Thursday, April 25, 2013

டெக்னாலஜி வில்லனா? நண்பனா?

டெக்னாலஜி வில்லனா? நண்பனா?

பரபர புல்அவுட் தகவல் கைடு!


ஹன்ஸா காஷ்யப் வழக்கறிஞர். அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலையும், சைபர் லா சட்டமும், காபிரைட் தொடர்பான சட்டத்தில் ஐக்கிய நாடுகள் அகாடமியின் டிப்ளமோவும் பெற்றவர். இசையில் முதுகலை எம்.., எம்.ஃபில் பட்டதாரியான இவர் ஆன்லைன் இசைப் பகிர்வு பற்றி ஆராய்ந்து வருகிறார்.
- எஸ்.ஹன்ஸா காஷ்யப்
ஆன்லைன் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பல செக்யூரிடி சாஃப்ட்வேர்கள், அப்ளிகேஷன்கள் வந்துவிட்டன. ஆனால், வெறும் புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப்பட முடியும், நம்மை எப்படியெல்லாம் காத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்பியதே இந்தத் தகவல் கைடின் நோக்கம்.

மொபைல் ஃபோன்:
* நான் ஒரு முறை வெளியூருக்குக் கிளம்பினேன். போய்ச் சேர்ந்ததும்தான் தெரிந்தது என் மொபைலை மறந்து விட்டுக் கிளம்பியிருக்கிறேன். என் கணவருக்கு என் மொபைல் எண்ணிலிருந்தே எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். (எப்படி முடியும் என உங்கள் மகனை/மகளைக் கேளுங்கள். சொல்வார்கள்.) கணவர் குழம்பிவிட்டார். உங்களைப் போலவே. (பார்க்க பெட்டிச் செய்தி)
பெட்டிச் செய்தி:
அப்படி அனுப்ப நிறைய சைட்கள் உள்ளன. என் மொபைல் எண்ணை, அந்த சைட்-இல் பதிந்து வைத்தால், அவர்கள் ஒரு பாஸ்வோர்டை என் எண்ணுக்கு அனுப்புவார்கள். எங்கிருந்தாலும், இன்டர்நெட் மூலம், அந்த பாஸ்வோர்டை உபயோகித்து, என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும்.
ஆனால், என் பாஸ்வோர்ட் தெரிந்த மற்றொரு நபரும், என் எண்ணிலிருந்து எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும் அல்லவா?
உங்கள் மகள், கல்லூரியில் படிக்கிறாள். ஹாஸ்டல் அறைத்தோழி, நம் மகள் மொபைலில் இருந்து பாஸ்வோர்டைத் திருடியோ அல்லது மகளின் எண்ணை அந்த சைட்-ல் பதிந்துவிட்டு, ‘ஒரு நிமிஷம் உன் மொபைலைத் தாடிஎன சொல்லி, அந்த நிமிடம், அவர்கள் அனுப்பும் பாஸ்வோர்டைக் குறித்துக் கொண்டு, அதை மொபைலில் இருந்து அழித்துவிட்டு, உங்கள் மகளின் எண்ணிலிருந்து யாருக்கு வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியுமே. இதுபோன்ற சைட்களின் வழியாக வரும் செய்திகளை நாம் புறக்கணிக்கலாம் என்றால், எந்த செய்தி அப்படி வந்தது என அறிய முடியாது. அந்த செய்திகளும், நம் மொபைல் மெசேஜ் சென்டர் வழியாகவே வரும். ஏன்?... உங்கள் எண்ணிலிருந்து கூட உங்கள் மகளுக்கு செய்தி அனுப்ப முடியும். அல்லவா?
* அதற்கும் மேலாக, பிரபல பத்திரிகையின் மொபைல் எண் எனக்குத் தெரியும். பத்திரிகையிலிருந்து, தோழியின் எண்ணுக்கு வாழ்த்துச் செய்தியுடன், கால் வந்தது போல காட்ட முடியும். அவளை ஏமாற்றவும் முடியும். அதற்கும் டெக்னாலஜி துணை போகிறது.
இப்போது சொல்லுங்கள்....
இதற்கு என்ன செய்வது? இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட முடியும்தான். ஆனால் அதற்கு முன்...?
மொபைல் என்பது உங்கள் உள்ளாடையைப் போல மிகமிக பர்சனலானது. அதைப் பகிர்ந்து கொள்ளல் வேண்டாமே. முக்கியமான எஸ்.எம்.எஸ். வரும் போதெல்லாம், தொடர்பு கொண்டு செய்தியைக் கேட்டு விடுவதே நல்லது.
* இரண்டாவது, ஒருவர் தான் அனுப்பிய எஸ்.எம். எஸ்ஸையே, தான் அனுப்பியது அல்ல எனக்கூறி அதை நிரூபிக்கவும் முடியும். அதாவது நான் சொன்ன முதல் திருட்டுத் தனத்தின் எதிர் வடிவம். ஒரு -மெயிலை அனுப்பிவிட்டு, ஏதும் பிரச்னை வரும்போது, அதை நான் அனுப்பவில்லை, யாரோ, இன்டர்நெட்டைப் பயன்படுத்தி விளையாடி இருக்கிறார்கள், எனச் சொல்ல முடியும்.

* Ways2sms இல், நண்பரின் பிறந்த நாள் தேதியைப் பதிந்து வைத்திருந்தேன். அந்த தேதியில், அவருக்கான என் வாழ்த்து, அந்த தளத்திலிருந்து தானாகவே வருடா வருடம் அனுப்பப்பட்டுவிடும்.
நன்றாகத்தான் இருக்கிறது இந்த வசதி. ஆனால், இதில் என்ன தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது...?
. அவருடனான நட்பு நமக்கு மறந்து இருவரும் தூரப்போன பிறகும் நம் வாழ்த்து அவருக்குக் கிடைப்பது நட்பை பலப்படுத்தும்.
. அவரது பிரிவு, மனக் கசப்பினால் எனில், நம் வாழ்த்தை அவர் வேறுவிதமாகவும் பார்க்கக் கூடும் அல்லவா...? எனில், நாம் மறக்காமல் அந்த வாழ்த்துப் பதிவை நீக்க வேண்டும்.
* ரமாவின் மேனேஜர் அவளிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அதை குறிப்பிட்ட அக்கௌண்ட்டில், கட்டி விடுமாறு சொன்னார். மறுநாள், அவள் நிச்சயதார்த்தம். லீவு வேறு கேட்டிருந்தாள். மேனேஜர் நாளை மறுநாள் அதைக் கட்டினால்போதும் எனச் சொல்லி விட்டார். ரமாவுக்கு சந்தோஷம். மறுநாள், போலீஸ் அவளைத் திருடிய குற்றத்துக்காகக் கைது செய்தது. பணம் கொடுத்ததை மானேஜர் மறுத்துவிட்டார். அது அவர் பொக்கணக்கு சொல்லி எடுத்த பணம். அவர் தான் கொடுத்தார் என்பதற்கு சாட்சி ஏதும் இல்லை.
அவள் என்ன செய்திருந்திருக்க வேண்டும்? அவர் பணம் கொடுத்ததும், ‘நீங்கள் கொடுத்த ரூபாய் இவ்வளவு பணத்தை நாளை மறுநாள் கட்டிவிடுகிறேன்; லீவு கொடுத்ததற்கு நன்றிஎன -மெயிலிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும், லீவுக்கு நன்றி சொல்லும் சாக்கில் சாட்சியங்களை ஏற்படுத்தியிருந்தால், பிரச்னையைச் சமாளிக்க சுலபமாக இருந்திருக்கும். அல்லவா?
பெட்டி செய்தி

-மெயில்களை, மறைக்க, மறுக்க, மாற்ற முடியும் எனும் பட்சத்தில், ரமா ஆதாரம் ஏற்படுத்துவதில், என்ன பிரயோசனம்?’ எனும் கேள்வி எழுகிறதா? ரமாவின் அந்த ஆதாரம், அவளுக்கு உதவியாக இருக்கக் கூடிய பலவற்றில் ஒன்று. ரமா, மானேஜர் இருவரின் மற்ற செயல்பாடுகள், மற்ற ஆதாரங்கள், இவற்றைப் பொறுத்து உண்மை நிரூபிக்கப்படும்.
* கல்லூரியில் படிக்கும் என் தங்கைக்கு எப்போது, தொலைபேசினாலும், ‘நீங்கள் அழைத்த எண்... பிஸி ...பிறகு தொடர்பு கொள்ளவும்என்றே பதில் வரும். ஒரே நாளில் சுமார், 20 கால்களுக்குப் பிறகு, எனக்கு பொறி தட்டியது... ஆம்...பிஸி எனும் செய்தியையே காலர் ட்யூனாக வைத்துள்ளாள். ‘ஏன்டீ..?’ என்ற கேள்விக்கு அவள் சொன்ன பதில், ‘இல்லக்கா... யாராவது ஃபோன் பண்ணி எடுக்கலைன்னா கோச்சுக்கறாங்க... பிஸி...ன்னு தெரிஞ்சா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாமளும் முக்கியமான அழைப்புகளை மட்டும் அட்டென்ட் பண்ணிணாபோதும்... அதான்..." என்றாள்.
-மெயில்:
* உங்கள் நண்பர் நீங்கள் அனுப்பிய -மெயிலைப் படித்துவிட்டாரா, இன்னும் படிக்கவில்லையா, எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது, நீங்கள் அனுப்பிய மெயிலைப் படித்துவிட்டு அதன்படி நடக்கப் பிடிக்காமல், ‘இன்னும் படிக்கவில்லை சார்எனச் சாக்குப் போக்கு ஸோல்லும் ஊழியரா?
அவர்கள் படித்ததை அவர்களுக்குத் தெரியாமலேயே அறிந்து கொள்ள SPYPIG உதவி செய்கிறது. நீங்கள் அவர்களைக் கண்காணிப்பதை தெரியப்படுத்த விரும்பினால், நீங்கள் படித்தது எனக்குத் தெரியும்" எனும் வாசகம் அவர்கள் படித்ததும் அவர்கள் ஸ்க்ரீனில் இடம் பெறும் படியும் செய்யலாம்.

* இப்போது உங்களுக்கு உங்கள் பாஸ் இதேபோல ஸ்பைபிக் உதவியுடன் ஒற்று வேலை மெயில் அனுப்புகிறார் எனக் கொள்வோம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது...?
எந்த மெயில் அப்படி இருக்க வாய்ப்புள்ளது என நீங்கள் சந்தேகிக்கிறீர்களோ அந்த மெயிலின் டெக்ஸ்டை காபி செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது, அந்த காபி செய்த பகுதிகள் எழுத்து உள்ள பகுதிகள் நீல நிறமாகும் அல்லவா..? ஆனால், ஒரு இடத்தில் மட்டும், எழுத்து இல்லாமல், நீல நிற சதுரம் இருக்கும். அப்படி இருந்தால் அந்த மெயிலில் ஒற்று அனுப்பப்பட்டிருக்கிறது எனக் கொள்ளலாம்.
* என் தோழி எனக்கொரு -மெயில் அனுப்பியிருந்தாள். அவள் பிக்னிக் சென்ற புகைப்படங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. மறுநாள் அதை என் மற்றொரு தோழிக்கு காட்டுவதற்கு தேடினேன். -மெயில் வந்த தடயமே இல்லை. கால் செய்து கேட்டதும்தான் தெரிந்தது. அந்த -மெயிலை ஒரு முறைதான் பார்க்க முடியும் என்று. புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தவறாகப் பதிவிறக்கப்படுவதால், அப்படி செய்ததாகக் கூறினாள் (அதற்கென தனி சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் உண்டு.)
நன்று.
ஆனால், இதே முறையை எப்படியெல்லாம் தவறாக உபயோகிக்க முடியும்? -மெயிலில் ஒன்றைக் கூறி விட்டு பின் இல்லை என மறுக்கலாமே?
இதற்கு என்ன செய்வது?
முக்கியமான -மெயில்களைக் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வேறு பெயரில் ஒரு ஃபோல்டரில் போடலாம்.
(காபி செய்து cut and paste செய்து ஃபைலை வேறெங்காவது வைத்துக் கொள்வதில், தொடர்பு இழக்கப்படும்(continuity miss) என்பதை நாம் அறிய வேண்டும். பிரச்னை ஏதும் வரும்போது, நாம் அதை ஒரு சாட்சியாகப் பயன்படுத்த முடியாது என நாம் அறிந்திருக்க வேண்டும்.)

