Monday, March 04, 2013

India’s 30 Best Cities


India Today Rating of India’s Best Cities: Thiruvananthapuram 15th Best City,1st in Housing & Transport Category


India Today published the Best Cities Survey results and rankings to highlight the livability of various cities in India. This is said to set the gold standard for measuring the performance of city and state governments and hope to spur healthy competition between cities as each tries to climb the ladder to the top of the table.


 Ultimately, any improvements that take place will benefit the 370 million people of India who live in 8,000 cities and small towns.A great deal of country’s creativity, enterprise and talent resides in cities.If these are to continue to flourish, they need a congenial environment to work and to play. The future of India,, in many ways, depends on the prosperity of its cities and they definitely deserve better.

In this survey, India Today chose 50 cities and assessed each under nine categories, viz

  1. Housing and transport
  2. Entertainment
  3. Education
  4. Environment
  5. Crime and Safety
  6. Public Services
  7. Healthcare
  8. Economy
  9. Investment
Where Thiruvananthapuram stand in this survey and ratings?
Well, in the “Housing and Transport” category Thiruvananthapuram emerged as the Best City and Rajkot as the Emerging City. The report says, “2% of Thiruvananthapuram’s total population lives in slums, the lowest among the 50 cities in India; 44% of the city’s residents use public transport and 49% residents take less than five minutes to cover 5km in their neighbourhood, only 13% can do the same in Mumbai.
tvmbest
Also, in the overall category, Thiruvananthapuram placed at 15th, whereas Chennai placed at first position.
India’s 30 Best Cities and 20 Top Emerging Cities
30best
20emerge
The winners in the nine categories:
winners
Content Courtesy : India Today March 4,2013 Edition

thanx - india today ,  ( linkan';-)

சீதையாக நயன்தாரா நடிக்கும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான் ஏன் நடிக்க கூடாது! வித்யாபாலன் கேள்வி

1. டியர்.மாசமா இருக்கேன்.சாம்பல் சாப்பிட ஆசை



.ஐ ஜாலி.அரிசிக்குப்பதிலா உன்னிச்சாம்பல் ஒரு மூட்டை ஆர்டர் பண்ணிடறேன்



-----------------------


2. பொண்டாட்டியே புருஷனை விளாசுவதும் ,கட்சி எம் எல் ஏ வே தலைவரை அலாசுவதும் தமிழ்நாட்டில் சகஜம் ஆகிடுச்சு # கேப்டன்



--------------------


3.  டியர், சரவணன் மீனாட்சி ல வர்ற மாதிரி பேர் பஃப் வெச்ச ப்ளவுஸ் எனக்கு எடுப்பா இருக்குமா?



பார்க்கறவங்களுக்கு கடுப்பா இருக்கும்



-----------------------


4. என் தங்கச்சி ஷாகுன் நடிக்க வர்றா - டாப்ஸி # ஷா கும்னு சொல்லிக்கற மாதிரி இல்லையே?



----------------------


5. ''ரியல் லைஃப்ல நான் பயங்கர வாயாடி! - டாப்ஸி # எப்டி? லவ்வர் லிப் கிஸ் அடிக்கும்போதுகூட தொண தொணன்னு பேசிட்டு இருப்பீங்க்ளா?




--------------------


6.வாயில்லா ஜீவன்கள் , வாய்ப்பில்லா ஜீவன்கள் என்ன வித்தியாசம்?



 வாயில்லா ஜீவன்கள் = கல்யாணம் ஆன ஆண்கள் , வாய்ப்பில்லா ஜீவன்கள் = மச்சினி இல்லா கணவர்கள்


---------------------------


7. பொண்ணுங்க சம்பளம் வாங்குனதும் அம்மாட்ட யும் பசங்க ( அவங்கவங்க) சம்சாரத்து கிட்டேயும் குடுத்துடறாங்க # மொத்தத்துல லேடீஸ் ட்டதான் பணம்



-----------------------


8. ப்ரியா நீ எனக்கு பிரியாணி


--------------------


9. சில பெண்களை மேலுதட்டை பற்களால் கடித்தவாரே கடந்து செல்ல காரணம் என்ன?


கீழ் உதட்டை யாராவது கடினு அர்த்தமோ?


-----------------------


10. தேங்காய் உடைச்ச மாதிரி பேசுனா பொண்ணுங்களுக்குப்பிடிக்காது.இடையை சுற்றி வளைத்து பேசுனாத்தான் புரியும்



------------


11. உன் கண்களைப்பார்க்கும் சக்தியே இல்லாத பலஹீனன் நான்.கண்ணீரை பார்க்க வைப்பது எந்த வகையில் நியாயம்்



------------------


12. பொறுமையின் சிகரமான பெண்களை ஆண்கள் முந்திவிடுவது காதலிக்காகக்காத்திருக்கும் தருணங்களில்



-------------------------


13. நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது எந்த அளவு அன்பு திரும்பக்கிடைக்கும் என்று எதிர்பார்த்து அன்பு செலுத்தினால் அது உண்மையான அன்பு இல்லை



---------------------


14. நான் அரசியலுக்கு வர தூண்டுகோலாக இருந்தவர் விவேகானந்தர் -: ஜெ # அப்போ நான் யாரு ? - எம் ஜி ஆர்


-----------------------


15.  கமல் - என் ஆக்டிங்க் எப்படி?


 கவுதமி - செம, நேச்சுரலா இருந்தது, # 200 கோடி



------------


16. லேடி- சுவாமி! எதுக்காக என்னை செக் பண்றீங்க? கூச்சமா இருக்கு .



நித்தி - நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் -னு கேள்விப்படலை?அதான் இது




--------------------------




17. மாப்ளை  ! எது வரை படிச்சிருக்கீங்க?



 ஃபிகருங்க டி சர்ட் போட்டா அந்த பனியன் வாசகத்தை படிக்கும் அளவு படிச்சிருக்கேன்






----------------------



18. மிஸ், உங்க வீட்ல இத்தனை புக்ஸ் இருக்கே? எப்டி?



 ஹலோ, சும்மா இல்லை, நான் ஊர்ல 5 லைப்ரரில மெம்பர் # இலக்கியத்திர(ரு)ட்டு




-------------------------


19. ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் லோ ஹிப் சேலையில் வந்தால் அன்னைக்கு சினிமா பார்க்க தியேட்டர் போகத்தேவை இல்லை # படம் காட்டறாங்க ;-)


---------------------


20. தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள் # தலைவர் தொண்டர்கள்னு சொன்னது அவர் பசங்களை



--------------------


21. ஸ்ரீதேவி மகள் ஜானவி ( வயசு 15 ) ஹீரோயினாக்கும்அதிர்ஷ்டம் யாருக்கு? # வேற யாருக்கு, தலைவர் ரஜினிக்குத்தான்,  மீனா வுக்கு அடுத்து ஜானவி



-------------------


22. ஒரே அறையில் ஹீரோவும், ஹீரோயினும் தங்கினால் தப்பில்லைஎனநான் சொல்லவில்லை - லட்சுமிராய் குமுதம்மீதுவழக்கு # பள்ளி அறை, பள்ளியறை குழப்பமா?



----------------------


23. இது நிதியமைச்சர் சிதம்பரத்தின் பகல் கனவு பட்ஜெட் ஆகும் . #ஜெயலலிதா # ட்ரீம் பாய், ட்ரீம் பாய், லாக்கர்ல இருக்கற அந்த 6 லட்சத்தை..



--------------------------



24. மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம் # ஏம்மா, ராதா மாதிரி பொண்ணுங்க யாரும் கை வசம் ஸ்டாக் இல்லையா? 


-----------------------



25. சீதையாக நயன்தாரா நடிக்கும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நான் ஏன்  நடிக்க கூடாது! வித்யாபாலன் கேள்வி # சரி, சரி, முந்தானையை சரி பண்ணுங்க 



--------------------------

Sunday, March 03, 2013

பாரதிராஜா,+ பாக்யராஜ், + பாண்டியராஜன் = வாய்மை ( வாரிசுகள் )

சந்தானம் முதல் சூரி வரை காமெடியன்கள் வந்துகொண்டே இருந்தாலும், இன்றும் காமெடி சேனல்களில் ஆரவார அப்ளாஸ் வாங்குவது என்னவோ கவுண்டமணியின் காமெடிதானே! 'அவர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா?’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி...



 கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்! 'வாய்மை’ படத்தில் லொள்ளு தில்லு அலம்பல்களுடன் ரீ என்ட்ரி ஆகவிருக்கிறார் கவுண்டர். ஒதுங்கியிருந்த கவுண்டமணியைக் கைப்பிடித்து அழைத்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர் அ.செந்தில்குமாரிடம் பேசினேன்...



 ''ரொம்ப வருஷமா சினிமாவே வேண்டாம்னு ஒதுங்கியிருந்த கவுண்டமணியை எப்படி உங்க படத்தில் நடிக்கச் சம்மதிக்கவெச்சீங்க?'' 




''எனக்கே இன்னும் அதை நம்ப முடியலை. படத்தோட திரைக்கதையில் அழுத்தம் அதிகம். அதைக் கச்சிதமா கொண்டுபோய் ஒவ்வொரு ரசிகன்கிட்டயும் சேர்க்க ஒரு மாஸ் என்டர்டெயினர் அவசியம். அப்படி யாரு இருக்காங்கன்னு யோசிச்சா, கவுண்டர் சார்தான் என் ஞாபகத்துல வந்தார். 'அவர் சினி ஃபீல்டை விட்டு ஒதுங்கிட்டாருப்பா... உன் படத்துல எல்லாம் நடிக்க மாட்டாரு’னு சொன்னாங்க.




 ஆனா, அதெல்லாம் வெளியே இருக்கிறவங்க சொல்றது. நான் அவரைப் பார்க்கப் போனப்போ, நாலு இயக்குநர்கள் அவர்கிட்ட கதை சொல்லிட்டு இருந்தாங்க.  


