Thursday, May 09, 2013

ஆனந்த விகடன் - மே தின படங்கள் 3 - விமர்சனம்

எதிர்நீச்சல் - சினிமா விமர்சனம்

ரு பேருக்கு இத்தனை அக்கப்போரா?
குஞ்சிதபாதம் என்ற பெயர் 27 வயது வரை தன்னைப் பாடாய்ப்படுத்திய சுவடுகளை மறைக்க, சிவகார்த்திகேயன் அடிக்கும் 'எதிர்நீச்சல்’! கல்யாணத்துக்குப் பிறகு தன் பேருக்குப் பின் இந்தப் பேரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே டேக்கா கொடுக்கும் காதலி. 'எந்தப் பேரையும் நான் சுருக்கித்தான் கூப்பிடுவேன்!’ என்று அடமாக குஞ்சிதபாதத்தை 'ஷார்ட்’ ஆகக் கூப்பிட்டுக் கடுப்படிக்கும் மேனேஜர் என பார்ட்டிக்குப் பயங்கர சிக்கல்கள்.


ஒரு கட்டத்துக்குப் பிறகு, 'ஹரீஷ்’ எனத் தன் பெயரை மாற்றியதும் ப்ரியா ஆனந்தைக் காதலிக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறுகிறது சிவகார்த்திகேயனுக்கு. ஆனால், அந்தப் பெயர் மாற்றமே இருவருக்கும் இடையில் பிரச்னையை உண்டாக்க, தன் காதலின் ஆழம் உணர்த்த சிவகார்த்திகேயன் என்ன செய்தார் என்பது மீதிக் கதை!

முதல் பாதியில் காதல், காமெடி. இரண்டாவது பாதியில் சென்டிமென்ட், லட்சிய த்ரில் என அழகான பேக்கேஜில் படம் தந்திருக் கிறார் அறிமுக இயக்குநர் துரை செந்தில்குமார். முதல்முறையாகக் கூட்டம் சேர்க்காமல் 'ஸோலோ’ ஆட்டம் ஆடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். உடல்மொழி, நக்கல் டைமிங், ரொமான்ஸ், டான்ஸ் என அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் 'ஃபைன் டியூன்ட் ஹீரோ மெட்டீரியல்’! சீனுக்கு சீன் சிரிக்கவைத்தே சிக்ஸர் அள்ளுகிறார்.



 பள்ளிக்கூட அறிமுகக் காட்சியில் ப்ரியா ஆனந்தின் முகத்தில் அட்டகாச ஜன்னல், மின்னல் எக்ஸ்பிரஷன்கள். ஆனால், அதன் பிறகு அழகிக்கு வேலையே இல்லை. ''நீ ஓடுவியானு வள்ளிக்குச் சந்தேகம். நீ வள்ளிகூட ஓடிருவியோனு கீதாவுக்குச் சந்தேகம்'' - செம லந்து வசனங்களை நச்நச்செனப் பிரசென்ட் செய்யும் சதீஷ்... ஹீரோவின் நண்பர்கள் பட்டியலில் ஃப்ரெஷ் டாப்அப்!  
பெயர் உண்டாக்கும் இம்சைகள், பெயர் மாற்றும் படலம், சிறுவனின் பள்ளிக்கூட டிராப்கள், கல்யாண மண்டபக் களேபரம் என முன்பாதி முழுக்கவே குட்டிக் குட்டி அத்தியாயங்களில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். 


மாரத்தானில் சிவகார்த்திகேயன்தான் ஜெயிப்பார் என்பதை யூகிக்க முடிந்தாலும் அதையும் சுவாரஸ்ய டெம்போவோடு கொண்டுசென்றிருப்பது... வெல்டன்! ஆனால், அதற்காக மூன்று மாதப் பயிற்சியிலேயே மாரத்தான் ஓட்டத்தில் சிவகார்த்திகேயன் சாதிப்பதெல்லாம்... டூஹண்ட்ரட் மச். அவ்வளவு பரபரப்பு, நீண்ட ஓய்வுக்குப் பிறகு நயன்தாரா ஸ்க்ரீனில் வரும் காட்சி, இப்படியா கவனிக்கப்படாமல் கடந்து போக வேண்டும்!?


'ஸ்பீடு... ஸ்பீடு...’ எனப் பாடலுக்கும் படத்துக்கும் செம மைலேஜ் கொடுக்கிறது அனிருத்தின் துள்ளல் இசை. பாடல் காட்சிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் கொடுக்கிறது வேல்ராஜின் கேமரா. 

ஒரு 'பெயர் மாற்றும்’ படலத்தை வைத்துப் பெயர் தட்டியிருக்கிறது சிவகார்த்திகேயன் - துரை செந்தில்குமார் - அனிருத் அடங்கிய தனுஷ் கூட்டணி!


சூது கவ்வும் - சினிமா விமர்சனம்

திகாலை அலாரம் வைத்து அரக்கப்பறக்க எழுந்து குளித்து, உடைமாற்றி, அமர்ந்து சாவகாசமாகச் சரக்கு பாட்டிலைத் திறக்கும் ஒருவனில் ஆரம்பிக்கிறது காமெடிக் கச்சேரி!

இதுவரை தமிழ் சினிமா டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாகப் படைத்து மனதைக் கவ்வியிருக்கிறது 'சூது கவ்வும்’!
கடத்தலுக்கு ஐந்து விதிகளை வகுத்துக்கொண்டு 'மிக நேர்மையாக, இதய சுத்தியுடன்’ ஆட்களைக் கடத்தும் விஜய் சேதுபதி, நிதி அமைச்சரின் மகனைக் கடத்தினால் என்ன ஆகும் என்பதே... கெக்கேபிக்கே படம்! ஆனால் கதை, ட்விஸ்ட், க்ளைமாக்ஸ் என்று தொகுத்து விளக்க அவசியம் இல்லாத திரைக்கதை.

1. ''இதை இட்லினு சொன்னா, சட்னிகூட நம்பாதுடா!''
''நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?''
''டெய்லி டேட் மாத்தி விக்கிறான்... அதை எதுக்குப் படிக்கணும்?''


2. ''சென்னைக்கு பிளானோட வந்தவன் எல்லாம் திரும்பப் போயிடுறான். பிளான் இல்லாம வந்தவன்தான் ஜெயிக்கிறான்!''
''சார்... எம் பொண்ணை ஒண்ணும் பண்ணிராதீங்க சார்!''


3 ''அய்யய்யா... நீங்களே சொன்னாலும் நாங்க எதுவும் பண்ண மாட்டோம் சார். கவலைப்படாதீங்க. மூச்சை இழுத்து விடுங்க. இப்போ ஃப்ரீயா ஃபீல் பண்றீங்களா?''


4  ''நான் கத்த மாட்டேன். தயவுசெஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல திணிக்காதீங்க.. நாறுது!''

5. ''ஃப்ராடுத்தனம் பண்றதுக்கு குருட்டுத் தனமான முட்டாள்தனமும், முரட்டுத் தனமான புத்திசாலித்தனமும் வேணும்!''

6. ''டெய்லி 18 டீ குடிக்கிறான்... இவனைக் கடத்த பிளான் எதுவும் போடத் தேவை யில்லை. ஒரு டீக்கடை போட்டா போதும்!''

7. ''நாளைக்கு சண்டே... நாங்க வொர்க்பண்ண மாட்டோம். திங்கட்கிழமை பணத்தை வாங்கிக் கிறோம்!''

- இப்படி சீனுக்கு சீன் சிரிப்பு மேளா நடத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் நலன் குமாரசாமி. ஆனால், அசட்டுக் காமெடிகளாக இல்லாமல் நினைத்து நினைத்துச் சிரிக்கும் அளவுக்கு ஒவ்வொரு ஒன் லைனும் அவ்வளவு இன்ட்ரஸ்டிங் ப்ளஸ் இன்டெலிஜென்ட். தமிழ் சினிமாவில் நலனுக்குக் கலகல வரவேற்பு!
படத்தில் ஹீரோ என்று யாரைச் சொல்வது? அமெச்சூர் கடத்தல்காரனாக வரும் விஜய் சேதுபதி, அதிகாலை சரக்குப் பார்ட்டி ரமேஷ், நயன்தாராவுக்குச் சிலைவைக்கும் சிம்ஹா, சாஃப்ட்வேர் பேர்வழி அசோக், நேர்மையான அரசியல்வாதி எம்.எஸ்.பாஸ்கர், அவருடைய பக்கா ஃப்ராடு மகன் கருணா, ஒரு வார்த்தை கூடப் பேசாமல் டெரர் கிளப்பும் திகில் போலீஸ் யோக் ஜெப்பி, சேஸிங்கில் கியர் தட்டும் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், பின்னணி இசையில் மிரட்டும் சந்தோஷ் நாராயணன் என எல்லாருமே அவரவர் வேலைகளில் செம ஃபிட். அரூபக் கற்பனையாக வந்தாலும் 'மாமா... மாமா...’ என்று விஜய் சேதுபதியைக் கொஞ்சிக் கொஞ்சியே கிளாமரும் ஹ்யூமருமாக வசீகரிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி. 

படத்தின் குறைகள்? நிறையவே!

இவ்வளவு சொதப்பலாக ஒரு கடத்தல் கும்பல் இருக்க முடியுமா?

ஒரு அமெச்சூர் கடத்தல் கும்பலுக்குப் பயந்து மாநில முதல்வரே கட்சி நிதியில் இருந்து கோடிகளைத் தூக்கிக் கொடுப்பாரா?

 பணப் பை ஜி.பி.எஸ். சிக்னலைப் பின்தொடராமல் போலீஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது?


கான்ஸ் டபிளைப் பார்த்தாலே உச்சா போகும் விஜய் சேதுபதி அண்ட் கோ, இன்ஸ்பெக்டர் பிரம்மா வுக்குத் தண்ணி காட்ட முடியுமா...

 போன்ற கேள்விகளுக்குப் பதில் யோசித்தாலே படத்தை ரசிக்க முடியாது. ஆனால், அது எதையும் யோசிக்கவிடாமல் அள்ளுகிறது காமெடி!

வெளியுலகை மறக்கடித்து, ஆறாம் அறிவை முடக்கிவைத்து, இரண்டு மணி நேரம் சிரித்துக் கொண்டே இருக்க முடியுமென்றால், இப்படியான 'சூது’களுக்கு நிச்சயம் விரிக்கலாம் சிவப்புக் கம்பளம்!

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்

‘காதல் ஸ்பெஷல் இயக்குநர் வஸந்த், மூன்று காதல்களோடு களம் இறங்கிய படம்! 'காதல் என்பது எடுத்துக்கொள்வது அல்ல; கொடுப்பது’ என்பதுதான் கதையின் ஒன் லைன்.  

விமலுக்கு லாசினியைக் கண்டதும் காதல். ஆனால், லாசினிக்கு ஏற்கெனவே அவரது காதலனுடன் நிச்சயமாகி இருக்கிறது. திடீரென லாசினியின் காதலில் பிரிவு நேர, அந்த இடைவெளியில் தன் காதலைத் தெரிவித்து லாசினியை ஏற்றுக் கொள்ளவைக்கிறார் விமல். எல்லாம் சுபமாகப் போகும் வேளையில், தானாகவே காதலை முறித்துக்கொள்கிறார் விமல். காரணம், சேரன்- பானு மற்றும் அர்ஜுன்- சுர்வீன் ஜோடிகளைப் பற்றி அவர் அறிந்துகொள்ளும் உண்மைகள். அது என்ன உண்மைகள் என்பதே நீளமான மீதிப் படம்!


'கேளடி கண்மணி’,  'ஆசை’, 'ரிதம்’, 'சத்தம் போடாதே’ படங்களில் காதலை அழகிய பழகியலாகப் பதிவுசெய்த வஸந்த் படமா இது? ஒன்றுக்கு மூன்றாக இருக்கும் காதல்களில் ஒன்றில்கூட வஸந்த் ஸ்பெஷல் டச் இல்லையே! 

மூன்று ஜோடிகளில் சேரன் - பானுவிடம் மட்டுமே காதலுக்கான சமிக்ஞைகள் இருக்கின்றன. விமல்-லாசினி, அர்ஜுன் -சுர்வீன் இடையிலான உரையாடல் தொடங்கி சம்பவங்கள் வரை அனைத்திலும் படர்ந்திருக்கிறது செயற்கை! 

நாகர்கோவிலில் தொண்டு நிறுவனம் நடத்தும் சேரனை மனப்பூர்வமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் பானு அசத்தல். மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகத் தயக்கமும் துணிச்சலும் கலந்து கட்டிய பெண்ணாக வசீகரிக்கிறார். சேரனின் துளியும் மிகை இல்லாத நடிப்பு... சிறப்பு. லாசினியை இம்ப்ரெஸ் செய்ய விமல் பேசுவதற்கெல்லாம் லாசினி சிரிக்கிறார்... காமெடியாம்.


