Wednesday, April 10, 2013

எலந்த பயம் ,கலாசலா கலசலா -எல்.ஆர். ஈஸ்வரி பேட்டி @ கல்கி

 

கலகல தொடர் - 1

காதோடு நான் பேசுவேன்...

எல் ஆர் ஈஸ்வரி

இசையுலகில் பொன் விழா கண்ட பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரி. அதுஎலந்த பயம்ஆகட்டும், ‘கலாசலா கலசலாஆகட்டும்... அவரது தங்கக் குரல் சும்மா 916 கேட்மியமாக மினுக்கும்! அவரைச் சந்தித்து உரையாட, எஸ்.எஸ். ஜெயின் கல்லூரிப் பெண்கள் பூஜா, மீனா, வினு ஆகியோர் ஏகத்துக்கும் ஆர்வம் காட்டவே, இனியதோர் சந்திப்பு நிகழ்ந்தது.
வாங்க செல்லங்களா!" தமக்கே உரிய கணீர்க் குரலில் வரவேற்றார் எல்.ஆர். ஈஸ்வரி.
மேம்... வி கான்ட் பீலிவ் இட்!"
உங்களோட பூந்தமல்லிதான் பாட்டு. சான்ஸே இல்ல! சூப்பர் மேம்!"
கொட்டோ கொட்டென்று கொட்டிய பாராட்டு மழையில், இலேசாக நனைந்து மகிழ்ந்தார் எல்.ஆர். ஈஸ்வரி.
பூஜா: உங்க சொந்த ஊர் எது மேம்?
என்னோட அம்மா வழித் தாத்தாவுக்குச் சொந்த ஊர் பரமக்குடின்னாலும், அப்பாவோட சொந்த ஊர் சென்னை தான். நான் பிறந்து, வளர்ந்து சினிமாவுக்குள் நுழைந்து பேரும் புகழும் பெற்றது எல்லாமே இந்த சென்னை மாநகரத்திலேதான். அப்ப நாங்க புதுப்பேட்டை பகுதியில்தான் வசித்து வந்தோம்.
மீனா: உங்க ஃபேமிலி பத்திச் சொல்லுங்க...

ரொம்பச் சாதாரண குடும்பம்மா. அம்மா ரெஜினா மேரி நிர்மலா. அப்பா ஆண்டனி தேவராஜ். அவர் ஸ்பென்சர்ஸ் அண்ட் கம்பெனியில் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரிந்த ஒரு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் சைக்களில் ஆபீஸுக்குப் போய்விட்டு வருவார் என்கிற வரையில் எனக்கு ஞாபகமிருக்கிறது. வேறு எதுவும் நினைவில் இல்லை. காரணம் என்னுடைய ஆறாவது வயதிலேயே அவர் இறந்து விட்டார். அவர் ரொம்ப நாட்கள் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவருடைய உடம்புக்கு என்ன என்பது கூட எனக்குத் தெரியாது. நினைவில்லை. அவருக்கு ஏழெட்டு ஆபரேஷன்கள் நடந்தன என்றும், டாக்டர் பொம்மையா என்பவர்தான் அவருக்குச் சிகிச்சை அளித்தார்னும் நினைவிருக்கு. அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக என் அம்மா நிறைய செலவு செய்ய வேண்டியிருந்ததாம். வீட்டில் இருக்கும் நகைகளை எல்லாம் வைத்துப் பணம் வாங்கி, அவருக்குச் செலவு செய்ததாக என் அம்மா சொல்வாங்க. அவர் எங்களை விட்டுப் பிரிந்த போது, கடைசியில் என் அம்மாவின் கழுத்தில் மிஞ்சியது ஒரு தாலிக்கயிறு மட்டுமே. எங்கள் சக்திக்கு மீறி, ஏராளமாகச் செலவு செய்தும், அப்பாவைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதேனு அம்மா பல நாள் மனம் வருந்தியதுண்டு. அப்போ எங்க சொந்தக்காரங்க யாரும் உதவ முன்வரலை.
வினு: உங்கக் குடும்பத்துல எத்தனை பேர்?

நான்தான் மூத்த பெண். எனக்கு ஒரு தம்பி. அவர் பெயர் அமல்ராஜ். அடுத்தது ஒரு தங்கை. அவளுக்கு அஞ்சலி என்று பேர். எங்க அப்பா இறந்தபோது என் தம்பிக்கு ஐந்து வயது. என் தங்கைக்கு இரண்டு வயது. நான் எழும்பூரில் இருக்கும் பிரசிடென்ஸி பெண்கள் பள்ளிக்கூடத்துலதான் படிச்சேன். என் தம்பி சிந்தாதிரிப் பேட்டை ஸ்கூலில் படித்தான். எங்கள் அப்பாவின் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்ப வருமானத்துக்குக் கைகொடுத்தது என் அம்மாவின் குரல்வளம்தான்.
பூஜா: , உங்க அம்மாவும் பாடகியா?
எங்க அம்மாவும் ரொம்ப நன்றாகப் பாடுவார். எங்க அப்பா, நோய்வாய்ப்பட்டிருந்தபோது, என் அம்மா, சினிமாவில் பாட வாய்ப்புக் கிடைச்சா அதன் மூலமாகக் கிடைக்கும் வருமானம், குடும்பத்தை நடத்தவும், அப்பாவின் மருத்துவச் செலவுக்கும் உபயோகமாக இருக்கும்னு நினைச்சாங்க. எங்க அப்பாவும் அதற்குச் சம்மதித்தார்.
அப்போ ஜெமினி நிறுவனம் சினிமாவில் மிகப் பிரபலமாக விளங்கியது. அப்போதான்சந்திரலேகாபடத்தை பிரம்மாண்டமான முறையில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். என் அம்மா, தன்னுடைய பாட்டுத் திறமையைப் பற்றியும், எங்கள் குடும்பச் சூழ்நிலையையும் விளக்கி, ஜெமினி நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினாங்க. அம்மாவுக்கு கோரஸ் பாடகி வாய்ப்பு கிடைத்தது.
வினு: நீங்களும் சின்ன வயசுல நல்லாப் பாடுவீங்களா?

ஆமாம்மா! இறைவன் அருளால், எங்க அம்மாவைப் போலவே, எனக்கும் நல்ல குரல்வாய்ச்சுது. பள்ளிக்கூடத்துல என்ன ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், என்னைப் பாடச் சொல்வாங்க. ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் போது, ஒரு நிகழ்ச்சிக்கும், இன்னொரு நிகழ்ச்சிக்கும் இடையில் வரும் சில நிமிட இடைவெளியை இட்டு நிரப்ப என் கையில் மைக்கைக் கொடுத்து, மேடை ஏற்றி விடுவாங்க. ஒருநாள் என் சிநேகிதி ஒருத்தி, ஒய்.எம். சி..வில் ஒரு பாட்டுப் போட்டி நடக்கப் போகுது. நீதான் நல்லாப் பாடுவியே! நீயும் அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டுப் பாடேன்"ன்னு சொன்னாள். முதலில் நான் தயங்கினாலும், அவளுடைய வற்புறுத்தலுக்காக சம்மதித்தேன். ஆனால், பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள நாலணா கட்டணம் செலுத்தணும்னு தெரிஞ்சதும், அந்த அளவுக்கெல்லாம் எனக்கு வசதி இல்லை. ஆளை விடு!"னு ஒதுங்கிட்டேன். ஆனால் என் சிநேகிதி விடவில்லை. அந்த நாலணாவை நான் கட்டறேன். நீ கட்டாயமாய் பாட்டுப் போட்டியில கலந்துக்கணும்"னு அன்புக் கட்டளை போட்டு விட்டாள்.
மீனா: அந்த ஃப்ரெண்ட் பேரு என்ன மேடம்?
கே.பானுமதி. நானும் அவளும் என் தங்கை அஞ்சலியையைக் கூட அழைச்சுக்கிட்டு நேரே ஒய்.எம்.சி..வுக்குப் போய்விட்டோம். அங்கே பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள வந்திருந்தாங்க. கூட வந்திருந்தவர்கள் உற்சாகப்படுத்த, அவர்கள் எல்லோரும் பாட்டுப் பாடி, தங்களைப் போட்டிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாங்க. ஆனால், நானோ உள்ளூற நடுங்கிக் கொண்டிருந்தேன். காரணம், அம்மாவிடம் சொல்லாமல், இங்கே வந்து விட்டோமே! வீட்டுக்குப் போனதும் அம்மா என்ன சொல்வாங்களோங்கிற பயம்தான். ஒவ்வொருவராக அழைத்தார்கள். அவர்கள் பாடிவிட்டு இறங்கும் போது, எல்லோரும் கைதட்டினார்கள். என் பெயரைக் கூப்பிட்டவுடன், இலேசான நடுக்கத்தோடு மேடை ஏறினாலும், மைக்கைப் பிடித்தவுடன், என் பயம் காணாமல் போனது.