* ஏன்? -மெயில் அனுப்பியவர்(தவறானவராக இருக்கும் பட்சத்தில்,) முன்பு சொன்னது போல் "hiding facility' உபயோகிக்காவிட்டால், தான் அனுப்பிய -மெயில்களை உங்களிடமிருந்து அழிக்க முயலக்கூடும். அழிக்கவும் முடியும். அப்போது அவர் உங்கள் இன்-பாக்ஸில் தான் கவனம் வைப்பார். அதில்தான் தன் மெயிலைத் தேடுவார்.
* ஒவ்வொரு சிஸ்டத்துக்கும் தோராயமாக... ஒரு (முகவரி போல எனச் சொல்லலாம்) ‘IP Address' உண்டு. ஒரு -மெயில் எந்த சிஸ்டத்திலிருந்து வருகிறது என அதை வைத்து சொல்லலாம். ஒரு சிஸ்டமிலிருந்துஒரு மாதிரியான-மெயில் உங்களுக்கு வருகிறது என்றால் கூட அந்த குறிப்பிட்ட சிஸ்டமிலிருந்து வந்தது என அறியலாம்; ஆனால், பலபேர் உபயோகிக்கும், அந்த சிஸ்டமின் உரிமையாளர் மேல் வேண்டுமானால் குற்றம் சாட்டலாம். எந்த நபர் என நிரூபிப்பது கடினம். அல்லவா? அது தவிர IP Address ஐயும், hack and crack செய்ய முடியும். தவறாகப் பயன்படுத்த முடியும். எனவே, ‘ஜாக்கிரதை’... இதைத் தவிர வேறென்ன சொல்ல?
* வியாபார -மெயில்களுக்கு ’Certifying Authorities' உண்டு. அவர்கள் மெயிலின் source-, அதன் நம்பகத் தன்மையை check செய்து certify செய்து தருவார்கள். ஆனால், இதற்கான செலவு நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். உங்களுக்கும், எனக்கும் அல்ல.
* என் வீட்டிலிருக்கும், என் கணினியை, என் மிகமிக நெருங்கிய தோழியைக் கூட தொட விடுவதில்லை என அவளுக்கு வருத்தம்தான். என்ன செய்ய? டெக் உலகம் அப்படி இருக்கிறதே? உங்கள், கணினி ஒரு சில நிமிடங்கள் தவறானவர் கைகளுக்குச் சென்றால்...

ஒரு மென்பொருள் உண்டு. அதை அடுத்தவர் கணினியில் install செய்து விட்டால், அந்த அடுத்த நபர் தன் கணினியில், என்னவெல்லாம் செய்கிறார்... பார்க்கிறார்... என பார்க்க முடியும். அது அவருக்குத் தெரியவே தெரியாது. (remote administration tools)
ஹையோ... என இருக்கிறதா?... சிந்தியுங்கள்.
* என் கணினியில், அடிக்கடி ஒரு விளம்பரம் வரும். கணினியை வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க அந்த anti-virus மென்பொருளை வாங்கும்படி சொல்லும் விளம்பரம் அது. தினம் ஏழெட்டு முறையாவது அந்த விளம்பரம் வரும்.
திடீரென்று, என் கணினியில் ஒரு அவசரச் செய்தி... என் கணினி பழுதுபட்டுவிட்ட"தென்று. கணினியை முழு scan செய்து பார்த்தேன். பழுதொன்றுமில்லை. அவசரச் செய்தியின் படபடப்பில், தினம் நான் பார்க்கும், அந்த anti-virus software பதற்றத்தில், உடனே 'buy / install’ என click செய்து விடுவேன் என அந்த anti - virus software விற்கும் நிறுவனத்தின் கணிப்பு / ஏற்பாடு... ‘எங்கிட்ட மோதாதே’... என நான் தப்பித்தேன்.
* நானென்ன பிஸினெஸ் பெண்ணா? என்னிடம் மொபைலிலும், -மெயிலிலும் திருட என்ன இருக்கிறது என எண்ணாதீர்கள். உங்களைப்பற்றிய, எந்தத் தகவலும் யாரோ ஒருவருக்குத் தெரிவது கூட, உங்களுக்கு ஊறு விளைவிக்கும். நம்புங்கள். -மெயில் அனுப்ப, புதிதாக வந்த ஒரு IM-இல் என் பெயர் முகவரியைப் பதிந்தேன். அவ்வளவுதான். என் மொபைல் எண், நான் அதிகம் விரும்பும் தகவல்கள், தேடும் விஷயங்கள்... என என்னைப்பற்றி அத்தனையும் அதில் பார்க்க முடிந்தது.

ஆனால், இதில், என் தவறுதான் அதிகம்.
நான் பதிந்த site-இன் related site-களுக்கு என்னைப் பற்றிய தகவல்களைத் தரத் தயார்’- என நான் முழு contract / disclaimer- சரியாகப் பார்க்காமல் ஒப்புக் கொண்டிருக்கிறேன்.
சரி. இப்படிப் பார்க்கலாம். உங்கள் முழு பெயரையும் url bar - இல் டைப் செய்யுங்கள். உங்களைப் பற்றிய நீங்கள் கணினியில் எங்கெல்லாம் பதிந்திருக்கிறீர்கள்... அத்தனை தகவல்களும் screen-இல் விரியும். இப்போது சொல்லுங்கள் உங்களைப் பற்றிய இத்தனை தகவல்கள் அடுத்தவருக்குத் தெரிவது அவசியமா?
இதற்கு என்ன செய்வது?
Contract / disclaimer களை நன்கு படித்து பின், Accept click செய்யவும்.
சமூக வலைதளங்கள்.
* நீங்கள் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே வெவ்வேறு சைட்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கொள்வோம். அந்த பல site-களில் ஏதாவது ஒன்று, ஸ்பை சைட்" (ஒற்று வேலை) ஆக இருக்கக் கூடும்.
உதாரணமாக கரன்ட் செய்தி ஒன்று பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள்... அன்றைய அரசியல் கிசு கிசு பற்றி...!
அந்தத் தகவல் குறித்த வார்த்தைகளை டைப் செய்து தேடுவீர்கள். அது குறித்த தகவல்களுடன், ஒரு site உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் தகவல்களை...!
இடையே ஃபேஸ்புக் பக்கம் வருவீர்கள். பின் கொஞ்சம் ஆஃபிஸ் வேலை அல்லது வேறெதாவது சைட்.
அதற்குள் அந்த ஸ்பை சைட் தன் வேலையைத் தொடங்கும், பாஸ்வோர்டுடன் உங்களது எந்தப் பக்கமாவது திறந்திருக்கிறதா என நோட்டமிடும். (அதற்கு பாஸ்வோர்ட் கிடைக்காது தான். ஆனால், ஃபேஸ்புக், -மெயில் போல ஏதோ ஒன்று திறந்திருக்கிறதா என நோட்டமிடும்.)

இப்போது அந்தஸ்பை சைட்இன் தலைப்பு உடனே மாறி ஃபேஸ்புக் அல்லது ஈமெயில் என வரும் (உங்களது எந்த பக்கம் ஓபனாகி உள்ளதோ அந்த பக்கத்தின் பெயர் வரும்) ஆனால், அது உங்கள் கவனத்துக்கு வராது.
பல சைட்கள் ஓபனாகி இருக்க எந்த சைட்டின் தலைப்பில் ஃபேஸ்புக்/-மெயில் என்றிருக்கிறதோ அந்த பக்கத்தை க்ளிக் செய்வீர்கள். (அதுஸ்பை சைட்டாகஇருக்கலாம்)
அது மறுபடி கேட்கும்...லாக்-இன் செய்யச் சொல்லி...! அவசரத்தில் நாமும் லாக் -இன் செய்ய ஐடி பாஸ்வோர்டை டைப் செய்வோம். முடிந்தது ஜோலி.
இந்த ஐடி பாஸ்வோர்டை அவர்கள் உடனே உபயோகிக்க மாட்டார்கள். அதனால் உங்களுக்கு சந்தேகம் கூட வராது.
* ஒரு ஐந்து நிமிடம், உங்கள் ப்ரபொஃபைல் படத்தைப் போட்டு, உங்கள் பெயரில் அக்கவுன்ட் (ஃபேஸ்புக் போன்ற) ஆரம்பித்து, பின் (உங்கள்) அக்கவுன்டிலிருந்து, தனது அக்கவுன்டுக்குஒரு மாதிரிடயலாக்குகளை அள்ளிவிட்டு, பின் அந்த இன்பாக்ஸ் மெஸேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து (அந்தப் பக்கத்தை அப்படியே புகைப்படம் போல காப்பி எடுப்பது), பின் அந்த மெஸேஜை ஷேர் பண்ணி.." அவரு (நீங்கள்) இப்படியெல்லாம் அசிங்கமாக பேசறாரு...!" என பொய் சொல்ல முடியும். ஒரு வேளை அந்த மாதிரி பிரச்னை வந்தால், அது பொய் என கண்டுபிடிக்க முடியும் தான். ஆனால், அந்தப் பொய்த் தகவல் நமக்குத் தெரியும் வரை எத்தனை பேருக்குப் பகிரப்பட்டதோ...?
* உங்களுக்கு, இது நீங்களா..?" என்றோ உங்கள் துறை பற்றிய வேலை வாய்ப்புச் செய்திகள்..!" என்றோ உங்களுக்கு ஆசை காட்டும் கேள்விகளுடன் பாப்-அப் வந்தால் அவற்றைத் திறக்க வேண்டாம். அவை உங்கள் நண்பரிடமிருந்து வந்திருந்தாலும்...!
அவை நண்பரிடமிருந்து அவருக்கே தெரியாமல் வந்திருக்கக் கூடும்.
அவற்றைத் திறந்தால், அப்போது முதல் அது ஆக்டிவேட் ஆக ஆரம்பிக்கும். உங்கள் அக்கவுன்டிலிருந்து, செய்திகளைப் படங்களை அனுப்ப ஆரம்பிக்கும். அவை ஒருமாதிரியானவைகளாகவும் இருக்கக்கூடும். உஷார்!
* ஆன்லைன் செக்யூரிட்டி பற்றி சொன்ன இவை எவையுமே யாரையும் பயப்படுத்த அல்ல...! ரோட்டில் எப்படியெல்லாம் விபத்துக்கு வாய்ப்புள்ளது எனச் சொல்ல மட்டுமே...!
சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்; ஹெல்மெட் அணியுங்கள்; பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.
அவ்வளவே...!

