Tuesday, June 18, 2013

அங்கோர் அப்சரா


ஜி.எஸ்.எஸ்.

அங்கோர் வாட் மைய ஆலயத்தின் வெளிப்புறம் சுமார் 800 மீட்டர் நீளச்சுவர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதன் நீளத்தால் மட்டுமல்ல, அதில் காணப்படும் அழகிய சுதைச் சிற்பங்களால்.


குருட்சேத்திரப் போர் விரிவாக சித்திரிக்கப்படுகிறது. பீஷ்மரின் அம்புப் படுக்கைக் காட்சியிலிருந்து கர்ணனின் மரணக் காட்சி வரை கண்டு ரசிக்க முடிகிறது. தென்மேற்கு மூலையில் உள்ள சிற்பங்கள் ராமாயணம் தொடர்பானவை.


இந்த இரு காவியங்கள் மட்டுமல்ல, சொர்க்கக் காட்சி, நரகத்தில் கிடைக்கக்கூடிய தண்டனைகளை வலியுறுத்தும் காட்சிகளும் அருமை.


எருமை மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார் பதினெட்டுக் கைகள் கொண்ட யமதர்மன். கம்போடியாவின் ஆஸ்தானச் சிற்பமான கூர்மாவதாரக் காட்சியும் உண்டு.


படிக்கட்டுகள் இல்லாத உயரப்பகுதி ஒன்றும் உள்ளது. யானையில் வரும் மன்னர்கள் அங்கு யானையைக் குனிய வைத்து அந்தப் பகுதியில் இறங்கி ஆலயத்துக்குள் வருவார்களாம்.


ஜெர்மனி நாட்டு தொல்லியல் நிபுணர்கள் அங்கோர் வாட்டை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இவ்வளவு பெரிய இந்து ஆலயத்தைப் பாதுகாத்து புதுப்பிக்கும் வேலையில் நம் நாட்டு நிபுணர்கள் ஈடுபட்டிருக்கலாமே" என்றான் ஜருகண்டி.

அப்படித்தான் ஈடுபட்டார்கள். ஆனால் அந்தப் பணியில் ஏதோ தவறான அமிலமும் சேர்க்கப்பட்டதால், வேண்டாத விளைவுகள் சில உண்டாகின என்று செய்தி பரவியது" என்றார் ராமநாதன்.

இந்த இடத்தில்அப்சராபற்றிக் குறிப்பிட வேண்டும்.

சியாம் ரீப் நதிக் கரையில் இருக்கிறது கம்போடிய நாட்டின் கலாசாரத் துறையின் முக்கிய அங்கமான அங்கோர் பாதுகாப்புப் பிரிவு. இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு கவனமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

இதையெல்லாம் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கலாமே" என்றான் ஜருகண்டி.

முன்பு அங்கோர் பாதுகாப்புப் பிரிவின் அங்கமாக இருந்து இப்போது தனியாகவே செயல்படுகிறதுஅப்சரா’ (அதாவது அதாரிடி ஃபார் புரொடெக்ஷன் அண்ட் மேனேஜ்மென்ட் ஆஃப் அங்கோர் அன்ட் தி ரீஜன் ஆஃப் சியாம் ரீப் என்பதன் சுருக்கம்). அங்கோரைச் சுற்றியுள்ள ஆராய்ச்சிகள், கலாசார விஷயங்களைப் பாதுகாத்தல் போன்றவை இதன் பொறுப்பு.


இந்து மதத்தின் கூறுகளை நாங்கள் மிக அதிகமாகக் கண்ட மற்றொரு ஆலயம் பந்தியாஸ்ரே (BINTEA SREI). பூசாரி ஒருவர் எழுப்பிய சிவ ஆலயம் இது. தொடர்ந்து அந்தக் காட்டுப் பகுதியில் வசித்துக் கொண்டே இதை எழுப்பி இருக்கிறார். அற்புதமான கலை வண்ணம் கற்களில் மிளிர்கிறது. சிவலிங்கம் மட்டுமல்ல, நந்தி, இரண்யனைக் கொல்லும் நரசிம்மர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். துவார பாலகர்களாக அனுமன் போன்ற உருவம் கொண்டவர்கள் காட்சி தருவது வித்தியாசமாக இருக்கிறது. ‘வனத்தில் வசிக்கும் அமைதியான மனிதனான நான், ஐந்தாம் ஜெயவர்மனின் நினைவாக இந்த ஆலயத்தை எழுப்புகிறேன்என்கிறது அந்தப் பூசாரியின் கல்வெட்டு.



பிங்க் வண்ணக் கல்லில் பெரும்பாலான உருவங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அளவில் பெரிய ஆலயம் அல்ல என்றாலும் அழகிலும், நன்கு பாதுகாக்கப்படுவதாலும், பார்ப்பவர்களை மகிழ்விக்கிறது. பாண்டியா ஸ்ரே என்றால்பெண்களின் கோட்டைஎன்ற அர்த்தம். இதை வடிவமைப்பதில் ஒரு பெண்ணுக்கும் பங்கு இருந்தது என்று (மட்டும்) கூறப்படுகிறது. புதுப்பிக்கும் பணிக்கான முதலில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஆலயம் இதுதான் என்பார்கள்.


நாம் பார்ப்பதாகத் திட்டமிட்ட அங்கோர் ஆலயங்கள் முடிவுக்கு வந்து விட்டன" என்றார் ராமநாதன்.

அங்கோரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தள்ளி ஓர் ஆலயம் இருக்கிறது. அதை மிஸ் செய்தால் அப்புறம் வருத்தப்படுவீர்கள். போகலாமா?" என்றார் காரோட்டி.

பிறகெப்படிப் போகாமல் இருப்பது? காரில் சுமார் நாற்பது நிமிடங்கள் பயணம் செய்த பிறகு அந்த ஆலயம் வந்தது. அதன் பெயர்பெங்க் மிலியா’" என்றார் காரோட்டி.

இரண்டாம் சூரியவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது இந்த ஆலயம். அது மட்டுமல்ல இங்கேயே தங்கிய மன்னன் இந்தப் பகுதியைத் தலைநகராக்கத் திட்டமிட்டான். மக்கள் இப்பகுதியில் குவியத் தொடங்கினர்.


ஆனால் அவர்களால் அங்கேயே தங்கள் வாழ்க்கையைத் தொடர முடியவில்லை. காரணம் ஆறு எதுவும் இல்லாத பகுதி அது. ஒரு பெரும் நூலகம் இருந்த அடையாளமும் காணப்படுகிறது. இது ஒரு விஷ்ணு ஆலயம். காலம் எந்த அளவுக்கு ஒரு கம்பீரத்தை அலங்கோலப்படுத்த முடியும் என்பதற்கு மற்றொரு சான்று இது.



மிக அதிகம் சேதமடைந்த கோவில், மிகச் சிறப்பாக ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய கோவில் ஆகிய இரண்டுமே இதைக் காணும்போது எழுகின்றன. சுமார் ஒரு கி.மீ. நீளம் கொண்ட அகழிக்கு நடுவே உள்ளது இந்த ஆலயம். மைய கோபுரம் முழுக்கவே இடிந்து விழுந்து அங்குள்ள பிரம்மாண்ட கூடங்களில் சிறு பகுதிகளாகக் கலந்திருக்கின்றன.