பூஜா: முதல் போட்டியில என்ன பாட்டு பாடினீங்க மேடம்?
நீ கேலனான்ற கீர்த்தனை பாடினேன்.
மீனா: அப்புறம் என்னாச்சு?
போட்டி முடிஞ்சு ஒய்.எம்.சி..விலிருந்து புறப்பட்டபோது இரவு ஏழுமணிக்கு மேலாயிடுச்சு. என் சிநேகிதியை வீட்டுக்கு அழைத்துக்கிட்டுப் போக வந்திருந்த அவளோட அம்மா, எங்களை பஸ் ஏற்றி விட்டார். வழக்கமா ஸ்கூல் விட்டு நாலரை மணிக்கு வந்துவிடுகிற நாங்கள், அன்றைக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, மணி எட்டரை. எங்களைப் பார்த்ததும் என் அம்மாவின் கோபம் உச்சத்துக்குப் போனது. எங்கேடி போயிருந்தே? ஏன் இவ்ளோ லேட்?"னு கேட்டு, என்னை அடிக்க ஆரம்பித்தார். என்னை எதுவுமே பேச விடவில்லை. அடி என்றால் அடி, அப்படி பின்னி எடுத்துட்டாங்க. அடிவாங்கின களைப்பில் அப்படியே தூங்கிப் போயிட்டேன்."
க்விக் டேக்!

* உங்க இயற்பெயர் என்ன? லூர்து மேரி ராஜேஸ்வரி
* பாடிய முதல் பக்திப்பாடல்? குன்னக்குடி இசையில்உலகாளும் உமையவளே!’
* இதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கீங்க? தெரியாது. எண்ணுவதில்லை.
* லேட்டஸ்ட் ஹிட்? பூந்தமல்லிதான்; நான் புஷ்பவல்லிதான்.
* உங்கள் மேடைக் கச்சேரிகளில் நேயர்களால் அதிகமாகக் கேட்கப்படும் விருப்பப்பாடல்? பெரும்பாலும் பக்திப்பாடல்கள்தான்! திரை இசைன்னா, எலந்தப்பழமும்கலாசலா கலசலாவும்!
* ஜெயலலிதாவுக்குப் பாடிய முதல் பாடல்?நீ என்பதென்ன... நான் என்பதென்ன?’ (வெண்ணிற ஆடை)
* இஷ்டதெய்வம்? வேளாங்கன்னி மாதா
* பிடித்த ராகம்? சண்முகப்ரியா, ‘வாராய் என் தோழிஅமைந்தது அதில்தான்.
* பிடித்த உணவு? மீன் வகையில் எல்லாமே!
(கல கலப்போம்...)

 

ஒரு ஸ்கூல் மாஸ்டரின் காமெடி அனுபவங்கள்

1. என்னடா? பரீட்சைல இப்படி 1 மார்க் , 2 மார்க்னு சிங்கிள் டிஜிட்ல மார்க் வாங்கி இருக்கே?

 கவர்மெண்ட் பாலிசியை இதுலயும்  கடைப்பிடிக்கறேன் சார். ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம், இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்




----------------------



2. என்னடா ஜீரோ மார்க் வாங்கி இருக்கே?


 அது ஜீரோ இல்லைப்பா . நான் நல்லா படிக்கறேன்னு வாத்தியார் எனக்கு ஓ போட்டிருக்கார்




-----------------------------


3.  சரி, அது போகட்டும் , இங்க்லீஷ் பரீட்சைல ஏன் ஃபெயில் ஆனே?


 நான் தமிழ்ப்பற்று மிக்கவன் என்பதை எப்படி நிரூபிப்பது?




------------------


4.  என்ன சார்? உங்க பையனுக்கு தயிர் ராஜ்னு பேர் வெச்சிருக்கீங்க?


 பால்ராஜ் தாங்க வெச்ச பேரு , ஊரெல்லாம் திரிஞ்சு கெட்டுட்டான்


-----------------------


5.  நானும் உங்களை மாதிரி ஒரு ஸ்டூடண்ட்டா இதே ஸ்கூல்ல படிச்சவன் தான், இன்னைக்கு இதே ஸ்கூல்ல வாத்தியாரா வந்திருக்கேன், இதுல இருந்து என்ன தெரியுது?


இந்த ஸ்கூல்ல படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதுன்னு தெரியுது சார்




------------------



6. நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது கேப்டன் விஜயாந்த்தா? என்னடா சொல்றே?


 புதிய சரித்திரம் படைப்போம்னு சொன்னீங்களே?



-------------------------



7.  தமிழ் இலக்கணத்துல ஒரு கேள்வி , நேர்மா , நிரைமா, புளிமா அடுத்து என்ன?


 நக்மா சார்



--------------------------


8.  தமிழ் இலக்கிய பாடத்துல சூர்யா - த்ரிஷா பற்றி  பக்கம் பக்கமா எழுதி வெச்சிருக்கியே?



 ஆறு தன் வரலாறு கூறுதல்  இதுதான் கட்டுரைத்தலைப்பு ,ஆறு பட ஹீரோ - ஹீரோயின் அவங்க தானே?




---------------------------


9. எட்டாங்கிளாஸ் படிக்கும்போது சித்ராவை லவ்  பண்ணே , 10 ங்கிளாஸ் படிக்கும்போது மோகனாவை லவ் பண்றியே ஏன்?


 நீங்க மட்டும் தான்  பாட சிலபஸை மாத்துவீங்களா? நாங்க லவ் சிலபசை மாத்தக்கூடாதா?


---------------------------


10. உங்க பையனுக்கு எத்தனை தடவை திருப்பி திருப்பிச்சொன்னாலும் புரியவே மாட்டேங்குதே ஏன்?

 நீங்க ஏன் சார் திருப்பி திருப்பி சொல்றீங்க ? நேரா சொல்லிக்குடுங்க




----------------------------


11. ஸ்கூல் டீச்சர் மேரேஜுக்கு லேட்டா போனது தப்பா போச்சு


 ஏன்?

 மண்டப வாசல்ல முட்டி போட வெச்சுட்டாங்க




-------------------------



12. ராமாயணத்துல  மொத்தம் எத்தனை காண்டம் இருக்கு?

 கிட்டத்தட்ட  ஒண்ணே கால் லட்சம் காண்டம் சார்


 என்ன உளர்றே?


 தசரத சக்ரவர்த்திக்கு  60,000 மனைவிகள் , ஆவரேஜா கணக்குப்பார்த்தா  60,000 * 2 = 1, 20,000 ஆச்சே



----------------------------------


13.  சீதை ராமன் கூடவே காட்டுக்குச்சென்றாள் - இதுல இருந்து என்ன தெரியுது?