நான் என் படத்தின் கதையை முழுசா சொல்லி, இவ்வளவு அழுத்தமான கதையில நீங்க இருந்தாதான் நல்லா இருக்கும்னு சொன்னேன். மொத்தமா கால்ஷீட் தேவைப்படும்னு சொன்னப்பதான் கொஞ்சம் யோசிச்சார். உடனே நான், 'ஷூட்டிங் நடுவுல ஒண்ணு, ரெண்டு நாள் அப்பப்ப ரிலீஃப் தர்றேன் சார்’னு சொன்னேன். 'இந்தக் கதைல நான்தானே ரிலீஃப்... அப்புறம் எனக்கு எப்படி ரிலீஃப் தருவே?’னு அவர் பாணில நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார். பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கார்!''  





''ரீ என்ட்ரிக்கு ஏத்த மாதிரி கதையில அவருக்கு என்ன ஸ்கோப் இருக்கு?'' 




''படத்தில் கவுண்டர் உலகப் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். அவர் கேரக்டர் பேர்... டாக்டர் பென்னி. பாகிஸ்தான்ல இருந்து வந்துலாம் அவர்கிட்ட சிகிச்சை எடுத்துட்டுப் போவாங்க. முல்லைப் பெரியாறு அணை கட்டுன பென்னி குயிக் மேல இருக்கற மரியாதைல தன் பேரை அப்படி வெச்சிருப்பார். 'ஐ யம் கம்பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’னுதான் அறிமுகம் ஆவார். இன்னும் அவருக்காக நிறைய ஒன் லைனர் பிடிச்சுவெச்சிருக்கோம். அதுலாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஆனா, சிரிக்கச் சிரிக்க பஞ்ச் அடிக்கிறவர் சமயத்துல, சிந்திக்கவைக்கிற கருத்துகளையும் சொல்லுவார். 'இங்கிலீஷ் பேசும்போது தமிழ் வந்துடக் கூடாதுனு இருக்கற அறிவு... தமிழ் பேசும் போது இங்கிலீஷ் வந்துடக் கூடாதுனு இல்லையே... ஏம்ப்பா?’ இது அப்படி ஒரு சாம்பிள்!''




''பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் மூணு பேர் வாரிசுகளையும் உங்க படத்தில் சேர்த்துருக்கீங்கபோல?''
''இந்த மூணு இயக்குநர் களோட படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்ச வகையில், அவங்க மேல எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் படம் பண்றப்போ என்னால முடிஞ்ச அளவில் அவங்களுக்கு என் மரியாதையை உணர்த்தணும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன்.




 என் சொந்தத் தயாரிப்பிலேயே இந்தப் படத்தை இயக்குவதால், நான் நினைச்சதைப் பண்ண முடிஞ்சது. சாந்தனு நல்ல நடிகர். ஆனா, அவருக்குச் சரியான ஹிட் அமையலை. இந்தப் படம் அவருக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும். பாண்டியராஜன் சார் பையன் பிரித்விக்கு சின்ன கேரக்டர் தான். ஆனா, ரொம்ப ஷார்ப்பான கேரக்டர். படத்துல வர்ற ஒரு முக்கியமான வசனத்தை மனோஜ் பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அந்த ஒரு வசனத்துக்காக, நட்புடன் மனோஜ் நடிச்சுக் கொடுக்கிறார்!'' 



நன்றி - விகடன் 


வாசகர் கருத்து 

1. எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு தைரியமாக எல்லோரையும் கிண்டல் செய்த ஒரே காமெடியன் கவுண்டமணி. ரொம்ப நாள் எங்களைக் காத்திருப்பில் வெச்சுடாதீங்க!



2. கவுண்டமணி என்றால் பெரியவர்களை (அப்பா உட்பட) போடா, வாடா என்று பேசுவது; தேவை இல்லாமல் அலறுவது; உடற்குறைபாடு உள்ள மனிதர்களை ஏளனம் செய்வது என்று ஒரு அடிமட்ட "கிண்டல்" இருக்குமே தவிர "நகைச்சுவை" இருப்பது மிகவும் அபூர்வம். என்ன, சந்தானத்தை விட இவர் தேவலை. 




3. 

திருத்த முடியாத கலகக்காரன்

1921-ம் ஆண்டில் சிறையில் காலடி வைத்தேன். எனது கடைசி சிறைவாசம் 1946-ல் முடி​வடைந்தது. இந்த இடைப்​பட்ட காலத்தில் நான் சுமார் 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளேன். போராட்டம் நிறைந்த ஆண்டுகளைச் சுற்றித்​தான் இந்த நிகழ்வுகளின் வரிசை என்னும் வண்ணக் காட்சியைத் தொகுத் துள்ளேன்’ - மன்மதநாத் குப்தா இப்படி மிகச் சாதாரணமாகத்தான் முன்னு​ரையில் சொல்கிறார்.



 ஆனால், அவர் விவரிப்பவை வண்ணக் காட்சிகளாக இல்லை. ரத்தச் சிதறல்களாக இருக்கின்றன. 'கத்தியின்றி ரத்தமின்றி’ நாம் சுதந்​திரம் வாங்கியதாக வரலாற்றுப் பாடம் படித்தோம். படிக்கிறோம். ஆனால், கத்தியாலும் ரத்தத்​தாலும் போராடியவர்களை மறைத்துவிட்டு பாடம் படித்தோம் என்பதை மன்மதநாத் குப்தாவின் புத்தகம் வெளிச்சப்படுத்துகிறது. 




இந்திய விடுதலைப் போராட்டத்​தின் கடைசி 30 ஆண்டுச் சூழலின் நேரடிச் சாட்சியாக இருக்கக்கூடிய மன்மதநாத் விவரிப்​பதைப் படிக்கும்போது இந்தியாவை விட்டு வெளியேறு​வதற்கான தருணம் வந்துவிட்டது என்பதைத் தூண்டிய இளைஞர் படை நாடு முழுவதும் பரவி இருந்ததை உணர முடிந்தது. 
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. 




ஆனால், அதற்கு முன்பும் பின்புமாக தங்களது அர்ப்பணிப்பை வழங்கிய அத்தனை இளைஞர்களின் முகங்களையும் மன்மதநாத் குப்தா நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். வாழ்வின் வசந்த காலத்தை பிரிட்டிஷ் படைகளின்  சிறைக்கொட்டடிகளில் கழித்த இந்த இளைஞர்களை அன்றைய காங்கிரஸும் காந்தியும் எப்படி நடத்தினர் என்​பதைப் படிக்கும்​போது கோபம் கொப்பளிக்கிறது. 



இந்த இளைஞர்களின் பாதை வேறானதாக இருக்கலாம். ஆனால், லட்சியம் ஒன்று​தானே? இவர்களது அர்ப்​பணிப்பு உணர்வுகூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் உதாசீனப்​படுத்தப்பட்டுள்ளது. காந்தியின் உத்தரவுகளை மீற முடியாமல் நேதாஜி திணறி​யதும், நேரு இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்​டதும் இன்றைய வரலாற்று மாணவர்கள் வாசிக்க வேண்டி​யது.



''அன்னிய அரசாங்கத்தின் கையாட்கள் எங்களை பயங்கர​வாதிகள் என்று அழைத்தனர். அது, எங்களைப் பாதிக்கவில்லை. ஆனால், காந்தியின் அணுகுமுறை, 'நீங்களெல்லாம் அரசியல் கைதி​கள் இல்லை’ என்று கூறுவது​போலத்தான் இருந்தது. பிற நாடுகளின் புரட்சியாளர்களை எல்லாம் அவர் தேசபக்தர்களாக ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்தியப் புரட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர்  மாற்றாந்தாய் மனப்​பான்மையுடனேயே நடந்துகொண்டார். அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளில் புரட்சிக்​காரர்​களின் விடுதலை யை   வலியுறுத்​தவே இல்லை’ என்று சான்று​​களோடு சொல்கிறது இந்தப் புத்தகம்.




ஆயுதத்தால் மட்டுமே ஆங்கிலேயர்களை விரட்ட முடியும் என்று நினைத்த இந்த இளைஞர்கள், சிறைகளுக்குள் அகிம்சை மூலமாகவே  தங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று பல வாரங்கள் உண்ணா​விரதம் இருந்த காட்சிகள் மனதைக் கனக்க வைக்கின்றன. ஆயுத வாழ்க்கையையும்அகிம்சை வாழ்க்கையையும் தேர்ந்​தெடுப்​ப​வர்கள் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து இடைஞ்சல்களையும் அணு அணுவாய் விவரிக்கிறார். சிறைப் பதிவேட்டில் 'திருத்த முடியாத கலகக்காரன்’ என்று எழுதப்பட்ட மன்மதநாத் குப்தா, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைத் திருத்தி எழுதிய புத்தகம் இது.



 நன்றி - ஜூ வி


- புத்தகன்

விஸ்வரூபம் விமர்சனத்துக்கு கமல் ரசிகரின் பதிலடி

இயக்குநர் கம் திரைக்கதை ஆசிரியர் கமல் ஹாசனிடம் சில கேள்விகள்



1. முஸ்லீம் சகோதரர்ககளை இதுக்குமுன் பலரும் வில்லன் கேரடக்ரில் காட்டி இருக்கிறார்கள் . அர்ஜூன், கேப்டன், சரத்குமார் படங்களில் எல்லாம் பார்த்தவை தான். ஆனால் அவற்றில் எல்லாம் வில்லன் அதிக பட்சம் 15 நிமிடம் காட்டுவாங்க , ஒரு க்ளைமாக்ஸ் ஃபைட் அவ்வளவு தான்.ஆனால் இந்தப்படம் முழுக்க முழுக்க முஸ்லீம் சகோதரர்களையே வில்லன்களாக காட்டி இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும் . வளரும் இளைய சமுதாயம் அக்கம் பக்கம் இருக்கும் முஸ்லீம் சகோதரர்களைப்பார்த்து மிரள மாட்டார்களா? 



2, குருதிப்புனல் படத்தின் பாகம் 2 போல் தான் இந்தப்படம் வருது . ஆனா அந்தப்படத்தில் இருந்த விறு விறுப்பு , அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு , சஸ்பென்ஸ் மிஸ்சிங்க் . முதல் 40 நிமிடங்கள் கலக்கல் , அடுத்து வரும் தாலிபான் காட்சிகள் சராசரி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் . 



3. டெரரிஸ்ட்டாக வரும் கமல் கண்களில் சாந்தம், பொறுமை அளவுக்கதிகமா தெரியுது. வழக்கமா எதிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கேரக்டருக்காக  உடலையே மாற்றும் கமல் குறைந்த பட்சம் கண்ணுக்கு ஒரு காண்டாக்ட் லென்ஸ் கூட வைக்காதது ஏன்? 



4. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் கமல் எப்படி அந்த கேங்கில் இருந்து வில்லன் கண்களில் மண்ணைத்தூவி எஸ் ஆனார்? பாகம் 2 இல் விடை கிடைக்கலாம் என்றாலும் இந்தப்படம்  மட்டும் பார்ப்பவர்களுக்கு என்ன புரியும் ? 


5. மணிரத்னம் கூட அளவுக்கதிகமா நெருக்கமோ என்னமோ 75 % வசனங்கள் புரியவே இல்லை . பி  சி செண்ட்டர் ரசிகர்கள் ரொம்ப பாவம் . யார் என்ன பேசறாங்க அப்டினு யூகிக்கக்கூட முடியாது .



6. ஓப்பனிங்க் காட்சில ஆண்ட்ரியாவை சிக்கனை டேஸ்ட் பாருன்னு கமல் சொன்னதும் அவர் இடது கையால உணவை எடுத்து சுவைக்கிறார்.. உவ்வே.. அந்த பேசிக் நாலெட்ஜ் கூடவா தெரியாது . வலது கைல எடுத்து டேஸ்டக்கூடாதா? 


7. பூஜா குமார் தன் பாஸ் கம் காதலன் கூட கார்ல போய்ட்டிருக்கார். அப்போ கணவர் கமல் ஃபோன் பண்றார். ஆஃபீஸ் வேலையா வெளில கார்ல போய்ட்டிருக்கேன்னா மேட்டர் ஓவர். ஆஃபீஸ்ல தான் இருக்கேன்னு ஏன் பொய் சொல்றார்? கார் பேக் கிரவுண்ட் சத்தம் கமலுக்குக்கேட்காதா? 



8.  ஹீரோ வுக்கும் , ஹீரோயினுக்கும் மேரேஜ் ஆகி  மேட்டர் நடக்கலை என்பதை நம்பவே முடியலை . இந்தக்காலத்துல பொண்ணு பார்க்கும்போதே ட்ரெய்லர் பார்த்துடறாங்க , நிச்சயம் நடக்கும்போது மெயின் பிக்சர் பாதி பார்த்துடறாங்க . மாடர்ன் கேர்ள்  மேரேஜ் ஆகி மேட்டர் நடக்கலை என்பதை எப்படி நம்புவது ? ஹீரோ ஒரு நார்மல் பர்சன்  இல்லை என்று ஒரு இடத்துல வசனம் வெச்சு சமாளிக்கறாங்க . ஆனா ஹீரோ அப்படி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை . உளவுத்துறைல பொண்டாட்டி கிட்டே மேட்டர் வெச்சுக்காதீங்க டேஞ்சர் அப்டினு எல்லாமா சொல்லி இருப்பாங்க? 




9.  கமலுக்கும் , பூஜா குமாருக்கும் காம்பினேஷன் காட்சிகள் கொஞ்ச்மாவது வெச்சிருக்கனும் . அப்போதான் அவருக்காக கமல் ஃபைட் பண்ணூம்போது இன்னும் எமோஷன் கிடைக்கும். 


10. டான்ஸர் கமலை தீவிரவாதிகள் படம் பிடிச்சு தலைவனுக்கு அனுப்பறாங்க. ஒரு ஃபோட்டோ அல்லது 2 ஃபோட்டோ எடுத்தா போதாதா? அட்வர்ட்டைஸ்மென்ட் எடுப்பது போல அத்தனை ஃபோட்டோ எதுக்கு? 





11. எம்பஸி ஆஃபீசர்  கமல் அடிவாங்கும்போது வர்றார். அந்த டைம்ல ஜஸ்ட் ஒரு ஃபோன் பண்ணி இருந்தா போதுமே... டைமும் மிச்சம் ஆகி இருக்கும், கமலையும் அடி வாங்காமல் காப்பாற்றி இருக்கலாம்.. 


12. டைம்பாம் வைப்பவன் எதுக்கு திருப்பதி நாவிதர் மாதிரி செல்ஃப் மொட்டை அடிச்சுக்கறார்? அப்போதான் பாம் வெடிக்குமா? தலையை மட்டும்னாக்கூட பரவாயில்லை... ஹய்யோ அய்யோ.. 



13. கமல் அடிக்கடி தாலிபான் தீவிரவாதி கிட்டே “ என்ன நடக்குது இங்கே? “ அப்டினு கேள்வி கேட்கறார்.. அப்போ ஆடியன்ஸ் “ அதைத்தான் நாங்களும் கேட்கறோம், என்னதான் நடக்குது? “ அப்டினு சவுண்ட் விடறாங்க.. செம காமெடி 



14. திரையில் இனி கமல் படம் எது வந்தாலும் தமிழ்ல படம் பூரா சப் டைட்டில் போடுவது நல்லது  . 



15. ஆஸ்கார் வாங்கும் ஆசைக்காகவோ , அல்லது விஸ்வரூபம் பாகம் 2 க்குப்பின் ஹாலிவு ட் படத்தில் கமல் நடிப்பதாலோ அவர் ஒபாமாவுக்கு ஓவரா ஜிங்க் ஜக் அடிப்பது மாதிரி காட்சிகள் இருக்கு . 


16 . பிராமணர்கள் , முஸ்லீம்கள் இருவரை நையாண்டி அல்லது தாக்கும் காட்சிகள் இத்தனை கட்டுக்குப்பின்னும் இருக்கு . அடுத்த படத்திலாவது அடுத்தவங்க மனசு புண் படாமல் எடுக்கவும் 


17. மனைவிக்கு கணவனைப்பிடிக்கலைன்னா  டைவர்ஸ் பண்ண 1000 வழி இருக்கு . உதாரணத்துக்கு  யாரையாவது செட்டப் பண்ணி எதிரா சாட்சி சொல்ல வைக்கலாம். அதை விட்டு ஃபிளாஸ்பேக்கை ஆராய ஆள் வைப்பது ஓவர் 


18. அந்த பிரைவேட் டிடெக்டிவ் ஆள் கிரிக்கெட் ரன்னிங்க் கமெண்ட்ரி கொடுப்பது மாதிரி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுவது செம காமெடி . அட பறக்கா வெட்டி , முழுசா அப்சர்வ் பண்ணிட்டு அப்புறமா சொல்லறதுக்கு என்ன? என கேட்கத்தோணுது 



19. மகாநதிக்குப்பின் அழகான கமலைப்பார்க்கவே முடியல . படம் பூரா பிளாஸ்திரி ஒட்டித்தான் வர்றாரு .ஏதாவது வேண்டுதலா?

Some answers to your Viswaroopam director questions (these are my own views)

உங்கள் கேள்விகளுக்கு சில பதில்கள் :

1. எனக்கு தெரிந்து யாரும் மிரள வில்லை, படம் வந்து பல நாட்கள் ஆகி விட்டன. பலரும் பார்த்து விட்டனர். படத்தை, படம் என்றே பார்க்கின்றனர்.


2. கொஞ்சம் Logicகுடன் சேர்த்து பார்த்தால், நல்லா இருக்கும்.


3. சாந்தமும் பொறுமையும் இல்லாமல் யாருமும் எதையும் சாதிக்க முடியாது, Terrorist உட்பட.


4. Boss this is pure marketing. Adding some excitement to the second film. It is not required to tell everything.

5. U r correct, it is not a film for all tamil ppl

6. America பாஸ், anything is possible. Like andrea not bathing n so on !

7. Kamal knows everything, including her affair and that night going out as they have bugged the complete office of DEEPAK. He also told andrea, that Nirupama wont come for dinner. He just purposly ignores it

8. Question has the answer

9. Part 2 for it

10. It is the trend of the world, Everybidy has a camera, n time is not a constraint, v all take more no. of pics in the same ocassion. Also kamal is a hostage, if only the pic is good they can search in the Databases (in case if they dont identify the photo)

11. Phones are not secure, moreover they need the FDI help too. So meeting is neeed

12. valid point. Must ask Kamal, he must have some reason

13. This is not a question. No body in our show asked so (but our mind voices did)

14. No question there

15. No question there

16. Valid point. It is Kamal Hassan's inborn style

17. There are such agents, Nirupama just kept n small detective to just find if there is any Girl around Kamal. It is actually n american style (novels have it)

18. To proceed to next actions, instant is needed. U tweet in the instant n want decetives to observe fully n report.

19. A sort of Style I think !

ஓஜஸ் (@)

ஃபிகரும் சுகரும் ( நீரழிவு நோய் பற்றிய ஒரு டாக்டரின் மருத்துவக்கட்டுரை)

நீரழிவு நோய் என்றால் என்ன?

நீரழிவு நோய் என்றால் என்ன?நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் வழங்குகின்றது. குளுக்கோஸில் இருந்து சக்தியைப் பெற்றுக் கொள்ள இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreas) என்னும் சுரப்பி உள்ளது. இங்குதான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல. இதனால் இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் (சீனியின்) அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான குளுக்கோஸ் அல்லது சீனி இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் "சுய கட்டுப்பாடுடன்" வாழவேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

நீரழிவு நோய் மூன்று வகைப்படும்
வகை - 1: டயாபிடிஸ் (Type 1 diabetes)வகை - 2: டாயாபிடிஸ் (Type 2 diabetes)வகை - 3: ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

வகை- 1: நீரழிவு நோய்
இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
நீரிழிவு நோயானது தாய், தந்தையினரின் வழியாகவும், நெய், பால், கள், இறைச்சி போன்ற உணவுப் பதார்த்தங்களை பயன்படுத்துவதாலும், ஈரப் பொருள்கள் மற்றும் வெறுப்பைத் தரக்கூடிய உணவுப் பொருள்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது.
நீரழிவு நோயின் அறிகுறிகள்:-
சிறுநீர் அதிக அளவில் வெளியேறும். சிறுநீருக்குரிய நிறம், நிறை, எடை, மணம் போன்றவற்றுள் நிறம் தண்ணீரைப்போலும், நிறை அளவுக்கு அதிகமாகவும், எடை கனத்தும், மணம் தேன் போன்றும் காணப்படும். சிறுநீரானது, தெளிந்த நீர் போன்று அடிக்கடி வெளியேறும். வெளியேறிய சிறு நீர்த்துளிகள் சற்று உலர்ந்தவுடன் பிசுபிசுத்துக் காணப்படும். உடல் வலிமை நாளுக்குநாள் குறைந்தும், நாவறட்சி அதிகமாகவும் காணப்படும்.
பொதுப்பண்புகள்:-
உடல் மெலிவடைந்தும், தோலில் நெய்ப்பசையற்று வறண்டு சுருங்கி வெளுத்த மஞ்சள் நிறத்தையும் அடையும். நாவறட்சி, அதிக நீர் வேட்டை, அதிகமாக பசியெடுத்தும், உணவு சாப்பிட்ட சற்று நேரத்திற்குள் மீண்டும் பசியெடுப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்நோய் முதிர்ந்து தனக்கு துணையாகப் பலவகையான கேடுகளையும் உண்டாக்கும். உடல் சத்தை உருக்கிச் சர்க்கரையாய் நீர் வழியே வெளியேற்றும்.