 செம காமெடி! தன்னிடம் நீச்சல் கற்கும் மாணவியையே காதலிக்கும் பயிற்சியாளராக அர்ஜுன். என்ன லாஜிக் சொன் னாலும் அர்ஜுன்-சுர்வீனுக்கு இடையிலான நெருக்கத்தில் காதல் இல்லவே இல்லை! 

மூன்று காதல்களுக்கும் இடையிலான தொடர்பு இயல்பாக இல்லாததால், இதை எதற்கு ஒரே படமாக எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழாமல் இல்லை. பாடல் களிலும் காதல் ஹம்மிங்குகளின்போதும் யுவன்ஷங்கர் ராஜா இசை ஸ்பெஷல் ஸ்கோர். 'ஆஹா... காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே’, 'மழை... மழை’ பாடல்களில் நா.முத்துக்குமாரின் வரிகள் காதலும் காதல் நிமித்தமுமாகப் பொங்கித் ததும்புகிறது. மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும், நிலமும் நிலம் சார்ந்த இடமும் எனப் பிரிந்திருக்கும் கதைக் களத்தை போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு அழகாக வித்தியாசப்படுத்துகிறது.


படத்தில், 'உடம்புல சின்னக் காயம்கூட படாத ஒரே விளையாட்டு, நீச்சல்’ என்கிறார் அர்ஜுன். ஆனால், படத்தில் மூன்று காதல்கள் இருந்தும், மனசில் சின்னக் காயம்கூட ஏற்படுத்தவில்லையே வஸந்த்!?


நன்றி - விகடன்

பிளஸ் 2 தேர்வு: மாவட்டம் வாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள் முழு விவரம்!

சென்னை: தமிழகத்தி்ல் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாவட்டம் வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் முழு விவரம்
சிவகங்கை

முதலிடம்: கே.மோகன்குமார் 1173, சாம்பவிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை
இரண்டாமிடம் : சௌந்தர்யா 1172, மகரிஷி வித்யாமந்திர், காரைக்குடி
மூன்றாமிடம் (இரண்டு பேர்): 1.ஐஸ்வர்யா, 1170, செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை
2.ஜானகிபிரியா 1170, மகரிஷி வித்யாமந்திர், காரைக்குடி

வேலூர்

முதலிடம்: எஸ்.கோகுல்ராம், 1183, சன் டீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி
இரண்டாமிடம்: எஸ்.ஸ்ரீநிதி, 1182, சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி
மூன்றாமிடம்: ரிச்சர்டு ஜோஸ்வா, 1178, வள்ளுவர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம்

மொத்தம் 41061 பேர் மொத்தம் தேர்வு எழுதினர். இதில் 3,3011 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 81.13%. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 1.16% அதிகம்.

திருநெல்வேலி
 
முதலிடம்: சண்முகவள்ளி, 1185, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.
இரண்டாமிடம்: ஸ்ரீபார்வதி, 1181, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.
மூன்றாடமிடம்: கோப்பெருந்தேவி, 1180, பாரத் மாண்டிசோரி, இலஞ்சி.

நெல்லை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 94.61%. இது மாநிலத்தில் மூன்றாமிடம்.

கன்னியாகுமரி

முதலிடம்: சிவ நந்தினி, 1181, அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்.
இரண்டாமிடம்: ரிஸ்மா, 1179, அல்போன்ஸா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்
மூன்றாமிடம் (இரண்டு பேர்): 1. அஸ்வினி, 1176, மரிய ரஃபோன்ஸ் மேல்நிலைப்பள்ளி, மண்டைக்காடு.
2. எவிலின் டஃபினி, 1176, குட்ஷெப்பர்டு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம்

மொத்தம் 23,450 பேர் எழுதியதில் 22,050 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.03%.

விருதுநகர்
முதலிடம்: தீபிகா, 1185, ஒய்.ஆர்.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
இரண்டாமிடம் (மூன்று பேர்): 1. ஆர்.நேத்ராவதி, 1178, வி.எஸ்.கே.டி, சிவகாசி
2. பத்மினி சூர்யா தங்கம், 1178, ஒய்.ஆர்.சி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி
3. பிரவீன், 1178, நோபல் மெட்ரிகுலேசன் பள்ளி, விருதுநகர்
மூன்றாமிடம்: உமா, 1177, எத்தல் மேல்நிலைப்பள்ளி, சாத்தூர்

மொத்தம் 21,221 பேர் தேர்வு எழுதியதில் 20,348 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.87%. தேர்ச்சி விகிதத்தில் இது மாநிலத்தில் முதலிடம். தொடர்ந்து 28வது ஆண்டாக தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடத்தில் உள்ளது.

ராமநாதபுரம்

முதலிடம்: கிருபா மணிமொழி, 1173, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி
இரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. சித்தார்த் மனோஜ், 2. ஆயிஷா பிரியதர்ஷினி, 1170, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி
மூன்றாடமிடம்: அப்ரின்பாத்திமா, 1168, செய்யது அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி

மொத்தம் 14,702 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 89.23% பேர் தேர்வாகியுள்ளனர்.

திண்டுக்கல்

முதலிடம்: திவ்யதர்ஷினி, 1178, எஸ்.எம்.பி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்
இரண்டாமிடம்: ஆர்.சுபாஷினி, 1177, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்
மூன்றாமிடம்: கே.மதுமிதா, 1172, தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்

160 பள்ளிகளை சேர்ந்த 20,918 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 85.4% பேர் தேர்வாகியுள்ளனர்.

மதுரை


முதலிடம்: ராஜேஸ்வரி, 1187, சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை
இரண்டாமிடம்: அரிதா, 1186, மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை
மூன்றாடமிடம்: விநோதிகா, 1182, செயிண்ட் ஜோஸப் மேல்நிலைப்பள்ளி, மதுரை

மொத்தம் 34,295 பேர் தேர்வு எழுதியதில் 93.77% பேர் தேர்வாகியுள்ளனர். 

மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ராஜேஸ்வரியின் அம்மா நேற்று இறந்துவிட்டார். தன் வெற்றிச்செய்தியை காண அம்மா இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் ராஜேஸ்வரி, தன் வெற்றியையும் கொண்டாட முடியாத மனநிலையில் இருக்கிறார்.

சேலம்

முதலிடம்: கௌரி, 1185, எஸ்.ஆர்.கே. மேல்நிலைப்பள்ளி, சேலம்
இரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. விஜய் நிர்மலா, 1180, அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டூர்
2. நர்மதா,1180, வேதவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, சந்தியூர் 
மூன்றாமிடம் (நான்கு பேர்): 1. செல்வ‌குமார், 2.சக்தி சௌடாம்பாள், 3. ஸ்ரீநாத், 1179, எம்.ஏ.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேட்டூர்
4. தினேஷ்குமார், 1179, தேவியாகுறிச்சி தாகூர் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர்

மொத்தம் 35,996 பேர் தேர்வு எழுதியதில் 33,182 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 89.4%. கடந்த ஆண்டை விட 5.3% அதிகம்.

திருவண்ணாமலை

முதலிடம் (இரண்டு பேர்): 1. பிரபு, 1170, விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு,
2. சிநேகா, 1170, வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை
இரண்டாமிடம்: உம்மேஷ் சல்மா, 1167, சிஸ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை
மூன்றாமிடம் (மூன்று பேர்): 1. ரஞ்சனி, 2. மகேந்திரன், 1165,   சிஸ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை
3. ரஞ்சித்குமார், 1165, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, களம்பூர்

மொத்தம் 170 பள்ளிகளை சேர்ந்த 26,425 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 18,474 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 69.91%.
புதுக்கோட்டை

முதலிடம்: ஆர்த்தி, 1176, வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை
இரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. அசுனத் சுந்தரம், 1175, மவுண்ட் சியான் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை
2. ரேவதி, 1175, வைரம் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை
மூன்றாமிடம்: பாலகுமாரன், 1174, மவுண்ட் சியான் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

மொத்தம் 17146 பேர் தேர்வு எழுதியதில் 14,909 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.95%. கடந்த ஆண்டை விட 3.39% அதிகம்.

தர்மபுரி

முதலிடம் (மூன்று பேர்): 1. சித்திரைப்பிரியா, 1182, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாகரம் ரோடு, தர்மபுரி.
2. எஸ்.எழிலரசி, 1182, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர், தர்மபுரி
3. பவித்ராதேவி, 1182, இண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரூர்
இரண்டாமிடம்: கே.அருண்குமார், 1181, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி
மூன்றாமிடம் (மூன்று பேர்): 1. ரோஷிணி, 1178, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாகரம் ரோடு, தர்மபுரி.
2. தீபா, 1178, பச்சைமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி
3. நிவேதிதா, 1178, பச்சைமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி

கிருஷ்ணகிரி

முதலிடம்: அகல்யா, 1188, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்
இரண்டாமிடம்: ரவீனா, 1187, வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை
மூன்றாமிடம்: பரணீதரன், 1186, வித்யா மந்தீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை

நாமக்கல்

முதலிடம் (இரண்டு பேர்): 1. ஜெயசூர்யா, 1189, வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு
2. அபினேஷ், 1189, கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
இரண்டாமிடம்: பழனிராஜ், 1188, வித்யவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு
மூன்றாமிடம் (நான்கு பேர்): 1. விஷ்ணுவர்தன், 2. கண்மணி, 3. மனோதினி, 1187, கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
4. கலைவாணி, 1187, குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்

மொத்தம் 30,228 பேர் தேர்வு எழுதியதில் 28,537 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.97%. இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 94.91%.

கடலூர்

முதலிடம்: கிரிதரன், 1180, ஏ.ஆர்.எல்.எம் மெட்ரிக் பள்ளி, கடலூர்
இரண்டாமிடம்: லாவண்யா, 1178,  ஜான் டூயி மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி
மூன்றாமிடம்: அபிநயா, 1176,  காமராஜர் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம்

182 பள்ளிகளில் தேர்வு எழுதிய 28,765 மாணவர்களில் 21,058 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 73.21 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.

பெரம்பலூர்

முதலிடம்: எம். நிவேதா, 1180, ரோவர் எக்சலண்ஸ் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்
இரண்டாமிடம் (மூன்று பேர்): 1.பிரகாஷ், 1175, ராஜ விக்னேஷ் மெட்ரிக் பள்ளி, மேலமாத்தூர்
2. ப்ரியதர்ஷினி, 1175, ஸ்ரீ சாரதா தேவி  மெட்ரிக் பள்ளி
3. பாரதிகண்ணன், 1175, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்
மூன்றாமிடம்: விக்னேஷ், 1174, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி

58 பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,839 மாணவர்களில் 7,101 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 90.59 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.

அரியலூர்

முதலிடம்: சிவசங்கரன், 1180, மாண்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி, அரியலூர்
இரண்டாமிடம்: ப்ரியங்கா, 1172, மாண்ட்ஃபோர்ட் மெட்ரிக் பள்ளி, அரியலூர்
மூன்றாமிடம்: ஹரிஷ்குமார்,1161, அரசுநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

58 பள்ளிகளில் தேர்வு எழுதிய 7,746 மாணவர்களில் 5,805 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 74.84 தேர்ச்சி சதவீதத்தை பெற்று தந்துள்ளனர்.


தேனி

முதலிடம்: சீதாலட்சுமி, 1177, ரேணுகா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, தேனி
இரண்டாமிடம்: பிரியங்கா, 1175, சாந்தி நிகேதன் மேல்நிலைப்பள்ளி, தேனி  
மூன்றாமிடம்: மணிமாறன், 1173, கம்மாவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி

தேனி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகும்.

திருவாரூர்


முதலிடம்: சர்மிளாதேவி, 1182, தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.
இரண்டாமிடம்: ஐஸ்வர்யா, 1172, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்
மூன்றாம் இடம்: ஸ்ரீவித்யா, 1170, தெரசால் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருத்துரைப்பூண்டி

மொத்தம் 13,553 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 11,185 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி விகிதம்  83.53%.

தஞ்சாவூர்

முதலிடம்: ஸ்ரீவிஷ்ணு, 11810, பிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.
இரண்டாம் இடம் (இரண்டு பேர்): 1. சூர்யா, 1178, பிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்,
2. சத்யா, 1178, நகர மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்.
மூன்றாம் இடம்: மாரிமுத்து, 1177, லாரல் மேல்நிலைப் பள்ளி, பள்ளிகொண்டான்.