 அந்தக்காலத்துல கூட பொண்ட்டாட்டிங்க புருஷன் மேல சந்தேகப்பட்டுட்டே இருந்திருக்காங்க , புருஷன் எங்கே போனாலும் ஃபாலோ பண்றாங்க  அப்டினு தெரியுது சார்


----------------------


14.  சார் , பூங்கொடி 65 % மார்க் வாங்கி இருக்கா, இதுல ஏதோ ஊழல் நடந்திருக்கு


எப்டி சொல்றே?


 பெண்களுக்கு 33 % தானே?



----------------------------------


15.  பாட்டனி பரீட்சைல  எதுக்காக பொண்ணோட  ஃபோட்டோவை ஒட்டி இது தலை , இது கை-னு நோட்ஸ் எழுதி வெச்சிருக்கே?


 ரோஜாவின் படம் வரைந்து பாகங்களைக்குறின்னு கேள்வி




---------------------------


16. மத்தியப்பிரதேசம் - சிறு குறிப்பு வரைக


 போங்க மிஸ் , எனக்கு வெட்கமா இருக்கு ..




---------------------------


17. உலகம் சுத்துதுங்கற உண்மையை யார் முதல்ல கண்டு பிடிச்சது? கலிலியோவா? நியூட்டனா?


 தண்ணி அடிச்ச மப்புல தான் யாரோ கண்டு பிடிச்சிருக்கனும்


------------------


18. ராமன் ராவனனைக்கொன்றான் - இது செய்வினையா? செயப்பாட்டு வினையா?


 இது ராவனணோட தீவினை சார்



-------------------------


19.  அவனுக்கு ஏன் மார்க்கண்டேயன்னு பேர் வெச்சிருக்காங்க?

 லேடீஸ் கூட பேசும்போது அவங்க முகத்தைப்பார்த்துப்பேசாம  முகத்துக்கு கீழே பார்த்து பேசி இருக்கான்




------------------------------


20.  பரீட்சைல எல்லா கேள்விக்கும் சரியா பதில் சொல்லி இருக்கே , இதுக்கு உன் விடா முயற்சி காரணமா?  சொல்லிக்குடுத்த வாத்தியார் காரணமா?


 2ம் இல்லை சார் , எக்சாம் ஹால்ல  கோனார் நோட்ஸ் கொடுத்த கந்த சாமி தான் காரணம்



-------------------------


21. மஹா பாரதக்கதைல இருந்து நாம் தெரிஞ்சுக்கிட்ட நீதி என்ன?


 சூதாட கிளப்புக்குப்போகும்போது  மனைவியை வீட்லயே விட்டுட்டு போகனும், கூட கூட்டிட்டுப்போனா அவளை இழக்க வேண்டி வரும்



------------------------------


22. பரீட்சைல ஏன் அவன் பாதிலயே எழுந்துட்டான்?


 அது அரைப்பரீட்சை ஆச்சே?


--------------------


23. ஏன் கடைசி பெஞ்ச்ல உக்காந்திருக்கே?


 முதல் பெஞ்ச்ல உக்காந்தா மட்டும் பாடம் புரிஞ்சுடவா போகுது?



---------------------------------


24.  உயிர் உள்ளவை - உதாரணம் தருக

 ஆடு , மாடு  , எருமை , எலி


உயிர் அற்றவை - உதாரணம் தருக 


 செத்த ஆடு ,  செத்த மாடு  ,  செத்த எருமை ,  செத்த எலி


--------------------


25. ஸ்கூல் டூர் எப்டி இருந்தது?

 பிரமாதம் சார், நாளை மறுபடி அதேஊட்டிக்குப்போறோம்.

 ஏன்?

 அங்கே 2 பசங்களை விட்டுட்டு வந்துட்டோம்




----------------------



26. வல்லினம் , மெல்லினம் , இடையினம் உதாரணம் தருக



 நமீதா , த்ரிஷா , சிம்ரன்



--------------------------


27.  என்னது? நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் க்குக்கும் ஒரு சினிமா நடிகருக்கும் ஒற்றுமை இருக்கா? எப்டி?


 நிலா மேல முதல் முதல்  காலை வெச்சது நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், கையை வெச்சது ( சினிமாவுல ) எஸ் ஜே சூர்யா






-------------------------




28.  கங்கா ! உனக்கு 16 வயசு ஆகிடிச்சு, வாழ்க்கை பற்றி உன் கிட்டே இன்னைக்கு டிஸ்கஸ் பண்னப்போறேன்


 ஓக்கே டாடி கேளுங்க  என்ன என்ன டவுட்ஸ் இருக்கு?






------------------------------


Tuesday, April 09, 2013

நானும் என் ஜமுனாவும் - சினிமா விமர்சனம் 36 +

 

அட்ரா சக்க வில் கில்மாப்பட விமர்சனம் போட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு . உடனே மாமாங்கம்னா 12 வருஷம் , அட்ரா சக்க ஆரம்பிச்சே  3 வருஷம்  கூட இன்னும் முடியலையேன்னு  லாஜிக் கொஸ்டீன்ஸ் எல்லாம் கேட்கக்கூடாது . ஒரு பேச்சுக்கு சொல்றதுதான். இப்பவெல்லாம் முன்னே மாதிரி கில்மாப்படங்கள் அதிகம் ரிலிஸ் ஆகறதில்லை . காரணம் அவனவன் நெட்ல , செல் ஃபோன் ல மெயின் பிக்சரையே பார்த்துடறான்.  சீன் இருக்குமா? இருக்காதா? அப்டிங்கற சஸ்பென்ஸ் அவனுக்கு பிடிக்கறதில்லை .


 சீன் படம் பார்க்கறவங்களை கேவலமா பார்க்கும் கூட்டத்துக்கு 1 சொல்றேன். அது என்னா சைக்காலஜின்னா  எங்க எண்ணம் , கவனம் , ஆர்வம் சீன் பார்ப்பதில் இல்லை . சிச்சுவேஷன் எப்படி அமையுது? எப்டி இவனுங்களுக்கு மட்டும் செட் ஆகுது ? நாம கத்துக்க வேண்டியது என்ன? இதை எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் நாங்க சீன் படம் பார்க்கறோம். 


 முன்னுரை போதும் , மேட்டருக்கு வருவோம் . 


ஹீரோயின் ஒரு 55 மார்க் ஃபிகர் . ஆஃபீஸ்ல ஒர்க் பண்றா. ஆஃபீஸ் டேமேஜர்  கை வைக்கப்பார்க்கறான். ரிசைன் பண்ணிடறா. அவளுக்கு 2 தங்கச்சிங்க . ( கில்மாப்படங்கள் ல எப்பவும் ஹீரோயினுக்கு அட்லீஸ்ட் ஒரு தங்கச்சியோ , அக்காவோ இருக்கும் ,  2 மணி நேரம் ஒரே முகத்தை எவன் பார்ப்பான்? )





ஹீரோயினோட அப்பா ஒர்க் பண்ற ஆஃபீஸ் ஓனர்  ஒரு வேலையா ஹீரோயின்  இருக்கும்போது  வீட்டுக்கு வர்றாரு. அங்கே ஓனர் அவ அழகுல மயங்கி  அவளோட அப்பா கிட்டே பேரம் பேசறார் . அதாவது மத்த பொண்ணுங்க 2 பேருக்கும் , இவருக்கும் தலா 7 லட்சம் பேங்க்ல டெபாசிட் பண்ணிடறேன் , இவளை அதாவது முத பொண்ணான ஹீரோயினை  அவருக்கே கல்யாணம் கட்டி வைக்கனும்கறார்



 அந்த மொக்கை ஃபிகர் 5000 ரூபாய்க்கே ஒர்த் இல்லை . 21 லட்சம் கொடுக்கறாராம் , அடேய் .  இந்த இடத்துல விமர்சனத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தகவல் சொல்றேன் ஈரோடு நகரில் நடிகை மாளவிகா ஒரு ஜவுளிக்கடைத்திறப்பு விழாவுக்கு வந்தப்போ அவருக்கு ஜஸ்ட் 2 லட்சம் மட்டும் தான் கொடுத்தாங்க . ”திறப்பு விழா” வெற்றிகரமா முடிஞ்சது . ஹய்யோ அய்யோ .