 இதன் சில பகுதிகளில்தான் அனுமதி உண்டு. சொல்லப்போனால் ஆலயத்தின் பகுதிகளில் பலவித ஏற்ற இறக்கங்கள். பாறைகளின் மீதும் கம்பிப் படிகளின் மீதும் பார்த்துப் பார்த்து கவனமாகத்தான் ஏற வேண்டியிருக்கிறது. ஒரு மினி சாகச விளையாட்டில் ஈடுபட்டதைப் போன்ற ஓர் உணர்வுகூட ஏற்படுகிறது. வெகுதூரம் மரப்பாலங்களில் நடக்க வேண்டியிருக்கிறது. இதில் ஓரிரு பாலங்கள்டூ பிரதர்ஸ்என்ற ஆங்கிலப் படத்துக்காக எழுப்பப்பட்டவை (தலைப்பில் உள்ள இரு சகோதரர்கள் என்பது இரு புலிக் குட்டிகளைக் குறிக்கிறது).

ஒரு தலைநகராக கம்போடியச் சரித்திரத்தில் இடம் பெறவேண்டிய ஒரு பகுதி இன்று சிதிலமடைந்திருப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.

(பயணம் தொடரும்)


நன்றி - கல்கி 

Monday, June 17, 2013

மக்கள் காசில் மகேசன் மஜா

1. காங் பிடியில் இருந்து இந்தியாவை மீட்பதே நமது கனவாக இருக்க வேண்டும்- மோடி..# ஆனா அந்த மடம் ,ஆகாட்டி தலைமைக்கு சண்டை போடும் இந்த சந்தை மடம்



-------------------------


2. பொண்ணு ஊத்துக்குளி வெண்ணெய் மாதிரி இருந்தாலும் புருசன் பித்துக்குளி மாதிரி தான் இருப்பான் # தலையெழுத்து



--------------------------


3. அஜித் ரசிகைகளை F டிவி கவுரவப்படுத்துதா ? நடந்துட்டே இருக்காங்க?


------------------

4. காவ்யா மாதவன் இரண்டாம் திருமணம் செய்யவே மாட்டேன்னு திட்டவட்ட அறிவிப்பு.# 2 ராசி இல்லைன்னா 3 வது ,4 வது திருமணம் செஞ்சுக்குவாரோ?


------------------------


5. ரகசியத்தின் நிறம் சிவப்பு? # சீக் ரெட்



-------------------------


6. பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.642 கோடி # ஹூம்.மக்கள் காசில் மகேசன் மஜா


---------------------------


7. சென்னையில் 20 பள்ளிகளை மூட உத்தரவு # நல்ல வேளை நம்மை யாரும் எதுவும் சொல்லலை - நமீதா ,அஞ்சலி ,ஸ்ருதி நிம்மதிப் பெருமூச்சு



----------------------

8. வெப்பத்தை உள் வாங்கிக்கொள்வதால் வேப்ப மரம் ஒரு காலத்தில் வெப்ப மரம் என்றே அழைக்கப்பட்டிருக்கக்கூடும்


-----------------------


9. அரசியலுக்கு் வரப்போறேன்னு பிலிம் காட்டற ஹீரோக்களும்,அம்மா வீட்டுக்கு போய்டுவேன்னு பயம் காட்டும் பொண்டாட்டிகளும் வாய்ச்சொல்லில் வீரர்கள்


----------------------


10. பிற்படுத்தபட்டவர்கள் முதல்வராவது காங்.மட்டுமே சாத்தியம்-சிதம்பரம் # நாட்டையே பிற்படுத்த ,பிற்போக்குத்தனமா மாத்த உங்களாலதானே முடியும்?


---------------------------


11. பொண்ணு கட்டும்போது தொலைவா இருக்கற தொல்லையாபார்த்து கட்டனும்.கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப்போனாக்கூட திரும்பி வர லேட்டாகும்்


------------------------


12 குடிகாரனை காதலனாகவோ ,கணவனாகவோ எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என பெண்கள் உறுதி கொண்டால் குடிப்பழக்கத்தை குறைக்கலாம்



-----------------------


13. குடிப்பழக்கம் இருப்பவர்களிடம் பணப்புழக்கம் இருப்பதில்லை (பெரும்பாலும்)


-----------------------


14. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் -அதிமுக செயற்குழுவில் தீர்மானம் #ஆளுங்கட்சி ஜெயிக்க எதுக்கு அலப்பறை?்


-------------------------


15. ஆட்டம் போட்டால் பதவி காலியாகும் -ஜெ # ஆடாமல் ஆடுகிறேன் னு நீங்க மட்டும் ஒரு படத்துல ஆட்டம் போட்டீங்ளே?


------------------------


16. அன்பே! நீ என்ன கவர்மென்ட் பேங்க் கேஷியரா? நிமிர்ந்து கூட என்னை பார்க்க மாட்டேங்கிறியே?

---------------------


17. விஜய் பாடல்களுக்கு வெறியன் நான்-சிபிராஜ் # இந்தப்பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய் னா வெறி ஆகிடுவீங்ளா?


------------------------


18. நம்மால் கரெக்ட் பண்ண முடியாது என்று ஒதுக்கிய பிகரை யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில கரெக்ட் செய்துகொண்டு தான் இருக்கிறார்…!"


------------------------


19. அஜீத் படத்தில் நான் கவர்ச்சியாகத்தான் நடிக்கிறேன்! - தமன்னா # பக்குவமா "நடந்துக்கறீங்க" போல?



----------------------


20. செவ்வாயில் குடியேறினால் புற்றுநோய் கன்பார்ம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை#இனி செவ் வாய்ல கிஸ் கூட அடிக்கலீங்ணா


------------------------

Saturday, June 15, 2013

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

ஆ ராசாவை விட பக்கா ஃபிராடு ஹீரோ , கம்ப்பெனி ஓனர் கிட்டேயே முருக பக்தரா வேஷம் போட்டு வேலைக்கு சேர்றான், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமா  தனக்கு ஒரு அண்ணன் இருப்பதா டபுள் கேம் ஆடி அண்ணனாவும் ஆக்ட் குடுக்கறான். கம்பெனி  ஓனர் பொண்ணுக்கு கராத்தே சொல்லித்தரும்போது எதேச்சையா காதலையும் சொல்லித்தர்றான். இந்த உண்மை எல்லாம் ஓனருக்குத்தெரிய வரும்போது என்ன நடக்குது என்பதைத்தான் முடிஞ்ச வரை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க .

கே பாக்யராஜ் சாயல்ல யோகராஜ்னு ஒருத்தர் ஒரு ஹிட் படம் கொடுத்தார். அத்தோட சரி ஆள் அட்ரசே இல்லை. என்னதான் இருந்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான். அது மாதிரி தான் . கே பாலச்சந்தர் டைரக்‌ஷன்ல ரஜினி நடிப்பில் வந்த படத்துக்கும் , இதுக்கும் ஏணி யைக்கொண்டாந்து வாணி வெச்சாலும் எட்டாது .

ஹீரோ அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா ( டைட்டில்ல அப்டித்தான் போடறாங்க) . இவரோட டைமிங்க்சென்ஸ் அட்டகாசம் . ரொம்ப அசால்ட்டா டயலாக் டெலிவரி பண்றார். ஆனா முக பாவனைகள் சுத்தமா வர்லை . இப்படியே போனா போர் அடிச்சிடும் , உஷார் . 




