்த ஃபிகர் ஹேண்ட் பேக்கை பிடுங்கிப்பார்த்து அதுல காசு ஏதும் இல்லைன்னு அப்படியே அவளைதள்ளி விட்டுட்டுப்போய்டறானுங்க . அடேங்கப்பா , உத்தமவில்லன் கமல் இல்லை. இவனுங்க தான்.


ஹீரோ அங்கே வர்றார்.ஹீரோயினை தூக்கி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போய்டறார்.அகத்தியன் ன்  காதல்கவிதை ரேஞ்சுக்கு 2 பேரும் ஓவரா ஃபீல் பண்ணி லவ்வறாங்க.

இதுல என்ன பிரச்சனைன்னா ஹீரோயின் ஃபாரீன்ஃபிகரு. தம் அடிக்குது , சரக்கு அடிக்குது . இன்னும் என்ன  என்ன எல்லாம் அடிக்குதோ? 




ஹீரோ ஒரு   உலக மகா உத்தமன். எந்த கெட்ட பழக்கமும்  இல்லாதவர், எம் ஜி ஆர் , ராமராஜன்  வரிசைல 


இப்போ தான்  திரைக்கதைல செம ட்விஸ்ட். ஹீரோவோட அப்பா இவங்க மேரேஜ்க்கு  ஒத்துக்கலை. மேரேஜ்க்குத்தானே  ஒத்துக்கலை? நாம லவ்விட்டு  இருப்போம்னு  2  பேரும்  தெருத்தெருவா  ரோடுரோடா  ஹோட்டல் ஹோட்டலா சுத்தறாங்க.. கொடுமை என்னான்னா  எந்த வித சுவராஸ்யமான  சம்பவங்களோ,திருப்பங்களோ இல்லாம சும்மா சுத்திட்டு மட்டும் இருக்காங்க


இப்போ 6 ரீல் முடியுது.இடைவேளை ட்விஸ்ட் வேணுமே?ஹீரோயின் பெட்ரோல் கேன் எடுத்து  தன் மேல  ஊத்திக்கிட்டு   ஹீரோ அப்பாவை   மிரட்ட பத்த வெச்சுக்கறார். டொட்டடொய்ங்க். இடைவேளை



இடைவேளை முடிஞ்சு பதட்டத்தோட வந்து பார்த்தா யாருக்கும்  எதுவும் ஆகலை.ஹீரோவோட அப்பா  ஹீரோயினை கேவலமா  திட்டிடறாரு . கட்சிமாறுன   எம் எல் ஏக்களை கேப்டன் திட்டுன  மாதிரி . ஹீரோ  செம  காண்ட் ஆகி  தேவதாஸ் மாதிரி தண்ணி  அடிக்க ஆரம்பிச்சுடறாரு. 5 ரீல் இப்ப்டியே ரோடுரோடா  மப்புல  கிடக்காரு . காசு  கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே வந்த பாவத்துக்கு   இதை எல்லாம் பார்த்து  தொலைக்க வேண்டி இருக்கு.


 திடீர்னு  ஹீரோ அப்பா மனசு மாறிமேரேஜ்க்கு  ஓக்கே  சொல்லிடறாரு. ஹீரோ  ஹீரோயின்  2 பேரும்  செம சந்தோஷம்  ஆகி காரில்  வரும்போது  ஹீரோ கிஸ்  கொடுக்கறார். டிரைவிங்க்  பண்ணிட்டு  இருந்த ஹீரோயின் விபத்துல மாட்டி ஆள் அவுட். புன்னகை  மன்னன் ரேஞ்சுக்கு திங்க்கிங்க் .


இதுக்குப்பிறகு  என்னாஆகுது  என்பது  கேவலமான சஸ்பென்ஸ்

 



அடங்கப்பாசாமி டைரக்டரு  .. முடியலப்பா 


ஹீரோ சந்தோஷ்தான்  தயாரிப்பாளர் போல . தாடி  , பரட்டைத்தலை, துவைக்காத  பேண்ட் , அயர்ன் பண்ணாத கேவலமான சட்டை, அக்மார்க்  தமிழ் சினிமா ஹீரோ  மாதிரியே...