சரி , பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதுக்கு ?  அப்பா ஓக்கே சொல்றாரு , ஹீரோயினும் ஓக்கே சொல்லிடறா.


 50 வயசு கிழ போல்ட்டான ஓனருக்கும் , வெத்தலைக்கொடி மாதிரி இருக்கும்  28 வயசு ஃபிகருக்கும் மேரேஜ் ஆகுது . அடுத்து ஃபர்ஸ்ட் நைட் . புருஷன் பொண்டாட்டியை கட்டிப்பிடிக்கறான் . அவ உடனே சொக்கிப்போய் கண்ணை மூடறா . அந்த கேனக்கிறுக்கன் அடுத்த கட்டத்துக்குப்போகாம ஓடிப்போய் கேமராவை எடுத்துட்டு வந்து  பொண்டாட்டியை ஃபோட்டோ பிடிக்கறான் . மாடலிங்க் ஃபோட்டோ கிராஃபராம். சுத்தம்


2 பேருக்கும் மேட்டர் நடக்கவே இல்லை , இப்போ ஒரு கிளைக்கதை .அந்த கிழ போல்ட் வீட்டில் ஒரு பையன் 20 வயசு தான் ஆகுது . அங்கேயே வளர்றான் . அவன் எப்டி அங்கே வந்தான் ? சொந்த பந்தம் ஏதும் இல்லை? ஒரு ஃபிளாஸ் பேக் 





அவன் ஸ்கூல்ல படிக்கும்போது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிடறான்.  அவ எல்லாத்துக்கும் ஓக்கே சொல்லிடுறா , மேட்டர் நடக்கும்போது செல் ஃபோன்ல படம் பிடிச்சு வழக்கு எண் 18 /9  ல வர்ற மாதிரி  அவன் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் காட்றான். அது அந்த ஃபிகருக்கு தெரிஞ்சு பெரிய பிரச்சனை ஆகிடுது . அவனை சொந்த பந்தம் , ஊரார் எல்லாரும் சேர்ந்து துரத்துறாங்க . அந்தப்பையனைத்தான் இவர்  ஆதரவு கொடுத்து வளர்த்தறார் . 


சும்மா தண்ணி குடிச்சவனே  அடுத்து இளநீர் குடிக்க ஏங்குவான். ஆல்ரெடி பாயாசமே சாப்டவன் பக்கத்துல பாதாம் கீர் பார்த்தா சும்மா இருப்பானா?  ஹீரோயினை கரெக்ட் பண்ண ட்ரை பண்றான்


 திடீர்னு ஒரு டர்னிங்க் பாயிண்ட் . பெட்ரூமில் அந்தப்பையனும் ஹீரோயினும் கட்டிப்பிடிச்சுட்டு இருக்காங்க . இடை வேளை .

 இயக்குநருக்கு மனசுக்குள்ளே  ஹிட்சாக்னு நினைப்பு . சஸ்பென்ஸாம் . அடேய்


இடைவேளை முடிஞ்சு பார்த்தா  அது அந்தப்பையன் கனவு . பொதுவா இந்த மாதிரி கில்மாப்படத்துல கதைல சீன் இல்லைன்னாலும் யாராவது நினைச்சுப்பார்க்கற மாதிரி மினிமம் ஒரு குளிக்கற சீனாவது இருக்கும் . இதுலயும் இருக்கு


 


புருஷன்காரனுக்கு சந்தேகம், மனைவி அந்தப்பையன் கூட  கில்மா பண்ணி இருப்பாளோன்னு . லூஸ் மாதிரி அடிக்கடி சொல்லி காட்றான் , அடிக்கடி அர்த்த ராத்ரில எந்திரிச்சு  கனவு கண்டேன், நீ அவன் கூட போற மாதிரி அப்டினு பினாத்தறான் 


ஹீரோயின் மனசு ஒடிஞ்சு போயிடறா . நாம  என்னதான் கற்புக்கன்னியா இருந்தாலும் நோ யூஸ்  அப்டினு வாழ்க்கையே விரக்தி ஆகிடுது 

 ஆஃபீஸ் விஷயமா புருஷன் காரன் வெளியூர் போறான். அவனே ஓனர் தான் . போகும்போது பொண்டட்டியையும் கூட்டிட்டே போகறதுதானே ? அந்த கேனயன்  பொண்டாட்டியை விட்டுட்டுப்போறான் . அது கூடத்தேவலை “ அந்தப்பையனை பத்திரமா பார்த்துக்கோ”ன்னு சொல்லிட்டு வேற போறான் . ஹய்யோ அய்யோ 



2 பேருக்கும் மேட்டர் நடந்ததா இல்லையா? அந்த பத்தினி தெய்வம் என்ன செஞ்சா? இந்தப்பன்னாடை என்ன செஞ்சான்? ( 2 பேரும் ஒண்ணைத்தான் செய்வாங்க )  என்பதை வெண் திரையில் காண்க 



ஹீரோயின் நெம்பர் 1 பேரு கோபி ஸ்ரீ . சுமாரா இருக்கு . நடிப்பைப்பற்றி நமக்கு என்ன கவலை? நாம என்ன ஆஸ்கார் கமிட்டில மெம்பராவா இருக்கோம். வந்தமா? காட்ன வரை சீன் பார்த்தோமா? அப்டினு வந்துடறதோட மேட்டர் ஓவர்

 


 இன்னொரு ஹீரோயின் பேரே தெரியலை ( ரொம்ப முக்கியம் )  அதுவும் 40 மார்க் தான் தேறும் 


புருஷனா வரும் பன்னாடை தான் படத்தோட புரடியூசரா இருக்கும். ஏனா ஆள் பார்க்க சகிக்கலை . அவன் எப்டி ஹீரோ ஆகி இருப்பான்? 


 அந்த இளைஞரா வர்ற பையன் மோசம் இல்லை , ஓக்கே 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


 1. மொத்தப்படத்துலயும் ரெண்டே 2 பெண் கேரக்டர்கள் என்றாலும் 2 பேர்ல யாரோ ஒருவர் எப்பவும் ஸ்க்ரீன்ல இருப்பது போல் பார்த்துக்கிட்டது 


2.  குளிக்கும் சீன் 2 , பெட்ரூம் சீன் 3 என கில்மாப்பட ஃபார்முலாப்படி எடுத்தது . பெருசா ஒண்ணும் இல்லைன்னாலும் 50 ரூபாய்க்கு மோசம் இல்லை




 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. புருஷன் வீட்ல இல்லாதப்ப யார்னே தெரியாத ஒரு ஆள் வீட்டு காலிங்க் பெல் அமுத்தி  ஏதோ ஃபைல் வேணும் , அய்யா வாங்கிட்டு வரச்சொன்னார்னா ஒழுக்கமான குடும்பப்பொண்டாட்டி என்ன பண்ணுவா ? புருஷனுக்கு ஃபோனைப்போட்டு என்ன ஃபைல்?னு கேட்பா. இவ பாட்டுக்கு  எக்சிபிசன் கேட்டை திறக்கற மாதிரி திறந்து போட்டுட்டு அவனை உள்ளே விடறா


2. வந்த ஆள் ரொம்ப ஒல்லி. தோராயமா 50 கிலோ தான் இருப்பான், அந்த  ஹீரோயின் 70 கிலோ இருப்பா . அவனுக்குத்தெரியாதா ? நம்மாள அவளை சமாளிக்க முடியாதுன்னு எதுக்கு ரேப் பண்ண ட்ரை பண்றான்? மயக்கமருந்து மூக்குல வெச்சாவது ரேப் பண்ணனும் . அவ ஒரு தள்ளு தள்ளுனதும் போய் விழுந்துட்டான் , அட போங்கப்பா


3.  அந்த பணக்கார புருஷன் 21 லட்சம் தண்டம் கட்டி அந்த கட்டையை கல்யாணம் பண்ணி என்ன செஞ்சான்? ஒரு வெங்காயமும் இல்லை. இவனாலயே முடியலையே< எதுக்கு அவ்ளவ் செலவு? 