ஓனராக பிரகாஷ் ராஜ். இப்படி ஒரு கேனத்தனமான கேரக்டர் இந்தக்காலத்திலா என நாம் வியக்கும்போது அதே கேள்வியை க்ளைமாக்ஸில் சந்தானத்தை விட்டே கேட்க வைத்து நம் வாயை அடைப்பது இயக்குநர் சாமார்த்தியம் . பிரகாஷ் ராஜுக்கு நவரச நடிப்பு , சந்தோஷ் சுப்ரமணியம் படத்துக்குப்பின் நல்ல ரோல் . 


ஹீரோயின் இஷா தல்வார்.  பார்த்தவுடனே தள்ளிட்டுப்போகத்தூண்டும் அளவுக்கு எல்லாம் இல்லை , வெறும் சப்பாத்தி மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த உடம்பு போல எடுபடலை ( அட எடு பட்ட பயலே, படத்தை விமர்சனம் பண்ணசொன்னா.. ) இவருக்கு ஒரு நல்ல டிப்ஸ் , டெய்லி காலைல 2 பூரி சாப்பிட்டா  உடம்புக்கும் நல்லது ..... டூயட் காட்சிகளில் லோ ஹிப்பில் 8 காட்சிகளில் வ்ருகிறார். ( அப்போகூட நாங்க ஹிப்பைப்பார்க்கலை , கவுண்ட்  பண்ணிட்டு தான் இருந்தோம், கடமை வீரன் கந்த சாமி )


கோவை சரளா எதிர்பாராத ஆச்சரிய காமெடி கலக்கல் . அவர் நாக்கில் வேல் குத்தி மெட்ராஸ் பாஷையை மறைப்பது செம காமெடி .  இடைவேளை ட்விஸ்ட்டில் அவர் கார் முன் பல்டி அடிப்பது அதகளம் . 





இளவரசு குணச்சித்திர காமெடி நடிப்பு இதம் . க்ளைமாக்சில் நட்புக்காக சந்தானம் வரும்போது தியேட்டரே அல்லோலகல்லோலப்படுது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் ஆர வாரம். சிவா கூட சந்தானம் காம்பினேஷன் காட்சிகளில் அடக்கி வாசித்து இருப்பது ஆச்சரியம் . 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த திரைக்கதை என்றாலும் காட்சிகளில் முடிஞ்சவ்ரை புதுப்புது ஐடியாக்கள் புகுத்திய விதம் , படம் 70 % காமெடியாகவே கொண்டு சென்றது 


2. வசனகர்த்தாவை தாண்டி சிவாவின் சொந்த டயலாக்குகள் , டைமிங்க் விட்டுகள் படத்துக்குப்பெரிய பிளஸ்


3.  கோவை சரளாவின் ஆர்ப்பாட்டமான காமெடி காட்சிகள் பி சி செண்ட்டர் ரசிகர்களை நிச்சயம் கவரும் 


4. கடைசி 15 நிமிடங்கள் சந்தானத்தின் போர்ஷன் பெரிய ரிலீஃப். கொஞ்சம் போர் அடிக்கற மாதிரி தெரியும்போது மிகச்சரியாக டிரம்ப் கார்டை யூஸ் பண்ணிய விதம் 


5. ஹீரோயின் தோழிகள் 5 பேர் வரிசையாக வரும் ஒரு காட்சியில் ரோஸ் கலர் டி சர்ட் போட்ட பக்கா ஃபிகரை போகிற போக்கில் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டியது 


6. புரோட்டா சூரியின்  காதல் கிளைக்கதை ஓரளவு காமெடிக்கு கை கொடுத்தது 




இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ டபுள் ஆக்ட் , ஹீரோவின் அம்மா டபுள் ஆக்ட் அதாவது ட்வின்ஸ் எனும்போது ஒரு முறை கூட இரு ஜோடியையும் ஒரு சேர என் கண்ணால் பார்க்க வேண்டும் என ஓனர் சொல்லவே இல்லையே? அது ஏன்? 


2. அவ்வளவு பெரிய கம்ப்பெனி ஓனர் எப்போ பாரு சிவா பின்னால் அவர் குடும்பம் பின்னால் சுத்திட்டு இருக்காரே , பிஸ்னெசை யார் கவனிப்பா? 


3. ஓனருக்கு ஹீரோவோட டபுள் கேம் தெரியல , ஓக்கே ஆனா ஒரு காதலிக்கு தன் காதலன் யாரு? என்ன?னு தெரியாதா? காதலனின் வாசம் ஒரு காதலிக்குத்தெரியாம இருக்காதா?  அவளுக்கு ஏன் டவுட்டே வர்லை? ( இதை ஏன் கேட்கறேன்னா பொண்டாட்டிங்க எப்பவும் புருஷன் வீட்டுக்கு வந்ததும் போலீஸ் நாய் மாதிரி மோப்பம் பிடிச்சு என்ன  புது வாசம் அடிக்குது? தம் அடிச்சீங்களா? ஆஃபீஸ்க்கு புதுசா லேடி ஸ்டாஃப் ஜாயின் பண்ணி இருக்காங்களா?னு கேள்வியா போட்டுத்தாக்குவாங்க ) 


4. கண்ல லென்ஸ் போட்டிருந்தா கண்ணை உறுத்தும் . அந்த லென்ஸ் கண் ல இருந்து கழண்டு விழுந்ததும் கன்னத்துல இருப்பதும் ஹீரோவுக்கு தெரியாம இருப்பது எப்படி? உணரவே முடியலையே ஏன்? 


5. புகழ் பெற்ற தொழில் அதிபரான பிரகாஷ் ராஜ் கண் முன் கோவை சரளா கைது செய்யப்படறாங்க . அப்போ சிவா வந்து சமாளிக்கிறார். பிரகாஷ் ராஜ் ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோனை போட்டு உண்மை என்ன?னு கேட்கலை? 


 


6. அவ்வளவு பெரிய பணக்காரர், அடிக்கடி வெளிநாடு போகிறவர் பாஸ்போர்ட் , விசா ஏன் புதுப்பிக்காம இருக்கார்? 


7. துபாய்ல இருக்கும் தன் மகளை கண்காணிக்க இங்கே இருந்து ஒரு ஆளை அனுப்பும் நேரத்தில் துபாய்லயே ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாமே? ஏன்னா இவருக்குத்தான் இன்னும் டவுட் இருக்கே? சிவா 2 ஆள் இல்லை, ஒரே ஆள் தான் என. ஏன் வாலண்ட்ரியா சிவாவையே அனுப்பனும்? 