ஹீரோயின் அனாரா  நிஜமாவே ஃபாரீன்ஃபிகர்  போல.  இலியானாவுக்கு ஒரு தங்கச்சி  இருந்து அதுக்கு  10 நாள் டைபாய்டு காய்ச்சல்  வந்து படுத்தா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு.எந்த மாடல் சுடிதார் போட்டாலும்  துப்பட்டாவே  தேவைப்படாத  ஒல்லி தேகம். ஆனா அவர் இடை இருக்கே இடை .எல்லா தமிழ் ஹீரோயின்களும்  பார்த்து பொறாமைப்படும் உள்ளடங்கிய  ஏழையின் பசி வயிறு மாதிரி அபாரம் .


இவர் காதல் வந்து  தடுமாறும் காட்சிகள்,தமிழ்  கற்கும்  காட்சிகள்  எல்லாம் படு செயற்கை. அதேபோல் வேண்டுமென்றே  வலிய  திணிக்கப்பட்ட   ஹீரோயினின்  தம் அடிக்கும்  தண்ணிஅடிக்கும் காட்சி எடுபடவில்லை.

 ஆனா ஒருவிஷயம்.கிளாமர் காட்டுவதில்  அம்மணி அபாரம் . ஐ லைக் இட்.


படத்துல  பாராட்டவோ , திட்டவோ  வேற யாருமில்லை





இயக்குநர் பாராட்டுப்பெறுமிடங்கள்


1.படம்  முழுக்க  லண்டனில் படமாக்கப்பட்டது என விளம்பரம்  போட்ட போஸ்டர்  ஊர் எங்கும்  ஒட்டியது. ஏதோ   லவ்  க்ரைம்  த்ரில்லர்  ரேஞ்சுக்கு பில்டப்   குடுத்தது.


2.ஹீரோயினுக்கு அழகழகான  டிரஸ் வாங்கிக்குடுத்து  உலாவவிட்டது. கேமராமேனை   நல்லாகவனிச்சு  ஹீரோயினை  சரியான ஆங்கிள்ல கேமரா  ஷாட் வெச்சது


3. ஒளிப்பதிவு  லண்டன்  நகரை அழகாக படம்  பிடித்தது





இயக்குநரிடம் சில கேள்விகள்



1.ஹீரோ  வோட  ஷூ  அழுக்காகி   இருக்கு  ஒருசீன்ல. ஹீரோவோட அப்பா  நிழல்கள் ரவி   தன்   கர்ச்சீப்பால அதை துடைக்கறார் .அடுத்தஷாட்லயே ஹீரோ சாப்பிட  வரும்போது  எனக்கு  சுத்தம் தான்  முக்கியம், போய்வாஷ் பண்ணிட்டு வான்னு  விரட்டறார். ஏனிந்தமுரண்?  



2. டேய்.. நீங்க  எங்கடா  இங்கே? என  ஹீரோ  தன் 4 நண்பர்களிடம்  கேட்பதும்  அவர்கள்  வழிவதும் செம  போர்.  இந்தலட்சணத்துல  3   டைம்  இதே மாதிரி   காட்சிவருவது


3.மனோரமா   மயில்சாமி  சரக்கு அடிக்கும்  காட்சி உவ்வே. மரியாதைக்குரிய  ஆச்சியை  நைட்டியுடன்  காட்டி  சரக்கு அடிக்கவைத்து  இப்படிஅவமானப்படுத்தி இருக்க வேணாம்


4. ஹீரோ ஒரு   சீன்ல   ஹீரோயின் கிட்டே”நீ ஏன் கம்மலே போடறதில்லை? போட்டா   நல்லாருக்கும் அப்டிம்பாரு. ஆனா ஹீரோயின்  4  டைம்காதுல ஸ்டெட்டோடவருது ( நாங்க   ஹீரோயின்  காதை  மட்டும் தான்  கவனிச்சோம்)