சொறி, சிரங்கு, கட்டி முதலியவைகளை உருவாக்கி பல கேடுகளை உண் டாக்கும். பித்த நாடி விரைந்து நடக்கு மாயின் நீரிழிவு நோய் வரலாம்.


வகை- 1: நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்

பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல

இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.

உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின்
இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

வகை- 2: நீரழிவு நோய்
இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.

வகை- 2: நீரழிவு நோயின் குணாதிசியங்கள்

பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்

பொதுவாக இது பரம்பரை நோய்

பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.

இரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

வகை - 3: ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்:
கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க வேண்டும்.
தாராளமாக சேர்த்துக் கொள்ளும் உணவு வகைகள்:
1.சூப் மிளகு ரசம், தக்காளிப்பழரசம், (சர்க்கரையில்லாமல்) நீர்மோர், எலு மிச்சை ரசம் போன்றவை.

2. எல்லாவித பச்சைக் காய்கறிகள் (சாலட்) போன்றவை.

3.எண்ணெய், சர்க்கரை இல்லாமல் தயாரித்த ஊறுகாய்.
குறைவாக சேர்க்கக் கூடியவை:
1. ஒரு நாளைக்கு 300 மில்லிக்கு மிகாத பால் உபயோகித்தல் வேண்டும்.

2.எண்ணெய் - சூரிய காந்தி அல்லது ரிபைண்டு எண்ணெய் 2 முதல் 3 டீ ஸ்ன் (தினமும்)

3. கோழி-மீன் உட்கொள்ளும் போது 50 கிராம் -சிறிய அளவு- மிகாமல் உட் கொள்ளுதல் நன்று. (பொரிக்கப்படாமல்).

4. பழங்களில் ஆப்பிள். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, தர்பூசணி ஒன்று அல்லது சில துண்டுகள் தினமும் உட்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சரக்கரை, க்ளுகோஸ், வெள்ளம், தேன், ஜாம், ஜெல்லி, லட்டு, ப்ரிவி, போன்ற இனிப்பு வகைகள், பிஸ்கட், கேக், கலோரி சத்து அதிகமுள்ள பழங்களான வாழைப்பழம், மாம்பழம், அன்னாசி, சப்போட்டா, சீத்தாப்பழம், திராட்சை, உருளைக்கிழங்கு, சேனை, மரவள்ளிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முந்திரி, பாதாம், தேங்காய் போன்றவை, உலர்ந்த பழங்களான திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவை. நெய், டால்டா, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு சத்துள்ள எண்ணெய், வகை.

முட்டை மஞ்சள் கரு, சீஸ், கீரிம் லிம்கா. தம்ஸ் அப் போன்ற குளிர் பானங்கள். பழரசங்கள் (சர்க்கரையுடன்) பொரித்த பண்டங்கள்.

இந்தியாவில் மூலிகையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தான ஐ.சி.பி. 201-ஐ நீரிழிவு நோயாளின் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அமில அளவை முழுமையாக நீர்த்துவிடுவதால் நீரிழிவு ஒழிந்துவிடும் என்று தெரியவருகிறது.

இரத்தத்தில் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது அதன் காரணமாகவே சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. குளுக்கோசை விட இந்த கொழுப்பு அமிலமே (Fatty acid) சர்க்கரை வியாதிக்கு மூலமாகிறது. இரத்தத்தில் உள்ள இந்த கொழுப்பு அமிலம் நீக்கப்படும் பொழுது சர்க்கரை வியாதியும் மறைந்துவிடுகிறது.

உடற்பயிற்சி: உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறயான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவரின் அலோசனைப்படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கிமான வாழ்வு உண்டு.

நீரிழிவு நோயின் முன்நிலை என்றால் என்ன?

நீழிழிவு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் நீழிழிவின் முன்நிலை பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.நீரிழிவின் முன்நிலை என்பது முழுமையான நீரிழிவு தொடங்குவதற்கு முந்திய ஆரம்ப கட்டமாகும்.

குழந்தைகள் பாடசாலைக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்னர் 'முன்நிலைப் பள்ளி'க்குப் போகிறார்களே அது போன்றது. ஆரம்பப் பாடசாலை எனவும் சொல்வர். அதே போல 'நீரிழிவின் ஆரம்பநிலை' எனவும் சொல்லலாம்.

இரவு உணவு உட்கொண்டபின் காலை வரை எதுவும் உட்கொள்ளாமல் இரத்தப் பரிசோதனை செய்யும்போது, சர்க்கரையின் அளவு (110 முதல் 125 வரை இருந்தால் “நீரிழிவின் முன்நிலை” எனலாம். இது 126க்கு மேல் அதிகரிக்குமாயின் அவருக்கு நீரிழிவு எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.

மற்றொரு பரிசோதனையும் செய்யப்படுவதுண்டு, இதனை குளுக்கோஸ் டொலரன்ஸ் டெஸ்ட் என்பர்.

50 முதல் 75 கிராம் வரை அளவுள்ள குளுக்கோஸ் கலந்த நீரைக் குடிக்கக் கொடுத்துவிட்டு 2 மணிநேரத்தின் பின் குருதி குளுக்கோஸ் அளவை கணிப்பர்.

இது 140 ற்குக் கீழ் இருந்தால் அவருக்கு நீரிழிவு இல்லை. 140 முதல் 199 வரை இருந்தால் அது நீரிழிவின் முன்நிலை ஆகும். 200க்கு மேல் இருந்தால் அவருக்கு நீரிழிவு இருக்கிறது என நிச்சயம் சொல்லலாம்.

உணவுக் கட்டுப்பாடு அவசியமா?
நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக் கட்டுப்பாடு பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரசினையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரசினையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம். நீரிழிவு நோயின் பாதிப்பு, படிப்படியாகத் தலையிலிருந்து பாதம் வரை பரவி, பல்வேறு உடல் உறுப்புகளைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. உடலில் கட்டிகள் ஏற்படுவது, பிளவை உண்டாவது மற்றும் பல சிக்கல்களும் இதனால் ஏற்படலாம்.

இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதன் விளைவாகத் தோன்றும் சிக்கல்களே மிகக் கடுமையானவை. குறிப்பாகக் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் பெருமளவுக்குக் கட்டுப்பாடற்று நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன.

நீரிழிவினால் வரும் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, உணவு உண்ணும் முறைகளை மிக இயல்பான வகையில் அமைத்துக்கொள்ளவேண்டும். ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ என்பதன் உண்மையான பொருள்.

நீரிழிவு உணவுக் கட்டுப்பாடு என்பது, சத்துள்ள உணவு, சரியான அளவு, சரியான நேரத்திற்கு உட்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீரிழிவு நோய்க்குரிய உணவு முறை மிகவும் ஆரோக்கியமானதாகும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களும் இவ்வுணவு முறை மற்றும் சமையல் செய்யும் முறை மூலம் பயன் உண்டாகும்.

அரிசி உணவைத் தவிர்த்து விட வேண்டும் என்று ஒரு தவறான கருத்து, நீரிழிவுக்காரர்களிடம் நிலவி வருகிறது. அரிசி, கோதுமை, ராகி, பாஜ்ரா போன்ற தானியங்களில் 70_75% கார்போ ஹைட்ரேட் அடங்கியிருக்கிறது. தனக்கு விருப்பப்பட்ட உணவை நீரிழிவால் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அரிசி உணவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

பல நீரிழிவு நோயாளிகள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுகள் என்று பார்த்தால், அது உணவு பரிந்துரையாளர் (Dietician) கொடுக்கப்பட்டுள்ள உணவின் அளவுப்படி, உணவு உட்கொள்ளும் பொழுது, துல்லியமாக அளந்து சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று என்பதுதான். ஆனால், நீங்கள் உணவை அளந்துதான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. நீங்கள் தினசரி உட்கொள்ளும் அளவை விட, குறைவாகச் சாப்பிட்டால் போதும்.

உணவு உட்கொள்ளும் பொழுது வயிறு நிறைய உணவு உண்ணுதல் தவறு. அதற்குப் பதிலாக, மூன்றில் ஒரு பங்கு உணவும், மற்றொரு பங்கு தண்ணீரும், மற்றொரு பங்கு வயிற்றைக் காலியாக வைப்பதும் அவசியம்.

நீரிழிவு நோயாளிகள் திட்டமிட்ட அளவான, சமநிலையான சத்து அடங்கிய உணவை மற்றவர்களைப் போல உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் நீரிழிவு உள்ளவர்கள் அவர்களின் தினசரி உணவு முறையில் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ள கோதுமை, அரிசி, ராகி மற்றும் பல தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டீன் சத்துள்ள தானியங்கள், நாற்சத்து உள்ள உணவு வகைகள், மற்றும் பல சத்துக்கள் நிறைந்த உணவு வகைகள், பழங்கள், காய் வகைகள், மற்றும் கால்ஷியம் சத்துள்ள பால், மாமிச வகைகள், வாரத்தில் இருமுறை குறைவான அளவில் எண்ணெய், இவை அனைத்தும் தினசரி உணவில் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பழங்கள் உண்ணுதல் தவறு இல்லை. எனினும், ஒரு சில பழங்கள் அதாவது வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம் போன்ற பழங்களின் கலோரி அதிகமாக உள்ளது. ஆகவே இப்பழங்களை அதிகமான அளவில் உட்கொண்டால், அவை ரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை உயர்த்தக்கூடும். அதனால் ஆரஞ்சு, மோசம்பி, பப்பாளி, ஆப்பிள் ஜூஸ் அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை.