8. கராத்தே என்பது ஓப்பன் கிரவுண்டில் பிராக்டீஸ் பண்ணுவாங்க , சிவா ஹீரோயினை அவர் ரூமுக்கு தள்ளிட்டுப்போய் கராத்தே சொல்லித்தர்றேன் என அப்பா முன்னாலயே சொல்வதும் அவர் அதை வேடிக்கை பார்ப்பதும் ஓவர் 


9. ஹீரோ - ஹீரோயின் காதல் மலரும் தருணம் சரியாக சொல்லப்படவே இல்லை 


10 . தன் காதலன் ஒரு ஏமாற்றுப்பேர்வழி என்று தெரிந்ததும் ஹீரோயின் சாமியாட்டம் ஆடுவார் என பார்த்தால் அவர் 2 செகண்ட்டில் கேனம் மாதிரி சிரிக்கிறார். நிஜ வாழ்வில் பொண்ணுங்க 1000 மன்னிப்பு கேட்டாலும் அதப்பு காட்டுவாங்க , இப்படி எல்லாம் ஈசியா மடங்கிட மாட்டாங்க 

 


11. பிரகாஷ் ராஜ் சிவாவின் மோசடியை நேருக்கு நேராக பார்க்கும்போது அப்பவே தட்டிக்கேட்காமல் சன் டி வி நித்யானந்தா வீடியோ எடுத்தது  மாதிரி மெனக்கெட்டு செல் ஃபோனில் வீடியோ எடுத்துட்டு இருக்கார். ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது? 

12.  கோடிக்கணக்கான சொத்து போய்டுச்சு. அதுக்கான கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஏன் சுப்ரீம் கோர்ட்க்கு ஹீரோ போகலை? 


13 . சத்யன் ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு அடிக்கடி சிவா போறார். சினிமா இண்டஸ்ட்ரி வேலைக்கு போகாம ஏன் ஒரு கம்ப்பெனி வேலைக்கு ட்ரை பண்றார்? சினி ஃபீல்டுல லட்சக்கணக்குல சம்பாதிக்கலாமே? 


14. சிவா மேல செம காண்டா இருக்கும்   தேவ தர்ஷினி திடீர்னு சிரிச்சுப்பேசுவது எப்படி?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓவர் ஆக்டிங்க்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க ,அந்த மாதிரி ஃபேமிலில நான் பொறக்கலை 


2. ஒரு பழத்துல எத்தனை விதை இருக்குன்னு எல்லாரும் பார்த்தபோது ஒரு விதைல எத்தனை பழங்கள் இருக்கும்னு பார்த்தவன் நான் 



3. பசுபதின்னா என்ன நினைச்சீங்க? 


ப = பழநி மலை , சு = சுவாமி மலை , ப = பழமுதிர்ச்சோலை , தி = திருப்பரங்குன்றம் , திருத்தணி , திருச்செந்தூர் , அறுபடை வீடு 



4. நீங்க ஃபேஸ்புக்ல இருக்கீங்களா? 


இல்லை சார், நான் மயிலாப்பூர்ல இருக்கேன்


5. உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? சேட்டு வீட்டு கல்யாணத்துல எப்பவும் ஜிலேபி நல்லாருக்கும் ;-))


6.  சட்டைக்குப்பணுவேண்டா அயனு, என்னை சட்டை பண்ணலைன்னா ஆகிடுவேண்டா லயனு , எப்படி பஞ்ச் டயலாக் ?



7. ஹீரோக்களோட டார்ச்சர் தான் தாங்க முடியலைன்னா இப்போ ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் டார்ச்சரும் தாங்க முடியலை 



8. 20- 20 மேட்ச் பார்க்கறீங்க, இதுலயே ரெண்டு 20 இருக்கும்போது ஏன் வாழ்க்கைல 2 ட்வின்ஸ் இருக்கக்கூடாது?



9. உங்க புக் விக்க ஒரு ஐடியா , நம்ம கம்பெனி மினரல் வாட்டர் பாட்டில் ஒண்னு வாங்குனா ஒரு புக் ஃப்ரீன்னு சொல்லிடுவோம் ? 


 அப்புறம் வாட்டர் பாட்டில் பிஸ்னெஸ் படுத்துக்கும் 



10.  பொழுது போகாம ஏதாவது ஒரு பொன் மொழியை சொல்லிட்டு போயிட வேண்டியது , இருக்கறவன் மண்டையை உடைச்சு யோசிக்கனும்




 

11  பெண்கள் போடற துணி குறைஞ்சாலும் அவங்க துணிச்சல் குறையக்கூடாது 


12. ஒரு ஃபயரே இன்னொரு ஃபயரைகாப்பாத்த முடியாது 



13. கராத்தாலே முதல் ஸ்டெப் டிராயரை கழட்டனும்


 வாட்? 


 மேஜை டிராயரை 




14.  உங்க வீட்ல எத்தனை பேரு?


 நான், எங்கண்ணன் , 2 பேரு 


 ஓஹோ, நீ , உங்கண்ணன் 2 பேரு மொத்தம் 3 பேரா? 



15.  கர்ட்டரை மூடு , பெட்ஷீட்டை போர்த்து - இதுதான் கராத்தேவின் முத ஸ்டெப் 



16.  என் அவசரம் உனக்குப்புரியல, உடனடியா இப்போ நான் ஒரு பொண்ணை அம்மா ஆக்கனும்


 வாட்? 

 அம்மாவா நடிக்க வைக்கனும் 


17.  எமனுக்கு இவன் பினாமி , எனிமிக்கு சுனாமி 



18. எப்போ ஒரு பொண்ணு தயிர் வடை வேணாம்னு சொல்றாளோ அப்போ அவ லவ்ல விழுந்துட்டான்னு அர்த்தம் 


19.  கைக்கு எட்டுன கடாய் சிக்கன் வாய்க்கு எட்டலை 


20. சின்ன வயசுல இருந்தே மத்தவங்க உதவி இல்லாம நான் எந்த டெஸ்ட்டும் பாஸ் பண்ணதே இல்லை



21.  சார், துபாய்ல உங்களுக்கு டேட் ( பேரீச்சை ) வாங்கி வரவா? 


 அவன் டேட் வாங்க போகலை , டேட்டிங்க் பண்ண போய் இருக்கான்


22.  ரீம் நெம்பர் 309 ஓக்கேவா? 

 அய்யய்யோ 

 ஏன்? உனக்கு அது பிடிக்கலைன்னா வேற ரூம் மாத்திக்கலாம்



23. என்ன? உங்க வீட்ல ஏ சி இல்லையா? 


 இன்னும் கொஞ்ச நேரத்துல கரண்ட்டே போகப்போகுது 



24.  தாலிப்பிச்சை தரனும் 


 பிச்சை எல்லாம் கோயிலுக்கு வெளீல எடுக்கனும் 



25.  என்னப்பா ? கைல வேலை வெச்சிருக்கியே? 

 ஏம்ப்பா , உன் பொண்டாட்டியையே வெச்சிருக்கேன்கறேன் , வேலை வெச்சிருந்ததுக்கு  இப்படி ஜெர்க் ஆகறே? 



26. கும்முனு இருப்பானு சொன்னிங்க , குங்ஃபூ பாண்டா மாதிரி இருக்கா 



27.  என்னப்பா , இவ்ளவ் பெரிய பிரச்ச்னை ஓடுது , டென்சனே இல்லாம  சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டுட்டு இருக்கே? 

 அப்போ பூரிக்கிழங்கு சாப்ட்டா ஓக்கேவா? 



28. என்ன? எல்லாரும் சேர்ந்து என்னை தேடறாங்க, நான் என்ன புதையலா?