கோயம்புத்தூர்

முதலிடம் (மூன்று பேர்):  1. ஹரிபிரசாத், 1180, நேஷனல் மாடல் ஸ்கூல், கோவை
2. அழகம்மை, 1180, அபிலா காண்வென்ட், கோவை.
3. ஜெய‌ஸ்ரீ, 1180, ஜே.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இடையார் பாளையம்
இரண்டாமிடம் (இரண்டு பேர்): 1. சஞ்சய் சீனிவாசன், 1179, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி
2. முத்துலட்சுமி, 1179, ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை
மூன்றாமிடம் (மூன்று பேர்): 1. அபர்ணா, 1177, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிம் மேல்நிலைப்பள்ளி, சொக்கம்புதூர்
2. மகேஷ்,  1177, செயிண்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்
3. கீர்த்திகா, வித்யவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரமடை

மொத்தம் 36,070 பேர் தேர்வு எழுதியதில் 33,527 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 92.95%. இது கடந்த ஆண்டை விட 1.39% அதிகம்.

திருப்பூர்

முதலிடம்: ஸ்ரீவிஷ்ணு, 1183, ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி, திருப்பூர்
இரண்டாமிடம்: மோனிகா, 1181, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்
மூன்றாமிடம் (மூன்று பேர்): 1. அம்சவள்ளி, 1180, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்தூர்
2. சுப்புலட்சுமி, 1180, கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளக்கோவில்
3. துர்காதேவி, 1180, பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்

மொத்தம் 21,836 பேர் எழுதியதில் 20,527 பேர் தேர்வு. தேர்ச்சி விகிதம் 92.89 %. இது கடந்த ஆண்டை விட 2.09% அதிகம்.

ஈரோடு

முதலிடம்: அட்சயா, 1186, பாரதிய வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு
இரண்டாமிடம்: கௌரி, 1185, கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை
மூன்றாமிடம்: ரோகிணி வடிவு, 1184, ஆதர்ஷ் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு

மொத்தம் 26,786 பேர் எழுதியதில் 25,254 பேர் தேர்வாகியுள்ளர். தேர்ச்சி சதவிகிதம் 94.28%. கடந்த ஆண்டை விட 3.35% அதிகம்.

திருவள்ளூர்

முதல் இடம் (இரண்டு பேர்): 1. பூஜா எஸ்.குமார், 1887, சுவாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, போரூர்
2. முத்து மணிகண்டன், 1187, நாசரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஆவடி
இரண்டாம் இடம் (இரண்டு பேர்): 1. விவேக் பிரசன்னா, 1182. சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அம்பத்தூர்,
2. கிருபா சங்கரி, 1182, செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பூந்தமல்லி.
மூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1. பவித்ரா, 1181, வேலம்மாள் பள்ளி, கிழக்கு முகப்பேர்.
2. மகேஷ வர்த்தினி, 1181, வேலம்மாள் பள்ளி, கிழக்கு முகப்பேர்.

மொத்தம் 37,862 மாணவர்கள் 270 பள்ளிகளில் தேர்வு எழுதினர். அதில் 32,312 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83.33 விழுக்காடு. இது சென்ற வருடத்தை விட 4 விழுக்காடு அதிகம்.

நாகப்பட்டிணம்

முதலிடம்: (இரண்டு பேர்) 1.எஸ்.ரஞ்சனி, 1173, குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை
2.ஸ்ரீராம் கார்த்திக், 1173, ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மயிலாடுதுறை.
இரண்டாமிடம்: ஜனனி ஸ்ரீவித்யா, 1171, ஜி.எஸ்.கே.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளி, பழைய கூடலூர், குத்தாலம்.
மூன்றாமிடம்: (மூன்று பேர்) 1.கே.ஸ்ரீராம் 1170 ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.
2.ஏ.ஜெரோமி 1170 விவேகானந்தா மெட்ரிகுலேசன் பள்ளி, சீர்காழி.
3.ஜே.சௌந்தர்யா 1170 ஜி.எஸ்.கே.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி பழைய கூடலூர், குத்தாலம்

தூத்துக்குடி

முதலிடம்: சாய்லட்சுமி, 1181, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநேரி.
இரண்டாமிடம்: கார்த்திகா, 1180, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.
மூன்றாமிடம்: பகவதி, 1175, ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

மொத்தம் தேர்வு எழுதிய 19,020 பேரில் 18,157 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.46 சதவீதம். இது மாநில தேர்ச்சி விகிதத்தில் இரண்டாவது இடம்.


சென்னை

முதலிடம்: எஸ்.திவ்யா, 1186, ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா பள்ளி, அண்ணாநகர்.

இரண்டாமிடம்: ஸ்ரீ லட்சுமி, 1181, முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை.

மூன்றாமிடம்: (இரண்டு பேர்) 1.சங்கீதா, 1178, டேனியல் தாமஸ் மெட்ரிக் பள்ளி, சென்னை.
2.பிரியதர்ஷினி, மகரிஷி வித்யா மந்தீர் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

காஞ்சிபுரம்

முதலிடம்: நிவேதிதா, 1187, ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்.
இரண்டாவது இடம்: பிலாவ் ஷீனு, 1185, ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர்.
மூன்றாவது இடம்: (இரண்டு பேர்) 1.சபரீஷ், 1182, ஸ்ரீ சங்கரா வித்யா மந்திர் பள்ளி, பம்மல்.
2.சுருதி, 1182, பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி, மடிப்பாக்கம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 292 பள்ளியை சேர்ந்த 42,102 பேர் தேர்வு எழுதினர். அதில் 35,625 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 84.73 சதவீதம்.
நீலகிரி

முதலிடம்: எஸ்.வர்ஷிதா, 1158, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்
இரண்டாம் இடம்: ஆர்.ஜெகதீஷ், 1152, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்
மூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1. பெட்ரி தெரஸா டாமி , 1148, மார்னிங் ஸ்டார் மேல்நிலைப்பள்ளி, கூடலூர்
2. ஆர்.ஸ்ருதி, 1148, ஸ்டான்ஸ் மேல்நிலைப்பள்ளி, குன்னூர்.

நீலகிரி மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இது 2 சதவீதம் அதிகமாகும்.

விழுப்புரம்

முதலிடம்: மனோஜ்குமார், 1182, மவுண்ட் பார்க் பள்ளி, தியாகதுருகம்.
இரண்டாமிடம்: சுவாதிகா, 1180, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.
மூன்றாமிடம் (ஐந்துபேர்): 1.ஜான்மின் செர்லிகா, 1179, ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.
2.சிவரஞ்சனி, 1179, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.
3. கௌசல்யா, 1179, ஏ.கே.டி. மெட்ரிகுலேஷன் பள்ளி, கள்ளக்குறிச்சி.
4. சிந்துஜா, 1179, பாரதி மெட்ரிக் பள்ளி, கள்ளக்குறிச்சி.
5. வித்யா, 1179, மவுண்ட் பார்க், தியாகதுருவம்.

மொத்தம் 34,977 பேர் தேர்வு எழுதியதில் 78.03 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.

திருச்சி

முதலிடம்: (மூன்று பேர்) 1.சுஷ்மிதா, 1179, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
2.பிரவீனா, 1179, காவேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
3.சுபாஷினி, 1179, சாவித்ரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

இரண்டாம் இடம்: (மூன்று பேர்) 1.செரின்பாலாஜி, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
2.விக்ணேஷ் ராம், 1178, பிஷப் ஹுபர் பள்ளி, தெப்பக்குளம்.
3.அனு தர்ஷினி எஸ்.வி.வி. மேல்நிலைப் பள்ளி, அல்லூர்.
மூன்றாம் இடம்: சாத்விகா, 1177, எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 201 பள்ளிகளில் இருந்து 29,776 பேர் தேர்வு எழுதியதில் 27,923 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.78%. இது கடந்த ஆண்டை விட 5.75% கூடுதல் ஆகும்.

கரூர்

முதலிடம்: ஜி.அனந்த லெட்சுமி, 1185, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்
இரண்டாம் இடம்: பி.அனுஷா, 1182, சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்
மூன்றாம் இடம் (இரண்டு பேர்): 1.ஏ.ஜி.பாலா சர்வேஷ், 2. எஸ்.பர்வீன்குமார், 1177, பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி, தலப்பாடி



சி.என்.டி டீம்
 
thanx - vikatan

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 13


ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,"இந்த வழக்கில் ஆலையை எதிர்த்து வழக்காடியவர்கள், தொண்டு மனப்பான்மையோடு, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு பாராட்டுக்குரிய விதத்தில் செயல்பட்டனர்"  என தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் வைகோ எழுந்து, 'நீதியரசர்களே, தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களைப் பாதுகாப்பதற்காக ஸ்டெர்லைட் நாசகார அழிவில் இருந்து மக்களை மீட்பதற்காக இதுவரையிலும் அர்ப்பணிப்போடு பாடுபட்டு வந்துள்ளேன். அதே நோக்கத்துடன் நீதிக்காக ஏக்கமுற்று இந்த நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினேன்' என்று சொன்னவுடன், 'நாங்கள் தீர்ப்பில் அதைக் குறிப்பிட்டு இருக்கிறோமே, மக்களுக்காகப் போராடுகிறீர்கள்; தொடர்ந்து அதைச் செய்யுங்கள்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் ஆலை நிர்வாகம் தரப்பில் பேசிய அதிகாரிகள், 'இது நீதிக்கு கிடைத்திருக்கும் வெற்றி. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இந்த பகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கிறோம். தொடர்ந்து அதனை செய்வோம்' என்றார்கள் உற்சாகத்துடன். இந்த தீர்ப்பு வெளியான மறு நிமிடத்திலேயே பங்குச் சந்தையில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்குகளின் விலை உயரத் தொடங்கியது. ஒரே நாளில் அந்த நிறுவனத்தின் பங்குகள் 5 சதவிகிதம் உயர்வடைந்தது.

தீர்ப்புக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் இந்த களத்தை இழந்து இருக்கலாம். ஆனால் எங்கள் யுத்தம் தொடரும். ஸ்டெர்லைt ஆலையை மூடும் வரையிலும் எங்களின் சட்ட போராட்டம் தொடரும். இதே உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வேன். மராட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டி, கடப்பாறையோடு ஸ்டெர்லைட் ஆலையை உடைத்து நொறுக்கியதால் அந்த மாநில அரசு லைசென்சை ரத்து செய்தது. தென் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் அப்படி செய்யவில்லை. அறவழியில் நீதிக்காகப் போராடினோம். இதில் பின்னடைவு ஏற்பட்டாலும், தொடர்ந்து போராடி நீதியை நிலைநாட்டுவோம்" என்று ஆவேசப்பட்டார்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலை திறக்கப்படவில்லை. இந்த விவகாரத்தையும் சீக்கிரத்திலேயே முடித்தால் மட்டுமே ஆலையை இயக்க முடியும் என்பதால் மார்ச் 29 ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட சிலர் மனு தாக்கல் செய்தனர்.

பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் எம்.சொக்கலிங்கம், பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தார்கள். அரசு தரப்பில் வழக்கறிஞர் அப்துல் சலீம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய ராஜகோபால், "ஆலையால் சுற்றுப்புற மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மக்களிடம் தேவை இல்லாத அச்சத்தை திட்டமிட்டே சிலர் உருவாக்குகிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உள்ளேயே கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் மக்களுக்கோ, கால்நடைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த ஆலையில் 1100 பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். 2500 பேர் ஆலையின் மூலமாக மறைமுகமாக பெணி வாய்ப்பு பெறுகிறார்கள். ஆலையை மூடுவதால் அவர்களின் குடும்பம் கஷ்டப்படும்.

ஆண்டுக்கு 13,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடக்கும் இந்த நிறுவனத்தின் மூலமாகவே நாட்டின் 50 சதவிகித அலுமினிய தேவை ஈடு செய்யப்படுகிறது. அத்துடன் வருமான வரியாக மட்டும் 1,600 கோடி ரூபாய் கட்டப்படுகிறது. இவ்வளவு பெரிய ஆலையை மூடுவது நாட்டின் வருவாய் இழப்புக்கு வழிவகுக்கும். அதனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 

அரசுத் தரப்பை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் சலீம், ம.தி.மு.க சார்பில் ஆஜரான வைகோ ஆகியோர் இதற்கு பதில் அளிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள், இதற்கு முன்னர் நீதி குழு, உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புக் குழு போன்றவை ஆலையின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துக்களை பசுமை தீர்ப்பாயத்தில் எடுத்து வைத்தனர். எந்த குழு தெரிவித்த கருத்துக்களையும் ஆலை நிர்வாகம் செயல்படுத்தவில்லை என்பதையும் தாங்கள் வாதத்தில் முன்வைத்தனர்.
 
அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சோமையாஜூ, "இந்த ஆலை விதிமுறைகளை மீறுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பலதடவை இது போல விதிகளை மீறி இருக்கிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரியம் விதித்த தடையை நீக்க வேண்டுமானால் அந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டுமே தவிர, பசுமை தீர்ப்பாயத்திடம் அல்ல. அதனால் இந்த மனுவை ஏற்றதே தவறு" என வாதிட்டார்.