5. ஹீரோயின்   சரக்கு அடிச்சுட்டு ஹீரோ மேல  வாமிட் எடுப்பதும்  , ஹீரோ சரக்கு அடிச்சுட்டு  ரோட்டில்  வாமிட்  எடுப்பதும்  உவ்வே. காமிராஆங்கிள்ல யாவது கவுரமா  காட்டி  இருக்கலாம்


6. சார் , படத்துல திரைக்கதை  அப்டினு ஒரு அம்சமேஇல்லையே? நீங்க ஒரு ஃபாரீன்ஃபிகரை  உஷார் பண்ணிட்டு  போறதை   ஒரு படமா  எடுக்கனுமா?





 மனம் கவர்ந்த வசனங்கள்



1.வெள்ளைக்காரப்பொண்ணா  இருந்தாலும்  மனசு ரொம்பப்பெருசு


 ஆமா,கொழுக் மொழுக்னு அழகா


 டேய்...... 




2. விண்ட்டருக்கு போர்த்திட்டு   இருந்தவங்க   எல்லாம் சம்மருக்கு   கழட்டி வெச்சிருப்பாங்க



3. டாடி , 15வயசுல இருந்து  25வயசு வரை  தான் பசங்க ஜாலியா சுத்தும் வயசு. ஃப்ரீயா விடுங்க ( அதைஏன் 34வயசான ஹீரோ சொல்றரு, ? ) 



4. அடடா , அவ மிஸ் ஆகிட்டாளே,போய்ட்டாளே 


 மிஸ் ஆகாம  இருந்தா மிசஸ் ஆக்கி  இருக்கலாம்னு  பார்த்தியா? 



5  ஹீரோ பஞ்ச்  - நான்  சரக்கு அடிக்க  மாட்டேன். ஏன்னா நான் தமிழன்  ( அடங்கப்பா சாமி , காது வலிக்குது) 



6.  ஆஃபீஸ்  இருக்குன்னு  சொன்னீங்க,இப்படி  சின்னதா உள்ளடங்கி இருக்கு? 

 சீக்ரெட் ஆஃபீஸ் ஹிஹி 



7.  குற்ற வாளி முத   டைம்   தப்பு  பண்ணும்போதுதான்    பயப்படுவான் , அப்புறம் அவன்  தைரியமா   தப்பு   பண்ணுவான்


8  குடிச்சுட்டு போனா   தூக்கம் தூக்கமா   வருது 


 பின்னே ? வருமானமாவரும் ? 







 ஆனந்த  வி கடன்   எதிர்பார்ப்பு மார்க் - 32


குமுதம்  ரேங்க் - ம்ஹூம்  தேறாது



 ரேட்டிங்க்  -      1  /  5


சி.பி கமெண்ட் -   ஃபாரீன் ஃபிகரை சைட் அடிக்க நினைக்கும் ஆட்கள் மட்டும் போலாம் . மத்தவங்க   எஃப்  டிவி பார்க்கவும்  . இந்த  குப்பையை   சிதம்பரம்  வடுகநாதன் தியேட்டர்ல பார்த்தேன்

கிழியும் முகத்திரை-பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!


கிழியும் முகத்திரை

பெரிய அண்ணனின் இன்டர்நெட் உளவு!

ரமணன்

நீங்கள் தமிழனா, மலையாளியா, பெங்காளியா யாரா இருந்தால் என்ன? உங்களின் மெயில், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், இன்டர்நெட்டில் அனுப்பப்படும் போட்டோக்கள், ஸ்கைபில் பேசுவது, யு டியுபில் பார்ப்பது, அனுப்புவது எதுவாக இருந்தாலும் அமெரிக்க உளவுத் துறையால் எப்போது வேண்டுமானாலும் சர்வரிலிருந்து நேரடியாகப் பெற்றுப் பார்க்க முடியும். தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும். அதற்கான அதிகாரமும் அத்தனை வசதிகளும் அவர்களிடம் இருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், கூகுள், யாகூ போன்ற எல்லா நிறுவனங்களும் இதற்கு உதவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன, இந்தத் திட்டத்துக்குபிரிசம்’ (PRISM) என்று பெயர்.