முன்பெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில்பக்கத்தில் திருடன் இருக்கலாம். ஜாக்கிரதை...’ என போலீஸ் மைக் போட்டு கூவுவார்கள். ஆனால், இப்போது...‘நீ திருட /திருடனாக வாய்ப்பு ... இதோ... உன் வீட்டுக்குள்எனும் நிலைமை. திருடும் களமே வீட்டினுள். என்ன செய்ய?
இதற்காக... ‘மங்கையர் மலரிலேயேபோட்டுட்டாங்க. உனக்கு மொபைலும் கிடையாது, கம்ப்யூட்டரும் கிடையாது’... என உங்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். அவற்றின் பயன் அளப்பரியது. கொஞ்சம் முன் எச்சரிக்கை மட்டுமே தேவை. அவர்களையும் இதைப் படிக்கச் சொல்லுங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டிய/கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்:
எல்லா எஸ்.எம்.எஸ்.களும் original source லிருந்து வருவன என நம்பத்தேவை இல்லை.
உங்கள் வீட்டுக் கணினியை கேம்ஸ் விளையாடக்கூட வெளியாட்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமா எனத் தீர்மானியுங்கள்.
முக்கிய மெயில்களைகால்செய்து செக் செய்வது நல்லது.
முக்கிய மெயில்களை வேறு ஃபோல்டரில் போடவும்.
ஒரே விஷயம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்துபவர்களை கொஞ்சம் ரீ-செக் செய்வது நல்லது.
எப்போது யாருக்கு மெயில் அனுப்பினாலும் ரிப்ளை மூலமே பதில் அனுப்பவும். அப்போதுதான் தகவல் பரிமாற்றத்தின் இழை (continuity miss) அறுபடாது.
னுப்பிய -மெயில்களை, அனுப்பியவர் பெற்றவர் இருவரும் அழித்து விட்டாலும், அது கம்ப்யூட்டரிலோ, அல்லது சர்வரிலோ இருக்கும். அதை, பல சமயம்ரிகவர்செய்ய முடியும். ஆனால், அதைரிகவர்கூட செய்ய முடியாமல், கம்ப்யூட்டர், சர்வரிலிருந்தும் அழிக்க முடியும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
எப்போது, புகைப்படங்களை அனுப்பினாலும், water mark செய்தே அனுப்பவும் (அதை நீங்களே செய்ய முடியும்). அப்போதுதான் யாரும் புகைப்படங்களை டவுன்லோட் செய்ய முடியாது.(மெனக்கிட்டால், வாட்டர் மார்க்கை அழிக்கவும் முடியும்). கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா எனும் நிலைதான்.
நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் வாட்டர் மார்க் செய்வது போக, அந்த புகைப்படத்தை இத்தனை முறைதான் பார்க்கலாம் எனவோ, அல்லது அந்த புகைப்படத்தைஃபார்வர்ட்செய்ய முடியாத படியோ செய்ய என உள்ள மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். (குறிப்பாகவரன் தேவைவிளம்பரங்களுக்கு)
டெக்னாலஜியைப் பயன்படுத்த, உங்கள் அதிகபட்ச குறுக்கு புத்தியைப் பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு முறையும் Contract / disclaimer களை நன்கு படித்து, பின் Accept- click செய்யவும்.
இன்று சந்தையில் நிறைய remote administration tool கிடைக்கின்றன. கவனம்!


நன்றி - கல்கி 

தேவயானி.இந்தப்படத்துக்கு தேவையா நீ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு சமர்ப்பணம்...
1. இன்று அடால்ஃப் ஹிட்லர் பிறந்தநாள். 20 April 1889.எனவே மேரேஜ் ஆனவங்க அவங்கவங்க பொண்டாட்டிக்கும் ,டேமேஜருக்கும் வாழ்த்து சொல்லிடுங்க


---------------------------


2.  இன்னைக்கு உலக நகைச்சுவை நாளாம்.எப்படியும் பொண்டாட்டிங்க சிரிக்க மாட்டாங்க.கிச்சு கிச்சு மூட்டுவதே ஒரே வழி ;-)


----------------------


3. பஸ்ல ஒரு பிகரு அதோட லவ்வர்ட்ட போன் ல பேசுது.என் காதைக்கொண்டு போய் அதோட வாய்க்கிட்டேயே வெச்சு ஒட்டுக்கேட்டாச்சு.ஒரு வார்த்தை கூட வெளில வர்ல # ம் ம் ஹூம் அவ்ளவ் தான் 



----------------------------


4. உங்களுக்கு சுக்கிர மேடு பிரமாதமா இருக்குனு ஒரு ஜோசியர் கம் சாமியார் ஒரு லேடிட்ட அள்ளி விட்டுட்டு இருக்கான் @ வைத்தீஸ்வரன் கோயில்.அடேய்


------------------------


5. ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா: உலக வங்கி ஆய்வறிக்கை தகவல் # கோழைகள் அதிகம் வசிக்கும் நாடும் அதேதான்



---------------------


6. ராமநவமி விஷேஷ பிரசாதம் 80% பொண்ணுங்க தான் சாப்பிடறாங்க.ஆண்கள் யாரும் அதை கண்டுக்கலை # நீதி - ஆண் விட்டுக்கொடுப்பவன்


------------------------


7. திருமணஆசை காட்டி மாடலிங்பெண் லாட்ஜில் கற்பழிப்பு # அநேகமா லாட்ஜ் பெரு கல்யாண் லாட்ஜா இருக்கும்


-------------------------


8. ஃபர்ஸ்ட் நைட்ல கரண்ட் போனா,படாத எடத்துல பட்ருமாம்.V-GUARD UPS விளம்பரம் # FAN மட்டும் போதும்.லைட் எதுக்கு?


---------------------------


9. வெள்ளிக்கிழமை ஆனா கோயில் குளம்னு சுத்துனா புண்ணியம் கிடைக்குதோ இல்லையோ கண்ணுக்கு குளிர்ச்சி கிடைக்கும்



-----------------------------


10. சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோயில் ல 370 காலேஜ் பிகருங்க.கூட்டி வந்த பிரின்சிபால்க்கும் அனுப்பி வைத்த பெற்றோருக்கும் நன்றி ;-)


-----------------------


11. பூக்காரியை லவ் பண்ணினா நாம என்ன தப்பு பண்ணினாலும் தண்ணி தெளிச்சு விட்டுடுவா னு எதிர்பார்க்க முடியாது


--------------------


12. இன்று ஸ்ரீராமநவமி.எனவே ஊர்ல இருக்கும் பொண்டாட்டிங்க எல்லாம் (அவங்கவங்க ) புருஷன் பேச்சை இன்று ஒரு நாளாவது கேட்கவும்


------------------------------


13. ஆண் கிள்ளும்போது ஆசையாய் விரல் தான் படும்.பொண்ணு கிள்ளுனா இது தான் சாக்குன்னு நகத்தை பதிச்சிடுவாங்க # சித்தர் வாக்கு ;-)



--------------------------


14. வீணாவின் மம்மியிடம் - வீணா இருக்காளா?



 மம்மி - எப்பவோ வீணா போய்ட்டாளே! 



---------------------------


15. தேவயானி.இந்தப்படத்துக்கு தேவையா நீ  ராஜகுமாரன் . மைன்ட் வாய்ஸ் # திருமதி தமிழ்.



-----------------------------


16. பெண்களின் அகராதியில் ஆணின் தவறை மன்னித்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.


----------------------------


17. பெண்கள் தங்கள் கணவனை ( காதலனை ) நம்புவதை விட தங்கள் தோழிகளை அதிகம் நம்புகிறார்கள்



------------------------

18. அழகுக்காக பூ வெச்சுக்கனும்னு பொண்ணுங்க நினைக்கறாங்க.ஹய்யோ அய்யோ.


----------------------


19. பொண்டாட்டிங்க எப்பவும் ஆபீஸ்ல இருந்து வந்ததும் பூ வை (சவுரில இருந்து) கழட்டி பிரிட்ஜ்ல வெச்சு காலைல ஆபீஸ் போறப்ப மீண்டும் வெச்சுக்கறாங்க



--------------------------


20. திருமதி தமிழ் ஹிட் ஆகிடற மாதிரி கெட்ட சொப்பனம் கண்டேன்.பலிச்சிடுமோ்



-----------------------------

Wednesday, April 24, 2013

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1 , 2 ,3

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 1

ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்? அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள். அவர்களின் நிம்மதியை கெடுத்த ஆலை.. ஸ்டெர்லைட்!
உண்மையிலேயே மக்களின் அச்சம் நியாயமானது தானா? மக்களின் எதிர்ப்புக்கு காரணம் இருக்கிறதா? அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற பல விசயங்களை அலசுவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்ததே தனிக்கதை. இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது. அதாவது, 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், ‘இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்’ என சமாளிக்க பார்த்தார். ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், ‘ஆலையை அகற்ற வேண்டும்’ என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.

இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின.  இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம்.

துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது ‘பை ப்ராடக்ட்’ என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

அனில் அகர்வால் கணக்கு இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. பொது மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கி போராட்டத்தில் குதித்தன. ‘மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை எங்களுக்கு தேவை இல்லை. இதை இந்த மண்ணில் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அரசியல் கட்சியினர் வேகம் காட்டினார்கள்.

இந்த கட்சிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அனில் அகர்வாலுக்கு தெரிந்து இருந்தது. வீர வசனம் பேசிய தலைவர்கள் அவரை சந்தித்த பிறகு மவுனம் காக்க தொடங்கினார்கள். ஆலைக்கு எதிராக தினமும் புதிய பெயர்களில் அமைப்புகள் முளைத்தன. உண்ணாவிரதம்,. ஆர்ப்பாட்டம் என ஸ்டெர்லைட்டை மிரட்டியவர்களை அழைத்து பேசியது, ஆலை நிர்வாகம். இதில் ‘கவரப்பட்ட’ சில கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் போராட்ட பந்தலை பிரித்துக் கொண்டு வீடுகளில் போய் முடங்கினார்கள்.
சில அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே மக்களுக்காக கடைசி வரை போராட்ட களத்தில் நின்றன. சுமார் இரண்டு வருடமாக சாதி, மதம், தொழில் வேறுபாடுகளை மறந்து எழுச்சியுடன் போராடிய மக்கள், 1996 சட்டமன்ற தேர்தலை துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டனர். மகளிர் அமைப்புகளும் உத்வேகத்துடன் இதில் ஈடுபட்டனர். மக்களின் இந்த முடிவு அரசியல் கட்சிகளை அதிர வைத்தது.

ஸ்டெர்லைட்டை முன்வைத்து தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து வைத்து இருந்தனர். ஆலை நிர்வாகமும் அரசியல் சூழலில் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தென் மாவட்டத்தில் சாதிக்கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து என வெடித்த கலவரம் குக்கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்பாவி மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து கொளுத்தபப்ட்டன. மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர் பலிகள் ஏற்பட்டன. எங்கும் பதற்றம் நிலவியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். இந்த மோதல் ஸ்டெர்லைட் போராட்டத்தை திசை திருப்பியது. அதுவரையிலும் போராட்ட களத்தில் அண்ணன் தம்பியாக நின்றவர்கள், சாதி மோதலுக்கு பின்னர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவே தயங்கினார்கள்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. அதே சமயம் சாதிக்கூட்டங்கள் பலத்த ஆரவாரத்துடன் நடந்தன. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த மைதானங்களில் சாதிக் கூட்டங்கள் ஆரவாரமாக நடந்தன. மக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ல தொடங்கினார்கள். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முனை மழுங்கி போய் கிடந்தது.

இந்த சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்ட தமிழ் மாந்தன் தலைமையிலான ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்’ சட்ட ரீதியிலான போராட்டத்தையும் கையில் எடுத்தது. இந்த இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் ம.தி.மு.க.வும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது.

இந்த சமயத்தில், பள்ளிகள், கல்லூரிகள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற தலைவர்கள், மத போதகர்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. கத்தோலிக்க மையங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையங்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பண உதவி செய்தது. மீனவ மக்களுக்கு மீனவ வாழ்வாதார திட்டம் என்கிற பெயரில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டது.

இவை எல்லாம் விதி முறை மீறலை சரி செய்ததா? ஸ்டெர்லைட் நிறுவனம் மன்னார் வளைகுடா பகுதியில் ஆலையை அமைத்தது சரிதானா..?
 wait
thanx - vikatan ,
ஆண்டனிராஜ்

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 2


ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட நாளில் இருந்தே தூத்துக்குடி மாவட்ட மக்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பூரண ஆசி இருந்ததால் எதிர்ப்புகளை துச்சமாக மதித்து கோடிகளை கொட்டு பிரமாண்ட தொழிற்சாலையை வேகமாக உருவாக்கியது.