4. பஞ்சப்பரதேசி மாதிரி ஒருத்தன் வர்றான் அவன் தான் மன நல மருத்துவராம் , ஒரு டீசண்ட் ஆள் சிக்கலை? 


5. ஆஃபீஸ் ஃபைல் கேட்டு வந்து அட்டெம்ப்ட் ரேப் பண்ணவன்  முடியாம கிள்ம்புனதும் அந்த உத்தம பத்தினி ஒரு தேக்சா நிறையா தண்ணி எடுத்து தலையோட ஊத்திக்கறா , சிம்பாலிக்கா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்?  அவளுக்கு உடம்பு சூடாகிடுச்சுன்னா? அல்லது அசுத்தம் அருவெறுப்பு அப்டின்னா? காட்சியில் தெளிவு இல்லையே? 


6. பணக்காரரான புருஷன் தன் மனைவியை பணத்துக்காக மாடலிங்க் ஆக்குவது எப்படி? லாஜிக் இடிக்குதே? 



7. ஹீரோயினை கடைசி வரை படத்துல ஹீரோவோ , வில்லன்கள் 2 பேரோ ,  அந்தப்பையனோ யாருமே தொட்லை. என்ன கில்மாப்படம் இது?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஏய் .. ம் ம் ம் ச்சீய் 



2. ஜம் ஜம் சாக் சாக் ( பின்னணி இசை ) 




ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு ,மார்க் - டைம் பாஸ் விகடன் ல கூட இந்த மாதிர் பட விமர்சனம் போட மாட்டாங்க


 ரேட்டிங்க்  - 0 / 5  ( அர்த்தம்  5 சிச்சுவேஷன்ஸ் இருந்தும் ஒரு சீன் கூட இல்லை ) 



ஈரோடு  அண்னாவில் படம் பார்த்தேன் . நல்ல வேளை அறிஞர் அண்ணா உயிரோட இல்லை


 a


 டிஸ்கி - டைட்டிலில் இருக்கும் 36 + ஒரு தோராயமா  சொன்னதுதான் . உள்ளே சாராயமா போட்டுட்டு வந்து கமெண்ட் ல தகராறு பண்ணக்கூடாது 

தீபா (deepa) வின் காதல் டீப்பா (deep paa) இருக்குமா?

1. லிஃப்ட் வேலை செய்யலைன்னா மகிழ்ச்சி அடையறவங்க அருகாமையில் அம்சமான பிகர்கள் அமையப்பெற்றவனே



----------------------



2. போதைச்சிரிப்பு = கு பீர்ச்ச்சிரிப்பு



------------------------


3. புதியவர்களுக்கு வாய்ப்புக்குடுப்போம் என எந்த பிகரையும் சைட் அடிக்காமல் விடுவதில்லை



---------------------


4. கட்டப்பஞ்சாயத்து செய்யத்தகுதியானவர்கள் - நமீதா ,ஹன்சிகா ,ஆன்ட்ரியா




-----------------------


5. இன்னைக்கு புதுக்கணக்கு போடும் நாள். புது பிகரை கணக்கு பண்றேன்னு யாரும் கிளம்பிடாதீங்க ;-)



--------------------


6. திருமதி செல்வம் நிலையாக இருக்கும் என மனதினால் கூட நினையக்கூடாது.




--------------------


7. கூட்டத்துல தலைவா வாழ்கனு கோஷம் போட்டா புளகாங்கிதம் அடைஞ்சிடாதீங்க அரசியல் வாதிகளே.அவன் விஜய் ரசிகனாக்கூட இருக்கலாம் # தலை வா




---------------------


8. ஒயிப் fair ரா இல்லைன்னா லைப்பும் FAIR ரா இருக்காதுன்னு மனசை விட்ரக்கூடாது.மச்சினி fair ரா இருக்கே னு மனசை தேத்திக்கனும்



-------------------



9. பிகர் பேரு தீபா (deepa) ன்னு இருக்கறதால உன்னை டீப்பா (deep paa) லவ் பண்ணிடுவா னு சொல்லிட முடியாது.தீயா சுட்டுடவும் வாய்ப்பு இருக்கு



-------------------------


10. மணமான பெண்களில் 2 வகை 1.புருஷன் பேச்சை சட்டை செய்யாதவர்கள் 2புருஷனையே சட்டை செய்யாதவர்கள்




--------------------


11.  புகைப்படம் எடுக்கும்போது குழந்தைகளை  இயல்பாக இருக்க விடாமல் அசையாமல் நிற்க வைப்பது பெண்ணாதிக்கம் # எ கீ



--------------------


12. அன்பே! உனக்கு தங்கை ஒருத்தி இருந்தால் நீ இல்லாத பொழுதுகளில் தனித்திருந்திருக்க மாட்டேன்



---------------------


13. பெரும்பாலும் குப்பையை குப்பைக்கூடையில் கொட்டுவது பெண்களாகவும்    , அதை வெளியே கொண்டு போய்  கொட்டுவது ஆண்களாகவும் இருக்கிறார்கள்


---------------------


14. அத்தான், ஆஃப் சைஸ் , ஃபுல் சைஸ் எந்த ஃபோட்டோல நான் நல்லாருக்கேன்? 



பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோலயே நீ ஃபுல் சைஸ் ல தான் இருக்கே ;-)



-------------------


15 அடுக்கு மல்லிகைப்பூவை அடுக்கு டிஃபன் கேரியர்ல தான் வாங்கிட்டு வரனுமா? ஹி ஹி 



--------------------------


16. 18 வயசுப்பொண்ணைத்தான் லோடு பண்ணுவேன்னு சொல்றவன் சிஸ்டத்துல கூட ஆண்ட்டி வைரஸ் அப்லோடு பண்ணித்தான் ஆகனும்



---------------------


17. வெளியூர் போகும் கணவர்கள் தத்தம் மனைவிகளின் வாயை மூடி விட்டுப்போகவும் # தொண தொணனு பேசிட்டே இருக்காங்க # எ கீ 



---------------------


18.

Monday, April 08, 2013

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 

 நம்ம ஊர்ல நடந்த ஒரு உண்மைச்சம்பவம் -ஹிதேந்திரன் என்ற சிறுவனின் உடல் உறுப்பு தானம்  பற்றிய  கதையை மலையாளத்துல டிராபிக் என்ற பெயரில் எடுத்து ஹிட் ஆக்கினாங்க , அதை ரீ மேக்கி இருக்காங்க . இது எப்படின்னா தமிழன் தமிழ் நாட்டில் கிடைக்கும் 10 ரூபா இளநீரை வாங்கிக்குடிக்காம அந்த இளநீரை அமெரிக்காக்காரன் நம்ம நாட்டில் வந்து வாங்கி அவங்க நாட்டுக்குக்கொண்டுபோய் பாலிபேக்ல பேக் பண்ணி 100 ரூபாய்க்கு விக்கும்போது அதை வாங்கிப்பான். அந்த மாதிரி


மாமூல் மசாலாக்கதைகளை பார்த்து சலித்த கண்களுக்கு  இது மாதிரி வித்தியாசமான களத்தில் சொல்லப்படும் கதைகள் ஆச்சரியத்தைத்தருவதில் ஆச்சரியம்  ஏதும் இல்லை 


குடும்பத்துக்கு நேரம் ஒதுக்காத சினிமா சூப்பர் ஸ்டார் பொண்ணுக்கு மாற்று இருதயம் 1 வேணும்.அதுவும் உயிரோட இருக்கும் ஆளின் இதயம் தான் வேணும்.  ஒரு விபத்தில் பலி ஆகி மூளைச்சாவு ஏற்பட்டு நிச்சய இறப்பு என உறுதி ஆன ஒரு கேஸ். அந்தப்பையனோட இதயத்தை  இந்தப்பொண்ணுக்கு பொருத்தனும் .டிராபிக் உள்ள பகல் டைம்ல சென்னை டூ வேலூர் 170 கிமீ வேகத்துல 90 நிமிடங்கள் ல போய் ஆகனும். இதை எப்படி சக்சஸ் ஃபுல்லா செய்யறாங்க என்பதுதான் திரைக்கதை 


 



சமீபத்தில் எனக்குத்தெரிந்து  இத்தனை கதாப்பாத்திரங்களை வைத்து அத்தனை பேரையும் நம் மனசில் பதித்து பிரமாதமான, குழப்பமே இல்லாமல் ஒரு திரைக்கதை வந்ததில்லை . கதைப்போக்கு  மணி ரத்னத்தின் ஆய்த எழுத்தை ஒத்திருந்தாலும் , திரைக்கதை சாயல் எங்கேயும்  எப்போதும் படம் மாதிரி இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு முக்கியமான படமே..