உலகம் முழுவதும் உள்ள தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிடும் மிகப்பெரிய குறுக்கீடு, மனித உரிமை மீறல் இதுஎன்ற அதிர்ச்சியான தகவலை, கடந்த வாரம் புகழ்பெற்ற தினசரிகார்டியன்வெளியிட்டது. ‘கார்டியன்இதழ் அதன் நம்பகமான செய்திகளுக்கும், ஆணித்தரமான தலையங்கங்களுக்கும் பெயர் பெற்றது. தொடர்ந்துவாஷிங்டன் போஸ்ட்தினசரியும் இது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது.

NSA தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸி என்பது அமெரிக்க உளவுத் துறையின் ஓர் அங்கம். 1952லேயே தொடங்கப்பட்ட இது, முதல் 20 ஆண்டுகள் எங்கிருந்து இயங்குகிறது என்பதே தெரியாத அளவுக்கு ரகசியமானதாக இருந்தது. NSAஎன்றால்நோ ஸச் ஏஜென்சிஎன்றுகூட கிண்டல் செய்யப்பட்டது. 1975 முதல் இது வெளிநாடுகளில் அமெரிக்கப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சந்தேகத்துக்குரிய நபர்களின் செய்தித் தொடர்புகளைக் கண்காணிக்கிறது.





 அமெரிக்க மக்களின் தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை என்று இதன் அன்றைய தலைவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆஜராகித் தெரிவித்தார். ஆனால் இந்த நிறுவனம்தான் இப்போது அமெரிக்கா மட்டுமில்லை... உலகம் முழுவதும் உள்ள அத்தனை பேரின் அந்தரங்கத்துக்குள் ஊடுருவும் சர்வ வல்லமை பெற்றிருக்கிறது. இது அமெரிக்க அதிபரின் அனுமதியையும் பெற்றிருக்கிறது என்கிறது கார்டியன். என்.எஸ்.. இன்று ஆண்டுக்கு 20 கோடி டாலர் பட்ஜெட்டில் 1000 பேருக்கு மேல் பணியாற்றும் (பலர் ராணுவ சேவை என்ற போர்வையில்) நிறுவனம். பல வெளிநாடுகளில் அலுவலகங்கள் நிறுவி உலகின் மிகப் பெரிய கண்காணிப்பு நிறுவனமாக பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இதன் கண்காணிப்புப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்தியா. கடந்த மார்ச் மாதம் மட்டும் இவர்கள் ஆராய்ந்திருப்பது 63 லட்சம் இந்தியச் செய்திகளை!


அமெரிக்கச் சட்டத்தின்படி அமெரிக்கரின் அல்லது வெளிநாட்டவரின் தொலைபேசி மற்றும் எந்த ஒரு செய்தித் தொடர்புகளையும் கண்காணிக்க வேண்டுமானால் அரசு அதற்கென மட்டுமே இயங்கும் ஒரு கோர்ட்டில் ரகசிய ஆணையை வாரண்ட்டாகப் பெற வேண்டும். இது செனட் கமிட்டிக்குத் தெரிவிக்கப்படும். ஆனால் இப்போது இது என்.எஸ்..வின் நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது என அமெரிக்க அதிபர் விசேஷ அதிகாரம் அளித்திருக்கிறார். அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் யாருடைய இன்டர்நெட் கணக்கையும் கண்காணிக்க முடியும். இந்த அதிகாரம் புஷ் அதிபராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஒபாமா அதன் ஆயுட்காலத்தை இப்போது நீட்டித்திருக்கிறார். ஒபாமா தன் முதல் தேர்தலில்புஷ் நிர்வாகத்தில் அமெரிக்க மக்களின் தனி உரிமைகளில் அரசாங்கத்தின் தலையீடுகளைகண்டித்தவர்.