29. இந்த வீணாப்போனவன் கூட வாழறதை விட நீ விதவையாவே வாழலாம் 



30. வாரா வாரம் டி வி ல தில்லு முல்லு படம் போட்டுட்டே இருக்கான் , அதைப்பார்த்தும் இந்த டபுள் ரோல் கதையை உங்க  முதலாளி நம்பறான்னா அவன் எவ்ளவ் பெரிய கேனயனா இருப்பான் ? ( படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கும் இது பொருந்துமா? )







 

சி பி கமெண்ட் - சிவா ரசிகர்கள் , காமெடி பிரியர்கள் பார்க்கலாம், ஜாலியாப்போகுது , அங்கங்கே கொஞ்சம் இழுவை போடுது சிவாவின் டைமிங்க்சென்ஸ் மட்டுமே பிளஸ் - , க்ளைமாக்ஸ் சந்தானம் பார்ட் கலக்கல்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க் -  2.75 / 5 


டிஸ்கி -

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/06/blog-post_14.html


Friday, June 14, 2013

தீயா வேலை செய்யனும் குமாரு - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaxiyKaqNX92IP6Yoq5b8cPQYPrEFQKnes6LCLIi1xR586vHMe4MZuUVgn3pyuRhoQWPO2eahBqH-o6QOGPe4xU4OAdRxFeS9jctlQhURpfkrbjANcO-3qkI64-jhLPBlxnMOvRa8hsBO7/s1600/Theeya+Velai+Seiyyanum+Kumaru+Movie+Latest+Posters+cinesandadi+(2).jpg

உண்மையா லவ் பண்றவனை இந்தக்காலப்பொண்ணுங்க ஏத்துக்க மாட்டாங்க. பிளான் பண்ணி தில்லு முல்லு , கோல்மால் பண்ணி திட்டம் போட்டுக்கவுக்கறவங்களுக்குதான் காலம். இதுதான் படத்தோட  ஒன் லைன் . 

ஒரு கல் ஒரு கண்ணாடி கான்செப்ட் ல  வடிவேலுவின் தங்கச்சி பேக்கரி காமெடியை மிக்ஸ் பண்ணி ஒரு உல்டா திரைக்கதை அமைச்சா அதுதான் தீ வேசெகு.

ஹீரோ சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க எதுவும் செட் ஆகாம வளர்ந்தவன் ( கவனிங்க , ப்ளூரல்) பெரியவன் ஆனதும் ஒரு நல்ல ஃபிகரா கரெக்ட் பண்ண வீணாப்போன ஐடியா அய்யா சாமி கிட்டே ஐடியா கேட்டு கேட்டு லவ் பண்றாரு. ஆல்ரெடி வேற ஒரு கொலீக் லவ் பண்ற ஹீரோயினை பிளான் போட்டு தன் பக்கம் இழுக்கறாரு. 

 இந்த இடத்துலதான் ஒரு ட்விஸ்ட். அந்த ஐடியா கொடுத்த அய்யாசாமியோட தங்கச்சி தான் ஹீரோயின்.இப்போ அவர் ஹீரோவுக்கே வில்லன் ஆகறாரு. எப்படி கலாட்டாக்கள் நடக்குது என்பதுதான் காமெடி கலக்கல் திரைக்கதை, சுந்தர் சி ராக்ஸ். 

http://static.sify.com/cms/image/ndmsI2afegj_medium.jpg


படத்தோட ஹீரோ சித்தார்த் அப்டின்னா உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையானு தீவிர சந்தானம் ரசிகர்கள் எல்லாம் கொலை பண்ண வந்துடுவாங்க, அதனால உண்மையை ஒத்துக்கறேன். ஹீரோ சந்தானம் தான். அவர் வரும் ஓப்பனிங்க் காட்சி ரஜினி , அஜித் , விஜய் ரேஞ்சுக்கு தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது. ஸ்லோ மோஷன்ல பைக்ல வர்ற முத சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரை அவரோட ஆட்சி தான். 

இந்தப்படத்துல சந்தானத்தின் சொந்த டயலாக்ஸ் கம்மி. சுந்தர் சி யின் ஸ்கிரிப்ட் ல என்ன இருக்கோ அதைத்தான் பெரும்பாலும் பேசி இருக்காரு. ரசிக்க வைக்குது. ஆங்காங்கே கவுண்டமணி மாதிரி கவுண்ட்டர் டயலாக்ஸ் அடிக்கவும் தவறவில்லை. வெல்டன் சந்தானம் . 


 இரண்டாவது ஹீரோ சித்தார்த். விளக்கெண்ணெய் வடியும் முகம். நல்ல பர்சனாலிட்டி என பெண்களால் கொண்டாடப்படும் இவர் ஏன் இப்படி உம்மனா முகமா வர்றார்னு தெரியலை . சந்தானத்துடன் காம்பினேஷன் காட்சிகள் வரும்போது இவர் டம்மியாகத்தெரிவது இவர் தவறல்ல . ஆனானப்பட்ட ஆர்யாவுக்கே நேர்ந்த கதிதான் ( பாஸ் எ  பாஸ்கரன்)

Hansika Motwani hot photos (29)


 பாடல் காட்சிகளில் , சின்ன சின்ன நடன அசைவுகளில் இவர் பம்மல் கே சம்பந்தம் கமல் மாதிரியும்  , இதய தாமரை கார்த்திக் மாதிரியும் இமிடேட் பண்ணி இருப்பது அப்பட்டமாதெரியுது .  இவர் சொந்த சரக்கே போதும், எதுக்கு இந்த எச்சுப்பண்ணாட்டு? 

ஹீரோயின் ஹன்சிகா மெத் மெத்வா நீ வாணி ( வாணி தேனி வா நீ! # கவித கவித ) கொழுக் மொழுக் சந்தன பொம்மை .சும்மா சும்மா குலுங்கி குலுங்கி நடப்பதும் , கெக்கே பிக்கே என சிரிப்பதும் தான் இவர் வேலை , அதுக்கே சம்பளம் 75 லட்சம் ரூபா. தொப்பை விழுந்துடுச்சுன்னு பக்கத்து சீட்காரர் சொன்னார். நான் கவனிக்கலை . பொண்ணுங்களை கழுத்துக்குக்கீழே நாங்க பார்க்கறது இல்லை . 


இவங்க 3  பேரைச்சுத்தித்தான் கதை நகருது என்பதால் ஆங்காங்கே ஓக்கே ஓக்கே சாயல் அடிப்பதை தவிர்க்க முடியலை . அது தெரிஞ்சே தான் சுந்தர் சி அந்த ஃபிளாஸ்பேக் சீன்ல சந்தானம் தங்கச்சி தான் ஹன்சிகா என்ற ட்விஸ்ட்டை வெச்சிருக்கார் போல . 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1. வீட்டோட மாப்ளையa வரும் பாஸ்கி ஓப்பனிங்க் சீன்ல  மனைவியை காரில் ஏற்றும் சஸ்பென்ஸ் காட்சி கலக்கல் காமெடி 


2. சித்தார்த்தின் பப்பி லவ் ஸ்டோரியில் அவரைப்போன்ற முகச்சாயலுடன் ஒரு பையனை அச்சு அசலாய்த்தேர்ந்து எடுத்தது 


3. டப்பா ஸ்கூட்டரில் ஹீரோவை ஏற்றிக்கொண்டு பாஸ்கி சொதப்பும் சீன் உழைப்பாளி ரஜினியின் காமெடியை சுட்டிருந்தாலும் ரசிக்கலாம் 