படத்தில் கம்பீரமான நடிப்பு சரத் குமாருடையது .ஆபரேஷன் லீடர் இவர் தான் . போலீஸ் ஆஃபீசர் , நாட்டாமை ஆகிய 2 கேரக்டர்களும் சரத்துக்கு  அல்வா சாப்பிடுவது போல . அசால்டாக செய்து இருக்கிறார். அவர் காட்டும் பாடி லேங்குவேஜ் , உடல் மொழி , கம்பீரம் , தோரணை புது நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று .


ஆபரேசனை வெற்றிகரமாக நடத்தும் முக்கிய ஆள் அந்த காரின் டிரைவராக போலீஸ் காரர் சேரன் .சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட குற்ற உணர்ச்சி அவர் முகத்தில் தாண்டவம் ஆடுது .தன்னை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை அவர் பயன் படுத்திக்கொள்வதில் ஒரு சுய நலம் இருந்தாலும் அதில் பொது நலனும் இருப்பதால் நோ இஸ்யூஸ்


குடும்பத்தின் மீது கவனம் செலுத்தாமல் எப்போதும் பிசியாகவே  இருக்கும் சூப்பர் ஸ்டாராக பிரகாஷ் ராஜ். ஆர்ப்பாட்டமான நடிப்பு , அவர் மனைவியாக வரும் ராதிகா இந்தப்படத்தின் புரொடியூசர் என்பதற்காக அவருக்கு அதிக சீன் எதுவும் வைக்காமல்  அண்டர்ப்ளே ஆக்ட் செய்ய வைத்திருப்பது சிறப்பு


இடைவேளை திருப்பத்துக்காகவும் , கதையில் கமர்சியல் சுவராஸ்யத்துக்காகவும் பிரசன்னா , இனியா கேரக்டர்கள் . தன் மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாள் அதுவும் தன் உயிர் நண்பனுடன் என்பதை உணரும் பிரசன்னாவின் நடிப்பு எதார்த்தம் 


 பேஷண்ட்டின் காதலியாக பார்வதி மேனன். புருவம் ரொம்ப அடர்த்தி என்ற குறை தவிர நல்ல ஃபிகர் தான்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஒரு உண்மைச்சம்பவத்தை சுவராஸ்யமான சம்பவச்சேர்ப்புகளோடு திரைக்கதை அமைப்பது சவாலான பணி , மிகப்பிரமாதமாக அதை செய்து இருக்கிறார். வாழ்த்துகள் 



2. பாத்திரத்தேர்வு அழகு . கே பாலச்சந்தர் படம் போல் எல்லா கேரக்டர்களுமே மனதில் நிற்கிறார்கள் , அவர்களை அழகாக நடிக்க வைத்ததற்கு , நம்  மனதில் நிறுத்தியதற்கு 



3.  மொத்தப்படமும் நமக்கு உணர்த்தும் சேதிகள் 2 தான் . 1. சாலையில் செல்லும்போது கவனம் வேண்டும்  2 உடல் தானம் உயிரைக்காக்கும் . அதை எந்த பிரச்சார நெடியும் இன்றி கலைப்படத்தின் நேர்த்தியுடன் ஜனரஞ்சகமாய்ச்சொன்னது 


4. ராடான் பிக்சர்ஸ் செய்த புத்திசாலித்தனமான விஷயம் மலையாள ஒரிஜினல் டிராபிக்கில் உதவி இயக்குநராகப்பணி ஆற்றியவரையே இதில் இயக்குநர் ஆக பிரமோஷன் பண்ணியது 


5. மூளைச்சாவு நிகழ்ந்த பேஷண்ட்டின் பெற்றோராக வரும் இருவர் நடிப்பும் கன கச்சிதம்



 


 மனம் கவர்ந்த வசனங்கள் ( அஜயன் பாலா)


1. ஒரு மனுசன் கடவுளா நம் கண்ணுக்கு தெரிவது இக்கட்டான தருணங்களில்



---------------------


2. எல்லோருடைய லைப்லயும் ஏதாவது ஒரு நாள் முக்கியமான நாளா அமைஞ்சிடும் 


----------------------


3. தப்பாயிடும் தப்பாயிடும்னு பயந்துட்டே ஒரு காரியம் செஞ்சா அந்த காரியம் தப்பாயிடும்


--------------------


4. முடியாதுன்னு சொல்லிட்டா வழக்கமான நாளா இதுவும் ஆகிடும்.முடியும்னு சொல்லி முயற்சி செஞ்சா இந்த நாள் வரலாறா மாறும்


--------------------


5. க்ளைமாக்ஸ் சூப்பர்னு எல்லாரும் சொல்றாங்க 


அப்போ அதை மட்டும் ரிலீஸ் பண்ணா போதுமா? 



---------------


6. காரியம் நடக்கனும்னா கொஞ்சம் செண்ட்டிமெண்ட் கலந்து பேசுவது தப்பில்லை 



-------


7. உங்களுக்கு என் பையன் சாகக்கிடக்கும் ஒரு உயிர் , ஆனா எங்களுக்கு அவன் உயிரோட இருக்கும்  மகன் 




-----


8. எல்லா மனிதர்களுக்கும்  அவர்கள் குடும்பம்தான் முக்கியம், அதை சரியா கவனிக்காத யாரும் வெற்றியாளர் கிடையாது 



----------------------------


9.  ரசிகர்களை ஏமாத்தலை . உங்களை நீங்களே ஏமாத்திட்டு இருக்கீங்க 




----------------------


10 ஒரு ஹீரோவா நீங்க ஜெயிச்சிருக்கலாம் , ஆனா ஒரு மனுஷனா தோத்துட்டீங்க 



-------

 




இயக்குநரிடம் சில கேள்விகள் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. மிட் நைட்ல தம்பதிகள் அவங்க பெட்ரூம் ல படுத்திருக்காங்க , அப்போ மனைவிக்கு அவ கள்ளக்காதலனும் , கணவனின் நெருங்கிய நண்பனுமான ஆள் கிட்டே இருந்து ஃபோன் வருது. அப்போ மனைவி “ அவர் பக்கத்துல தான் இருக்கார், நான் அப்புறமா கூப்பிடறேன்”ன்னு சொல்லி ஃபோனை கட் பண்றா, அப்போ புருஷன் எழுந்து யார் ஃபோன்ல என கேட்க மனைவி “ ராங்க்  கால்” ங்க்கறா. எவ்வளவு பெரிய ஓட்டை இந்த காட்சில ... 


அ. கணவனின் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் எப்போ வீட்ல இருப்பான்னு நண்பனுக்கு தெரிஞ்சிருக்கும் , மிட் நைட்ல ஃபோன் பண்ணினா ஆபத்துன்னு தெரியாதா? 