ரெட் மீட் அதாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிறைச்சி போன்ற உணவு வகையில் சச்சுரேடட் கொழுப்பு அதிகமாக உள்ளது. அவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தும். ஆதலால் இவைகளைத் தவிர்ப்பது (அல்லது) மிகவும் அபூர்வமாக உண்ணுதல் என்பது நல்லது. சிறுநீரகம் செயலிழந்து போவதற்கு நீரிழிவு நோயே பெரும்பாலும் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் சில மாற்றங்கள் மிகவும் அவசியமானது. உணவு முறைகளில் மாற்றங்கள் என்று பார்க்கும்போது, புரோட்டீன் சத்தைக் குறைப்பது என்பது சிறுநீரகப் பிரசிசனை உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் என்றால் உப்பு. அதாவது தினமும் உட்கொள்ளும் அளவை விடக் குறைவாக இருக்க வேண்டும். 35g/per day என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் குறைத்து விட வேண்டும். பொட்டாஷியம் அதிக அளவில் உள்ள உணவு வகைகள் இளநீர், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், உலர்ந்த பழங்கள், ரெட் மீட் (beat, pork, meat) மற்றும் சில பழங்கள் (Mango, Amla, Sapota, Lemon etc) சில காய் வகைகள், (தண்டு கீரை, பசலை கீரை, மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக் கீரை, பீன்ஸ், முருங்கைக்காய்).

நீரிழிவு நோய் உள்ளவர்களில் பலர் உணவுக் கட்டுப்பாடு பற்றி, தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைத்துக் கொண்டு, உணவு பரிந்துரையாளரின் ஆலோசனைகளைப் பெறத் தேவையில்லை என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், நோயாளிகளை அணுகி அவர்களின் உடல் பருமன், சர்க்கரையின் அளவு, கொழுப்பு மற்றும் சிறுநீரகம் சரியான உணவுக் கட்டுப்பாட்டு முறையை ஒவ்வொரு நோயாளிகளின் தேவைக்கு ஏற்றார்போல் கூறுவது உணவு பரிந்துரையாளரின் பணியாகும். இவற்றைப் பொதுவான முறையில் மட்டும் கொடுப்பது போதுமானது அன்று.

பல அறிக்கைகளைப் பார்க்கும் போது, மக்கள் சிலர் ஒரு நாளில் 2_3 சர்விங் காய்வகைகள் மற்றும் 1 சர்விங் பழங்கள் உட்கொள்பவர்களுக்கு இதய பாதிப்பு போன்ற பிரசினைகள் வரும் வாய்ப்பு குறைந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்குக் கொழுப்புச் சத்து அதிகமாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், உணவு வகைகளில் எண்ணெயின் அளவைக் குறைப்பது அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம்.

கொழுப்பு இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சச்சுரேடட் மற்றும் அண்சச்சுரேடட் என்பதாகும். சச்சுரேடட் கொழுப்பு அடங்கியுள்ள உணவு வகைகள் (நெய், வெண்ணெய், கீர், மாமிசம், முழு பால் க்ரீம்) மற்றும் பல காய் வகைகளில் உள்ள எண்ணெய்கள், (தேங்காய் எண்ணெய், பாமாயில்) ஹைடோரோஜினேட்டட் (Hydrogenated) கொழுப்பு அடங்கியுள்ள வகைகள் (வனஸ்பதி, மார்கிரேன்) இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் கெட்டியான பதத்தில் இருக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை அதிகரிக்கும்.

அண்சச்சுரேடட் கொழுப்பானது பாலிஅண்செச்சுரேடட் மற்றும் மேனோ அண்செச்சுரேடட் என்று பிரிக்கலாம். இவை வீட்டின் அரை சீதோஷ்ணத்தில் நீர் பதத்தில் இருக்கும். இவை (சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், எள் எண்ணெய், மற்றும் ஆலிங் எண்ணை) வகைகளில் உள்ளன. மற்றும் ஆலிவ் போன்ற பருப்பு வகைகளிலும் உள்ளன.

பல விளம்பரங்களிலும் சூரியகாந்தி எண்ணெய் மிகவும் நல்லது, பாதுகாப்பானது, கொழுப்புச் சத்து நீக்கப்பட்டது என்று விளம்பரம் செய்கின்றனர். ஆனால் எல்லாவிதமான எண்ணெய்களையும் உபயோகிக்கலாம். ஆனால், குறைந்த அளவில் உபயோகிப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எல்லா விதமான எண்ணெய் வகைகள் அதிக அளவான கலோரியைக் கொண்டது. அவை சர்க்கரையை மற்றும் கொழுப்பையும் நம் உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாதத்திற்கு ஒரு நபர் உபயோகிக்கும் எண்ணெயின் அளவு லு கிலோகிராம் ஆக இருக்கவேண்டும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கலோரியன் அளவை கணக்கிடுகையில் அந்த நபரின் எடை கூடுதலாக வேண்டுமா, குறைக்க வேண்டுமா அல்லது அதே எடையில் நிரந்தரமாக இருக்க வேண்டுமா என்பதைப் பார்த்து, அணுகி கலோரியின் அளவைக் குறிக்கவேண்டும்.

சரியான உடல் எடையைத் (Ideal body weight) தெரிந்துகொள்ள ஒரு முறை இருக்கிறது. முதலில் உயரத்தை சென்டிமீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உடல் எடை = உயரம் (செ.மீ) 100 x 0.9

(Ideal body weight = Height (in cms) 100 x0.9)

சரியான உடல் எடையைக் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு 25kcal/kg உடல் எடை தேவைப்படும். அவர்கள் சரியான உடல் எடையைப் பராமரிக்க உதவும். சரியான உடல் எடைக்கு அதிமாக உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு (over weight) 20 kcal/kg உடல் எடை தேவைப்படும். மற்றும் சரியான உடல் எடையை விடக் குறைவாக இருக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு (weight) 3035 kcal/kg உடல் எடை தேவைப்படும்.

இவ்வாறு உணவுக் கட்டுப்பாட்டில் கலோரி கன்டென்ட் எல்லா நீரிழிவு நோயாளிகளின் எடைக்கும் ஏற்றாற்போல் அமைக்க வேண்டும். அதனால் சரியான எடையுள்ள நபர்களாகத் திகழ்வார்கள். குழந்தைகளுக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் சரியான முறையில் உணவுக்கட்டுப்பாடு அமைக்கவேண்டும். இதனால் அவர்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எந்தக் குறையும் இன்றி இருக்கவேண்டும்.

தினசரி உணவு முறை திட்டத்தின்படி மொத்த கலோரிகள் சரிசமமாகப் பகிர்ந்து கொடுக்க வேண்டியது அவசியம். அதாவது மொத்த கலோரியில் மாவுச்சத்து 6065% புரதச்சத்து (protein) 15 to 20% மற்றும் கொழுப்புச்சத்து (Fat) 15 to 25% இப்படியாக பகிர்ந்திருக்க வேண்டும்.

நீரிழிவு நோயாளிகளை அணுகும் போது அவர்களின் உணவு முறை, மதம் (சமூகம்) வசதி, இவற்றிற்கேற்ப பரிசோதனையும், ஆலோசனையும் வழங்கப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் ஒவ்வொரு நபருக்கும் புரியும் அளவில் மற்றும் எளிதான முறையில் கூறப்படுதல் வேண்டும். 
thanx -

r janakiraman (@)

நாளை முதல் கில்மா மேட்டர் பேச மாட்டேன்.சத்திய மடி தங்COME ;-))

1.டியர், நான் விலங்குகளை ரொம்ப நேசிக்கறேன்,அதனால தான் நான்வெஜ் விரும்பி சாப்பிடறேன். 


அய்யய்யோ, அப்போ என்னையுதான் லவ் பண்றே..



-----------------


2. நடிகையின் பயோ டேட்டா - தமிழ் ஓரளவு தெரியும் , தொழில் அதிபர்கள் ஊரளவு தெரியும் 



-------------------------



3. ரைட்டர் சார், காலைல நீங்க எழுதறது தெளிவா, நச் ன்னு இருக்கு. 



ஆமா, சாயங்காலம்தான் சரக்கடிப்பேன், அப்போ கொஞ்சம் மப்பா இருக்கும்




---------------------


4. ஏம்மா புஷ்பா , அம்மாவுக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணாம என்னம்மா பண்ணிட்டிருக்கே? 


 வெயிட் மம்மி, ட்விட்டர்ல உன்னைப்புகழ்ந்துட்டிருக்கேன்


------------------------------


5. டியர் ,காலங்காத்தால என்னைப் பத்தி ஏன்  நினைச்சீங்க?:-)



 மத்தியானம் ஆஃபீஸ்ல இருப்பேன், அப்போ ரிசப்ஷனிஸ்ட்டை நினைக்கனுமே?


--------------------------


6.  ஒரு பொண்ணுக்கு தாலி கட்டும்போது கண்ணைக்கட்டுன மாதிரி இருக்கும் # கண்ணைக்கட்டி COT ல விட்டது மாதிரியும் இருக்கும் 



-----------------------------

7. ஃபிகருங்க நம்மளைப் பேரு சொல்லிக் கூப்பிட்டா ஜில்லுனு இருக்கும் , டேய் -னு கூப்பிட்டா ஜொள்ளா இருக்கும் ;-)


----------------------------


8.  ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி அவங்க தோழிகள் 2 பேரை கரெக்ட் பண்ணினா அது தான் மல்டி லெவல் மார் க்கெட்டிங்க் ;-))




---------------------


9. மேடம், ஏன் எப்ப பார்த்தாலும் குழந்தைகள் கவிதையாவே போடுறீங்க?