ஒரு ஆலையை அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள் எதையும் நிறைவேற்றாமல் துணிச்சலாக களம் இறங்கினார்கள். ’தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில் இருந்து 25 கி.மீ தூரத்துக்குள் மாசு விளைவிக்கும் தொழிற்சாலைகளை நிறுவக்கூடாது’ என்கிற விதியை ஸ்டெர்லைட் நிறுவனம் அப்பட்டமாக மீறியது. சுற்றுச்சூழல் வாரியத்தின் அனுமதியை பெறாமலே ஆலையை அமைத்தார்கள். பின்னர் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதும், தமிழக மற்றும் தேசிய சுற்றுச் சூழல் வாரிய அதிகாரிகள் அவசரமாக ஆலை பகுதியை ஆய்வு செய்தது போல ஆவணங்களை கொடுத்தார்கள். அந்த அளவுக்கு விதிமுறைகளை வளைக்கும் துணிச்சலும் திறமையும் இந்த நிறுவனத்துக்கு இருந்தது.

அரசியல் கட்சிகளின் அந்தர் பல்டி
ஒட்டு மொத்த மக்களின் பலமான எதிர்ப்பை பார்த்ததும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு எதிரில் இருப்பது ஓட்டுக்களாக தெரிந்து இருக்க வேண்டும். அதனால் அரசியல் கட்சியினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் போட்டி போட்டுக் கொண்டு வேகம் காட்டி மக்களிடம் நல்ல மதிப்பை பெற முயற்சி செய்தார்கள். ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சி ஆலைக்கு ஆதரவாக நின்றது. இதை தவிர்த்து, அந்த சமயத்தில் அரசியல் கட்சிகளால் உருவாக்கபப்ட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனதா தளம், பா.ம.க., புதிய தமிழகம் (அப்போது தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளும் இடம்பெற்று இருந்தார்கள்.

ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒரு காலுமாக இருமனதுடன் நின்ற அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், வேறு வழி இல்லாமலேயே அரைகுறை மனதுடன் இந்த போராட்டக் குழுவில் இருந்தனர். ’உழுகிற நேரத்தில் ஊர்வழி போனவன் அறுக்கிற நேரத்தில் அரிவாளோடு வந்தானாம்’ எனபது போல வந்து சேர்ந்த இந்த அரசியல்வாதிகளின் எதிர்ப்பை வேதாந்தா நிறுவங்களின் தலைவரான அனில் அகர்வால் எளிதாக சமாளித்து விட்டார்.

அரசியல்வாதிகளை பொறுத்தமட்டிலும் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக எந்த அளவுக்கு அக்கறையும் வேகம் காட்டினார்களோ அதே வேகத்தில் பின்வாங்கி சென்று விட்டனர். ஏறக்குறைய எல்லா கட்சிகளும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை கைவிட்டு அரசியல் மேடைகளில் அடுத்தவரை திட்டுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த சம்யத்தில் ம.தி.மு.க மட்டுமே மக்களுடன் நின்றது. 1995-ல் சுற்றுச்சூழல் வல்லுனரான ரஷ்மி மயூரியை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு பிரசாரத்தையும் போராட்டத்தையும் நடத்திய தொண்டு நிறுவங்கள் கூட, தங்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு உணர்வை ஏனோ அடக்கி வாசிக்க ஆரம்பித்தது மக்களை ஆச்சர்யம் அடைய வைத்தது.

கடந்து வந்த போராட்ட பாதை...

அரசியல் கட்சிகள் அடங்கிப் போனாலும் மக்கள் போராட்டம் நீருபூத்த நெருப்பாக கனன்று கொண்டே இருந்தது. சில சமயங்களில் மக்களின் கோபம் வெடித்து கிளம்பியது. 1996-ல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஆலையின் முன்பாகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் அமர்ந்தார்கள், பொது மக்கள். இந்த போராட்டத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். துறைமுகத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், பஞ்சாலை தொழிலாளர்கள், விவசாயிகள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆலைக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் வளர்ச்சி அடைந்து கடையடைப்பு, சாலை மறியல் என சூட்டை கிளப்பியது.


தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியர்கள், மானவர்கள் என பத்தாயிரத்துக்கு அதிகமானோர் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் 5கி.மீ தூரத்துக்கு நின்றனர். 1996-ல் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எம்.வி.ரீஸா என்கிற கப்பலில் தாதுப்பொருள் வந்தது. தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்க ஆலை நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி உள்ளூர் மக்களை கொதிப்படைய வைத்தது.

கப்பலில் இருந்து தாதுப்பொருட்களை இறக்க அனுமதிக்க கூடாது என போராடும் மக்கள் வலியுறுத்தினர். ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரம் அடைய தொடங்கின. மீனவ மக்கள் கடலுக்குள் தங்கள் எதிர்ப்பை காட்டினார்கள். 74 விசைப்படகுகள், நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மூலமாக ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக முற்றுகை இட்டனர். 15 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகை போராட்டத்தின் போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எந்த கப்பலும் வெளியே செல்ல முடியவில்லை.  அதேபோல கப்பல்கள் எதுவும் உள்லே செல்லவும் அனுமதிக்கவில்லை.

இதனால் எம்.வி.ரிஸா கப்பலும் துறைமுகத்துக்குள் நுழைய முடியாமல் நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. போராட்டம் வலுப்பதை அறிந்ததும் திகைத்துப் போன தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் அந்த கப்பலை கொச்சின் துறைமுகத்துக்கு திருப்பி விட்டனர். ஆனால், ஆறு மாத காலத்துக்கு பின்னர் சாதிச் சண்டையால் மக்களிடம் பிரிவினை ஏற்பட்டு இருந்த நிலையில், கொச்சின் துறைமுகத்தில் இருந்து அந்த சரக்குகள் லாரிகள் மூலமாக ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக இறக்கப்பட்டது என்பது தான் சோகம்.

மற்றொரு கப்பலில் வந்த தாதுப்பொருட்கள்


சில மாதங்களுக்கு பின்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கான பொருட்களுடன் எம்.எஸ்.பரஸ்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் உள்லேயே கொண்டு வரப்பட்டு சரக்குகளை இறக்கும் பணியை தீவிரப்படுத்தியது. உள்ளூர் தலைவர்கள் பலரும் ஆலை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இந்த அளவுக்கு தைரியமாக நிர்வாகத்தினர் செயல்படுவதாக பொதுமக்கள் வேதனைப்பட்டார்கள்.
ஆனாலும், தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து எம்.எஸ்.பரஸ்கவி கப்பலில் இருந்து சரக்குகளை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் என போராடினார்கள். இதனால் துணிச்சலும் உற்சாகமும் அடைந்த மீனவ மக்கள் தங்கள் பங்கிற்கு 172 விசைப்படகுகள் 50 நாட்டுப் படகுகளில் துறைமுகப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சென்று அந்த கப்பலை முற்றுகை இட்டனர். இதனால் பரஸ்கவி கப்பல் அவரசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேய அரசை எதிர்த்து சுதேசி கப்பல் ஓட்டிய தியாகியான வ.உ.சி பெயரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி துறைமுகத்தில் மற்றொரு சுதந்திர போராட்ட எழுச்சி போலவே இந்த போராட்டம் இருந்ததாக அந்த சமயத்தில் மீனவ மக்கள் பெருமை பொங்க தெரிவித்தனர். மக்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன் நடந்த இத்தகைய போராட்டங்கள் அரசியல் கட்சியினர் அச்சம் அடைய வைத்தது. ஸ்டெர்லைட் நிர்வாகமும் மக்களின் இந்த எழுச்சியைக் கண்டு கலங்கியது.

தொடர்ந்து நடந்த போராட்டங்கள் என்ன..? அவற்றை எப்படி எல்லாம் ஒடுக்கவும் நசுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
படங்கள்:
ஏ.சிதம்பரம்
ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 3

தூத்துக்குடி துறைமுகத்துக்கு எம்.வி.ரிஸா கப்பல் தாதுப்பொருட்களை ஏற்றி வந்ததை தீரத்துடன் எதிர்த்து அதனை முறியடித்த மக்கள் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது 1996 மார்ச் 18 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடிக்கு அவர் வரும் தினத்தை கருப்பு தினமாக அறிவித்தது, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு. காவல்துறையின் தீவிர முயற்சியால் அவரது பயணம் தடைபடாமல் போனாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு செல்ல இருந்த ஜெயலலிதாவின் பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.

போராடும் மக்களிடம் கடுமை

அதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தி.மு.க.வும் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மென்மை போக்கையும்,  போராடும் மக்களிடம் கடுமையாகவும் நடந்து கொண்டது. அதனால் ஆலையை மூடக்கோரி மக்கள் இயக்கத்தினர் நடத்திய போராட்டங்களை எல்லாம் ஆலை நிர்வாகம் தட்டிக் கழிப்பதை வழக்கமாக்கியது.சுற்றுசூழல் மற்றும் வனத்துறையின் விதி முறைகளை மீறி ஆலையை கட்டி இருப்பதையும் அதன் செயல்பாடுகள் இருப்பதையும் எதிர்ப்பு இயக்கத்தினர் பல முறை சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக, ஆலைக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஆலை நிர்வாகம்மறுப்பதற்கு முன்பாக அரசு அதிகாரிகள் ‘இல்லை’ என தெரிவிப்பதில் அக்கறை காட்டினார்கள். அதற்கான அதாரங்களை அடுக்கடுக்காக விளக்கினார்கள்.

குற்றச்சாட்டை சமாளிக்க ஆய்வு குழுக்கள்


ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கடலில் கொட்டப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகள் பகிரங்கமாக குற்றம் சாட்டின. இதுபோன்ற சமயங்களில் அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆலையின் உள்ளே சென்று ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.அப்படி ஆய்வு செய்த குழுவினர், ‘ஆலையில் இருந்து க்டல் வரைக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான்.ஆனால், அந்த குழாய்களில் அவர்கள் கழிவுகளை வெளியேற்றவில்லை.மாறாக உள்ளேயே அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்’என மக்களுக்கு ‘விளக்கம்’(?) அளித்தார்கள்.

இது தவிர,ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 250 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைக் காடுகளை அமைக்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வலியுறுத்தியது.ஆனால், அப்படி செய்ய வேண்டுமானால் 150 ஏக்கர் பரப்பளவு தேவைப்படும் என்பதால் பசுமை வளைய பரப்பளவை குறைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் கேட்டுக் கொண்டது.உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,பசுமை வளைய பரப்பளவு 25 மீட்டராக இருந்தால் போதுமானது என தாராளம் காட்டியது.

சாகும் வரை உண்ணாவிரதம்

மக்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமல் ஆலையை செயல்படுத்த துணிந்து செயல்பட்ட ஆலை நிர்வாகத்தை அ.தி.மு.க அரசும், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசும் அளவுக்கு அதிகமாக உற்சாகப்படுத்தின.ஆனால், விதி முறைக்கு மாறாக அமைக்கப்பட்டு உள்ள இந்த ஆலை செயல்பட தொடங்கும் போது சிறிய விபத்து ஏற்பட்டால் கூட தூத்துக்குடி நகரமே மற்றொரு போபாலாக உருமாறி விடும் என சமூக ஆர்வலர்கள் அஞ்சினார்கள்.

இந்த விவரங்களை சமூக ஆர்வலர்கள் மக்களிடம் விளக்க தெருமுனை பிரசாரம், சைக்கிள் பேரணி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என பல்வேறு யுத்திகளை கடைப்பிடித்தனர். அதனை எல்லாம் முறியடிக்கும் வகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கொடுப்பதில் காவல்துறை தயக்கம் காட்டியது. அத்துடன் முன்கூட்டியே திட்டமிட்ட பல நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன.ஆனால், அதை எல்லாம் மீறி பல கட்டமாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்பட்டன. கழிவு நீர் குழாய்களை அகற்ற வலியுறுத்தி 15 பேர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, பயன்படுத்தப்படாமல் வெறுமனே பதித்து மட்டுமே வைக்கப்பட்டு இருக்கும் அந்த குழாய்களை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்த பின்னரே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டங்களில் புஷ்பராயன் (தற்போது, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழு உறுப்பினராக இருப்பவர்), தியாகி கோமதியா பிள்ளை போன்றோர் பங்கெடுத்தனர்.