ஆ.  கள்ளக்காதலன் கிட்டே இருந்து ஃபோன் வரும்போது  அருகில் கணவன் இருப்பதால் மனைவி ஃபோனை கட் பண்ணி ஆஃப் பண்ணி இருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பி இருக்கலாம், அல்லது பெட்ரூமை விட்டு வெளியே பாத்ரூம் போவது போல் போய் அங்கே ரகசியமாய் பேசி இருக்கலாம் 


இ . போன் பேசி முடித்ததும் அந்த காலை எரேஸ் பண்ணவே இல்லை . பின் கணவன் ஃபோனை எடுத்துப்பார்த்து மிட் நைட்ல அவன் ஏன் ஃபோன் பண்ணான்? என கேட்க மாட்டானா? 


2. பர்சனாலிட்டியான , வசதியான , கவுரவமான பதவியில் கணவன் , குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கறான். மனைவியை அப்பப்ப சந்தோஷப்படுத்தறான், இத்தனை பிளஸ் இருந்தும் மனைவி தடம் மாறுவதற்கு காரணம் சொல்லவே இல்லை 



3.  துரோகம் செய்த மனைவியை பிரசன்னா கார் ஏத்தி கொலை பண்ண முடிவு எடுத்தாச்சு , ஓக்கே . மோதியவர் அரைகுறையா அப்டியே விட்டுட்டுப்போவாரா? மனைவி அவரை பார்த்துட்டா , உயிர் பிழைச்சா ஆபத்து , சாட்சி ஆகிடுவா . இன்னொரு ஏத்து ஏத்தினா மேட்டர் ஓவர். அதை செக் பண்ணாம ஆளில்லா அந்த ரோட்டில் அவசர அவசரமா அவர் ஏன் திரும்பனும் ? 



4. கிரிமினலான பிரசன்னாவுக்கு சேரன் எதுக்கு பரிதாபம் காட்டறார்? 



5. பொதுவா மேல் அதிகாரிகள் என்ன சொல்றாரோ அதைக்கேட்பதுதான் நம்ம வேலை. ஆனா கமிஷனரின் ஆர்டருக்கு கட்டுப்படாமல் சேரன் தன் போக்கில் முடிவு எடுப்பது ஏன்? அதை சரத்தும் கண்டு கொள்ளலையே? 

 

6. ராமராஜன் வேட்டிகள் மற்றும் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் மார்க்கெட்டிங்க் எக்ஸ்க்யூட்டிவ்ஸ் ஒழுங்கா  ஏரியா பார்க்கறாங்களா? என்பதைக்கண்காணிக்க அவர்கள் வசம் ஜிபிஎஸ் ஃபோன் கொடுப்பாங்க , அது அவங்க இருக்கும் ஏரியாவை காட்டிக்கொடுத்துடும் . சாதாரண கம்பெனியே அந்த ஐடியா ஃபாலோ பண்றப்ப போலீஸ் ஏன் அதை ஃபாலோ பண்ணலை?  சேரன் செல் கீழே விழுந்தாலோ , திடீர்னு ரிப்பேர் ஆனாலோ எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு ஏன் முதல்லியே யோசிக்கலை? 



7. மணிக்கு 170 கிமீ வேகத்துல போகும் போலீஸ் சேரன் செல் ஃபோன்ல பேசிட்டே போவது ஆபத்து இல்லையா? பக்கத்துல ஒரு ஆள் சும்மாவே இருக்காரே? எதுக்கு? ஃபோன் ஆர்டர்களை ரிசீவ் பண்ண ஒருவர் , கார் ஓட்ட ஒருவர் என ரெடி பண்ணி இருக்கலாமே? 



8. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட் ஃபேமிலி உருக்கம் ஓக்கே , ஆனா எப்போ திரைக்கதை கார்ப்பயணத்துக்கு வந்துச்சோ அப்பவே  அந்த செண்ட்டிமெண்ட் போர்ஷன் ஓவர் ஆகிடுச்சு , அதுக்குப்பின் கரெக்ட் டைம்க்கு அது போய்ச்சேர்ந்ததா? என்பதில் தான் ஆடியன்ஸ் ஆர்வம் இருக்கும் . அந்த டைம்ல பழைய சோகத்தை எல்லாம் பிழியக்கூடாது 



9. மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் காதலியாக வரும் ஃபிகர் புருவம் ஏன் அவ்ளவ் அடர்த்தியா இருக்கு? அதை ட்ரிம் பண்ணி இருக்கலாம் .க்ளோசப் ல அடிக்கடி காட்டுவதால் உறுத்துது ( உறுத்துதுன்னா கொஞ்சம் தள்ளி உட்கார்) 



10 .  மூளைச்சாவு ஏற்பட்ட பேஷண்ட்டின் அப்பா கேரக்டர் சோகம் காட்டின அளவுக்கு அம்மா கேரக்டர் சோகம் காட்டலை . மேக்கப் எதுக்கு அவ்வளவு ? குங்குமம் எல்லாம் கல்யாண வீட்டுக்குப்போற  மாதிரி , அந்த ஹாஸ்பிடல் சீன்ல இன்னும் அந்தம்மாவுக்கு மேக்கப் டல் பண்ணி இருக்கனும் 


 

மல்லிகாவுக்குப்பக்கத்துல இடது புறமா நிக்கும் ஃபிகரின் கீழ் உதட்டைப்பார்க்கவும் ஹி ஹி

11. பேஷண்ட்டோட கிரிட்டிகல் சிச்சுவேஷன் பற்றி ஒரு டாக்டர் இப்படித்தான் ஹெட் ஆஃப் த டாக்டர்ஸ் கிடே பேஷண்ட்டோட பேரண்ட்ஸ் முன்னால உளறுவாங்களா?



12. போலீஸ் டிபார்ட்மெண்ட்ல எப்பவும் “ நீ இந்த வேலையைச்செஞ்சிடு”ன்னு ஆர்டர் தான் போடுவாங்க. ஆனா கமிஷனர் சரத் “ யார் இதை செய்யத்தயார்?”னு கேட்பது காமெடின்னா யாருமே தயார் இல்லை என்பதும் செம காமெடி 



13 . ஹெலிகாப்டர்ல போக முடியாது என புத்திசாலித்தனமா வசனம் வெச்சா போதுமா? குறிப்பிட்ட அந்த பயணம் பூரா மழை வருவது போலவோ , வானம் மோடம் போட்டிருப்பது போலவோ காட்ட வேணாமா? 



14. மொத்தப்படமும் பிரமாதமா போய்ட்டிருக்கும்போது சூர்யா கேரக்டர் திணிப்பும் அவர் ரசிகர்கள் காருக்கு ரூட் ஏற்படுத்துவதும் அப்பட்டமான சினிமாத்தனம் 


15. சூர்யா ரசிகர்கள் உதவி பண்றாங்க  ஓக்கே , அப்போ படத்துல சூப்பர் ஸ்டாரா வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்கள் ?


16. இதய தானத்துக்கு ஆரம்பத்துல பெற்றோர் ஒத்துக்கலை , ஓக்கே , ஆனா அவங்க பின்னர் ஒத்துக்கொள்வதை காட்சியா காட்ட வேணாமா? சும்மா வசனத்துல மட்டும் ஒப்பேத்துனாப்போதுமா? 



17. காரில் பயணம்  செய்ய  இன்னொரு ஸ்பேர் டிரைவர் ஏன் ரெடி பண்ணலை? சப்போஸ் அவர் டயர்டு ஆனாலோ , முடியாம போனாலோ ஆல்ட்டர்நேட்டிவ் டிரைவர் வேண்டாமா?


18. சாதாரண கார் டிரைவரை யூஸ் பண்ணீயதை விட அஜித் மாதிரி பைக் ரேஸ் வீரர் அல்லது  கார் ரேஸ் வீரர் என காட்டி இருந்தால் இன்னும் நம்பகத்தன்மையா இருந்திருக்கும்


19. கார் பயணிக்கும் நேரம் எல்லாம் வெய்யில் கொளுத்துவது போல் ஏன் காட்ட வேண்டும்? மூலப்படமான டிராபிக் மலையாளப்படத்தில்  மிகச்சிறப்பாக சீதோஷ்ணத்தை பேலன்ஸ் செய்து இருப்பதாக பார்த்தவர்கள் சொல்றாங்க



20 ரவுடிகள் காரைத்துரத்தி பைக்கில் ரவுண்ட் கட்டும்போது அந்த லேடி ஏன் கார்க்கண்ணாடிக்கதவுகளை ஏற்றி விட வில்லை? 
 