 ஏன்னா எனக்கு குழந்தை மனசு , புரிஞ்சுக்கலைன்னா உமக்கு மடந்தை வயசு



---------------------------



 10. பொண்ணுங்க அட்வைஸ் பண்ணுனா நான் பின் பற்ற மாட்டேன், ஏன்னா அவங்க அடிப்பாங்க ( மீண்டும் ஒரு முறை படிங்க )



---------------------



11. ம”தில்” 'மேல்' (MALE )பூனை நமக்கு உணர்த்தும் செய்தி திருட்டுத்தனமா பால் குடிச்சாக்கூட தில்லா நிக்கறது ஆம்பளை தான்;-)




---------------------


12. டீக்கடைல வேலை செய்யற பையன் "ஐ டீ ஒர்க்" னு சொல்லிக்கலாமா?



------------------------


13. மிஸ்.பங்சுவாலிட்டி தான் இங்கே முக்கியம்.9 மணிக்கு டான் னு ஆபிஸ் வந்துடனும்.



ஓக்கே சார்.கம்பெனி சார்பா ஒரு வாட்ச் வாங்கிக்குடுத்துடுங்க



------------------------



14. இன்ட்டீரியர் டெக்ரேஷன் ல டிப்ளமோ முடிச்ச பிகரு இன்ட்டர்வ்யூல செலக்ட் ஆகி இருக்கு.எத்தனை பேரு டவுட் கேட்கபோறானுகளோ?;-)



---------------------


15. //மணிரத்னம் இயக்கும் இந்திப் படம்: இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கதை…/// # CASHமீர் ல ஷூட்டிங் வெச்சாலும் லாஸ் தான்



---------------------


16. ஜாக்கெட் 5 வகை 1 வி நெக் 2 யு நெக் 3 ஸ்லீவ்லெஸ் 4 ஜன்னல் வெச்சது 5 கதவு வெச்சு க்ரில் கேட்



----------------------



17. தலைவா படத்தில் மூன்று விஜய் # மூவேந்தர் ,மாதிரி ? பஞ்ச் டயலாக்ஸ் படத்துல இஞ்ச் பை இஞ்ச் இருக்குமே



------------------


18. லட்டு செய்த சம்சாரத்தை ஒறுத்தல் அவர் நாண அதை பூந்தி ஆக்கி விடல்


-----------------


19. இக்கட்டான சூழலில் சரியான முடிவு எடுக்க தெரிந்தவர் புத்திசாலி.அப்படி ஒரு சூழலே வராமல் பார்த்துக்கொள்பவர் சாமார்த்தியசாலி




---------------------



20. அரசியல்ல ஏகப்பட்ட டாக்டர்ங்க இருக்காங்க.பேஷன்ட்ஸ் ,நர்ஸ்ங்க யாரும் இல்லையா?



----------------------


21.  டீ"செண்ட்"டான பிகர் னா செண்ட் போட்டிருக்கும் பிகரா?



----------------------


22. ஒன்னா ஸெலக்டட்னு சொல்லனும்.இல்ல ரிஜக்டட் னு சொல்லி அனுப்பனும்.3 பேரையும் வெயிட் பண்ண சொல்லி இருக்காரு.



--------------------


23. எனக்கு ஹோட்டல்ல சாப்பிடற பழக்கம் இல்லை னு டேமேஜர் ஸ்டெனோ கிட்டே ரீல் விட்டுட்டு இருக்காரு.ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமோ?



---------------------


24. இன்ட்டர்வ்யூக்கு 4 பிகருங்க வந்திருக்கு.சென்ட் கம்பெனி ல நேரா வந்துட்டாங்க போல.வாசம் "தூக்குது" ;-))



-----------------------


25. எல்லா ஆபீஸ்லயும் இன்ட்டர்காம் இருக்கும்.ஆனா டேமேஜருங்க லேடி ஸ்டாபை மட்டும் கூப்பிட்டு கூப்ட்டு நேர்ல தான் பேசுவாங்க




------------------------


26. ரேஷன் கடை ல அரை மணி நேரமெல்லாம் என்னால லைன் ல நிக்கமுடியாதுன்னு சொல்றவங்க எல்லாம் ஆன் லைன் ல 18 மணி நேரம் இருக்காங்க ;-)




-------------------------


27. கோவில் பூச்சாட்டுதலில் நமீதா டான்ஸ் ரத்து... டென்ஷன் ஆன கிராமம் # டான்ஸ் ஆடுனாலும் டென்ஷன்தான் மச்சான்ஸ் -நமீதா




---------------------


28. கோச்சடையான் என் வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும் - சூப்பர் ஸ்டார் ரஜினி # பாட்ஷா மாதிரின்னா சந்தோஷம்.பாபா மாதிரின்னா தோஷம்




-------------------------


29. டியர்.எதுக்காக ரோஜா தராம சங்கு புஷ்பம் தர்றீங்க?



இன்னியோட நம்ம காதலுக்கு சங்கு.ஹி ஹி


--------------------------


30. புதுசா மேரேஜ் ஆன அப்பாவி ஆண்களே.உங்க சம்பளம் என்னனு சொல்லுங்க.ஆனா இன்சென்ட்டிவ் மேல் வருமானம் பற்றி மூச்சு விட்ராதீங்க



-----------------------



31. இன்னைக்கு சம்பள நாள்.ஸம்சாரம் என்ன்ன்னங்ங்ங்கங்க என கூப்பிடும் ஒரே நாள்



---------------------


32. நாளை முதல் கில்மா மேட்டர் பேச மாட்டேன்.சத்திய மடி தங்COME ;-))



---------------------


33. படு பயங்கரமான சந்தேகப்பேர்வழி யார் தெரியுமா? ட்ரிபிள் எக்ஸ் பட டி வி டி யை கடைல வாங்கும்போதே ஓட்டிப்பார்த்து செக் பண்ணி வாங்குபவனே



----------------------


34. நல்லவங்களை ஆண்டவனும் கெட்டவங்களை கஸ்டம்ஸ் ஆபீசரும் சோதிக்க மாட்டாங்க



------------------------


35. வாரமலர்ல வந்த மொக்கை ஜோக்கை டேமேஜர் ஸ்டெனோ ட்ட சொல்லி அவரே சிரிச்சுக்கறாரு # வேலையைப்பாருங்கடா டேய் ;-))


---------------------


36. சில பெண் ட்வீட்டர்கள் “ ஓக்கே , பை , சீ யூ லேட்டர்” -னு ட்வீட் போட்டுட்டு 5 நிமிஷத்துல குளிச்சுட்டு , சாப்டுட்டு உடனே ஆஜர் ஆகிடறாங்க


---------------------------

Saturday, March 02, 2013

செங்கோட்டை பாசஞ்சர் - தாமிரா - சிறுகதை

லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?'' என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன் இந்தக் கேள்வியைக் கேட்கவும் கலெக்டர் கொடி அசைக்கவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. சமயங்களில் இப்படித்தான் எல்லாம் சொல்லிவைத்தபடி நிகழ்ந்துவிடுகிறது. ஆல்வின் சொன்ன வார்த்தைகள் என்று இல்லை... இன்று நான் இந்த ரயிலில் பயணப்பட வேண்டும் என முடிவெடுத்ததும், என் அருகே ஆல்வின் வந்து அமர்ந்ததும்கூட அப்படித்தான்.



 'செங்கோட்டை பாசஞ்சர் இன்னைக்கித்தான் கடைசி நாள். அந்த ரயில நிறுத்தப்போறாவளாம்!’ என தாணம்மை, நேற்று இரவு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தாள். நானும் அதை செய்தித்தாளில் படித்திருந்தேன். மீட்டர் கேஜை பிராட்கேஜாக மாற்றப்போகிறார்கள் என்றது செய்தி.
''அடக்கோழி மாதிரி வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடக்காம ஒரு சுத்து போயிட்டு வந்தாத்தான் என்ன...'' என்று பொதுவாகச் சொல்வதுபோல அம்மா என்னிடம் சொன்னாள். இப்போதுஎல்லாம் அம்மாவும் நானும் சுவரோடுதான் பேசிக்கொள்கிறோம். 



45 கடந்த பிறகு, அம்மாவிடம் எதற்கு இப்படி ஒரு முரண் என்று எனக்குப் புரியவில்லை. எனக்கும் இந்த ரயிலுக்கும் அப்படி ஒன்றும் நெருங்கிய தொடர்பு இல்லை. சில சமயம் கல்லிடைக்குறிச்சிக்குப் போகும்போது செங்கோட்டை பாசஞ்சரில் போயிருக்கிறேன், அவ்வளவுதான். ஆனாலும், 1904-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு ரயில் வண்டியை நிறுத்தப்போகிறார்கள் என்கிற ஒரு பொதுவான உணர்வில்தான் நான் வந்தேன்.



ரயில் தினம் கொண்டாடுவதுபோல மிகப் பெரிய விழாவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ரயில் பெட்டிகளின் வாசலில் கால்வைத்து நிற்க இயலாத அளவுக்குக் கூட்டம். ஆனால், இருக்கைகள் எல்லாம் காலி யாகத்தான் இருந்தன. பயணப்பட்ட எல்லோ ருமே ஏதோ ஒரு வகையில் இந்த செங்கோட்டை பாசஞ்சருடன் தொடர்பு உடையவர்களாக இருந்திருக்கக்கூடும். நெடுநாள் பிரிவுக்குப் பின் சந்திக்கும் உற்சாகம் எல்லோருடைய முகத்திலும் இருந்தது.



வந்த நிமிடத்தில் இருந்து ஆல்வின் துறுதுறுவென இருந்தான். எல்லா கம்பார்ட்மென்ட்டிலும் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தான். ''ஹாய்... ஐ’யம் ஆல்வின்'' - ஒரு இசை நளினத்தோடு தன் பெயரை அறிமுகம் செய்தபடி இருந்தான். கையில் ஒரு போனை வைத்துக்கொண்டு புகைப் படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டு இருந் தான். அந்தக் கூட்டத்தில் யாரோடும் ஒட்டுதல் இல்லாமல் ஒற்றை ஆளாக இருந்தது நான் ஒருவன் மட்டும்தான். என்னால் நெடு நேரம் வெளியே நின்று வேடிக்கை பார்க்க முடியவில்லை. ஒரு ஜன்னல் ஓர இருக்கையைத் தேர்ந்தெடுத்து நான் ரயிலுக்கு உள்ளே இருந்தபடி வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.