4. படம் முழுக்க அள்ளித்தெளிக்கப்பட்டிருக்கும் சந்தானம் பிராண்ட் மொக்கை காமெடி வசனங்கள் . 64  ஜோக்ஸ் தேறுது . தியேட்டரில் 18 இடங்களில் செம அப்ளாஸ் . படம் நெடுக சிரிப்பலைகள் வந்துட்டே இருப்பது பெரிய பிளஸ் 


5. சந்தானம் ஃபிளாஸ்பேக் காட்சியில்  சிவாஜியை இமிடேட் செய்வதும் , அந்தக்கால பாட்டை பின்னணியில் ஒலிக்க விடுவதும் லொள்ளு சபாவில் ரசிக்க வைத்த டெக்னிக் , எடுபடுது , ஓக்கே 


6. சேட்டை பட விமர்சனத்தில் கிழி கிழி என கிழித்த ரேடியோ ஜாக்கியை சமார்த்தியமாக ஒரு கேரக்டரில் நடிக்க வைத்தது  ( அவர் விமர்ச்னத்துல இதை நல்லாலைன்னு சொல்ல முடியாது ) 

7. நட்புக்காகவோ , வேற எதுக்காகவோ மெழுகு ஃபிகர் சமந்தாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தது . விஷால் கூட ஒரு சீன்ல வர்ராருப்பா..


8. சூது கவ்வும் இயக்குநர்  நலன் குமார சுவாமியை படத்தின் திரைக்கதை வசனத்தில் உதவி பெற்றது


9.  தக்காளி பாடல் காட்சியில் ஹன்சிகாவுக்கு  மேக்சிமம் கிளாமரை வர வைத்தது  


10 டி வி விளம்பரங்களில் , க்ளிப்பிங்குகளில் நல்ல புரோம்மோ குடுத்தது 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோயின் ஹன்சிகாவிடம் முதன் முதலில் பிரப்போஸ் பண்ணும் ஆஃபீஸ் கொலீக்கின்  செல்ஃபோனை சந்தானம் திட்டப்படி ஆஃபீஸ் பொண்ணு வாங்கி அந்த ஃபோன்ல ஹன்சிகாவின் பெயரை டெலீட் பண்ணி ஃபிகர் நெம்பர் 6 அப்டினு மாத்திடுது . அது அந்த கொலீக்குக்கே தெரியாமல் போவது எப்படி? அடிக்கடி ஹன்சிகாவுக்கு அவர் ஃபோன் பண்ணும்போது மானிட்டரில் டி்ஸ்பிளே ஆகி இருக்குமே? 



2. ஹன்சிகா எதெச்சையாய் அவர் கிட்டே ஃபோனை வாங்கி தன் நெம்பருக்கு கால் பண்ணும்போது ஃபிகர் 6 என வருவதைப்பார்த்து வெறுப்பது நம்பவே முடியலை . அப்படி அவர் பண்ணி இருந்தா ஹன்சிகாவிடம் செல் ஃபோனை தருவாரா? தத்தி ஹீரோயின் யோசிக்கலையா? 


3. என் ஃபோனை காணோம் , உங்க செல்லுல இருந்து ரிங்க் விடுங்க என்றதும் பொதுவா நாம தான் ரிங்க் விடுவோம். இப்படி யாராவது தன் ஃபோனைக்குடுப்பாங்களா? 


4. முதல் காட்சியில் தனிமையில் ஆஃபீஸ் கொலீக் ஹன்சிகாவிடம் லவ் பிரப்போஸ் பண்ணும்போது ஹன்சிகா “ யோசிக்க டைம் வேணும்”கறார், அடுத்த காட்சியிலேயே ஒரு பார்ட்டியில் எல்லோர் முன்னும் லவ் பிரபோஸ் பண்ணும்போது ஓக்கே சொல்றார். எப்படி? நேத்துத்தானே சொன்னேன், டைம் வேணும்னு அப்டினு ஹீரோயின் ஏன் கேட்கலை? 

5. தன்னிடம் லவ் பிரப்போஸ் பண்ணின ஆஃபீஸ் கொலீக் நல்லவர், ஹீரோவின் சதியால் தான் அப்படி ஆச்சு என்றதும் ஹீரோயினுக்கு அவர் மேல் சிம்ப்பதியும் வர்லை , அவர் கிட்டே மன்னிப்பு கேட்கவும் தோணலை, ஏன்? 


6. அண்ணன் தங்கச்சி செண்ட்டிமெண்ட் காட்சியில் கூட ஹன்சிகாவுக்கு லோ கட் ஜாக்கெட்டில் குனியும் காட்சி , ஒரு ரசனையே இல்லாம 



 மனதில் நின்ற காமெடிகளில் நினைவில் நின்றவை 


1. இந்தக்காலத்துப்பொண்ணுங்களை காமெடியா ஏமாத்த முடியாது.சீரியசாத்தான் ஏமாத்தனும்



2. தட்டுல அல்வா விழுந்தாலும் ,ஐஸ்க்ரீம் விழுந்தாலும் யோசிக்காம நக்கிடனும்


3. காசு இருக்கற யார் வேணாலும் போட்டுடலாம் நிலத்துக்கான பட்டா. ஆனா எல்லாருக்கும் கிடைச்சுடாது இந்த துப்பட்டா


4. நாகூர் பிரியாணி உளுந்தூர்ப்பேட்டை நாய்க்குத்தான் கிடைக்கனும்னு இருந்தா யாராலும் அதை மாத்த முடியாது.லவ் பண்ற பொண்ணும் அப்டித்தான்


5. அவ கிட்டே எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல .


சந்தானம் - நான் வேணா 4 அய்யர்ங்களை அனுப்பறேன்.கணபதி ஹோமம பண்ணி ஆரம்பிச்சுடலாம்்


Hansika Motwani hot photos (27)


6. FREE TOP UP பண்ணி விடறேன்னு சொன்னா போதும்.பொண்ணுங்க தாழ்ப்பாளை உடைச்சுட்டு ஓடி வந்துடுவாங்க


7. பொண்ணுங்க கிட்டே லவ் அப்ரோச் பண்ண ஏண்டா தயங்கறீங்க? மீறி மீறிப்போனா ஒரு திட்டு .ஒரு பளார்.அவ்ளவ் தானே


8. பசங்க நல்லவன் மாதிரி நடிக்கக்காரணமே பொண்ணுங்க கிட்டே கேவலப்படக்கூடாதுன்னுதான்.ஒரு பொண்ணு கிட்டே அறை வாங்கிட்டா சரியாபோய்டும்


9. மேனேஜர் சார்.எதுக்கு என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்றீங்க ? 


அப்போதான் வீட்டுக்குப்போகவே வெறுப்பா இருக்கும்.ஆபிசே கதினு வேலையைப்பார்ப்பீங்க


10. என் மேரேஜ்க்கு யாரும் வர மாட்டீங்ளா ஏன் ? 