இதனால் கோபம் அடைந்த பசுமை தீர்ப்பாணையத்தின் தலைவரான சொக்கலிங்கம், "இதுவரையிலும் இந்த ஆலை 84 முறை அளவுக்கு அதிகமாக கழிவுகளை வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது எதற்காக?' என கேள்வி எழுப்பினார்.

தென்னிந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், நீதிபதி வெளியிட்ட அந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது பற்றிய விவரம் நாளை... 

Wednesday, May 08, 2013

வனச் சுதந்திரம் மேலாண்மை. பொன்னுச்சாமி

, ஓவியங்கள்: மனோகர்


கட்டை முக்கித்தக்கி தூக்கித் தோளில் போட்டவுடன் பாரம் தாளாமல் முதுகு வளைந்தது கடற்கரைக்கு. எல்லோரும் சிட்டாகப் பறக்கிறார்கள். அவர்களுடைய சின்னச் சிறகுகளில் மனத் துள்ளல். வெள்ளிக்கிழமை சாயங்காலம். சாயந்தர வெயில் கண்ணில் ஊசி பாய்ச்சுகிறது. கன்ன மிருதுகளில் தீச்சூடுவைத்த மாதிரி ஒரு காந்தல்.
இனி, ரெண்டு நாளைக்கு லீவு. 'அய்ய்க்... அய்ய்ய்க்...’ ஆடலாம், பாடலாம், டி.வி. பாக்கலாம், தெருவில் கிரிக்கெட் விளையாடலாம். கிணற்றுக் காட்டில் விழுந்து, குதித்து முங்கு நீச்சல் போடலாம். சின்னச் சிட்டுகளின் சிறகு விரிப்பில் எழும்புகிற காற்றென, மனசுக்குள் கனவுகள் ததும்பிப் பரவுகிற பரவசப் பெருக்கு. கால் முளைத்த கனவுகளாகத் தெருக்களில் ஓடிச் சிரிக்கிற பூச்செண்டுகள்.
கடற்கரைக்கு மட்டும் பாரம் தாளாமல் முதுகு குனிகிறது. கவலைப் பாரம் தாங்காமல் மூச்சுத் திணறுகிற மனசு. ஒவ்வொரு பீரியடிலும் ஒவ்வொரு வாத்தியார். மாதாந்திர டெஸ்ட்டின் ரிசல்ட் அறிவித்தனர். நீளவாக்கில் மடித்த பேப்பர் கட்டு. போட்டிருந்த வட்டத்துக்குள் மார்க். பக்கத்தில் பெயர். ஒவ்வொரு வாத்தியார் வருகிறபோதும், அவர் கையில் வைத்திருக்கிற பேப்பர் கட்டைப் பார்த்து எல்லாருக்கும் 'திக்திக்’ என்றிருக்கும். மூச்சு முட்டும். 'என்ன மார்க்கோ...’ என்ற பயமும் திகிலும் நெஞ்சுக்குள் மோதித்தள்ளும். கடற்கரைக்கும் அப்படித்தான். ஆனால், ரிசல்ட் அறிவித்த பிறகு, அவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். றெக்கை முளைத்த மாதிரி மனசு கிடந்து 'சிவ்வ்’வென்று பறக்கும். சமூக அறிவியலில் நூத்துக்கு எண்பத்துநாலு. அறிவியலில் எழுபத்தாறு. தமிழில் தொண்ணூற்றிரண்டு. கணக்கில் அறுபத்தெட்டு. இங்கிலீஷ்தான் தகராறு.
எல்லா ஆசிரியர்களும் கடற்கரையைக் குறிப்பிட்டுப் பாராட்டுவார்கள். ''ஓம் பேரென்னடா?''
''சி.கடற்கரை.''
''உங்க அய்யா பேரென்ன?''
''கே.சின்னான்.''
''அவர் என்ன செய்றாரு?''
''பன்னி மேய்க்குறாரு.''
''உங்க அய்யாவுக்குக் கையெழுத்துப் போடத் தெரியுமா?''
''இல்ல சார்... கட்டை விரலு மைதான்.''
''படிப்பு வாசனையே தெரியாத பரம்பரையில வந்த முதல் பையன் கடற்கரை. இவ்வளவு மார்க் ஸ்கோர் பண்ணியிருக்கான். அவனைப் பாராட்ட ணும். எல்லாரும் அவனை முன்மாதிரியா எடுத் துக்கணும்.''
வகுப்பறை முழுக்கக் கை தட்டலின் சேர்ந்திசை ஒரே லயத்தில் ஒலிக்கும். பெருமிதத் ததும்பலுடன் ஆசிரியரை மலங்க மலங்கப் பார்ப்பான். அவனுக்கு அழுகை வரப்போகிற மாதிரி நெஞ்சுக் கூட்டுக்குள் ஒரு திணறல். சிரிப்பும் கண்ணீரும் சேர்ந்து பொங்கும். இடது பக்கம் உட்கார்ந்திருக்கிற அருஞ்சுனை முழங்கையால் விலாவில் இடிப்பான். கண்ணடித்துச் சிரிப்பான். பாராட்டுத் தொனியி லான இடிப்பு.
''ஒன்னைப் பாராட்டுற சாக்குல எங்களை எல்லாம் குட்டுறாரு'' என்று கிசுகிசுத்து, வலது கண்ணால் ஒரு வெட்டு வெட்டுவான்.
கணக்கு வாத்தியார் மெஷின் மாதிரி. வந்து நின்று ரிசல்ட் வாசித்துவிட்டு யந்திரமாகப் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார். இங்கிலீஷ் வாத்தியார் சாதி வெறிபிடித்தவர். கீழத் தெரு சேரிப் பிள்ளைகளைக் கீழக்கண்ணால் பார்ப்பார். சகிப்பின்மையும் சிடுசிடுப்பும் கண்ணில் அனலாகத் தெறிக்கும். கடற்கரை விளக்குமாற்றடி வாங்கத் தயார் நிலையில் இருப்பான். எல்லாருக்கும் மார்க் அறிவித்துவருவார். பாராட்டுவார். பாராமல் நகர்வார். சேரிப் பிள்ளைகள் நாலு பேரையும் இவனையும் அறிவிக்காமல்... ஒதுக்கிவைப்பார். கட்டக் கடைசி யில் ஏளனத் தொனியிலான குரலுடன் அறிவிப்பார்.
''மாடசாமி... இருபத்தெட்டு.''
''சோலைராஜ்... முப்பத்தாறு.''
''பவுண்ராஜ்... முப்பத்திமூணு.''
''முனியசாமி... முப்பத்தியண்ணு.''
''கடற்கரை... இருபத்தேழு.''
இந்த ஐந்து பேரையும் தனிமைப்படுத்தி வாசித்ததுடன், அவர்களைச் சேர்த்து மொத்தமாகப் பார்ப்பார்.
''ஏண்டா... நீங்கள்லாம் படிக்க வரணும்னு யாரு அழுதாக? இங்கிலீஷ் பாடத்தை முக்கி முக்கி நா நடத்துறேன். மூச்சு முட்ட வெளக்குறேன். கிராமர் சொல்லித் தாரேன். நீங்க அதையெல்லாம் கேட்டுட்டு... டெஸ்ட்ல இவ்வளவுதான் மார்க் எடுப்பீங்களா? பூராவும் ஃபெயிலு... நீங்கள்லாம் என்னத்துக்குடா ஸ்கூலுக்கு வர்றீங்க? நீங்கள்லாம் பன்னி மேய்க்கத்தாண்டா லாயக்கு.''
கோபமும் குமுறலுமாகக் கொட்டித் தீர்க்கிற வாத்தியார். கேவலப்படுத்திக் காறித் துப்புவதில் ஒரு மகிழ்ச்சி. சாதி யைச் சுட்டிக்காட்டுவதில் அவருக்கு ஒரு திருப்தி.
''உயரத்துல பறக்க ஆசைப்பட்டாலும் ஊர்க் குருவி பருந்தாகிர முடியாது. பன்னிச் சாணி பொறுக்க ஓடைக்காட்டுக்குப் போனாலும், நாலு கூடைச் சாணி தேறும். படிக்குறதுக்கு இங்க வந்து எங்க உசுரை ஏண்டா வாங்குறீங்க?''
கடற்கரைக்கு றெக்கைகளைப் பிய்த்துப் போட்ட மாதிரி இருக்கும். அடி மனசில் தீக்கோலைச் செருகின காந்தல். ஒரு செருப்பைக் கவ்வக் கொடுத்து, மறு செருப்பால் அடித்த மாதிரியான வலி. அவமான அவஸ்தை. நனையப்போட்ட வார்த்தை விளக்குமாறுகொண்டு விளாசித் தள்ளுகிற இங்கிலீஷ் வாத்தியார். மற்ற வாத்தியார் கள் பாராட்டுகளை டஸ்டர் கொண்டழித்ததுபோல மறந்துவிடும். இந்த வாத்தியாரின் விஷமத்தனம் நெஞ்சுக்குள் குத்தின முள்ளாக வலிக்கும். முதுகில் ஏறிய பாரச் சுமையாகக் குனியவைக்கும். கடற்கரையால் அதை மறந்துவிட்டு இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. கடைசிப் பீரியடில் வந்து, ''பன்னி மேய்க்கத்தான் நீங்க லாயக்குடா'' என்று காறித் துப்புகிறார். காறித் துப்பிய எச்சில் மனசுக்குள் வழிகிறது.
இங்கிலீஷ் பாடம் நடக்கிறபோது எல்லாம் வகுப்பறை,  தகிப்பறையாகிவிடும். அதே மாதிரி ட்ரில் வாத்தியார். அவருக்குப் பிரம்பு என்றுதான் பட்டப் பெயர். ஒல்லியாக, கட்டையாக இருப்பார், பிரம்புக்குச்சி மாதிரி. கையில் பிரம்பு இல்லாமல் அவரை எப்போதும் பார்க்க முடியாது. விளையாட்டுப் பீரியடில் மட்டுமில்லை; வகுப்பிலும் அவருடைய அழிச்சாட்டியம் தொடரும். ஒழுங்குகளையும் விதிகளையும் அதிகாரத் தொனியில் உச்சரித்து அச்சுறுத்திக்கொண்டே இருப்பார்.
கடற்கரை பைக் கட்டுச் சுமையோடு தெருவுக்குள் நுழைந்தான். மற்ற பையன்கள் ஏதாச்சும் கடையில் வாங்கித் தின்பார்கள். காசு இல்லாதவர்கள் ஏங்கிப் பார்ப்பதுடன் சரி. அருஞ்சுனை அச்சுமுறுக்கு ரெண்டு வாங்கினான்.
''இந்தாடா கடக்கரை...''
''வேணாண்டா.''
''ஒண்ணு வெச்சுக்க...''
சுற்றும் முற்றும் பயத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அருஞ்சுனையிடமிருந்து முறுக்கை வாங்கிக்கொண்டான்.
''சேரிப் பயலோட ஒனக்கு என்னடா சகவாசம்?'' என்று அவனையும் வைவார்கள்.
''ஏண்டா... அவன்தான் கேணப்பய... குடுத் தான்னா, நீ வாங்கிர்றதா?'' என்று இவனுக்கும் வசவு விழும்.
தெரு நெருங்கிவிட்டதை உணர்த்துகிற பன்றிக் குட்டிகளின் விளையாட்டு உறுமல்கள். கேலிக் கடிகளும், கிண்டலான ஓட்டங்களுமாக, நுனி சுருண்ட வாலுடன் அதுகள் நடத்துகிற விளையாட்டுகள். தாழ்வாரத் திண்ணைக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற சினைப் பன்றி. பின்னங்காலில் கட்டி, தூணில் கட்டப்பட்டிருக்கிறது. கயிறு விறைப்பாகிற அளவுக்கு இழுத்துத் திமிறுகிற சினைப் பன்றியின் வலி நிறைந்த உறுமல்கள்.
கடற்கரைக்குள் இருளன் வந்துபோகிறான். அவனது சுதந்திரமே தனி. காடெல்லாம் அவன் ராஜ்யம். ஆடுகள் அதுபாட்டுக்கு மேய்ந்து திரியும். இவன் கம்பை ஊன்றிக்கொண்டு நிற்பான். வெயில் அவனுக்கு நிலா வெளிச்சம் மாதிரி. ஆளில்லாத வனாந்தரச் சுதந்திரத்தில் கெட்ட வார்த்தைகளைக் கோத்துச் சத்தமாக ஓங்கிப் பாட்டுப் பாடுவான்.
ஆசிரியர்கள் இல்லை. வகுப்பறைகள் என்ற ஒழுக்கம் இல்லை. வட்ட வரம்புக்குள் பிரம்புக்குப் பயந்து விளையாடுகிற கட்டுப்பாடு இல்லை. 'பன்னி மேய்க்கத்தாண்டா நீங்க லாயக்கு’ என்று கரித்துக்கொட்டும் ராட்சஸம் இல்லை. வீட்டுப் பாடம் இல்லை. இம்போசிஷன் இல்லை. இங்கிலீஷ் பாடம் ஒன்றையே ஐந்து தடவை எழுதிக் காட்டுகிற தண்டனை இல்லை. ஏகப்பட்ட இல்லைகளே... அதன் சுதந்திரம். வனச் சுதந்திரம். சுதந்திரக் காடு!
சாணிப் பால் தெளித்துத் தெளித்து இறுகிப் போயிருக்கிற வீட்டு முற்றத்தில் பைக் கட்டைப் போட்டுப் பக்கத்தில் உட்காருகிறான். இங்கிலீஷ் வாத்தியார்தான் இம்போசிஷன் போட்டிருக்கிறார். மூன்று பக்க ஸ்டோரியை மூன்று தடவை நோட்டில் எழுதி வர வேண்டும்.
''திங்கக்கெழமை எழுதாம வந்தீகன்னா... பிரம்பு இருக்குடா. முதுகுத் தோலை உரிச்சிருவேன். உள்ளங்கை பழுத்து வீங்கிரும்டா.''