செய்தி வெளியாகி ஊடகங்கள் கலக்கிக் கொண்டிருந்தபோது, ‘பிரிசம்பற்றி எங்களுக்குத் தெரியாதே! நாங்கள் கோர்ட் கேட்கும் தகவல்களை மட்டுமே கொடுப்போம். எங்கள் வாடிக்கையாளர்களின் செய்திகளை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை என எல்லா இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் தெரிவித்தன. எல்லா கம்பெனிகளின் அறிக்கைகளும் ஒரே மாதிரியான வாசகங்களைக் கொண்டிருப்பதிலிருந்தே உண்மை புரியவில்லையா? எனக் கேட்கிறது வாஷிங்டன் போஸ்ட்.



 அமெரிக்க அதிபர் ஒபாமாதேச நலனுக்காகச் செய்யப்படும் விஷயங்களில் எந்த நிர்வாகமும் 100% பாதுகாப்பும், 100% தனி உரிமையையும் 0% யாருக்கும் தொல்லையில்லாத வாழ்க்கையையும் அளிக்க முடியாதுஎன்று சொல்லி இருப்பது அவரின் ஆசியுடன்தான் இந்த விஷயங்கள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்கிறது. பிரிசம் பிரிவினருக்கு பயிற்சி அளிக்க தயாரிக்கப்பட்டிருந்த 41 ஸ்லைடு ((power point slides) கள் கார்டியனிடம் சிக்கியதால் வெளிச்சத்துக்கு வந்த விஷயம் இது. எப்படி இந்த அதி ரகசிய ஆவணம் லீக் ஆனது என்பதை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ‘மக்கள் நலன் கருதி சொன்னது நான்தான்என எட்வர்ட் ஸ்னோடென் என்பவர் அறிவித்திருக்கிறார். இவர் என்.எஸ்..வின் முன்னாள் ஊழியர்.

இணைய உலக வாசிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எழுப்பக் காத்திருக்கின்றன. மீடியாக்கள் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் அகில இந்திய சேவை வழங்குவோர் சங்கம், அமைச்சர் கபில் சிபிலைச் சந்தித்து, பிரச்னை குறித்துப் பேச இருக்கிறார்கள்.


எது எப்படியோ... இனி மெயில் எழுதும்போதும் ஃபேஸ்புக் கமெண்ட் போடும்போது ஜாக்கிரதையாக (தலைவர் ஒபாமா வாழ்க?) எழுதுங்கள். பெரிய அண்ணன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


thanx-kalki

ஃபிகர் டக்கர்னு ஒரு அப்பாட்டக்கர் சொல்லீட்டா என்ன செய்ய?

1. பொண்ணுங்க ஏன் காமெடி நடிகை டி பி வைக்கறதில்லைன்னா்.அவங்களுக்கு ஆம்பளைகளை காமெடி பீஸ் ஆக்கித்தான் பழக்கம்


-----------------------


2. பிகர்ட்ட போய் உங்க அப்பா டக்கர்னு சொல்லலாம்.அப்பா கிட்டே போய் உங்க பொண்ணு டக்கர்னு சொல்ல முடியுமா? # sms ஆப் எ அப்பாடக்கர்



----------------------------


3. நடிக்க வராவிட்டால் சமையல் காரனாய் மாறியிருப்பேன் – தனுஷ்! # இப்போ மையல் காரனா ஆகிட்டீங்க போல.எத்தினி ? அடேங்கப்பா



-------------------------


4. தமிழ்இங்க்லீஸ் ல ட்வீட் போடறவங்க கவனம்.athan ( அதான்) னு போட்டாக்கூட சிலர் அதை அத்தான் னு படிச்சிடுவாங்க ( athuthaan)


-------------------------


5. டேமேஜர் ஸார்.யார் யாருக்கு எவ்ளவ் இன் கிரீமென்ட்னு நோட்டீஸ் போர்டுல ஒட்டிடுங்க.சொல்லி மாளலை



------------------------


6. இன்னைக்கு டாக்டர்கள் தினமாம்.நர்சுங்க ஜாக்கிரதை ;-)



-----------------------


7. ஜூலை11 மக்கள் தொகை தினம்... #ரெடி ஆகறவங்க ரெடி பண்ணிக்குங்க ;-)),# மியாவ்



---------------------------


8. கலைஞரின் ராஜ தந்திரத்தால்தான் கனிமொழி வெற்றி # கால்ல விழறதுதான் ராஜ தந்திரமாங்ணா? பூவை புய்ப்பம்னு சொல்லலாம்.பூனையை யானைனு சொல்லலாமா?