என்னைக்கேட்டா நீயே உன் மேரேஜ்க்குப்போகாத.ஒரு பொண்ணோட வாழ்க்கையைக்காப்பாத்துன மாதிரி இருக்கும்



11. நோகாம நொங்கு திங்க முடியாது.கூசாம கிச்சு கிச்சு மூட்ட முடியாது


12. அழகான பையனை லவ் பண்றது ஆபத்துடி.மேரேஜ் ஆனவன்னு பார்க்க மாட்டாங்க.பொண்ணுங்க அவனையெ சுத்தி சுத்தி வருவாங்க



13. ஒயின்ஷாப் போகாத பசங்க கூட இருக்காங்க.ஆனா காபி ஷாப் போகாத பொண்ணுங்களே இல்ல


14. எதுக்காக எனக்கு ஐ லவ் யூ மெசேஜ் அனுப்புனீங்க ? மிஸ். பிடிக்கலைன்னா திருப்பி அனுப்பிடுங்க


15. தேங்கா வேணும்னா தென்னை மரத்துல ஏறித்தான் ஆகனும் குமாரு


16. இந்தக்காலத்துப்பொண்ணுங்க ஹேர் ஸ்டைலை மாத்தற மாதிரி மாசா மாசம் ஆளை மாத்திடறாங்க


17. அந்த ராஸ்கல் என்னை ஏமாத்திட்டாண்டி.


யாரு ராஜேஷா ? அது போன மாசம் .இது இந்த மாசம் .ரகு.ஹி ஹி


18. சுல்தானே காஞ்சு கிடக்கும்போது குதிரை குலோப்ஜாமூன் கேட்டுச்சாம்


19. டிராபிக் போலீஸ் - ஸ்கூட்டர்ல நெம்பர் பிளேட்டே இல்லையே?  


பாஸ்கி - அது இருந்தா ஆளாளுக்கு கேஸ் எழுதிடறாங்க சார்


20. பசங்களுக்கு காதல் வந்துட்டா மண்வாசனை காந்திமதி மாதிரி பொண்ணுங்க கூட கரீனாகபூர் மாதிரி தெரிவாங்க


Hansika Motwani hot photos (30)




சி பி கமெண்ட் - தீயா வேலை செய்யனும் குமாரு - ஹீரோ சந்தானத்தின் மொக்கை காமெடிக்காக - பார்க்கலாம். விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு வரி , சுந்தர் சி யின் ரெகுலர் டைப் காமெடி இதுல மிஸ்சிங்க் .கோஸ்ட் ரைட்டர் மாதிரி கோஸ்ட் டைரக்டர் ஒருத்தர் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சு மேற்பார்வை டைரக்‌ஷன் மட்டும் இவர் போல , எப்படியோ படம் ஹிட் தான்


விகடன் எதிர்பார்ப்பு மார்க் -41


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் - 3.25 / 5


diSki -

தில்லுமுல்லு - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/06/blog-post_15.html

பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்புடறான்னா.......

1. ரன்னிங் ரேஸ் ல ஓடாம எதுக்கு கதைபுக் படிச்சுட்டு இருந்தே ?




 SLOW ,STUDY .AND WIN THE RACE னு சொன்னாங்ளே? அவ்வ.அது STEADYயா?்



------------------------


2. ஒரு பொண்ணு 2 கைலயும் 2 விளக்குமாறு ( சீமாறு) வெச்சு வாசல் கூட்டுது.ரொம்ப வசதியான இடம் போல



-----------------------


3. பக் வீட் ஆன்ட்டி நைட் கொல்லைப்பக்கம் படுத்திருந்தது.காலைல வாசல் திண்ணைல  இருக்கு


 பின் தூங்கி முன் எழும் பரம்பரை போல




-------------------------


 4. வாக்கிங் வந்த் பிகரோட நாய் என் மேல தாவுச்சு.அதுக்கு பிகரு " ஏய்.ரோசி.இப்போதானே குளிச்சே? நாட்டி கேர்ள்" # அடங்கோ



----------------------------


5. மேத்ஸ் டீச்சர் ( மெத் மெத் ) - சைன் தீட்டா ன்னா என்ன ? 



லொள் மாணவன் - தீட்டா சிம்பலை SIGN பன்றது 


------------------------



6. கோயிலில் முத்தம் தரலாமா ? என காதலி கேட்டால் ",கடவுளுக்கும் தெரியட்டும் ்.தெய்வ சாட்சியாய் பயணிக்கட்டும் நம் காதல் என சமாளிக்கவும்


------------------------------


7.  அன்பே! உன்னால் எனக்கு சலூன் போகும் வேலை மிச்சம்.மாசா மாசம் 1 ந்தேதி மொட்டை அடிச்சுடறியே?





-----------------------



8. என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு தருவீங்க? என்றாள் காதலி.என்னையே தருவேன் என்றேன் # 1,செலவில்ல.2 ஹி ஹி





---------------------------


9. பல ஆடை ஏற்றுமதி நிறுவனம் வந்திருக்கும் பன்னாடைத்தலைவருக்கு இந்த பொன்னாடை போர்த்துகிறோம்


----------------------


10. நல்ல நாள்லயே வேலை செய்ய மாட்டாங்க.இந்த பொண்டாட்டிங்க.உடம்பு சரி இல்லைன்னா கேட்கவே வேணாம் .ஒரு துரும்பைக்கூட கிள்ள மாட்டாங்க




---------------------------


11. தலைவி அலைபேசியில் - எனக்கு தலைவலி . # ஒரு தலைவலிக்கே தலைவலி வந்ததே அடடே




-------------------------


12. டேய்.நான் தான் கோபமா இருக்கேனே.எதுக்கு கிஸ் குடுத்தே?



 என் கிட்டே இனி பேசற வேலை வெச்சுக்காதேன்னு நீ தான் சொன்னே.அதான்.அடுத்த வேலையை ஹி ஹி 



--------------------------


13. டாக்டர்.தொண்டை கட்டிக்குச்சு.என்ன பண்ணனும் ? 



தொண தொணனு பேசாம இருக்கனும் 



----------------------------



14. வேறு மாநில பிகரை லவ் பண்ணா ஒரு பயன் உண்டு.லவ் புட்டுக்கிட்டாலும் ஒரு புது மொழியை செலவில்லாம கத்துக்கிட்டிருப்போம்





------------------------


15. சில பொண்ணுங்களுக்கு காதை விட காதணி ,தொங்கட்டான் பெருசா இருக்கு




-----------------------


16. அன்பே! உன் உள்ளங்கை இவ்ளவ் மென்மையா இருக்கே எப்படி? ஏதாவது வீட்டு வேலை செஞ்சாத்தானே? ஹி ஹி



----------------------

17. இன்று ஒரு தகவல் - count down = இறுதி ஆயத்தம் ,எண்ணிறக்கம்



------------------------


18. பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்புடறான்னா பக்கோடா இருக்கறவன் என்ன சாப்புடுவான்?




---------------------------



19. கரிமேடு னு ஒரு கன்னட டப்பிங் படம்.போஸ்டர் ல கரடு முரடான படம்னு விளம்பரம்.திரையை தடவிப்பார்த்தா அப்டி 1 ம் தெரியல




------------------------



20. உங்க தோளைச்சுற்றி எப்பவும் ஒரு நடிகையின் கை இருக்கே.ஏன்? 