கலெக்டர் கொடி அசைக்கவும் ரயில் நகரவும் அவன் என் அருகே வந்து அமர்ந்து 'ஐ லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?’ எனக் கேட்கவும் சரியாக இருந்தது. நான் இயல் பாக இருப்பதுபோல ஒரு பாவனையை வர வழைத்துக்கொண்டு, ''என் பேரு ராகவன்'' என்றேன். அவன் சிரித்தபடி 'ஐயம் ஆல்வின்’ என்றான்.


''நான் எப்பவுமே இப்படித்தான் முன்னப்பின்ன தெரியாதவங்கன்னாகூடச் சட்டுனு பேசிருவேன். இப்ப எனக்குப் பேசணும்போல இருக்கு. என்ன கேட்டேன்... ஆங்... ஐ லவ் யூவுக்கு என்ன வயசு இருக்கும்..? வெள்ளைக்காரன் வர்ற துக்கு முன்னால நம்ம ஆளுங்க எப்படிக் காதலைச் சொல்லி இருப்பாங்க..? அத விடுங்க... காதலைக் காதல்னு தெரிய றதுக்கு முன்னால எப்படி எக்ஸ்பிரஸ் பண்ணி இருப்பாங்க?''- அவன் பேச்சு முழுக்க சுவாரஸ்யமான கேள்விகளோடு இருந்தது.


நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். ரயில் மெள்ள வளைந்து டவுனை நோக்கி நகர்ந்துகொண்டு இருந்தது.


''ஆயிரம் சொல்லுங்க சார்... பெருவிரல்ல தரையைக் கீறி அரை வட்டம் போட்டு ஒரு கள்ளச் சிரிப்புல சம்மதம் சொல்றதுக்கு முன்னால கோடி ஐ லவ் யூ கூட நிக்க முடியாது. இங்க வந்திருக்கற பாதிப் பேரு, மனசுக்குள்ள இருக்கிற காதலுக்காகத்தான் வந்திருக்காங்க. அந்தா... அடி மடியில சின்டெக்ஸ் டேங்க் வெச்சிருக்காரே அந்தப் பார்ட்டி பேரு பஷீரு... இந்த டிரெய்ன்ல மட்டும் அவருக்கு மூணு லவ்வு ஓடினது எனக்குத் தெரியும். 'இனி மேல் நான் இசக்கியம்மாளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்’ அப்படின்னு அப்பாலஜி லெட்டர் எழுதிக் குடுத்தவரு சார் அவரு'' எனச் சொல்லிச் சிரித்தான்.


எனக்கு அவன் பேச்சில் பெரிய சுவாரஸ்யம் இல்லை. அதே சமயம் அவனை நிராகரிக்கும் மனசும் இல்லை. நான் எதையும் காட்டிக்கொள்ளாமல் 'ம்’ கொட்டியபடி கேட்டுக்கொண்டு இருந்தேன். ரயில் டவுன் ஸ்டேஷனுக்கு வந்து நின்றதும் ஒரு துளிக் கண்ணீரோடு அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி, ''நானும் என் காதலியோட ஞாபகமாத்தான் மும்பைல இருந்து வந்திருக்கேன் சார்'' என்றான். இந்த ரெண்டு மணி நேர ரயில் பயணத்துக்காக அவன் மும்பையில் இருந்து வந்திருந்தது எனக்கு அவன் மீது மேலதிகமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.



''இந்த ஸ்டேஷன்லதான் சார் அவள முதன்முதலாப் பாத்தேன். அப்ப செங்கோட்டைல இருந்து தினமும் இந்த டிரெய்ன்ல வருவேன். சேவியர்ஸ்ல படிச்சிட்டு இருந்தேன். இந்த செங்கோட்டை பாசஞ்சர் எனக்கு ஒரு ஃப்ரெண்டு சார். அவளை இவந்தான் அறிமுகம் பண்ணிவெச்சான்'' - ஆல்வின் தன் காதலியைப் பற்றி சொல்லத் தொடங்கியதும் ரயில் ஒரு சின்னக் குலுங்கலோடு புறப்பட்டது.



''ஒரு தேவதை, பாசஞ்சர் டிரெய்ன்ல வந்தா எப்படி சார் இருக்கும்? அப்படித்தான் இருந்தது எங்க முதல் சந்திப்பு. அன்னைக்கு நான் லட்சுமி தியேட்டர்ல படம் பாத்துட்டு, டவுன் ஸ்டேஷன்ல டிரெய்ன் ஏற வந்தேன். நான் வரும்போது டிரெய்ன் மூவ் ஆயிட்டு இருந்தது. ஓடி வந்துட்டு இருக்கும்போதே ரயில் என்னைக் கடந்து ஓடிட்டு இருந்துது. ஒரு ஜன்னலுக் குள் சிண்ட்ரெல்லா டிரெஸ்ல இருந்தா அவ. காலேஜ் டிராமால போட்ட வேஷத்தைக் கலைக்காம வந்திருந்தா. நான் அந்த ஜன்னல்கிட்ட போயி 'ரொம்ப அழகா இருக்கீங்க’னு சொன்னேன். அவ்வளவுதான்... டிரெய்ன் வேகம் எடுத்திருச்சு. என்னால அந்த டிரெய்ன்ல ஏற முடியல.



அதுக்கப்புறம் அவள என்னால ரெண்டு, மூணு நாளாப் பாக்க முடியல சார். உண்மையச் சொல்றதா இருந்தா, அவள அடையாளம் தெரியல. தேவதையை எப்படி சார் பாவாடை தாவணில அடையாளம் கண்டுக்க முடியும். ஆனா, அவ என்னை ஞாபகம் வெச்சிருந்தா. 'உன்னைத் எனக்குத் தெரியும்டா’ங்கிற மாதிரி ஒருநாள் ஒரு வெக்கத்தை வீசுனா பாருங்க... அழகு சார். கிட்டத்தட்ட ரெண்டு மாசம் சார், டிரெயின் கல்லிடைக்குறிச்சி வந்ததுமே நான் வாசலுக்கு வந்து நிப்பேன். அவ சிரிச்சுட்டே வண்டில ஏறுவா. அவ்வளவுதான்... ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டோம். ஆனா, அவ்வளவு பேசிப் பழகின மாதிரி ஒரு நெருக்கம் இருக்கும். தினமும் எப்படா கல்லிடைக்குறிச்சி வரும்னு பாத்துட்டே இருப்பேன். மனசுக்குள்ள தடக்கு தடக்குனு ஒரு ரயில் ஓடிட்டு இருக்கும். செங்கோட்டைல இருந்து கல்லிடைக்குறிச்சி வர்றதுக்குள்ள அப்படி ஒரு தவிப்பு இருக்கும்.  



அப்பதான் சார் 'கடலோரக் கவிதைகள்’ ரிலீஸாகி இருந்தது. அது என்னவோ எங்களுக்காகவே அந்தப் படத்துல பாட்டு எழுதின மாதிரி இருக்கும்... ஒரு நாள் நான் வாசல்ல நின்னு சத்தமா 'மனசு தடுமாறும்... அது நெனச்சா இடம் மாறும்’னு பாடிட்டு இருந்தேன். பாத்ரூம் போற மாதிரி என்னைக் கடந்துபோனவ 'மனசு இடம் மாறிடுச்சு’ன்னா. ஐய்யோ... அப்படியே டிரெய்ன்ல இருந்து குதிச்சிரலாமானு இருந்துது. பாத்ரூம் போயிட்டுத் திரும்பி வர்றப்ப 'இப்படி’ ஒரு வார்த்தை சொல்லாத மாதிரியே போனா. அப்ப அவ கண்ணுக்குள்ள ஒரு சிரிப்பு இருந்துது பாருங்க சார்... அடடடடா!



20 வருஷத்துக்கு முன்னால காதலிச்சவன் எல்லாம் குடுத்து வெச்சவன் சார்... அப்ப காதல் ரொம்ப அழகா இருந்தது. என்ன ஒண்ணு, தனியா சந்திச்சுப் பேசறதுக்கு ஒரு இடம் கிடைக்காது. அதுவும் திருநெல்வேலிக்காரங்க ரொம்பப் பாவம் சார்... சயின்ஸ் சென்டர், ரயில்வே ஸ்டேஷன்... விட்டா கோயில், சர்ச் இதைத் தவிர சுதந்திரமா எங்கயும் சந்திக்க முடியாது சார். நாமளும் இப்படிப் பாத்துட்டே காலத்தைக் கடத்திருவோம்னுதான் சார் நெனச்சேன். ஏன்னா, எனக்குப் பொண்ணுககிட்ட பேசற தைரியம் கிடையாது. ஆனா, என்னைவிட அவ தைரியமான பொண்ணு சார்.



ஒரு நாள்... 'இப்படியே பாத்துட்டே இருந்தா போதுமா? பேச மாட்டீங்களா?’ன்னா. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல. 'ஐ லவ் யூ... உங்க பேரு என்ன?’னு கேட்டேன். பயங்கரமா சிரிச்சா, 'பேரே தெரியாம, ஐ லவ் யூ வா?’னு சொல்லிட்டுச் சிரிச்சா... அன்னைக்குப் பூரா அந்தச் சிரிப்பு என்கூடவே இருந்தது சார். சயின்ஸ் சென்டர்ல சந்திக் கறதுனு முடிவு பண்ணி னோம். சயின்ஸ் சென்டர் போனதும் எனக்குக் கைகால் உதறல் எடுத்தது. பாக்கற எல்லாருமே தெரிஞ்சவங்க மாதிரியே இருந்தாங்க. ஆனா, அவ தைரியமா இருந்தா.


'என் பேரு பரிமளா... நான் சாரள் தக்கர் காலேஜ்ல படிக்கறேன். அப்பா லோக்கல் போஸ்ட் மாஸ்டர். போன வருஷம்தான் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்தோம். கிளியோபஸ் மாஸ்டர்கிட்ட வயலின் கத்துக்கறேன். உன்னை எனக்கு ஆறு மாசமாத் தெரியும்’னா. நானும் அப்ப கிளியோபஸ் மாஸ்டர்கிட்டதான் கிடார் கத்துக்கிட்டேன்.''



ஆல்வின் மெள்ள கண் மூடி... ''சைலன்ட் நைட் ஹோலி நைட் ஆல் இஸ் காம் ஆல் இஸ் ப்ரைட் ரவுண்ட் யூ வெர்ஜின் மதர் அண்டு சைல்டு'' எனப் பாடத் தொடங்கினான். அவன் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் இருந்தது.