21, சிட்டி கமிஷனர் நடத்தும் அவசர மீட்டிங்கில் போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே இடம் பெற முடியும், சாதாரண போலீஸ் ட்ரைவர் எப்படி இடம் பிடிக்க முடியும்? அதே போல் ஆல் போலீஸ் டிரைவர்ஸ் மீட்டிங்க்கு வரனும் என சரத் குறிப்பிடுவதும் தேவை இல்லாததே


22. யார் யாருக்கோ நன்றி என டைட்டில் கார்டு போட்டவங்க “ 2008 இல் உடல் தானம் செய்ய உதவிய ஹிதேந்திரனின் பெற்றோருக்கு நன்றி என டைட்டில் ல போட்டிருக்கலாமே? 


23.  சேரன் ஃபாஸ்ட் டிரைவிங்க்கில் இருக்கும்போது சரத் அடிக்கடி ஃபோன் பண்ணி இப்போ எங்கே இருக்கீங்க? என பொண்டாட்டி மாதிரி நச்சரிப்பது மகா எரிச்சல். அவர் கார் ஓட்டுவாரா? உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருப்பரா?







சென்னையில் ஒரு நாள் - நல்ல திரைக்கதை உத்தி - விகடன் மார்க் மே பி - 46  ( இது ட்விட்டர்ல போட்டது, ஆனா விகடன் மார்க் - 43



 குமுதம் ரேட்டிங்க் - ஓக்கே 


 ரேட்டிங்க்  3.5 / 5


சி பி கமெண்ட் - மாறுபட்ட சினிமாக்களை விரும்புபவர்கள் தவற விடக்கூடாத படம்

நன்னாரிப்பயலேன்னு என்னை யார் திட்டினது?ராஸ்கல்ஸ்




பொழுது போகாத பொம்மு
1. மிஸ்டர்.லவ் லெட்டர் ல எதுக்கு மஞ்சள் தடவித்தர்றீங்க ?


 மிஸ் .தடவும்போது மங்களகரமா ஸ்டார்ட் பண்ணலாம்னுதான்



----------------------


 2. நர்ஸ்.மிளகாய்ப்பொடி உள்ளே போனதால கண் 2ம் தெரியல.டாக்டரைப்பார்க்கனும். 



அதெப்பிடி பார்ப்பீங்க? அதான் கண்ணே தெரியலையே?




-------------------------


3. டியர்.பொண்ணுங்க கிட்டே எந்த ரகசியமும் தங்கறது இல்லையே ஏன் ? 



யோவ் நாங்க என்ன லாட்ஜா? 



----------------------


4. ஐயையோ கரண்ட் போச்சே., இப்போ நான் என்ன செய்ய? 



 1ம் செய்ய வேண்டாம், பேசாம படுத்துத்தூங்குங்க



------------------------


5. இந்”துலே”கா வை யூஸ் பண்ணா முடி கொட்டாம இருக்குமா டாக்டர்? 



 லேது



-------------------




லவ் பண்ணி கல்யாணம்

பண்ணிக்கிட்டிங்கன உங்க லவ்வர்

உங்களுக்கே கிடைக்கும்

அதுவே

பெரியவங்க பார்த்து

கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கனா

உங்களுக்கு கிடைப்பது மத்தவங்க

லவ்வர்

வாழ்க்கை இவளவுதான்

புரிஞ்சுகோங்க ,............

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்


6. டாக்டர், தேன் சாப்பிட்டேன் , நாக்கெல்லாம் எறும்பு...



 அய்யய்யோ, எதுக்கும் வயிற்றை ஸ்கேன் பண்ணிடுங்க, எறும்புப்புற்றே இருக்கப்போகுது




---------------------


7. விண்வெளி பயணத்தின் போது பகவத் கீதை படித்தேன்!': சுனிதா வில்லியம்ஸ் # நல்ல வேளை , பகவதி , புதிய கீதை பார்க்கலை , கிரேட் எஸ்கேப்



--------------------


8. என் மனைவி என்னை அடித்து, உதைக்கிறாள்": விவாகரத்து கேட்கும் கேரள மந்திரி # பொண்டாட்டிங்க எல்லாருமே அப்டித்தான் , ஏ , பி சி ஆல் செண்ட்டர்



------------------


9. இனி, ஓவரா பேச மாட்டேன் -  அஞ்சலி      # அப்டியே இனி ஓவரா வெயிட் போட மாட்டேன்னும் ஒரு சபதம் எடுத்துடுங்க ,ரொம்ப ஓவரா போய்ட்டிருக்கு



----------------------



10. லோன் வாங்கி 5 வருசம் ஆகுது.வட்டியும் முதலும் என்னாச்சு?



நிறுத்திட்டாங்க சார்.ராஜூ முருகன்ட்டயோ விகடன்ட்டயோ டீட்டெய்ல் கேட்டுக்குங்க ;-)



-----------------------


Photo



11. பொண்ணுங்க கூந்தல் மாதிரி நம்ம தலையும் வாசமா இருக்க தலயணை மேல் பூ வெச்சு அது மேல தலை வெச்சு தூங்கனும்




------------------------


12. இந்தபொண்டாட்டிங்களுக்கு உள்ளுணர்வு ஜாஸ்தி.நாம பூனை மாதிரி எந்திரிச்சாலும் கட்டில் அசைவை வெச்சு "எங்கே கிளம்பறீங்க?"




------------------------


13. என்ன பேசறதுன்னு தெரியாதவங்க ஆபீஸ் ல லேடி ஸ்டாப்கிட்டே பேசும் ஒரே டயலாக் - மேடம் இன்னைக்கு லஞ்ச்க்கு என்ன கொண்டு வந்திருக்கீங்க?



--------------------------


14. எப்பவுமே ட்விட்டர்லயே குடி இருக்கியே.உனக்கு எப்டி வேலை தர்றது?




 சம்பளம் தராத ட்விட்டர்க்கே இவ்ளவ் சின்சியர்னா சம்பளம் தர்ற உங்களுக்கு ?



----------------------------


15. ஹிப் ஹிப் ஹூர்ரே = இடுப்பு இடுப்பு காரம் # சபாஷ் துபாஷ்




---------------------


Photo



16. நீங்க எங்கே வேலை பாக்குறீங்க?



ஹூம்.நான் எங்கே வேலை பார்க்கறேன் டாக்டர்? சும்மாதான் இருக்கேன்



----------------------


17. ஒபாமாசே தமிழ் நாட்ல பொண்ணு கட்னாலும் அவருக்கு அதிக முறை அளிக்கப்படும் டிபன் ஐட்டம் உப்புமாவாத்தான் இருக்கும்



----------------------------


18. மாமா பொண்ணோ அத்தை பொண்ணோ 2 கைலயும் மருதாணி போட்ருக்கும் போதுகூட நீ எந்த சில்மிஷமும் பண்ணலைன்னா மன்மதன் உன்னை மன்னிக்க மாட்டான்



--------------------------


19. நன்னாரி சர்பத் உடம்புக்கு நல்லதுதான்.ஆனாலும் நான் குடிப்பதில்லை.நன்னாரிப்பயலேன்னு யாரும் கூப்பிட்ரக்கூடாதே # மீ பாதாம்கீர்ப்பயலே



-----------------------


20. பிஸ்னெஸ்ல நஷ்டம் ஆகியும் சுதாரிச்சுட்டா சுதா ரிச் (rich) சாகிட்டார்னு சொல்லலாம்


----------------------------



MY Reaction COllections's photo.
Swt evening...