மவுனம் காத்த மதத் தலைவர்கள்

போராடும் மக்கள் மீதும், அதை ஊக்கப்படுத்தும் அமைப்புகள் மீதும் காவல்துறையின் நடவடிக்கைகள் கடுமையாக இருந்தன.போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது சரமாரியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.ஒரு சிலரை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று மிரட்டி அனுப்பினார்கள்.இதை எல்லாம் சந்திக்க பயந்து பல அமைப்புகள் பின்வாங்கிக் கொண்டன.சில அமைப்புகள் ஆலை நிர்வாகத்தின் மூலமாக கிடைக்கும் சலுகைகளுக்காக போராட்டத்தை முடித்துக் கொண்டன.

தொடக்கத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட களத்தில் ஆர்வமாக செயல்பட்ட சில மத தலைவர்களும் மத நிறுவனங்களும் கூட அரசின் அடக்குமுறைக்கு பயந்து மவுனம் காக்க தொடங்கினார்கள்.'கோடிகளை கொட்டி தொடங்கப்பட்ட ஆலையை இழித்து மூட் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?’ என்று உள்ளூர் தலைவர்கள் சிலரே மக்களிடம் பேசி சமாதானப்படுத்தினார்கள்.ஆனாலும் கத்தோலிக்கமத குருமார்கள் சிலர் கடைசி வரையிலும் போராட்டக் களத்தில் மக்களோடு தீவிரமாக நிற்கவே செய்தார்கள். ஆனாலும் அவர்களின் மதத் தலைமை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பதும் ஆலையை எதிர்த்து சிறு அறிக்கை கூட கொடுக்கவில்லை என்பதும் மதத்தின் மீதும் அந்த தலைமையின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த மீனவ மக்களை வருத்தம் அடைய வைத்தது.

கலக்கம் அடைந்த ஆலை நிர்வாகம்


மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் 1989-ல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கட்டப்பட்டபோது எதிர்ப்பு இயக்கம் வலுவாக இருந்தது.அந்த பகுதியில் இருந்த விவசாய மற்றும் மீனவ மக்கள் கொண்ட 35,000 பேரை ஒன்று திரட்டி போராட்டக் குழு அமைக்கபப்ட்டது.அந்த குழுவினர் தொடக்கத்தில் பல்வேறு வடிவங்களில் அமைதியான போராட்டங்களை நடத்திப் பார்த்தனர்.ஆனால் எதற்கும் வளைந்து கொடுக்காத ஆலை நிர்வாகம் தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் தீவிரமாக இருந்தது. இதனால் கொதிப்படைந்த ரத்னகிரி மாவட்ட மக்கள், கையில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் அதிரடியாக ஆலைக்குள் அத்துமீறி நுழைந்து அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள்.

அதே போன்ற நிலைமை தமிழகத்திலும் வந்து விடுமோ என்கிற அச்சம் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு வந்து விட்டதால் போராட்டங்களை ஆரம்பத்திலேயே முடக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பை நாடியது.இந்த போராட்டம் சுற்றுச் சூழலுக்கு எதிரான போராட்டமாக மாறுவதை திசை திருப்பும் வகையில், தூத்துக்குடியின் வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்க இந்த ஆலை உதவும் என்கிற கருத்தை பரப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் நல்ல பலன் கிடைக்கவே செய்தது. போராட்ட குணம் நீர்த்து போக ஆரம்பித்ததால் போராட்டக்குழுவினர் நீதி மன்றத்தை மட்டுமே நம்பும் நிலைமை உருவானது.

போராட்டம் ஒரு பக்கம் நடக்கும் போதே செயல்பாட்டை தொடங்கி விட்ட ஸ்டெர்லைட் ஆலையில் விபத்துகள் அடிக்கடி நடக்க தொடங்கின..

அந்த விவரங்களை நாளை பார்க்கலாம்.. 

நன்றி  விகடன்

யார் இவள் - சினிமா விமர்சனம்

 

மேரேஜ் ஆன ஆம்பளைங்களுக்கு பொதுவா பேய் , பிசாசு கண்டா பயம் இருக்காது. ஏன்னா டெயிலி நைட்டும் , பகலும் அவங்கவங்க  சொந்தப்பொண்டாட்டியை க்ளோசப்ல வலுக்கட்டாயமா பார்த்து பார்த்து  மனசு திடம் ஆகி இருக்கும்.அதனால என்னை மாதிரி குழந்தை சுபாவம் உள்ளவங்க, குழந்தைங்க, பெண்கள் தான் பேயைக்கண்டா அலறுவாங்க, பயப்படுவாங்க , அந்த டைப் படம் பார்க்க ஆர்வம் காட்டுவாங்க . அப்பேற்பட்ட படம் தான் இது. அனன்யா ஹீரோயினா நடிச்ச இந்தப்படம் எப்டினு இப்போ பார்க்கப்போறோம். பிரபலமான நாலு நாவல்களை காக்டெயில் ஆக்கி திரைக்கதை அமைச்சிருக்காங்க

கதை 1 ( உல்டா ஆஃப் எண்ட மூரி வீரேந்திர நாத் தின்  திகில் பங்களா )

ஹீரோ சாரு மாதிரி ஒரு நாவல் ஆசிரியர்.  அவர் நாவல் எழுத தன் குடும்பத்தோட ஒரு தீவுக்கு வர்றார். அவருக்கு ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பொண்ணு .அங்கே வந்து கொஞ்ச நாள் ல யே ஏதோ அமானுஷ்ய சக்தி உலவறதை கண்டு  பிடிக்கறாங்க . 

கதை 2  ( உல்டா ஆஃப்  ஆர்னிகா நாசர் -ன் பனிப்புயல் )


 இப்டியே போனா பயங்கர திகில் கதையா போயிடும் , கொஞ்சம் கிளு கிளுப்பை  ஏத்திக்க வேணாமா?  எழுத்தாளரோட சம்சாரத்துக்கு ஆல்ரெடி ஒரு காலேஜ் மேட் காதலன் இருக்கான்.  அவன் எதார்த்தமாவோ, பதார்த்தமாவோ இங்கே வர்றான், வந்தவன் அப்டியே ஷாக் ஆகிடறான். தன் முன்னால் முன்னாள் காதலி ( எப்டி வாக்கிய அமைப்பு ? ) 


 அடுத்து படம் பார்க்கும் நாம் ஷாக் ஆகிடறோம்,. ஏன்னா ஹீரோயின் மாசமா இருக்கா.  அவ யாரால மாசமா ஆனா? அப்டினு ஒரு ட்விஸ்ட்.  சஸ்பென்ஸ். அடேங்கப்பா ...யாராலும் யூகிக்கவே முடியலை. புருஷன் தான் கர்ப்பத்துக்கு காரணம். ( அட போங்கப்பா , என்ன திரைக்கதை இது ? ) 


 


புருஷன்காரன்  ஒரு டைம் பால்கனில இருந்து தன் சம்சாரம் அவ காதலன் கிட்டே சிரிச்சுப்பேசிட்டு இருக்கறதைப்பார்த்துடறான். நாம பக்கத்துல இருக்கும்போது பல் துலக்கக்கூட வாயைத்திறக்காத சம்சாரம் அவன் கிட்டே மட்டும் பல்லைக்காட்டிப்பேசுதேன்னு கடுப்பு . 


 அபூர்வ ராகங்கள் படத்துல படகுல கூட்டிட்டுப்போய் ரஜினி கமலைப்போட்டுத்தள்ள ட்ரை பண்ணுவாரே , அதே சீனை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம  சுட்டு எடுத்துட்டாங்க .லவ்வர் க்ளோஸ் 


 நல்லா கேட்டுக்குங்க. இது ஒரு கிளைக்கதை . அவ்ளவ் தான். படத்தை இழுக்கனும் இல்ல? 

கதை 3 -  உல்டா  இந்திரா சவுந்தர் ராஜன் -ன்  மாளிகை தீபம் ) 

அந்த தீவுல ஒரு ஓவியர் இருக்காரு  . அவரோட காதலியை 4 பேர் சேர்ந்து  ஒன் பை ஒன்னா ரேப் பண்ணிடறாங்க . அவ செத்துடறா . இவர் அவ நினைவாவே சுத்திட்டு இருக்காரு . இவருக்கும் மெயின் கதைக்கும் சம்பந்தம் இல்லை ( இப்போ நான் மேலே சொன்ன கதை காட்சி வடிவமா இல்லாம குரல் வடிவுல கதையா வருது )




 மெயின் கதை இனி தான் .இப்போ இன்னொரு ட்விஸ்ட். எழுத்தாளரோட சம்சாரம் அவருக்கு 2 வது சம்சாரம். அவரோட முத சம்சாரத்துக்குப்பொறந்த பொண்ணு தான் இந்த பேய் பிடிச்ச குழந்தை , 2 வது சம்சாரம் முத தடவையா மாசமா இருக்கே  அப்டினு புருஷன் ஆச்சரியமும் படலை , அதிர்ச்சியும் ஆகலை , ஜெர்க் அடிக்கலை . அவன் என்னமோ ஆண்ட்ரியா சர்வ சாதாரணமா “ ஆமா அனிரூத் என் முன்னால் லவ்வர் தான் அதுக்கென்ன இப்போ”ன்னு அசால்ட்டா அடிச்சு விட்டாரே அப்டி இருக்கான்.


 ஒரு மாந்திரீகர் கிட்டே ஆலோசனை கேட்கறாங்க,. ஏன் எழுத்தாளரோட  முதல் சம்சாரத்துக்குப்பிறந்த குழந்தை பேய் பிடிச்ச மாதிரி நடந்துக்குது?  அவரோட 2 வது சம்சாரம் ஏன் சைவமா இருந்தும் மட்டன் சாப்பிடறா? அப்டினு . அப்போதான் அவர் ஒரு கதையை அள்ளி விடறார் . இது கொஞ்சம் கிளு கிளுப்புக்கதை 

 கதை 4  உல்டா ஆஃப்  பேய்க்கதை மன்னன் பி டி சாமியின்  மாய மோகினி




ஒரு ஊர்ல  ஒரு மந்திரவாதி . அதே ஊர்ல ஒரு சந்தனக்கட்டை  மாய மோகினி இருக்கா . மந்திரவாதி கிட்டே ஒரு குரு ஆலோசனை சொல்றாரு  அந்த மாய மோகினியை கரெக்ட் பண்ணி மேட்டரை முடிச்சுட்டா உனக்கு அபூர்வ சக்தி வந்துடும்னு . நானா இருந்தா டக்னு ஒரு கேள்வி கேட்டிருப்பேன். அப்போ நீங்க ஏன் ட்ரை பண்ணலை?னு . ஆனா அவன் அப்டி கேட்கலை 


மாயமோகினியை கசமுசா பண்ணிடறான் , முதல் வசந்தம் ல சத்யராஜ் ( குங்குமப்பொட்டுக்கவுண்டர் ) ஒரு பேயை  ரேப் பண்ணும்போது அது சும்மா இருந்துட்டு மேட்டர் எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ கற்பு போச்சேன்னு கூப்பாடு போடுமே அப்டி மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கும்போது கமுக்கமா இருந்துட்டு எல்லாம் முடிஞ்ச பின் ஆர்ப்பாட்டம் பண்றா .  தற்கொலை பண்ணிக்கறா.