மழுங்கச் சிரைத்த மொட்டை முகத்தில் நாலு கோரப் பல் நீட்டிக்கொண்டிருக்கிற மாதிரி இருந்தது. உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுத ஆரம்பித்தான். வெயில் மறைந்த அந்தி வெளிச்சம். படலை ஓட்டினாற் போல நடை போடுகிற பன்றிக் குட்டிகள். சொட்டடித்துத் தெறிக்கிற சாக்கடைத் துளிகள். சினைப் பன்றி முன்னால் தரையில் பதித்திருக்கிற மரக் குளுதாடி, கஞ்சி இல்லாமல் காய்ந்துகிடக்கிறது. வீட்டு முற்றத்தின் உப்பு மூலையில் படல் வளையத்துக்குள் குவிக்கப் பட்டுள்ள பன்னிச் சாணி, மண்ணையும் குப்பை யையும் சேர்த்து கூட்டிப் பெருக்கித் தள்ளிய குச்சிமார், குப்பை பக்கத்திலேயே கிடக்கிறது.
மொட்டை மூஞ்சி வாத்தியாரின் அச்சுறுத்தல், தண்ணி குடிக்க முடியாமல் பூட்டிக்கிடக்கிற வீட்டுக் கதவு, உலர்ந்த நாவில் முறுக்கின் நொறுங்கல். காலை மடக்கிக் குனிந்து எழுதுகிற திரேகச் சிரமம். இங்கிலீஷ் புத்தக வரிகளில் இடது கைச் சுட்டு விரல் நகர... வலது கை நோட்டுக் கோடுகளில் எழுதிச் செல்கிற மனச்சலிப்பு. அழுத்துகிற கட்டாயத்தின் வலி தருகிற உணர்வலுப்பு.
இருளனை நோக்கி ஓடுகிற மனசு. அவன் பக்கத்தில் உட்கார வேண்டும். அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்க வேண்டும். போன மாசம் அய்யாவைத் தேடி ஆத்துப் பாலம் பக்கம் போனான் கடற்கரை. ஆத்துப் பாலத்துக்கு வடக்கில் பரந்து விரிந்த சமுத்திரத் தரிசு நிலங்கள், ஆடுகள் மேய்கின்றன. மேய்கிற ஆடு களின் முதுகில் கரிச்சான் பறவை. பனியன் டவுசர் எல்லாம் கழற்றிப் போட்டுவிட்டு, இடுப்புக் கைலியைத் தலையில் தலைப்பாகையாகச் சுற்றிக் கொண்டு வெட்டவெயிலில் 'தங்கு தங்கெ’ன்று குதித்துக் கும்மாளம் போடுகிற இருளன். பழுத்த இள வட்டம். வெட்டவெளியில் பட்டப் பகலில்... கட்டுக்கள் இல்லாத வனாந்தரச் சுதந்திரத்தில்... ஆச்சர்யமும் அதிசயமுமாக வியந்து பார்த்த கடற்கரை. மூச்சுமுட்டுகிற வியப்பை அருஞ்சுனையிடம்தான் பகிர்ந்து கொண்டான்.
போன வாரம் ஞாயிற்றுக்கிழமை பொழுதடைந்து இருட்டிவிட்டது. சாக்கடை வாய்க்காலுக்குக் கட்டிய பாலத்தின் கைப் பிடிச் சுவரில் இருளன் உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுற்றிலும் நாலைந்து பயல்கள் முண்டியடித்து நெருக்கிஅடித்துக்கொண்டு... அதில் கடற்கரையும் ஒருத்தன். மடி நிறைய காராச்சேவு வாங்கிப் போட்டிருப்பான். வந்த பயல்களுக்கெல்லாம் ஒரு கைப்பிடிச் சேவு கிடைக்கும். கடற்கரைக்கும் கிடைத்தது.
''ஆடு மேய்ச்சுக்கிட்டே ஐயப்ப நாயக்கரு புஞ்சையில பெறக்குன பருத்திதான் மடியில காராச்சேவாகிக் கிடக்கு. ஐயப்ப நாயக்கரு புண்ணியத்துல ஆளுக்குக் கொஞ்சம் ருசி பாருங்க!''- அவனது கைத் தாராளத்துக்கு அவன் சொன்ன நியாயம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
''களவாண்டா... வைய மாட்டாகளா?''
''ஆப்புட்டா... அடி பின்னியெடுத்து சாணியைப் பிதுக்கிருவாக. ஆப்புடாத வரைக்கும் நம்ம ராஜ்யந்தான்.''
களவை ஒரு குற்றமாகக் கருதாமல் கொண்டா டிக் குதுகலிக்கிற அவனுடைய சாகசப் பெருமிதம்.
''களவு சில்லறை இல்லாம காடு கரைகள்ல அலைய முடியுமா? சொந்த நெலம் இல்லாமலேயே நாப்பதாடுகளை மேய்ச்சு, இருபது குட்டிகளுக்கு இரை பாத்து, கொழைகட்ட முடியுதுன்னா... சும்மாவா? களவுதான். சம்சாரிக வெள்ளாமையில ஓரம்சாரம் கைவைக்காம... ஆட்டுக் குட்டி, மாடுகனு வளக்க முடியுமா?''
அதை சகஜப்படுத்திச் சொல்லுகிற சாகசத் தொனியில் கடற்கரைக்குக் கிறுகிறுப்பு வரும். சொக்கிப்போய் நிற்பான். அது மட்டுமல்ல... அவன் சத்தம் குறைத்து, கிசுகிசுப்பு ரகசியமாகச் சொல்லுகிற கிளுகிளுப்புக் கதைகள் வண்டி வண்டியாக வரும்.
மாடு மேய்க்க வருகிற பெண்களைத் தொட்டுப் பார்த்த சாகசம். சீமைக் கருவேலம் புதர்களுக்குள் மறைகிற கள்ள ஜோடிகளைக் கல்லெறிந்து கலைத்தது, கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கள்ள ஜோடி தொடர்ந்து இவனுக்குக் கப்பம் கட்டிவருவது... தீபாவளி, பொங்கல் என்றால் சில வீடுகளில் கறிச்சோறு விருந்து கிடைப்பதன் சூட்சுமம் என்று கதைகள் நீளும். ஆடு, கோழி, மாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிற அதே சகஜபாவத் தொனியில், மனிதர்களின் உறுப்புகள் பெயரையும் சர்வ சாதாரணமாக உச்சரிக்கிற பாங்கு. இருளன், இவனுக்கு ஆச்சர்யமான வீரன்!
நன்றாக இருட்டிவிட்டது. தெரு விளக்கின் வெளிச்சம் வீட்டு முற்றத்தில் தாராளமாக விழும். அந்த வெளிச்சத்தில் எழுதிக்கொண்டிருந்தான். இன்னும் மூணு பக்கம்தான். விரலெல்லாம் வலிக்கின்றன. மடங்கிக் குனிந்து எழுதுவதால், இடதுபக்க இடுப்பெலும்பில் கடுகடுக்கிற வலி. அம்மா கொடுத்த டீத் தண்ணீரும் குடி தண்ணீரும் வயிற்றையும் வாயையும் மனசையும் நிரப்பியிருந்தது. அய்யா சின்னான் வந்தவுடன், 'எழுத்து வேலையா? எழுது எழுது...’ என்ற விசாரிப்புடன் கூடிய உற்சாகப்படுத்தலுடன் இவன் தலையை வருடினான் பாசப் பரிவுடன்.
சட்டியிலிருந்து கழிவுத் தண்ணீரையும் சோற்றுக் கஞ்சியையும் வீட்டுக்குள் இருந்து கொண்டுவந்து, பணம் பெற்ற தங்கப் பெட்டியான சினைப் பன்றிக்கு மரக் குளுதாடியில் ஊற்றினான். குடிப்பதற்காக ஓட்டமாக ஓடி வந்த பன்றிக் குட்டிகளைக் குச்சியால் துரத்தி அடித்தான். சினைப் பன்றி மட்டுமே தாகத் தவிப்புடன் உறிஞ்சிக் குடித்தது.
'படிடா... கடக்கரை. படி... ஏர்போர்ட் ராமலிங்கம் மாதிரி, நீயும் வரணும்டா? அதுக்கும் மேல வரணும்டா...’ என்றதன் கனவையும் பின் இணைப்பாகச் சேர்த்துச் சொன்னான்.
சக்கிலியக்குடியில் முதன்முதலில் பத்து வகுப்பு படித்துவிட்டு, ஏர்போர்ட்டில் வேலை பார்த்து சூட், சட்டை, பூட்டுடன் தெருவுக்குள் வந்த ராமலிங்கம், இப்போது பென்ஷனும், விமானப் படை வீரர்களுக்கான சலுகை விலைச் சாமான்களும் வாங்கிக்கொண்டிருக்கிறான். அவர் ரேஷனில் வாங்கி வருகிற மதுப் பாட்டில்கள் ஊரில் பிரபல்யம். சின்னானின் லட்சிய புருஷன் ராமலிங்கம். 'நம்ம புள்ளையும் படிச்சு, பெரிய படிப்பு போய்... பெரிய உத்தியோகத்துக்கும் போய்... ரொம்ப மேல் நெலைக்கு வரணும்’ என்று அடிக்கடி நினைத்துக்கொள்வான் சின்னான்.
இங்கிலீஷ் பாடம் எழுதி முடிக்கிறபோது, இருட்டிவிட்டது. விளக்கு வெளிச்சத்தில் பைக் கட்டைக் கட்டிவைத்தான். இப்பவும் இருளனைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. அந்தப் பாலத்துச் சுவர் நோக்கி நடையை எட்டிப் போட்டான். அங்கு, இருளன் சபை கூடியிருந்தது. கதைகள் கால் முளைத்து வார்த்தைகளாகி வெளிவந்தன. இவன் போகிறபோது காராச்சேவு ஒரு கைப்பிடிதான் எஞ்சி இருந்தது. அதை இவனிடம் நீட்டினான். இவன் சேவை வாங்கித் தின்றுகொண்டான். கதைகளின் ஜோதியில் ஐக்கியமானான் கடற்கரை.
இங்கிலீஷ் பாடம் நடத்துற மொட்ட மூஞ்சி, கெட்ட கனவைப் போல வந்து வந்து நிற்கிறார் மனசுக்குள். ரிசல்ட் பேப்பர் கொடுக்கிற ஒருநாளில் மட்டுமல்ல; அனைத்து நாட்களிலும் இதே பாடுகள். வசவுகள். ஏளனப் பார்வைகள். ஆணி குத்தின ரத்தக் காயமாக மனசுகிடந்து ரணமெடுக்கும். தினசரி அவரது அடிகள். வார்த்தைகள். 'பன்னி மேய்க்கத்தான் லாயக்கு...’ என்கிற இங்கிலீஷ் வாத்தியாரின் அன்றாட அவமதிப்புகள், செருப்படிகள் இருளனின் மடியைச் சுகமானதாக்கும், மையல் கூடும்.
திங்கட்கிழமை. இங்கிலீஷ் பாடம் நடத்த மொட்டை மூஞ்சி வந்துவிட்டது. இம்போசிஷன் எழுதிய நோட்டுகள் மேஜையில் அடுக்கப்பட்டுஇருந்தன. எல்லாவற்றையும் சரி பார்த்தார். மேம்போக்கான பார்வை. பார்த்தும் பார்க்காத பறவைப் பாய்ச்சல். கடற்கரை நோட்டை வரிவரியாகப் பார்த்தார். சரியாக எழுதியிருந்தான். ஒரே கதையை மூன்று முறை எழுதி இருந்தான். இதை எதிர்பார்க்காத அவர் முகத்தில் ஏமாற்ற இருள். வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை உற்றுக் கவனித்தார். சில இடங்களில் சிவப்பு மை பேனாவால் வட்டம் போட்டார்.
''ஏண்டா... பாத்து எழுதுறப்பவும் இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?''
''இல்ல... சார்?''
''என்ன நொள்ள சார்? கையை நீட்டுடா...''
அருஞ்சுனை உட்பட அத்தனை பேருக்கும் இது அநியாயமாகப்பட்டது. வேண்டுமென்றே கேவலப்படுத்துகிற கெடுமதியான மூர்க்கம். மொட்டை மூஞ்சியை வெறுப்புடன் பார்த்தனர். அவர் பிரம்பை எடுத்தார். உள்ளங்கையை நீட்டச் சொன்னார். குச்சியை ஓங்கிய கை மாறாமல், சுழற்றியடிக்கிறார். சுரீர் என தீச்சூடு பட்ட மாதிரி காந்துகிறது. அடி... அடி... அடிகள் என்று அடி பின்னியெடுத்துவிட்டார். தொடையிலும் அடிகள்... உள்ளங்கைகளிலும் அடிகள். ரத்தம் கன்றிப் போன அடித்தடங்கள். துள்ளத் துடிக்கக் கதறி வெடிக்கிற கடற்கரை அழுகையும் அலறலுமாகப் பதறிப் பதைக்கிற அவனுடைய கண்ணீர். பைக் கட்டோடு சின்னான் முன்னால் போய் நின்று அழுது கொட்டுகிற கடற்கரை,
''நாஞ் செத்தாலும் சரி... ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.''
''ஏண்டா..?''
''போ... போன்னு என்னை அனுப்புனீகன்னா. அரளி வெதையைத் தின்னுச் செத்துருவேன்!''
று வாரம்.
இருளனுடன் ஆடுகளைப் பத்திக்கொண்டு காட்டுத்தரிசு நோக்கிக் கம்புடன் நடக்கிற கடற்கரை, மொட்டை மூஞ்சி வாத்தியாரை மனசுக்குள் வைதுகுவித்தான்!