-------------------------


9. இடைநீக்கம் செய்ததில் மகிழ்ச்சியே- தேமுதிக அதிருப்தி MLAக்கள்.#உங்களை மாதிரி துரோகிகளுக்கு இடையையே நீக்கி இருக்கனும்



-------------------------


10. திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமத்தனம் - பாரதிராஜா அறிக்கை # அன்னக்கொடி படம் ஹிட்னு யாராவது சொல்லீட்டாங்ளா?



-----------------------------


11 சூர்யா - எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட மாட்டேன்.


 அனுஷ்கா - ஏனிப்படி புலம்பறீங்க? ஏணிப்படி எதுக்கு இருக்கு? 


-----------------------


12 ஒரு சிங்கம் இங்கே வெட்டியா இருக்கு.இன்னொரு சிங்கம் எங்கே ? அந்த இன்னொண்ணு தாண்ணே இது # சிங்கம் 2


------------------------


13 தேமுதிகவை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என்பது அர்த்தமற்ற பேச்சு - முகுல் வாஸ்னிக் # 2 பேரும் பெரிய நயன் தாரா சிம்பு கூட்டணி?



-----------------------------


14. என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?:- ஸ்ருதி # சரி.சித்தி ஓக்கே?



----------------------------


15. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 50சத பிரதிநிதித்துவம் ~ ராகுல் காந்தி #கட்சில ரகசியம் தங்காது?


--------------------------


16. தேசிய நதிநீர் இணைப்பு பற்றி முதன்முதலாக பேசியது நான் தான்: சரத்குமார் #நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா?னு பாடி இருப்பாரு


--------------------

17. சுயமரியாதைக்காக அதிமுகவில் சேர்ந்தேன் -பரிதி இளம்வழுதி! # நம்ம கட்சில புதுசா சேரும் எல்லாரும் காமெடி பீசுங்ளே - ஜெ



------------------------


18. என்னுடன் ஃபோட்டோ எடுக்க 500ரூபாய்-ஸ்டாலின்# ஐடியா ல உங்க அய்யாவையே மிஞ்சீட்டீங்க


-------------------------


19. ராஜ்யசபா வில் ஆதரித்திருந்தாலும் காங்குடன் கூட்டணி இல்லை: கருணாநிதி # தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு போட்டோ எடுத்து முரசொலி ல போடுனும்



--------------------------------


20. விஜயகாந்துக்கு முதல்வராகும் ஆற்றலும், துணிவும் இல்லை :-சரத்குமார் # நீங்க வருங்கால முதல்வராங்ணா?


--------------------------------

Friday, July 12, 2013

கும் கி லட்சுமிமேணன் உங்க ஆஃபீஸ்ல வேலை பார்த்தா எப்படி இருக்கும் ?

1. விஷாலை கட்டிப்பிடித்து அழுத டைரக்டர்! பூபதிபாண்டியன் # ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு.நம்ம 2 பேர் படமும் அவுட்டு



-----------------------


2. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண அவர் மகளுக்கு ராஜ்ய சபா சீட்டில் ஆதரவு கொடுத்து விடல்



-------------------------


3. படம் இயக்கப்போகிறார் காமெடி சந்தானம்! # தீயா ரீமேக் பண்ணாதே குமாரு.நீயா புதுக்கதை ரெடி பண்ணு குமாரு



-------------------------


4. கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு - # தீயோரை தீயோரே ஆதரிப்பர்


---------------------


5. எம் ஜி ஆர் இப்போ இருந்தா - இது நாட்டைச்சுரண்டும் "கை",நம் வீட்டை ஒழிக்கும் கை.இந்தக்கை நாட்டின் சாபக்கை