 அந்த ஆவி தான் இப்போ இங்கே உலாவது. அந்த ஆவியை யார் திருப்திப்படுத்துனா? ஐ மீன் சாந்தப்படுத்துனா?போலீஸ் ரைட்டர் மேல டவுட் பட்டது ஏன்? இதை எல்லாம் வெண் திரையில் காண்க


ஹீரோவா வர்ற ரைட்டர்  படு கேவலமா தாடி வெச்சுக்கிட்டு தலையே சீவாம  இருக்காரு . அநேகமா ஃபைனான்ஸ் இந்தப்படத்துக்கு இவராத்தான் இருக்கனும். பொதுவா ஆம்பளைங்க நடிப்பைப்பத்தி சிலாகிச்சு நமக்குப்பழக்கம் இல்லாததால் அடுத்த பேராவுக்கு ஸ்கிப் ஆகிக்குவோம்


 ஹீரோயின் அனன்யா . மாடர்ன் டிரஸ் போட்டுட்டு பாந்தமா வர்றார். படம் பூரா ஏகப்பட்ட சுடிதார் , எல்லாத்தையும் ஷூட்டிங்க் முடிச்சுஅப்டியே வீட்டுக்கு கொண்டு போய் இருப்பார்னு நினைக்கறேன் . எல்லாம் செம டிரஸ் . இவர் மாசமா இருக்கும்போது , பேய் பிடிச்ச மாதிரி பாவனை காட்டும்போது ஏகப்பட்ட இடங்கள் ல நடிப்பைக்காட்ட வாய்ப்பு . படத்துல இவர் கிளாமரா நடிக்கலை. அப்டியே நடிச்சாலும் நாம ரசிக்க முடியாது . அப்டி ஒரு பிஞ்சு மூஞ்சி 


அந்தக்குழந்தை  பூ விழி வாசலிலே  பேபி சுஜிதா மாதிரி அழகா இருக்கு. நடிப்பும் ஓக்கே . பேபி ஷாலினி மாதிரி ஓவர் ஆக்டிங்க் பண்ணி கடுப்பேத்தாம இயல்பா நடிச்சிருக்கு 


 


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. போஸ்டர் டிசைனில் இது ஒரு டப்பிங்க் படம் என்பதே தெரியாத மாதிரி அமைச்சது . அனன்யாவை மார்க்கெட்டிங்க் பண்ண உபயோகப்படுத்திக்கொண்டது . பேப்பர் , டி வி விலம்பரங்கள் எல்லாம் கன கச்சிதம் 


2. ஒரு சினிமாவுக்கு ஒரு கதை போதும், ஆனா 4 வெவ்வேற நாவலை அழகா உல்டா பண்ணி கதம்ப மாலை மாதிரி கோர்த்து சொல்லிய விதம் ஓக்கே 


3. திகில் படங்களுக்கே உண்டான ஒளிப்பதிவு , இசை எல்லாம்  சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான தரத்தில் இருக்கு 

 




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. பெட்ரூம்ல படுத்திருக்கும்போது கமுக்கமா இருக்கும் அவர் சம்சாரம் ரைட்டர் மும்முரமா கதை எழுதும்போது ரொமான்ஸ்க்கு கூப்பிடுவதும் , அவர் வர மறுத்ததால் கோபம் ஆவதும் ஏன்?  அவர் ஃப்ரீயா இருக்கும்போதே போய் இருக்கலாமே? ( எப்டி முத கேள்வி? ஹி ஹி ) 


2. ரைட்டர் என்ன இதுக்கோசரம் தன் சம்சாரத்தை அவரோட முன்னால் காதலன் கூட பேசிட்டு இரு நான் வந்துடறேன்னு சொல்லிட்டு பால்கனில நின்னு வேடிக்கை பார்க்கறார். எந்த புருஷனும் அப்டி பண்ண ,மாட்டான் . கட் பண்ணி அனுப்பத்தான் பார்ப்பாங்க 


3.  பால்கனில புருஷன் நிக்கறான்.  தன் முன்னாள் காதலன் கூட சிரிச்சு பேசும் ஹீரோயின் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரா? இப்டியா பப்ளிக்கா நடந்துக்கறது? 



4. ஹீரோயின் தன் புருஷன் கிட்டே குழந்தையோட அப்நார்மல் ஆக்டிவிட்டிஸ் பற்றி சொல்லும்போது அவன் நம்பலை . அவ ஏன் செல் ஃபோன்ல ஃபோட்டோ எடுத்து வெச்சு அவன் கிட்டே ஆதரமா காட்டி இருக்கக்கூடாது ? 


5.  ஹீரோயின் அனாமிகா மட்டன் சாப்பிடும்போது இடது கைல சாப்பிடறாரே? உவ்வே .. 



6. மாசமா இருக்கும் பொண்ணு புது வித டேஸ்ட் விரும்பி சாப்பிடுவா என்று டாக்டர் சொல்வது ஓக்கே , ஆனா சுத்த சைவமா இருக்கும் பொண்ணு அசைவம் சாப்பிடுவது நோ சான்ஸ் 


7. பேய் பிடிச்ச அனாமிகா அந்த சிக்கன் பீசை 10 நிமிஷம் சாப்பிடுவதை க்ளோசப்ல காட்டுவது உஷ் அப்பா முடியல . இன்னொரு உவ்வே சீன் 

 



8. இந்தப்படத்துல வர்ற மாய மோகினி மிஸ் மேட்சிங்க் மோகினியா இருக்கே? அதாவது பச்சைக்கலர் ஜாக்கெட்ட்க்கு சிவப்புக்கலர் பிராவும்  மஞ்சள் கலர் சேலைக்கு  ப்ளூ கலர் பெட்டிகோட்டும் போட்டுட்டு வருதே? ஏன்? 


9. ஹீரோ மேல டவுட் பட்டு வீட்டுக்கு வரும் எஸ் ஐ அப்பவே முட்டிக்கு முட்டி தட்டி விசாரிக்காம “ அடுத்த தடவை வரும்போது நீ உண்மையை சொல்லனும்” அப்டினு அம்போன்னு விட்டுட்டுப்போறது செம காமெடி 


10. கவுரியைக்காணோம்னு ஹிரோ சொன்னதும் அந்த குண்டு ஆள் அந்த ரூம்க்குள்ளே போய் எதுக்கு தாழ்ப்பாழ் போட்டுக்கறார்? அவருக்கு முதல் இரவா நடக்குது? பொண்ணைத்தேடத்தானே போறார்? எதுக்கு தாழ் போடனும்? 


11. பேய் லிப்ஸ்டிக் எல்லாம் பூசிட்டு வருதே , எப்டி?  பியூட்டி பார்லர் கூட போகுமா? 

12. மந்திரவாதி மாய மோகினி இடுப்புல கை வைக்கறார். அப்போ கட் அண்ட் ரைட்டா “ டேய், கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்” அப்டினு கத்தி இருக்கனும் , அல்லது எத்ரிப்பையாவது காட்டி இருக்கனும். அப்டியே சொக்கி கண்ணை மூடி பாவ்லா காட்டிட்டு எல்லாம் முடிஞ்ச பின் அய்யய்யோ போச்சே என்பது ஏன்? 


13. இந்தப்படத்துல மெயின் கதையே அந்த மாய மோகினிதான் அதுக்கு நல்ல கிளாமரா இளமையான நடிகையா போடக்கூடாதா?  45 வயசு ஆண்ட்டியை புக் பண்ணி இருக்கீங்க. அதுவும் பஸ் ஸ்டேண்ட் கிராக்கி மாதிரி இருக்கு.. 


 



ஆனந்த விகடன்  எதிர்பார்ர்பு மார்க் - 40 ( இந்த மாதிரி டப்பிங்க் படத்துக்கு அவங்க விமர்சனமே போட மாட்டாங்க ஹி ஹி ) 


 குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே 


 சி பி கமெண்ட் -  திகில் பட விரும்பிகள் டி வி  ல போட்டா பார்த்துக்கலாம் . மத்த படி பெருசா 1ம் இல்லை , 2ம் இல்லை

குஷ்பூ விமான நிலையம்

1.விஜயகாந்த் கருப்பு நிறம், நெருப்பு குணம், பொறுப்பு மனம் - கலைஞர் # தலைவா.முக்கியமான ஒண்ணை விட்டுட்டீங்க.அவர் செருப்பு திடம்.



-----------------------


2.  சொரணை கெட்டவன் தான் அதிமுக கூட்டணியில் இருப்பான் - விஜயகாந்த்# டாக்டர் அய்யா உங்களுக்குத்தான் போன்.ஹி ஹி



-------------------


3. பிரதமரை தவறாக வழிநடத்தினார் ஆ.ராசா_காங்கிரஸ்# அவர் பி எம் மா ? வயசுக்கு வராத மைனர் பொண்ணா ?


----------------------


4. பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் - மன்மோகன்சிங் # டெல்லில செஞ்ச மாதிரியா ?


-------------------------


5. கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா # ஊருக்குள்ளார குடி இருக்கும் எல்லாருமே உள்ளூர் மாப்ளைதான்



----------------------


6. கருணாநிதி - விஜயகாந்த் திடீர் சந்திப்பு- # மு க - எனக்கு 90 உனக்கு 45, கேப்டன் - விளையாடாதீங்க.மொத்தமே 40 தான்



---------------------


7. இந்த ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு சரி செய்யப்படும்.- நத்தம் விசு # 9தாராவுக்கு மேரேஜ் ஆனாக்கூட உங்க ஆட்சிக்குக்கு வந்த டேமேஜ் சரி ஆகாது



-------------------


8.  டைம்'100 செல்வாக்கு மிகுந்தோர் பட்டியலில் ப.சிதம்பரம்,அமீர்கான் # தானைத்தலைவி நமீதா இல்லையா ? என்னய்யா பிரிப்பேர் பண்றீங்க?்


---------------------


9. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம்: துப்பு கொடுத்தா 5 லட்சம் பரிசு -போலீஸ்#-பணத்துக்கு ஆசைப்பட்டு குண்டு வெச்சவனே க்ளூ குடுத்துடப்போறான்.


---------------------


10. நயன்தாரா ரகசிய திருமணம் - தொடரும் சஸ்பென்ஸ்…# ஆப்ஷன் ஏ . சிம்பு பி. பிரபுதேவா சி. ஆர்யா டி .புது ஆள்


-----------------------


11. பைரஸியை ஒழிப்பது பெரும் தலைவலி! - இசைஞானி இளையராஜா # ஆமா சாமி.அது ஏ ஆர் ஆர் இசை மாதிரி இரண்டறக்கலந்துடுச்சு



-----------------------


12. நவீன அம்பேத்கர் ஜெயலலிதா".. இந்திய கம்யூனிஸ்ட் புகழாரம்! # நவீன ஜிங் சக் கட்சி கம்யூனிஸ்ட்.எப்டி இருந்த நீங்க இப்டி கேவலமா


---------------------



13. மதுவால் மனிதநேயம் அழிந்து போகும்—வைகோ# ஐ நோ.கஜானா புல்லா நிரம்ப டாஸ்மாக்தான் பெஸ்ட் சாய்ஸ்.யூ நோ?- ஜெ



---------------


14. மீண்டும் ரஹ்மானிடம் கை கோர்க்கும் கவுதம் மேனன்.# இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சாய்ந்து சாய்ந்து நீ சேரும்போது அடடா



-----------------------


15. 20 ரூபாய் அரிசி திட்டம்: முதல்வர் ஜெ., இன்று துவக்கி வைக்கிறார்#"அரிசி தந்த ரிஷியே .நோட் பண்ணுங்கப்பா


-------------------


16. மோடி, ராகுல் இருவருமே PM ஆகத்தகுதியற்றவர்கள்: அன்னா ஹசாரே # உங்க மனசு ல இருக்கறது புரியுது.ஆனா அதுக்கு நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க


-----------------------


17. விமானநிலையத்துக்கு குழப்பம் வராத பெயர் சூடவேண்டும்: கருணாநிதி# குஷ்பூ விமான நிலையம்னு வெச்சுடுவோம்.மானம் கப்பல் ஏறட்டும்


------------------------


18. தனி ஈழம் சாத்தியமில்லை-ஈவிகேஎஸ்# உங்களைக்கேட்டாங்ளா முருகேசா?