thanx - vikatan

Tuesday, May 07, 2013

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 12

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 12-ஆண்டனி ராஜ்


படங்கள்: ஏ.சிதம்பரம் 





ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்ததும் தூத்துக்குடி நகரில் பட்டாசு சத்தம் ஓய்வதற்கு நீண்ட நேரம் ஆகியது. பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள் என மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இனிப்புகள் வழங்கி மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

அரசியல் கட்சியினரும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்றார்கள். ம.தி.மு.க பொதுச்செயலாளர் 
வைகோ, அரசின் முடிவை வெகுவாக பாராட்டினார். 'பொதுமக்கள் நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூட மிகச் சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் ம.தி.மு.க சார்பாகவும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என அறிக்கை வெளியிட்டார். போராட்ட காலத்தில் ஆலைக்கு ஆதரவாக பாதியிலேயே போராட்டத்தை முடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள் கூட முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலான இந்த முடிவை பாராட்டினார்கள்.

இறுதிக் கட்ட விசாரணை

உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஹெச்.எல்.கோகலே முன்னிலையில் 30 அமர்வுகள் நடந்து வந்த ஸ்டெர்லைட் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியது. ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 1-ம் தேதி இறுதியாக வாதிட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், 'ஸ்டெர்லைட் ஆலையை மார்ச் 30-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடச் செய்துள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்றார்.

ஆனால் ஆலை மீதான தமிழக அரசின் நடவடிக்கைக்கு முன்பாகவே உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கையை அதில் இடம்பெற செய்ய முடியாது என நீதிபதி பட்நாயக் தெரிவித்து விட்டார். அதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தான் எடுத்த நடவடிக்கை பற்றி உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்ய இயலவில்லை.

உடனே வைகோ எழுந்து, 'ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழக அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்' என தெரிவித்து விட்டு நீதிபதிகளின் அனுமதியுடன் பேச தொடங்கினார். 'ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக-டை-ஆக்சைடு நச்சுப் புகையால் தூத்துக்குடி மக்கள் கடற்கரை ஓரத்திலும், பல இடங்களிலும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிக்கு ஆளானார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. அதனால் மார்ச் 30-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலையை மூடிவிட்டது' என்றார்.

அதற்கு நீதிபதி பட்நாயக், பத்திரிகைகளில் பார்த்தோம் என சொன்னதோடு, 'எங்களின் தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது. சுற்றுச் சூழலைக் கண்காணிப்பதற்கும் அது குறித்து எவ்விதமான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்பதையும் நாங்கள் எங்கள் தீர்ப்பிலே குறிப்பிட்டு இருக்கிறோம்' என்றார்.

ஆலையை திறக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

பரப்பான சூழ்நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், 'ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு
 சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன காரணங்களை ஏற்பதற்கு இல்லை. அதனால் அந்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது' என குறிப்பிடப்பட்டது. ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனாலும் தீர்ப்பில் ஆலைக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து இருந்தார்கள், நீதிபதிகள் பட்நாயக், கோகலே ஆகியோர்.

தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் '44 மாதங்கள் ஒப்புதல் இல்லாமல் ஆலையை ஓட்டியதால், தூத்துக்குடியை சுற்றிலும் நிலம் நீர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதற்காக ஆலை நிர்வாகம் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்க வேண்டும். அந்த தொகையை ஐந்தாண்டு காலத்துக்கு வைப்பு நிதியில் வைத்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்து கொள்ளலாம். அதே சமயத்தில். தகுந்த காரணங்களோடு மாவட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகையை உயர்த்தி கேட்குமானால் அதனை ஆலை நிர்வாகம் அதிகரித்து கொடுக்க வேண்டும்.

ஆலை நிர்வாகத்தின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுகி அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை போதாது என நினைப்பவர்களும் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம்' என குறிப்பிட்டார்கள்.

மேலும் தங்கள் தீர்ப்பில், 'மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 21 தீவுகளை சுற்றிலும் இருக்கும் பகுதிகளை 1986-ல் தேசிய கடல் பூங்காவாக அரசு அறிவித்து இருக்கிறது. இத்தகையை பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையானது அமைந்து இருக்கிறது. கடல் பூங்கா பகுதியில் உள்ள வான்தீவில் இருந்து 6கி.மீ தொலைவிலும் கசுவாரில் இருந்து 7கி.மீ தொலைவிலும் கரைசல்லி மற்றும் விலாங்குசல்லி ஆகிய தீவுகளில் இருந்து 15 கி.மீ தொலைவிலும் மட்டுமே இந்த ஆலை அமைந்து இருக்கிறது.

மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தேசிய கடல் பூங்கா பகுதி என்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டு இருக்கிறோம். அதனால் நில பகுதியை மேம்படுத்தவும் அங்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஆலைகளை அமைக்க நிபந்தனைகள் விதிப்பது அல்லது செயல்பட்டு வரும் ஆலைகளை அகற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அப்போது சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் இந்த ஆலை உள்ளிட்டவற்றை அகற்றவும் மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்க உரிமை இருக்கிறது' என தீர்ப்பில் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த ஆலையை மூடுவதால் 1,300 பணியாளர்கள் வேலை இழப்பார்கள். இந்த ஆலையை நம்பி செயல்பட்டு வரக்கூடிய துணை தொழில் நிறுவங்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் வரிகளின் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வருவாய் ஆலையை மூடுவதால் பாதிப்படையும். ஆலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் ராணுவம் உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அந்த நிறுவனத்தை உடனடியாக மூடுவது சரியல்ல. ஆகவே, சென்னை உயர் நீதிமன்றம் தனது எல்லைகளை மீறி ஆலையை மூடும்படி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கில் ஆஜரான வைகோ குறித்தும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

wait 


thanx - vikatan

diski - தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3-http://www.adrasaka.com/2013/04/1-2-3.html



 2  -தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4, 5 -http://www.adrasaka.com/2013/04/4-5.html

3.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 6 , 7-http://www.adrasaka.com/2013/04/6-7.html



தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 8-http://www.adrasaka.com/2013/04/8.html

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
வெளிநாட்டு எம்.பி.ஏ.!

எம்.பி.ஏ. படிப்பு பற்றி நம் மனங்களில் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. நம் டாப் 11 பட்டியலில் முதல், இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு பற்றிய சில விவரங்களை இங்கே சொல்கிறேன். பிற எம்.பி.ஏ. ஸ்கூல்கள் பற்றிய ஐடியா கிடைக்க இந்த விவரங்கள் உதவும். 


ஸ்டான்ஃபோர்டு எம்.பி.ஏ. படிப்பில் சேர ஜிமேட் (GMAT - Graduate Management Admission Test)எழுதவேண்டும். இது ஆன்லைன் டெஸ்ட். இந்தியாவில் இருந்தும் எழுதலாம். இந்த வருடம் ஸ்டான்ஃபோர்டு எம்.பி.ஏ.  படிப்புக்கு அப்ளை செய்தவர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 6,716 பேர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 398. அதாவது, விண்ணப்பித்தவர்களில் நூற்றில் 6 பேருக்கு அட்மிஷன் கிடைக்கிறது. 398 பேரில், 139 பேர் பெண்கள்; அமெரிக்கர்கள் தவிர்த்த வெளிநாட்டு ஆண்கள், பெண்கள் 167 பேர். இவர்கள் 53 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஹார்வர்டு எம்.பி.ஏ. படிப்பில் சேரவும் ஜிமேட்  எழுதவேண்டும். இங்கு மாணவச் சேர்க்கை ஸ்டான்ஃபோர்டைவிட அதிகம். இந்த வருடம் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் 919. இந்த இடங்களுக்குப் போட்டி யிட்டவர்கள் மொத்தம் 8,963. அதாவது, விண்ணப்பித்தவர்களில் சுமார் நூற்றில் 10 பேருக்கு அட்மிஷன் கிடைக்கிறது. 910 பேரில், 371 பேர் பெண்கள்; அமெரிக்கர்கள் தவிர்த்த வெளிநாட்டு ஆண்கள், பெண்கள் 315 பேர். இவர்கள் 68 நாடுகளிலிருந்து வந்தவர்கள்.

இந்திய எம்.பி.ஏ. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அமெரிக்க எம்.பி.ஏ. மாணவர்களுக்குமிடையே இரண்டு முக்கிய வித்தியாசம் இருக்கிறது. அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் எனில், குறைந்தபட்சம் இரண்டு வருட வேலை அனுபவம் கட்டாயமாக வேண்டும். இந்தியாவில் வேலை அனுபவமே இல்லாமல் எம்.பி.ஏ. சேர முடியும். இந்த வருட ஸ்டான்ஃபோர்டு மாணவர்களின் சராசரி முன் அனுபவம் 4 வருடம் 2 மாதங்கள்: ஹார்வர்டில் 3 வருடம் 8 மாதங்கள்.   

  


இன்னொரு முக்கிய வித்தியாசம், மாணவர் களின் படிப்புப் பின்புலம். அமெரிக்காவில் சுமார் 40 சதவிகித மாணவ, மாணவிகள் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (இளங்கலை), அரசியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகியவைப் படித்தவர்கள். இன்ஜினீயர்கள் சுமார் 35 சதவிகிதம். இந்தியாவிலோ, இன்ஜினீயர்களின் 'ஆக்கிரமிப்புதான்’ அதிகம் - சுமார் 80 சதவிகித மாணவர்கள் இன்ஜினீயர்கள்.

     
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் இரண்டு வருட எம்.பி.ஏ. படிக்க மொத்தம் இரண்டு லட்சம் டாலர்; அதாவது, சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்!

எம்.பி.ஏ. படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆகவே, உங்கள் சேமிப்பு அல்லது வங்கிக் கடன் ஆகியவற்றை மட்டுமே நம்பி நீங்கள் அமெரிக்க யுனிவர்சிட்டிகளில் படிப்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
ஒரு கோடி ரூபாய் செலவழிப்பது புத்திசாலித் தனமான காரியமா? இன்றைய நிலவரப்படி, படிப்பை முடித்தவுடன், 1,20,000 டாலர்
(ஆண்டுக்கு) சம்பளம் கிடைக்கிறது. அதாவது, இரண்டு வருடங்களுக்குள், படிப்புச் செலவை வசூல் செய்துவிடலாம். 