---------------------------


6. ADMK வுக்குதான் ஓட்டு: தேமுதிக. அதிருப்தி MLA க்கள் அதிரடி # கேப்டன் - துரோகம்.அரசியல்ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை




--------------------------


7. மைனர் பெண்ணுடன் கில்மா. இத்தாலி முன்னாள் பிரதமர் 7 ஆண்டு சிறை தண்டனை# இத்தாலின்னாலே பிரச்சனை தான்


----------------------


8. டிஸ்ட்ரிபியூட்டர் - சார்.தலைவா பார்த்தோம்.தமிழன் மாதிரியே இருக்கே?



விஜய் - நல்லா பாருங்க.ஜோடி அதுல பிரியங்கா.இதுல ங்கா ஐ மீன் அமலாபால்




-----------------------

9. OPS - மேடம்.தலைவா வை தடை பண்ணிடலாமா?



ஜெ - வேணாம். விஸ்வரூபம் எனக்குக்கத்துக்கொடுத்த நீதி - தடை போட்டா படம் ஹிட்


--------------------------


10 விஜய் - இந்தத்தடவை மகேஷ் படத்தை ரீமேக் பண்ணலை.என் படத்தை நானே ரீமேக் பண்ணாட்டி வேற யார் பண்ணுவா ? # வேலாயுதம் = தலைவா ( கற்பனை)



-----------------------------



11. தமிழில் படித்தால் சட்டி சுரண்ட கூட லாயக்காக மாட்டார்கள்-சோ# ஹிந்தி படிச்சவங்கதான் நாட்டையே சுரண்டிட்டு இருக்காங்களே?




--------------------------


12. ராஜ்யசபா தேர்தல் போட்டி எம்.எல்.ஏக்களின் விசுவாசத்துக்கான டெஸ்ட்-விஜயகாந்த்# ஸெண்ட் போட்டுட்டே மாத்தி குத்திடப்போறாங்க



----------------------------


13. சி.பி.ஐ.யை வைத்து என்னை மிரட்ட வேண்டாம்: மத்திய அரசுக்கு மோடி..# அப்போ உங்க சம்சாரத்தை விட்டு மிரட்னாதான் பயப்படுவீங்ளா?



-------------------------


14. நான் வாய் திறந்தால் பா.ஜனதா தலைவர்களின் நிலைமை மோசமாகிவிடும்: நிதிஷ் குமார் # இப்போ திறந்தீங்க.1ம் ஆகல?



------------------------


15. சோனியா உத்தரவிட்டால் தரையை கூட பெருக்குவேன் -அமைச்சர் சரன் தாஸ்# நல்லா வாசல் கூட்டுவீங்ளா? கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆக்கிட வேண்டியதுதான்



------------------------------


16. மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர் # ஜி ஹாங் ,டீக் ஹை மட்டும் கேட்டிருக்குமே?


--------------------------


17. சினிமா சான்ஸ் இல்லாவிட்டால் ஆபிசில் வேலை பார்ப்பேன்: லட்சுமி மேனன் # நீங்க பார்ப்பீங்க.ஆபீஸ் ல ஒரு பய வேலை பார்க்க மாட்டான்




---------------------------


 18. மான் வேட்டையாடிய 5 பேருக்கு ரூ. 1,15,000 அபராதம் # இந்த மான் கவர்மென்ட் சொந்தமான்.பைனை கட்டும்மா


-------------------------


19. உளுந்தூர்பேட்டை அருகே இந்துமத முறைப்படி சீனப்பெண் காதல் திருமணம்.# சைனீஷ் லவ்வுக்காவது கேரன்டி உண்டா?



-----------------------


20. எங்களை அடக்கமுடியாது: பாராளுமன்ற தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெறுவோம்: அன்புமணி#அடங்காமாரி அன்புமணி ?