லட்சுமி கரமா இருக்கட்டும்னுதான்.ஹி ஹி 




----------------------------

Thursday, June 13, 2013

மாசாணி - சினிமா விமர்சனம்(தினமலர்)



இன்னமும் இளமையாகவே தெரியும் ராம்கிக்கு ரீ-என்ட்ரி தந்திருக்கும் படம்! கூடவே அவருக்கு இனியாவை ஜோடியாக்கி இருக்கும் திரைப்படம்! மாஜி நாயகி இன்றைய ஆந்திர அரசியல்வாதி ரோஜாவை, ராம்கிக்கு அண்ணியாக்கியிருக்கும் படம், "கல்லூரி" அகிலுக்கு மறுஅவதாரம் தந்திருக்கும் திரைப்படம், பேய்படம், ஆவி கதை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!


கதைப்படி, அந்த ஊர் கோயிலில் மூலவர் சிலை முழுமை பெறாமல் இருக்கிறது. உற்சவருக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது! முற்றுபெறாமலும், முழுமையடையாமலும் இருக்கும் மூலவர் சிலையை முழுமை பெற செய்ய வருபவர்கள், சிற்பிகள் எல்லாம் பேய் அடித்த மாதிரி, பிரம்மை பிடித்த மாதிரி தெறித்து ஓடுகின்றனர் காரணம் "மாசாணி". 


சாமி சிலை செய்ய வருபவர்களையும், கோயில் அர்ச்சகர்ளையும் துரத்தி அடிக்கும் மாசாணி நல்ல ஆவியா, கெட்ட ஆவியா...?! ப்ளாஸ் பேக் விரிகிறது. "மாசாணி" இனியா, ராம்கியின் காதல் எபிசோட் விரிகிறது. கூடவே அகில், சிஜா ரோஸின் காதல் எபிசோடும் வருகிறது! அவர்களது மடிந்த காதலுக்கும் இவர்களது மலர்ந்த காதலுக்கும் என்ன சம்பந்தம்?! முற்றுபெறாமலும், முழுமையடையாமலும் இருக்கும் மூலவர் சிலை முழுமை பெற்றதா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடையளிக்கிறது "மாசாணி" படத்தின் மீதிக்கதை!


அகில், ராம்கி, சிஜா ரோஸ், இனியா, சிட்டி பாபு, பிளாக் பாண்டி, நரேன், சரத்பாபு, ரோஜா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். அத்தனை பேரும் நடித்திருக்கின்றனர் என்று அபட்டமாக தெரிவதே பலவீனம்!


ராஜகுருவின் ஒளிப்பதிவு, எம்,பாசிலின் இசை இரண்டும் சேர்ந்து மிரட்டுவது பலம்! பத்மராஜா - எல்.ஜி.ஆரின் இயக்கத்தில் பேய் படமாகவும் இல்லாமல், சாமி படமாகவும் இல்லாமல் புரியாத புதிராக "மாசாணி" இருப்பது சற்றே போரடிக்கிறது.


ஆகமொத்தத்தில், இயக்குனர் பத்மராஜா - எல்.ஜி.ஆர்., இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி "மாசாணி"யை இயக்கி இருந்தார் என்றால் "மாசாணி" "மருதாணி"யாக மனந்திருக்கும்! ரசிகர்கள் நெஞ்சிலும் சிவந்து நின்றிருக்கும்!!

நன்றி - தினமலர்

லிப் கிஸ் அடிக்க உகந்த நாள் எது? - ஜோதிட கில்மா சிகாமணி

1. அன்பே.நீ சாம்பாரில் கை தவறிக்கொட்டிய உப்பை என்னை எடுக்க சொல்வதில் நியாயம் இல்லை


-----------------------


2. போன் பண்ணி " நான் பிசியா இருக்கேன்.அப்புறம் பேசறேன்"னு சொல்லும் காதலியே! உன்னை உதைத்தால் என்ன?



-------------------------


3.  நான் உன் மீது வைத்திருகக்கும் அன்பு தமிழ் இனத்தலைவரின் சொத்தை விட பல மடங்கு அதிகம்.ஆனால் உன் அலட்சியம் ஜெவை விட பல மடங்கு அதிகம்



------------------------


4.  உன்னை யாராவது காதலிக்கவில்லை என்பதற்காக கவலைப்படாதே .நம்ம கடமை காதலிப்பதே.காதலைச்செய்.காதலை எதிர்பாராதே



--------------------------


5. நான் உன்னுடன் பேச முடியாத சூழலில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உன் கோபத்திற்கு சமாதான வார்த்தைகள் என்ன சொல்லலாம் என தேடிக்கொண்டிருப்பேன்




---------------------------


6. ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்கறது எல்லாம் சும்மா.அவள் மனம் கவர்ந்த மணாளனுக்கே தெரியும்


-----------------------



7. கடைக்குட்டி =


 1. வீட்டில் கடைசிக்குட்டி

2. கடைக்குப்போறதுக்குன்னே பெத்து விட்ட குட்டி


 3. கடைல இருக்கும் குட்டி



-----------------------------


8. கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிலா. கைக்கு எட்டும் தொலைவில் (அருகில்?) நீ!


-----------------------



9. பிகு பண்ணிக்கொள்வதை பெண்கள் தான் கண்டுபிடித்திருக்க வேண்டும்



----------------------



10. 3 பக்கமும் காதலாலும் , ஒரு பக்கம் துரோகத்தாலும் சூழப்பட்டது இந்த உலகம்



------------------------


11. நீ ஸ்கூட்டி ஓட்டும் அழகை விட என்னை ஓட்டும் ( கலாய்க்கும் ) அழகே தனிதான்



----------------------


12. நீ பிளம் கேக் சாப்பிடும்போது எழுதிய அவசரக்கவிதை - ஒரு பேக்கு கேக்கு சாப்பிடுதே , அடடே!




-------------------------


13. என் எல்லா ரசனைகளும் உன்னுடன் ஒத்துப்போகையில் “ என் இனமடி நீ!” என சொல்ல வாய் துடிக்கும், ஆனா அப்டிச்சொன்னா நீ தங்கச்சி முறை ஆகிடுவியே?



-----------------------


14. எம் இதயத்தை திருடிய பல நாள் திருடி நீ! ஒரு நாள் என்னிடம் அகப் படு வாய்!




------------------------



15. கண்கள் இல்லாதவருக்கும் , காதல் கொள்ளாதவருக்கும் உலகம் இருட்டாக இருக்கும்




------------------------



16. மற்றவர்களுடன் உன்னை ஒப்பிட்டுப்பார்த்தல் , அதீத எதிர்பார்ப்பு இவ்விரண்டையும் தவிர்த்தால் நீ வாழ்வில் நிம்மதியாக இருப்பாய்



-----------------------


17. ஏதும் பேசாமல் நீ மவுனமாய் இருக்கிறாயே என நான் யோசித்தபோது அலைபேசி ஒளிர்்ந்தது .என்னைக்கொஞ்சு. என குறுஞ்செய்தி உன்னிடம் இருந்து




-----------------------------



18. உன்னுடனான ஒவ்வொரு அலைபேசி உரையாடல் முடிவிலும் நம் இருவருக்கான இடைவெளி குறைகிறது



-------------------------


19. காதலிக்கும்போது நீ லஜ்ஜாவதி.புஜ்ஜும்மா ரதி.தாலி கட்டின பின் ருத்ராவதி



-------------------------


20.  இன்று செவ் வாய் க்கிழமை.காதலிக்கு லிப் கிஸ் அடிக்க உகந்த நாள்


---------------------------