ஸ்டான்ஃபோர்டிலும், ஹார்வர்டிலும் அப்படி என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள்?
முதலில் ஸ்டான்ஃபோர்டு பார்ப்போம். முதல் வருடம் கிட்டத்தட்ட 20 துறைகள் பற்றி படிக்க வேண்டும். அந்தத் துறைகள் இதோ:
1. Critical Analytical Thinking, 2. Ethics in Management, 3.Financial Accounting, 4. Leadership Labs, 5.Managerial Skills, 6.Managing in the Global Context, 7.Managing Groups and Teams, 8.Organizational Behavior, 9.Strategic Leadership, 10. Corporate Finance, 11. Data Analysis and Decision Making, 12. Human Resource Management, 13. Information Management, 14. Managerial Accounting, 15. Managerial Finance, 16. Marketing, 17. Microeconomics, 18. Operations, 19. Optimization & Simulation Modeling, 20. Strategy Beyond Markets.
இரண்டாம் வருடம் கிட்டத்தட்ட 14 துறைகள். அந்தத் துறைகள் இதோ:
1. Accounting, 2. Entrepreneurship, 3 Finance, 4. Global Management, 5.Human Resources, 6. Information Technology, 7. Leadership, 8. Managerial Economics, 9. Marketing, 10. Operations, 11. Organizational Behavior, 12. Political Economics, 13. Public Management, 14. Strategic Management
முதல் வருட கோர்ஸ் அனைத்து எம்.பி.ஏ. கல்லூரிகளிலும் ஒன்றாகத்தான் இருக்கும். இரண்டாம் வருடம், தாங்கள் வழங்கும் பாடங்களில் தனித்துவம் காட்டுவார்கள். ஹார்வர்டில், இரண்டாம் வருடத்தில், கீழ்க்கண்ட துறைகளில்  ஸ்பெஷலைஸ் செய்யமுடியும்.
1. Business, Government & the International Economy, 2. Entrepreneurial Management 3. Finance, 4. Marketing, 5. Negotiation, Organizations & Markets, 6. General Management, 7. Organisational Behavior, 8. Strategy, 9. Technology & Operations Management
இவை ஒவ்வொன்றின் கீழும் எக்கச்சக்கமான சப்ஜெக்ட்ஸ். உதாரணமாக,
Entrepreneurship என்னும் தொழில்முனைவர் துறையில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்புகிறீர்களா?
Building and Sustaining a Successful Enterprise, Management of the Family Business, Launching global ventures, Entrepreneurship in Healthcare IT and Services, Introduction to Innovation & Entrepreneurship, Venture Capital and Private Equity என்பவைபோல்  வகைவகையாய் 32 சப்ஜெக்ட்கள்.

லெக்சர்கள், கேஸ் ஸ்டடிகள், அனுபவப் பயிற்சிகள் எனப் பல முறைகளில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இவற்றுள், கேஸ் ஸ்டடி  முறைதான் அதிகப் பயன் தருகிறது. மேனேஜ்மென்ட் கொள்கைகளை மாணவர்கள் எளிதாக உள்வாங்கிக்கொள்ளவும், கார்ப்பரேட் உலகில் பின்பற்றவும் உதவுகிறது என்று பெரும் பாலானோர் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கேஸ் ஸ்டடி முறை நமக்குத் தெரிந்த, பரிட்சயமான படிப்பு முறைகளிலிருந்து முழுக்க முழுக்க வித்தியாசமானது. 


சாதாரணமாக வகுப்புகள் எப்படி நடக்கும்? ஆசிரியர் வருவார். பாடப் புத்தகத்தில் (Text Book) இருக்கும் பாடத் திட்டப்படி (Syllabus) வகுப்புகள் எடுப்பார். ஆசிரியர்தான் அதிகம் பேசுவார். யாரிடமாவது கேள்விகள் கேட்பார். மாணவர்கள் சந்தேகங்கள் கேட்கலாம். பரீட்சை வரும். உருப்போட்டுக்கொண்டுபோன விடைகளைக் கக்கவேண்டும். மார்க் கொட்டும். 

எம்.பி.ஏ. படிப்பவன் வெறும் தியரியையே படித்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. வெளி உலகத்தில், கம்பெனிகளில் நடக்கிற உண்மை நிகழ்ச்சிகள், நிஜ அனுபவங்கள் அவனுக்குத் தெரியவேண்டும். கம்பெனி மேனேஜர்கள் அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்கிற தகவல்கள் அவனுக்குக் கிடைக்க வேண்டும். அப்போதுதான், அவனுடைய கண்ணோட்டத்தில், அவர்கள் எடுத்த யுக்திகளில் எவை சரியானவை, எவை தவறானவை என்று அவனால் எடைபோட முடியும்.   

சில சக மாணவர்கள் அவனோடு ஒத்துப்போக லாம்; சிலர் அவனோடு மாறுபடலாம். இப்படி மாறுபடும் கருத்துகளை விவாதிக்கும்போது, அவன் பிறர் கருத்தைக் கேட்கப் பழகுகிறான். அவன் சிந்தனைத் தெளிவாகிறது.
எம்.பி.ஏ. படிப்பில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான கேஸ்களை விவாதிக்கிறார்கள். இதனால், வருங்காலத்தில், வேலையில் சிக்கல் களைச் சந்திக்கும்போது, அவை அவர்களுக்குப் புதியவையாக இருப்பதில்லை, அவர்களைப் பயமுறுத்துவதில்லை.   

கேஸ் ஸ்டடி என்றால், கம்பெனிகளின் நிஜ அனுபவங்கள். உதாரணத்துக்குச் சில:
1970. ஸர்ஃப் சோப் பவுடர்தான் ராஜா. கஸன்பாய் பட்டேல் நிர்மா சோப்புத் தூள் தயாரிக்கிறார். மிகக் குறைந்த விலையில் விற்கிறார். இன்று நிர்மா 1,000 கோடி மதிப்புள்ள கம்பெனி. எப்படி நடந்தது இது?

கோயம்புத்தூரில் இருக்கும் பம்ப் கம்பெனித் தொழிலாளிகளிடம் கட்டுப்பாடே இல்லை. ஐம்பது சதவிகித உற்பத்திதான் தருகிறார்கள். என்ன செய்யலாம்?
டாடா ஸ்டீல் நிறுவனம் இங்கிலாந்து, ஹாலந்து நாடுகளின் கூட்டு முயற்சி நிறுவனமான கோரஸ் (Corus) குழுமத்தை 24,000 கோடி ரூபாய்க்கு வாங்கினார்கள். டாடா ஸ்டீல் கொடுத்த விலை சரியா, தவறா?

இந்த விவரங்களை முன்னாடியே தந்து விடுவார்கள். மாணவர்கள் தனியாகப் படிப்பதைவிட, குழுவாகச் சேர்ந்து படிப்பதையும், விவாதிப்பதையும் பேராசிரியர்கள் ஊக்கப்படுத்து வார்கள். வகுப்பில், விவாதத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும். இது வகுப்புப் பங்கேற்பு (Class Participation)என்று அழைக்கப்படுகிறது. உங்கள் பங்கேற்புக்கு ஏற்றபடி, பேராசிரியர்கள் மார்க் போடுவார்கள்.     

கேஸ் ஸ்டடி படிப்பு முறையை எம்.பி.ஏ. படிப்பில் அறிமுகம் செய்தவர்கள்  ஹார்வர்டு. இன்று கேஸ் ஸ்டடி, ஏகதேசம் அத்தனை பிஸினஸ் ஸ்கூல்களும் பின்பற்றும் படிப்பு முறையாகிவிட்டது.  
எம்.பி.ஏ. படிப்பிற்கு அதி திறமைசாலி மாணவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆசிரியரும் மாணவர்களும் சம அந்தஸ்தில் விவாதிக்கும் படிப்புமுறை என்பதால் ஆசிரியரின் பொறுப்பை அதிகமாக்குகிறது. ஆசிரியர், அறிவு, திறமை, அனுபவம், ஆகியவற்றில் தலை சிறந்தவராக இருக்கவேண்டிய கட்டாயம்.

ஸ்டான்ஃபோர்டு பிஸினஸ் ஸ்கூலில் 800 மாணவர்கள், 170 பேராசிரியர்கள். அதாவது, சுமாராக 5 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர். இந்த விகிதாசாரத்தால், பேராசிரியர் மாணவர் களுக்குத் தனிக் கவனம் தர முடிகிறது.   

170 பேராசிரியர்களில் பெரும்பாலானோர் டாக்டர்கள். 3 பேர் நோபல் பரிசு வாங்கியவர்கள். அற்புதமான ஆசிரியர்கள், அட்டகாசமான கேஸ் ஸ்டடி படிப்புமுறை. எனவேதான், அங்கே படித்த எம்.பி.ஏ. மாணவர்கள் பட்டை தீட்டிய வைரங்களாகக் கார்ப்பரேட் உலகில் ஜொலிக்கிறார்கள். 
(கற்போம்)

Monday, May 06, 2013

மூன்று பேர் மூன்று காதல் - சினிமா விமர்சனம்



இந்தப்படத்துல உருப்படியான விஷயம் ஹீரோயினா வரும் 3 உருப்படிகளும் கண்ணுக்கு லட்சணமா இருப்பதும் , ஒளிப்பதிவும்  , யுவன் -ன் இசையும் தான் . அதனால படத்தோட கதைக்கு போகாம நேரடியா 3 ஹீரோயின்களைப்பற்றி முதல்ல பார்த்துடலாம்னா நம்மை எல்லாம் ஜொள் பார்ட்டினு சொல்லிடுவாங்க ( இப்போ மட்டும் என்ன வாழுது ? ) அதனால இந்தப்படத்தோட கதையைஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம் .


நடிப்பே சுத்தமா வராத களவாணி விமல் தான் மெயின் ஹீரோ .வசனம் உச்சரிப்பே வராத தன்  வாயால  அவர் ஹீரோயின்ட்ட பேசும்போது செம காமெடி .லாசினி தான் இவருக்கு ஜோடி ( பாப்பாவுக்கு என்ன லாஸ் ஆக இருக்கு இனி ? ) ஊர்ல 1008 ஃபிரஸ் பீஸ் இருக்கும்போது ஹீரோ ஆல்ரெடி யாருக்கோ பரிமாறுன சாப்பாட்டு மேல ஆசைப்படறாரு , யாரும் பயப்பட வேண்டாம் , ஃபுல் மீல்ஸ்சும் பரிமாறலை . அதாவது லவ் ஆகி நிச்சயம் ஆகி பிரச்சனையால கேன்சல் ஆன ஃபிகரு .


அப்படிப்பட்ட ஃபிகரை இவரு நாய் மாதிரி பின்னாலயே சுத்தி கிட்டத்தட்ட கரெக்ட் பண்ற ஸ்டேஜ் வந்ததும் ஜகா வாங்கறார்.அவருக்கு திடீர்னு புத்தி வந்துடுது ; லவ் பண்றவனுக்கு ஏது புத்தி அப்டினு லாஜிக் கொஸ்டின் எல்லாம் கேட்கக்கூடாது . அவர் சந்திச்ச 2 லவ் ஜோடிகளின் கதையை அள்ளி விடறார்


a


யதார்த்த நாயகன் சேரன் - பதார்த்த நாயகி தாமிர பரணி பானு ( கறுப்பான கையால என்னை பிடிச்சான்)  ஜோடி கதை . இவரு சமூக சேவகரு சிறைக்கைதிகளுக்கு மறுவாழ்வு  இயக்கம் நடத்தறார்.. ஃபிகர் கிடச்சா போதும்னு  பார்க் பீச்னு கூட்டிட்டுப்போய் காதலியை கூகுள்னு நினைச்சு எதையாவது தேடிட்டே இருக்கும் சாதா காதலன் மாதிரி இல்லை இவரு . பிஹெச்டி படிப்பெல்லாம் படிக்கறாரு. லட்டு மாதிரி ஃபிகர் கிடச்சதும் நம்மாளுங்க பூந்தி ஆக்கிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாங்க . இவர் என்னடான்னா அன்னை தெரேசா ரேஞ்சுக்கு அவரையும் சமூக சேவகி ஆக்க ட்ரை பண்றார்.