------------------------


19. விமான நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைப்பதால் குழப்பம் வரும்! - கருணாநிதி...#தலைவரே.நீங்க வாயைத்திறக்காம இருந்தா ஒரு குழப்பமும் வராது



-----------------------


20. இந்தியர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது – சிறிலங்கா அரசு#,நின்னுக்கிட்டே வேலை செய்யும் டிராபிக் சிக்ன்ல் போலீஸ் ஒர்க் ஓக்கேவாங்ணா?



------------------------------------

Tuesday, April 23, 2013

கவுரவம் - சினிமா விமர்சனம்



மொழி , அபியும் நானும் போன்ற பிரமாதமான படங்கள் கொடுத்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியா இப்படி ஒரு படம் கொடுத்திருக்காங்க? என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு சறுக்கல் படமாக இப்போது வழக்கொழிந்த கவுரவக்கொலையை பேஸ் பண்ணி எடுத்திருக்காங்க. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழியை பொய்யாக்கி திரைக்கதையில் தடுமாறி இருக்கும் ராதாமோகன் ( வசனங்களில் மட்டும் இன்னும் அதே கம்பீரம் காட்டுவது படத்துக்கு பெரிய பலம். 

ஹீரோ ரோட்டில் கார்ல போறார். எதேச்சையா அவர் ஸ்கூல் மேட் ஒருத்தரோட ஊர் கண்ல பட அவரைப்பார்க்கலாம்னு ஊருக்குள்ளே வண்டியை விடறார். அங்கே அவரோட நண்பர் ஆளைக்காணோம்.ஏதோ லவ் மேட்டர். ஆள் எஸ். அந்த ஊர் டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஆள்ங்க குடி இருக்க வேண்டிய ஜாதி வெறி பிடிச்ச ஊர். கவுரவக்கொலைகள் , கலவரங்கள் நடக்கும் ஊர்.அப்பேர்ப்பட்ட ஊரில் காணாமப்போன நண்பனை எப்படி தேடிக்கண்டுபிடிக்கறாங்க என்பதே மிச்ச மீதிக்கதை 


இது ஒரு தெலுங்குப்படமோ என எண்ணும் அளவுக்கு ஏகப்ப்ட்ட ஆந்தரா வாசனை படம் முழுக்க. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனாவின் தம்பி அல்லு சிரிஷ் தான் ஹீரோ . இதயத்தை திருடாதே நாகார்ஜூன் மாதிரி அவருக்கு வாய் ஏன் அப்படி இருக்கு? அண்ணனுக்கு நடிப்பெல்லாம் வர்லை .பக்கத்துல 4 கண் நொங்கு மாதிரி குளு குளுனு ஒரு ஃபிகர் இருந்தும் நரசிம்மராவ் கணக்கா அவர் ஏன் முகத்தை அப்படி வெச்சிருக்காரோ? தேறுவது ரொம்ப கஷ்டம் . ஒரு வேளை ஆந்திராவில் பாஸ் மார்க் வாங்கலாம் .

 


ஹீரோயின் யாமினி கவுதம் . வெய்யிலில் நின்னு காய்ஞ்சு போன தமனாவின் சாயலில் , மாநிற தேவதையாய்   அவர் முகம். படம் முழுக்க துப்பட்டாவை கழுத்து ஒண்ட போட்டிருக்கும் அவரது மேனரிசம் ஐ லைக் இட். ஆனாலும் நோ யூஸ் . பாப்பா பூஸ்ட் குடிக்காமயே வளர்ந்திருச்சு போல . அவர் நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் அழகும் , ஆடை அணிகலன்களில் காட்டும் நேர்த்தியும் அழகு. ராதாமோகனின் பட ஹீரோயின்களுக்கே உரித்தான் கண்ணியம் இதிலும் உண்டு . எதிர்காலம் உண்டு .



பிரகாஷ் ராஜ் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரை முன்னிறுத்தாமல் கதைக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் அவர் வந்து போவது மனசுக்கு ஆறுதல் . அவரது தம்பிகளின் நடிப்பும் கன கச்சிதம் . நாசர் ஏமாற்றவில்லை . ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமாரவேல் இதிலும் நல்ல ரோல் பண்ணி இருக்கார். குட் .


 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஆட்டிசக்குறைபாடுள்ள அந்தப்பையனின் அக்காவாக வரும் ஒரு செம கட்டை பாலுமகேந்திரா பட ஹீரோயின் மாதிரி மிளிர்கிறார். அவரை இன்னும் நல்லா பயன் படுத்தி இருக்கலாம் ( அதாவது படத்துல )


2. ராஜேஸ்வரியின் அண்ணியாக வருபவர் பூ விழி வாசலிலே ஹீரோயின்  கார்த்திகா மாதிரி முகச்சாயலில் , ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றார்.  ஆள் நல்ல உயரம் ( அளந்து பார்த்தியா  ராஸ்கல் ) 


3. ஹீரோவின் நண்பராக வருபவர் நம்ம ட்விட்டர் ஐ ஆம் கார்க்கி போன்ற முகச்சாயலில் , குறும்பில் , டைமிங்க் விட் அடிப்பதில் கலக்குகிறார். சில காட்சிகளில் எங்கேஎ இவரே ஹீரோயினை கரெக்ட் பண்ணிடுவாரோ என பதை பதைக்க வைக்கிறார்,. 



4. ராதாமோகனின் ஆஸ்தான வசனார்த்தா விஜி  பிரமாதமான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


5. பெண்களைக்கவரும் கண்ணியமான வசனங்கள் , ஆங்காங்கே ஒளிப்பதிவு இயற்கைக்காட்சிகளை சுட்டுப்போட்டது , லொக்கேசன் செலக்சன்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தொலைஞ்சு போன ஒரு ஆளை படம் பூரா த்தேடி அலைவது இது வரை தமிழ் சினிமாவில் தோல்வியையே அதிகம் கொடுத்திருக்கு. உதாரணம் - சுஜாதா கதை வசனத்தில் உருவான  ப்ரியா, கரை எல்லாம் செண்பகப்பூ இயக்குநர் சுசி கணேஷின் ஃபைவ் ஸ்டார் .. அப்படி இருக்கும்போது என்ன தைரியத்தில் இந்த கதைக்கருவை தேர்வு செஞ்சீங்க? 


2. படம் போட்டு 2 வது ரீலிலேயே என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. ஆனா படத்தை இழு இழுன்னு இழுக்கும் இயக்குநருக்கோ, படத்தில் ஹீரோவுக்கோ அது தெரியாமல் போனது ஆச்சரியம் 


3. ஜாதிக் கலவரத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று குமரவேல் சொல்லும் போது ஏன் நீ செய்து கொள்ளக் கூடாது என்று சிரிஷ் கேட்குமிடம் சேரனின் பொற்காலம் வடிவேல் சீனை சுட்டு இருக்கிறது 


4. லவ் பண்ணி ஓடும் ஹீரோயின் நகையை ஏன் அண்ணி கிட்டே கழட்டி கொடுக்கனும்? அண்ணிக்கு அதில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணவா? சாரி, அது ஒர்க் அவுட் ஆகலை 


5. நாவல் அல்லது சிறுகதைல ஒரு கேரக்டரை காட்டாமயே அதை தேடுவது ஓக்கெ, ஆனா சினிமான்னு வரும்போது அந்த கேரக்டரை ஆல்ரெடி அறிமுகப்படுத்திடனும் . யார்னே தெரியாத 2 பேரை படம் பூரா தேடிட்டே இருந்தா அலுப்பு வந்துடும் 


6. ஹீரோ சொன்னதும் எல்லா ஃபிரண்ட்சும் வேலையை எல்லாம் விட்டுட்டு கிராமத்துல வந்து செட்டில் ஆகிடறாங்க . அவங்களுக்குனு ஃபேமிலி , சம்சாரம் எல்லாம் கிடையாதா ? பூவாவுக்கு என்ன பண்ணுவாங்க?


7. படத்தோட ஓப்பனிங்க்ல நண்பர்கள் 60 பேர் வந்திருக்காங்கன்னு வசனம் வருது. அவங்களைக்காட்டும்போது 53 பேர் தான் இருக்காங்க. அதே நியூஸ் டி வி ல வரும்போது 50 பேர்னு  சொல்ற மாதிரி சீன் வருது. ஏன் இந்த குழப்பம் ?


 


8. படம் பூரா டென்னிஸ் கோர்ட் டொக்கா வரும் ஹீரோயின் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஒரு பனியன் , ஜீன்ஸ் மட்டும் போட்டு  நமீதா மாதிரி நெஞ்சை நிமிர்த்தி வருவது எப்படி? நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன் , ஹி ஹி 


9.காணாமப்போன சண்முகம்23 ந்தேதி எழுதுன லெட்டர் சென்னையிலிருந்து அவர் கிராமத்துக்கு 24 ந்தேதியே வருவது எப்படி?  25 தானே வரும்? இப்போ சென்னை ல இருந்து போஸ்ட் செய்யப்படும் லெட்டர் அடுத்த நாள் காலைல ஈரோடு வருது . அது பிரிக்கப்பட்டு அடுத்த நாள் தான் சென்னிமலை வருது . இதே மாதிரி தானே எல்லா கிராமங்களுக்கும் இருக்கும் ?


10. கோர்ட் ல ஜட்ஜ் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு ஆள் அத்து மீறி கோர்ட் உள்ளே வந்து கலாட்டா பண்ணும்போது யாருமே தடுத்து நிறுத்தலையே?



11. காதலை எதிர்க்கும் ஒரு குடும்பத்தில் உள்ள ரவுடி  லவ்வர்சை கொலை செய்து ஒரே குழியில் புதைப்பது எப்படி? ஜாதி வெறி உள்ளவன் தனித்தனி குழியில் தானே புதைக்கனும்?


12. பொதுவா ஜாதி வெறியில் கொலை செய்வது , செஞ்ச உடனே தீ வெச்சுத்தான் கொளுத்துவாங்க . அப்போதான் ஆதாரம் அதிகமா சிக்காது ( என கொலையாளிங்க நினைப்பாங்க ) ஆனா புதைச்சு மாட்டிக்குவது எப்படி?


13.  அந்த கிராமத்துக்கு மீடியா வந்து கூடுவது நம்பும்படி இல்லை . அதே போல் புரட்சிப்பாட்டு எடுபடலை . செயற்கை


14. மகள் ஓடிப்போய்ட்டா என்னும்போதே கல்லுளி மங்கன் போல் இருக்கும் அப்பா மகன் ஜெயிலுக்குப்போய்ட்டான் என்பதற்காக  தற்கொலை செய்வது எப்படி?


15 . படத்தில் வரும் எல்லா கிராமத்து கேரக்டர்களுமே  அதி புத்திசாலித்தனாமாய் வசனம் பேசுவது எப்படி? 






 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஃபாரீன்காரன் மளிகைச்சாமான் விற்கக்கூட இந்தியா தான் வர்றான் , ஆனா  நாம ஏன் அங்கே போகனும்?


2. நீ வந்த ஃபிளைட்ல ஏதாவது ஃபிகர் இருக்கா?

 நான் வந்தது ஏர் இந்தியாவுல . 50 வயசுப்பாட்டிதான் இருந்தது




3. இப்படியே விட்டா நம்மாளுங்க எலெக்சனுக்காக தொகுதி எம் எல் ஏவையே கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க


4. அவனுக்கு ஊர் இல்லாம போச்சு , எனக்கு பிள்ளை இல்லாம போச்சு



5. சன்முகம் எந்த தப்பும் செய்யலை, ஆனா கீழ் ஜாதில பொறந்ததே  தப்புதான்


6. இயற்கையை விட்டு மனிதன் எப்போ விலக ஆரம்பிச்சானோ  அப்பவே அழிவு ஸ்டார்ட்  ஆகிடுச்சுன்னு அர்த்தம் . உயிரினங்கள்லயே செப்பல் போட்டுட்டு நடப்பது மனிதன் மட்டும் தான்


7. ஆறு மணீக்கு மேல சந்திரமுகி வருமா? குஷ்பூவுக்குத்தான் கோயில் கட்னாங்க , ஜோதிகாவுக்குமா? சந்திரமுகிக்கப்புறம் காஞ்சனா எல்லாம் வந்துட்டுப்போயிடுச்சே?