''எனக்காக சர்ச்சுக்கு வருவா... பிரேயர்ல கலந்துக்குவா. 'கண்ண மூடினா மனசுக்குள்ள முருகன் இருக்கறான்... காதுக்குள்ள பிதா சுதன் பரிசுத்த ஆவியால் எம்மை ரட்சிப்பீராக ஆண்டவரே... நல்லாத்தான் இருக்கு ஆல்வின்’னு சொல்வா.


என்ன பிரேயர் பண்ணினேனு கேட்டா, 'எனக்கு ஆல்வின் வேணும்னு கர்த்தர்கிட்ட கேட்டேன்’னு சொல்வா. எல்லா சாமிகிட்டயும் அவ ஒரே ஒரு கோரிக்கைதான் சார் வெச்சா, அது ஆல்வின் வேணும்கிறதுதான். எல்லா சாமியும் ஏமாத்திருச்சு சார்'' - ஒரு பாவப்பட்ட குரலில் ஆல்வின் இதைச் சொன்னான்.



எனக்கு ஆல்வினைப் பார்க்கப் பாவமாக இருந்தது. என்னில் இருந்து ஆறேழு வயது சின்னவனாகத்தான் இருப்பான். அவனைத் தோளில் சாய்த்துக்கொள்ள வேண்டும்போல இருந்தது. சட்டென்று பாடுவதை நிறுத்திவிட்டு ''அவ எப்படித் தெரியுமா சார் இருப்பா..? மரியன்னை கைல இருக்கற ஆட்டுக்குட்டி மாதிரி இருப்பா...'' என்றான் ஆல்வின். அவன் இந்த வார்த்தையைச் சொல்லவும் எங்கள் இருவருக்கும் இடையே ஒரு கனத்த மௌனம் இருந்தது.


ஆல்வின் என்னை ஏறிட்டுப் பார்த்து விரக்தியாகச் சிரித்தபடி... ''அவ ஞாபகமா இருந்த ஒரே ஒரு விஷயம், இந்த செங்கோட்டை பாசஞ்சர்தான் சார். இப்ப அதுவும் போகப்போகுது'' என்றான். எனக்கு ஆல்வின் இதோடு கதையை நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை என்று தோன்றியது. இதற்கு மேல் கதை கேட்கும் வலிமை எனக்கு இல்லை என்றே உணர்ந்தேன்.


''என்கூட வாசல் வரைக்கும் வர்றீங்களா?''


நான் எதுவும் சொல்லாமல் அவனோடு சென்றேன். வாசல் அருகே இருந்த வாஷ் பேசினுக்கு மேல் கை காட்டி, ''அங்க பாருங்க சார்'' என்றான். அவன் கை காட்டிய திசையில் உற்று நோக்கியபோது ஒரு இதயம் படம் வரைந்து அதற்குள் 'பரி - ஆல்வின்’ என எழுதப்பட்டு இருந்தது.


''அது பரிமளாவோட கையெழுத்து. என்னையும் இந்த எழுத்தையும் சேர்த்து ஒரு போட்டோ எடுங்க சார்'' என்றான். நான் கைகள் நடுங்க அவனது செல்போன் கேமரா வில் போட்டோ எடுத்தேன்.


அந்த போட்டோவைப் பார்த்தபடியே இருந்தான். ''டிரெய்ன்ல, பஸ்ல, எதாவது ஒரு சுவத்துல இப்படிப் பேர் எழுதிவெச்சிருந்தா அத ஒரு கிறுக்கலாப் பாக்காதீங்க சார்... அது ஒரு வலி, வாழ்க்கை. இதை எழுதும்போது அவ்வளவு மகிழ்ச்சியா இருந்துது. இப்பப் பாக்கும்போது அவ்வளவு அழுகையா வருது. பரிமளா போட்டோகூட எங்கிட்ட கிடையாது சார். ஆனா, இந்த எழுத்தைப் பாக்கறப்ப அவ முகம் மனசுல வந்து போகுது சார்'' என்றான்.


நான் எதுவும் சொல்லாமல் இருந்தேன். தூரத்தில் யாரோ, என்னவோ சொல்லி பெருஞ்சிரிப்பாகச் சிரித்துக்கொண்டு இருந்தார்கள். ஆல்வினை எதுவும் பாதிக்கவில்லை. அவன் தனது கடந்த காலக் காதலுக்குள் கரைந்துபோயிருந்தான். 'ஏதோ ஒரு புள்ளியில், ஆறாத ஒரு காயத்தை நான் அவனுக்குள் ஏற்படுத்திவிடுவேனோ?’ என்கிற பயம் என்னுள் எழுந்தது.


''பரின்னா என்ன தெரியுமா சார்..?'' ஆல்வின் மீண்டும் பேசத் தொடங்கினான். ''இல்ல... தெரியல' அவன் பேச்சுக்குள் கலந்துவிடாத ஒரு இடைவெளியை நான் எனக்குள் வரையறுத்துக்கொண் டேன்.


''நான் அவகிட்ட கேட்டேன் சார். 'பரின்னு பாதிப் பேரை எழுதுறியே... முழுப் பேர் எழுதப் பயமா?’னு கேட்டேன். சிரிச்சுட்டே 'இல்லையே... பரின்னா என்ன?’னு கேட்டா. நான் 'குதிரை’னு சொன்னேன்.


'ஆமா, நான் உன் குதுரக் குட்டி. அதான் பரின்னு போட்டிருக்கேன்னா’ என்று சொல்லிய படி, கதவின் மீது தலை சாய்த்து நின்றான் ஆல்வின். அவன் தலையசைவில் இட வலமாக ரயிலின் ஓசை நகர்ந்துகொண்டு இருந்தது.


''ஏன் பிரிஞ்சீங்க?'' நான் இந்தக் கேள்வியைக் கேட்கவும் ரயில் சேரன்மகாதேவி ஆற்றுப்பாலத்தை மெள்ள ஊர்ந்தபடி கடந்தது.



''எல்லாக் காதலுக்கும் உள்ள பிரச்னைதான். அவங்க அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆச்சு. அவங்க கோவைக்குப் போனாங்க. அவங்க அப்பா அவளுக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. அப்புறம் ஒருநாள் மீட் பண்ணோம். நாங்க தைரியமா சந்திச்ச ஒரே சந்திப்பு அதான் சார். மரியா கேன்டீன்ல வெச்சுப் பேசுனோம்... நான் தற்கொலை பண்ணிக்கலாம்னு பேசுறேன். 'மரணம் அழகாத் தெரிஞ்சாலே, காதல் அங்க அழுத்தமா இருக்கு’னு அர்த்தம் சார். எனக்கு அப்படியே செத்துப்போயிரணும்னு தோணுச்சு.''


'ஆல்வின் நீயும் நானும் ரெண்டு உசிரு இல்ல... உங்க அப்பா - அம்மா. எங்க அப்பா - அம்மா. அண்ணன் - தம்பினு எட்டு உசிரு... எல்லாத்தை யும் அழிச்சுட்டு காதலைக் காப்பாத்தி என்ன பண்ணப்போறோம். எனக்குச் சாகறதுல உடன் பாடு இல்லை’ன்னா பரிமளா.


ப்ச்... விட்டுக்குடுத்துட்டேன் சார் என் பரிக் குட்டிய... விட்டுக்குடுத்துட்டேன். அவ நல்லா இருக்கணும். அதைத் தவிர எனக்கு எந்த எண்ணமும் இல்ல. அப்ப அவளக் காப்பாத்தற தைரியமும் வலிமையும் எனக்கு இல்ல!''


''அப்புறம் நீங்க பரிமளாவைப் பாக்கவே இல்லையா?''


''கல்யாணத்துக்குப் பிறகு, எப்படியோ என் நம்பரை வாங்கி ஒரு தடவை பேசினா சார். 'எங்க வீட்டுக்காரர்கிட்ட உன்னைப் பத்திச் சொல்லிட்டேன். அவர் நம்ம காதலைப் புரிஞ்சிட்டார். நீ ஒரு முறை வீட்டுக்கு வா’னு சொன்னா... நான் போகல. அது முறை இல்ல... ஐய்யோ... மிஸ் பண்ணிட்டோமேங்கிற ஃபீல் வரக் கூடாது. அதான் அவாய்ட் பண்ணிட்டேன். அதுக்கு மேல அவகூட பேசவும் விரும்பல. நம்பரை மாத்திட்டு ஊரைவிட்டுப் போயிட்டேன்.


கடைசியா, இந்த டிரெய்ன்ல அவ ஞாபகமா ஒரு டிராவல் பண்ணணும்னு தோணுச்சு. அவ வருவானு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது சார். வந்ததும் எல்லா கம்பார்ட்மென்ட்டுக்கும் ஓடிட்டே இருந்தேனே... அவளைத் தேடித்தான் சார். ஆனா, ஏமாந்துட்டேன் சார். என்னைக்காவது ஒரு நாள் அவளைச் சந்திக்கணும். அது இயல்பா... தற்செயலா அமையணும்... அமையும்!'' என்றான்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அமைதியாக இருந்தேன்.


செங்கோட்டை வரை வருகிறேன் என்ற ஆல்வின் கல்லிடைக்குறிச்சியிலேயே இறங்கி விட்டான். அவள் நினைவாக அந்த ரயிலடியில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு, திரும்ப நெல்லைக்கே போவதாகச் சொன்னான். ரயில் கிளம்பும் வரை அவனுக்குக் கையசைத்து விடைகொடுத்து விட்டுத் திரும்பினேன்.



அம்பையைக் கடந்து ரயில் ஒரு சீரான சுதியில் போய்க்கொண்டு இருந்தது. ஆல்வினின் 'சைலன்ட் நைட் ஹோலி நைட் ஆல் இஸ் காம் ஆல் இஸ் ப்ரைட்...’ சன்னமாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருந்தது.


நான் ஆல்வினிடம் பரிமளா இனி வர மாட்டாள்... ஒரு விபத்தில் மரணம் அடைந்துவிட்டாள் என்று சொல்லி இருக்க வேண்டும். எனக்குள் வெறும் நினைவாக வாழ்கின்ற பரிமளா, ஆல்வினுக்குள் ஓர் அழகிய காதலாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாள். இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டேன்!


thanx - vikatan