அடுத்து ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் - சுர்வீன் லவ் ஸ்டோரி . இந்த பார்ட் அப்டியே  எதிர் நீச்சல் பின் பாதில இருந்து சுட்டுட்டாங்க போல . ஸ்டோரி டிஸ்கஷன்க்கு உக்கார்ந்த ஆட்கள் ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம் போட்டு இருப்பாங்க போல அர்ஜூன் ஒரு ஸ்விம் கோச். ஹீரோயினை நீச்சல் வீராங்கனையா ஆக்க பயிற்சி அளிக்கறார் , சைடுல அவரை லவ்வறார். ஆனா பாருங்க ஒரு விபத்துல அவருக்கு அடிபட்டு கழுத்துக்கு கீழே எதுவும்  வேலை செய்ய முடியாத நிலைக்கு போறார். அவர் அப்டி ஆனதால ஹீரோயின் வீட்ல லவ்வுக்கு எதிர்ப்பு . அவரை கழட்டி விட்டுடு அப்டினு அட்வைஸ் பண்றாங்க . ஆனா  தெய்வீகக்காதல்னு அவ பம்மறா


 சுருக்கமா சொல்லப்போனா 3 காதலும் விளங்கலை . அவ்வளவு தான் கதை ஹி ஹி


முதல் ஹீரோ விமல் . டயலாக் டெலிவரிக்காகவே இவர் வாய்க்கு சூடு வைக்கனும்  அப்பா சாமி முடியலை

 


 ஹீரோயின் லாசினி புருவத்தை டெய்லி பியூட்டி பார்லர் போய் ட்ரிம் பண்ணிட்டு வருவார் போல . வரைஞ்சு வெச்சது மாதிரி இருக்கு .தான் ரொம்ப அழகு என்ற கர்வம் அவர் பாடி லேங்குவேஜ்ல தெரியுது .  இன்னும் என்ன வெல்லாமோ தெரியுது . யாராவது அவர் கிட்டே நீங்க நார்மல் ஃபிகர் தான் 50 மார்க் தான் தேறும்னு சொல்லி வெச்சா தேவலை .  அவர் டைட் பனியன் போட்டு வரும் காட்சிகள் 5  . ஸ்லோ மோஷனில் ஓடி வரும் காட்சிகள் 6 . கீழே தேவை இல்லாமல் குனியும் காட்சிகள் 4


அடுத்து சேரன் . இவர் முகம் முத்திடுச்சு . ஆனா பொறுப்பா கண்ணியமா நடிச்சிருக்கார் . மனசுக்குள்ளே ஆட்டோகிராஃப் மாதிரி இன்னொரு ஹிட் குடுக்கனும்னு ஒரு ஆதங்கம் அவர் கண்ல நல்லாத்தெரியுது



இவருக்கு ஜோடியா வரும் பானு  குட் கட்டை . ஆனா படத்துக்கு இயக்குநர் எஸ் ஜே சூர்யான்னா பிரிச்சு மேஞ்சிருப்பார். ஆனா வசந்த் . அவர் ரொம்பவே டீசண்ட் . அதனால பானுவை கண்ணியமாகவே காட்டி இருக்கார்



அர்ஜூன்  ஆக்‌ஷன் பண்ணவோ , பாகிஸ்தான் தீவிரவாதி கிட்டே பஞ்ச் டயலாக் பேசவோ வழி இல்லாம திண்டாடறார். இவர் போர்ஷன் செம போர் . தூங்கிட்டேன் . நான் மட்டும் தனியா தூங்கலை , தியேட்டர்ல இருந்த 87 பேரும் தூங்கிட்டோம் . தூங்காம விழிச்சுட்டு இருந்த அந்த கள்ளக்காதல் ஜோடிகள் 5 செட் என்ன செஞ்சாங்களோ ?

ஹீரோயின் பர்வீன் ( டைட்டில் ல சுர்வீன் ) உதட்டு அழகி . கூந்தல்க்கு மருதாணி , செம்பருத்தி இலை தேய்ச்சு இருப்பார் போல செம்பட்டையா இருந்தாலும் அழகாத்தான் இருக்கு . இவரு நீச்சல் உடையில் வரும் காட்சிகளில் லாங்க் ஷாட் கேமரா ஆங்கிள் வைத்த ஒளிப்பதிவாளருக்கு என் கடும் கண்டனங்கள் . இவங்க மட்டும் தான் ரசிக்கனுமாம் ஹூம் சுயநலம் .





 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. லொகேஷன் செலக்‌ஷன்ஸ் பக்கா .  கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கைக்காட்சிகள்  பிளஸ்


2. மூன்று ஹீரோயின்கள் செலக்‌ஷன் கனகச்சிதம் . நம்மாளுங்க கதை செலக்‌ஷன்ல கோட்டை விட்டாலும் ஹீரோயின் செலக்‌ஷன்ல கோட்டை விடறதில்லை


3. படத்தில் காமெடி டிராக் ஏதும் தனியா வைக்காமல் 3 காதல் கதைகளை மட்டும் எடுத்தது



4. வசனங்களில் ஆங்காங்கே வசந்த் டச்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. நீச்சல் கோச்சாக வரும் 50 வயசு அங்கிள் அர்ஜூனிடம் 16 வயசு ஃபிகர்  லவ்வில் விழுந்தது எப்படி ? நீச்சல் கோச் நடக்கும்போது டச்சிங்க் டச்சிங்க் எதுவும் நடக்காம இருக்குமா? ( அதை ஏன் காட்டலை? ஹி ஹி )


2. நீச்சல் பயிற்சிக்கு பகல்ல போகாம ஏன் நடு ராத்திரில போறாங்க?


3. நீச்சல் வீராங்கனையா வரும் சுர்வீன் விமலின் தோழி என வசனத்தில் மட்டும் வருது , காட்சியில் இல்லை


4. மூன்று காதலையும் ஐ மீன் காதல் கதைகளையும் சேர்க்கும் மையக்கோடு என எதுவும் இல்லை . அது சுவராஸ்யத்தை குறைத்து விடுது



5. லவ் ஸ்டோரின்னா லவ்வர்ஸ் சேருவாங்களா? மாட்டாங்களா? என ஒரு எதிர்பார்ப்பை , துடிப்பை ஏற்படுத்தனும் . ஆனா அவங்க சேர்ந்தா என்ன சேராட்டி என்ன? என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது பலஹீனம்



6 . படம் போட்ட முதல் 30 நிமிஷத்துல 3 பாட்டு . விமல் என்ன விஜயா? முடியல . பாடல் காட்சிகள்  2க்கு இடையே போதிய இடை வெளி வேணாமா?


 7. ஹீரோ செலக்‌ஷன் தப்பு . ஏன்னா இது யூத்ஃபுல் லவ் ஸ்டோரி . அங்கிள்ஸ் லவ் ஸ்டோரி இல்லை . அர்ஜூன் , சேரன் எல்லாம் இதுக்கு சூட் ஆகலை



8. காதல் கதைகள் 3 இருந்தும் எதிலும் உண்மைக்காதலோ , அதற்கான சுவடோ இல்லை , எல்லாமே தியாகம், சேவை , டைம் பாஸ்னு போயிடுச்சு , அதனால ஆடியன்ஸ் மனசுல ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியல. ஒரு லவ் ஸ்டோரி சக்சஸ் ஆகனும்னா பார்ப்பவர் மனதில் ஒரு பதை பதைப்பு ஏற்படனும்






 தூங்கிய நேரம் போக மிச்சம் மீதி கவனித்ததில் தேறிய மனம் கவர்ந்த வசனங்கள்


1. காதல்ங்கறது காதலி கிட்டே இது வேணும்னு கேட்கறது இல்லை.அவளுக்குப்பிடிச்சதை அவ கேட்காமயே கொடுக்கறது




-------------------


2. ஜெயிச்சவன் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருந்தாத்தான் மரியாதை


---------------


3. யோசிச்சுப்பார்த்தா காதலை விடப்பைத்தியக்காரத்தனம் எதுவும் இல்ல.ஆனா யோசிச்சாத்தானே ? 



---------------------


4. அவனவன் தன் காதலியை 1 மணி நேரத்துக்கு 1 முறை போய் பார்க்கறாங்க . பார்க்கனும்னு இந்தக்காலப்பசங்க நினைக்கறாங்க

 நானெல்லாம் அப்டிப்பார்த்தா ஜூரம் வந்துடும் . மொக்கை ஃபிகரு 




=-----------------------


5. அழகா இருப்பா னு சொல்றே.ஆனா பேரு தெரியாதா ? ஒரு பொண்ணை அழகா இருக்கானு சொல்ல அவங்க பேரு எதுக்கு ?



-------------------

 6  குழப்பமான மன நிலைல இருக்கற ஒருத்தனாலதான் காதலிக்க முடியும்


---------------


7. எங்க ஃபேமிலில  எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்போம் , ஜோக் எதுவும் சொல்லத்தேவை இல்லை  ஜோக்னு சும்மா சொன்னாலே போதும் சிரிப்போம்



------------------


8. எதுக்கு என் மகளை அப்படி குனிஞ்சு பார்க்கறீங்க? அவ என்ன அவ்வளவு குள்ளமா?



---------------


9. ஒரு பொண்ணை அழகுன்னு சொல்ல அவங்க பேரு எதுக்கு?




-------------



10.  அழகான 2 பேர் ஏன் தனித்தனியா சாப்பிடனும்? வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்


-------------




11. மிஸ்  ஒருத்தன் ஒரு நாள் ல 86,400 தடவை ஒருத்தியை நினைக்கறான்னா என்ன அர்த்தம்?


 தெரியலையே?


 டெயிலி எல்லா டைமும் அவளையே நினைச்சுட்டு இருக்கான்னு அர்த்தம்



----------



12.  ஹலோ ! நான் சிரிச்சது உங்க ஜோக்குக்குத்தான், உங்களுக்காக இல்லை


 ஆனா அந்த ஜோக் என்னுதுதானே?



---------------


13.  ஏம்ப்பா பஃபே சிஸ்டம் ஓக்கே , இந்த தட்டு இதுதான் லாஆஸ்ட் சைஸா? எக்ஸ்ட்ரா லார்ஜ் கிடையாதா?



--------------


14.  ஃபாரீனர் - ஹாய் . ஐ ஆம் ஃபிராங்க் அண்ட் கோ


 சத்யன் - ஐ ஆம் வசந்த் அண்ட் கோ




-----------

15. உங்க லெஃப்ட் ஹேண்ட் ஏன் அங்கே இருக்கு? கொடுங்க , பத்திரமா நான் வெச்சிருக்கேன்

 ம்ஹூம்

 சரி என் கையை எடுத்துக்குங்க . அது ஃப்ரீயாத்தான் இருக்கு ( நல்ல வேளை )



---------------

16. ஏய். நீ லவ் பண்ற நாய் வீட்டு நாயா? தெரு நாயா? டக்னு சொல்லு பார்ப்போம்



------------


17.  ரெண்டு கால் இருக்கும் நாமே வாக்கிங்க் போகும்போது 4 கால் இருக்கும் நாய்ங்க வாக்கிங்க் போவதில் என்ன தப்பு?



-----------


18. நமக்குப்பிடிச்சதை செய்வது என்பது வேறு . சரியானதைசெய்வது என்பது வேற




------------------


19.  உடம்புல எந்த காயத்தையும் ஏற்படுத்தாத ஒரே அத்லெட் நீச்சல் தான்



---------------


20.  யார் என்னை எப்டி சொன்னாலும் நீ என்னை பாராட்டும்போது வர்ற கிக்கே தனி


-------------


21. மத்தவங்க எல்லாம் என்னை எப்படி கூப்டறாங்க்ளோ அதே மாதிரி நீயும் கூப்பிட்டா என்ன கிக் அதுல ?



-----------------


22.  எல்லா சேம்ப்பியன்சும் ஆல்ரெடி ஒரு முறையாவது தோல்வியை சந்திச்சவங்களாத்தான் இருப்பாங்க



----------------------

23. பொண்ணுங்க உன்னை மாதிரி சுமாரா இருந்தாலே போதுமே , பசங்க பல்லைக்காட்டுவாங்களே


---------------


24. டார்கெட்டையே பார்த்துட்டு இருப்பவன் தான் வின்னர் ஆவான்


--------------


 


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41



எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


ரேட்டிங்க் -    2.25 / 5


 சி பி கமென்ட் -  தூக்கம் வராம அவதிப்படறவங்க போனா 20 நிமிஷத்துல தூக்கம் கேரண்டி . கள்ளக்காதலர்கள் போலாம்,. தியேட்டர்ல ஆபரேட்டர் கூட இருக்க மாட்டார். ஆன் பண்ணிட்டு போய்டுவார் . எஞ்சாய்  

 

டிஸ்கி - நான் பெண்களை மதிப்பவன் என்பதை காட்டவும் , ஆணாதிக்கவாதி அல்ல என்பதைக்காட்டவும் தான் இப்படி ஆண் ஹீரோக்களின் ஃபோட்டோக்களைத்தவிர்த்திருக்கிறேன் , பெண்ணியவாதிகள் , மாதர் சங்கங்கள்  இதுக்கு ஏதாவது விருது , பரிசு தந்தால் சாரு போல் கூச்சமே இல்லாமல் வந்து வாங்கிக்கொள்வேன் ;-))

எழுத்தாளர் அமரர் சுஜாதா பேட்டி @ விஜய் டி வி ( நீயா நானா கோபினாத் ) வீடியோ

சுஜாதா பெரும்பாலானவர்களுக்கு எழுத்துலக குரு. மானசீக ஆசான். அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்றோம்னு எல்லாரும் உணர முடியுது . நீயா நானா கோபினாத் விஜய் டி விக்காக எடுத்த ஒரு பேட்டி இப்போ தான் பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்