8. நாங்க பொறக்கும்போது இருக்கும் கஷ்டம் எங்க பொணத்துக்கும் இருக்கும்


9.  சென்னைக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. என்னை யாரும் என்ன ஜாதின்னு கேட்டதே இல்லை. என்னைப்பொறுத்தவரை சென்னை தான்  எனக்கு எல்லாமே , என் அன்னை கூட அதுக்குப்பின்னால தான்


10. சென்னைல மட்டும் தான் கிழிஞ்சதும் ஃபேஷனு , கிழிச்சதும் ஃபேஷனும் ( கிழி கிழி - கலா மாஸ்டர்)


11. காணாமப்போனவனைத்தேடலாம், ஆனா ஓடிப்போனவனைத்தேடுனா ஓடிட்டே தான் இருக்கனும்


12, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கவுரவம் இருக்கும். சொத்து சேர்ப்பது மாதிரி அதை சேர்த்து வெச்சிருப்பாங்க


13. ஒரு பொண்ணு குடும்பத்துல இருக்கும் வரை தான் மரியாதை . ஓடிப்போய்ட்டா முடி - மயிர் மாதிரிதான்


14.  அடேங்கப்பா , ஒரு விதவைத்தாய் மட்டும் இந்த கேங்க் ல இருந்தா பி வாசு படம் மாதிரி ஆகி இருக்கும்



15. அடிமைகள் எல்லாம் சேர்ந்து  கொண்டாடுவதா சுதந்திரம்


16. நாம முதன் முதலா பார்க்கும்போது மாட்டுடன் இருந்துச்சே அதான் அவங்க எனகு மாட்டுப்பொண்ணு ஹி ஹி


17.  மேடம், ஒரு டவுட்டு , லாயர் ஆகனும்னா இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி வெச்சா போதுமா? இல்லை படிச்சே ஆகனுமா?

 

18.  இவ்ளவ் பிரச்சனை உள்ள ஊர்ல உங்கப்பா டைம் டேபிள் போட்டு லவ் பண்ணி இருக்காரு


19. அந்த பாட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

 உன் ஃபேஸ் புக் ஃபிரண்டா இருக்கும் 


20. என்னது அவ உனக்கு பிரில்லியன் கேர்ளா? வேணாண்டா. நாமளே ஒருத்தனை தேடி இங்கே வந்திருக்கோம், இப்டி பண்ணினா உன்னைத்தேடி நாங்க டெண்ட் அடிக்க வேண்டி வரும்


21. நானும் இதே ஊர்ல தான் இருக்கேன். இந்த தகவல்கள் எல்லாம் எனக்குத்தெரியலையே?


 மேடம், உங்களுக்கு வேலை வெட்டி இருக்கும்


22.  நான் மீன் சாப்பிட்டதே முதல் மரியாதைல  சிவாஜியைப்பார்த்துத்தான் . ஆட்டுக்கறி சாப்டதே ராஜ் கிரனைப்பார்த்துத்தான் ( நல்ல வேலை , முதல் இரவு கொண்டாடுனதே வாலி படத்துல அஜித் - சிம்ரனைப்பார்த்துத்தான்ன்னு சொல்லலை )


23. காதல் தோன்றுவதற்கும் , மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும்னு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு  ( கர்ப்பமான காரணங்கள் தான் நிறைய ஹி ஹி )


24.  என்னடா சப்பாத்தி கருகிடுச்சு?

 சப்பாத்தி வேகுவதற்கும், கருகுவதற்கும் அற்பமான காரணங்களே போதும் ( கலாய்ச்சுட்டாராம் )


25.  அவன் மெயில் ஐ டி கண்டு பிடிச்சு எப்டியாவது பாஸ்வோர்டை கண்டு பிடிக்கனும்

 யூ மீன் ஹாக்கிங்க்

 யா

  இங்கே பக்கத்துல ஜெயில் எங்கே இருக்கு?

 ஏன்?

 நானே போய் அங்கே அட்மிட் ஆகிக்கறேன்


26. சினிமால கூட நான் அப்பப்ப ஆக்ட் பண்ணி இருக்கேன்

 நடு நிசி நாய்கள் ல 4 நாய்கள் வருமே அதுல ஒரு நாய் இவன் தான் ஹி ஹி


27. நாட்ல மீடியாக்கள் இருக்கும் அளவு பர பரப்புச்செய்திகள் இல்லை. அவனவன் பேயா அலைஞ்சுட்டு இருக்கான்


28. சார், ஆல்ரெடி பாதுகாப்பு கொடுத்தாச்சு  இன்னும் என்ன பண்ன? போலீஸ் ஸ்டேஷனையே பெயர்த்து எடுத்து வெச்சாத்தான் உண்டு


29. கோயிலுக்கு போய்ட்டு வர்ற கேப்ல எல்லாம் வில்லன் வந்துட்டுப்போறான்?

 மங்காத்தா படத்தை விட இதுல வில்லன்க அதிகம்


30. செத்தாதான் அழனும், கொன்னா கோபம் தான் வரனும்


31. இந்த ஊர்ல 4 திசைகளிலும் சுடுகாடு இருக்குன்னு சொன்னாங்க, ஆனா ஊரே சுடுகாடாத்தான் இருக்கு


32.  நீ அவளை கொல்லனும்னு கொல்லலை. ஆனா நான் சாகாம செத்துட்டு இருக்கேன்


33. ஒரு குழந்தையைக்கொல்லவா இன்னொரு குழந்தையை பெத்தேன்?


34. உங்க மானம் போச்சுன்னு நினைச்சா நீங்க செத்திருக்கனும். அவளைக்கொன்னிருக்கக்கூடாது  





ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க்  -   2.5 / 5


 சி. பி கமெண்ட் - ராதா மோகன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம் . மற்றபடி தியேட்டரில் படம் பார்க்க பொறுமை வேணும் . பொறுமை எருமையை விட பெருசு.. 



டிஸ்கி - ராதா மோகன் படம் பூரா ஹீரோயினை கண்ணியமாத்தானே காட்டி இருந்தாரு , எப்டி ஸ்டில்ஸ் எல்லாம் கிளாமரா இருக்கு?ன்னு யாரும் கேட்காதீங்க. அட்ரா சக்க வுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு ,. அதை மெயிண்ட்டெயின் பண்ண வேணாமா? ஹி ஹி


உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/04/nh4.html

சுஜாதாவுக்குப் பிறகு சுஜாதாவைப் போல் சுவாரசியமாக எழுதும் ஒரே ஆள் சாருவா? என்ன கொடுமை சார் இது?

Photo
1. சுஜாதாவுக்குப் பிறகு சுஜாதாவைப் போல் சுவாரசியமாக எழுதும் ஒரே ஆள் சாரு தானாம். யார் சொன்னா? சாருவே தான் சொன்னாரு # ஹி ஹி



--------------------------


2. 100 கோடி க்ராஸ் பண்ணியே ஆகனும்.நமக்கு இது கவுரவப்பிரச்சனை. 



ரஜினி - நான் 1 கோடி வசூல் பண்ணினா 100 கோடி வசூல் பண்ண மாதிரினு சமாளிச்சடலாமா?


------------------------------


3. ஸாரி டியர் ! சொரணை கெட்டவன் தான் வீட்டோட மாப்ளையா இருப்பான் . 



சரி.உங்களுக்கு என்ன? இருந்துட்டுப்போங்களேன் 


------------------------


4.  விரைவில் திருமணம் நடக்க இருக்கும் மாப்ளை ராஜா சினிமா எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?



 நான் கூஜா ஆகப்போகிறேன் ;-)



----------------------



5. ஆஃபீஸ்ல  ஒரு ஸ்டெனோ கிட்டே  சேலை பிரமாதம்னு ஆளாளுக்கு புகழ்ந்துட்டு இருந்தாங்க.நான் போய் அய்யய்யே நல்லாவே இல்லைனு குழப்பிவிட்டுட்டு வந்துட்டேன் # யாரு கிட்டே



--------------------------


Photo



6. ஆபீஸ் ல மீட்டிங் நடக்கும்போது கடைசி சீட்டுக்குப்போயிடனும்.எல்லாரும் டேமேஜரை பார்த்துட்டு இருக்கும்போது ஜாலியா நாம சைட் அடிச்சுக்கலாம்



---------------------


7. ஜில் ஜில் ஜில் மனஜில் ஒரு ஜல் ஜல் ஜல் காஜல்.


--------------------


8. பிரம்மச்சாரி உழவர் சந்தை போனா வெண்டைக்காயை தடவிப்பார்த்து வாங்குவான் # லேடீஸ் பிங்கர்


----------------------


9. ராதா மோகன் - என் படத்துல எல்லாரும் நல்லவங்கதான். பிரகாஷ்ராஜ் - ஆனா உங்க படம் எல்லாமே நல்ல படம்னு சொல்லிட முடியாது # கவுரவம்


---------------------


10. பூமிக்கு பாரமா இருந்தாலும் பூமிகா மாதிரி இருக்கும் ஃபிகருக்கு தூரமா இராதே


-----------------------



Photo

11. கல்யாண மண்டபத்தில் கூடி இருக்கும் பெண்களில் 95% பேர் பேர் & லவ்லி போட்டிருப்பதால் அவர்கள் தங்கள் தனித்துவ வாசத்தை இழக்கிறார்கள்


-----------------------


12. இன்று பூமி தினம்.பூமிகா மாதிரி பிகர் தான் வேணும் என அடம் பிடிக்காமல் கிடைச்ச பிகரை மடக்கி கடலை போடவும்.எல்லா நாளும் இனியா நாளே.


-----------------------


13. எதுக்காக நர்சோட இடுப்பைக்கிள்ளுனே?



டாக்டர்.பசி வயித்தைக்கிள்ளுச்சு.ஒரு செயின் ரி ஆக்ஷன் ல.ஹி ஹி



--------------------------


14. பிள்ளைப் பிடிக்குறவனுக்கு புன்னை மரத்தடியில் என்ன வேலை...?


புள்ளையை அந்த மரத்தடிக்கு வரச்சொல்லி இருப்பான்



----------------------


15. டியர்.சாம்பார் காரம் ஜாஸ்தியா இருக்கே.ஏன்?



 காரம் அதிகமா வெச்சா தண்ணி அதிகம் குடிப்பீங்க.நைட் அடிக்கடி எந்திரிப்பீங்க.


---------------------


 


16. இளைய தளபதி ரசிகைகளுக்கு பிடிச்ச ஊரு.ஆனா மத்தவங்க உச்சரிச்சா மட்டும் பிடிக்காது அது என்ன ஊர் ?



 விஜய வாடா


-------------------------


17. தனிமனித ஒழுக்கம் னா தனியா இருக்கும்போது ஒழுக்கமா இருப்பதா ?;-))


-----------------------


18. தியேட்டர்ல எல்லாரும் ஜோடி ஜோடியாத்தான் வந்திருக்காங்க.அது எப்டி எல்லாருக்கும் 1 சிக்கிடுது ?;-))


-----------------------


19. இந்த கொடுமையான வெய்யில்ல ஒரு பிகரு லவ்வரோட கோட் சூட் ல வந்திருக்கு.தியேட்டருக்குள்ளே வந்ததும் ட்ரெஸ் மாத்திக்கும் போல # ஐ ஆம் வெயிட்டிங்


----------------------


20. லெக்கின்ஸ் என்பது ரம்பா மாதிரி தை (thigh) ஸ்பெஷலிஸ்ட்களுக்காண முழு நீள சாக்ஸ்



---------------------------------



விசயகாந்த் கைப்போல?
Photo: விசயகாந்த் கைப்போல?


டி வி டுடே



டி வி டுடே