---------------------------------

Thursday, July 11, 2013

A ல ஆரம்பிக்கற பேர் உள்ள பிகருங்க ஏ காந்தமா வாழ்க்கையை அனுபவிப்பாங்க

1. உன்னைப்பிடிக்காமல் போகாது யாருக்கும்.பைத்தியம் பிடிக்க வைக்கும் பேரழகி நீ!



--------------------------


2. பொண்ணுங்க்ளுக்கு பிடிச்ச ஹீரோக்கள் நமக்குப்பிடிக்காது # பொறாமை



--------------------------


3.  உலகில் மிகப்பழமையானது கல்லணை , மிக மென்மையானது உன் நெஞ்சணை


-----------------------------


4. அன்பே!் உனக்கு ஒன்றுமில்லாமல் இருக்கலாம்,ஆனால் நீ எனக்கு எல்லாமானாவள்



-------------------------


5  கலைச்செல்வியை சகியா ( மனைவி) கொண்ட கணவன் அன்பா கூப்ட்டாலும் ஆபத்து. சகி கலை ( சகிக்கலை)


----------------------------


6. வீட்டில் இனிப்பு பற்றி கனவு கண்டால் அது ஸ்"வீட்டு" ட்ரீம்



---------------------------


7. அன்பே! உன் வாய் வேண்டுமானால் உனக்குச்சொந்தமாக இருக்கலாம்.ஆனால் அது தரும் முத்தங்களுக்கு ஏக போக உரிமைக்காரன் நான் தான்



-----------------------------


8. தீயா வேலை செய்யனும் குமாரு என கட்டளை இட்டு அந்த தீயையே அணைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழி நீ!


-----------------------------


9. நம்ம காதல்ல சோகம் என்னான்னா என்னால உன்னைக்காப்பாத்த முடியல.


-------------------


10.  பத்மநாபன் கோயில் ல கடவுளை க்ளோஸப் ல பார்க்க 20 ரூபா.ரொம்ப கிட்டக்கா போய் பார்க்க 250,ரூபா # சினிமா தியேட்டர் தோத்துது



--------------------------


11/ முதல் இரவு அறைக்கு அலாரம் டைம்பீஸ் எடுத்துட்டுப்போறவன் முன் ஜாக்கிரதை முத்தண்ணா.எடுத்துட்டுப்போகாதவன் விழிப்புணர்வு மிக்கவன்



-------------------------


12. அணில் சேமியா வாங்கும்போது விஜய் நினைவு வந்தா நீங்க அஜித் ரசிகர்



--------------------


13. வெர்ஜீனியானு ஒரு பிகர் பேரு.. வெர்ஜின் நீயா? னு மனசுக்குள்ளே பிரித்து எழுதிப்பார்த்துக்கிட்டேன்



----------------------------


14. விஸ்வரூபம் 1 =,,கோபமா இருக்கும் (சொந்த) சம்சாரம் . விஸ்வரூபம் 2 = சம்சாரத்தை கோபப்படுத்துனது ஏன் என கோபப்படும் மாமியார்



------------------------


15. பொண்ணுங்களுக்கு ராங் கால் பண்ணி அவங்க முகத்துல கரி பூசும் சோழன் = கரி CALL சோழன்


--------------------------

16.  நிறைய பசங்க கடன் வாங்கவே அன்புக்குரிய தோழிகளை பயன்படுத்திக்கறாங்க



------------------------

17. உன் அன்பான உள்ளங்கை அழுத்தத்தில் தெரியும் உன் உண்மையான காதலின் நெருக்கம்



------------------------


18. செல்வத்திரு தமிழா.எப்போதும் உன்னுடன் செல் வைத்திரு



-----------------------


19. காதலி நாடோடித்தென்றல் ரஞ்சிதா மாதிரி வாத்து மேய்ச்சுட்டு இருந்தா நாம நக்கலா கேட்கலாம் - இதானா உன் டக் கு?




--------------------------


20. A ல ஆரம்பிக்கற பேர் உள்ள பிகருங்க் ஏ காந்தமா வாழ்க்கையை அனுபவிப்பாங்க. # அனுஷ்கா ,அஞ்சலி ,அமோகா,அசின்



-------------------------